Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Elugnajiru said:

ரதி 

இப்போது இலங்கைத்தீவில் தேசிய வாலக்கள் எல்லாம் இல்லாமல்போய் அங்கயன் வாலாக்கள்தான் அதிகமாகிவிட்டார்கள் அவையல் உங்கட ஆக்கள்தானே கேட்டுப்பாருங்கள். சாதாரணமாக ஒரு புலியாணிப்பொட்டலமும் குவாட்டரும் போகும் அவர்களுக்கு.

அங்கயன் வாலாக்களுக்கு முரளியையோ அல்லது சேதுபதியையோ எதிர்க்க வேண்டிய தேவையில்லை 

  • Replies 215
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆனால் அங்கயனது எஜமானர்களுக்கு அது தேவை

5 minutes ago, ரதி said:

அங்கயன் வாலாக்களுக்கு முரளியையோ அல்லது சேதுபதியையோ எதிர்க்க வேண்டிய தேவையில்லை 

 அவர்களுக்கு குடியும் கூத்தும் தேவைதானே அத்துடன் யாருடைய வீட்டுக்குக் கல் எறிந்தும் கழிவு ஒயில் ஊத்தியும் பொழுதுபோக்க ஒரு தளம் தேவை. என்ன! ரதி என்னும் பாம்புக்கு பாம்பின் கால் தெரியவில்லை. அதுசரி கனநாள் நாட்டில இருந்து வெளிகிட்டு லண்டனில் செற்றிலாயிட்டியள் ரச் விட்டுப்போயிற்றுது. 
 

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வதை செய்தவர் இலங்கையில் இருக்கிறார் என மீ டூ போராளியும் பாடகியுமான சின்மயி அவர்கள் டுவீட் பண்ணியிருக்கிறார்.

இனி என்ன 

பிடிபட்டவர் முண்ணாள் போராளி எனவும் இவர்மீது விசாரணை நடந்துகொண்டிருக்கு எனவும் தேவை ஏற்படின் நாம் தமிழ்நாட்டுக் காவல்துறையிடம் அவரை ஒப்படைக்கத் தயார் எனவும் கூறி.

முண்ணால் போராளி ஒருவரைப்பிடித்துக் கொடுப்பார்கள் அவர் யாராக இருப்பார் எனில் புனர்வாழ்வு எனும் பெயரில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு அவருக்குப் போதைப்பழக்கத்தை பழக்கிய சிறீலங்காவின் படைகளது அடிமையாக இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Elugnajiru said:

 

ஆனால் அங்கயனது எஜமானர்களுக்கு அது தேவை

 அவர்களுக்கு குடியும் கூத்தும் தேவைதானே அத்துடன் யாருடைய வீட்டுக்குக் கல் எறிந்தும் கழிவு ஒயில் ஊத்தியும் பொழுதுபோக்க ஒரு தளம் தேவை. என்ன! ரதி என்னும் பாம்புக்கு பாம்பின் கால் தெரியவில்லை. அதுசரி கனநாள் நாட்டில இருந்து வெளிகிட்டு லண்டனில் செற்றிலாயிட்டியள் ரச் விட்டுப்போயிற்றுது. 
 

அங்கயன் செய்யிறதில் கால் தூசியையாவது நீங்கள் செய்திருந்தால் ஏன் அந்த மக்கள் அவருக்கு பின்னால் போக போயினம் … உங்களுக்கு தான் ஊரில் நடப்பது தெரியவில்லை ...எப்பவும் கனவுலகத்தில் வாழாமல் நிதானமாய் சிந்தியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

------------------

---------------------

ஆனால் அதைப்போல எல்லாம் செய்ய என்னால முடியாது . வடக்கின் வசந்தன் எனும் பெயரில் வளைத்துப்போட்ட எல்லாதிடையும் வருமானமும் நமல் ராஜபக்ஸவின் பாடசாலை நண்பன் எனும் ரீதியில் கொளையடிச்ச காசைப்போலவும் என்னட்ட இல்லை.

காலம் காலமாக கண்டியைச் சேர்ந்த தடிச்ச சிங்களவரும் இப்போது கம்பாந்தோட்டையைச் சேர்ந்த மகிந்த சகோதரர்களும் ஆட்சியில் இலங்கைத்தீவில் தொடர்ந்திருந்தாலும் இப்போதும் கண்டி காலி கம்மாந்தோட்டைப் பகுதிகள் அபிவிருத்தி இல்லாதுதான் இருக்கு இப்போ யாழ் குடாநாட்டில் அங்கயன் வந்து புடுங்கப்போகிறார். 

என்ன இப்ப கஞ்சா இப்போது இந்தியாவில் இருந்துதான் வருகுது காலப்போக்கில் யாழ் குடா நாட்டிலும் பயிரிடுவினம் என்ன் என்றால் அங்கயன் அப்படிச் செய்வார். 
நீங்கள் விதைப்புக்குத்தான் போகாது விடினும் அறுப்புக்காவது போய்வாருங்கள்.

 

"ரதி" என்றால் உடலும் முகமும் மாத்திரம் அழகானதாக இருப்பதில்லை மனமும் அதில் தோன்றும் எண்ணங்களும் அழகானதாக இருக்கவேண்டும்

 

On 21/10/2020 at 15:17, ரதி said:

அங்கயன் செய்யிறதில் கால் தூசியையாவது நீங்கள் செய்திருந்தால் ஏன் அந்த மக்கள் அவருக்கு பின்னால் போக போயினம் … உங்களுக்கு தான் ஊரில் நடப்பது தெரியவில்லை ...எப்பவும் கனவுலகத்தில் வாழாமல் நிதானமாய் சிந்தியுங்கள் 

 

Edited by நிழலி
தனிமனித தாக்குதலுக்குரிய வரிகள் நீக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரன்... விஜய் சேதுபதி... சில எதிர்வினைகள்...

800-movie-issue-reactions  

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’-ல் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததற்கு எழுந்த எதிர்ப்புகளைப் பற்றி இரா.வினோத் கடந்த 21-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிய ‘ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?’ கட்டுரைக்கு ஆதரவும் எதிர்ப்புமாகப் பலவிதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. அவற்றின் சுருக்கமான தொகுப்பு…

வன்னி அரசு, அரசியலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

 

2009 மே 15, 16, 17, 18, 19 என முள்ளிவாய்க்கால் ரத்த ஆற்றில் தமிழர்களின் ஒப்பாரியும் ஓலமும் கரைந்தன. உலகமே வேடிக்கை பார்த்தது. சிங்கள தேசத்தின் அதிபர் ராஜபக்ச யாழ் மண்ணை முத்தமிட்டு, இதுதான் எனது மகிழ்ச்சியான நாள் என உலகுக்கு அறிவித்தார். ராஜபக்ச போன்று இன்னொருவர் இந்த இனப்படுகொலை நாளை மகிழ்ச்சியான நாள் என அறிவித்தார். அவர்தான் மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன்.

2009 சனவரி 8-ம் நாள் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க சிங்களப் பேரினவாதிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். தமது ‘த சண்டே லீடர்' இதழில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்தும் எழுதிவந்தவர் லசந்த விக்கிரமதுங்க. அதற்காகவே அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து முத்தையா முரளிதரனிடம் கேட்டபோது, ‘‘ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிராக யார் பேசினாலும் இது ஒரு பாடம்’’ என்றார். ஒரு ஜனநாயகவாதியாக சிங்கள இனவாதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளரின் படுகொலைகூட நியாயமானது என்றவர் முத்தையா முரளிதரன். இப்படி சிங்களப் பேரினவாதத்தின் குரலாகச் செயல்பட்டுவருபவர் முத்தையா முரளிதரன். இவருடைய வரலாறு ‘800' என்னும் பெயரில் திரைப்படமாக எடுப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். முத்தையா முரளிதரன் கதாபாத்திரம் தமிழினப் பற்றாளர் விஜய் சேதுபதிக்குப் பொருத்தமற்றது என்பதுதான் உலகத் தமிழரின் கோரிக்கை. ஆனால், கட்டுரையாளர் வினோத் இவற்றை மடைமாற்ற முயற்சித்துள்ளார். முத்தையா முரளிதரன் எதிர்ப்புக்குப் பின்னால் சாதி, வர்க்கம், மாகாண வேறுபாடுகள், மலையகத் தமிழர் எனப் பாகுபாடுகள் இருப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்.

2009 போருக்குப் பின் ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் உள்ள தங்காலை என்னும் சிங்கள கிராமத்தை முத்தையா முரளிதரன் தத்தெடுத்து உதவிகள் செய்துவருகிறார். போரினால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கிராமம் அல்லது மலையகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஏதாவது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து உதவிகள் செய்யலாமே. இப்படிப் பல செயல்பாடுகள் ஊடாகத்தான் முத்தையா முரளிதரன் தமிழினத்துக்கு எதிரானவராகவும் சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாளராகவும் அவரே கட்டமைத்துக் கொண்டார். இனவாத அரசியலை ஆதரித்தார் என்பதற்காகத்தான் இந்த எதிர்ப்பே தவிர, மலையகத் தமிழர் என்னும் காரணமல்ல.

பெ.மணியரசன், அரசியலர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

எந்த நாட்டிலே, அந்நாட்டின் அரசியல் முடிவுக்கு அப்பால் அயல்நாட்டு இசைக் குழுவை, கலைக் குழுவை, விளையாட்டுக் குழுவை அனுமதிக்கிறார்கள்? இந்திய அரசு பாகிஸ்தான் மட்டைப் பந்துக் குழுவை இங்கு விளையாட இப்போது அனுமதிக்குமா? சீனாவின் இசைக் குழு இப்போது இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த மோடி அரசு அனுமதிக்குமா? சீன நாட்டு இணைய டிக்டாக், கேம் ஸ்கேனர் போன்ற செயலிகளை இந்தியா தடைசெய்தது ஏன்? இப்போது நடக்கும் எல்லை மோதல்தான்! இது அரசியல் இல்லையா?

தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டின் மண்ணின் மக்களாகிய கருப்பினத்தவர்களை வெள்ளையர்கள் இனஒதுக்கல் (Aparthied) செய்தார்கள். எனவே, அந்த நாட்டுடன் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் தூதரக உறவு வைக்காமல் ஒதுக்கிவைத்திருந்தன. இசை, கலை, விளையாட்டுக் குழுக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் போகத் தடை; தென்னாப்பிரிக்கக் குழுக்கள் இந்த நாடுகளுக்கு வரத் தடை இருந்தது. இனஒதுக்கலை அந்நாடு கைவிட்ட பின்தான் இந்நாடுகள் இத்தடையை நீக்கின. மேற்படி தடையை எல்லோரும் ஆதரித்தோம்!

இலங்கையில் சிங்கள இனவெறி ஆட்சி ஈழத் தமிழர்களை லட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த பின், இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தூதரக உறவைத் துண்டித்துத் தடைகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் இன உணர்ச்சியைக் கணக்கில் கொண்டு, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும்; சிங்களப் படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கை விளையாட்டுக் குழுக்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் விளையாடக் கூடாது – என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்!

இதன் தொடர்ச்சியாகத்தான், சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழினப் படுகொலையை ஆதரித்த, ஆதரிக்கின்ற முத்தையா முரளிதரன் வேடத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்கிறோம். சிங்கள நடிகர்களைக் கொண்டோ, வேறு நாட்டு நடிகர்களைக் கொண்டோ முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படம் வந்தால் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், அந்தப் படம் தமிழ்நாட்டில் ஓடக் கூடாது என்கிறோம்!

ச.சீ.ராஜகோபாலன்,,மூத்த கல்வியாளர்.

வினோத் எழுதிய கட்டுரை மிகச் சிறப்பு. ஒற்றை நோக்கிலிருந்து நம் மக்களை இது விடுவிக்கும் என்று விரும்புவோம்.

ஜி.ராமகிருஷ்ணன், அரசியலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

உலகமே ஒத்துப்போகிற ஒரு கருத்தோடு கூட எந்தவொரு தனி மனிதனும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துகளைக் கடுமையாக விமர்சிப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு உண்டு. இந்தக் கருத்துத் தளத்தைத் தாண்டி எந்தவொரு தனி மனிதரையோ அவருடைய குடும்பத்தினரையோ வக்கிரத்தோடும் வன்மத்தோடும் விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது.

விஜய் சேதுபதியின் கருத்தை அல்லது முடிவை விமர்சிப்பதற்காக அவரது குழந்தையை முன்வைத்து வக்கிரமான முறையில் பதிவிடுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இப்படிப் பதிவிட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழகக் காவல் துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சிவில் சிவகுமார், வாசகர்.

முத்தையா முரளிதரன் மாறுபட்ட கருத்தைச் சொல்லியிருந்தாலும்கூட அதற்கும் அவரைப் பற்றி வரலாற்றுப் படம் வருவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது உண்மைதான். இதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மாற்றுக் கருத்துகள் சொல்வதானால், ஒருவரை முழுவதும் எதிரியாகவே பார்க்கும் மனோபாவம் பெருகிவருவது சமூகத்திற்கு நல்லதல்ல. கட்டுரையின் முடிவில் சாட்டையடியாக, ஊராட்சித் தலைவரை நாற்காலியில்கூட உட்கார அனுமதிக்காத ஆதிக்க சாதியினரின் வீடுகளை யாராவது முற்றுகையிட்டிருக்கிறார்களா என்று எழுப்பிய கேள்வி நியாயமான ஒன்று.

ச.பாலசந்தர், வாசகர்.

உண்மையில் நவீன சிந்தனையாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் ‘800’ படத்தையும், விஜய் சேதுபதியையும் விமர்சிக்க மாட்டார்கள். முத்தையா முரளிதரன் மீது முரண்பட்ட கருத்துக்கள் இருப்பினும் அவர் உலகளவில் ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீரர். முரளிதரனின் கிரிக்கெட் பயணத்தை ஆவணமாக்கி அதை மிகச் சிறந்த கலைஞன் பிரதிபலிப்பதற்கு ஜனநாயக நாட்டில் இடமில்லையா? இனியேனும் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்.

நா.இராசாரகுநாதன், செயல்பாட்டாளர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

வினோத் தனது கட்டுரையின் இறுதிப் பத்தியில் ‘‘வேடிக்கை என்னவென்றால் இப்போது போராளி வேஷம் கட்டுபவர்கள் பலர் தமிழ்ச் சமூகத்தின் அசலான பிரச்சினைகளை மௌனம் காப்பதுதான்’’ என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டு இறையாண்மையின் அசலான பிரச்சினையான மீத்தேன் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டம், காவிரி உரிமைப் போராட்டம் என எல்லாவற்றிலும் முன் நிற்க கூடிய ‘‘போராளிகளே’’ இவ்விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எந்தக் கலையும் கலைஞர்களும் மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!.

எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர்.

இணையவழி குறுங்கூட்டம் ஒன்றில் விஜய்சேதுபதி ஏன் நடிக்கக் கூடாது என்ற கேள்வி வந்தபோது மலையகத் தமிழர் பிரச்சினை, ஈழப் பிரச்சினையில் எப்படிப் பின்னுக்குப் போனது என்பதையெல்லாம் சுருக்கமாக விளக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரா.வினோத்தின் கட்டுரை பார்த்ததும் சிலிர்த்தது. மகிழ்ச்சியோடு அந்தத் தோழர்களுக்கு அனுப்பி வாசிக்கக் கேட்டுக்கொண்டேன்.

பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்.

‘‘முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சாராத ஈழத் தமிழராகவோ அந்தப் படத்தை லைகா தயாரித்திருந்தால் இந்த எதிர்ப்பு எழுந்திருக்காது என்றும் சொல்லப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். முத்தையா முரளிதரன் என்னவாக இருந்தார் என்பதில் இருந்துதான் மதிப்பீடு உருவாக வேண்டுமே தவிர, என்னவாக இருந்திருக்க வேண்டும் என்ற புனைவிலிருந்து மதிப்பீடு செய்யக் கூடாது. ‘‘அவர் ஒரு விளையாட்டு வீரர்: அரசியலர் அல்ல’’ என்று ஒட்டுச்சுவர் வைக்கிறீர்கள். ஒருவர் என்னவாக சமூகப் பாத்திரம் வகித்தாலும், அந்தப் பாத்திரத்துக்குச் சில எண்ணங்கள் கருத்துக்கள் உள்ளன: முத்தையா முரளிதரன் என்ற சமூகப் பாத்திரம் சிங்களப் பேரினவாத ஆதரவு மனோநிலை கொண்டதாகத்தான் வெளிப்பட்டுள்ளது; தமிழனாக அல்ல என்ற எதார்த்தத்திலிருந்துதான் நாம் காண வேண்டும். ‘‘தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழகத்தின் அசலான சாதியப் பிரச்சினைகளில் மௌனம் சாதிப்பது ஏன்?’’ என்று தாங்கள் எழுப்பிய கேள்வி நியாயமானது. அதையும் முத்தையா முரளிதரனுக்குச் சார்பாக வளைத்துக்கொண்டு போவதுதான் பொருந்தாமல் நிற்கிறது. ‘‘இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போர் நடத்திய முன்னாள் போராளிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிவிட்டனர்’’ என்று முத்தாய்ப்பாக வைக்கிறீர்கள். ஆனால், ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்காலில் ரத்தக்கறை படிந்த சுவடுகள் இன்னும் ஈரம் உலராமல் உள்ளன என்பதை அவர்களும் ஏற்பார்கள், தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் எனக் கருதுகிறேன்.

https://www.hindutamil.in/news/opinion/columns/594046-800-movie-issue-reactions-6.html

 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 21:17, ரதி said:

அங்கயன் செய்யிறதில் கால் தூசியையாவது நீங்கள் செய்திருந்தால் ஏன் அந்த மக்கள் அவருக்கு பின்னால் போக போயினம் … உங்களுக்கு தான் ஊரில் நடப்பது தெரியவில்லை ...எப்பவும் கனவுலகத்தில் வாழாமல் நிதானமாய் சிந்தியுங்கள் 

அங்கஜன் ஒன்றும்  சொந்தக்காசில செலவளிக்கவில்லை. அவருக்கு  கொடுக்கப்படுகிறது அவர் அதைவைத்து பேர்வாங்கி இப்போ MP யாகி தனது எஜமானர்களுக்கான விசுவாசத்தை காட்டுகிறார் அவ்வளவுதான்.  விளங்காமல் அவர் அது செய்யிறார் இது செய்யிறார் எண்டு சொல்லி நீங்கள் பூரிப்படைய வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎10‎-‎2020 at 18:21, Elugnajiru said:

------------------

---------------------

ஆனால் அதைப்போல எல்லாம் செய்ய என்னால முடியாது . வடக்கின் வசந்தன் எனும் பெயரில் வளைத்துப்போட்ட எல்லாதிடையும் வருமானமும் நமல் ராஜபக்ஸவின் பாடசாலை நண்பன் எனும் ரீதியில் கொளையடிச்ச காசைப்போலவும் என்னட்ட இல்லை.

காலம் காலமாக கண்டியைச் சேர்ந்த தடிச்ச சிங்களவரும் இப்போது கம்பாந்தோட்டையைச் சேர்ந்த மகிந்த சகோதரர்களும் ஆட்சியில் இலங்கைத்தீவில் தொடர்ந்திருந்தாலும் இப்போதும் கண்டி காலி கம்மாந்தோட்டைப் பகுதிகள் அபிவிருத்தி இல்லாதுதான் இருக்கு இப்போ யாழ் குடாநாட்டில் அங்கயன் வந்து புடுங்கப்போகிறார். 

என்ன இப்ப கஞ்சா இப்போது இந்தியாவில் இருந்துதான் வருகுது காலப்போக்கில் யாழ் குடா நாட்டிலும் பயிரிடுவினம் என்ன் என்றால் அங்கயன் அப்படிச் செய்வார். 
நீங்கள் விதைப்புக்குத்தான் போகாது விடினும் அறுப்புக்காவது போய்வாருங்கள்.

 

"ரதி" என்றால் உடலும் முகமும் மாத்திரம் அழகானதாக இருப்பதில்லை மனமும் அதில் தோன்றும் எண்ணங்களும் அழகானதாக இருக்கவேண்டும்

 

 

கருத்திற்கு பதில் எழுதாமல் தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதும் நீங்கள் ,உங்களை போன்றவர்கள் தான் தேசியத் தூண்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎10‎-‎2020 at 13:04, Eppothum Thamizhan said:

அங்கஜன் ஒன்றும்  சொந்தக்காசில செலவளிக்கவில்லை. அவருக்கு  கொடுக்கப்படுகிறது அவர் அதைவைத்து பேர்வாங்கி இப்போ MP யாகி தனது எஜமானர்களுக்கான விசுவாசத்தை காட்டுகிறார் அவ்வளவுதான்.  விளங்காமல் அவர் அது செய்யிறார் இது செய்யிறார் எண்டு சொல்லி நீங்கள் பூரிப்படைய வேண்டியதுதான்.

சிங்கள பகுதிகள் எல்லாம் அபிவிருத்தி அடையாமல் இருக்கும் போது வடக்கு அபிவிருத்தி அடையட்டும் என்று காசை கொடுக்கிறார்கள் தானே ...உள் நோக்கம் இருந்தாலும் மக்களுக்கான தேவை நிறைவேற்றப்படுகிறது ...புலிக்கு என்று சேர்த்த காசை பதுக்கி வைக்காமல் அல்லது தேவையில்லாமல் இல்லாத புலிக்கு தடை எடுக்கிறோம் என்று செலவழிக்காமல் அந்த மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் ஏன் அங்கயனுக்கும்,டக்கிக்கு பின்னால் போக போறார்கள்?
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சிங்கள பகுதிகள் எல்லாம் அபிவிருத்தி அடையாமல் இருக்கும் போது வடக்கு அபிவிருத்தி அடையட்டும் என்று காசை கொடுக்கிறார்கள் தானே ...உள் நோக்கம் இருந்தாலும் மக்களுக்கான தேவை நிறைவேற்றப்படுகிறது ..

இப்போ ராஜபக்சேக்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இனிப்பார்ப்போம் வடக்கில் எவ்வளவு அபிவிருத்தி அங்கஜன், டக்கியூடாக நடக்கிறதென்று!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கருத்திற்கு பதில் எழுதாமல் தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதும் நீங்கள் ,உங்களை போன்றவர்கள் தான் தேசியத் தூண்கள்

மேன்மைமிகு ரதி அவர்களுக்கு,

அங்கயன் என்பவரும் சேர்ந்தேதான் கடந்துபோன இருபதாவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றியுள்ளார்.

ஒரு அரசியல்வாதி எனப்படுபவர் நீண்டகால நோக்கு உடையவராக இருக்கவேண்டும் குறுகியகாலத்தில் அவர்வகிக்கும் பதவிகளால் அவரை அவரைச் சேர்ந்தவர்களை அல்லது தனது பரம்பரை ஆகியவற்றுக்கான சொத்துச்சேர்ப்பதற்காய் என்ன கழிசடைத்தனமும் செய்யலாம் என்பது தவறாக இருந்தாலும் அது காலப்போக்கில் சரிப்பண்ணப்படக்கூடியதாக இருக்கும் காரணம் சிறீலங்கா என்பது காலாகாலத்துக்கும் அங்கீகரிக்கபட்ட ஒரு நிர்வாகத்தையுடைய இறயாண்மையுடன் கூடியநாடு, அது நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பண்பையுடையது. இப்படியான சில்லறத்தனமான விடையங்கள் பெரிதாக எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படுத்தாது காலப்போக்கில் அதைச் சரிசெய்துவிடலாம். ஆனால் எதிர்காலம்பற்றிய திட்டமிடுதல் அதுதொடர்பான சட்டங்களை இயற்றுதல் ஆகியனவற்றுக்கு நீண்டதூரப்பார்வையும் குறைந்த அளவாவது கண்ணியமும் அரசியல் தூரநோக்கும் இருக்கவேண்டும்.

ஆனால் அங்கயன் இராமநாதன்  எனும் பொறுக்கித்தனமான குறுகிய வட்டத்தையே சிந்தித்து தன்னுடைய பணப்பையைக் காப்பாற்றவும் அதை இன்னமும் பெருப்பிக்கவும் ஒரு சுயநலம்கொண்ட அம்பாந்தோட்டயை வாழ்விடமாகக்கொண்ட ஒரு பொறுக்கிக்கூட்டத்துடன்சேர்ந்து இலங்கைத்தீவின் எதிர்காலத்துக்குக் கொள்ளிவைக்கும் ஒருவரை நீங்கள் உச்சிமுகர்ந்து மெச்சுவது தெருவில போகும் மனநோயாளிக்குக்கூட சலனத்தை ஏற்படுத்தும். 

ஒருசாண் வயிறை நிரப்பவும் மானத்தை மறைக்கவும் எவ்வளவு வேண்டும் கக்கூசு கழிவிச் சீவிச்சாலும் மானத்துடன் வாழும் எத்தனையோ கனவாஙளைக் கண்டு கடந்துபோன இனம் எமது இனம். ஆனால் அங்கயன், டக்ளஸ் சந்திரகுமார், விஜயகலா, ஆகியோருக்கு வரிந்துகட்டிக்கொண்டுவந்தால் எமக்கு அழுகலைக் கண்டதுபோல் குமட்டவே செய்யும்.

இது நீங்கள் உட்பட எந்த ஒரு தனிப்பட்ட தமிழனிலும் தவறில்லை , அது எங்கள் டிசைன் அப்படித்தான் போலைருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இப்போ ராஜபக்சேக்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இனிப்பார்ப்போம் வடக்கில் எவ்வளவு அபிவிருத்தி அங்கஜன், டக்கியூடாக நடக்கிறதென்று!!

இருவரும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அபிவிருத்தி செய்வார்கள். இது ஈழத்தமிழின வரலாற்றில் இடம்பெறும்.நிதியுதவி வாங்கின நாடுகளுக்கு சிங்களம் கணக்கு காட்ட இதுகள் பேருதவியாக இருக்கும். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாறை திரிக்காதே

 

  • கருத்துக்கள உறவுகள்

உயிருக்கு ஆபத்து: முதல்வரிடம் உதவி கேட்ட இயக்குனர்!

spacer.png

 

இயக்குனர் சீனு ராமசாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தேன்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட சமூகப் பார்வையுள்ள அனைவரும் பாராட்டத் தக்க திரைப்படங்களை எடுத்தவர். ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என திரைத் துறையிலிருந்து முதலாவதாக எழுந்த குரல் இவருடையதுதான்.

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 28) காலை சீனு ராமசாமி திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று பதிவிட்டிருந்தார். இது திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

பின்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தவர், தனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரிந்த அளவுக்கு சினிமாவில் அரசியல் தெரியாது எனக் குறிப்பிட்டார். விஜய் சேதுபதியின் நலன் கருதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதால் 800 பட விவகாரம் தொடர்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது என்றார்.

நன்றி, வணக்கம் எனக் கூறியதற்கான பொருள் பற்றி தான் விஜய் சேதுபதியிடம் கேட்டதாகத் தெரிவித்த அவர், “அந்த கதை பிடித்ததாலும், உலகம் முழுவதும் சென்று சேரும் என்பதாலும்தான் அதில் நடிக்க சம்மதித்தேன் என விஜய் சேதுபதி என்னிடம் தெரிவித்தார். அதன்பிறகுதான் அதில் சில அரசியல் இருக்கிறது, தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல இருக்கிறது என தெரிந்துகொண்டதாகவும், என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தபோது, அதனை தயாரிப்பு நிறுவனமே புரிந்துகொண்டு விலகிக் கொள்ளச் சொன்னதாகவும், அதற்கு நன்றி வணக்கம் சொன்னதாகவும் அவர் என்னிடம் கூறினார். அந்த பிரச்சினையும் முடிந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

மேலும், “ஆனால், வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததால் எனக்கு மனப் பதட்டம் உருவானது. அதனால், உடனே தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சொன்னேன். விஜய் சேதுபதி ரசிகர்கள் என்னுடைய தம்பிகள். அவர்கள் என்னை மிரட்டுவதற்கு வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.

4-5 நாட்களாக இதுபோன்ற மிரட்டல்கள் வருவதாகவும், இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் சீனு ராமசாமி.

 

https://minnambalam.com/politics/2020/10/28/19/director-seenu-ramaswamy-says--life-threaten

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மறக்க வேண்டாம் விஜய் சேதுபதி அவர்களே 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் உயிருக்கு ஆபத்து

 

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன்? - சீனு ராமசாமி விளக்கம்

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன்? - சீனு ராமசாமி விளக்கம்

 

அப்போது அவர் கூறியதாவது: “விஜய் சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினேன். அப்படி நடித்தால் தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். எல்லோரும் சொன்னதுபோல் நானும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை தான் வைத்தேன். அது தவறா? 
 
விஜய் சேதுபதி, சீனு ராமசாமி
 

விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. விஜய்சேதுபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என சித்தரித்துள்ளனர். வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். விஜய் சேதுபதி ரசிகர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் மிரட்டவும் வாய்ப்பில்லை. 

அவர்கள் எனது தம்பிகள். மிரட்டல்கள் தொடர்பாக, போலீசிடம் விரிவாக புகார் அளிக்க உள்ளேன். குடும்பத்துடன் வசிக்கும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதல்வர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன். யார் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/28121520/2017498/director-seenu-ramasamy-press-meet.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.