Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

மக்களுக்கு என்று சொல்லி விட்டு ஏன் கவுன்சில் வைத்துக்கொண்டு இருக்குது உங்களுக்கு ஒன்று தெரியுமா அந்த ஊரில் பள்ளியும் சரி வைத்தியசாலையும் சரி அங்குள்ள ஊர் மக்களால் அமைக்கப்பட்டது  பேருக்கு அரசு மிகுதி 30 வீதமான கட்டிடடங்கள் அரசு அமைத்துக்கொண்டது இப்பவும் ஒன்றும் குறைந்து போகவில்லை மாநகரசபை அங்குள்ள மக்களிடம் பராமரிப்பை கொடுத்தாலே காணும் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்  ஆனால் அரசியல் விடாது .

ஊர் மக்களிடம் விட்டால் எல்லாம் சரி என்றால், அதை ஆக குறைந்தது ஓர் மக்கள் ஓன்று திரண்டு பகிரங்கமாக மாநகர சபைக்கு அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும்.

இது நடந்ததா? எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடந்து இருக்கின்றன. 

இப்படி ஏதாவது நடந்து, செய்தி அல்லது  அப்படி செய்ததை எடுத்த மொபைல் வீடியோ ஐ, நீங்கள் இவ்வளுவும் அறிந்து இருப்பதால், இங்கே இணையுங்கள்.

நான் சொன்னது அனைத்தையும் திரும்ப பெற்று, இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

வடகிழக்கில் எந்த  ஒரு ஊரையும் பார்க்காத உங்களுடன் வாதிடுவதில்  நேர விரயம் நன்றி வணக்கம் .

யாழில், ஒப்பீட்டளவில் மிகவும் வசதிகள்  கொண்ட இடத்தில், வாழை அடி வாழையாக  உள்ள சந்ததியில்   பிறந்து, வளர்ந்து இருந்தாலும், பல ஊர்களையும், வடக்கு- தெற்காக வவுனியா பழங்குடியினர், வேடுவர் மற்றும் பண்ணை தொழிலுக்காக தற்கலிகமாக குடியிருப்போர் வரையும், மேற்கு-கிழக்காக மன்னார் பூநகரி, நெடுங்கேணி, முல்லைத்தீவு,  சுண்டிக்குளதில் இருந்து வடமராட்சி கரையோரம் என்று பல ஊர்க்களை, உள்ளூர் மக்களின் தேவைகளுக்கான அரச நிர்வாகத்தின் அடிப்படையில் பார்த்த அனுபவம் உண்டு.    

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற தண்ணியையாவது இறைத்துவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெருமாள்,  ஒரு நீச்சல் தடாகத்தின் பயன்பாடு அதன் பெறுமதி  தெரியாத அங்கு வாழும்  மக்களின் சோம்பேறித்தனத்ததிற்கு வக்காலத்து வாங்க யார் யாரையோ எல்லாம் நீங்கள் திட்டித் தீர்கக வேண்டியுள்ளது. கவுண்டு கிடப்பது அங்குள்ள மக்களே அவர்களது சோம்பேறித்தனத்தால். 

குரங்கு கையில் பூமாலை என்ற தலைப்பு மிகப்பொருத்தமானதே. 

வெள்ளை யானை என்பது மிகச் சரியான கருத்து. 

மேலே கூறப்பட்ட பலரது கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை. 

1) அந்த இடத்தில் நீச்சல்தடாகம் தேவையா ?

2) ஏற்படப்போகும் செலவுகள் என்ன ? 

3) பராமரிப்புச் செலவு என்ன ?  அதனை பராமரிப்பதற்கு தேவையான நிதி மூலம் என்ன ?

சரியான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைவதற்கான மிக முக்கியமான பிரச்சனை பராமரிப்புச் செலவே. இதற்கு Brazilன் Olympic நீச்சல்தடாகங்களின் இன்றைய நிலை சிறந்த உதாரணம். 

என்னைப் பொறுத்தவரை இந்த முயற்சி வல்வெட்டித்துறைக்குத் தேவையற்றது. இந்த இடத்தில் நான் இருந்திருந்தால் கடலினுள்ளே பாதுகாப்பாக நீராடுவதற்கு ஏற்ற வழிமுறைகளையே முன்மொழிந்திருப்பேன்.

யாழ் மத்திய கல்லூரித் தடாகத்தின் நிலையும் இதனை ஒத்ததாக எங்கோ வாசித்த நினைவு. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இது நடந்ததா? எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடந்து இருக்கின்றன. 

இப்படி ஏதாவது நடந்து, செய்தி அல்லது  அப்படி செய்ததை எடுத்த மொபைல் வீடியோ ஐ, நீங்கள் இவ்வளுவும் அறிந்து இருப்பதால், இங்கே இணையுங்கள்.

அந்த மண்ணின் மைந்தன் இந்த நீச்சல் குளத்தை  பற்றிய ஆதங்கம் கீழே உள்ளது பாருங்கள் .

ஆதவன் பக்கம் 49 – ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் -எப்படி நீந்தப் போகின்றோம்!

குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட விடுதலைப் புலிகளின் பன்னிருவர் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருந்த தீருவில் திடலில், உள்நாட்டுப் போரில் உயிர்நீத்த அனைவருக்கும் என ஒரு தூபி அமைக்கவேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார் திரு சிவாஜிலிங்கம் அவர்கள். 

‘இது தவிர்க்கப் படவேண்டிய ஒரு முயற்சி’ என்றேன். ‘உங்கள் அக்காவின் இழப்புக்கும் கடந்த கால போர் ஒரு மறைமுக காரணம் தானே?, போரில் உயிர் இழந்தவர்களில் ஒருவராக உங்கள் அக்காவின் ஞாபகார்த்தமாகவும் குறித்த தூபி அமைவதை நீங்கள் விரும்பவில்லையா?....... எனப் போன்ற தன் பக்க வாதங்களை எனக்குக் கூறியதைப் போல்  மற்றவர்களுக்கும் கூறி வருகின்றார். ஊர்மக்கள் உட்பட்ட பலர் இதனை விரும்பவில்லை என்பதையும், இதனால் ஊர்மக்கள் மத்தியில் (குறிப்பாக புலம் பெயர் வல்வை வாசிகள்) தனது செல்வாக்கை இழந்து வருகின்றார் என்பதை அவர் அறியாதது அவரின் அறியாமையே.
 
வடக்கில் – யாழில் – வடமராட்சியில் – அதுவும் வல்வையில் - சர்வதே தரத்திலான ஒரு நீச்சல் தடாகம் சில தினங்களில் உத்தியோக பூர்வமாக திறக்கப்படவுள்ளது. வல்வை நகர்புறப் பகுதியில், சற்சதுர 4 பரப்பு வெற்றுக் காணி என்ற ஒன்றே இல்லாத நிலையில், சுமார் 20 பரப்பு நிலம் கையகப்படுத்தப்பட்டு நீச்சல் தடாகம் – அதுவும் சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் அமைகின்றது.
 
இலங்கை சுங்கத்துக்கு சொந்தமான பருத்தித்துறை, காங்கேசன்துறை மற்றும் ஊர்காவற்துறை போன்ற நிலங்கள் இன்றும் சுங்கத்துக்கு சொந்தமானவையாகவே விளங்குகின்ற நிலையில், வல்வையில் அமைந்திருந்த சுங்க நிலம் மாத்திரம் வல்வை நகரசபைக்கு சொந்தமாக கைமாற்றப்பட்டது. கிட்டத்தட்ட சாத்தியப் பட முடியாத விடயம் இது.
 
முன்னர் சுங்கக் காணி 
அதே நிலத்தில் இலங்கை அரசின் நிதியுதவியுடன் நீச்சல் தடாகம் ஒன்று சாத்தியம் ஆகின்றது. இந்த வரி...... அந்த வரி..... என நாங்கள் வாங்கும் பொருட்களில் போடப்பட்டுள்ள வரிகளின் படி பார்த்தால் நான் இதுவரை அரசுக்கு குத்து மதிப்பாக மறைமுகமாக செலுத்தியுள்ள சுமார் 1 கோடி ரூபாவின் ஒரு பகுதியாவது ஊருக்கு வந்துள்ளது என்ற சிறிய சந்தோஷம் எனக்கு. (இலங்கை அரசிடம் / அமைச்சர்களிடம் கையேந்தக் கூடாது என்பவர்களுக்கு இந்த விடயம் சமர்ப்பணம்) 
 
இவ்வாறானதொரு நீச்சல் தடாகத்தை சாத்தியம் ஆக்கியவர் என்றால் – அது சிவாஜிலிங்கம் தான். நிலம் கையகப்படுத்தல், அரசின் அனுமதி, அமைச்சர்களிடம் இருந்து நிதி. பிரதேச மக்கள் சிலரின் மறைமுக எதிர்ப்பு, மேலாக மேதாவிகள் ஒரு சிலரின் ‘புட்டிசம்’ கள் .............. என பல தடைகளை தாண்ட முன்னின்றவர் சிவாஜிலிங்கம். சிவாஜிலிங்கம் தான் ‘முழுதும்’ என்று நான் கூறவில்லை.
 
நீச்சல் தடாகத்துக்கு அடிக்கல் போட்ட போது, ‘இது மங்கள சமரவீரவினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முழு முயற்சி என்று FB இல் போட்டார் ஒருவர். ‘நீங்கள் இதுவரை குழப்பியது போதும், இதையும் தயவு செய்து குழப்பிவிடாதீர்கள்’ என்று Comment அடித்திருந்தான் ஒரு இளைஞன். 
 
எனது இந்தப் பக்கத்தின் பிரதான நோக்கம் மேற்குறிப்பிட்ட விடயங்கள் அன்று, மாறாக நீச்சல் தடாகம் எதிர்கொள்ளவுள்ள பிரச்சனைகள் பற்றியது தான்.
 
பராமரிப்புக்கான தகுந்த ஊழியர்கள், பராமரிப்பு செலவு, பயன்பாடு, கடலுக்கு அண்மையில் அமைந்துள்ளமை என சில இடர்கள் வரக்கூடும், இவை இயல்பானவை மற்றும் ஏற்கக்கொள்ளக்கூடியவை.
 
இவைகளுக்கு மேலாக தலை தூக்கவுள்ள பிரச்சனை நீர்ப் பிரச்சனைதான்.   நீச்சல் தடாகதுக்கு 7 லட்சம் லீட்டர் நன்னீர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப இறைப்புக்குத் தேவையான நீர் கூட, வடமராட்சி வடக்கில் இல்லை என்பது ஒரு வியக்க வைக்கும் விடயம். வடமராட்சி வடக்குக்கு சமமான நிலப்பகுதிகளைக் கொண்ட பெரிய நகர்கள் பலவற்றில் லட்சக் கணக்கான குடி  மக்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து நூற்றுக் கணக்கான நீச்சல் தடாகங்களுக்கு நீர் வசதி செய்து கொடுக்கின்றார்கள்.
 
இங்கு ஒரே ஒரு நீச்சல் தடாகத்துக்கு நீருக்கு தட்டுப்பாடு. 
 
நிலாவரை மற்றும் வடமராட்சி கிழக்கின் நீர்ப் படுக்கைகளில் இருந்து முதற் கட்டத்துக்கு நீரைப் பெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது ‘இரணைமடு – யாழ்பாணம்’ மாதிரி அடுத்துக் கட்டங்களுக்கு நகராது.
 
முதற் கட்ட நீரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து எடுத்து, பின்னர் இருக்கும் நீரை சுத்தி கரித்துக் கொண்டு, அதற்குப் பின்னர் தேவைப்படும் நீரை ‘நன்னீர் பிறப்பாக்கி’ (Fresh Water Generator) மூலம் பூர்த்தி செய்யலாம் என்கின்றார்கள் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே எதிர்வரும் காலங்களில் நன்னீர் பிறப்பாக்கியே இந்த நீச்சல் தடாகத்தின் உயிர்நாடியாக விளங்கவுள்ளது.
 
ஆவியாகும் நீர், குளித்தல், குடித்தல் எனப் போன்ற பல தேவைகளுக்கு பெருமளவு நீர் தேவைப்படவுள்ளது. இதைவிட சுத்திகரிப்பு சுதப்பும் போதோ அல்லது டெங்கு முட்டை உள்ளது என்றோ முழுமையாகக் கூட, நீர் மாற்றப் படவேண்டி வரலாம்.
 
யாழில் இதுவரை நன்னீர் பிறப்பாக்கிகள் மூலம் நன்னீர் எங்கும் பெறப்படவில்லை. இந்த முயற்சிக்கான சில முஸ்தீபுகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் கை கூடவில்லை.
 
நன்னீர் பிறப்பாக்கி மூலம் கடல் நீரை சுத்தி கரிப்பது பல இடங்களில் – மழைத்துளி விழாத இடங்களில் - இடம்பெற்றுவரும் ஒன்று தான். கடந்த 26 வருடங்களில் நான் அதிகம் பாவித்துள்ளது இவ்வாறு பெறப்பட்ட நீர் தான் (கப்பல் வாழ்க்கையில்). 
 
ஆனாலும் இங்கு இத்தகைய முறை ஒன்றின் மூலம் கடல்நீரை மாற்றி நன்னீரை  பெறுவது என்பது எவ்வளவு சாத்தியப்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். குறித்த பிறப்பாக்கியை பயன்படுத்தக்கூடிய தொழில் நுட்பம், பராமரிப்பு, உதிரிப் பாகங்கள் பெறுவது போன்று பல சிக்கல்கள் இதில் உண்டு. .இவற்றை விட வேறு ஒரு சிக்கலும் எதிர்காலத்தில் வரக்கூடும் – அதைப்பற்றி நான் இங்கு எழுதவிரும்பவில்லை. 
 
‘தூரத்தில போற பிள்ளையிந்த முகத்தில் இருக்கும் பருவைக் கூட துல்லியமாக படம் பிடிக்கமுடியும் என்று சிங்கபூர் முஸ்தபா சென்டரில் விற்பனையாளர் ஒருவர் கூற, அவசரக்  கோளாறில் ஒரு காமராவை வாங்கி – இன்று அதற்கு ஒரு பட்டரி வாங்க யப்பானில் கூட முயற்சித்து கை விட்டுவிட்டேன்.  
 
நீர்ப் பிறப்பாக்கிக்கு எதிர்காலத்தில் உதிரிப் பாகம் எடுப்பது என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல. (புதுசை வாங்க வேண்டியது தான்) 
 
தற்பொழுது நீச்சல் தடாகம் 
நீர்ப் பிறப்பாக்கி விடயத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு சாதகம் – வல்வையில் பல கப்பற்கார பொறியியலாளர்கள் குறித்த உபகரணத்தை கையாளக்கூடியவர்கள் என்பது தான், திருத்துவது உட்பட. 
 
நீச்சல் தடாகத்துக்கு தேவையான நீரை, தொடர்ந்து தடங்கல்கள் இன்றி பெறுவது பற்றி  சரியான ஒரு திட்டவரைபு (Assessment) தயாரிக்கப்படவில்லை.
 
மழை காலங்களில் 'வெள்ளம்' என்றும் கோடை காலங்களில் 'தண்ணீர்' என்றும் ஒவ்வொரு ஆறு மாதமும் – முன்னுக்கு நடந்ததையும் பின்னுக்கு நடக்கப் போவதையும் மறந்து – காலச் சக்கரத்தில் ஓடும் நாங்கள், நீச்சல் தடாகத்து தண்ணீர் தேவை பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை. ஆனாலும் நீச்சல் தடாகம் நீர்ப் பிரச்சனையால் சில காலங்களுக்காவது திண்டாடும் என்பது திண்ணம். இதுவே இப்பிரதேசத்தின் நீர்ப் பிரச்சனை பற்றி எதிர்காலத்தில் ஒரு புரிதலைக் கொடுக்கக்கூடும்.
 
‘பனை மரத்தை பற்றிக் கூறுகின்றேன் வா' என்று கூட்டிக்கொண்டு போய், ‘பனை மரத்தில் கட்டியிருந்த மாட்டைப் பற்றி கூறுகின்றான்’ என்று நீங்களே கூறாமல் – மாட்டைப் பற்றியும் ஒரு பதிவை இங்கு இடுகின்றேன்.
 
அண்மையில் தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் போன பொழுது, பைலட் கூறியிருந்தார் ‘வீட்டில் வளர்க்கும் மரங்களுக்கு நீர் இடுவதை நிறுத்துமாறு அரசு கட்டளை பிறப்பித்துள்ளது' என்று. 
 
யாழைப் பொறுத்தவரை வருடந்தோறும் சுமார் 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியை பெறுகின்றது. மக்கள் தொகை வெறும் சில லட்சங்கள்தான். ஓரளவு பசுமை வேறு. ஆனாலும் நீர்த் தட்டுப்பாடு. யாழின் நீர்த் தட்டுப்பாடும் – இதனை இங்குள்ளவர்கள் புரியாத் தவறி வருவதும் எனக்கு இன்றும் வியப்பைக் கொடுத்து வருகின்றது.
 
இன்று அரச ஊடகத்தில் வந்த செய்தி - வடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் (https://tamil.news.lk/news/political-current-affairs/item/30281-2019-06-24-08-42-01)
 
‘தமது சொந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் ஒன்றை, உலகில் தடுத்தவர்கள் என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான்’ என்று ஆதங்கப்பட்டிருந்தார் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர். நான் கூட இவ்வாறுதான் யோசித்து இருந்தேன். 
 
'மகாவலித் திட்டம் என்று எமது நிலத்தைப் பிடித்து விடுவார்கள்' என்றார்கள். சரி நன்னீர் திட்டத்துக்கு என்ன மாற்று வழி செய்துள்ளார்கள் அல்லது குறைந்த படசம் கூறியுள்ளார்கள். 
 
மாரி மழையால் தப்பித்து வருகின்றோம். உலக காலநிலை மாற்றத்தால் இரண்டு வருடம் வடக்கில் மழை பெய்யத் தவறினால், மகாவலி நீர் வேண்டும் என்று கூப்பாடு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 
 
வடக்கு மகாவலித் திட்டம் போன்று கூட்டமைப்பினர் குழப்பிய இன்னொமொரு நல்ல விடயங்களில் ஒன்று சுண்டிக்குளம் சரணாலயத்தை விரிவுபடுத்த அரசு மேற்கொண்ட முயற்சியை (ரணில் இங்கு வந்தபோது  கூறி) நிறுத்தியது தான். 
 
எது எப்படி என்றாலும் இங்கு அனைவருக்குமென ஒரு நீச்சல் தடாகம் ஒன்று அமைவது ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு இதனை ஒரு வெற்றிகாரமான திட்டமாக்க அனைவரும் பாடுபடவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்தது தவறான முடிவு ஆயினும், இப்பொது இருக்கும் நிலையில் சுத்தமாக வைத்திருப்பதே செய்யக் கூடியது.
 

44 minutes ago, பெருமாள் said:

எனது இந்தப் பக்கத்தின் பிரதான நோக்கம் மேற்குறிப்பிட்ட விடயங்கள் அன்று, மாறாக நீச்சல் தடாகம் எதிர்கொள்ளவுள்ள பிரச்சனைகள் பற்றியது தான்.

மற்றது, ஊர் மக்கள் தங்கள் பொறுப்பில் எடுப்பது, நீங்கள் சொன்னது. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

நடந்து முடிந்தது தவறான முடிவு ஆயினும், இப்பொது இருக்கும் நிலையில் சுத்தமாக வைத்திருப்பதே செய்யக் கூடியது.

இவ்வளவு தூரம் மீடியா கொண்டுவந்தபின் அவசர அவசரமாய் கிளீன் பண்ணுவினம் .

 

48 minutes ago, Kadancha said:

மற்றது, ஊர் மக்கள் தங்கள் பொறுப்பில் எடுப்பது, நீங்கள் சொன்னது. 

அங்குள்ள அரசியல் விடாது எந்த சம்பவத்துக்கும் பணம் பார்ப்பதிலே கண்ணும் கருத்துமாய் உள்ளார்கள் வல்லிபுர கோவில் பகுதியில் உள்ள பழைய நினைவிடத்தில் ஒரு அறிவிப்பு பலகையை வைத்து விட்டு 15 லட்ஷம் சுருட்டிக்கொண்டு அரசியலும் கேள்விப்பட்டு உள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

ஊர் உலகமுழுக்க டெங்கு டெங்கு நுளம்பு ஒழிப்பு என்று கத்திவிட்டு இப்ப அவங்களே நுளம்பு பக்ரரி  துறந்து வைத்து இருக்காங்களே .

அது சரி இப்ப யாரை குரங்கு என்கிறாங்கள் ?

Jaffnazone காறர்கள் கல்வியறிவில்லாத, நாகரீகமடையாத, வெளியுலக அறிவில்லாத அடி முட்டாள்கள் என்பது என் முடிவு. 

😡

ஒரு மக்கட் கூட்டத்தை இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. 

😡

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

யாழ். மத்திய கல்லூரிக்கும் றீகல் தியேட்டருக்கும் இடையே உள்ள குளத்தை ஒரு நீச்சல் தடாகமாக்கும் முயற்சிகளை அச்சமயம் யாழ்நகரசபை மேயராக இருந்த அல்பிரட் துரைப்பா என்பவர் மேற்கொண்டார். நன்னீர் குறைபாடு உள்ள அந்தப் பிரதேசத்தில் தடாகம் அமைப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனாலும் அரசுடன் அவருக்கிருந்த செல்வாக்கை வைத்து, பல லட்சங்கள் செலவுசெய்து குளம் தூர்வாரப்பட்டபோதுதான் பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் அதற்காக அமைக்கப்பட்ட குழாய்களும் அந்தக் குளத்தில் வந்து சேருவது தெரியவந்தது. ஆயினும் அதற்கான மாற்றுவழிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

பாஞ்ச் அண்ணை...  நீங்கள், இவற்றை நினைவூட்டியவுடன்... 
பழைய நினைவுகள்... எல்லாம் வந்து விட்டது. 🚦

யாழ். பெரிய ஆஸ்பத்திரியிலிருந்து வரும் கழிவு நீருடன்,
வேம்படி மகளிர் கல்லூரியின் கழிவு நீரும்,
மணிக்கூட்டு கோபுரத்தடியில் சந்தித்து.... ஒரு பகுதி புல்லுக்குளத்துக்கும், மிஞ்சினது... 
யாழ். பொது சன நூலகம் முன்பு உள்ள இரண்டு மீற்றர் ஆழமுள்ள, 
திறந்த, சீமெந்து  வாய்க்கால் வழியாக.... பண்ணைக் கடலில் சங்கமிக்கும். :)

நீங்கள் அதனை, கழிவுநீர் வரும் குழாய் என்று குறிப்பிட்டது சரியல்ல.
அது, ஒரு திறந்த பெரிய வாய்க்கால். 

அந்த வாய்க்காலின்... ஆரம்பம், கல்வியங்காட்டில் ஆரம்பிப்பததாக கேள்விப் பட்டேன்.
அது கந்தர்மடம் வழியாக வந்து,  இலுப்பையடி சந்தி, ஆரியகுளம் தாண்டி...
ஆஸ்பத்திரி பக்கம் வந்து.. பண்ணைக் கடலுக்கு,  
மாரி மழை காலத்தில் ஏற்படும், பெரு வெள்ளம் போய் சேர்வதற்காக..
யாழ்ப்பாணத்தை ஆண்ட.. மன்னர் காலத்தில், வடிவமைக்கப் பட்டதாக கூறுவார்கள்.

##########  #########  ##########  ##########  

Amazon.com: Pair Of Neon Tetra Paracheirodon Innesi Freshwater Fish  Isolated On White Background Photography A-91385 (36x24 Framed Gallery  Wrapped Stretched Canvas): Posters & Prints

கொஞ்சமாக எழுதுவோம் என்றுதான்  யோசித்தேன்... 
வெள்ளிக்கிழமை என்றபடியால்... நினைவுகள், அதிகம் வந்து விட்டது. :grin:

நான், யாழ். மத்திய கல்லூரியில்... 3´ம், 4´ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில்,
மத்தியான இடை வேளையின் போது... நண்பர்களுடன் சேர்ந்து... 
வேம்படியின்.. கழிவு நீர் வரும் வாய்க்காலுக்குள் இறங்கி,
மீன் தொட்டியில்  வளர்க்கின்ற, அழகிய மீன்களை பிடிப்போம். 

வேம்படி.. கழிவு வாய்க்கால் என்ற படியால்,
அங்கு இந்த மீன்கள் வளருகின்றதோ.. என்ற ஐயப்பாடு உள்ளது. 😎
ஏனென்றால்.. வேறு வாய்க்கால்களில், நான் இறங்கிப் பார்க்கவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

நீங்கள் சொலவதின் படி, வடபகுதி அல்லது அதை ஒத்த காலநிலை உள்ள இலங்கைத்  தீவின் எந்த பகுதியிலும் செயற்கை நீச்சல் தடாகம் அமைக்க கூடாது.  

நீச்சல் தெரிந்து இருப்பது, முக்கியமாக வளர்ந்து வரும் தலைமுறைக்கு, பொருளாதாரம், உடல் நலம், பொழுதுபோக்கு என்பதில் முக்கியத்துவம் பெறுகிறது., ஏனெனில் எமது 2/3 அடிப்படை வளம் (நிலத்தை விட்டால்), கடலும், குளங்கள், ஆறுகள்.   

தட்டினால் மொட்டை விட்டாற் குடுமி என்கின்ற ரீதியில் கதைக்கப்படாது 🤥

நீச்சல்தடாகம் வல்வெட்டித்துறைக்கு அத்தியாவசிய தேவையா ?

சிறந்த கடற்கரையைக் கொண்டிருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பான வகையில் கடற்கரையில் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியாது ? 

😏

 

7 hours ago, Kadancha said:

சரி, பாவிக்காவிட்டாலும் அதை சுத்தமாக வைத்து இருக்கலாம் தானே? 

அதற்கான  ஊக்கம் ஏன் இல்லாமல் போனது, இப்படி விட்டால் தூர் வாரும்.   

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையோ 😏

 

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

சிறந்த கடற்கரையைக் கொண்டிருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பான வகையில் கடற்கரையில் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியாது ? 

குளிப்பது வேறு.

நீச்சலை ஓர் திறனாக வளர்ப்பது வேறு.

ஆனால் , நீங்கள் சொன்னது போல இங்கு மேற்றகில் இருக்கிறது கடற்கரையை அண்டி.

அதில் கடை நீரை பாவிக்க மாட்டார்கள், நன்நீரையே பாவிப்பார்கள்.  


இங்கு மேற்றகில், எப்போதும் நீச்சல் பழக்க  முடியாது என்பதால், அந்த நேரங்களில் செயற்கை கொந்தளிப்பு, அலை உருவாக்கி  ஓர் பொழுது போக்கான வேளையாக கூடுதல் கட்டணத்துக்கு வெளியாருக்கு திறந்து விடும் நீச்சல் தொடக்க நிலையங்கள் உள்ளது. 

51 minutes ago, Kapithan said:

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையோ

சுத்தமாகவைத்து இருப்பதில் யார் விழுகிறார்கள், யாருக்கு மீசையில் மண் படுகிறது ? 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kadancha said:

குளிப்பது வேறு.

நீச்சலை ஓர் திறனாக வளர்ப்பது வேறு.

ஆனால் , நீங்கள் சொன்னது போல இங்கு மேற்றகில் இருக்கிறது கடற்கரையை அண்டி.

அதில் கடை நீரை பாவிக்க மாட்டார்கள், நன்நீரையே பாவிப்பார்கள்.  


இங்கு மேற்றகில், எப்போதும் நீச்சல் பழக்க  முடியாது என்பதால், அந்த நேரங்களில் செயற்கை கொந்தளிப்பு, அலை உருவாக்கி  ஓர் பொழுது போக்கான வேளையாக கூடுதல் கட்டணத்துக்கு வெளியாருக்கு திறந்து விடும் நீச்சல் தொடக்க நிலையங்கள் உள்ளது. 

சுத்தமாகவைத்து இருப்பதில் யார் விழுகிறார்கள், யாருக்கு மீசையில் மண் படுகிறது ? 

கடஞ்சா,

இப்போதும் நீங்கள் குழந்தையா ? குளிப்பது / நீந்துவது இரண்டிற்கும் வேறுபாடு தெரியாத ஆழா நான் 😂நீங்கள் சொல்லுவதற்கு.. 

கூறப்படும் விடயத்தை கொஞ்சூண்டு..... பெரிதாக விளங்கிக்கொள்ளுங்கள். 👍

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கூறப்படும் விடயத்தை கொஞ்சூண்டு..... பெரிதாக விளங்கிக்கொள்ளுங்கள்.

இதை விட மிகப் பிரமாண்டமான Las Vegas எப்படி ஓர் உல்லாச புரி  நகராகியது, கொதிக்கும் பாலைவனத்து கால நிலையில் என்பதை படித்தால் , இது எங்கே கொண்டு சென்று விடக்  கூடிய அடித்த தளத்தை (நீச்சலை பொறுத்தவரையில்) அமைத்து இருக்கிறது   நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இதை முதலில் வாசிக்கும் போது, எனது மனதில் Las வேகாஸ் கட்டப் படும் போது விழுந்த மாபியா கொலைகள்  மனதில் வந்து சென்றது.

ஆனால் அதற்கு முயதர்சி வேண்டும் என்பது உண்மை. இதனாலேயே முதலில் மக்களின் கைக்கு இந்த நீச்சல் தடாகம் வரவேண்டும் என்கிறேன். 

அந்த லாஸ் வேகஸ் யிலேயே இதை விட பிரமாண்டமான நீச்சல் தடாகங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் தூர நோக்குடன் இது வல்வெட்டித்து துறையில் அமைந்திருப்பது இயற்றக்கையாகவே  நல்லது என்றே நினைத்தேன்.

சூழல் என்பது மனிதனை புடம் போடும் என்பது உண்மை.

அது போலவே வல்வெட்டித்து துறையில் நீச்சலில் இயற்கையான திறன் உள்ளவர்ள் இருப்பது, அந்த மண்ணில் இருந்த தேவையினால்.  

இந்த இயற்கை திறமையை, விளையாட்டு திறமையாக  வளர்த்து எடுப்பதற்கு ஓர் ஆரம்பமாக வசதியாக  அமைந்து இருக்கும் என்பதால்.

வெல்வெட்டித்துறை தேற்றகாசியாவின் நீச்சல் திறன் மையமாக மாறினாலும் ஆச்சரியப்படமாட்டேன்.

வெல்வெட்டித்துறை தேற்றகாசியாவின் நீச்சல் திறன் மையமாக மாறினாலும் ஆச்சரியப்படமாட்டேன். 

இது ஆரம்ப புள்ளி மட்டுமே.

   

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

இதை விட மிகப் பிரமாண்டமான Las Vegas எப்படி ஓர் உல்லாச புரி  நகராகியது, கொதிக்கும் பாலைவனத்து கால நிலையில் என்பதை படித்தால் , இது எங்கே கொண்டு சென்று விடக்  கூடிய அடித்த தளத்தை (நீச்சலை பொறுத்தவரையில்) அமைத்து இருக்கிறது   நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இதை முதலில் வாசிக்கும் போது, எனது மனதில் Las வேகாஸ் கட்டப் படும் போது விழுந்த மாபியா கொலைகள்  மனதில் வந்து சென்றது.

ஆனால் அதற்கு முயதர்சி வேண்டும் என்பது உண்மை. இதனாலேயே முதலில் மக்களின் கைக்கு இந்த நீச்சல் தடாகம் வரவேண்டும் என்கிறேன். 

அந்த லாஸ் வேகஸ் யிலேயே இதை விட பிரமாண்டமான நீச்சல் தடாகங்கள் உண்டு.

நீண்டகாலத் திட்டமிடலில் எதுவுமே சாத்தியம். புலத்திலுள்ளவர்கள் நினைத்தால் எதுவுமே செய்யக்கூடிய வலிமை அவர்களுக்கு இருக்கிறது. 

எனது நண்பன் யாழ் நகரில் Bed and Brake-fast நடாத்துபவன். அதில் வெற்றியும் கண்டவன். KKS Army Hotelக்குப் பக்கத்தில் இன்னொன்றை ஆரம்பிக்க விரும்பி, இராணுவத்தின் தாக்கம் இருக்கலாம் என அஞ்சுவதால் திட்டத்தைப் பின்போட்டுள்ளான். 

👍

  • கருத்துக்கள உறவுகள்

மனம் உண்டானால் வழி உண்டு. நன்னீர்தான் பிரச்சனையா? நீரை மீள் சுழற்சி செய்தாலும் வெப்பம் காரணமாக ஆவியாதல் இருக்கும்.

இதை ஏன் ஒரு கடல் நீர் திடலாக மாற்ற முடியாது?

சர்வதேச போட்டி தரத்தில் இல்லாவிடிலும் ஒரு மனமகிழ்வு மையமாக இருக்கும்.

 

https://www.countryfile.com/go-outdoors/get-active/britains-seaside-lido-revival-history-of-the-lido-and-best-places-to-swim/

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 19:22, தமிழ் சிறி said:

வேம்படியின்.. கழிவு நீர் வரும் வாய்க்காலுக்குள்,

வேம்படிக் கழிவு வாய்காலைக் கண்டுதான் துரையப்பா திட்டத்தை நிறுத்தினாரோ......?? இல்லையென்றால் தூர்வாரித் தடாகம் அமைந்திருக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2020 at 23:40, பெருமாள் said:

121196380_774554416446654_8315021551948555669_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=ddXt-lhkg_cAX8PtJmd&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=50832d00b7d0f0b236b04b350a1044c1&oe=5FAD4680

121567002_774554383113324_6489790354124904091_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=82mPCOwvUfEAX8JI6me&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=60695d6a3ac1308ae87c67f51d361e3b&oe=5FAF5BB0

இது மட்டுமா.. பண்ணையில் அமைக்கப்பட்ட சொகுசுப் படகுச் சேவை.. படகுகள் கவுண்ட நிலையில்..

பண்ணை கடற்கரை நீட்டுக்கும் தீவகம் ஊடாக நாட்டப்பட்ட மரங்களும்.. தொட்டிகளும்.. மரங்கள் எல்லாம் பட்டுப்போய்...

என்ன... சிங்கள.. இராணுவ நினைவிடங்களும்.. இராணுவ முகாம்களும்.. அவர்களுக்கான தடாகங்களும்.. நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கும் போது.. இருக்கும் ஊடக விளம்பரத்துக்கு அப்புறம் எதுவுமே மக்களுக்கு உதவுவதாயும் இல்லை மக்களும்.. அவற்றை பாவிக்கக் கூடிய மனநிலையில் இருப்பதாகவும் இல்லை.

ஏன் இப்ப பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கு என்னாச்சோ..????! வெளவால் படுத்துறங்கக் கூடும். 

சொறீலங்காவில் செய்யப்படும்.. முதலீடுகளுக்கு உத்தரவாதமும் இல்லை.. அங்குள்ள மக்களின் மனநிலை என்பது நோகாமல் நொங்கு குடிப்பதாக இருக்கும் வரையில்.. யார் எவ்வளவைக் கொட்டியும் ஒரு பிரயோசனமும் இல்லை. 

ஏன்.. இன்னொரு தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு கட்டிய விவசாய ஆய்வு கூடக் கட்டடத்தைக் கூட பாவனைக்கு திறந்துவிடாமல் வைத்திருக்கிறார்களே. இப்போ யப்பானின் அழுத்தத்தில் தான் திறக்கப் போகினம்.

என்னே சமூக அக்கறை... சும்மா படிப்பு படிப்பு என்று ஏட்டுச் சுரக்காய்களை உருவாக்கியதே மிச்சம். 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்தை பராமரிப்பதற்கு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் -அங்கஜன்

Screenshot-2020-10-28-12-24-24-820-com-a 

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்தை பராமரிப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வல்வெட்டித் துறை நகர சபையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த நீச்சல் தடாகம், உரிய பராமரிப்புக்கு உட்படுத்தப்படாத காரணத்தினால் சுமார் 25 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இதனைப் பராமரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, தான் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக, யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம், 2019 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது

குமார் ஆனந்தன் என அழைக்கப்படும் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன், 1975 ஆம் ஆண்டில், மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்தி சாதனை படைத்தார்.

இதன்படி, பாக்கு நீரிணையை கடந்த இரண்டாவர் வீரர் என்ற ஏழு சாதனையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்

இந்த நிலையில், அவரின் சாதனையை கௌரவிக்கும் வகையில், குறித்த நீச்சம் தடாகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

https://thamilkural.net/newskural/news/85640/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.