Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                     கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....!

 

                                 IPL 2020: 'Put some respect on the name' - Chris Gayle explains why he  pointed to 'The Boss' sign on his bat after scoring fifty - cricket -  Hindustan Times

 

உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் 

அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் 

கரிய நிறமும் பெரிய உருவமும் உனது 

பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....!

 

வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க 

மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க 

சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர 

சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....!

 

 இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு 

மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்"  டு 

பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து 

பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!

 

அங்கும் இங்கும் ஆலாய் பறந்து 

பந்து பிடிப்பவர்கள் பலர் --- ஆனால் 

பத்தடி நடந்து நீ பந்தெடுத்தால் --- உன்மேல் 

அத்தனை கமராவும் காட்டும் பவர்......!

 

உன் கைகளில் விழுந்த பந்து மீள்வதில்லை 

மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை 

வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு 

வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....!

 

பஞ்சாப்புக்காக ஆடி பந்துகளை 

பஞ்சாப் பறக்க விட்டவனே 

சிங்குகளுக்கு நடுவில் நின்று 

சிங்கமாய் கர்ச்சிக்கின்றாய் .....!

 

நிலத்தையே பார்த்து நிலைத்திருக்கும் கண்கள் 

நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு 

ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை 

ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....!

 

ஆக்கம் சுவி ......!   🙏

 

 

Edited by suvy
சிறு திருத்தம்....!

  • Replies 80
  • Views 9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கெய்லின் சில புகைப்பட தொகுப்புகள்.......!   🏏

  • ஒரு இன்னிங்சில் அதிகமான சிக்ஸர்கள்...... world record.......!   🏏

  • GAYLE FORCE at Warner Park as Chris Gayle took on the Knight Riders bowling attack.....!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு 

மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்"  டு 

பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து 

பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!

சுவி கெயிலை வர்ணித்தது அருமை.
இதெல்லாம் முன்னர் ஒரு காலத்தில்.
கடந்த சில வருடங்களாக அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.
ஒருவேளை நேற்று அடித்து வென்றதை பழைய நினைவுக்கு கூட்டிப் போயிருக்கலாம்.
நானும் அவருடைய மிகப் பெரிய அனுதாபி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை 

வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு 

வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....!

 

வர்ணனைகள் அபாரம் சுவி ஐயா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 16:21, ஈழப்பிரியன் said:

சுவி கெயிலை வர்ணித்தது அருமை.
இதெல்லாம் முன்னர் ஒரு காலத்தில்.
கடந்த சில வருடங்களாக அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.
ஒருவேளை நேற்று அடித்து வென்றதை பழைய நினைவுக்கு கூட்டிப் போயிருக்கலாம்.
நானும் அவருடைய மிகப் பெரிய அனுதாபி.

பாவி நேற்று ஒரு ஓவரில 23 / 24 ஓட்ட்ங்கள் எடுத்து அவுட்டாயிட்டான் ஆனால் அந்த ஒரு ஓவரும்  அபாரம் பிரியன்.....!  🏏  

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 19:39, suvy said:

இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு 

மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்"  டு 

பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து 

பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!

 

 

On 19/10/2020 at 19:39, suvy said:

நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு 

ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை 

ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....!

tmp-29135.gif கவிதை மிக அருமை தோழர் ..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 18:48, கிருபன் said:

வர்ணனைகள் அபாரம் சுவி ஐயா!

அதெல்லாம் ஒரு பீலிங்கில் வருவது கிருபன்.....!

"அடித்து தெறிக்கும் பந்துகள் பறவைகளாய் பறக்க 

அங்கு வரும் விமானங்கள் அலறியடித்து அப்பால் செல்லும்"

இது மிஸ்ஸாயிட்டுது .....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கிரிக்கட் உலகின் அசுரன் கெய்ல்.......!  🏏

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தில் ஓட்டையுள்ள குப்பை பொறுக்கிய இளைஞனா இவர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டேபிள்டென்னிசிலும் கலக்கும் கெய்ல்....பஞ்சாப் வீரர்களுடன் செம ஜாலி........!   🏓

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் & பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியில் மகிழ்ச்சியான தருணங்கள்....!  🏏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் அணி தண்ணீரில் வாலிபால்......!  🏀

23 hours ago, சுவைப்பிரியன் said:

கெயில் ஓய்வாம்.☹️

அலைகள் ஓய்வதில்லை சுவை......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யூனிவேர்சல் பொஸ்சுடன் சிறிய பேட்டி ஒன்று......!   👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸீஸ் நெக்ராவின் பந்துகள் ஒவ்வொன்றும் எல்லையைத் தாண்டும் கோலம்......!  🏏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

47 பந்துகள் 100 ஓட்டங்கள் .....இங்கிலாந்தை புரட்டி எடுத்த அசுரன்.......!   🏏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகூடிய தூரத்துக்கு விளாசப்பட்ட ஆறுகள்.......கெய்ல் & கெவின் பீட்டார்சன்.....!  🏏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12 பந்துகளில் 50 ஓட்டங்கள்.......!  🏏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெய்லுடன் ஒரு பொழுது......கார்னிவெல் கொண்டாட்டங்கள்.....சும்மா கிழி .....கிழி .....கிளி......!  👋

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 18:32, suvy said:

கெய்லுடன் ஒரு பொழுது......கார்னிவெல் கொண்டாட்டங்கள்.....சும்மா கிழி .....கிழி .....கிளி......!  👋

😂

அழகான கவிதை உங்கள் வர்ணனையில்👍, பாராட்டுக்கள். இவருக்கு சிறுவயதில் இதய கோளாறு இருந்ததா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

😂

அழகான கவிதை உங்கள் வர்ணனையில்👍, பாராட்டுக்கள். இவருக்கு சிறுவயதில் இதய கோளாறு இருந்ததா?

 

ஓம் உடையார், ஆடும்பொழுது மைதானத்தில் மயங்கியும் விழுந்திருக்கிறார்......!   😁

பாராட்டுக்கு நன்றி உடையார்....கவிதை எழுதலாம் என்று இருந்தால் ஒரு சொல்லும் வராது, இப்படி ஏதாவது நேரங்கெட்ட நேரத்தில் கொஞ்சம் வரும்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

நேரங்கெட்ட நேரத்தில் கொஞ்சம் வரும்.....!  😂

அந்த நேரம் கெட்ட நேரமேது, நாங்களும் முயற்ச்சித்து பார்க்கலாம் அதுதான், எனக்கு சுட்டுப்போட்டாலும் வருகுதில்லை 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

On 20/10/2020 at 01:09, suvy said:

உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் 

அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் 

கரிய நிறமும் பெரிய உருவமும் உனது 

பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....!

 

வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க 

மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க 

சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர 

சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....!

ஒரு நேர்முகவர்ணனையைக் கூடக் கவிதை வடிவில் தர உங்களால் தான் முடியும் சுவி அண்ணா. 

கிறிஸ் கெய்லை அறியாதவர்களும் ரசிக்கும்படியான அழகுக் கவிதைக்கு நன்றி. வாழ்த்துக்கள் சுவி அண்ணா. 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துடன் ஆடிய போட்டியில் ஆகாயத்தை முத்தமிட்ட  39  அசத்தலான ஆறுகள் .....!   🏏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.