Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் முழுவதும் கொரோனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல்

ஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


 
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது. இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த மருத்துவ அவசரநிலை கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜூலை விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தையடுத்து பிரான்சில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதேபோல் பிரான்சில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து பிரான்ஸ் நாட்டில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

நாளை (அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதன் பின் ஆய்வுகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஊரடங்கு விதிமுறைகள்:-

மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை.

பள்ளிகள் செயல்பட அனுமதி 

வேலைக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி

மருத்துவதேவைக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை

பார்கள், உணவகங்கள், அத்தியாவசிய தேவைகள் அற்ற கடைகள் திறக்க தடை

வீடுகளில் இருந்து வேலை செய்ய அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடந்த வேண்டும்

சர்வதேச எல்லைகள் பெரும்பாலும் மூடப்படும்

அத்தியாவசிய கடைகள் செயல்படும்

பொதுப்போக்குவரத்து செயல்படும்

தொழிற்சாலைகள், விவசாயம், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறலாம்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எல்லைகள் திறந்தே இருக்கும்

பிரான்ஸ் மக்கள் வெளிநாடுகளில் இருந்து சொந்த நாடு திரும்பலாம்

முதியோர் இல்லங்கள் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/29015343/2017634/France-announces-second-lockdown-due-to-Coronavirus.vpf

Edited by உடையார்

  • உடையார் changed the title to உலகம் முழுவதும் கொரோனா
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த காலத்தில் அதிகபட்ச பாதிப்பு: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா

குறைந்த காலத்தில் அதிகபட்ச பாதிப்பு: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா

லண்டன்,

உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து இதுதான் குறைந்த காலத்தில் அதிகபட்ச பாதிப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஐரோப்பிய பிராந்தியம்தான் அதிகபட்ச பாதிப்பாக 46 சதவீத பங்களிப்பை (13 லட்சம் பேர்) கொண்டுள்ளது.கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவதும் 21 ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கடந்த 3 வாரங்களாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை பதிவு செய்வதில் மாறாமல் இருப்பதாவும் அது தெரிவிக்கிறது.+

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/29032752/Maximum-impact-in-a-short-period-of-time-Corona-to.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஸ்பெயினில் ஒரே நாளில் 18,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 
ஸ்பெயினில் ஒரே நாளில் 18,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 

ஸ்பெயினில் கொரோனா பரவல் 2-வது அலை வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுதான் 2-வது அலையில் ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு ஆகும்.

இத்துடன், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 16 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/29034035/In-Spain-18418-people-were-confirmed-with-corona-in.vpf

பிரான்சின் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் கூறிய அறிவிப்புக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
123166544_181965190079284_7680671008494870595_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=u20w1KCdFskAX_o2cGc&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9023558378b2e3df44265d8c3a605621&oe=5FBF3FBE
 
சுவிஸ் கூட்டாட்சி அரசின் முடிவுகள் சில
 
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பெடரல் கவுன்சில் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
 
☀️டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மூடப்படும்.
☀️பார்கள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட வேண்டும்.
☀️குழந்தைகளுடன் குடும்பங்களைத் தவிர, அதிகபட்சம் நான்கு பேர் உணவகங்களிலும் பார்களிலும் ஒரு மேஜையில் உட்கார அனுமதிக்கப்படுகிறார்கள்
☀️50 க்கும் மேற்பட்ட நபர்களுடன் அனைத்து நிகழ்வுகளும், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் விளையாட்டு மற்றும் கலாச்சார ஓய்வு நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
☀️பாராளுமன்றம் மற்றும் சமூக சபைகள் விலக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கையொப்பங்கள் சேகரிப்பு ஆகியவை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன.
☀️தனியார் அறைகளில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நிகழ்வுகளுக்கான நபர்களின் எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
☀️விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தின் தொழில்முறை துறையில், பயிற்சி மற்றும் போட்டிகள் மற்றும் ஒத்திகை மற்றும் நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. 16 வயதிற்குட்பட்டவர்களுக்கும் விதிவிலக்குகள் உள்ளன.
☀️பல்கலைக்கழகங்களில் நேருக்கு நேர் கற்பித்தல் தடை (நவம்பர் 2 முதல்).
முகமூடி தேவையின் விரிவாக்கம்:
☀️வசதிகள் மற்றும் வணிகங்களின் வெளிப்புற பகுதிகளிலும் இப்போது ஒரு முகமூடி அணிய வேண்டும். ஒரு முகமூடி தேவை பிஸியான பாதசாரி பகுதிகளிலும் பொருந்தும் மற்றும் பொது இடங்களில் தேவையான தூரத்தை பராமரிக்க முடியாது.
 
தொகுப்பு: சுவிஸ் தமிழர் தகவல் மையம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்காக இப்படி செய்கிறார்கள்... அமெரிக்க மருத்துவர்கள் மீது பழிபோட்ட டிரம்ப்

பணத்துக்காக இப்படி செய்கிறார்கள்... அமெரிக்க மருத்துவர்கள் மீது பழிபோட்ட டிரம்ப்

 

மிச்சிகன் மாநிலம் வாட்டர்போர்டு நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியதாவது:-

அமெரிக்காவில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள்.


 
யாராவது கொரோனாவால் உயிரிழந்தால் நமது மருத்துவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும், அதனால் தான் மருத்துவர்கள் பலி எண்ணிக்கையை உயர்த்துகின்றனர். ஆனால், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர்.

உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் அதிக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது, அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது.

தற்போது நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைகிறது, மக்கள் குணமடைகின்றனர். அதற்கு நானும், எனது மனைவியும் உதாரணம்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

மருத்துவத்துறையை தாக்கி டிரம்ப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த சனிக்கிழமை பேசும்போது, மருத்துவர்கள் அதிக பணம் பெறுவதாகவும், மருத்துவமனைகளுக்கு அதிக பணம் கிடைப்பதாகவும் கூறினார். 

மருத்துவர்கள் தாங்கள் சிகிச்சையளிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகக் கூறியதற்கு அமெரிக்க மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், டிரம்ப் பெயரை குறிப்பிடவில்லை. +

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/31150048/2028229/Trump-derides-medical-system-says-doctors-are-inflating.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமாளி போல் வேடமணிந்து கொரோனா மரண எண்ணிக்கையை அறிவித்த சுகாதார அதிகாரி

கோமாளி போல் வேடமணிந்து கொரோனா மரண எண்ணிக்கையை அறிவித்த சுகாதார அதிகாரி

 

கொரோனா பாதிப்புள்ள நாடுகளில், தினமும் கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அறிவிக்கப்படுகிறது வழக்கம்.  அந்த வகையில் அமெரிக்காவின் ஓரிகான் மாகாண சுகாதார அதிகாரி வித்தியாசமான முறையில் கோமாளி போல் வேடமணிந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


‘ஓரிகானில் மொத்தமாக 38,160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளது கவலையான விஷயம்’ என தெரிவித்துள்ளார். இதனை பேசி முடித்த பிறகு அவர் முகக்கவசத்தை எடுத்து மாட்டிக் கொள்கிறார். 

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஹாலோவீன் திருவிழாவை எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுபோல் கொரோனா அறிவிப்பை வெளியிடுவதன் அவசியம் என்ன என்றும், இது மிகவும் மோசமான செயல் என்றும் பலர் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/02044658/Led-By-Fools-US-Health-Official-Dresses-Up-As-Clown.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது

 

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
 
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.67 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 11.88 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/02032741/2028587/Coronavirus-death-case-crosses-12-lakhs-in-world.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை கடந்தது

 

வாஷிங்டன்,

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 61.25 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 31.40 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/03011700/The-incidence-of-corona-in-the-United-States-is-close.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 52 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 52 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

 

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.


 
கடந்த சில நாட்களாக பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 66 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் 416 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/03030317/2028849/Coronavirus-positive-cases-crosses-52000-per-day-in.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரு நாட்டில் பெருகும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது

பெரு நாட்டில் பெருகும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது

 

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 11-வது இடத்தில் உள்ளது.


 
இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 623 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8.32 லட்சத்தை கடந்துள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/04043553/2039095/Coronavirus-positive-cases-crosses-9-lakhs-in-Peru.vpf

22 நாடுகளில் கொரோனா அட்டகாசம் தீவிரம் – மரணங்கள் 1,213,667 ஆனது!

world-map-coronavirus-graphic-big-960x640.jpg?189db0&189db0

 

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இந்தியா, பிரேஷில், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பைன், ஆர்ஜன்டீனா, கொலம்பியா, பிரித்தானியா, மெக்சிகோ, பெரு மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (03) இரவு 8 மணி வரை 216 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 47,471,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 1,213,667 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34,118,586 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 12,139,156 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 87,014 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

  • அமெரிக்கா > 237,031
  • பிரேஷில் > 160,272
  • இந்தியா > 123,179
  • மெக்சிகோ > 92,100
  • பிரித்தானியா > 46,853
  • இத்தாலி > 39,059
  • பிரான்ஸ் > 37,435
  • ஸ்பைன் > 36,257
  • ஈரான் > 36,160
  • பெரு > 34,585
  • கொலம்பியா > 31,670
  • ஆர்ஜன்டீனா > 31,623
  • ரஷ்யா > 28,828
  • தென்னாபிரிக்கா > 19,465
  • சிலி > 14,302
  • இந்தோநேசியா > 14,146
  • ஈகுவாடோர் > 12,692
  • பெல்ஜியம் > 11,858
  • ஈராக் > 11,068
  • ஜேர்மனி > 10,782
  • துருக்கி > 10,402
  • கனடா > 10,208

காணப்படுகின்றன.

 

https://newuthayan.com/22-நாடுகளில்-கொரோனா-அட்டகா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்

இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்

இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் 2வது அலையை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதிவு: நவம்பர் 05,  2020 05:22 AM
ரோம்,

ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.


இதுவரை இத்தாலியில் மொத்தம் 7,60,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் மட்டும் புதிதாக 30,550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 39,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது கொரோனா வைரசின் 2வது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை இத்தாலி பிரதமர் குவிசெப் கான்ட்டே அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலங்களிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை இத்தாலி அரசு அறிவித்துள்ளது. 

இத்தாலியின் அதிக மக்கள் தொகை கொண்ட லோம்பார்டி நகரத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று(வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் மக்கள் தங்களை இந்த கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/05052254/New-regulations-to-curb-the-growing-corona-spread.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை துரத்தும் கொரோனா - 98 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

 

 

அமெரிக்காவை துரத்தும் கொரோனா - 98 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.


 
இந்நிலையில், அமெரிக்காவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தை நெருங்கியுள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 1170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 62.82 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 32.73 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/05055643/2039360/COVID19-positive-cases-near-98-lakhs-in-America.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது

 

 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது

 

லண்டன்,

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 4 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,49,80,752 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 12,39,410 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,27,97,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 77,64,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 99,19,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,40,953 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1.09 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/06093428/Corona-damage-worldwide-is-close-to-5-million.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கொரோனாவுடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட நீதிபதி: ஓட்டுப்பதிவு முடிந்ததும் பலி

அமெரிக்காவில் கொரோனாவுடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட நீதிபதி: ஓட்டுப்பதிவு முடிந்ததும் பலி

 

தேர்தல் மேற்பார்வை பணியில் நீதிபதி ஒருவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு கடந்த மாதம் 30-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: நவம்பர் 07,  2020 06:27 AM
வாஷிங்டன், 

அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரில் பிளான்செட் பார்க் நினைவு மண்டபம், வாக்குச்சாவடியாக செயல்பட்டது. அங்கு தேர்தல் மேற்பார்வை பணியில் நீதிபதி ஒருவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு கடந்த மாதம் 30-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தேர்தல் பணியில் இருந்து இருக்கிறார்.அவர் பணியில் இருந்த வாக்குச்சாவடியில் தேர்தல் நாளில் 2 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், அவர் திடீரென இறந்து விட்டார். கொரோனா பாதிப்பு தீவிரமான நிலையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் பணியாற்றிய அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பாதுகாப்பு குறித்து அங்கு கவலை எழுந்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/07062749/US-election-judge-worked-despite-COVID19-diagnosis.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரான்சில் ஊரடங்கிற்கு மத்தியில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 60,486 பேருக்கு தொற்று உறுதி
 
பிரான்சில் ஊரடங்கிற்கு மத்தியில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 60,486 பேருக்கு தொற்று உறுதி
 

பாரீஸ், 

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. குறிப்பாக பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

அந்த வகையில் அந்த நாட்டில் வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 486 பேருக்கு புதிதாக வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பிரான்சில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 61 ஆயிரத்தை கடந்துள்ளது. 

அதேபோல் அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதாவது அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 828 பேர் கொரோனாவால் உயிரிழந்ததன் மூலம் மொத்த பலி 39 ஆயிரத்து 865 இருந்துள்ளது. இதற்கிடையில் பிரான்சில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/08024825/Corona-rising-amid-curfew-in-France-60486-people-confirmed.vpf

பிரான்ஸின் நிலைமை என்ன? ‘உள்ளிருப்பு’ நடவடிக்கை கொரோனா பரவலைக் குறைத்துள்ளறதா?

  • பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம்

பிரான்ஸில் வரும் நாட்களில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்படுவோர் தொகையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் தொகையும் மிக அதிகமாகும் என பிரான்ஸ் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

1-4.jpgஇந்தக் காலகட்டத்தில் இவ்வாறு அமையும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததாக சுகாதார அமைச்சர் Olivier Véran நேற்று France Inter வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இப்பொழுது அதிகரித்துச் சென்றாலும் அது சிறிது சிறிதாக குறைவடைந்து வருகின்றது.

இதற்கு உள்ளிருப்பு நடவடிக்கையே முக்கியகாரணம்.

ஆனால் வரும் நாட்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் தொகை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வைத்தியசாலைகளில் இப்பொழுது கொரோனா தொற்று நோயாளிகளுக்கு என அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் வேறு நோய்கள் காரணமாக மருத்துவ தேவைகளுக்கென வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் வயது எல்லை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாகக் கருத்துகள் பரவியுள்ளன.

கொரோனா தொற்றாளர்கள் வயதானவர்களாக இருக்கும் பட்சத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் இருப்பதாக நாடளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகின்றது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலைகளிலுமிருந்து ஒருவரையும் தாங்கள் திருப்பி அனுப்பப்போவதில்லை என்றும் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது பிரான்சில் உள்ள வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 6,400 படுக்கைகள் உள்ளன.

அவற்றில் 4410 படுக்கைகள் கொரோனா தொற்றாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/87335

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கின்றார்கள்.

https://www.bbc.com/news/health-54873105

கொரோனா வைரஸ்: 90 சதவீத அளவு பாதுகாப்பு அளிக்கும் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

தடுப்பு மருந்து

 

முதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் "இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம்," எனத் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அவசர ஒப்புதலை வழங்கும் அனுமதிக்கு இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

தடுப்பு மருந்து மற்றும் தேவையான நல்ல சிகிச்சை - இதுதான் இந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி.

https://www.bbc.com/tamil/science-54

Corona: Biontech plant im November Zulassungsantrag für Impfstoff - WELT

https://www.welt.de/wirtschaft/article219653484/Corona-Biontech-plant-im-November-Zulassungsantrag-fuer-Impfstoff.html?fbclid=IwAR2PisHAp5uwbeLmNXjZtyZ3gZMtSvt-u-yGbz5uXfx6dckI96pvb7Duego&wtrid=socialmedia.socialflow....socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்றால் சாமியாரின் வாய்க்கு அல்வா .அதாவது இனிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தடுப்பூசிகளை கொண்டு போய் இலங்கையில் பரிசித்து பார்க்கப் போயினம் போல அதால எத்தனை பேர் சாகப் போயினமோ:38_worried: 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2020 at 05:01, செண்பகம் said:

22 நாடுகளில் கொரோனா அட்டகாசம் தீவிரம் – மரணங்கள் 1,213,667 ஆனது!

world-map-coronavirus-graphic-big-960x640.jpg?189db0&189db0

 

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இந்தியா, பிரேஷில், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பைன், ஆர்ஜன்டீனா, கொலம்பியா, பிரித்தானியா, மெக்சிகோ, பெரு மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (03) இரவு 8 மணி வரை 216 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 47,471,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 1,213,667 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34,118,586 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 12,139,156 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 87,014 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

  • அமெரிக்கா > 237,031
  • பிரேஷில் > 160,272
  • இந்தியா > 123,179
  • மெக்சிகோ > 92,100
  • பிரித்தானியா > 46,853
  • இத்தாலி > 39,059
  • பிரான்ஸ் > 37,435
  • ஸ்பைன் > 36,257
  • ஈரான் > 36,160
  • பெரு > 34,585
  • கொலம்பியா > 31,670
  • ஆர்ஜன்டீனா > 31,623
  • ரஷ்யா > 28,828
  • தென்னாபிரிக்கா > 19,465
  • சிலி > 14,302
  • இந்தோநேசியா > 14,146
  • ஈகுவாடோர் > 12,692
  • பெல்ஜியம் > 11,858
  • ஈராக் > 11,068
  • ஜேர்மனி > 10,782
  • துருக்கி > 10,402
  • கனடா > 10,208

காணப்படுகின்றன.

 

https://newuthayan.com/22-நாடுகளில்-கொரோனா-அட்டகா/

எங்கு களியாட்டங்களும்.. பப்..பார்களும்... கசினோக்களும் அதிகமோ அங்கு கொரோனாவும்.. களியாட்டம் போடுகிறது அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

உண்மை என்றால் சாமியாரின் வாய்க்கு அல்வா .அதாவது இனிப்பு.

இனிப்பு??????  தெரியும் தானே இப்பத்தையான் பிரச்சனையள்....🤓

மிக்ஸர் ,பக்கோடா எண்டால் விரும்பத்தக்கது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின் 40 வீதமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் – சுகாதார அமைச்சர்  எச்சரிக்கை | Athavan News

ஜேர்மனியின் 40 வீதமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஜேர்மனியின் வயதான மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளான பெருந்தொகை மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல மேலைத்தேய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையினை எதிர் நோக்கியுள்ள நிலையில் அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn), ஜேர்மனியின் பலர் அவர்களது வயதுநிலை காரணமாக மிகுந்த பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜேர்மனி உலகிலேயே இரண்டாவது பழமையான இனக்குழுவைக் கொண்ட நாடு. ஜேர்மானிய மக்களில் பலருக்கு பரவலாக உள்ள, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்களின் காரணமாகவும் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான நிலைப்பாடுகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சாதகமாக அமைந்துள்ள அதேவேளை வேறு பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயங்களை ஏற்படுத்தியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மானிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 வீதமானவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜேர்மனியின்-40-வீதமானவர்க/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சீன தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நிறுத்தம்

சீன தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நிறுத்தம்
 

பிரேசிலியா, 

உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பில் 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 56.75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது. பிரேசில், உலகளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் கொரோனாவால் சந்தித்துள்ளது. அங்கு 1.62 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.


கொரோனாவில் இருந்து மீள ஒரு வழி தெரியாமல் கொரோனா தத்தளித்து வருகிறது.

இந்த நிலையில் சீன மருந்து நிறுவனமான சைனோவேக், ‘கொரோனாவேக்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி பிரேசில் நாட்டில் 7 மாகாணங்களில் பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியின் 60 லட்சம் ‘டோஸ்’களை இறக்குமதி செய்வதற்கு பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அனுமதி அளித்தது.இந்த நிலையில் ‘கொரோனாவேக்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் பரிசோதனையின்போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இந்த தடுப்பூசியின் பரிசோதனையை பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் அந்த தடுப்பூசியை பிரேசிலில் தயாரித்து வந்த சாவ் பாவ்லோ மாகாண அரசு நிறுவனமான புட்டான்டன் நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையொட்டி சாவ் பாவ்லோ மாகாண அரசு வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் பொதுவாக இத்தகைய பாதிப்பு நிகழ்கிறது. இது குறித்த தகவல், அன்விசா மூலம் வராமல் ஊடகங்கள் மூலம் வந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தி வைக்கும் அன்விசாவின் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது” என கூறி உள்ளது.

ஏற்கனவே இந்த தடுப்பூசி பிரேசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோ சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்த தடுப்பூசியை பகிரங்கமாக நிராகரித்த அவர், பிரேசில் மக்கள் கினிப்பன்றிகளாக தடுப்பூசி பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என அவர் கூறி இருந்தார்.

இந்த தடுப்பூசியை சோதனையின்போது போட்டுக்கொண்ட ஒருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது இறப்புக்கு தடுப்பூசிதான் காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அங்கு 10 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு சோதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவின் பைஸர் மற்றும் அதன் கூட்டாளியான ஜெர்மனியின் பயோஎன்டெக், தங்களது தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக 44 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது தடுப்பூசியில் பாதுகாப்பு கவலைகள் எதுவும் எழவில்லை என்று பைஸர் கூறி உள்ளது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ., தங்களை மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வுக்காக நாடுவதற்கு முன் குறைந்தபட்சம் அதை போட்டுக்கொண்ட பாதி எண்ணிக்கையிலான தன்னார்வலர்களையாவது தொடர்ந்து 2 மாதங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இந்த நிலையை இம்மாத இறுதியில் பைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் அடைந்து விடும் என தகவல்கள் கூறுகின்றன.

மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளின் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு தொலைவில் இல்லை என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/11035727/Discontinuation-of-clinical-trial-of-Chinese-vaccine.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ரஷியாவில் வேகமெடுக்கும் கொரோனா; ஒரே நாளில் 20,977 பேருக்கு தொற்று உறுதி

ரஷியாவில் வேகமெடுக்கும் கொரோனா; ஒரே நாளில் 20,977 பேருக்கு தொற்று உறுதி
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியாவும் ஒன்று. அங்கு கடந்த சில நாட்களாக வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 3 நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 977 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
 
இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 18 லட்சத்து 17 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனாவால் 5.1 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் 5.1 கோடி பேர் பாதிப்பு
 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,17,89,605 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் இந்த வைரஸ் காரணமாக இதுவரை 12,78,442 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,63,62,572 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,05,57,047 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 86,35,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரேசில்(56,79,212) 3வது இடத்திலும், ரஷ்யா(18,17,109) 4வது இடத்திலும், பிரான்ஸ்(18,07,479) 5வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/World/2020/11/11085803/51-crore-people-worldwide-are-affected-by-corona.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.