Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும் மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!

 

1604130621126116.jpg

தனக்கு மற்றோருவருடன் காதல் இருப்பதாக கூறி மண மேடையிலேயே மணமகனை மணமகள் நிராகரித்த சம்பவம் உதகையில் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஆனந்த் என்பவருக்கும் கோத்தகிரி அருகேயுள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்காக மட்டக்கண்டி கிராமத்தில் உற்றார், உறவினர்கள் கூடியிருந்தனர். இவர்கள் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள்.

படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என்று கேட்க வேண்டும் . மணப்பெண் 'சம்மதம்' என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும்.

அதன்படி, மணமகன் ஆனந்த், மணப்பெண் பிரியதர்ஷினியிடத்தில் 'தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என இருமுறை கேட்ட போது அவர் மௌனமாக இருந்தார். மூன்றாவது முறையாக மணமகன் கேட்ட போது வெடித்து அழுது 'எனக்கு சம்மதமில்லை' என்று பிரியதர்ஷினி உரக்க கூற, திருமண பந்தலில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரியதர்ஷினியை சமாதானப்படுத்த பெற்றோர்கள் முயன்றனர், ஆனாலும் பலன் இல்லை.

மணமகள் பிரியதர்ஷினி மணப்பந்தலில் கூறுகையில், ''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்" என்றவாறே அங்கிருந்து செல்ல முற்பட்டார். 🤭

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மாப்பிள்ளை தாலி கட்டாமல் மண மேடையை விட்டு இறங்கி சென்று விட்டார்.

பின்னர், பெற்றோர் மணமகள் பிரியதர்ஷினியை காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும், இனி வீட்டுக்கு வர வேண்டாம் எங்கேயாவது சென்று விடும்படி கூறி அவரை அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் வீட்டுக்கு அழுதபடி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, 'இத்தனை நாள் பொறுத்து இருந்து விட்டு மண நாள் வரை காத்திருந்து அந்த பெண் ஏன் சொல்ல வேண்டும். திருமண கனவில் இருந்த மற்றோரு ஆணை ஏன் அவமதிக்க வேண்டுமென்றும்..?' சமூகவலைத் தளங்களில் அந்த பெண்ணுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.                    

பாலிமர் செய்திகள்

 

டிஸ்கி:

இதை சொல்ல, இந்தப் பொண்ணு மணமேடை வரை வந்திருக்க வேண்டிய தேவையே இல்லையே..!

பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..! ☹️

 

 

Edited by ராசவன்னியன்
  • Haha 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

1604154021126173.jpg

சென்னையில் இருந்து வருவதாக வாக்குறுதி அளித்த காதலன் அரை மணி நேரத்தில் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஊட்டியில் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திய மணமகள் நாள் முழுக்க காத்திருந்தும் காதலன் வராத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சூர் பகுதியில் உள்ள மட்டகண்டி கிராமத்தில் நடக்க இருந்த திருமணத்தை, மணமேடையில்..., தாலிகட்டும் நேரத்தில்..., மணமகனை தடுத்து 'தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை'யென போர்க்கொடி உயர்த்தி திருமணத்தை நிறுத்தியவர் மணப்பெண் பிரியதர்சினி..!

"ஊரார் சுற்று போட்டாலும்...தாயார் அடிக்க பாய்ந்தாலும்... அஞ்சாமல் தன்னை தேடி தனது காதலர் இன்னும் அரைமணி நேரத்தில் இங்கு வருவார்" என்று கூறி திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி, காதலனையாவது கரம் பிடித்தாரா ? என்பது பலரது கேள்வியாக இருந்தது.

மணமகளின் கலாட்டாவால் கல்யாணம் நிறுத்தப்பட்டது கடந்த 29ந்தேதி...! அன்று முழுவதும் பிரியதர்ஷனி இலவுகாத்த கிளியாக காத்திருந்தும் கடைசிவரை அவரது சென்னை காதலன், அங்கு வரவில்லை...

இதையடுத்து தங்களது மகளை காரில் அழைத்துச்சென்ற மணமகளின் பெற்றோர் அவரை 'லவ்டேல்' என்று அழைக்கப்படும் சுற்றுலா பகுதியில் சாலையில் இறக்கிவிட்டு, "இனி வீட்டிற்கு வரக்கூடாது" என்று எச்சரித்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

திருமணத்துக்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக வாக்குறுதி அளித்த காதலன், டாடா காட்டிய நிலையில், காதலனை தேடிச்சென்று கரம் பிடிப்பது என்ற லட்சியத்துடன் அந்தப் பெண் சென்னைக்கு புறப்பட்டதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே திருமணத்தை நிறுத்திய தங்களது மகளால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக மனம் நொந்த பெற்றோர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் 'மணப்பெண் பியதர்ஷினி காதலிக்கும் நபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், முறைப்படி மனைவியை விவாகரத்து செய்து கொண்டால் மட்டுமே பியதர்ஷினியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளமுடியும் என்பதால், காதலனுக்காக இலவு காத்த கிளியாக பட்டணத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி..' என்கின்றனர் அவரது உறவினர்கள்.

பாலிமர் செய்திகள்

டிஸ்கி:

இதைத்தான் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை என்பார்களோ..? கொடுமை..!  ☹️  

துணிவோடு நல்லா வாழ்ந்தால் சரிதான், வாழ்த்துக்கள்.. 💐                 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொடுமை  சகோ

இப்படி  பல .....???

Posted
8 hours ago, ராசவன்னியன் said:

''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்"

 

 

8 hours ago, ராசவன்னியன் said:

பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..!

இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, சண்டமாருதன் said:

இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும். 

அட ஏன் சார், நீங்க வேறை..!

ஏற்கனவே திருமணமானவரை குழப்பத்தில் ஆழ்த்தி, வரவிருந்த மாப்பிள்ளைக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, இப்பொழுது வீதியில் நிற்கும் பெண்ணின் செயலில் நியாயமும், தர்மமும் இருப்பதாக தெரியவில்லை.

மாப்பிள்ளை தப்பித்தார் என சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ராசவன்னியன் said:

படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என்று கேட்க வேண்டும் . மணப்பெண் 'சம்மதம்' என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும்.

மணமகன் மணமகளிடம் கேட்பதை விட பெற்றோர்களே ஒன்றுக்கு 100 தடவை தங்கள் பிள்ளைகளிடம் கேட்டு முடிவெடுக்கலாமே?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலியாண பேச்சுக்கால் நடக்கேக்கையே பெட்டை இதை சொல்லியிருக்கலாமெல்லோ?
நான் பெட்டைக்கு தகப்பனாயோ இல்லை அண்ணனாயோ இருந்தால் மணமேடையிலையே வைச்சு எலும்பை நொருக்கியிருப்பன்...😡

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுபோன்ற செய்திகள் இன்னமும் நிறைய வரலாம் 
இப்போதைய இளைஞர் யுவதிகளிடம் புரிதல் இல்லாமையே 
இதற்கு அடிப்படை காரணம். இதுக்கு ஒரே வழி 
எல்லோரும் காஜலிசம் பழகுவதுதான்... காஜலிசம் இந்த 
பிரபஞ்ச கோட்ப்பாடுகளை எளிதாக புரிய வைக்கிறது 
அந்த புரிதல் மகிழ்வான வாழ்வுக்கு வழி சமைக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"பொய் கூறி திருமணத்தை நிறுத்தினேன்"-திருமணம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

100875.webp

கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்துக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும்.

அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் "சம்மதமில்லை" என்று கூறி, ஆனந்தின் கைகளை தடுத்தார். தான் விரும்பும் ஒருவர், "ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்" என்று கூறியவாறே, எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார். இதை மறுத்து தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை தாக்க முற்பட்டனர். இவை ஒருபுறம் நடக்க மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்தோ, செய்வதறியாமல் சங்கடத்தில் தவித்தார்.

இந்நிலையில் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னை வந்தததாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் தான் இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததாகவும் அதனாலேயே பொய் கூறி திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறை

 

நம்புகிற மாதிரி இருக்கிறதா..? எதை நம்புவது..?? 😜

1 hour ago, Maruthankerny said:

இதுபோன்ற செய்திகள் இன்னமும் நிறைய வரலாம் 
இப்போதைய இளைஞர் யுவதிகளிடம் புரிதல் இல்லாமையே 
இதற்கு அடிப்படை காரணம். இதுக்கு ஒரே வழி 
எல்லோரும் காஜலிசம் பழகுவதுதான்... காஜலிசம் இந்த 
பிரபஞ்ச கோட்ப்பாடுகளை எளிதாக புரிய வைக்கிறது 
அந்த புரிதல் மகிழ்வான வாழ்வுக்கு வழி சமைக்கிறது 

இந்த அண்டா சராசரமே "அக்கா" கஜா அகர்வாலால் தான் இயங்குகிறது சாமி..! ஆளை விடுங்கள்..!! 😜🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ராசவன்னியன் said:

இந்த அண்டா சராசரமே "அக்கா" கஜா அகர்வாலால் தான் இயங்குகிறது சாமி..! ஆளை விடுங்கள்..!! 😜🙏

இந்த பிரபஞ்சத்தின் மொத்த அசைவுமே 
கண்ணுக்கு தெரியாத சின்ன அணுவின் அசைவில்தான் தொடங்குகிறது 
இந்த சூட்ஷமத்தை நாம் முதலில் புரிய வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

123307959_2231027677041126_3838828468307522744_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Stg_QDav174AX-u4T6S&_nc_ht=scontent-frx5-1.xx&oh=172f6dea8963032f47dbdae21df5f451&oe=5FC7472C

மணமகள்: நான் பார்த்த எல்லா படத்திலேயும்... 
காதலன். கடைசி நேரத்தில்.. வந்துதான், கூட்டிக்  கொண்டு போவார். 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/11/2020 at 02:47, தமிழ் சிறி said:

123307959_2231027677041126_3838828468307522744_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Stg_QDav174AX-u4T6S&_nc_ht=scontent-frx5-1.xx&oh=172f6dea8963032f47dbdae21df5f451&oe=5FC7472C

மணமகள்: நான் பார்த்த எல்லா படத்திலேயும்... 
காதலன். கடைசி நேரத்தில்.. வந்துதான், கூட்டிக்  கொண்டு போவார். 😜

மணமகள்: நான் பார்த்த எல்லா படத்திலேயும்... காதலன். கடைசி நேரத்தில்.. வந்துதான், கூட்டிக்  கொண்டு போவார். 

 

அங்கும் இங்கும் விதைப்பவைகளையே பின்பு அறுவடை செய்கிறோம் 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐயோ, மாத்தையாவை தோற்கடித்து வரலாற்றுதுரோகத்தை செய்து, வாழ்நாள் முழுவதும் பழியை சுமக்காதீர்கள். 
    • ஐயோ.... எனக்கு சிங்களம் தெரியாது, ஆளை விடுங்கோ! அதனாற்தான் சிங்களம் தெரிந்த கள உறவுகளை நெடுநாளாக வேண்டுகிறேன்.    
    • இதென்ன புதுக்கதை? மைத்திரியை அரியணை ஏற்றியது நாமேதான். அப்போ, சந்திரிகா உடன்படிக்கை எழுத சொல்ல, நாம்தானே எழுதவெல்லாம் வேண்டாம், நமக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நல்லெண்ண  சமிக்ஞை கொடுத்தோம். பிறகெதற்கு அவகாசம்? கோத்தாவை நாங்கள் தேர்ந்தெடுக்கவுமில்லை, விரட்டவுமில்லை. அவரின் பதவியேற்பில் நாங்கள் பங்காளிகளுமில்லை, தப்பியோட்டத்தில் பங்குதாரருமில்லை. அவர் சரியாக உடுத்தவே அவகாசம் கொடுக்கப்படவில்லை அவருக்கு? ரணில் ஓடிவந்து குந்தியவர், அவருக்கு கிடைத்த காலமே கொஞ்சம். அவர் ஒன்றும் தேர்தெடுக்கப்பட்டவரல்லர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியேறியவர். அனுராவுக்கு அவகாசம் கொடுக்க நாம் யார்? அவர் அதிகப்பெரும்பான்மையோடு ஜனாதிபதியாகியவர். அவர் தனது காலம் மட்டும் இருக்கலாம், மீண்டும் ஜனாதிபதியாகலாம் மக்கள் விரும்பினால், இல்லை அவரே சட்டத்தை திரித்து மாற்றி ஜனாதிபதியாக தொடரலாம். எமக்கு காத்திருப்பதை விட வேறு வழியில்லை. இருந்தவர்கள் எதையும் தரவில்லை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், இனிமேலும் சாத்தியமில்லை. இவர் ஒருவர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்துள்ளார், எமக்கு பிரச்சினை உள்ளதென ஏற்றுக்கொள்கிறார், அவராலேதான் முடிவு வரவேண்டும். அதை செய்வாரா என தெரிந்து கொள்வதற்கு ஐந்து வருடங்கள் ஆகவேண்டும், நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு. அதை நீங்கள், நாங்கள் அனுராவுக்கு கொடுக்கும் அவகாசம் என்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரில் உள்ள நம்பிக்கையல்ல, முன்னொருபோதும் ஆட்சிசெய்யாத ஒருவரிடம் எப்படி நம்பிக்கை வரும்? அவர் மேல் நானோ, என்போன்றோரோ கொண்டிருப்பது எதிர்பார்ப்பு. ஆனாலும் நாட்டில் முக்கிய பிரச்சினை பொருளாதாரப்பிரச்சனை, அதற்கே முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அதன் பின் மற்றைய பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய தீர்வினை வழங்குவேன் என்று சொல்கிறார். வேறு என்ன உங்களால், என்னால் செய்ய முடியும்? சொல்லுங்கள். நீங்கள் என்னை வசை பாடலாம், நான் உங்களுக்கு எரிச்சல் மூட்டலாம் என்பதை தவிர. 
    • உண்மையில் பற்றாக்குறை உள்ளமையாலேயே இந்த பதுக்கல் ஏற்படுகிறது அது பற்றாக்குறையினை இரட்டிப்பாக்குகிறது, இந்த அத்தியாவசிய பொருள்களை வாங்கும் அளவு விலை மாற்றத்தினால் பெருமளவில் மாற்றம் ஏற்படுவதில்லை, இதனை ஒன்றிற்கு குறைவான விலை நெகிழ்ச்சி தன்மையுடைய பொருள்களிற்குள் அடக்குவார்கள். அதாவது எனது இரவு நேர உனவிற்கு அரை இறாத்தல் பாணை உண்கிறேன், பாணின் விலை திடீரென 2 ரூபாக அதிகரித்துவிட்டது என்பதற்காக அதனை உண்ணாமல் விட முடியாது ( பாண் விலை குறைந்த அடிப்படை உணவுப்பொருள்). நுகர்வோராக விலை அதிகரிப்பினால் பாதிப்பு ஏற்படுவது போல பாண் உற்பத்தியாளருக்கு அதன் விலை வீழ்ச்சி நட்டத்தினை ஏற்படுத்தும். இந்த விலை மாற்றம் கேள்வி மற்றும் வழங்கலுக்கிடையேயான ஒரு சமரச நிலை மூலம் உருவாகும், வழங்கல் குறைவாக இருக்கும் போது (அரை இறாத்தல் பாணிற்கு 10 பேர் போட்டியிட்டால்) விலை அதிகரிக்கும். இந்த தட்டுப்பாடுகளே ஏக போக சந்தைகளை உருவாக்குகிறது (Monopoly). இதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அரசே, வேறு யாருமல்ல, காரணம் அவர்கள் அடிப்படை பிரச்சினைகளை கவனித்து சரியான திட்டமிடலை செய்யாமையே காரணம். நிதி முகாமைத்துவம், நாட்டின் நாளாந்த நிர்வாக நடைமுறைகளில் இந்த புதிய அரசு மெத்தனமாக இருக்கிறதா அல்லது அனுபவமின்மையால் இப்படி எல்லாம் நிகழ்கிறதா என தெரியவில்லை.
    • போட்டியின் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவுஸ் வெல்லும் என கூறினாலும் போட்டி ஆரம்பித்து முதலாவது இனிங்க்ஸ் பின்னர் நீங்கள் அவுஸ் வெல்லும் என கூறிவிட்டீர்கள், அந்த நேரம் எனக்கு உங்களவிற்கு நம்பிக்கை இருக்கவில்லை, முதல் நாள் மேக மூட்டமாகவும் இரண்டாம் நாள் அதிக வெய்யில் 3 ஆம் நாள் மழை என எதிர்வு கூறியிருந்தமையால் ஆடுகளத்தின் தன்மை மாற்றத்தில் ஒரு சந்தேகம் நிலவியிருந்தது, அவுஸின் இலகு வெற்றிக்கு இந்திய அணியின் பங்கும் இருந்தது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, சிராஜின் சின்ன பிள்ளைத்தனமான கொண்டாட்டத்தில் ஆரம்பித்துள்ளது, மிக சிக்கலான ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை எடுத்த ட்ராவிஸ் கெட்டிற்கு குடுக்க வேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தினை கொடுக்காமல் மிக கேவலமாக  நடந்து கொண்டுள்ளது இந்திய அணி, அதனை இந்திய இரசிகர்களே இரசித்திருக்கமாட்டார்கள். ஆனால் அவுஸ் பார்வையாளர்கள் கூட மோசமாக நடந்து கொண்டார்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.