Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள்

[10 - June - 2007]

நியூயோர்க்,

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார்.

இதை பார்த்ததும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் விசனமடைந்துள்ளனர். அவர்களில் நானு மகேந்துரு என்பவர் தன் எதிர்ப்பை அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இந்து மத தெய்வங்களை இழிவுபடுத்துவது எங்கள் மனதை புண்படுத்துவதாகவும், இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு பத்திரிகை ஆசிரியர் பத்திரிகை முழுவதும் அடித்து வெளியாகிவிட்டது என்று கூறியதோடு முடித்துக் கொண்டார். அவர் வருத்தம் தெரிவிப்பதற்கு கூட முன்வரவில்லை. இது எங்கள் படைப்பு. இதற்காக நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள் என்பது போல அவரது பேச்சின் தோரணை இருந்ததாக நானு மகேந்துரு கூறியுள்ளார்.

இதற்கிடையில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டொன் போவாவுக்கு ஸ்நேகல் அவிச்சல் எழுதி உள்ள கடிதத்தில் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்துக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி உந்த வெள்ளை நாய்கள் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றார்கள். புத்தர் சிலையை மெழுகுதிரியில் வடிவமைத்த பிரச்சனை கூட என்னும் தீரவில்லை. பகுத்தறிவு என்றபெயரில் மற்றயவர்களின் மனங்களை உள்ளுக்குள் இருந்து கேவலப்படுத்துகின்றவர்கள் இருக்கின்றபோது, மற்றவர்கள் விட்டுவைப்பார்களா என்ன?

மறுபடியுமா????

பேசாமல் அவர்கள் தெய்வங்களை கேவலமாக சித்தரித்து பிரசுரியுங்கள்

பழிக்கு பழி

ஹீ ஹீ

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், டென்மாக்கில் முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களை வரந்தவரோ நோர்வே அரசாங்கமோ மன்னிப்புக் கேட்கவில்லை. அது மனித சுதந்திரம் என்று கூறப்பட்டது. பிரான்ஸ் மற்றும் சில நாடுகளும் இதற்கு ஆதரவளித்தன.

இந்து மதம் பசு, பதி, பாசம் போன்றவைகளை பற்றி பேசுவது. கடவுள் அருவமானவர் என்று உயர்ந்த தத்துவத்தை கொண்டது.

புராணப் பாத்திரங்களாகிய பிள்ளையார், அனுமன் போன்றவைகள் அறியாத மக்களுக்காக உருவாக்கப்பட்டவை.

இந்தப் பாத்திரங்களை புராணக் கதைகளே பல இடங்களில் ஆபாசமாக சித்தரித்து உள்ளன. பிள்ளையார் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட சிலைகள் சிதம்பரத்தில் உண்டு. அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு.

ஆகவே இந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களுக்கு சம்பந்தம் இல்லாத, புராணப் பாத்திரங்களை அமெரிக்காவிலும் ஆபாசமாக சித்தரித்தது பற்றி உண்மையான அறிவுள்ள இந்துக்கள் கோபம் கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் பொறுமையாக இந்து மதம் காட்டிய உயரிய வழியில் நடை போடுவார்கள்

:D:D:D:D:D:lol::D:o:D

பேசாமல் அவர்கள் தெய்வங்களை கேவலமாக சித்தரித்து பிரசுரியுங்கள்

பழிக்கு பழி

ஹீ ஹீ

இன்று உலகத்தில் மதக்கலவரங்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் தூண்டிவிடுபவர்களே இப்படியானவர்கள் தான். இவர்கள் செய்யும் அநியாயங்களுக்காக இவர்கள் மதத்தை கேவலப்படுத்தி இதே போல் நாமும் செய்தால் அவர்களுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்படியான நடவடிக்கைகள் எனிமேலும் ஏற்படாமலிருக்க சட்டரீதியாக ஏதாவது தடைகளை கொண்டுவர முயற்சிக்க முடியாதா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் பசு, பதி, பாசம் போன்றவைகளை பற்றி பேசுவது. கடவுள் அருவமானவர் என்று உயர்ந்த தத்துவத்தை கொண்டது.

புராணப் பாத்திரங்களாகிய பிள்ளையார், அனுமன் போன்றவைகள் அறியாத மக்களுக்காக உருவாக்கப்பட்டவை.

இந்தப் பாத்திரங்களை புராணக் கதைகளே பல இடங்களில் ஆபாசமாக சித்தரித்து உள்ளன. பிள்ளையார் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட சிலைகள் சிதம்பரத்தில் உண்டு. அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு.

ஆகவே இந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களுக்கு சம்பந்தம் இல்லாத, புராணப் பாத்திரங்களை அமெரிக்காவிலும் ஆபாசமாக சித்தரித்தது பற்றி உண்மையான அறிவுள்ள இந்துக்கள் கோபம் கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் பொறுமையாக இந்து மதம் காட்டிய உயரிய வழியில் நடை போடுவார்கள்

:D:D:D:D:D:lol::D:o:D

நக்கலடிப்பதாக நினைத்து உங்களின் மேதாவித்தனத்தைக் காட்டுகின்றீர்கள் போலும்.

இத்தத்துவம் என்பது மதத்தில் நெருக்கமானவர்களுக்குத் தான் புரியுமே தவிர, மற்றவர்கள் உருவவழிபாடு என்பது தான் செய்கின்றார்கள். அவர்களின் பக்தி என்பது புராணத்தின் அடிப்படையில் இருந்து உயரும்வரைக்கும் அதில் இருந்து அவர்கள மீட்க முடியாது.

இன்றைக்கு கோவிலில் காட்டப்படுகின்ற கற்பூரம் என்பதைச் சீனர்கள் கண்டுபிடித்தது. அதை நாங்கள் பெற்றது எவ்வளவோ காலத்திற்குப் பின்னர். இங்கே இது தமிழனின் பக்தியில் இல்லை. எனவே கற்பூரம் காட்டாதே என்று சொல்வதை விட, அதைக் கோவிலில் காட்டுகின்றபோது தான் மக்களுக்குத் திருப்தியும், மனசாந்தியும் கிடைக்கின்றது என்றால் அதை ஏன் குழப்ப வேண்டும்.

மற்றவர்களின் மனச் சாந்தியைக் குழப்புகின்ற வேலைக்குப் பெயர் பக்தியல்ல, அது பகுத்தறிவு.

இங்கே எக்கடவுளின் படம் என்று மக்கள் மதிப்புக் கொடுக்கின்றவர்களின் படம் அடித்தாலும் தப்புத்தான். அது ஜேசுவாக இருக்கட்டும். அல்லது நபிகளாக இருக்கட்டும். இல்லையென்று சொன்னால் பெரியார் படத்தோடு ஆங்கிலக்கோவணம் அடித்துவிட நாங்கள் தயார்.

sexypillaiyarif6.jpg

சிதம்பரத்தில் இருக்கும் பிள்ளையார் இது. இப்படி பல உண்டு. போய் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள்.

இந்து மதக் கடவுள்களை இந்து மதமே ஆபாசாமாக சித்தரிக்கிறது. இதை அமெரிக்காவில் மட்டும் செய்யக்கூடாது என்பது என்ன நியாயம்?

sexypillaiyarif6.jpg

சிதம்பரத்தில் இருக்கும் பிள்ளையார் இது. இப்படி பல உண்டு. போய் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள்.

இந்து மதக் கடவுள்களை இந்து மதமே ஆபாசாமாக சித்தரிக்கிறது. இதை அமெரிக்காவில் மட்டும் செய்யக்கூடாது என்பது என்ன நியாயம்?

ஒரு பிள்ளையை பெற்றதாய் அடிப்பதற்கும் பக்கத்து வீட்டுக்காறி அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தில் இருக்கும் பிள்ளையார் இது. இப்படி பல உண்டு. போய் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள்.

இந்து மதக் கடவுள்களை இந்து மதமே ஆபாசாமாக சித்தரிக்கிறது. இதை அமெரிக்காவில் மட்டும் செய்யக்கூடாது என்பது என்ன நியாயம்?

சில சிலைகளுக்கு சிற்பம் வடித்தவர்களும், மன்னர்களும் தங்களின் மனதுக்கேற்ப பாலியல் சிந்தனைவடிவம் கொடுத்தார்கள் என்பது உண்மை தான். அனைத்தையும் துறந்த புத்தரைத் கூட பெண்கள் கூடச் சல்லாபம் செய்வதாக வர்ணிக்கும் சிலைகள் கூட உள்ளன.ஆனால் இச்சிலையில் பாலியல் சிந்தனையோடு ஒன்றையும் இனம் காணமுடியவில்லை. உங்களின் கண்ணில் ஏதும் பிரச்சனையோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணீர் எப்படி ஒவ்வொரு வடிவமான பொருளிற்கேற்ப வடிவம் எடுக்கிறதோ அதே போல தான் இந்து மதமும் (எந்த மதம் என்றாலும்)...இந்து மதம் தண்ணீர் போல....மனிதர்கள் மனம் பாத்திரம் போல.....நல்ல மனம் இருந்தால் நல்ல வடிவமாகவே தண்ணீரை அந்தப் பாத்திரம் பிரதி பலிக்கும்....தப்பான மனம் இருந்தால் எல்லாத்தையும் தப்பு தப்பாகவே பார்க்க வைக்கும்

ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியருக்கு எனது நன்றிகள் இவ்வாறாவது மதநம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கையில் தீவிர மத பற்று என்பதை இல்லாமல் செய்தார் என்றா அவரை பாராட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிலைகளோ சித்திரங்களோ வைக்கப்பட்ட காலத்தை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும். அக் கால கட்டத்தில் மக்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் இல்லற வாழ்க்கையை வெறுப்பவர்கள் அதிகமாயினர். அதனால் அவர்களிடம் இனக் கவர்ச்சி ஏற்படுத்தும் பொருட்டு இப்படி வைத்தனர். இன்றுபோல் அன்று திரையரங்குகளோ பத்திரிகைகளோ இருந்திருந்தால் அவர்கள் இப்படி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அன்று பெரும்பாலான மக்கள் கூடும் ஒரே இடம் கோவிலாகத்தான் இருந்தது. அத்துடன் அது அன்றைய தேவையாகவுமிருந்தது.

இன்று 22ம் நூற்றான்டின் ஆரம்பத்தில் இருக்கிறோம். தெருவெங்கும் ஆபாசச் சுவரெட்டிகள் வண்ண விளக்குகளுடன் ஜொலிக்கின்றன. வீட்டுக்குள் டி.வி யைத் திறந்தால் ஒரே ஆபாசம். திரைப் படங்களோ குடும்பமாய் சேர்ந்திருந்து பார்க்க முடியாதவை. ஏன் கணணியிலேயே அப்படிப் படங்கள் தானாகவே வந்து போகின்றன. இந்நிலையிலும்கூட யாழ்கள விதிமுறைகளைப் பாருங்கள். ஆபாசமாகப் பேசக்கூடாது, படங்கள் போடக்கூடாது போன்று நிறைய வைத்திருக்கிறார்கலென்றால், அன்று கட்டுக்குடும்பியுடனும், காதில் கடுக்கனுடனும் அதீத கண்டிப்புடனும் இருந்த நம் முன்னோர் இப்படியான ஒன்றைச் செய்வதற்கு முன் எவ்வளவு தூரம் மன்டையைப் போட்டு உடைத்திருப்பார்கள் என்பதைக்கூட நாம் சிந்திக்காமல் எழுதுவது எமது அறியாமையைத்தான் காட்டும்.

இப்போதும் பல அரசுகள் தம்மின மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக அதிக பிள்ளைகள் பெறும் குடும்பத்திற்கு பலவிதமான சலுகைகளை அறிவிக்கிறார்களே! எனின் அவர்கள் ஆபாசத்துக்குத் துனை போகிறார்களா?

இவையெல்லாம் அந்தக் கம்பனிகள் தங்கள் வியாபாரத்தைப் கூட்டுவதற்காக தெரிந்தே செய்யும் தந்திரங்கள். முன்பு கூட ஒருமுறை சுவாமி படங்களை டாய்லெட் தட்டுகளில் பதித்திருந்தனர். இப் பிரச்சனைக்குத் தீர்வு வரும்முன் அவர்கள் நிறைய விளம்பரம் பெற்று விடுவார்கள்.

இந்தப் பிள்ளையார் சிலையின் பின்னணியில் இருக்கும் புராணக் கதையை அறிந்தால், சில வேளைகளில் மேலும் நன்றாகப் புரியும். அசிங்கமும் ஆபாசமுமான சிந்தனை கொண்ட கதை அது. அதை இங்கே எழுதுவதற்கு தயக்கமாக இருக்கிறது.

சுவி எழுதிய கருத்தின்படி பார்த்தால், அன்றைய பொர்னோ படங்களில் நடித்த பிள்ளையார் இன்றைக்கு விளம்பரப் படங்களில் நடிக்கின்ற அளவிற்கு வந்திருப்பது ஒரு முன்னேற்றமே தவிர வேறில்லை.

இது குறித்து பெருமைப்பட வேண்டும்

தாங்கள் செய்தால் குற்றம் இல்லை, அமெரிக்கன் செய்தால் தான் குற்றமா.

அட அவனும் பிள்ளையாரை வைத்துப் பிழைக் கட்டுமே?

இங்கு சிலர் ஏதோ தாம் மேதாவிகள் போலக் காட்டுவதற்காக எதையெதையோ எழுதுகின்றார்கள். தூயவன் குறிப்பிட்டது போல் மேலே இணைக்கப்பட்ட படத்தில் எது ஆபாசம் என்பது இணைத்தவருக்கே வெளிச்சம். ஒரு நிர்வாணப் பெண்ணை ஒரு ஓவியன் பார்ப்பதற்கும் ஒரு காமுகன் பார்ப்பதற்கும் வித்தியாசமுண்டுதான். பொதுவாக சிவலிங்க வழிபாட்டிற்கே ஒரு கதையுண்டு தான். அது போல் கோவில் கோபுரத்திலேயே அரைநிர்வாணப் பெண்களின் சிலைகள் உண்டு. அதற்காக அதன் அர்த்தங்களை வெறும் கொச்சையாகவே புரிந்து கொள்பவர்களுக்கு எதைச் சொல்லியும் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்துமதத்தில் எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கும் போது அவையெல்லாம் இவர்கள் கண்ணிற்குத் தெரியாமல் இவை மட்டுமே இவர்கள் கண்களுக்கு படுகின்றதென்றால் இவர்களின் மனவக்கிரங்கள் தான் காரணம்.

Edited by Vasampu

வசம்பண்ணா, ஜோன்சன் ஜோன்சஸ்டனுடைய ஓவியத்தையும் அமெரிக்கர்கள் போலவே அமெரிக்க இந்துக்களும் கலைக் கண்ணுடன் நோக்கியிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது.

Edited by லிசான்

வசம்பண்ணா, ஜோன்சன் ஜோன்சஸ்டனுடைய ஓவியத்தையும் அமெரிக்கர்கள் போலவே அமெரிக்க இந்துக்களும் கலைக் கண்ணுடன் நோக்கியிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது.

ஓ நீங்கள் கையில் மதுபானக் கோப்பையை கொடுத்துத்தான் கலைக்கண்ணுடன் பார்ப்பீர்கள் போல. :blink::huh: அல்லது உங்கள் கையில் மதுபானக் கோப்பை இருக்கும்போது மட்டும் கலைக்கண் திறந்து கொள்ளுமா?? :lol::unsure:

தமிழர்களுக்கென சில தெய்வ வழிபாட்டு முறைகள் இருந்தது. ஆனால் நாம் இப்போது வழிபடும் முறை அல்ல. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிள்ளையார் பற்றி எம் மக்களுக்கு தெரியாது. பிள்ளையார் புகுத்தப்பட்டார். எந்த கடவுளையும் வணங்க முதல் பிள்ளையாரை வணங்க வேண்டும் என கோட்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு பிள்ளையார் கோவிலின் நுளை வாசலில் வைக்கப்பட்டார். எக்காரியங்கள் செய்யும் போதும் பிள்ளையாரை வணங்க வேண்டும் என்று வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது.

சித்தர்கள் காலத்தில் பிரதானமாக மருந்துகளில் சேர்க்கப்பட்ட ஒன்று முருகு இதற்கு கெந்தகம் என்று பொருள். பழனி முருகன் சிலை (தற்போதில்லை) புலிப்பாணி சித்தர் மற்றும் சீடர்களால் நவபாசாணத்தில் செய்யப்பட்டு மலை உச்சியில் வைக்கப்பட்டது. நோய் நொடியோடு வரும் மக்கள் அச்சிலையின் மேல் பசும் பாலை ஊற்றி சிலையின் மேல் வழிந்து வரும் பாலை அருந்தி நோயை போக்கினர். நவபாசாணம் என்பது சர்வ ரோகங்களையும் நிவர்த்தி செய்யும் மருந்து ஆகும்.

இந்த முருகு முருகனாகி கந்தனாகி ஸ்கந்தனாகி சோமஸ்கந்தனாகி வள்ளி இருக்க தெய்வானை சேருகப்பட்டு இன்று நாம் பார்க்கும் முருகனுக்கும் அதன் தோற்றப்பாட்டுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை.

சீவன் என்ற பொருளில் உயிரைக் குறிக்கும் சிவன். மானுட பிறவியை சித்தரிக்கும் சிவலிங்கம் என்பனவெல்லாம் சிவ பெருமானாகி ஈஸ்வரனாகி என்னும் எத்தனையோவாகி. பாடாத பாடெல்லாம் படுத்தப்பட்டு அதன் அர்த்தங்கள் சீரளிக்கப்பட்டு இன்று சின்னாபின்மாகி கிடக்கின்றது. ஆரியரின் கடவுள்கள் இந்திரன் இராமன் வருணன் என்னும் பல. இவைகள் எமது புராதன சித்தர் வழி மரபில் புகுத்தப்பட்டன. மானுட வியல் ஆய்வின் படி ஆரியர்களின் தோற்ற பூமியான அரியானவில் தற்போது நாம் காணும் சிவனின் உருவம் அசுரனை குறிக்கும் உருவமகும். (ரோமிலா தப்பர்ஆய்வுகள்- புது டில்லி) இந்த அசுர உருவங்கள் சிவனுக்கு ஏற்படுத்தி சிவனை சுடலையில் ஆடவைத்து. பல நூறு புராணங்கள் புனையப்பட்டு திட்டமிட்டு சீரளிக்கப்பட்டது. ஆதே நோரம் ஆரியரின் தெய்வங்கள் புகுத்தப்பட்டது.

உயிர் வாழ இன்றியமையாத பஞ்ச பூதங்களை விளக்க ஐந்து சிவ தலங்கய் அமைக்கப்பட்டது. ஐந்திலும் சிவ தத்துவம் என்னும் உயித் தத்துவம் நிறுவப்பட்டது. ஐந்து இடங்களிலும் நூற்றுக்கணக்கான சித்தர்கள் சமாதி இப்போதும் உள்ளது. தவிர திருப்பதியில் மட்டும் 12 சித்தர்கள் சமாதிகள் உள்ளன. ஆனால் அவைகள் மக்களுக்கு தெரியாதவாறு மழுங்கடிக்கப்படுகின்றன.

இன்றய தேவாரங்கள் அனைத்தும் சித்தர் பாடல்களில் இருந்து பிடிங்கி எடுக்கப்பட்டவையாகும். உதாரணமாக துப்பார் துருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு என்றால் தும்பை குப்பபைமேனி கையாந்தகரை செருப்பபடி போன்ற மூலிகைகளை அழவோடு தினமும் உண்டு வந்தால் நோய்கள் அண்டாது என்னு பொருள். இந்த பாட்டுக்கும் பிள்ளையாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எமது புராதன இறை வடிவவம் என்பது எமக்கான மருத்துவம். எமது புராதன முன்னோர்கள் பூஜைகள் செய்தவர்கள் இல்லை மாறாக காட்டிலும் மேட்டிலும் தாவரங்களை ஆய்வு செய்து மக்கள் நோய்நொடியின்றி வாழ பாடுபட்டவர்கள். எமது முன்னோர்கள் தமக்குள்ளே இறைவனைக்கண்டவர்கள் தவிர வெளியில் இல்லை. ஒவ்வொரு உயிரையும் கடவுளாய் கண்டவர்கள். மானுட தோற்றத்துக்கு கற்பனையான எந்த அர்த்தத்தையும் எமது முன்னோர்கள் கொடுத்ததில்லை. உடலுறவும் உழைப்பு பராமரிப்பு மருத்தவம் என்ற யதார்த்த உண்மைக்குள்ளே தமிழரின் பூர்வீக கடவுள் அடங்குகின்றது. திரு மூலர் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் என்றார். இன்று அவர் பிராமணர் ஆக்கப்பட்டு அவர் பாடல்கள் திரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு விட்டது.

கோயில்கள் எல்லாம் உடம்பின் உட்பகுதி போல் அமைக்கப்பட்டது. வாய்க்குள்ளால் இறங்கி ஒவ்வொரு பகுதிக்கும் நடப்பது போல் அமைக்கப்பட்டது. இன்றும் சில கோயில்கள் அந்த அமைப்பில் தென்னிந்தியாவில் உள்ளது.

எமது இறைவடிவத்தை எமது முன்னோர்களின் அரும் பொருளை எல்லத் திரித்து சிதைத்து ஒழித்து இன்று நாம் காண்பதும் வழிபடுவதும் மதம் என்று அலைவதும் அதை வைத்து அரசியல் செய்வதும் வேறு.

சைவம் வைணவம் பிரமணியம் பெரியாரியம் என்பதை கடந்து எமது உண்மையான இறை வடிவத்தை தேடுவோமானால் அங்கே முட்டாள் தனத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதுவும் இருக்கப்போவதில்லை.

நாம் பிள்ளையாரை அமரிக்காவில் இருந்து மீட்கப்போகின்றோமா இல்லை எமது உண்மையான இறை பொருளை மீட்கப்போகின்றோமா? அடுத்த தலைமுறையையும் முட்டாளாக்க போகின்றோமா இல்லை முற்போக்கு சிந்தனையுடன் வளர்க்கப்போகின்றோமா?

Edited by sukan

சுகன். :blink::huh:

மிக நல்ல ஒரு கருத்தினை முன்வைத்தீர்கள். இன்று இருக்கக்கூடிய மிகப்பெரும் ஆபத்துக்களில் ஒன்று எமது இளஞ்சிறார்களை சுயமாகச் சிந்திக்க விடாது மதத்தின் பெயரால் கட்டுப்படுத்துதல் ஆகும் (condition the mind) . எந்தவொரு மதமும் தனிமனித விடுதலையை பெற்றுத்தராதென்பது ஆழ்ந்து சிந்தித்தால் விழங்கும்.

( ref: A remarkable book by Philosopher Jiddu Krishnamurti "On Learning and Knowledge")

இன்றுவரையுள்ள காலப்பகுதியை எடுத்து நோக்கினால் மதத்தின் பெயரால் எம்மை நாமே ஏமாற்றி வந்திருப்பது தெரியும். மேற்குலகின் கணித பௌதிக மற்றும் மானுடவியல் தத்துவஞானிகள் இன்றைய விஞ்ஞானத்தின் அடிப்படை விதிகளை அமைத்துக்கொண்ட காலத்தில் நாம் மந்திரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வந்துள்ளோம். (How are the religios thoughts conditioning and shapping our mind? Is our mind free from its burdons? Why we dont have any philosofers who revolutionary changed the scientific world? If "Vedha" is rich and full of scientific ideas why do we wait until the WEST formulate the basic principles of science?; and then we are trying to manipulate and co-relate it with so and so? Why the basic human need "Learning" or "Studying" was prohibited for class of people? Why Sanskrit was prohibited to acces by many individuals? There are enomorous questions arises and need to be answered promptly.)

தாராள மனப்பான்மை என்பது தமிழர் பண்பு. அறிவீனமும் தாராள மனப்பான்மையும் சேர்ந்ததன் விளைவே தமிழர் தம் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை இழந்து ஒரு சாயம் பூசப்பட்ட பொம்மைகளாக இருப்பதன் காரணம்.

இதைபற்றி தரமானதும் ஆக்கபூர்வமானதுமான நீண்ட விவாதம் நமது தேடலை தெளிவாக்கும் என நம்புகின்றேன். எமது இளஞ்சமுதாயமாவது முட்டாள்தனங்களில் இருந்து விலகி உண்மை அறிவினை தேடிப்பெற்று மற்றைய இனக்குளுமங்களுக்கு முன்னுதாரணமாக வாழ வாழ்த்துவோம்.

அன்புடன்

ஈழத்திருமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து சுகன் ஆனால் இதை ஏற்பதிற்கு எத்தனை பேருக்கு துணிவு இருக்கு

அமெரிகாவில் இருது பிள்ளையாரை மீட்கமாட்டோம்- வெள்ளைகாரன் எங்களை பற்றி என்ன நினைப்பான்

உண்மையன இறைபொருளை மீட்கமாட்டோம் -மற்றவன் புத்திசாலியா வந்திடுவான் பிறகு பிழைப்பு நடத்த முடியாது

அடுத்த தலைமுறையை முட்டாள் ஆக்குவோம் -ஏனெனில் எங்களை பழைய தலைமுறை முட்டாளாக்கினப் படியா

முற்போக்கு சிந்தனையுடன் வளர்கமாட்டோம் -ஏனெனில் அது என்ன விலைஅப்படி என்றால் என்ன?எந்த கோயிலில அதை எடுக்கலாம்.

உண்மையா தான் கேட்கிறேன் இன்று புலத்தில் எத்தனி பேர் பிள்ளையாரின் வடிவத்தை உங்களது இஷ்டத்துக்கு வரைந்து விட்டு அது தான் நவீன பிள்ளையார் என்று கூறுகிறீர்கள் முதலில் உங்களை திருத்துங்கள்.

:blink::huh:

இந்த லிங்கில் சென்று பார்கவும்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=248172

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படங்களை பற்றி நீங்கள் என்ன சொல்லுறீங்கள்.

xjtt7wm4.png

jtle3un9.png

இந்த படங்களை பற்றி நீங்கள் என்ன சொல்லுறீங்கள்.

xjtt7wm4.png

jtle3un9.png

நீங்கள் இணைத்த படங்களை பார்க்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த படங்களை பார்க்க முடியவில்லை.

புரியவில்லை நண்பரே

: :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.