Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2025 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களையே பெறும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2025 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களையே பெறும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

BATTINEWS MAINNovember 11, 2020
 
watermarked-battinews.com%2B%25284%2529.jpg
(ரீ.எல்.ஜவ்பர்கான்)

எதிர்வரும் 2025ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெறும். இது தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதற்கான பலனாகும். 22- 16 ஆக மாறியது. 16 இப்போது 10 ஆக மாறியுள்ளது. இது 5 ஆக மாறப்போகிறது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் தொடர்ந்து பேசிய அவர், நான்கரை ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பாதுகாத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. ஆனால் அந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான எத்தகைய உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியினர் அன்றைய ரணில் அரசிற்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர். அப்போதும் இவர்கள் அதற்கு ஆதரவை வழங்கினார்கள்.

எந்தெந்த பிரேரணைகள் வந்தபோதும் அனைத்திற்கும் கை உயர்த்தினார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கான எந்த உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

குறைந்தது தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் ஆதரவு வழங்குவோம் என நிபந்தனை விதித்திருந்தால் கூட நிச்சயம் அது நடந்திருக்கும். ஆனால் எந்த நிபந்தனைகளுமின்றி வெறுமனே பேசா மடந்தைகளாக இருந்து முழு ஆதரவையும் வழங்கிவிட்டு தொடர்ந்தும் தமிழர்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

அதற்கான தகுந்த பதிலைத்தான் தமிழ் மக்கள் இப்போது வழங்கியிருக்கிறார்கள் அடுத்த தேர்தலில் இதைவிட பன்மடங்கு வழங்க காத்திருக்கிறார்கள் என்றார்.

http://www.battinews.com/2020/11/2025-5.html

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan stands by Sumanthiran & appeals for unity among the Tamils to  achieve a political solution. | Sri Lanka Brief

அப்போது கூட....சம் / சும்  இரண்டு பேரும் பாராளுமன்றம் செல்வார்கள். 😎

18 hours ago, தமிழ் சிறி said:

Sampanthan stands by Sumanthiran & appeals for unity among the Tamils to  achieve a political solution. | Sri Lanka Brief

அப்போது கூட....சம் / சும்  இரண்டு பேரும் பாராளுமன்றம் செல்வார்கள். 😎

அப்போது சம் இருப்பாரோ தெரியவில்லை. ஆனால் வியாழேந்திரன் போன்றோரின் செயல்பாடுகளை பொறுத்து  நிச்சயமாக மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஏறி நின்று நடத்துகின்ற அரசியலை இந்த மாகாணத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

SAVITHNovember 12, 2020
 
watermarked-16640026.jpg
(சிஹாரா லத்திப் )

கடந்த இரண்டரை மாதங்களாக எமது வேலைகளை வேகப்படுத்த முடியாமல் இருக்கிறது. காரணம் இந்த கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவல். நிச்சயமாக கடவுள் அருளால் கொவிட் 19 விரைவாக கட்டுப்பாட்டுக்குள் வரும் அதன்பின்னர் நாங்கள் பாரிய வேலைகளை முன்னெடுப்போம் நீங்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இவ்வாறு பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி மணி சார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு கரடியனாறு சின்ன புல்லுமலை பகுதியில் சபரிகம விசேட திட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பு உரையாற்றுகையில் கூறினார்.

முற்போக்கு தமிழர் கட்சியின் செங்கலடி பிரதேச அமைப்பாளர் சுந்தரலிங்கம் சுந்தர குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வுகளின் போது ராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எங்களுடைய மக்களுடைய இருப்பினை பாதுகாப்பதாக இருந்தால் உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த உரிமைக்கு சமாந்தரமான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் அதற்காக நீங்கள் அனைவரும் எம்முடன் கைகோர்த்து நிற்க வேண்டும். ஆத்மார்த்தமாக நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். சேர்ந்து பயணிப்போம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மீதுஏறி நின்று கொண்டு அரசியல் நடத்துகின்ற கேவலம் கெட்ட அரசியலை இந்த மாகாணத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும். இதற்கான முதற்கட்டம் தான் நாம் இந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் .

வருங்காலத்தில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அந்தத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சின்ன தீர்வினை கூட பெற்றுக் கொடுக்காமல் தமிழ் மக்களின் கண்ணீரை வைத்துக் கொண்டு கண்ணீரில் அரசியல் நடத்தும் அரசியல் பிழைப்பு கூலிகளை இந்த மாவட்டம் மாகாணத்திலிருந்து நாம் அப்புறப்படுத்த வேண்டும்.

எமது மக்களுக்கான பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய மக்களின் தேவைகளை அறிந்து தீர்த்துக் கொடுக்கக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும் .

அப்போதுதான் எமது மக்களும் மற்றைய சமூகங்களுக்கு சமாந்தரமாக வாழமுடியும் அப்படியான ஒரு சூழலை நாம் கட்டமைப்போம். ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பு கூடாக அப்படி ஒரு சூழலை நாம் உருவாக்குவோம். ஆகவே இனிவரும் காலங்களிலாவது நாம் ஒன்று சேர்ந்து பயணிப்போம்.

நமது காலம் முடிந்து விடலாம் நமக்கு முன்னே இருக்கின்ற அடுத்த தலைமுறையினர் சின்னஞ் சிறார்கள் இந்த தலைமுறையாவது கைகட்டி இன்னொருவருக்கு முன்னால் நிற்கக்கூடாது. மற்றவர்களுக்கு சமாந்தரமாக நிற்கவேண்டும் தலை நிமிர்ந்து வாழவேண்டும் அப்படியானதொரு சூழலை நாம் அடுத்த சந்ததிக்கு உருவாக்கிக் கொடுப்போம்.

ஆகவே கடந்த காலங்கள் கடந்தவையாக இருக்கட்டும் பலர் பல சவால்களை விட்டார்கள். நம் அரசாங்கம் கட்சியில் வெற்றி பெற்றால் மீசை எடுப்போம், இன்னும் ஒரு காமெடி அரசியல்வாதி இருக்கின்றார், வியாழேந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தான் வீதிவீதியாக ஆடையின்றி அலைந்து திரிவேன் என்றார். நாங்கள் வென்று விட்டோம் அவர்கள் அவர்களது சபதத்தை நிறைவேற்றியதாக இல்லை ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்ல விரும்புகின்றேன், இந்த அரசியலில் இருந்து நாங்கள் விரும்பி ஒதுங்கினால் மட்டும் தான் ஒதுங்க முடியும். இல்லாவிட்டால் எங்களை தோல்வியடையச் செய்ய முடியாது. காரணம் எங்களோடு எங்களை சுற்றி நிற்பவர்கள் களப் போராளிகள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி எங்களோடு வேலை செய்பவர்கள். அவர்கள் இருக்கும் வரை எவராலும் எங்களை தோற்கடிக்க முடியாது.

வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு தமிழ் அரசியல்வாதி நான். இந்த வெற்றிக்கு உண்மையான சொந்தக்காரர்கள் கடவுள் அடுத்தாற்போல் எனக்கு வாக்களித்த அந்த 34 ஆயிரம் பேர். அந்த மக்கள் வாக்களிக்க மிகப் பிரதான மாக செயல்பட்டவர்கள் எமது கழ இணைப்பாளர்கள் அவர்களை ஒரு போதும் நாம் உயிருள்ளவரை கைவிட மாட்டோம்.

அவர்களுக்கான வேலைத்திட்டங்கள் சற்றுப் பிந்தி நடக்கலாம் எவ்வாறாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் நாம் பாதுகாப்போம்.

watermarked-16640028.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

இவர் எதை சொல்லி  உள்ள போனாரோ அந்த வேலையில் 50 வீதத்தையாவது செய்வது போல தெரிகிறது 
கூத்தமைப்பு தேசிக்காய்கள் வழமையான வாளான்தவக்கை போல வயிறு புடைக்க கத்துவது மட்டும் நடக்கிறது, உசுப்பேத்தி இரத்த திலகமிடலை இம்முறை மாவை இல்லாததால் சாணக்கியன் பாரமெடுத்துள்ளார் அவ்வளவே 

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவர் எதை சொல்லி  உள்ள போனாரோ அந்த வேலையில் 50 வீதத்தையாவது செய்வது போல தெரிகிறது 
கூத்தமைப்பு தேசிக்காய்கள் வழமையான வாளான்தவக்கை போல வயிறு புடைக்க கத்துவது மட்டும் நடக்கிறது, உசுப்பேத்தி இரத்த திலகமிடலை இம்முறை மாவை இல்லாததால் சாணக்கியன் பாரமெடுத்துள்ளார் அவ்வளவே 

மாவை இம்முறை மட்டுமல்ல , இனிமேல் அரசியலில் வரமுடியாது போல உள்ளது. மாவை மட்டுமல்ல இனிமேல் ஒரு கிழடுகளுமே வர முடியாத சடடம் வருவதட்கு சந்தர்ப்பம் வருகின்றது. அநேகமாக 55 வயதிட்கு மேட்படடவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சடடம் இயற்றுவதட்கு நடவடிக்கை எடுப்பதாக அறியமுடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவர் எதை சொல்லி  உள்ள போனாரோ அந்த வேலையில் 50 வீதத்தையாவது செய்வது போல தெரிகிறது 
கூத்தமைப்பு தேசிக்காய்கள் வழமையான வாளான்தவக்கை போல வயிறு புடைக்க கத்துவது மட்டும் நடக்கிறது, உசுப்பேத்தி இரத்த திலகமிடலை இம்முறை மாவை இல்லாததால் சாணக்கியன் பாரமெடுத்துள்ளார் அவ்வளவே 

வியாழேந்திரனின்.... நகர்வு, கூத்தமைப்பின் தோல்வி. என்பதில்... 
மாற்றுக்... கருத்து இல்லை.  

ஆனால்... இனியும், ஒன்றுக்கும்... பிரயோசனம் இல்லாத கூத்தமைப்பு... 
ஆளும்,  அரசாங்கங்களுடன், சேர்ந்து   கும்மியடித்து...
காலங்களை... வீணாக்காமல்,  தனது... அரசியல் வரட்சியை  உணர்ந்து...
ஒதுங்கி... மற்றவர்களை... முன் காட்டுவதே... 
நொந்து போன... தமிழ் மக்களுக்கு,  சிறந்த அரசியலாக..இருக்கும்.

அதனை... கூத்தமைப்பிடம், எதிர்பார்ப்பதும்... மடமை என்று நினைத்தாலும், 
என்.. ஆதங்கம், அதுவே...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Robinson cruso said:

மாவை இம்முறை மட்டுமல்ல , இனிமேல் அரசியலில் வரமுடியாது போல உள்ளது. மாவை மட்டுமல்ல இனிமேல் ஒரு கிழடுகளுமே வர முடியாத சடடம் வருவதட்கு சந்தர்ப்பம் வருகின்றது. அநேகமாக 55 வயதிட்கு மேட்படடவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சடடம் இயற்றுவதட்கு நடவடிக்கை எடுப்பதாக அறியமுடிகிறது.

நல்ல விடயம்.

Edited by ஏராளன்
ம குற்று போட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

மாவை இம்முறை மட்டுமல்ல , இனிமேல் அரசியலில் வரமுடியாது போல உள்ளது. மாவை மட்டுமல்ல இனிமேல் ஒரு கிழடுகளுமே வர முடியாத சடடம் வருவதட்கு சந்தர்ப்பம் வருகின்றது. அநேகமாக 55 வயதிட்கு மேட்படடவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சடடம் இயற்றுவதட்கு நடவடிக்கை எடுப்பதாக அறியமுடிகிறது.

மகிந்தா ,சகோதரர்களுக்கு எத்தனை வயசு ?
 
5 hours ago, ரதி said:

மகிந்தா ,சகோதரர்களுக்கு எத்தனை வயசு ?
 
நான் இங்கு யாருடைய வயதைப்பற்றியும் எழுதவில்லை. இனி வரப்போகிறதான ஒரு சடடம் குறித்தே எழுதினேன். அப்படி வந்தால் அது எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Robinson cruso said:

நான் இங்கு யாருடைய வயதைப்பற்றியும் எழுதவில்லை. இனி வரப்போகிறதான ஒரு சடடம் குறித்தே எழுதினேன். அப்படி வந்தால் அது எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கும்.

அவர்களே 50 வயசுக்கு மேல் இருக்கிறார்கள் ...பிறகு எப்படி சட்டத்தை மாத்த அனுமதிப்பார்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அவர்களே 50 வயசுக்கு மேல் இருக்கிறார்கள் ...பிறகு எப்படி சட்டத்தை மாத்த அனுமதிப்பார்கள்?
 
அவர்கள் தமது கால பதவிகளை அனுபவித்து விட்டார்கள். இனி அவர்களது அடுத்த தலைமுறைக்கு அதன் அடுத்த கட்டத்துக்கு கோடு போடுகிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, விசுகு said:

அவர்கள் தமது கால பதவிகளை அனுபவித்து விட்டார்கள். இனி அவர்களது அடுத்த தலைமுறைக்கு அதன் அடுத்த கட்டத்துக்கு கோடு போடுகிறார்கள்

கோடு இல்லை பாலம் றோட்டே போட்டாச்சு...... நாமல் தம்பி அடிக்கடி தமிழர்கட்சிகளை  திட்டுவதும் அப்பன்காரன் தமிழ்/இந்து பண்டிகளை கொண்டாடுறதும் ......அட போங்கையா எனக்கே மெய்சிலிர்க்குது...மன்னிக்கவும் மயிர் சிலிர்க்குது.😎

அலி சப்ரியின் நியமனத்தை அடிப்படைவாதிகளால் பொறுக்க முடியாதுள்ளது - அமைச்சர்  நாமல் ராஜபக்‌ஷ - News View

6 hours ago, ரதி said:

அவர்களே 50 வயசுக்கு மேல் இருக்கிறார்கள் ...பிறகு எப்படி சட்டத்தை மாத்த அனுமதிப்பார்கள்?
 
அவர்கள் வயதானவர்கள் என்பதால் சடடம் கொண்டுவரக்கூடாதென்று ஒன்றும் இல்லை. இது வியத்தகமாவினால் முன்மொழியப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனையில் இருக்கிறது. ஆனால் இதை கொண்டுவருவர்களா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Robinson cruso said:

அவர்கள் வயதானவர்கள் என்பதால் சடடம் கொண்டுவரக்கூடாதென்று ஒன்றும் இல்லை. இது வியத்தகமாவினால் முன்மொழியப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனையில் இருக்கிறது. ஆனால் இதை கொண்டுவருவர்களா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

எனக்கு இது நம்ப முடியாது உள்ளது ...பொறுத்திருந்து பார்ப்போம் .
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.