Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்

November 18, 2020

medical-student.jpg

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

  கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன்  இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  #மருத்துவபீட #இளங்குன்றன் #சந்தேகம் #இரத்தமாதிரிகள்

https://globaltamilnews.net/2020/153168/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் காலத்துக்கு காலம் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 

பல்கலைக்கழக நிர்வாகம்.. மாணவ உளச்சார்பு.. உளநல மையம் ஒன்றை அமைத்து மாணவர்கள் தமது பிரச்சனைகளை.. வெளிச் சொல்லவும்...உதவிகளை.. உளநலன் சார் உதவிகளை வெளிப்படையா கூறிப் பெற்றுக் கொள்ள வசதி செய்வதோடு.. ரகசிக்காப்பும் உறுதி செய்யப்படுவது அவசியமாகும்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான மையங்கள்.. பல்கலைக்கழகங்களில் இயங்குவதை முன்னுதாரணமாகக் கொள்வது அவசியமாகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான முகப்புத்தகப் பதிவு..

//நேற்று யாழ் மருத்துவ பீட தற்கொலைகள் பற்றி பதிவிட்டிருந்தேன். பல மாணவிகள் தங்கள் கருத்துக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மாணவனும் கருத்தை அனுப்பவில்லை. நடைபெற்ற தற்கொலைகள் ஆண்களிடையேதான் அதிகம்.இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். பிரச்சினைகளை பெண்கள் ஏதோ ஒரு சமயத்தில் பேச தயாராக இருக்கிறார்கள். ஆண்களுக்கு பேசினால், " இது எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? இதை தாங்கிக்கொள்ள முடியாத நீயெல்லாம் ஒரு ஆணா? " என்று கேலிசெய்யப்படுவோமா என்ற பயமாக இருக்கலாம். இது ஒரு அனுமானம்தான்.ஒரு சகோதரி ஒரு நீண்ட கருத்தை அனுப்பி இருந்தார். கொஞ்சம் தயக்கத்துடனேயே அதை பதிகிறேன். கொஞ்சம் பிசகினாலும் பிரதேசவாதமாகக் கூடிய பதிவு. அவர் பிரதானமாக வடக்கைப் பற்றி எழுதினாலும் பல விடயங்கள் தமிழ் பகுதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பிரதேசவாத பிரச்சினை ஆக்காமல் இது பற்றிய கருத்துக்களைப் பதியுங்கள்.//

வணக்கம் அண்ணா... யாழ் மருத்துபீட மாணவர்களின் தொடர் இழப்பு பற்றி பதிவிட்டிருந்தீர்கள்... எனது கருத்தைப் பகிரலாம் என தோன்றியது. 

நான் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நான்காம் வருட மாணவி. எனது பெற்றோர் இருவரின் குடும்பங்களுமே யாழ்பாண பூர்விகம் என்பதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் எனக்கிருப்பதாலும் சில விடயங்களை அறிவேன். 

பொதுவாகவே இலங்கையின் எந்தப் பகுதியைக் காட்டிலும் வடக்கில் கல்வி தொடர்பான அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கிறது. நான் நுவரெலியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசித்திருந்ததால் இதனை சற்றே ஒப்பிட்டு நோக்க முடிந்தது. நாட்டுப் பிரச்சனைகளின் காரணமாக வடக்கு இளைஞர்களுக்கு கல்வி ஒன்றே மேலுழுவதற்கான ஒரே வழியாய்ப் போனதும் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற அவர்தம் மனப்பாங்கும் எமக்கு தெரிந்த ஒன்றே... இருப்பினும் இம்மனப்பாங்கே சில (பல) நேரங்களில் அதீத அழுத்தமொன்றாய் மாறி விடுகிறது. 

சாதாரணமான ஒரு உதாரணம். நான் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி கற்கையில் பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்தனர். எனினும் எந்தப்பாட வேளையிலும் இல்லாது யாழ்ப்பாண ஆசிரியர்கள் (சிலரின்) பாடவேளைகளில் மட்டும் நாம் மேலதிக அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் பயத்துடனும் தான் இருந்தோம். கல்வி ஒன்றே, அது மட்டுமே முக்கியம் என்ற திணிப்பும் சற்று பின் தங்கிய மாணவர்களுக்கான மட்டம் தட்டலும் அங்கு வெகுவாய் இருந்தது. இது பலரின் தன்னம்பிக்கையைக்கூட குறைத்தது. அதைவிட பார தூரமான ஒன்று மாணவர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதும் அதைக்கொண்டவர்களை மதிப்பிடுவதும். (Judgemental mindset) 

"உனக்கு பெண் தோழி இருக்கிறாளா, நீ உருப்பட மாட்டாய்... இரவில் நண்பருடன் வெளியே செல்கிறாயா, நீ உருப்பட மாட்டாய்... பெண்பிள்ளைகள் காற்சட்டை அணிகிறீகளா, கட்டாயம் உருப்பட மாட்டாய்" இவையெல்லாம் தினமும் காதில் விழும் வசனங்கள். இது எந்த வகையில் ஒருவனின் தன்னம்பிக்கைக்கு துணை நிற்கும்? 

Being judgmental என்பதே இயல்பாகி விட்டது. மேலும் படிப்பில்லை என்றால் அவன் வாழ்வே முடிந்து விட்டதாய் உணர வைக்கிறார்கள். இப்போதும் யாழ் பல்கலையில் இவை யாவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

கலாச்சாரமும், ஒழுக்கமும், பண்பாடும் கல்வியும் ஒருவன் வாழ்வை சீர் படுத்தும் அளவிற்கே இருக்க வேண்டும்; சீரழிப்பதாய் மாறிவிடக்கூடாது. 

எனது வடக்கு நண்பர்கள் கூட என்னேரமும் மன அழுத்தம் மற்றும் பயத்திலிருப்பதே அதிகம். "நம்ம வாழ்க்க இது, இப்ப என்ன குறைஞ்சு போச்சு, இது இல்லன்னா அது" என்ற மனப்பாங்கு அவர்களிடம் அரிதிலும் அரிது. "அய்யோ சாதிக்க வேண்டுமே, குடும்ப பெயரை காக்க வேண்டுமே, அதுவே இதுவே" என்ற பதற்றம் தான் மேலோங்கி நின்கிறது. 

இந்த சமூக அமைப்பு கட்டாயம் மாற வேண்டும். வாழ்வில் கல்வியைத்தாண்டியும் நிறைய உள்ளன. சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இந்த வயதில் தான் அனுபவிக்க வேண்டும், அதை செய்வதற்காகவே தம்மைக் குற்றவாளியாய் மாணவருணரும் நிலை மாற வேண்டும். அதற்கு சமூக அழுத்தம் குறைய வேண்டும். இது மட்டுமே பாதை என்பதை விடுத்து அவன் வாழ்வை அவன் கையில் கொடுக்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக கலாசாரத்திற்கும் கல்விக்கும் நல்ல பெயருக்கும் அந்தஸ்துக்கும் கொடுக்கப்ழடும் முக்கியத்யுவதில் பாதியேனும் உள ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அது குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டும். பெயர் கெட்டுவிட கூடாதென்ற மனைவின் பதற்றமும், சம்பாதிக்க வேண்டுமே சொத்து சேர்க்க வேண்டுமே என்ற கணவனின் அழுத்தமும் அய்யோ சாதிக்க வேண்டுமே என்ற பிள்ளைகளின் நடுக்கமும் குறைய வேண்டும். ஓடாய்த் தேய்ந்து உளைப்பதைக் காட்டிலும் பிள்ளைக்கு நடை பழக்கும் தருணங்கள் பெறுமதி வாய்ந்தவை என உணர்தல் வேண்டும். 

சுருங்கச் சொன்னால் life is a race run run எனுற virus இன் மனநிலையில் இருநது all is well என்ற பாரியின் மனநிலைக்கு சமூகம் மாறினாலே, இப்பிரச்சனைகளைம் அழுத்தங்களும் பாதியாய்க் குறையும்.

https://www.facebook.com/1286697015/posts/10224480228935039/?d=n

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமான இழப்பு. யாழ் பல்கலையில் ஏனைய இலங்கைப் பல்கலைகள் போலவே ஒரு மருத்துவ நிலையம் இயங்கி வருகிறது. டாக்டர் சீர்மாறன் மருத்துவ அதிகாரியாக இருந்த 90 களிலேயே  அந்த நிலையம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இப்போது அந்த சேவைகள் குறைந்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை!

குதிரையை தண்ணித் தொட்டிக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் தண்ணீரை குதிரை தான் குடிக்க வேண்டும்! மனநலமும் உடல் நலம் போல மருத்துவரிடம் காட்ட வேண்டிய ஒரு பிரச்சினை தான் என்று எங்கள் சமூகத்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எனக்குத் தெரிந்த சிறுவன்/நண்பன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். யாழ் கச்சேரிக்கு அருகிலிருந்த உளவளத் துணை நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் கூட்டிச் சென்று சிகிச்சையளித்திருந்தோம். பின்னர் தாயாரிடம் விடயத்தைக் கூறி வழங்கப்பட்ட மாத்திரைகளை தவறாது எடுக்கும்படி எச்சரித்திருந்தோம்.(தாயார் ஒரு ஆசிரியை) ஆனால் போதிய கவனிப்பின்றி 1996ல் இடம் பெயர்வின்போது வன்னியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அறிந்தேன். 😢

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது. 😡

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

இத்தனை தியாகங்கள் இழப்புக்கள் அழிவுகளின் பின்பும் எமது சமூகம் தங்களை சுய விமரிசனம் செய்துகொள்ளவில்லை என்றால் நாங்கள் மிகவும் மோசமான Corrupted  society என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

😡

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 22:51, Justin said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

சாதாரண 5ம் ஆண்டு புலை பரீட்சை அவ்வளவு பெஇதாக பெற்றோர்களால் ஊட்கி பெருக்கி பிள்ளைகளை பாழாக்கி விட்டிருக்கிறது தெரியுமா பிள்ளைகளை கால ஓட்டத்தில் எப்படி கரை சேர வேண்டும் என்று சொல்லி கொடுக்காமல் மார்க்ஸ் என்ற  ஒற்றை சொல்லிலும் அடுத்த பிள்ளையை ஒப்பீட்டு மதிப்பீட்டிலும்  பிள்ளைகளை வளர்க்கிறார்கள்  அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பெற்றோகள் தங்களது பிள்ளைகளை குதிர பந்தயத்தில் ஓட வைப்பது போல கல்விப்பயணத்தில் ஓட வைக்கிறார்கள் இதில் மற்ற பிள்ளைகளை தாங்கள் முந்த வேண்டுமென நினைத்து அடுத்த பிள்ளைகளை கேலி கிண்டல் செய்ட்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொல்கிறார்கள் என்று சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையோடு ஆரம்பமாகும். ஒரு வித போட்டி மனப் பாண்மை உயர் கல்வி முடித்து தொழில் வாய்ப்பு பெறும் வரைக்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது போலும்.சிறு வயதிலேயே அவர்களின் வயதுக்கு மேற்பட்ட எண்ணங்களை திணிப்பதனாயே ஒரு வித கர்வம் பிள்ளைகள் மத்தியில் வளர்ந்த வண்ணம் உள்ளது என்றும் சொல்லலாம்.ஆகவே இதற்கு முதல் காரணம் பெற்றோர் மற்றும் அவர்களை சுற்றி உள்ள வயது வந்தோர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் 5 ம் ஆன்டு புலமைப்பசிசில் பரீச்சைக்கு எதிராக கருத்திட்ட அனைவருக்கும் எனது விருப்பு வாக்குகள் உரித்தாகுக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

பெற்றோர்களை விட ஆசிரியர்களும் பாரிய உடந்தை காசுக்காக இப்ப சூம் கிளாஸ் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் கபிதன் தங்களை முகநூல்  மூலம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கிறார்கள் கல்விக்கு காசுக்கு தான் முதலிடம் கல்வி சார்ந்த துறையில் வேலைபார்ப்பதால் சொல்கிறேன் அதிக அனுபவம் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

அரசாங்கம் விரும்பியவ்ர்கள் எழுதலாம் என சொன்னாலும் அனைவரும் எழுதினார்கள் பெற்றோரின் வரட்டு கெளரவத்திற்க்காக பிள்ளைகளை வாட்டி எடுத்தார்கள் ஒன்லைன் கிளாஸ் என ( எனது நண்பர் ஆசிரியர் தரம் 5 பிள்ளைகள விட பெற்றோர்கள் தொல்லை தாங்க முடியல என 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 
அதேதான் எனது கேள்வியும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 17:00, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

சரி தூக்காத மாதிரி  எழுதுங்கள் . ஊரில் என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்..😀

Edited by யாயினி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவன் இளங்குன்றன் மரண வழக்கின் நீதிமன்ற உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூன்றாம் வருட மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காகப் காவற்துறையிரால் சமர்ப்பிக்கப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் பதிவு குறித்து சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் சந்தேகம் எழுப்பிய நிலையில் மேலதிக பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ். கோண்டாவில், வன்னியசிங்கம் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தூக்கில் தொங்கிய நிலையில் கால்கள் இரண்டும் நிலத்தில் முழந்தாளிட்ட வண்ணம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான இம்மரணம் தொடர்பான விசாரணையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்துமாறு அவருடைய சகோதரன்  சிங்கள அரசுக்கு  கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மரணமடைந்த பல்கலைக்கழக மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களைப் பார்வையிடுவதற்கும், அவர் பயன்படுத்திய தொலைபேசியைப் பரிசீலனை செய்வதற்கும் மன்று உத்தரவு வழங்கவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதை ஆராய்ந்த நீதிவான் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராவின் பதிவுகளையும்,  குறித்த மாணவன் பயன்படுத்திய தொலைபேசிப் பதிவுகளையும் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கோப்பாய் காவற்துறையினரால் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சி.சி.ரி.வி. கமராவின் காட்சிகள் நீதிமன்றத்துக்குச் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது குறித்த பதிவில் சடலம் மீட்கப்பட்ட கடந்த மாதம் 17ஆம் திகதி நண்பகல் பெறப்பட்ட பதிவு மாத்திரமே இருக்கின்றது என மரணமடைந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ்  நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் முழுமையான பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்
 
https://www.thaarakam.com/news/267f962d-ade2-498d-89c2-7afc76232ead

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 03:28, Kapithan said:

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது

நான் அறிந்தவரையில் இந்தப்போலித்தனம் ஊரில் உள்ளவர்களுக்கு சற்றும் குறையாமல் இங்கேயும் உச்சத்தில்தான் இருக்கிறது..

பிள்ளைகளை பெறுவதும் சமூகத்திற்கு நாங்கள் குறையுள்ளவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க, பிள்ளை எந்ததுறையில் படிக்க வேண்டும் என்பதையும் சமூகத்தில் அந்தஸ்த்தை நிரூபிப்பதற்காக.. திருமணம் சரிவரவில்லையா அதையும் கொண்டு இழுக்கவேண்டும், சமூகத்திற்காக.. இப்படி எல்லாவற்றையும் மற்றவர்கள்/சமூகம் என்ன நினைப்பார்கள் என்று போலியாகவே வாழ்பவர்களாக மாறிவருகிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.