Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

நீங்கள் புரட்டுவதில் வல்லவர் என்பதும் தெரியும். நீங்கள் நக்கல் அடித்தது அவர்கள் வரமாட்டார்கள் என்பதே. ஒத்து கொள்ளுங்க ராஜா ஒத்து கொள்ளுங்க.

நீங்கள் கஜேந்திரனின் இன்றைய பாராளுமன்ற உரையை   கேட்கவில்லை என நினைக்கிறேன். சிரிப்பதற்கு எவ்வளவோ  பேர் இன்று உள்ளார்கள்.

நான் அவர்கள் வர மாட்டார்கள் என்று நக்கல் அடித்த/எதிர்வுகூறிய எந்த தேர்தலிலும் அவர்கள் வரவில்லை.

கடந்த தேர்தலுக்கு முன் யாழ்பாணத்தில் மட்டும் அவர்கள் ஒரு சீட்டாவது வெல்வார்கள் எனவும் சொல்லி இருந்தேன்.

நான் மட்டும் இல்லை, கஜேந்திரனின் உரையை யதார்த்த உலகில் யாருமே கேட்பதில்லை என்பதுதான் உண்மை 🤣

  • Replies 59
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அமித்சா வருகையின் பின் அதிமுக-பிஜேபி கூட்டணி உறுதி. அநேகமாக 30-35 தொகுதிகளில் பிஜேபி கேட்க கூடும். 

பிஜேபிக்கு 5-10 சீட் கன்பெர்ம்?

திமுக நாயக்கர் (தெலுங்கு) சாதி கட்சியிலும், அதிமுக தேவர் சாதி கட்சியிலும் பிரபலமானவை.

திமுகவின் வாக்கு வங்கியில் தமிழ் ஆதரவு வாக்கை சீமானும், தெலுங்கு ஆதரவு வாக்கை திமுகவில் இருந்து பாஜாகவுக்கு இழுக்க பட்ட வி பி துரைசாமியும், ராதாரவி, தெலுங்கு சமிதி ஆட்கள் பிரிக்க. அதிமுக தோளில் சவாரி செய்தபடி பாஜக தாமரையை தமிழ்நாட்டில் மலரச்செய்ய வேண்டும்.

இதுதான் அமித் ஜி மாஸ்டர் பிளான்.

ஏற்கனவே பீகாரில் 4 முறை முதல்வராக இருந்த ஜாம்பவான் நிதீஷ் குமாருடன் கூட்டணி வைத்து, கூடாரத்து ஒட்டகமாகி, இன்று பிஜேபி அங்கே தனி பெரும் கட்சியாகி நிதீசை பொம்மை முதலவராக்கி, தனக்கு இரெண்டு துணை முதலவர்களையும் எடுத்துள்ளது பிஜேபி.

இதே கேம்பிளாந்தான் அதிமுகவுக்கும். இன்னும் இரெண்டு தேர்தலின் பின் தமிழ்நாட்டில் பிஜேபிதான் தனி பெரும் கட்சி. அவர்களின் ஜூனியர் பார்ட்னர் அதிமுக.

தேர்தலுக்கு முதலே பேசியபடி ஒப்பந்த பணத்தை  தெலுங்கு சமிதி ராதாரவி தரவளிகளும், சீமானும் அமித்சாவிடம் கறாராக வாங்கி விட வேண்டும். இல்லாட்டி ஜி நாமத்தை போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பார்.

சைக்கிளளை பற்றி அப்போ சொன்ன நக்கல் இப்போதும் பொருந்தும். பாராளுமன்றில் நேரு சூட் போட்டு ஆங்கிலத்தில்  கதைப்பதை விட ஒரு ஆணியும் அவர்கள் புடுங்க போவதில்லை.

குறைந்த பட்சம் விக்கியுடன் சேர கூடமுடியா அளவுக்கு கஜனின் சுயமுனைப்பு எழும்பி ஆடுகிறது. மணியை கூட தக்கவைக்க முடியவில்லை. அம்பாறைக்கு போய் டீ பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு கஜேந்திரன் அந்த பக்கம் தலை கறுப்பும் இல்லை.

சுமந்திரன் சம்பந்தரின் கையாலாகதனம், விக்கி வாக்கை பிரித்தமையால் ஒரு எம்பி சீட்டும், 60 வாக்கு வித்தியாசத்தில் ஒரு தேசிய பட்டியல் சீட்டும் கிடைத்தது - இதை வைத்து அடுத்த 5 வருடம் கமெடி பண்ணுவார்கள். வேறு எதுவும் இல்லை.

பஜகா ஒரு காமெடி பீசு தமிழ் நாட்டில். வாக்கு மிசினில் சூழ்ச்சி செய்து கீழ்தாரமாக வந்தால் ஒழிய, பஜகா, இந்திய அளவில் இப்ப செய்யும் ஒரு தரமற்ற அரசியல் கள்ள வாக்கு... 😂

"இதே கேம்பிளாந்தான் அதிமுகவுக்கும். இன்னும் இரெண்டு தேர்தலின் பின் தமிழ்நாட்டில் பிஜேபிதான் தனி பெரும் கட்சி. அவர்களின் ஜூனியர் பார்ட்னர் அதிமுக." கனவு காண்பதிற்கு  ஒரு அளவு வேண்டும்😂

குனிந்த ஈபிஎஸ் குப்புற விழுந்த ஓபிஎஸ் | அமித்சா மாமாவின் மாஸ்டர் பிளான் | சாட்டை | நாட்டுநடப்பு |

பாஜகா செய்த சதிவேலைகளை தமிழ் நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள், கூத்தாடிகளை வைத்து கூத்தாட, தமிழ் நாடு ஒரு களமல்ல, அதற்கு உத்தரா பிரதேசம்தான் சரியான களம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இந்துவாதித்தம் சேடம் இழுக்க தொடங்கிவிட்டது, இதைவைத்து இனியும் தமிழ்நாட்டு தமிழர்களில் மிளகாய் அரைக்க முடியாது, அதை பழைய காலம், மலையேறிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

1 hour ago, உடையார் said:

தமிழகத்தில் இந்துவாதித்தம் சேடம் இழுக்க தொடங்கிவிட்டது, இதைவைத்து இனியும் தமிழ்நாட்டு தமிழர்களில் மிளகாய் அரைக்க முடியாது, அதை பழைய காலம், மலையேறிவிட்டது

அலைபாயுதே மாதவன் போல,

BJP சீட் வெல்வது - இதெல்லாம் நடக்ககூடாது என்றே நினைக்கிறேன் ஆனால் நடந்துடுமோ என்றும் பயமாய் இருக்கு - 🤣.

மோடியின் இந்துதுவா என்பது முந்தைய இந்துவாவில் இருந்து சற்றே வேறுபட்டது. Trump/Bannon இன் “make America great again”, Cummings இன் “Take back control” போல இது ஒரு movement within a movement. 
 
வலதுசாரி சிந்தனைகள் வாய்பட்ட, இந்துதுவாக்கு அப்பாற்பட்ட பலரையும் ஈர்க்கும் சக்தி இதற்கு உண்டு.

தமிழ்நாடு, உத்தரபிரதேசம் போல இல்லை எனிலும், கேரள, மேற்கு வங்க வாக்காளர் போலன்றி, ஒரு ஜனரஞ்சக அலையில் அள்ளுபட்டு போக கூடியவர்கள்தான் தமிழ்நாட்டு வாக்காளரும். 

இந்த முறை ஜெயா இல்லாத அதிமுகவை, ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டியை லவகமாக கையாண்டு மொத்தமாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார் அமித் ஷா. 

இனி தொகுதி பங்கீட்டிலும் வாய்புள்ள தொகுதிகளை லம்பாக அள்ளுவார்கள்.

அமித்ஷா பிளானின் படி இப்போ தமிழகத்தில் 3 அணிகள்தான்

1. பிஜேபி A team

கட்சிகள்: அதிமுக +பிஜேபி+பாமக+ தேமுதிக(?)+ உதிரிகள்.

உத்தி: அதிமுக, பாமக, பிஜேபி, தேமுதிக நான்கின் நிலையான வாக்கு வங்கியை தக்கவைப்பது. மோடியின் இமேஜ், எடப்பாடி அரசின் நல்ல செயலகளை காட்டி தடுமாறும் வாக்காளரை கவர்வது.

2. திமுக அணி

இதில் திமுக+காங்கிரஸ்+விசி+ கம்யூனிஸ்ட்+மதிமுக+ உதிரிகள் - இவற்றில் திமுகவின் நிலையான வாக்கு வங்கியை கரைப்பது கடினம் ஆனால் அழகிரியை வைத்து கொஞ்சம் சிதைக்கலாம். விசியின் வாக்கு வங்கி அப்படியே இருக்கும். கம்யூனிஸ்டின், காங்கிரசின் வாக்கு வங்கியும் சேதப்படாது -ஆனால் மிக குறைவு. ஏனையவை உதிரிகள்.

உத்தி:

1. திமுகவின் நிரந்தர வாக்கு வங்கியை அழகிரியை வைத்து குறைப்பது.

2. கீழே பார்க்கவும் 

பிஜேபி B, C அணிகள்

நாத+மநீம+தெலுங்கு சாதி அமைபுகள்.

உத்தி : இந்த தேர்தலில் கணிசமான பாதிப்பை செலுத்த போவது மத சார்பற்ற, முற்போக்கு, இன உணர்வு உள்ள, ஊழலை வெறுக்கும், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் நடுநிலை வாக்காளர்கள். இவர்களை “ஜல்லி கட்டு கூட்டம்” எனலாம். அதாவது ஜல்லி கட்டு போராட்ட நேரம் - கட்சி சார்பின்றி ஆதரவு நிலைபாடு எடுத்தவர்கள். இந்த வாக்காளரில் பலர் இளைஞர்கள். இவர்கள் பிஜேபி A டீமுக்கு வாக்கு போடவே மாட்டார்கள்.

வேறு தெரிவு இல்லாதபோது இந்த வாக்குகள் நோட்டா அல்லது, “உள்ளதில் நல்ல பேய்” என்ற வகையில் திமுக அணிக்கு விழலாம். 

இந்த வாக்குகளை அப்படியே மடை திருப்பி விடுவதுதான் நாத, மநீம வின் வேலை.

எப்போதும் திமுகவின் பக்கம் நிற்கும் நாயக்க/தெலுங்கு சாதி வாக்குகளை - நாதவுக்கு எதிராக போராடுவதாக காட்டி கவர்வது அப்படியே தனியே பிரிப்பது அல்லது பிஜேபி A அணியில் சேர்ப்பது இதுதான் தெலுங்கு சாதி அமைபுகளுக்கு கொடுக்கபட்டுள்ள வேலை.

👆🏼இதுதான் அமித்ஷா மாஸ்டர் பிளான்

உடனடி நோக்கு : 2021 தேர்தலில் இரெட்டை இலக்க எண்ணிகையில் பிஜேபி சீட் எடுப்பது.

நீண்டகால நோக்கு: 2031 இல் அல்லது 2036 இல் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளில் ஒன்றாக பிஜேபியை ஆக்குவது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோஷான், 

இவ்வளவு ஆழமாக அனலைஸ் பண்ணிய நீங்கள் நா.த.க.வுக்கு டெபாசிட் கிடைக்குமா இல்லையா என்று ஒரு வரியிலாவது சொல்லியிருக்கலாம்😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நான் அவர்கள் வர மாட்டார்கள் என்று நக்கல் அடித்த/எதிர்வுகூறிய எந்த தேர்தலிலும் அவர்கள் வரவில்லை.

கடந்த தேர்தலுக்கு முன் யாழ்பாணத்தில் மட்டும் அவர்கள் ஒரு சீட்டாவது வெல்வார்கள் எனவும் சொல்லி இருந்தேன்.

நான் மட்டும் இல்லை, கஜேந்திரனின் உரையை யதார்த்த உலகில் யாருமே கேட்பதில்லை என்பதுதான் உண்மை 🤣

எங்கே நக்கலடித்து வராத ஒரு தேர்த்தலை கூறவும். நீங்கள்  உள்ளூராட்சி மற்ர தேர்த்தலில் விசயம் தெரியாமல் நக்கலடித்து  ஞாபகத்தில் உண்டு.  கடைசியாக கூட்டமைப்பின் பரித்தாப நிலையை( உங்களை போல்) கண்டோம் . இனிமேல் பெரிய பிஸ்தா போல் எதிர்வு கூறுவதை செய்யாதீர்கள்.😜

மற்றது யதார்த்த உலகில் உங்களின் கருத்துக்களும் எடுபடாது என்பதை உள்ளூராட்சி தேர்த்தலில் இருந்தே புரிந்து கொண்டேன்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

நீங்கள் நான் சொல்வதையும், வேறு யாரோ சொல்வதையும் போட்டு குழப்பி கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நான் உள்ளூராட்ட்சி தேர்தல்கள் பற்றி எதிர்வு கூறவில்லை. அப்படி கூறுவதும் கடினம். ஒரு ஊரில் செல்வாக்கானவரை பட்டியலில் போட்டாலே உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் எடுக்கலாம்,பிரதேச சபையையும் வெல்லலாம் , ஆகவே அதை வைத்து பெரிய அளவில் கணிக்கவும் முடியாது.

 சைக்கிள்காரரை நான் வெல்ல மாட்டர்கள் என கணித்தது கடந்த முறைக்கு முந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் மட்டும்தான். அப்போ அவர்கள் வெல்லவே இல்லை. 

இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் யாழில் மட்டும் எடுப்பார்கள் என கணித்தேன். மேலதிகமாக தொத்து பறியில் இன்னொரு சீட்டையும் பெற்றுள்ளார்கள்.

கூட்டமைப்பு செய்வது மிகவும் பரிதாப அரசியல் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆனால் அந்த கூட்டமைபிடம் இருந்து கூட ஒரு சீட்டை அதுவும் யாழ்பாணத்தில் மட்டுமே வாங்க கூடிய மிக பரிதாப அரசியலே சைக்கிள்காரர் செய்வது.

யாழ்பாணத்துக்கு வெளியே இது ஒரு லெட்டர்பேட் கட்சி கூட இல்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நான் இந்திய/தமிழக பழைய தேர்தல் நிலவரங்களை வைத்து கருத்து எழுதினேன். தாங்கள் ஒரு குறுகிய எண்ணைச்சட்டிக்குள் நின்று எரிந்து பொரிந்திருக்கின்றீர்கள்.

தடைகளிலும் அழிவுகளிலும் சுகம் காண்பவர்களிடம் நல்ல எண்ணங்களை/ கருத்துக்களை எதிர்பார்ப்பதும் ஒரு வித முட்டாள்தனம்தான்.

இனிவரும் காலங்களில் தமிழக அன்றைய இன்றைய அரசியல் நிலவரங்கள் எப்படியானது என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். இல்லையேல் வரலாற்று ஆசிரியர்களை அணுகி பயில முயலுங்கள். எமக்கு இந்திய அரசியலை உங்களுக்கு அறிவுறுத்தும் அளவிற்கு நேரமில்லை. அத்துடன் நேரம் காலம் எல்லாம் எமக்கு பொன்னானது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

அண்ணே, நேரம் பொன்னானது தான், ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்லத் தான் வேணும்: 

என்னைப் படிக்கச் சொல்லும் அதே வரலாற்றை நீங்களும் படித்துப் பார்த்தால் சீமான் பின்வரும் பிரபலங்களின் வரிசையில் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடும்: ட்ரம்ப், நைஜல் fபராஜ், பொல்சனாரோ, விக்ரர் ஊர்பான்..இப்படி மக்களை கூறு போட்டு தாங்கள் பதவிக்கு வரும் ஜனத்திரள்வாத அரசியலாளர்கள். 

இது சீமான் குழுவுக்கும் தெரியும்! புரியாமல் இருப்பது உங்கள் போன்ற "விருப்பமான கொடியை யார் பிடித்தாலும் பின் தொடர்வேன்" என்ற உயரிய கொள்கை கொண்ட நண்பர்கள் மட்டும் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கோஷான், 

இவ்வளவு ஆழமாக அனலைஸ் பண்ணிய நீங்கள் நா.த.க.வுக்கு டெபாசிட் கிடைக்குமா இல்லையா என்று ஒரு வரியிலாவது சொல்லியிருக்கலாம்😁

வேண்டாமையா.....

இப்போதான் பக்கம் பக்கமாக உள்ள terms and conditions ஐ, நுண் கடன் வாங்கும் பயனாளி போல வாசிக்காமலே கையெழுத்து போட்டு உள்ளே வந்துள்ளேன்🤣.

தப்பாக எழுதினால் தண்டனையாக சொத்தை பறிமுதல் செய்வதாய் எழுதியுள்ளார்களோம் தெரியாது 🤣

56 minutes ago, Justin said:

அண்ணே, நேரம் பொன்னானது தான், ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்லத் தான் வேணும்: 

என்னைப் படிக்கச் சொல்லும் அதே வரலாற்றை நீங்களும் படித்துப் பார்த்தால் சீமான் பின்வரும் பிரபலங்களின் வரிசையில் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடும்: ட்ரம்ப், நைஜல் fபராஜ், பொல்சனாரோ, விக்ரர் ஊர்பான்..இப்படி மக்களை கூறு போட்டு தாங்கள் பதவிக்கு வரும் ஜனத்திரள்வாத அரசியலாளர்கள். 

இது சீமான் குழுவுக்கும் தெரியும்! புரியாமல் இருப்பது உங்கள் போன்ற "விருப்பமான கொடியை யார் பிடித்தாலும் பின் தொடர்வேன்" என்ற உயரிய கொள்கை கொண்ட நண்பர்கள் மட்டும் தான்! 

வணக்கம் ஜஸ்ரின் அண்ணா,

டிரம்பின் தோல்வியினை டிவியில் பார்த்து குதூகலித்த போது உங்களை நினைத்து கொண்டேன்.

ஒரு முறை இந்த ஜனத்திரள்வாதத்தின் வீழ்சி டிரம்பின் தோல்வியோடு ஆரம்பிக்கும் என எழுதி இருந்தீர்கள்.

இப்போதே பைடன் வந்ததும் போரிசுக்கு கண்ணை கட்டுதாம்🤣. ஈயூ பேச்சுவார்த்தையில் பம்ம வேண்டிய நிலை. வட அயர்லாந்து ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால், அமரிகாவோடு வர்தக உடன்படிக்கை இல்லையாம்.

உங்கள் எதிர்வுகூறல் பலிக்க ஆரம்பித்துவிட்டதாகவே படுகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கும்பிடுகள் இருக்கும் வரைக்கும் ................

126972573_1543728606012705_4409971538910

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

126972573_1543728606012705_4409971538910

அண்ணா கொப்பி சாப்பிட்டீங்களா .. 

Screenshot-2020-11-22-23-10-08-952-com-g 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வணக்கம் ஜஸ்ரின் அண்ணா,

டிரம்பின் தோல்வியினை டிவியில் பார்த்து குதூகலித்த போது உங்களை நினைத்து கொண்டேன்.

ஒரு முறை இந்த ஜனத்திரள்வாதத்தின் வீழ்சி டிரம்பின் தோல்வியோடு ஆரம்பிக்கும் என எழுதி இருந்தீர்கள்.

இப்போதே பைடன் வந்ததும் போரிசுக்கு கண்ணை கட்டுதாம்🤣. ஈயூ பேச்சுவார்த்தையில் பம்ம வேண்டிய நிலை. வட அயர்லாந்து ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால், அமரிகாவோடு வர்தக உடன்படிக்கை இல்லையாம்.

உங்கள் எதிர்வுகூறல் பலிக்க ஆரம்பித்துவிட்டதாகவே படுகிறது.

திரும்பி வந்ததற்கு நன்றி கோசான்!

ஓம், என் போன்றவர்கள் ஆவலுடன் மூச்சைப் பிடித்த படி காத்திருந்த வெற்றி தான் பைடன் வெற்றி! ஆனாலும், ட்ரம்புக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கையில் இது bittersweet ஆன வெற்றியாகத் தெரிகிறது. அடுத்த 4 வருடமும் பைடன் நிர்வாகத்திற்கு இமயமலை ஏறுவதற்கு இணையான கடினப் பயணம்! 

தங்கள் பதவிகளுக்காக சாதாரண மக்களைக் கூறு போட்டுக் கூத்தாடும் ஜனத்திரள்வாதிகளிடம் எதைத் தான் காண்கிறார்களோ மக்கள் என்ற ஆயாசமும் வந்து விட்டது!🤦‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

இப்படியான கும்பிடுகள் இருக்கும் வரைக்கும் ................

126972573_1543728606012705_4409971538910

குனிஞ்சு கும்பிடு போடுறதைக்கூட பாகைமானி வைச்சு அளக்க வெளிக்கிட்டாங்கள்....😜

Bild

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

அவர்கள் பேஸ்புக்,  YouTube  போன்றவைகளை வைத்து சொல்கிறார்கள்.   உண்மை நிலைமையின் படி சீமானுக்கு கட்டுபணமும் கிடைக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் பேஸ்புக்,  YouTube  போன்றவைகளை வைத்து சொல்கிறார்கள்.   உண்மை நிலைமையின் படி சீமானுக்கு கட்டுபணமும் கிடைக்காது.

இதென்ன கரைச்சலாய் கிடக்கு......:cool:
சீமானுக்கு கட்டுக்காசும் கிடைக்காட்டில் என்ன பிரச்சனை? உங்களைப்போல ஆக்களுக்கு நல்ல விசயம் தானே....? 🤓

  • கருத்துக்கள உறவுகள்

அமித்ஷா சென்னை வருகை - மு க அழகிரி ,ரஜினியுடன் புதிய டீல் - சவுக்கு ஷங்கர்

https://www.facebook.com/RedPixTamilNewschannel/videos/187185696300595

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

.

நான் மட்டும் இல்லை, கஜேந்திரனின் உரையை யதார்த்த உலகில் யாருமே கேட்பதில்லை என்பதுதான் உண்மை 🤣

https://www.facebook.com/NewsfirstTamilSL/videos/189096839459083

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nunavilan said:

ம்...ம்ம்ம்..யாரும் கேட்பதில்லை என்றால், அடிப்படை அறிவே இல்லாத முட்டாள் இனவாதி அரசியல்வாதிகளுடன் கட்டி பிரண்டதை போடுகிறீர்கள்.

நான் கேட்டது ஆமான மனுசரை பற்றி, அமெரிக்க, ஐரோப்பிய, யூகே, அவுஸ்ரேலிய, சீன, ரஷ்ய, இந்திய வெளியுறவு துறை அமைச்சர்கள் வேண்டாம், அவர்களது சாரதிகளாவது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ம்...ம்ம்ம்..யாரும் கேட்பதில்லை என்றால், அடிப்படை அறிவே இல்லாத முட்டாள் இனவாதி அரசியல்வாதிகளுடன் கட்டி பிரண்டதை போடுகிறீர்கள்.

நான் கேட்டது ஆமான மனுசரை பற்றி, அமெரிக்க, ஐரோப்பிய, யூகே, அவுஸ்ரேலிய, சீன, ரஷ்ய, இந்திய வெளியுறவு துறை அமைச்சர்கள் வேண்டாம், அவர்களது சாரதிகளாவது🤣.

உங்களுக்கு கட்டி அடிச்சாலும் மூளையில்  ஏறாத ஒரு ஆளாக இருக்கிறீர்கள்.image.jpeg தீர்வு எதுவானாலும் இந்த முட்டாள்களிடம் தான் எடுக்க வேண்டும் என்பது புரியவில்லையா??
அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா ஒன்றும் புடுங்க முடியாது. சுயநலம் தான் அவர்களின் கொள்கையே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் பேஸ்புக்,  YouTube  போன்றவைகளை வைத்து சொல்கிறார்கள்.   உண்மை நிலைமையின் படி சீமானுக்கு கட்டுபணமும் கிடைக்காது.

நீங்கள் EVC மெசின் பற்றி தளங்களில் வாசிப்பதில்லை போல.

  • கருத்துக்கள உறவுகள்

அமித்ஷா வியூகம் தமிழ்நாட்டில் பலிக்குமா? - மணி மூத்த பத்திரிகையாளர்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

நீங்கள் EVC மெசின் பற்றி தளங்களில் வாசிப்பதில்லை போல.

EVC மெசின் என்று போட Electronic Verification Code  என்று வருகிறது.
சீமானுக்கும் EVC மெசினுக்கும் என்ன தொடர்போ

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்தின் பெயர்: வாக்கு எந்திர சூழ்ச்சி மக்களாட்சியின் வீழ்ச்சி. வெளியீட்டாளர்: உயிர்மை பதிப்பகம். இணையத்தில் தேடினால் விவரங்களை பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

உங்களுக்கு கட்டி அடிச்சாலும் மூளையில்  ஏறாத ஒரு ஆளாக இருக்கிறீர்கள்.image.jpeg தீர்வு எதுவானாலும் இந்த முட்டாள்களிடம் தான் எடுக்க வேண்டும் என்பது புரியவில்லையா??
அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா ஒன்றும் புடுங்க முடியாது. சுயநலம் தான் அவர்களின் கொள்கையே.

ஓ இந்த முட்டாள்கள்தான் உங்களுக்கு ஒரு நாடு, இரு தேச அடிப்படையில் தீர்வு தரப்போகிறார்களா🤦‍♂️ 

அப்போ நீங்கள் என்ன சொன்ன வருகுறீர்கள்? ஒரு வெளிநாட்டு அரசுடனும் பேச தேவையில்லை. கஜேந்திரகுமார் பாராளுமன்றில் பேசும் பேச்சை கேட்டதும், சிங்கள அரசு நடுநடுங்கி சும்மா சூப்பர் தீர்வினை எமக்கு தந்து விடும் என்றா🤣.

பிகு:

அண்மைகாலமாக யாழ் நிர்வாகம் எடுத்த வரவேற்புக்குரிய, காத்திரமான நடவடிக்கைகளால்... யாழில் கருத்தை விட்டு விட்டு கருத்தாளரை விமர்சிக்கும் பாங்கு வெகுவாக குறைந்துள்ளது. 

நீங்கள் எனக்கு எழுதிய பதில்களை வாசித்தால், மீண்டும் இந்த அநாகரிக போக்கு தலை தூக்குகிறதா? எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நீங்கள் பண்பாளர், மூத்த நிர்வாகியும் கூட, அப்படி இருக்காது என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இந்த முட்டாள்கள்தான் உங்களுக்கு ஒரு நாடு, இரு தேச அடிப்படையில் தீர்வு தரப்போகிறார்களா🤦‍♂️ 

யாரோடு பேசினாலும் சிங்களவர் தான் தீர்வு தர வேண்டியவர்கள் என்பது தான் என் கருத்து. அதன் கருத்து யாராக இருந்தாலும் சிங்களவருடன் தான் பேச வேண்டும் என்பதை உங்களால் உய்த்தறிய முடியவில்லையா?

அப்போ நீங்கள் என்ன சொன்ன வருகுறீர்கள்? ஒரு வெளிநாட்டு அரசுடனும் பேச தேவையில்லை. கஜேந்திரகுமார் பாராளுமன்றில் பேசும் பேச்சை கேட்டதும், சிங்கள அரசு நடுநடுங்கி சும்மா சூப்பர் தீர்வினை எமக்கு தந்து விடும் என்றா🤣.

தாராளமாக பேசலாம். கடந்த கால அனுபவத்தின் படி சுயநலமாக இருந்தார்கள் நான் பார்த்த அளவில் என குறிப்பிட்டு இருந்தேன். தாராளமாக பேசலாம். கடந்த கால அனுபவத்தின் படி சுயநலமாக இருந்தார்கள் நான் பார்த்த அளவில் என குறிப்பிட்டு இருந்தேன்.
  அப்போ கூட்டமைப்பு தீர்வை எடுத்து தருமாக்கும் என்று உங்களை போல் கேட்டு பார்ப்போம் என்ன விடை வருகிறது என.

சிங்களவனுக்கு கொரோனா வந்தால் ஒரு வேளை நடுங்க கூடும்.

Quote

நீங்கள் எனக்கு எழுதிய பதில்களை வாசித்தால், மீண்டும் இந்த அநாகரிக போக்கு தலை தூக்குகிறதா? எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நீங்கள் பண்பாளர், மூத்த நிர்வாகியும் கூட, அப்படி இருக்காது என்றே எண்ணுகிறேன்.

நீங்கள் என்ணுவது சரியே. 
நக்கலை குறைத்து மற்றவர்களை கடுபேற்றுவதை  நீங்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.