Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

Featured Replies

ரஜனியின் படத்தை பார்ப்பதற்கு அவரது ரசிகராக இருந்தால் மட்டுமே முடியும்.

இவரது படங்களை கலைக் கண்ணுடன் பார்ப்பதற்கு என்னால் முடியாதப்பா ஆளை விடுங்கள்.

  • Replies 217
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா டங்குவார் (நல்ல பெயர்)

அரங்கன் என்ற முகமூடியை சிலர் தமது விருப்பத்திற்காக இங்கே பாவித்துள்ளார்கள். இன்று தாயகத்திலுள்ள நிலைமையில் அங்கிருக்கும் ஒருவருக்கு ரஜினியின் திரைப்படம் பற்றிச் சிந்திக்க நேரம் வருமா?? அடுத்தவனை முட்டாளாக்கி அதில் சுகமனுபவிக்க நினைக்கின்றார்கள். அதில் உம்போன்றோர் விட்டில்பூச்சிகள் போல் இலகுவில் விழுந்துவிடுகின்றீர்கள். ரஜினி என்கிற தனிமனிதனின் தமிழ் விரோதப்போக்கென்று உம்மால் குறிப்பிடப்படுகின்றவை கட்டுரையில் இடம்பெற்றவை தானென்றால் உம்மை நினைக்க சிரிப்பாகத்தான் வருகின்றன. 1992 இல் வெளியிட்டதாகச் சொல்லப்படும (எந்தவித ஆதாரமுமில்லாது) விடயங்கள் தொடர்பாக சிலருக்கு 2007 இல் தான் ரோசம் பொத்துக் கொண்டு வருகின்றது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் உண்மையானவையாக இருந்திருந்தால் தமிழ்நாட்டு தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள் என்று நம்புகின்றீரா?? அல்லது அவர்கள் சூடு சொரணையில்லாதவர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இலங்கையிலிருக்கும் மலையகத் தமிழ்மக்களுக்கு நடக்கும் அநியாயங்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற உமது வாதத்தை கேட்டுச் சிரித்து எனது வயிறு புண்ணாகிப் போனது தான் மிச்சம். ..ம்.... ம்.... தொடருங்கள் உங்கள் நகைச்சுவையை. :rolleyes::D:rolleyes::(

ம்ம்ம்... தமிழகத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்த எனக்கு ரஜினியை அறிய வழியில்லைதான்.. :P உங்கள் நகைச்சுவை மிகப் பிரமாதம். நாங்களும் ஆவலாக உள்ளோம்...!

இலங்கையில சிவாஐயைக் குழப்புறதெண்டால் துணிஞ்சு ஓரு காரியம் செய்யவேண்டும்

1.கருணாவின் பெயரில் தீயேட்டர் முதலாளிமார்களை கொலை அச்சுறுத்தல் செய்யவேண்டும்.

2.தியேட்டர் அமைந்துள்ள பிரதேச பொலிசு நிலையத்திற்கு 119 இற்கு தொலைபேசி எடுத்து

படமாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொல்லை கொடுக்கலாம் .

முதலாவது தான் மிகச் சிறந்தது.

இலங்கையில சிவாஐயைக் குழப்புறதெண்டால் துணிஞ்சு ஓரு காரியம் செய்யவேண்டும்

1.கருணாவின் பெயரில் தீயேட்டர் முதலாளிமார்களை கொலை அச்சுறுத்தல் செய்யவேண்டும்

.

2.தியேட்டர் அமைந்துள்ள பிரதேச பொலிசு நிலையத்திற்கு 119 இற்கு தொலைபேசி எடுத்து

படமாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொல்லை கொடுக்கலாம் .

முதலாவது தான் மிகச் சிறந்தது

இந்த தலைப்பு பல பக்கங்களை தாண்டி மிகவும் வெற்றியாக ஓடி கொண்டு இருகிறது இதை நாங்கள் தமிழ் தேசியதிற்கு எவ்வழிகளில் நிதி சேகரிக்கலாம் என்று ஆராய்ந்து அல்லது வேறு ஏதாவதுக்கு ஆராய்ந்திருந்தால் மிகவும் நல்லதாக இருந்திருக்கும் இதனால் எம்மவர்கள் பயனும் அடைந்திருப்பார் ரஜனியின் படத்தை புறகணிப்பால் நாங்கள் ஒன்றும் காணபோவதில்லை புலத்தில் நாங்கள் பார்காட்டி அதனால் அவைகளுக்கு பெரிய பாதிப்பும் வரபோவதில்லை.

உதாரணதிற்கு நீங்கள் இப்படி செய்திருந்தா சிவாஜி படம் பார்க்க வருவோர்(உதாரணமாக புலத்தில்) எல்லாரும் தாயகதிற்கு குறிபிட்ட அளவு பணத்தை கொடுக்க வேண்டும் என்றிருந்தா அரைவாசி பே வந்திருக்க மாட்டினம் வந்தவையிட்ட இருந்து பணமும் சேகரித்து இருந்திருக்கலாம்,அதை விடுத்து நாம் புறகணிப்பால் படத்தை வாங்கிய நம்ம்வர்கள் தான் பாதிக்க பட போகிறார்கள்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :D

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒன்றை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வைக்கப்படுகின்றன. இதை ஏற்க முடியாது.

சிறிலங்காப் பொருட்களை எமது மக்கள் இன்னமும் பெரியளவில் புறக்கணிக்கத் தொடங்கவில்லை. அதற்கான பரப்புரை பலவீனமான முறையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்க முன்வந்தால் அதை தவறு என்று சொல்வீர்களா?

அப்பொழுது "ஈழத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்காத போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் அதைப் புறக்கணிப்பது தேவையற்றது, சிறிலங்காப் பொருட்களை; தரமானவை, ஆகவே அதனை வாங்க வேண்டும்" என்று துக்ளக் சோ நிச்சயமாக எழுதுவார்.

யாழ் களத்திலும் "சோ"க்கள் உண்டு என்பது புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க படம் பார்த்தோம். என்னடா இங்க புறக்கணிங்க என்று புலம்புறாங்களே அப்படி என்னதான் இருக்கென்று பார்க்கப் போனா.. அது சராசரி.. சினிமாப் படமாவே இருக்குது. அப்படியே ஸ்பைடர் மான் 3 யும் பார்த்தோம்..! நல்லாப் பொழுது போச்சுது..! :P :rolleyes:

படம் பார்க்க விரும்புறவங்க சினிவேல்ட் தியேட்டர்களில் பாருங்க.. சமரை என்ஜோய் பண்ணுங்க..!

28023_93x130.jpg

http://www.cineworld.co.uk/Headinglist.jgi...p;FILMPART=6334

தென்னிந்திய சினிமா நடிகரான ரஜனிகாந்த தனது சமீபத்திய சிவாஜி படம் தொடர்பாக வழங்கிய செவ்வி. ஒளி- ஒலி வடிவம்.

பிரித்தானியாவில் மட்டும் குறைந்தது 15 முதலாம் தர திரையரங்குகளில் இப் பட்டம் ஓடுகிறது... என்றால் பார்த்துக்குங்கோவன்..!

http://www.rajini-in-sivaji.com/

Edited by nedukkalapoovan

:rolleyes: ரஜினியை நீங்கள் பலரும் கன்னடன் என்று நினைக்கலாம் ரஜனி பிறப்பால் மராட்டியன் ..... உணர்வால் தமிழனல்ல ....கன்னட மராட்டிய கலவையாக இருக்கலாமோ ..... அவரைத்தான் கேட்கவேண்டும்

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒன்றை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வைக்கப்படுகின்றன. இதை ஏற்க முடியாது.

சிறிலங்காப் பொருட்களை எமது மக்கள் இன்னமும் பெரியளவில் புறக்கணிக்கத் தொடங்கவில்லை. அதற்கான பரப்புரை பலவீனமான முறையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்க முன்வந்தால் அதை தவறு என்று சொல்வீர்களா?

அப்பொழுது "ஈழத் தமிழர்கள் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்காத போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் அதைப் புறக்கணிப்பது தேவையற்றது, சிறிலங்காப் பொருட்களை; தரமானவை, ஆகவே அதனை வாங்க வேண்டும்" என்று துக்ளக் சோ நிச்சயமாக எழுதுவார்.

யாழ் களத்திலும் "சோ"க்கள் உண்டு என்பது புரிகிறது.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படை அறிவு வேண்டும். புறக்கணிப்பதால் பலனில்லை என்பதற்கும் புறக்கணிக்கத் தேவையில்லை என்பதும் ஒன்றென எண்ண பைத்தியங்களால்த் தான் முடியும். இப்படியெல்லாம் "சோ" காட்டினால்த் தான் பிரபலமாக்கலாமோ தங்கள் இணையத்தளத்தை.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்

நீங்களும் எனது கருத்தை தவறாகவே புரிந்துள்ளீர்கள். சிவராஜாவை இங்கு கருத்து வைக்க வேண்டாமென நான் எழுதவில்லை புலம்பெயர் தமிழரிடம் ரஜினி படத்தை புறக்கணிக்கச் சொல்வதில் எவ்வித பிரையோசனமுமில்லை என்பதையே எழுதினேன். லிசானுக்கு எழுதிய பதிலை பாருங்கள். நீங்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்

நான் அவ்வாறன எடுகோளை ஏன் எடுக்க வேண்டி வந்தது என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரையாடுகின்ற தளம் ஒன்றிலும் இவ்வாறன உரையாடலைச் செய்திருந்தீர்கள். அங்கே தமிழகமக்களுக்குள்ளாக கொண்டு செல்லப்படுகின்ற பிரச்சார வடிவத்தையும் நீங்கள் மாற்றியமைக்கின்ற சம்பவம் தான் நீங்கள் அந்த எண்ணத்தில் கதைக்கவில்லை என நினைக்க வைத்தது

நன்றி

தமிழ் நாட்டு மக்கள் மிகுதியாக வரும் களம் எது தூயவன் நான் அறிந்து கொள்ளலாமா???

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :D

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

Edited by Vasampu

  • தொடங்கியவர்

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லை, ஆகவே ...............................

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லை, ஆகவே ...............................

புறக்கணிப்பதால் பலனில்லை. ஆகவே புறக்கணிக்கும்படி பைத்தியக்காரத்தனமாக நான் எழுதிய கட்டுரையை மறந்து விடுங்கள்.

இப்படிக்கு

சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :(

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

மீண்டும்...

நகைச்சுவைக்கு நன்றி.. :D

Edited by Danguvaar

  • தொடங்கியவர்

கட்டுரையை நான் எழுதவில்லை. நான் எழுதியிருந்தால், அது சற்று வித்தியாசமாக இருந்திருக்கும். அத்துடன் அதில் கூறப்பட்டிருக்கும் பல விடயங்களை நான் ஓரளவுதான் அறிந்திருந்தேன்.

அது கிடக்கட்டும்.

நீங்கள் வசனத்தை முடித்த விதத்தை பார்க்கின்ற போது, "சிவாஜி படத்தை புறக்கணிக்கத் தேவையில்லை" என்ற அர்த்தம்தான் வருகிறது.

ஒன்றை செய்வதால் பலனில்லை என்பதற்கும், பலன் தருவது போன்ற முறைகளை கையாண்டு செய்யுங்கள் என்பதற்கும் அர்த்தம் வேறு.

நீங்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டி உங்கள் கருத்து தவறு என்று சொன்னேன்.

வசம்பு!

இந்த வசனத்தை தயவு செய்து முடித்து வையுங்கள்.

புறக்கணிப்பதால் பலனில்லைஇ ஆகவே ...............................

சபேசன்

புறக்கணிப்பதால் பலனில்லை. ஆகவே புறக்கணிக்கும்படி பைத்தியக்காரத்தனமாக நான் எழுதிய கட்டுரையை மறந்து விடுங்கள்.

இப்படிக்கு

சபேசன்

வசம்பு!

இவ்வாறு ஏன் இந்த கட்டுரைக்கு கருத்து சொல்கின்றீர்களோ தெரியவில்லை. கட்டுரையில் நல்ல நோக்கமே இருக்கின்றது ஆனால் கட்டுரையில் சொல்லப்படும் விடையத்தை நடைமுறைப்படுத்த கூடிய சூழல், ஒற்றுமை பல காரணங்களால் இல்லாமல் போகின்றது. படம் வெளியாகும் தருணத்தில் புறக்கணிப்புக்கருத்து அவசரமாக வந்ததாக கருத இடமுண்டு. ஆனால் ரஜனியை பற்றிய சில விடயங்கள் அறிந்து கொள்ள கூடிய வாறு இருக்கின்றது. அடுத்த ரஜனியின் திரைப்படத்தை புலம்பெயர் சமூகம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதுக்கு இதில் சில தகவல்கள் உண்டு என்பதையும் மறுப்பதுக்கில்லை.

தென்னிந்திய சினிமாத்துறைக்கு கணிசமான வருவாய் புலம் பெயர் சமூகத்திடம் இருந்து வருவதை யாரும் மறுக்கவும் முடியாது. 20 யுரோவோ 20 டொலர்களோ கொடுத்து ஒரு புலம்பெயர் உறவு பார்க்கும் போது. 20 நபர்களுக்கு அதிகமாக தமிழ்நாட்டில் திரைப்படம் பார்க செலவிடும் தொகைக்கு சமனாகின்றது.

மக்களை இவ்வாறான சினிமா மோகம், வெறித்தனத்தில் இருந்து மீளச் செய்வதுக்கு அந்தந்த திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துக்களையும் காட்சிகளையும் விமர்சித்து அதே நேரம் நல்ல கருத்துக்களையும் காட்சிகளையும் அடியாளப்படுத்தும் திரைப்படங்களை முன்நிலைப்படுத்தும் செயற்பாடுகள் இல்லாமல் கட்டுரை அமைந்திருப்பதை எல்லோரும் தத்தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைப்பதே கருத்துப்பகிர்வுக்கு நன்றாக இருக்கும்.

இக்கட்டுரை ரஜனி என்ற தனிநபரின் பிரத்யோக குணங்கள் இன அடயாளம் பற்று என்பவற்றை முன்நிறுத்தி எழுதப்பட்டது வலுவற்றதாக உள்ளது. ஆனால் ரஜனி என்ற தனிநபரின் ஆதிக்கம் அளவுக்கு மிஞ்சிய விதத்தில் உள்ளதால் தனிநபராக அடயாளப்படுத்தி விமர்சிப்பதில் பெரும் குற்றம் என்று எதுவும் இல்லை.

எது எவ்வாறு இருப்பினும் கட்டுரையின் பின்னணி ஒரு நல் நோக்கத்தை கொண்டதாக இருக்கின்றது. அதை நகர்த்தும் காலமும் முறையும் சற்று குறைபாட்டுடன் இருக்கலாம். அவைகளை ஆக்க பூர்வமாக கருத்துக்கள் சொல்லி நிறைவாக்குவது நல்ல விசயமாக இருக்கும். ஆனால் பைத்தியக்காரத்தனம் என்னும் வார்த்தைப்பிரயோகங்கள் நிவர்த்திக்கு பதிலாக நிராகரிக்க வளிகோலும். எமது தேசத்துக்கு எதிரான கருத்து முன்வைக்கப்பட்டால் தான் நிராகரிக்க முடியுமே தவிர அதன் நன்மை கருதி முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறைபாட்டுடன் இருந்தால் அக் குறை பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். என்பது எனது கருத்து.

திரப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை என்பது ஒரு குறிப்பிடத்தகுந்தவருமானம் என்பது நண்பருக்குத் தெரியாது போலும்.. :lol:

ஆமாங்கோ எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. இந்தியா, தமிழ்நாடு எல்லாம் வரைபடத்திலே பார்த்ததோடு சரிங்க. ஆனால் நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க புறக்கணிச்சு வெளிநாட்டிலை வித்த காசு குறைஞ்சு; ஏவிஎம் இப்ப வருமானத்தை குத்துவிளக்கு வைச்சுத் தானாம் பார்க்குது. :rolleyes::rolleyes:

மீண்டும்...

நகைச்சுவைக்கு நன்றி.. :lol:

உங்களுக்கு நகைச்சுவை அல்ல வேறு ஏதோ பிரைச்சினையும் இருக்குப் போல இல்லாவிடில் நீங்கள் எழுதியதையும் நான் எழுதியதாகப் போடுவீர்களா?? எதற்கும் நீங்கள் நலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன். :D:(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நகைச்சுவை அல்ல வேறு ஏதோ பிரைச்சினையும் இருக்குப் போல இல்லாவிடில் நீங்கள் எழுதியதையும் நான் எழுதியதாகப் போடுவீர்களா?? எதற்கும் நீங்கள் நலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன். :rolleyes::rolleyes:

நீங்கள் எழுதியதை "Quote" செய்து பதிலளித்தால் எல்லாம் ஒண்டடி மண்டடியாகத்தானே வருது. நீங்களும் முயற்சித்துப்பாருங்களேன்.. பின்பு யார் நலம் பெறவேண்டுமென்று தெரியும்!! :lol::lol:

ஐயா டங்குவார்

மேலே உங்களுக்கு நான் எழுதிய பதிலில் எல்லாவற்றையும் இணைத்துத் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் கவனிக்கவில்லையா?? நீங்கள் எழுதியது போல் ஒண்டடி மண்டடியாகவா இருக்கின்றது. ஒருவேளை உங்களுக்கு அப்படிச் சேர்ந்து வந்திருந்தால் உங்கள் கருத்தை நீக்கிய பின் பதிவிட்டிருக்கலாமே?? அவசரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அது உங்களுக்கு நன்கு பொருந்துகின்றது.

எனிமேலாவது பதிலளிப்பதற்கு முன்னர் மேலேயுள்ளவற்றை நன்றாக அவதானித்து பின் பதிலெழுதப் பாருங்கள். :rolleyes::rolleyes:

இப்போது புரிந்ததா யார் நலம் பெற வேண்டுமென்று?? :lol::lol:

Edited by Vasampu

இதுவரைவாசித்ததில்.......

அகத்தியன் ம்... :rolleyes:

வசம்பும்....யமுனாவும்.... :lol::D

(யாருக்காவோ நல்லாக..... கஸ்ரப்படுறது தெரிகிறது :D :D )

சபேசன்...ம்ம் B)

இவ்வளவுநேரம் செலவீட்டு வாசிக்க செய்தமுறை...

யாழ் ..... (மற்றய புதிய இளைய... இணைய.... முறைநாகரீகம்)

இதுஅல்ல புறக்கணிக்கும்... முறை... யாழைவிட அப்புதிய இணயங்களுக்கு ஒரு சபாஷ்

(யாழில் உள்ள யாவரையும் முட்டாளாக்காதீர்.... யாழே.... :rolleyes: யாராவது ஒருவர்...யாழ் முதியவர்... உரியவர்... மூச்சுகாட்டிணீரா... இங்கே..... :D:lol::D )

Edited by Netfriend

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூச்சுக்காட்டி என்ன நடக்கப்போகுது? கருத்தை கூறுங்கப்பா :rolleyes::rolleyes::lol:

இப்படத்தை நாம் பார்ப்பதால் மறைமுகமாக எமது போராட்டத்துக்கும் நிதி சென்றடைகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் :rolleyes: ..இப்போதும் புறக்கணிப்போமா?? :rolleyes:

Edited by Kuddithambi

மூச்சுக்காட்டி என்ன நடக்கப்போகுது? கருத்தை கூறுங்கப்பா :D:D:D

அப்ப.... உங்கள் வழி... அவர்... ரஐனி வழியோ... :rolleyes: :rolleyes:

இப்படத்தை நாம் பார்ப்பதால் மறைமுகமாக எமது போராட்டத்துக்கும் நிதி சென்றடைகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் :lol: ..இப்போதும் புறக்கணிப்போமா?? :D

கொஞசம் பொறுங்கோ... இதற்கு பதில் தாறன்.... :D:lol:

நீங்க இங்க இருட்டுக்க இருந்து எழுதுறீங்க. வேணுமாண்டா இங்க கருத்து எழுதும் ஒரு 25 பேர் சிவாஜி பார்க்க போகாமல் புறக்கணித்திருக்கலாம். மற்றும்படி எல்லாம் தலைகீழ்,

எங்கட ஜ.பி.சி வானொலி கூட படுகச்சிதமாக விளம்பரம் நடக்குது.

எப்படி எண்டா லண்டனில் ஒரே நாளில் 30,000 பேர் சென்று பார்த்த திரைப்படம் நீங்களும் தவற விடாதீர்கள் என்று வெளுத்து. வாங்குகினம்

ஒரு ஊர்வலம் எண்டா 30 பேரை காணக்கிடைக்காத லண்டனில் 30000 பேர் பார்த்தது சாதனை தான்

தமிழரே வாழ்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.