Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம்

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, கூட்டமைப்பினால் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கொரோனாவால் இறக்கின்றவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதன் ஊடாக, எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அற்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவான தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம், அரசியல் யாப்புக்கான தங்களது பரிந்துரைகளை விரைவாக முன்வைப்பதற்கும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனாவால்-உயிரிழக்கின்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம்

கூட்டமைப்பு  யாழ்களத்துக்கு தினசரி வந்து போகின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாகிவிட்டது.😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவல் இறந்த முஸ்லிம்களின் உடலை புதைப்பது முஸ்லிம் கலாசாரமா? முஸ்லிம்கள் இறந்தவர்கள் உடலை புதைப்பது அவர்களது மதநம்பிக்கை சமய சடங்கு என்று எல்லாம் இங்கே சொன்னார்களே
முஸ்லிம்களின் கலாச்சாரம் படி தான் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றால் பெரும்பான்மை முஸ்லிம்கள் தமிழ் தானே பேசுகிறார்கள் அவர்கள் இறுதிசடங்கும் தமிழர்கள் கலாச்சாரபடி தானே  நடைபெறவேண்டும்.
சிங்களம் பேசும் முஸ்லிம்கள் சிங்கள கலாச்சாரபடி செய்து கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இதுதான் அவையின்ட பிரச்சினை.....பேசுவது தமிழ் சிங்களம்... அடிப்பது அரபிக்கொப்பி....அரசியல் வாதிகளிடமிருந்து....அவைக்கு  அரசியல் செய்ய எம்பி பதவி வேணும்...அதற்கு அரபிக்கலாச்சாரம் வேணும்...இப்ப இதற்கு எண்ணெய் ஊற்ற அடக்கல் என்ற ப்தம் வேணும்....நோய் பற்றிய பயம் எல்லாம் அப்புறம்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

50 minutes ago, alvayan said:

இதுதான் அவையின்ட பிரச்சினை.....பேசுவது தமிழ் சிங்களம்... அடிப்பது அரபிக்கொப்பி....அரசியல் வாதிகளிடமிருந்து....அவைக்கு  அரசியல் செய்ய எம்பி பதவி வேணும்...அதற்கு அரபிக்கலாச்சாரம் வேணும்...இப்ப இதற்கு எண்ணெய் ஊற்ற அடக்கல் என்ற ப்தம் வேணும்....நோய் பற்றிய பயம் எல்லாம் அப்புறம்....

உங்களுக்கு யார் சொன்னது கலாச்சாரம் கட்டாயம் மொழி, இன அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று?

இதுதான் கலாச்சாரம் என்பதை தீர்மானிக்க நீங்கள் கலாச்சார தீர்மானிக்கும் அதிகாரசபையா?

Bacteria culture என்று கேள்விபட்டுள்ளீர்கள்தானே? அந்த கல்சரும் கலாச்சாரமும் அடிப்படியில் ஒன்றுதான். ஒரு குறித்த உயிரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து வாழும் போது, முதலில் ஒரு செயல் தினசரி நடைமுறையாகி, பின்னர் அது வழமையாகி, தலைமுறைகள் கடக்கும் போது அதுவே கலாச்சாரம் ஆகிறது.

முஸ்லீம்களின் வாழ்வின் அடிப்படை அலகும், தீர்மானிக்கும் காரணியும் இஸ்லாம். அவர்களது வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தீர்மானிப்பது இஸ்லாம்.

இந்து தமிழருக்கு, கத்தோலிக்க் தமிழருக்கு அப்படி ஒரு வகிபாகம் அவரவர் மதங்களுக்கு இல்லை.

ஆகவே அவர்கள் தம்மை தனி கலாச்சாரமாக, தனி இனமாக அடையாளபடுத்துவது அவர்கள் உரிமை. இதை அந்த குழுவுக்கு வெளியில் உள்ள நாம் தீர்மானிக்க முடியாது.

அவர்கள் எமது நியாயமான போரட்டத்தை வீழ்த்த உதவினார்கள், இப்போதும் எமது மக்களுக்கும் அவர்களுக்கும் பல உரிமை பிரச்சினைகள் உள்ளது என்பது மறுக்கவியாலது.

அவர்கள் கஸ்டபடும் போது குதூகலிப்பது குரூரமனோநிலை என்றாலும் இலங்கை தமிழர் அப்படி நினைப்பது புரிந்து கொள்ள கூடியதே.

ஆனால் எம்மிடம் சேர்ந்து உங்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்றால் நீங்களும் தமிழராக உணர வேண்டும் என்பது சரியுமில்லை நடைமுறை சாத்தியமுமில்லை.

மஞ்சதொடுவாயில் விவேகானந்தர் சிலையை உடைத்தால் அதை கேள்வி கேட்கத்தான் வேண்டும் ஆனால் காத்தான்குடியில் அவர்கள் பேரிச்சை நட்டால் என்ன ஒட்டகம் வளர்த்தால் நமக்கென்ன.

“தமிழ் பேசும் மக்கள்” என்று ஓரணியில் திரள ஒரு வாய்ப்பு இருந்தது அந்த யன்னல் 25 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காரணிகளால் மூடப்பட்டுவிட்டது.

இப்போ சிஙகளவர்களை போல அவர்களும் இன்னுமொரு இனக்குழு- இதுதான் யதார்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

“தமிழ் பேசும் மக்கள்” என்று ஓரணியில் திரள ஒரு வாய்ப்பு இருந்தது அந்த யன்னல் 25 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காரணிகளால் மூடப்பட்டுவிட்டது.

தற்போதும் அவர்கள் சேர வாய்ப்பில்லை இவங்கள் கூட கூவுவது அரசியலுக்குத்தான் என்பது தெளிவான வெளிச்சம் கூத்தமைப்பு தேவையானதை என்றும் புடுங்கியதில்லை தேவையில்லாததை மட்டும் எப்போதும் உசுப்பி பார்க்கும் விழுந்தால் லாபம் என்ற மனநிலை 

எனக்கென்னமோ அந்த கால தொப்பி குரங்குகள் கதைதான் நியாபகம் வருது  இவங்கள் குரங்குக்கு தொப்பி எறிந்து கொண்டே இருக்கிறார்கள் இது மனித குரங்குகள் ஆச்சே மீண்டும் திருப்பி எறியாது  அவ்வளவையும் எடுத்துக்கொள்ளும் தொப்பி தீந்த பின் இவர்களே அடங்கி விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே அவர்கள் தம்மை தனி கலாச்சாரமாக, தனி இனமாக அடையாளபடுத்துவது அவர்கள் உரிமை. இதை அந்த குழுவுக்கு வெளியில் உள்ள நாம் தீர்மானிக்க முடியாது.

இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது....நீங்கள் யோசிக்கிறியள்..எழுதுறியள்....சரி..ஆனால் அவர்கள் உணர்கிறார்களா?  இதுபோல்தான் இப்ப கூட்டமைப்பும் கதைக்குது...சாணாக்கியனும் ..பொன்னம்பலமும் ,சுமந்திரனும்..கதைக்கினம்...அந்தப் பக்கத்தில்...நோ...இதுக்கு என்ன காரணம்..அரபு அரசியல்தான்...இல்லையெனில் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒரு இனம்...ஆனால் நோயால் மூவினமும் ஒன்றுதான் ..எரிப்பில்...அதாவது கொரானாவுக்கு எதிரி...இதை உணர ..அவர்களைவிடார் அவர்களின் அரசியல் வாதிகள்...அது அரபுப் பணம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் நான் உடன்படுகிறேன். அவர்கள் தனி இனமாக உணர்ந்து பலகாலம் ஆகிவிட்டது.

ஆகவே அவர்களுக்கு பிரச்சனை வந்தால், நாங்கள் ஒன்றில் மூடிகொண்டு சும்மா இருக்க வேண்டும் அல்லது ஒரு சக சிறுபான்மை இனம் என்ற வகையில் குரல் கொடுக்க வேண்டும், அதில் எமக்கு ஏதேனும் அரசியல் ஆதாயம் இருப்பின்.

இதுதான் தெரிவுகள்: இதில் எமது கடந்த கால அனுபவத்தை கொண்டு, அவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படுவர் என்பதையும், இதில் குரல் கொடுப்பதால் எமது மக்களுக்கு சாதகமா, பாதகமா என்பதையும் கொண்டே முடிவு எடுக்க வேண்டும்.

1 hour ago, alvayan said:

மேலே தனிக்கு சொன்னதை போல இதில் நாம் குரல் கொடுக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதல்ல. 

இதில் குரல் கொடுப்பதால் எமது மக்களுக்கு நன்மையா, தீமையா என்பதுதான்.

அந்த அடிப்படையில்தான் கூட்டமைபின் முடிவை ஆதரிப்பதும், விமர்சிப்பதும் இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

தவிர முஸ்லீம்களை சக தமிழராக கருதி குரல் கொடுக்கும் நிலையில் இலங்கையில் எந்த தமிழனும் இல்லை, முஸ்லீமும் இல்லை. அவர்கள் வேறு இனம், கலாச்சாரம், மதம்.

அல்வையான், கொரனாவினால் இறந்தவர்களை ஆறடியில் புதைக்கலாம், சுகாதாரப் பாதிப்பில்லை. எரிக்கவே வேண்டும் என்ற தேவை சுகாதார முறைமைகளில் இல்லை! 

சிங்களவர்கள் துவேசம் காட்ட போலியாக காரணங்களைக் காட்டினால் நாமும் அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அநீதியின் பக்கம் நிற்பது சரியல்ல! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கோசான்,
அண்மையில் ரணில் ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் எப்பிடி தங்களது சுயநலத்துக்காக தமிழரையும் முஸ்லிமையும் பிரித்தோம் என்று வாக்குமூலம் கொடுத்டிருந்தது தெரியும் தானே. அதுநடந்ததுநான்நினைக்கிறன் 1972 என்று சரியாக தெரியாது. பிரிவினை என்பது 25 வருசத்துக்கு முதல் இல்லை அதுக்கு முதலே அஸ்ரப் பிரிந்த போதுநடந்திட்டுது.நீங்கள் சொல்வது போல் யாழ் வெளியேற்றத்துக்கு பிறகு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

வாதவூரன்,

நான் முன்பு ஒருமுறை நாதமுனிக்கு எழுதி இருந்தேன் குடியேற்றம் டி எஸ் சேனநாயக்க காலத்திலும், தமிழ் முஸ்லீம் பிரிவினை பதிதீன் முகமது காலத்திலும் வேரூன்றபட்டு விட்டது என்று.

அதன் தொடச்சிதான் அஸ்ரப் பிரிவு. 

நான் யாழ் வெளியேற்றத்தை சொல்லவே இல்லை. 

ஆனால் 25 வருடம் வரை ஒரு window of opportunity இருந்தது இரு தரப்பையும் ஒன்றாக இணைக்க, அது once and for all முழுமையாக மூடப்பட்டது 1990 களின் ஆரம்பத்தில். 

அவ்வாறு மூடப்பட, முஸ்லீம் ஊர்காவல்படையின் அட்டூழியம், வீரமுனை, சத்திருகொண்டான் உட்பட்ட படுகொலைகள், ஜிகாத் குழுக்கள், யாழ் வெளியேற்றம், காத்தான்குடி படுகொலை என்று ஒன்றோடு ஒன்று தொடர்பான பலவிடயங்கள் காரணமாகின. தனியே யாழ் வெளியேற்றம் மட்டும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

அல்வையான், கொரனாவினால் இறந்தவர்களை ஆறடியில் புதைக்கலாம், சுகாதாரப் பாதிப்பில்லை. எரிக்கவே வேண்டும் என்ற தேவை சுகாதார முறைமைகளில் இல்லை! 

சிங்களவர்கள் துவேசம் காட்ட போலியாக காரணங்களைக் காட்டினால் நாமும் அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அநீதியின் பக்கம் நிற்பது சரியல்ல! 

இது துவேசம் இல்லை ஐயா...இது அனைவருக்கும் பொது...ஏனெனில் இவர்கள்  பெருமளவாக வாழும் இடங்களீல் போனால் தெரியும் இவர்களின் சுகாதாரம்...அப்படிப்பட்ட இடங்களில் இந்த புதைப்பு சரிவராது...இப்ப யாழ்ப்பாணத்த எடுங்கோ சுகாதார முறைகளைப் பின்பற்றாமல் கலியாணவீடு..செத்தவீடு கொண்டாட்டம்....என்ன நடந்தது...என்ன நடக்கப் போகிறது ....எத்தனை வெண்டிலேற்றர் கொண்டஆசுப்பத்திரி இருக்கு....சொல்லுங்கோ...இவர்களின் மத மமதைக்கு இந்த சட்டம் தான் சரி என்று சொன்னேன்...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இதுதான் தெரிவுகள்: இதில் எமது கடந்த கால அனுபவத்தை கொண்டு, அவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படுவர் என்பதையும், இதில் குரல் கொடுப்பதால் எமது மக்களுக்கு சாதகமா, பாதகமா என்பதையும் கொண்டே முடிவு எடுக்க வேண்டும்.

சரியான அனுமானம் அண்ணை 
என்னை பொறுத்தவரை இந்தவிடயத்தில்  தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளும் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பொத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று தான் சொல்வேன் ,
ஏனென்றால் வாய்ப்புக்கிடத்தால் இலங்கை தமிழர்கள் தான் ஜனாஸா எரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் 
எங்களுக்கு பிரச்சினையில்லை என்று இந்த சிக்கலை அப்படியே மடைமாற்றம் செய்து தமிழர்பக்கம் திருப்பிவிட்டு முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்கள் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள அதை முஸ்லீம் சமூகமோ மௌனமாக ஆதரிக்கும் ,நம்பி நடுத்தெருவில் இறங்கிய தமிழன் கையில் அழுகிய பழத்தை வைத்துக்கொண்டு  இரண்டுபக்கத்தாலும் சம்பல் வாங்குவான், கூத்தாடிய தேசிக்காய்கள் மெதுவாக இந்தியாவுக்கு நழுவி போனையும் ஒப் பண்ணி விட்டு குப்புற தூங்கிவிடுவினம், 

அதை விட்டு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பப்ளிக் ஸ்டண்ட் அடித்து மனிதரில் மாணிக்கம் நாங்கள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இலங்கை ஈழ தமிழர்களுக்கு இல்லவே  இல்லை என்றே நினைக்கிறேன்    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.