Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி?

8 ஆகஸ்ட் 2017

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை

உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. 

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், 'பலுச்சிஸ்தான்' என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், 'பக்தூனிஸ்தான்' கோருகின்றனர். 

பல தசாப்தங்களாக தொடரும் காஷ்மீர் விடுதலைக்கான போராட்டங்கள், சீனாவின் ஷின்ஜியாங் மாகாண மக்களின் தனி நாடு கோரிக்கை, இலங்கையில் தனித் தமிழ்தேசம் கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களும் உலகம் அறிந்ததே. 

ரஷ்யாவில் செசென்யா மக்கள் தனிநாடு கோரினால், யுக்ரேனில் கிழக்குப் பகுதி மக்களின் கோரிக்கையும் தனி நாடே. இது மட்டுமா? பிரிட்டனில் இருந்து பிரிய வேண்டும் என்று ஸ்காட்லண்டு விரும்புகிறது.

ஐரோப்பாவில் இருந்து ஸ்பெயினின் கைடலோனியா பிராந்தியம் பிரிவது குறித்து அக்டோபர் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிபர் கார்லஸ் புஜ்டேமான் ஜூன் மாதத்தில் அறிவித்தார். இதேபோல், இராக்கில் குர்த் இன மக்கள் தனிநாடு கோருகின்றனர்.

 

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

புதிய நாடுகளை பிரித்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் தயாராக இல்லை

நாட்டை பிரிக்க அரசாங்கங்கள் தயாராக இல்லை 

தனிநாடு கோரிக்கைகள் எழுவது உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட நாட்டில் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் அரசுகள் நாட்டைப் பிரிக்கவோ, விடுதலை கொடுக்கவோ தயாராக இல்லை. கோரிக்கைகள் வலுத்து ஒலித்தாலும், உள்நாட்டு யுத்தங்கள் வலுத்தாலும், அவை நீண்ட காலம் தொடர்ந்தாலும், தனிநாடு கோரிக்கைகள் முடக்கப்படுகின்றன.

தனிநாடு கேட்கும் உரிமை யாருக்கு இருக்கிறது? என்பது தான் நம் முன்னே இருக்கும் இமாலயக் கேள்வி. இதற்கான பதிலை ஆராய்கிறார் பிபிசியின் ஜேம்ஸ் ஃப்லெச்சர்.

முந்தைய காலங்களில் புஜபலத்தையும், ஆயுத பலத்தையும் கொண்ட நாடுகளின் உரிமைகளும், நாடுகளின் எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. மாபெரும் யுத்தங்களும், போர்களுமே நாடுகளின் சாம்ராஜ்யங்களையும், அரசர்களையும் முடிவு செய்தன. 

கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர், மங்கோலியாவின் செங்கிஸ்கான், மத்திய ஆசியாவின் தைமூர் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம்.

வென்ற இடத்தை, ஆட்சி செய்வார் அரசர். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் போர்களால் ஏற்பட்டது மாபெரும் பேரழிவு. பலத்தைக் கொண்டு நாட்டை விரிவாக்கும் முயற்சிகளால் நாடுகளிடையே நடக்கும் போர்களால் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்கிறது வரலாறு.

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

நவீன காலத்திலும் புது நாடு கோரிக்கை 

நாடுகளை விரிவுபடுத்தும் போர்கள் நிகழக்கூடாது என்று முடிவு செய்த நாடுகள், அதற்கான புதிய கோட்பாடுகள் தேவை என்பதை உணர்ந்தன. 1945இல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது. தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் கருதினார்கள்.

தங்கள் அரசை தாங்களே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற கருத்து இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மக்களிடையே உருவானதாக டாக்டர் ஜேம்ஸ் இர்விங் கூறுகிறார்.

சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ஜேம்ஸ் இர்விங் லண்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். தங்கள் வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

1950 மற்றும் 1960களில் விடுதலை பெற்ற பல நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் காலணி நாடுகளாக இருந்தன. 1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவும் அவற்றில் ஒன்று.

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

தனிநாடு கோரிக்கையின் அடிப்படை

புதிய சர்வதேச கோட்பாடுகளின்படி, நாடுகளுக்கு சுயாதிகாரம் வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிடம் காலனிகளாக அடிமைப்பட்டிருந்த இந்தியா போன்ற ஆசிய நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும் விடுதலைபெற்றன. 

1945இல் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டபோது 51 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை, தற்போது 193 ஆக உயர்ந்துவிட்டது.

ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியின்கீழ் இருந்த காலனி நாடுகள் தொலைவில் இருந்ததால், சுதந்திரம் சுலபமாக கிடைத்துவிட்டது. ஆனால், தற்போது தனிநாடு கோரிக்கை வைப்பவர்கள் ஒரு நாட்டிற்குள்ளே இருப்பவர்கள் என்ற சிக்கல் விடுதலையை எட்டாக்கனியாக்கிவிட்டது. 

மக்களின் சுய நிர்ணய உரிமை நிறைவேற வேண்டாமா?

ஸ்பெயினின் கைடாலோனியாவோ, பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானோ, சீனாவின் ஷின்ஜியாங்கோ, தனிநாடு கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அரசுகள் செவிமடுக்கவில்லை.

யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த ஆறு நாடுகளில் செர்பியாவும் ஒன்று. செர்பியாவின் கொசோபோ பகுதி தனி நாடு கோரிக்கை வைத்துள்ளது. 

காலணி நாடாக இருந்து சுதந்திரம் பெற்ற செர்பியா, தங்கள் மக்களில் ஒரு பகுதியினரின் கோரிக்கையை அடக்குகிறது.

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

ஐக்கிய நாடுகள் பங்கு

கொசோவோவின் உதவிக்காக ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ தலைமையிலான படைகள் சென்றன.

'எந்தவொரு நாடும் வலுக்கட்டாயமாக பிற நாடுகளைக் கைப்பற்றி எல்லைகளை விரிவாக்கக்கூடாது' என்பது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அனைத்து நாடுகளும் இணைந்து ஒப்புக்கொண்ட ஷரத்து.

ஆனால், இந்த கோட்பாடானது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது. கோசோவோவில் அதுதான் நடக்கிறது. 

மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாடு கோரினாலும், பிற சர்வதேச கொள்கைகளின்கீழ், செர்பியாவின் எல்லைகளை மாற்றியமைப்பது தவறே.

சர்வதேச சமுதாயம் இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் இடையே ஒரு முடிவை எடுக்கவேண்டியிருக்கும். 

நாடுகளின் எல்லைகளை மாற்றாமல், சுதந்திரத்திற்கு பதிலாக அதிக அதிகாரங்களை வழங்கி மக்களை சமதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

பல புதிய நாடுகள் உருவாக்கம்

செர்பியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடாக தன்னிச்சையாக அறிவித்த கொசோவோவுக்கு பல நாடுகள் அங்கீகாரம் அளித்தாலும், ஐ.நா அதனை அங்கீகரிக்கவில்லை.

கொசோவோ தன்னிச்சையாக சுதந்திரம் பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து, செர்பியா 2008இல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த்து. 

இதில் தவறில்லை என தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், எந்தவொரு நாடும் சுதந்திர நாடாக அறிவித்துக் கொள்ளமுடியும், இது சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது இல்லை என்றும் கூறிவிட்டது. 

அப்படியென்றால், நீங்கள் வசிக்கும் வீட்டை ஒரு தனி நாடாக அறிவிக்க முடியுமா? உங்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது என்றாலும், உங்கள் வீட்டை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டியது யார்? 

பிற நாடுகளின் அங்கீகாரம் கிடைக்காவிட்டால், தனிநாடு என்பது கேலிக்கூத்து தானே? சுய நிர்ணய உரிமை இருந்தாலும், சர்வதேச விதிமுறைகளை பின்பற்றினாலும், தனி நாடாக அங்கீகரிக்கமுடியாது.

இதற்கு சிறந்த உதாரணம் கிழக்கு ஆப்ரிக்காவின் சோமாலிலாந்து பகுதி. 1991இல் சோமாலியாவில் இருந்து பிரிவதாக அறிவித்த சோமாலிலாந்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. நியாயமான தேர்தல்கள் பலமுறை நடந்து, சிறப்பான ஆட்சியும் நடைபெறுகிறது. 

பார்க்கப்போனால், சோமாலியாவைவிட, சோமாலிலாந்தின் வளர்ச்சி துரிதகதியில் உள்ளது. அதாவது, ஒரு நாட்டுக்கு தேவையான அனைத்துமே சோமாலிலாந்தில் இருக்கிறது. 

ஆனால் இதர நாடுகளின் அங்கீகாரம் இல்லாத சோமாலிலாந்து தனிநாடல்ல, இந்த நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அங்கீகாரம் இல்லை.

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

ஐ.நாவின் அங்கீகாரம் அவசியம் 

ஐ.நாவின் அங்கீகாரமும், அதில் உறுப்பினராவதும் அத்தியாவசியம் என்கிறார் பிரிட்டனின் கீலே பல்கலைக்கழக மாணவி ரெபெகா ரிச்சார்ட்ஸ். 

ஐ.நாவில் உறுப்பினராக இல்லாத நாடு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளில் கடன் வாங்கமுடியாது. அந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்காது. 

சர்வதேச வர்த்தக சட்டங்களின் பயன்களையும் பெறமுடியாது, பிற நாடுகளுடன் வர்த்தம் செய்வதும் சுலபமானதில்லை. 

அதாவது ஐ.நா அமைப்பின் உறுப்பினராக இல்லாத நாட்டிற்கு உரிய அந்தஸ்தும் இல்லை. 

சோமாலிலாந்து போல, உலகில் சுமார் ஒரு டஜன் நாடுகளுக்கு முறையான அங்கீகாரம் கிடையாது. ரஷ்யா செர்பியாவின் நட்பு நாடு.

எனவே, கொசோவோக்கு பல நாடுகளின் அங்கீகாரம் இருந்தாலும், ஐ.நா சபையின் உறுப்பினராவதை வீடோ அதிகாரத்தின் மூலம் தடுக்கிறது ரஷ்யா.

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

ஐ.நாவின் உறுப்பினராக இல்லாத கொசோவோ, உலக வங்கியிடம் இருந்து கடன் பெற்றுள்ளதும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராக இருப்பதும் எப்படி? 

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அதிகாரம்மிக்க நாடுகளின் ஆதரவை பெற்றிருக்கிறது கொசோவா என்பதே அதன் ரகசியம். 

தனிநாடாக அங்கீகரிக்கப்படுவதற்கு பெரிய நாடுகளின் ஆதரவும் அவசியம் என்பது தெளிவாகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக கிழக்கு திமோரைக் கூறலாம்.

தங்களுக்கான சாதக பாதகங்களின் அடிப்படையிலேயே தனிநாடுகளை ஆதரிக்கும் முடிவை எடுக்கின்றன பெரிய நாடுகள். 

போர்த்துகீசிய ஆட்சியில் காலணி நாடாக இருந்த கிழக்கு திமோரை, 1960களில் தாக்கிய இந்தோனேஷியா அதனை ஆக்கிரமித்தது. 

பனிப்போர் காலத்தில் மேற்கத்திய நாடுகளுடன் கூட்டாளியாக இருந்த இந்தோனேஷியாவை, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கண்டிக்கவில்லை. 

தனி நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

பனிப்போருக்கு பிறகு புதிய நாடு

பனிப்போர் முடிவடைந்தது; மேற்கத்திய நாடுகளுக்கு இந்தோனேஷியாவின் உதவியும் இனி தேவையில்லை. அதனால் கிழக்கு திமோரின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு கிடைத்தது. 

1999 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 2002இல், ஐ.நா உட்பட பல நாடுகள், கிழக்கு திமோரை தனிநாடாக அங்கீகரித்தன. 

வலுமிக்க நாடுகளின் ஆதரவுடனே விடுதலை என்ற இலக்கை அடைய முடிந்தது என்கிறார், க்ளீவ்லேண்ட் பல்கலைகழகத்தில் சர்வதேச விவகாரங்களை பயிற்றுவிக்கும் மிலேனா ஸ்டிரியோ. 

கிழக்கு திமோர் தனி நாடு, ஆனால், கொசோவோ ஐ.நாவின் அங்கீகாரம் இல்லாமலேயே செர்பியாவில் இருந்து சுயாதீனாமாக தனிநாடாக அறிவித்து, ஆட்சி செய்வதற்கு காரணம் அதிகாரம்மிக்க நாடுகளின் ஆதரவே என்கிறார் ஸ்டிரியோ.

இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், பெரிய நாடுகளின் ஆதரவு இருந்தால், தனி நாடு கோரிக்கை சாத்தியமாகலாம். 

ிி

பட மூலாதாரம், GETTY IMAGES

மனித உரிமை மீறல்களும், ஜனநாயக படுகொலை நடப்பது உறுதிபடுத்தப்பட்டாலும், ஒரு நாடு தனிநாடாக உருவெடுக்கமுடியாது. 

பலூச் மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகள் பற்றி எத்தனை புகார்கள் சொன்னாலும், செசென்யா மக்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்தினாலும், இராக்கில் குர்த் இன மக்கள் தனி நாடு கோரினாலும், போராட்டத்தின் வீரியம் சேதங்களை ஏற்படுத்தினாலும், பெரிய நாடுகள் மற்றும் ஐ.நாவின் ஆதரவு இல்லையெனில் தனிநாடு கனவு கானல் நீரே.

சுயநிர்ணய உரிமையின்படி விடுதலை கோருபவர்களுக்கு ஓரளவு அதிகாரம் கிடைக்கலாம். ஸ்பெயினின் கைடேலோனியா மக்களை இந்த யுக்தி சமாதானப்படுத்தலாம்.

தனிநாடாக சுயாட்சி நடத்துவதற்கு தேவை இரண்டு அம்சங்களே. ஒன்று அதிகாரம் கொண்ட உலக நாடுகளின் ஆதரவு. மற்றொன்று, ஐ.நாவின் அங்கீகாரம். இரண்டும் இல்லாமல், தனிநாடாகும் கோரிக்கை வெற்றி பெறும் என்று கூறமுடியாது.

 

https://www.bbc.com/tamil/global-40855000

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்களும், ஜனநாயக படுகொலை நடப்பது உறுதிபடுத்தப்பட்டாலும், ஒரு நாடு தனிநாடாக உருவெடுக்கமுடியாது. 

கிருபன். கட்டுரையிணப்புக்கு நன்றி

இதன்படி தமிழ்ஈழம் ஒருபோதும் சத்தியாமில்லை என்பதுயுறிதியகிறது அப்பவென்

போரடவேண்டும்.😏😇

20 hours ago, Kandiah57 said:

மனித உரிமை மீறல்களும், ஜனநாயக படுகொலை நடப்பது உறுதிபடுத்தப்பட்டாலும், ஒரு நாடு தனிநாடாக உருவெடுக்கமுடியாது. 

கிருபன். கட்டுரையிணப்புக்கு நன்றி

இதன்படி தமிழ்ஈழம் ஒருபோதும் சத்தியாமில்லை என்பதுயுறிதியகிறது அப்பவென்

போரடவேண்டும்.😏😇

கந்தையா, புலிகள் ஆனையிறவை கைப்பற்றி கொடி நாட்டிய அந்த வேளையில் கூட தமிழீழம் அமைவதற்கான ஜதார்த்தம் சரவதேச அரசியல் சூழ்நிலையின் பிரகாரம் வெகு தொலைவிலேயே இருந்தது. ஆனால் தமிழர் போராட்டம் தனது பாதையில் சாதனைபடைக்கும் என்ற ஒளிக்கீற்று தென்பட்டது. சிறிது சிறிதாக மக்களினதும். போராளிகளினதும் தியாகங்களல்  ஏற்படுத்திய பலங்களை (eigene Kraft) கெட்டியாக பிடித்து, ஏறக்கூடிய சாத்தியமான சரிவுகள் வழியாக ஏற முயற்சிக்காமல், மமதையில் செங்குத்தாக ஏற முற்பட்டு சறுக்கி அதல பாதாளத்தில் வீழ்ந்தவர்கள் நாம்.

அதை கருத்தில் கொண்டு ஜதார்த்தத்தை அனுசரித்து  எமது இப்போதைய பலத்தில்  ஏறக்கூடிய சிறிய சிறிய ஏற்றங்களையாவது அடையாளம் கண்டு, முன்னேறுவதே இன்றைய தேவை. அதை விடுத்து இப்போதும் பிடிவாதம் பிடிப்பதும்,  ஆளுக்காள் தூற்றுவதும், வெற்று வீரம்  பேசுவதும்  தொடர்ந்தால் காலம் கடந்தபின்னர் எமக்கான வழி நிரந்தரமாக அடைக்கப்படலாம். 

Edited by tulpen
இலக்கண திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2020 at 14:18, Kandiah57 said:

இதன்படி தமிழ்ஈழம் ஒருபோதும் சத்தியாமில்லை என்பதுயுறிதியகிறது அப்பவென்

போரடவேண்டும்.😏😇

தமிழீழத்திற்காக யாரவது இப்போ போராடுகிறார்களா
தமிழீழம் கேட்டால் தான் பெடரல் தருவார்கள் என்று முன்னைய தலைவர்கள் தமிழீழம் கேட்டார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சுட்டிக் காட்டப் பட்ட ஒவ்வொரு நாடும் ஒரு பெரிய பின்னணியில் தங்கள் விடுதலையை அடைந்தன என்று சுருக்கமாகக் குறிப்பிட முடியும். இந்தப் பின்னணி எங்களுக்கு இருக்கிறதா என்று கேள்வி கேட்காமலே "அவனே செய்துட்டான், நாம் ஏன் செய்யவில்லை?" என்று கேட்கும் ஆட்கள் இன்னும் தலைவர்களாக இருக்கிறார்கள்.

அண்மையில் இலங்கைத் தமிழ் சங்க (அமெரிக்கா) ஆண்டு விழாவில் தமிழகத்தில் இருந்து உரையாற்றிய ஒரு தலைவர் இதே அப்பாவித் தனமான கேள்வியைக் கேட்டார் " சில ஆயிரம் மக்கள் கொண்ட கொசோவாவே விடுதலை அடைஞ்சா, நாம் ஏன் அடைய முடியாது?"

(கொசொவா விடுதலை பெற்றது ரஷ்ய அடி கொண்ட ஸ்லாவிக் மக்களால் ஆளப்பட்ட சேர்பியாவிடமிருந்து, பிறகெப்படி விடுதலை கிடைக்காமல் போகும்? ) 

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவோ ஈயூ, யூகே, ஒட்டு மொத்த நேட்ட்டோ, அமெரிகாவின் ஆதரவுடன், இவர்களால் தனிநாடாக அறிவிக்கபட்ட நாடு.

இருந்த போதிலும் இன்னும் கூட ஐநா அங்கத்துவம் இல்லை. தெற்கு ஒசேசியா இன்னும் சில நாடுகளும் இப்படி அங்கீகரிக்க படமால் உள்ளன.

தமிழ் ஈழம் அமைய 2 விடயம் அத்தியாவசியம்

1. வெளிநாடு ஒன்றினாவது அனுசரணை. எமக்கு ஒரு பலமற்ற குட்டி தீவின் அனுசரணை கூட ஒரு நாளும் இருந்ததில்லை.

2. வடக்கு கிழக்கை எல்லை நிர்ணயம் செய்து கட்டி காக்கும் வல்லமை. கிழக்கின் இனப்பரம்பலும், புவியியலும் இதை ஒரு போதும் சாத்திய பட விடவில்லை. விடுதலை புலிகள் அவர்களின் அதி உச்ச பலத்தில் இருந்த போது கூட அரசியல், கலாச்சார, இரு தலைநகர்களில் ஒன்று ஒரு போதும் அவர்கள் கட்டுபாட்டில் இருக்கவில்லை, மற்றையது 1995க்குன்பின் இருக்கவில்லை. எனவே எமது உணர்வுசேர் பார்வையை விலக்கி விட்டு பார்த்தால், தமிழ் ஈழம் அமைவதற்காகன நிகழ்தகவு எப்போதும் மிக, மிக அரிதாகவே இருந்தது.

இது எமக்கு கசப்பாக இருக்கும் ஆனல் உண்மை. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

கொசோவோ ஈயூ, யூகே, ஒட்டு மொத்த நேட்ட்டோ, அமெரிகாவின் ஆதரவுடன், இவர்களால் தனிநாடாக அறிவிக்கபட்ட நாடு.

ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் இதற்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் சொன்ன  கும்பல் பாலூட்டி சீராட்டி வைச்சிருந்தவரை உள்ளுக்கு அனுப்பியாச்சு....ஏனெண்டு தெரியுமோ...??

Rücktritt von Kosovo-Präsident

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் இதற்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் சொன்ன  கும்பல் பாலூட்டி சீராட்டி வைச்சிருந்தவரை உள்ளுக்கு அனுப்பியாச்சு....ஏனெண்டு தெரியுமோ...??

Rücktritt von Kosovo-Präsident

யுத்த குற்றமாம் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

யுத்த குற்றமாம் 🤣

அதை கண்டு பிடிக்க இவ்வளவுகாலம் செண்டதாக்கும்....🤪
 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2020 at 13:18, Kandiah57 said:

மனித உரிமை மீறல்களும், ஜனநாயக படுகொலை நடப்பது உறுதிபடுத்தப்பட்டாலும், ஒரு நாடு தனிநாடாக உருவெடுக்கமுடியாது. 

கிருபன். கட்டுரையிணப்புக்கு நன்றி

இதன்படி தமிழ்ஈழம் ஒருபோதும் சத்தியாமில்லை என்பதுயுறிதியகிறது அப்பவென்

போரடவேண்டும்.😏😇

இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்தில் டெல்லிக்கு சேவகம் செய்யும் கூட்டம் இந்த தமிழ்பிபிசி .

இவங்களும் விகாரி  வைரஸ் போல் உருமாற்றம் அடைந்து எங்களுக்குள் இருந்து எங்களுக்கே ஆப்படிக்கும் கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்தில் டெல்லிக்கு சேவகம் செய்யும் கூட்டம் இந்த தமிழ்பிபிசி .

இவங்களும் விகாரி  வைரஸ் போல் உருமாற்றம் அடைந்து எங்களுக்குள் இருந்து எங்களுக்கே ஆப்படிக்கும் கூட்டம் .

பிபிசியை விடுவம்...இப்ப நீங்கள் என்ன செல்லுகிறீர்கள் தமிழ்ஈழம் சத்தியாமென்ற? 😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

பிபிசியை விடுவம்...இப்ப நீங்கள் என்ன செல்லுகிறீர்கள் தமிழ்ஈழம் சத்தியாமென்ற? 😁

ஒரே வரியில் சொல்வதென்றால் இல்லை  சந்தோசமா ?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உறுதியான பதில் சந்தோசமளிக்கிறது. முன்பின்தெரியாதவனை .சகட்டுமேனிக்கு எடைபோடக்கூடாது.நானும் உங்களைப்போல்தமிழ்ஈழம்வேண்டுமென விரும்பியவன்...ஒருவழி முடினல்.ஆயிரம்வழிதிறந்திருக்கும் எனறு செல்வார்கள்...வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்கள் எப்படியனாட்சியின் கிழ்வாழ்கிறர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள் .இலங்கையிலுள்ள தமிழர்கள் அப்படி ஏன் வாழக்கூடாது.?😜😁👍

11 hours ago, பெருமாள் said:

ஒரே வரியில் சொல்வதென்றால் இல்லை  சந்தோசமா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

உங்கள் உறுதியான பதில் சந்தோசமளிக்கிறது. முன்பின்தெரியாதவனை .சகட்டுமேனிக்கு எடைபோடக்கூடாது.நானும் உங்களைப்போல்தமிழ்ஈழம்வேண்டுமென விரும்பியவன்...ஒருவழி முடினல்.ஆயிரம்வழிதிறந்திருக்கும் எனறு செல்வார்கள்...வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்கள் எப்படியனாட்சியின் கிழ்வாழ்கிறர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள் .இலங்கையிலுள்ள தமிழர்கள் அப்படி ஏன் வாழக்கூடாது.?😜😁👍

 

பத்து வருடத்துக்கு முன் இருந்த உலகம் இப்ப இல்லை ஒரு லட்ஷம் படைவீரர்கள் இருந்த இடத்தில் 1000 பேருக்கு குறைவான படை வீரர் இருந்தால் காணும் எனும் நிலை electromagnetic pulses war அதோடை  செயற்கை அறிவூட்டப்பட்ட டிரோன் யுகத்தில் புகுந்து விட்டோம் . பெற்றோலுக்கும் மண்ணெண்ணெய்க்கும் வரிசையில் நின்ற காலம் போய் விடும் அணு இணைவு உலகின் முதல் மின் நிலையம் இங்கிலாந்து 2040ல் உருவாக்கி விடும் அதன்பின் உலக ஒழுங்கு நிச்சயம் வேறு விதமாக போகும் .

சிங்களம் நினைக்குது காலம் கடத்தி தமிழர்களின் உரிமைகளை கொடுக்காமல் ஏமாத்தலாம்  என்று எப்படி ஆனையிறவின் பின்னான காலம் இருந்ததுவோ அதே போன்ற காலத்தில் அவர்கள் உள்ளார்கள் இப்ப திரும்ப திரும்ப தமிழரை ஏமாத்துவம்  என்று கோத்தா நினைத்தால் நல்லது மச்சானின் கால் மாறு விழாவில் கிடைத்த மோதிரத்தை விற்று துவக்கு வாங்கும்  நிலையில் தற்போது தமிழர்கள் இல்லை .

 

https://www.sciencemag.org/news/2020/12/uk-seeks-site-world-s-first-fusion-power-station?utm_campaign=SciMag&utm_source=JHubbard&utm_medium=Facebook

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

பத்து வருடத்துக்கு முன் இருந்த உலகம் இப்ப இல்லை ஒரு லட்ஷம் படைவீரர்கள் இருந்த இடத்தில் 1000 பேருக்கு குறைவான படை வீரர் இருந்தால் காணும் எனும் நிலை electromagnetic pulses war அதோடை  செயற்கை அறிவூட்டப்பட்ட டிரோன் யுகத்தில் புகுந்து விட்டோம் . பெற்றோலுக்கும் மண்ணெண்ணெய்க்கும் வரிசையில் நின்ற காலம் போய் விடும் அணு இணைவு உலகின் முதல் மின் நிலையம் இங்கிலாந்து 2040ல் உருவாக்கி விடும் அதன்பின் உலக ஒழுங்கு நிச்சயம் வேறு விதமாக போகும் .

சிங்களம் நினைக்குது காலம் கடத்தி தமிழர்களின் உரிமைகளை கொடுக்காமல் ஏமாத்தலாம்  என்று எப்படி ஆனையிறவின் பின்னான காலம் இருந்ததுவோ அதே போன்ற காலத்தில் அவர்கள் உள்ளார்கள் இப்ப திரும்ப திரும்ப தமிழரை ஏமாத்துவம்  என்று கோத்தா நினைத்தால் நல்லது மச்சானின் கால் மாறு விழாவில் கிடைத்த மோதிரத்தை விற்று துவக்கு வாங்கும்  நிலையில் தற்போது தமிழர்கள் இல்லை .

 

https://www.sciencemag.org/news/2020/12/uk-seeks-site-world-s-first-fusion-power-station?utm_campaign=SciMag&utm_source=JHubbard&utm_medium=Facebook

மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு....😁👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.