Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரிந்து போக வேண்டும் என்று தான் போட்டனான் ...இன்று வரைக்கும் அதில் மாற்றமில்லை 

  • Replies 102
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெல்லபட்டது.

இதில் தமிழர் வாக்கு புறக்கணிக்கதக்க காரணியே

வணக்கம். கோஷன்.  நான் குறிப்பிட்டது  ஆசியாவம்சாவழிமக்கள்...அதாவது...

இலங்கை..இந்தியா...பாஸ்க்கித்தான்.....மலேசியா...போன்ற..நாடுகளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, விசுகு said:

மேலே கிருபன் ஐயா எழுதிய காரணத்தை வாசிக்க என் நெஞ்சே அடைச்சு போச்சு.

கொஞ்சம் பொறுங்கோ விசுகர்!   அடைப்பு எடுக்க ஒரு சிரட்டை தண்ணியோடை(விண்ணாண கருத்துக்கள்) வந்து சிதறி தெளிப்பார் பாருங்கோ ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து ஓடுவியள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

தமிழர்களும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை வந்தேறு குடிகளே. தமழர்கள் பலவிதங்களில் இங்கு வந்து கடியேறி இருக்கிறார்கள். படிக்க என்று வந்தவர்கள். படிக்க என்ற சாட்டில் வந்து பின்பு அரசியல்தஞ்சம் கொரியவர்கள். அரசியல் தஞ்சம் பெற்றவர்கள். iரோப்பிய நாடுகளில் இருந்து ஒன்ற்யச்சட்டதிட்டங்களின் படி இங்கு வந்தவர்கள் என்று பல வகயினர். ஒரு வந்தேறு குடி இன்னுமொரு வந்தேறு குடியை வரக்கூடாது என்று சொல்வதில் என்ன தார்மீக அறம் இருக்கிறது.? தமிழர்கள் சொல்லும் குற்றச்சாட்டு கிழக்கு iரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் குறைகிநதென்று.எமது அடுத்த தலைமுறைக்கு இவர்கள் போட்டியாளர்களாக இருக்கும் சாத்தியம் மிக்குறைவு. கிழக்கு ஐரோப்பியர்கள் பில்டிங் வேலை.கார் திருத்தும்வேலை, போன்ற அடிப்படையான வேலைகளையே கூடுதலாகச் செய்கிறார்கள். பிளை;ளைகளின் கல்வியில் பெரிய அக்கறை செலுத்துவதில்லை.தற்போதைய எமது தலை முறைக்கு அவர்கள் போட்டியாளர்களாக இருந்தாலும். அடுத்த தலைமுறைக்கு அவர்கள் போட்டியாளர்களாக இருக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி அவர்கள் நிரந்தரமாக இங்கு தங்க விரும்புவதுமில்லை. கொங்சக்காலம் உழைத்து விட்டு நாடு திரும்பி விடுவார்கள். தமிழர்களின் ஆடுத்த தலைமுறை வேற லெவலில் போய்கொண்டிருக்கிறது.தமழர்கள்  இங்கிலாந்தில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர்கள் பரந்து வாழகின்றார்கள்.அவரகளுடானான தொடர்பாடல்களளுக்கு இரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருப்பது தமிழர்களின் நலனை நோக்கின் விரும்பத்தக்கது.இன்று ஐரோப்பிய மக்களை வெறுக்கும் இங்கிலாந்து மக்கள் அடுத்து வெறுக்கப் Nஆபாவது ஆசிய ஆபிரிக்க நாட்டவரகளைத்தான்..ஐரோப்பாவில் பிரிட்டன் ஒரு அங்கம். ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளை மதிக்கவே மாட்டார்கள்.

சோகமான நிலையென்றாலும் இது தான் உண்மை.

அமெரிக்காவிலும் ட்ரம்பின் முஸ்லிம் தடை முதல், தென்னமெரிக்க குடியேறிக் குழந்தைகளை தனியே சிறையில் அடைத்த கொள்கை வரை பல குடியேற்ற எதிர்ப்புச் செயல்களுக்கு எங்கள் ஈழத்தமிழ் அடி கொண்ட அமெரிக்க பிரஜைகள் பலர் ஆதரவு. 

குடியேறிகளாக நாம் இருக்கும் போது எல்லா சலுகைகளும் கூச்ச நாச்சமின்றி பாவித்துக் கொள்வது, கடவுச் சீட்டு வந்த மறுநாளே  வந்த பாதையை மறந்து விடுவது! இது தான் எம்மவர் பலரின் நிலை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ரதி said:

நானும் பிரிந்து போக வேண்டும் என்று தான் போட்டனான் ...இன்று வரைக்கும் அதில் மாற்றமில்லை 

ஏன் தங்கச்சி? இதாலை உங்களுக்கு என்ன லாபம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கொஞ்சம் பொறுங்கோ விசுகர்!   அடைப்பு எடுக்க ஒரு சிரட்டை தண்ணியோடை(விண்ணாண கருத்துக்கள்) வந்து சிதறி தெளிப்பார் பாருங்கோ ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து ஓடுவியள் 😂

உண்மை தான் அண்ணா. அவர்கள் தவறு விட்டனர் அப்படி செய்திருக்கணும் இப்படி முடிவெடுத்திருக்கணும் என்பவர்களின் மிகமிக குறுகிய சிந்தனையில் வரும் முடிவுகளை பார்க்கையில்???

2 minutes ago, குமாரசாமி said:

ஏன் தங்கச்சி? இதாலை உங்களுக்கு என்ன லாபம்.

என்னண்ணா கேள்வி. மரத்தை தெறிக்க மரத்தை பாவிப்பது இயற்கை என்றான இன்றைய உலகில்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

வெல்லபட்டது.

இதில் தமிழர் வாக்கு புறக்கணிக்கதக்க காரணியே

வணக்கம். கோஷன்.  நான் குறிப்பிட்டது  ஆசியாவம்சாவழிமக்கள்...அதாவது...

இலங்கை..இந்தியா...பாஸ்க்கித்தான்.....மலேசியா...போன்ற..நாடுகளை

கந்தையா அண்ணை,

இங்கே இனவரியாக எப்படி வாக்களித்தார்கள் என்பதை காட்டும் வழிமுறைகள் ஏதுமில்லை. ஆசியர்கள் பிரெக்சிற்றை விரும்பினர் என்பது ஊகம்தான்.

ஆனால் தேர்தலின் போக்கை மாற்றியது, வட இங்கிலாந்தின் red wall என அழைக்கபடும் லேபர் பார்ட்டி பாரம்பரியமாக வெல்லும் இடங்களில் எல்லாம், லேபர் பார்டி சொன்னதை கேட்காமல் பெருவாரியாக உழைக்கும் வர்க வெள்ளை இனத்தவர் வெளியே போகும் முடிவை எடுத்ததே.

தமிழர்கள் வாக்கை விட, ஆசியர்கள் வாக்கு அதிகம்தான். ஆனாலும் யூகேயில் இன்னும் 86% மக்கள் வெள்ளையினத்தவர்தான்.

எனவே ஆசியர் வாக்கால் முடிவுமாறியது அல்லது பாரிய தாக்கம் செலுத்தியது என்பதை நான் நம்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பலமுறை தள்ளாடிய முடிவை இவர்கள் வாக்குகள் பாதை மாற்ற முடியும் அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எனது ஊகமும் மேலே பல கருத்தாளர் சொன்னது போல ஆசியர் மத்தியிலும் வெளியே போகும் முடிவே வென்றது என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

ஏன் தங்கச்சி? இதாலை உங்களுக்கு என்ன லாபம்.

ஒரு காரணம், வெள்ளையர்கள் இனி மேலாவது வேலைக்கு போகட்டும் என்ற நல்லெண்ணத்தில் தான்....அவர்கள் தங்கட வேலையை பறிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் எங்கள் வரிப் பணத்தில் சாப்பிட்டு  கொண்டு இருப்பதை நிப்பாட்ட இது ஒரு வழியாய் பட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கந்தையா அண்ணை,

இங்கே இனவரியாக எப்படி வாக்களித்தார்கள் என்பதை காட்டும் வழிமுறைகள் ஏதுமில்லை. ஆசியர்கள் பிரெக்சிற்றை விரும்பினர் என்பது ஊகம்தான்.

ஆனால் தேர்தலின் போக்கை மாற்றியது, வட இங்கிலாந்தின் red wall என அழைக்கபடும் லேபர் பார்ட்டி பாரம்பரியமாக வெல்லும் இடங்களில் எல்லாம், லேபர் பார்டி சொன்னதை கேட்காமல் பெருவாரியாக உழைக்கும் வர்க வெள்ளை இனத்தவர் வெளியே போகும் முடிவை எடுத்ததே.

தமிழர்கள் வாக்கை விட, ஆசியர்கள் வாக்கு அதிகம்தான். ஆனாலும் யூகேயில் இன்னும் 86% மக்கள் வெள்ளையினத்தவர்தான்.

எனவே ஆசியர் வாக்கால் முடிவுமாறியது அல்லது பாரிய தாக்கம் செலுத்தியது என்பதை நான் நம்பவில்லை. 

உண்மை ஆசியர்களின் வாக்குகள் முடிவில் தாக்கம் செலுத்தவில்லை.பிரிட்டிஷ்கார்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி,பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்துவது ஒரு கெளரப்பிரச்சினையாகவும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பலமுறை தள்ளாடிய முடிவை இவர்கள் வாக்குகள் பாதை மாற்ற முடியும் அல்லவா??

இல்லை அண்ணா அப்படி என்றால் ஆசியர்கள் செறிந்து வாழும் இடங்களில் வெளியே போகும் முடிவு பாரிய விகிதத்தில் வென்றிருக்க வேண்டும்.

ஆனல் சிறுபான்மை அதிகமாக வாழும் பெரு நகர்களில் எல்லாம் வேண்டாம் என்ற முடிவே வென்றது. அதுவும் லண்டனில் வேண்டாம் என்பதுக்கு பெரு வெற்றி.

சில இடங்களில் சரிக்கு சரியாக வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஒரு காரணம், வெள்ளையர்கள் இனி மேலாவது வேலைக்கு போகட்டும் என்ற நல்லெண்ணத்தில் தான்....அவர்கள் தங்கட வேலையை பறிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் எங்கள் வரிப் பணத்தில் சாப்பிட்டு  கொண்டு இருப்பதை நிப்பாட்ட இது ஒரு வழியாய் பட்டது 

ஒரு வெள்ளயனைப்பிடிச்சு உங்கள் வீட்டில் திருத்தல் வேலைகளைச் செய்தால் வீட்டின் பெறுமதியை விட கூலி கூட வரும்.இதுவே போலந்து நாட்டவரைப் பிடித்தால் மிக மலிவாகச் செய்யலாம்.கார்திருத்த வேலைகளும் அப்படித்தான்.சோம்பேறி வெள்ளைகள் எப்படி வேலைக்குப் போகப்போகுதுகள் என்று பொறுத்துத்திருந்து பாருங்கள்.(கையிலும் காசு குடுக்கலாம்சீட்டுக்காசு கருப்புக்காசு வெள்ளையாக்கலாம்.ஆசிய ஆபிரிக்க மக்களுக்கு உணவுப்போருட்கள் அவர்கள்தாயகத்தில் இருந்து வருவதால் பெரிய தாக்கம் இருக்காது.வெள்ளைகள் சாப்பாட்டுச் சாமான்கள் விலையேறினால் யாருக்கு நட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

ஒரு காரணம், வெள்ளையர்கள் இனி மேலாவது வேலைக்கு போகட்டும் என்ற நல்லெண்ணத்தில் தான்....அவர்கள் தங்கட வேலையை பறிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் எங்கள் வரிப் பணத்தில் சாப்பிட்டு  கொண்டு இருப்பதை நிப்பாட்ட இது ஒரு வழியாய் பட்டது 

தலை சுத்துது சகோதரி. 

வரிப்பணத்தில் சாப்பிடுவது வெள்ளைகளா??? அதுவும் எங்கள் வரிப்பணத்தில்???

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

ஒரு காரணம், வெள்ளையர்கள் இனி மேலாவது வேலைக்கு போகட்டும் என்ற நல்லெண்ணத்தில் தான்....அவர்கள் தங்கட வேலையை பறிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் எங்கள் வரிப் பணத்தில் சாப்பிட்டு  கொண்டு இருப்பதை நிப்பாட்ட இது ஒரு வழியாய் பட்டது 

இனியும் போகமாட்டர்கள். 

பல தொழில்கள் தானியங்கியாகும் என்று எதிர்பார்கிறார்கள்.

அநேகமாக, short term இல் எங்கள் அனைவரினதும் வரிச்சுமை கூடவே வாய்புகள் அதிகம்.

முன்னை இருந்ததை விட பொருட்கள் சிலதும் விலை கூடலாம்.

Welcome to Brexit Britain  🤣

7 minutes ago, புலவர் said:

ஒரு வெள்ளயனைப்பிடிச்சு உங்கள் வீட்டில் திருத்தல் வேலைகளைச் செய்தால் வீட்டின் பெறுமதியை விட கூலி கூட வரும்.இதுவே போலந்து நாட்டவரைப் பிடித்தால் மிக மலிவாகச் செய்யலாம்.கார்திருத்த வேலைகளும் அப்படித்தான்.சோம்பேறி வெள்ளைகள் எப்படி வேலைக்குப் போகப்போகுதுகள் என்று பொறுத்துத்திருந்து பாருங்கள்.(கையிலும் காசு குடுக்கலாம்சீட்டுக்காசு கருப்புக்காசு வெள்ளையாக்கலாம்.ஆசிய ஆபிரிக்க மக்களுக்கு உணவுப்போருட்கள் அவர்கள்தாயகத்தில் இருந்து வருவதால் பெரிய தாக்கம் இருக்காது.வெள்ளைகள் சாப்பாட்டுச் சாமான்கள் விலையேறினால் யாருக்கு நட்டம்?

வீடு திருத்தவோ? டி போட நான் தனியா லோன் போட வேண்டும் 🤣.

கிழக்கு ஐரோப்பியர்கள் கடும் உழைப்பாளிகள். அடிதட்டு மக்கள் இடம்பெயரும் போது அதோடு அங்கே இருக்கும் கஞ்சல், கறளும் சேர்ந்து வாறது இயல்புதானே?

இதை பூதாகாரமாக்கியது ரூபேற்ட் மேடோக்கின் பத்திரிகைகளும் அதை வாசிக்கும் ஆட்களும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Daily mirror ஐத்தவிர அனைத்து ஊடகங்களும் பிரிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தன.அரசியல் தலைவர்கள் துருக்கியும் இணையப்போகுதென்றும் பிரிந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுக்கும் பணத்தை மருத்துவத்தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று பொய்ப்பிலச்சாரம் செய்தார்கள்.ஆனால் எந்த மாற்றமும் ஏற்படாது.குறுகிய காலத்துக்கு மேலும் வரிச்சுமை கூடவே சாத்தியமுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

Daily mirror ஐத்தவிர அனைத்து ஊடகங்களும் பிரிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தன

நீங்கள் மேட்டுக்குடிகள் (😎) படிக்கும் கார்டியன் படிப்பதில்லை போலிருக்கு! கார்டியன் தாராளவாத பக்கம் என்பதால்  பிரியவேண்டும் என்று பிரச்சாரம் செய்யவில்லை. 

நான் தினமும் படிப்பது கார்டியனும் பிபிசியும்தான்!  அத்தோடு வேலைக்கு போகும்போதும் வரும்போதும் கேட்பது பிரித்தானியாவில் பிரபலமான ரேடியோ 4 செய்திகளும் அலசல்களும்தான்.

அப்படி இருந்தும் பிரெக்‌ஷிற்க்குத்தான் வாக்களித்தேன்.! டேவிட் கமரன் 2016 இல் வாக்கெடுப்பை நடாத்தியதே முட்டாள்தனமான முடிவு. ஆனால் அதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவுக்கான சிறப்பு சலுகைகளில் ஒன்றும் கொடுக்கவில்லை. கடுமையான வலதுசாரிகளைத் திருப்திப்படுத்த நடாத்திய வாக்கெடுப்பு டேவிட் கமரனுக்கே ஆப்பாகப் போனது.

6 hours ago, goshan_che said:

கிருபன் ஜி,

அவுசில் தமிழர்கள் கூடவா? சிங்களவர் கூடவா?

நீங்கள் பிடித்த பிள்ளையார் எனக்கு குரங்காக தெரிகிறது 🤣

Points based system பாகுபாடு காட்டாது என்பதால் புலம்பெயர விரும்பும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிற நாட்டவர்களுக்கும் சரியாகத்தான் வேலை செய்யும். கிழக்கு ஐரோப்பியர்களும் சலுகை அடிப்படையில் வராமல் தகுதி அடிப்படையில் வருவதில் பிரச்சினை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நீங்கள் மேட்டுக்குடிகள் (😎) படிக்கும் கார்டியன் படிப்பதில்லை போலிருக்கு! கார்டியன் தாராளவாத பக்கம் என்பதால்  பிரியவேண்டும் என்று பிரச்சாரம் செய்யவில்லை. 

நான் தினமும் படிப்பது கார்டியனும் பிபிசியும்தான்!  அத்தோடு வேலைக்கு போகும்போதும் வரும்போதும் கேட்பது பிரித்தானியாவில் பிரபலமான ரேடியோ 4 செய்திகளும் அலசல்களும்தான்.

அப்படி இருந்தும் பிரெக்‌ஷிற்க்குத்தான் வாக்களித்தேன்.! டேவிட் கமரன் 2016 இல் வாக்கெடுப்பை நடாத்தியதே முட்டாள்தனமான முடிவு. ஆனால் அதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவுக்கான சிறப்பு சலுகைகளில் ஒன்றும் கொடுக்கவில்லை. கடுமையான வலதுசாரிகளைத் திருப்திப்படுத்த நடாத்திய வாக்கெடுப்பு டேவிட் கமரனுக்கே ஆப்பாகப் போனது.

மேர்டொக்கின் டைம்சும், பைனசியல் டைம்சும், லண்டன் இலவச பேப்பர்கள் மெட்டிரோ, சிட்டி ஏ எம், ஈவினிங் ஸ்டாண்டர்ட் எல்லாம் வேண்டாம் என்று எழுதியவை.

ஆனால் வோட் லீவ் குறிவைத்தது உழைக்கும்/உழைக்கா வர்க்கத்தை. அவர்களுக்கு உப்பிடி பேப்பர் இருப்பதே தெரியாது.

ஆனால் நீங்கள் லீவ் என்று போட்டது அதிர்சிதான்.

இப்போதாவது அளித்த வாக்கு பிழை என்பதை உணர்கிறீர்களா?

12 minutes ago, கிருபன் said:

நீங்கள் மேட்டுக்குடிகள் (😎) படிக்கும் கார்டியன் படிப்பதில்லை போலிருக்கு! கார்டியன் தாராளவாத பக்கம் என்பதால்  பிரியவேண்டும் என்று பிரச்சாரம் செய்யவில்லை. 

நான் தினமும் படிப்பது கார்டியனும் பிபிசியும்தான்!  அத்தோடு வேலைக்கு போகும்போதும் வரும்போதும் கேட்பது பிரித்தானியாவில் பிரபலமான ரேடியோ 4 செய்திகளும் அலசல்களும்தான்.

அப்படி இருந்தும் பிரெக்‌ஷிற்க்குத்தான் வாக்களித்தேன்.! டேவிட் கமரன் 2016 இல் வாக்கெடுப்பை நடாத்தியதே முட்டாள்தனமான முடிவு. ஆனால் அதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவுக்கான சிறப்பு சலுகைகளில் ஒன்றும் கொடுக்கவில்லை. கடுமையான வலதுசாரிகளைத் திருப்திப்படுத்த நடாத்திய வாக்கெடுப்பு டேவிட் கமரனுக்கே ஆப்பாகப் போனது.

Points based system பாகுபாடு காட்டாது என்பதால் புலம்பெயர விரும்பும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிற நாட்டவர்களுக்கும் சரியாகத்தான் வேலை செய்யும். கிழக்கு ஐரோப்பியர்களும் சலுகை அடிப்படையில் வராமல் தகுதி அடிப்படையில் வருவதில் பிரச்சினை இல்லை.

அவுஸ்ரேலியாவில் இதே சிஸ்டம் 25 வருடமாக உள்ளது. இலங்கையில் இருந்து பொயிண்ஸ் அடிப்படையில் வரலாம் என்றால், பிறகு அது numbers game தான்.

75% பேரில் இருந்து கூட வருவார்களா, 13% பேரில் இருந்து கூட வருவார்களா?

கிழக்கு ஐரோப்பியர் சலுகை அடிப்படையில் அல்ல உரிமை அடிப்படையில் வந்தார்கள்.

நமக்கும் அதே உரிமை இருந்தது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.  நல்ல பல தகவல்கள்..அறிய முடிந்தது..உங்கள். பிரதமரின் தகப்பன்

துருக்கியா?. அல்லது. பிரான்ஸ்சா?...நான்  நினைக்கிறேன்..பிளையரின்.  பின்பு

யு.கே. க்கு நல்ல பிரதமர். கிடைக்கவில்லை...ஜேர்மானியை. 16 ஆண்டுகள்

kohl. ஆட்சி செய்தார்...அதன் பின். Spd. கட்சி.  ஆறு. ஆண்டுகள்.  ஆட்சி செய்தார்கள்...தற்போது.   16.   ஆண்டுகள்.Angela. ஆட்சி. செய்கிறார்

இவர்கள். சிறந்ததலைவர்கள்...இவ்வருடம். தேர்தல் நடைபெறவுள்ளது..

நல்ல தலைவர்  வரலாம்....யு.கே.  க்கு அப்படி. நல்ல. தலைவர். வரக்கூடிய

சந்தர்ப்பமில்லை.  பெயர். செல்லக்கூடிய தலைவர்களில்லை..ஐரோப்பாவில்

குறை செல்லாமல்வாழப்பழகவும்.   ருமேனியார்..ஜேர்மானிலிருக்கட்டும்..

நன்றி.    வணக்கம்......😜😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

ஒரு காரணம், வெள்ளையர்கள் இனி மேலாவது வேலைக்கு போகட்டும் என்ற நல்லெண்ணத்தில் தான்....அவர்கள் தங்கட வேலையை பறிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் எங்கள் வரிப் பணத்தில் சாப்பிட்டு  கொண்டு இருப்பதை நிப்பாட்ட இது ஒரு வழியாய் பட்டது 

இத்துடன் இன்றைய லண்டன் நற்சிந்தனைகள் நிறைவு பெற்றது.
தயாரித்து வழங்கியவர் தங்கை ரதி  :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆனால் நீங்கள் லீவ் என்று போட்டது அதிர்சிதான்.

இப்போதாவது அளித்த வாக்கு பிழை என்பதை உணர்கிறீர்களா?

9 hours ago, கிருபன் said:

நான் ஆய்வுகள் எல்லாம் செய்து முடிவு எடுக்கவில்லை!  வாக்கெடுப்பு அறிவிப்பை ரேடியோவில் கேட்டபோதே எடுத்த முடிவுதான். அது பிழை என்று இதுவரை நினைத்ததில்லை!

லீவ் என்றுதான் போடப்போகின்றேன் என்று வேலைத்தளத்தில் கூட சொல்லியிருந்தேன். எனக்கு மேலாளாராக இருந்த ஆங்கிலேயர் கூட அதிர்ச்சி அடைந்தார். அப்போது கருத்துக்கணிப்புக்கள் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதற்கு ஆதரவு அதிகம் என்று சொல்லியிருந்தன. எனது மேலாளர் countryside farming background இலிருந்து வந்தவர் (பரம்பரையினர் மேட்டுக்குடி அல்ல!) என்பதால் அவர்கள் எல்லாம் வெளியேற வாக்களிப்பார்கள் என்றே சொல்லியிருந்தார். அப்படியே நடந்தது!

ரொனி பிளேயர்கூட பொரிஸின் டீலுக்கு வாக்களித்திருப்பேன் என்று சொல்லியிருந்தார். எனவே இப்போதைய டீல் எந்தத் திசையில் பிரித்தானியாவைக் கொண்டு செல்லும் என்பதை பொறுத்துத்தான் பார்க்கவேண்டும். எனினும் வீட்டுவிலை அதிகம் இறங்காது என்று தெரிகின்றது. அதுவே பொருளாதாரம் பலத்த அடி வாங்காது என்பதற்கான அறிகுறி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பதிலுக்கு நன்றி.

பிளேயர் போலத்தான் எனது நிலைப்பாடும். 2016 இல் உள்ளே என போட்டாலும், 2020 இல் பொரிசின் டீலை ஏற்கிறேன்.

ஆனால் இப்போதும் உள்ளே/வெளியே தெரிவு இருந்தால் உள்ளேதான்.

பொருளாதாரம் அவ்வளவு பெரிதாக அடிவாங்கும் என நானும் நினைக்கவில்லை. ஆனால் 2016 இல் இருந்து கிட்டதட்ட அதே இடத்தில் நிற்கிறது.

4 வருடங்களின் வளர்சியை ஏலவே தொலைத்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

வணக்கம்.  நல்ல பல தகவல்கள்..அறிய முடிந்தது..உங்கள். பிரதமரின் தகப்பன்

துருக்கியா?. அல்லது. பிரான்ஸ்சா?...நான்  நினைக்கிறேன்..பிளையரின்.  பின்பு

யு.கே. க்கு நல்ல பிரதமர். கிடைக்கவில்லை...ஜேர்மானியை. 16 ஆண்டுகள்

kohl. ஆட்சி செய்தார்...அதன் பின். Spd. கட்சி.  ஆறு. ஆண்டுகள்.  ஆட்சி செய்தார்கள்...தற்போது.   16.   ஆண்டுகள்.Angela. ஆட்சி. செய்கிறார்

இவர்கள். சிறந்ததலைவர்கள்...இவ்வருடம். தேர்தல் நடைபெறவுள்ளது..

நல்ல தலைவர்  வரலாம்....யு.கே.  க்கு அப்படி. நல்ல. தலைவர். வரக்கூடிய

சந்தர்ப்பமில்லை.  பெயர். செல்லக்கூடிய தலைவர்களில்லை..ஐரோப்பாவில்

குறை செல்லாமல்வாழப்பழகவும்.   ருமேனியார்..ஜேர்மானிலிருக்கட்டும்..

நன்றி.    வணக்கம்......😜😀

பொரிஸின் தந்தை வழி பாட்டாவின் பெயர் அலி கெமால். இவர் ஒரு மிதவாதி, கவிஞர், பத்திரிகையாளர், துருக்கிய ஒட்டமான் பேரரசின் கடைசி உள்நாட்டு அமைச்சர். (இவரின் பல அம்சங்களை பொரிசில் காணலாம்).

இவருக்கும் ஆங்கில-சுவிஸ் கலப்பின பெண்ணான வினிவிரெட் பெர்ன் இற்கும் இங்கிலாந்தில் பிறந்தவரே பொரிசின் தந்தை ஸ்டான்லி ஜோன்சன். இவரின் பிறப்பு பெயர் ஒஸ்மான் வில்விரெட்.

வினிபிரெட் இளமையில் இறக்க, நாடு திரும்பிய அலி துருக்கிய சுதந்திரப் போரில் கொல்லபடுகிறார்.

ஒஸ்மான் வில்விரெட் (ஸ்டான்லி ஜோன்சன்) வினிவிரெட்டின் தாயாகிய ஆங்கில பெண் மாக்கிரெட் பெர்ன்னுடன் வளர்கிறார்.
மார்கிரெட்டின் ஆங்கில தந்தையின் பெயர் ஜோன்சன். ஆகவே ஒஸ்மான் வில்விரெட், ஸ்டான்லி ஜோன்சன் ஆக மாறி தன் வாழ்கையை தொடர்ந்தார்.

ஸ்டான்லி ஜோன்சனின் தாயார் வழி பூட்டன் Hubert Freiherr von Pfeffel. உங்கள் நாட்டுக்காரர். இந்த தலைமுறை முனிச், பவேரியாவில் வாழ்ந்துள்ளது.

இதுதான் ஸ்டான்லி ஜோன்சன் (பொரிசின் தந்தை) யின் துருக்கிய+ஆங்கில+ஜேர்மன்+சுபிஸ்/பிரெஞ் பிண்ணனி.

இனதூய்மைவாதப்படி பார்த்தால் பொரிஸ் ஜோன்சன் ஆங்கில கால்வாயில், நடுக்கடலில்தான் ஆட்சி செய்ய வேண்டும்🤣.

ரஸ்யா முதல் ஐரோப்பாவின் அரச குடும்பங்கள் அனைத்திலும் அவரின் வாரிசுகளே ஆட்டிசியாளர் என்பதால் விக்டோரியா ராணியை “ஐரோப்பாவின் பாட்டி” என்பார்கள்.

பொரிஸ் ஜோன்சன் ஒருவகையில் “ஐரோப்பாவின் பூட்டன்”.

தனது இளம் பிராயத்தையும், பின்னர் வேலை காலத்தையும் பல வருடம் பிரசில்சில் கழித்தவர்.

சரளமாக பிரெஞ் பேசுவார். 

லத்தின் மொழியை பல்கலையில் கற்றவர்.

முன்னர் ஈயுவில் இருப்பதா வரும் நன்மைகள் பற்றியும் கூறியுள்ளார்.

தான் பிரதமராக வருவதை இலகுவாக்கும் என்ற ஒரே காரணதுக்காக மட்டுமே ஈயூவில் இருந்து வெளியேறும் நிலைப்பாட்டை எடுத்தார்.

தான் எந்த பக்கம் (உள்ளேயா/வெளியேயா) என்பதை அவர் டெயிலி டெலிகிராப் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.

இந்த கட்டுரை ஏன் யூகே ஈயுவில் இருந்து விலக வேண்டும் என ஆணித்தரமாக வாதிட்டது.

இதே போல் ஏன் விலக கூடாது என ஆணித்தரமாக வாதிட்ட கட்டுரை ஒன்றையும் அதே சமயம் பொரிஸ் எழுதினாராம்🤣.

தனது பிரதமர் கனவிற்கு எது அதிக வாய்பானது என்பதை கடைசிவரை அவதானித்து வெளியேறுவதை ஆதரித்த கட்டுரையை பத்திரிகைக்கு அனுப்பி விட்டு மற்றையதை தூக்கி போட்டார் என்பார்கள்.

இப்போதைக்கு இங்கே வலுவான தலைவர்கள் இல்லை என்பது உண்மைதான்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில் இருப்பவன் என்பதனால் ப்ரெக்சிட்டை வரவேற்கின்றேன்.

இப்பொழுது படித்து முடித்தவுடன் மாணவர்களுக்கு 2 வருட விசா வழங்குவதாக கூறுகின்றார்கள்.

நல்லதொரு viable business model காட்டினால் இலகுவாக business விசா கொடுக்கின்றார்கள். GBP 50,000 இருந்தால்  investor விசா எடுக்கலாம்.

இவைகள் தகுதிவாய்தவர்களை குடியேற‌ ஊக்குவிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க. நனறி. கோஷன்...உங்கள் பதிலுக்கும்.  நேரத்துக்கும்...😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.