Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

spacer.png

அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக  சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் திங்களன்று கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/97900

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க டக்கிலஸினால் மட்டுமே முடியும் என்றொரு படம் காட்டி மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க, சிங்களம் உடனடியாக செய்யக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"டக்ளஸ்" என்ற நான்கு தமிழ் எழுத்துகள் கொண்ட அவரது பெயரிலேகூடத் தமிழ் எழுத்துக்கள் முழுமையாக இல்லையே, இவர் எப்படித் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவார்.🤔  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

"டக்ளஸ்"

வேற்று மொழி பெயர்களை ஒலிவடிவத்தில் அப்படியே எழுதுவதுதான் முறை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

"டக்ளஸ்" என்ற நான்கு தமிழ் எழுத்துகள் கொண்ட அவரது பெயரிலேகூடத் தமிழ் எழுத்துக்கள் முழுமையாக இல்லையே, இவர் எப்படித் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவார்.🤔  

இந்த பாஞ் என்கிற உங்கள் அவதாரப் பெயரே தமிழில் இல்லை! இன்னொருவரின் பெயரை தமிழில் எழுதென்று கேட்க உண்மையிலேயே தகுதி இருக்கா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vanangaamudi said:

வேற்று மொழி பெயர்களை ஒலிவடிவத்தில் அப்படியே எழுதுவதுதான் முறை.

இதனை நான் மறுதலிக்கவில்லை. இருந்தாலும் ஒலி வடிவத்தை எழுதுவதற்குத் தமிழ்மொழியில் சொற்கள் இல்லையா...? இல்லையென்றால் எழுதுவதற்குரிய சொற்கள் ஏன் உருவாக்கப்படவில்லை....?? ' ழ' என்ற தமிழ்ச்சொல்லை எழுதுவதற்கு ஆங்கில மொழியில் ஒரு சொல் இல்லாததால்  ‘zha‘ என்று ஆங்கிலத்தில் உள்ள மூன்று சொற்களை இணைத்து ‘Azhagu‘ என  வுக்குரிய ஒலியை எழச்செய்துள்ளனர். அதற்காக அவர்கள் ஆங்கிலத்தில் இல்லாத வேற்று மொழிக்குரிய எழுத்துக்கள் எதனையும் பாவிக்கவில்லையே.🤔

உங்கள் பின்னூட்டம் ஒரு கலகத்தை உருவாக்கியுள்ளது. அது நன்மையில் முடியலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் ஒரு பச்சை இட்டேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்காலை தமிழ் தமிழ் எண்டு அலற இஞ்சாலை ரகசியமாய் வேறை அலுவல் நடக்குதாமே..?

 

Bild könnte enthalten: Baum und im Freien

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள் அண்மையில் தமக்காக தயாரித்துக்கொண்ட ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னத்தை மாற்றியமைத்துள்ளனர். 
நந்தி சின்னம் வரவேண்டிய இடத்தில்அது அகற்றப்பட்டு ஊJ என்ற எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பாக விசாரித்தபோது, ஏற்கனவே சிங்கள மாணவர்களால் இச்சின்னம் மாற்றப்பட்டது எனவும் அதையே மருத்துவபீட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் தெரியவந்துள்ளது.  

AMCEHA 2019 – International Conference on Advanced Materials for Clean  Energy and Health Applications

Bild könnte enthalten: Text „и บ UNIVERSITY OF JAFFNA SIDDHA MEDICINE“

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

இதனை நான் மறுதலிக்கவில்லை. இருந்தாலும் ஒலி வடிவத்தை எழுதுவதற்குத் தமிழ்மொழியில் சொற்கள் இல்லையா...? இல்லையென்றால் எழுதுவதற்குரிய சொற்கள் ஏன் உருவாக்கப்படவில்லை....?? ' ழ' என்ற தமிழ்ச்சொல்லை எழுதுவதற்கு ஆங்கில மொழியில் ஒரு சொல் இல்லாததால்  ‘zha‘ என்று ஆங்கிலத்தில் உள்ள மூன்று சொற்களை இணைத்து ‘Azhagu‘ என  வுக்குரிய ஒலியை எழச்செய்துள்ளனர். அதற்காக அவர்கள் ஆங்கிலத்தில் இல்லாத வேற்று மொழிக்குரிய எழுத்துக்கள் எதனையும் பாவிக்கவில்லையே.🤔

உங்கள் பின்னூட்டம் ஒரு கலகத்தை உருவாக்கியுள்ளது. அது நன்மையில் முடியலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் ஒரு பச்சை இட்டேன். 

நான் குறிப்பிட்டது அன்னிய மொழியில் உள்ள ஒரு பெயரை தமிழில் எழுதும்போது உள்ள நடைமுறை, அதாவது சொல்வதுபோல் எழுதுவது. இங்கு பெரும்பாலும் தமிழ் சொற்களுக்கு இருக்கும் எழுதும் இலக்கண விதிகள் பின்பற்றப்படுவதில்லை.

ஒலி வடிவத்தை எழுதுவதற்குத் தமிழ்மொழியில் சொற்கள் இல்லையா...?

இங்கு எழுத்துகள் இல்லையா என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இல்லை அல்லது ஓரளவுக்கு இல்லை. பெயர்களை மொழிபெயர்த்து எழுத முடியாது. உதாரணமாக  Mr. Black என்ற ஒருவரின் பெயரை திரு. கருப்பு  என்று தமிழில் எழுதுவதில்லை. மாறாக திரு. பிளாக் என்றுதான் எழுத வேண்டும்.

மாறாக தமிழில் உள்ள பெயரை வேற்று மொழியில் எழுதும்போது நூறு விழுக்காடு சரியான தமிழ் ஒலிவடிவை பெறுவது கடினமாக இருக்கும். அப்போது அன்னிய மொழியின் எழுத்துகளை கோர்த்து நீங்கள் குறிப்பிட்டபடி இயன்றளவு சரியாக உச்சரிக்க முயற்சிக்கலாம், உதாரணம் ழ=zha.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.