Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vikarai-Building-in-North-696x392.jpg

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது என்றும் கூறியுள்ளார், தற்போது, வெலி ஓயா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 4 மில்லியன் ரூபா செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

இந்த தகவல்களை சிங்கள ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றன.

நமக்கு நல்லதொரு தமிழன் வாய்த்தான் என, சிங்கள சமூக ஊடகங்கள் அந்த நபரை புகழ்ந்து வருகின்றன.

முல்லைத்தீவை சேர்ந்த கிருபாகரன் (38) என்ற நபரே இவ்வாறு பௌத்தத்தை வளர்ப்பதில் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.

யுத்தத்தில் காலொன்றை இழந்த அவர் இப்பொழுது ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார். இப்பொழுது பௌத்த மதத்தை தழுவியுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் பௌத்த விகாரைகளிற்காக பல இலட்சம் ரூபாவை அவர் செலவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த நபர் தனது கதையை சிங்கள ஊடகங்களிற்கு பகிர்ந்த போது-

என் அம்மா, அப்பா இருவரும் உயிருடன் இருக்கிறார்கள். அப்பா நகை தொழிலை நடத்தினார். எனவே எங்களிடம் நல்ல பணம் இருந்தது.

எனக்கு ஒரு மூத்த சகோதரர், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். நான் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை.

ஒரு சகோதரி போரின்போது இறந்தார். நான் முல்லைத்தீவிலுள் வித்தியானந்தா மகா வித்தயாலயத்தில் படித்தேன்.

யுத்தத்தின் இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தலும் ஒருவர் தம்முடன் இணைய வேண்டுமென புலிகள் அறிவித்தனர்.

அல்லது வீட்டிற்கு வந்து ஒருவரை கடத்திச் செல்வார்கள். புலிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, நான் புலிகளில் சேர்ந்தேன்.

நான் 10 ஆம் ஆண்டு வரை மட்டுமே படித்தேன். 2006 இல் நான் புலிகளில் சேர்ந்தேன். அப்போது எனக்கு 23 வயது. நான் கெரில்லா போரில் மூன்று மாத பயிற்சி பெற்றேன். எனது தகட்டு இலக்கம் 563. அமைப்பு எனக்கு ‘கார்முகிலன்’ என்ற பெயரை வைத்தது.

புலிகளின் முக்கிய தளபதியான கேணல் தீபனின் கீழ் செயற்பட்டேன், அங்கு எனக்கு கப்டன் தரம் வழங்கப்பட்டது.

முகமாலை முன்னரங்கத்தில் நடந்த மோதலில் எனது காலை இழந்தேன். நான்கு மாத சிகிச்சையின் பின்னர் வழங்கல் பகுதயில் பணியாற்றினேன்.

2009 ஏப்ரல் 5 அன்று வெள்ளமுள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்தேன். எங்களுடன் வந்த போராளிகள் பொதுமக்களிற்குள் ஒளிந்து நின்று துப்பாக்கி பிரயோகம் செய்தது.

நாங்கள் முன்வரிசை போராளிகளாக இருந்த போதும், இராணுவம் எம்மை துன்புறுத்தவில்லை. எங்களை நன்றாக நடத்தினார்கள். பின்னர் புனர்வாழ்விற்கு அனுப்பினார்கள்.

அங்கே சிங்களத்தை நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன். நாங்கள் புலிகளில் இணைந்த பின்னர், சிங்கள நாடு ஒரு கொலைகார நாடு என்று தலைவர்கள் கற்பித்தனர். இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் உணர்ந்தேன்.

நம்முடையதை விட சிங்கள தேசம் சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்கிறேன்.

பின்னர் நான் நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதலங்கார கிட்டி தேரருடன் தொடர்பு கொண்டேன். அவரிடமிருந்து தம்மத்தைப் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது.

தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் எனது அறிவை மேலும் மேம்படுத்தினேன்.

ஒரு நாள் நான் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசயாவில் வழிபடச் சென்றேன். அந்த நேரத்தில் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் நான் பௌத்தத்தை படித்து, பௌத்தத்திற்கு மாற வேண்டும் என்பதாகும்.

இந்த காலகட்டத்தல் மேதலங்கார தேரர் காலமானார். அவரது உடலை விகாரைக்கு கொண்டு வர முடியாது, ஆலய சூழலில் தகனம் செய்ய முடியாது என தமிழ் தீவிரவாதிகள் குழு கலவரத்தில் ஈடுபட்டது.

மேதலங்கர தேரரின் நினைவாக, விகாரையில் ரூ.6 1/2 இலட்சம் செலவில் புத்தர் சிலை கட்டினேன். நீர் வசதிகள் செய்தேன்.

வெலிஓயா ஸ்ரீ தேவகிரி ராஜமஹா விகாரையில் ஒரு தாதுகோபம் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்திற்கு சுமார் ரூ .4 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், ருவன்வெலி மகா சாயாவின் இருப்பிடத்திற்கு சுமார் 3 1/2 லட்சம் ரூபாய் செலவிட்டேன். நான் நீண்ட காலமாக ஒவ்வொரு போயாவிற்கும் அனுராதபுரத்திற்கு வருகிறேன்.

அந்த சுதந்திரத்தை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஒட்டுமொத்த தேசத்தின் கண்ணியமும் மரியாதையும் உண்டு.

புலிகள் அமைப்பில் முன்னணி வரிசை போராளிகளாக இருந்தபோதிலும், அவர்களால் எங்களுக்கு வாழ்க்கைப் பரிசு கிடைத்தது என புளகாங்கிதம் கொண்டுள்ளார்.

அவரது நிதியில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடங்களில் வழிபாட்டு சின்னங்கள் அகற்றப்பட்டு பௌத்த மயமாக்கல் நடப்பதை பற்றி, அவரும் பேசவில்லை. அவரிடம் பேட்டியடுத்த ஊடகமும் பேசவில்லை.

https://lankapuri.com/2021/01/20/முல்லைத்தீவில்-40-இலட்சம்/

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன  

இப்படிக்கு கிருபாகரன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்பீபீபீபீட்டன்.....😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன  

இப்படிக்கு கிருபாகரன்.

நீங்கள் விளையாட்டு செய்தி என்றாலும் சில சம்பவங்கள் உண்மையாக நடந்தேறி வருகின்றன . டொட்  ஆனால் நாம் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று நம்ம புத்தியை தீட்டிக்கொண்டே  சீச்சி திட்டிக்கொண்டே இருப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் விளையாட்டு செய்தி என்றாலும் சில சம்பவங்கள் உண்மையாக நடந்தேறி வருகின்றன . டொட்  ஆனால் நாம் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று நம்ம புத்தியை தீட்டிக்கொண்டே  சீச்சி திட்டிக்கொண்டே இருப்போம்

இப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ...? எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய்  காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதிரியள்...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ...? எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய்  காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதிரியள்...

இப்பவும் ஒன்றும் கெட்டு போகலை எல்லாத்தையும் உதறிப்போட்டு வாரது முடியுமா என்ன ?? நான் புலம் பெயர்ந்தவர்களை இழுக்க வில்லை புலம் பெயர்ந்தவர்கள இங்க்குள்ளவர்களை இன்னும் விளங்கிக்கொள்ள வில்லை 
காசு மரங்கள் தன் நிழலுக்கு கீழ் மட்டும் கொட்டுகிறது காய்ந்த மரங்கள் சருகாகவே கொட்டிக்கொண்டு  இருக்கிறது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் ஒன்றும் கெட்டு போகலை எல்லாத்தையும் உதறிப்போட்டு வாரது முடியுமா என்ன ??

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

வந்த பிறகே அதைப்பற்றி கதைக்கலாம்........

அதுதான் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் காசு மரம் என்று காணி வீடுகள் வாங்கலாம், சுயதொழில் ஆரம்பித்து உழைக்கலாம் காசு இருந்தால்  ஆனால் பாதுகாப்பு இருக்குமா என கேட்பீங்கள்.  வந்தாலும் உங்களுக்கு இப்போது இலங்கை, ஈழம் ஒத்துவராாது  எதிலும் பிழைதான் கண்டு பிடிப்பீர்கள். 

சிங்கள அரசு எப்போதே அறிவித்து விட்டது  நாட்டுக்கு வரலாமென சிலர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் சில குடும்பம் நிரந்தரமாக இருக்கிறார்கள் சிலர் வெெளியேறுகிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

17 hours ago, குமாரசாமி said:

சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

On ‎26‎-‎01‎-‎2021 at 21:10, குமாரசாமி said:

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

இங்கே பாங்குகளில் நிறைய காசு போட்டு வைத்து இருப்பீர்கள் . அதைக் கொண்டு போய் வட்டிக்கு கொடுத்து விட்டு உட்கார்ந்து  சாப்பிடுறது அல்லது காசை கொண்டு ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்யிறது ...உங்களுக்கா உழைக்கிறது  கஸ்டம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

இங்கே பாங்குகளில் நிறைய காசு போட்டு வைத்து இருப்பீர்கள் . அதைக் கொண்டு போய் வட்டிக்கு கொடுத்து விட்டு உட்கார்ந்து  சாப்பிடுறது அல்லது காசை கொண்டு ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்யிறது ...உங்களுக்கா உழைக்கிறது  கஸ்டம் 
 
மிகத்தப்பான

உண்மைநிலை  புரியாத

தாயக மக்களுக்கு பிழையான திசையை பரிந்துரைக்கும்  கருத்து??

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 02:40, குமாரசாமி said:

சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

இலங்கை அரசாங்கத்தினால் அள்ளிக்கொடுக்க முடியாது ஐரோப்பிய நாடுகள் போல் ஆனால் சமுர்த்தி திட்டம் கோழிகள் , ஆடுகள் , மாடுகள் கொடுக்க இருக்கிறார்கள் , காணி தேவையானவர்கள் அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள் ஆனால் அரசு கொடுக்கும் இடத்தில் போய் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் தமிழருக்கு அனைத்து வசதிகளும் தேவைப்படும் ஆனால் சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

எதற்கும் முந்தி கிராம சேவகரிடம் விசாரித்துப்பாருங்கள் காணி நிலம் கொடுப்பத பற்றி இங்கே கால் இல்லாத முன்னாள் போராளிகள் சைக்கிள் கடை வைத்து பிழைப்பு நடத்துகிரார்கள்  சுய தொழில் செய்ய முடியாதவர்கள் ஐரோப்பாவிலே இருப்பது நல்லது என நான் நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

இந்த கருத்தில் எனக்கு நீண்ட நாளைய சந்தேகம் உண்டு தனி நீங்கள்  ஊரில் இருப்பதால் கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீங்க என்று நினைக்கிறன் . இப்படி எங்கும் தழைக்கும்  சிங்களவனால் மலையகத்தில் தோட்டம்களில் நின்று பிடிக்க முடியவில்லையே ? என்ன காரணம் ? சொறிலங்காவின் பொருளாதார முக்கியம் வாய்ந்த பணப்பயிர் நமது உறவுகள்தானே முட்டுக்கொடுக்கிறார்கள் பெரும்பான்மை பெரும்பான்மை என்று சொல்பவர்களால்  முடியாது உள்ளதே? இன்றும் அந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை செய்ய முடியாமல் இந்த சிங்கள அரசு ஏமத்துகிறதே ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நேற்றய நாளில் இருந்து 1000  ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது ஐயா மிகவும் மகிழ்ச்சி கூட 

வெறி சிம்பிள் இதைக்கூட யோசிக்க நம்மளால் முடியல அடிமைத்தமிழர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் அடிமைகள் கேள்வி கேட்காது சிங்களவர்கள் கேள்வி கேட்பார்கள் பிரச்சினை எழும் அதனால் சிங்களவர்களை வைத்துக்கொள்வதில்லை  ஆனால் கம்பெனிகளை சிங்களவர்கள் நடாத்துகிறார்கள் தமிழர்களை வைத்து , ஆனால் சிங்களவர்கள் மரக்கறி தோட்டங்களை நடாத்துகிறார்கள் அங்கே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை அரசாங்கத்தினால் அள்ளிக்கொடுக்க முடியாது ஐரோப்பிய நாடுகள் போல் ஆனால் சமுர்த்தி திட்டம் கோழிகள் , ஆடுகள் , மாடுகள் கொடுக்க இருக்கிறார்கள் , காணி தேவையானவர்கள் அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள் ஆனால் அரசு கொடுக்கும் இடத்தில் போய் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் தமிழருக்கு அனைத்து வசதிகளும் தேவைப்படும் ஆனால் சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

எதற்கும் முந்தி கிராம சேவகரிடம் விசாரித்துப்பாருங்கள் காணி நிலம் கொடுப்பத பற்றி இங்கே கால் இல்லாத முன்னாள் போராளிகள் சைக்கிள் கடை வைத்து பிழைப்பு நடத்துகிரார்கள்  சுய தொழில் செய்ய முடியாதவர்கள் ஐரோப்பாவிலே இருப்பது நல்லது என நான் நினைக்கிறன் 

உங்கள் அண்மைக்கால கருத்துக்களையும்   மேற்கூறிய கருத்தையும் வைத்து  ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆங்காங்கே இருக்கும் அபிவிருத்தி பிரச்சனைகளை தவிர.....
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

உங்கள் அண்மைக்கால கருத்துக்களையும்   மேற்கூறிய கருத்தையும் வைத்து  ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆங்காங்கே இருக்கும் அபிவிருத்தி பிரச்சனைகளை தவிர.....
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.🙏🏽

சில இடங்களில் அபிவிருத்திகளையும் , தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தினால் அரசியல் பிரச்சினை வர வாய்ப்பில்லை  அரசியல் பிரச்சினை அரசியல் வாதிகளாலே மக்களின் கைகளில்  கொடுக்கப்பட்டு எரிய விடப்படுகிறது .

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎01‎-‎2021 at 15:38, விசுகு said:

மிகத்தப்பான

உண்மைநிலை  புரியாத

தாயக மக்களுக்கு பிழையான திசையை பரிந்துரைக்கும்  கருத்து??

நீங்கள் சொன்னது சரியண்ணா ...என்னை மாதிரி , குசா அண்ணன் மாதிரி அன்றாடம் வேலைக்குப் போனால் தான் சம்பளம் என்று இருப்பவர்களால் வங்கிகளில் பணத்தை போட்டு வைத்திருக்க முடியாது தான்.மறுபுறம் கடுமையான உழைப்பாளியான அண்ணன் சின்ன வீட்டோடு சேர்ந்த ஒரு தோடடத்தை வாங்கினால் நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.
சிலர் வயது போன காலத்தில் வெளிநாட்டில் வசதிகள் கூட என்று சொல்கிறார்கள்...எப்படியும் பிறந்த மண்ணை நேசிப்பவர்கள் கடைசி காலத்தில் ஊரோடு இருப்பது தான் சிறப்பு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சில இடங்களில் அபிவிருத்திகளையும் , தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தினால் அரசியல் பிரச்சினை வர வாய்ப்பில்லை  அரசியல் பிரச்சினை அரசியல் வாதிகளாலே மக்களின் கைகளில்  கொடுக்கப்பட்டு எரிய விடப்படுகிறது .

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனை என்றால் என்ன  பிரச்சனைகள் இருக்கின்றது? உங்களின் பல கருத்துக்களில் இலங்கையில் அரசியல் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.