Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆந்திராவில் `மூட நம்பிக்கையால்` மகள்களை கொலை செய்த பெற்றோர் - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி நகரில் தங்கள் மகள்களை கொலை செய்த குற்றத்தில் தொடர்புடையதாக பெற்றோரை கைது செய்துள்ளனர் போலீசார்.

ஞாயிறன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ர்
அலே
 

என்ன நடந்தது?

கொலையான பெண்களின் தந்தை புருஷோத்தமன் நாயுடு அரசு பெண்கள் கல்லூரியின் துனை முதல்வராக உள்ளார். அவரின் மனைவியும் கொலையுண்ட பெண்களின் தாயுமான பத்மஜா தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார்.

இவரது இருமகள்கள் தான் அலெக்யா மற்றும் சாய் திவ்யா. 27 வயதான அலெக்யா தன் முதுகலை நிர்வாக மேலாண்மைப் படிப்பை போபாலில் ஒரு பிரபல கல்லூரியில் படித்து முடித்துவிட்டார். 22 வயதான சாய் திவ்யா இளங்கலை நிர்வாக மேலாண்மையைப் படித்தவர். அதோடு ஏ ஆர் ரஹ்மானின் மும்பை இசைப் பள்ளியிலும் படித்திருக்கிறார்.

இவர்களது வீடு சித்தூர் மாவட்டத்தில் சிவநகர் பகுதியில் இருக்கிறது.

இவர்கள் ஞாயிறன்று பூஜை செய்து, இளைய மகளை சூலத்தாலும், மூத்த மகளை உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் தம்புள் சாதனத்தைப் பயன்படுத்தியும் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரிடம் புருஷோத்தமன் நாயுடு கூற அவர் வீட்டிற்கு வந்து பார்த்து பின் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது மதனப்பள்ளி டிஎஸ்பி இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வருகிறார்.

வீட்டில் விசாரணை

தனது மகள்களை புருஷோத்தமன் நாயுடுவும், பத்மஜாவும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் மனநலம் சற்று வித்தியாசமாக உள்ளதாக போலீசார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டிலேயே விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பெற்றோர் தங்களின் மீது அதிக அழுத்தம் தர வேண்டுடாம் என போலீசாரிடம் கோரியுள்ளனர். இதனால் பெற்றோர் விசாரணையில் ஒத்துழைக்க சில உறவினர்களை வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர் போலீசார். மேலும் மனநல மருத்துவரின் உதவியை நாட போவதாக மதனப்பள்ளி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

மேலும் அவர்களின் வீட்டில் சில வித்தியாசமான புகைப்படங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவரங்கள் தெரியவரும்

முதற்கட்ட விசாரணையில் "பெற்றோர் இருவருமே மூடநம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்தனர். பெண்களின் உடலை மேலும் ஒரு நாளுக்கு அதே இடத்தில் வைக்குமாறு அவர்கள் கூறினர். அவர்கள் நன்கு படித்தவர்களாக உள்ளனர். ஆரம்பக் கட்ட விசாரணையில் தம்பிளை கொண்டு அடித்து உள்ளனர் என்பது தெரிகிறது," என டிஎஸ்பி ரவி மனோகர் சாரி தெரிவித்துள்ளார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, உடலை அப்புறப்படுத்தி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த கொலை தொடர்பாக ஒரு வழக்கையும் பதிவு செய்திருக்கிறார்கள் காவல் துறையினர்.

இந்த வழக்கில் மற்றொரு முக்கிய ஆதாரமாக உயிரிழந்த சாய் திவ்யாவின் சமூக ஊடக பதிவை கருதிகின்றனர். அவர் சமூக ஊடகத்தில் "ஷிவா வந்துவிட்டார்..வேலை முடிந்தது" என பதிவிட்டுள்ளார்.

அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளும் கைப்பற்றப்பட்டு விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் `மூட நம்பிக்கையால்` மகள்களை கொலை செய்த பெற்றோர் - என்ன நடந்தது? - BBC News தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`ஒரு நாள் பொறுங்கள்... உயிர்த்தெழுந்து வருவார்கள்!’ - மூடநம்பிக்கையால் மகள்களைக் கொன்ற பெற்றோர்

`சில சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படியும் கேட்டனர். இரண்டு பெண்களின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெற்றோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்’ என்றனர் போலீஸார்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மதனப்பள்ளி சவநாகரில், புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியர் வசித்துவருகிறார்கள். இவர்கள் இருவருமே நன்கு படித்தவர்கள். புருஷோத்தம் பேராசிரியராகவும், பத்மஜா ஒரு கல்வி நிறுவனத்தின் தாளாளராகவும் பணியாற்றிவருகிறார்கள். இவர்களுக்கு அலேக்யா (27) , சாய் திவ்யா (22) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். முதல் மகள் அலேக்யா இந்திய வன மேலாண்மை நிறுவனத்திலும், பட்டதாரியான இரண்டாவது மகள் சாய் திவ்யா ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியிலும் படித்துவருகிறார்கள்.

புருஷோத்தம் நாயுடு - பத்மஜா
 
புருஷோத்தம் நாயுடு - பத்மஜா

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மகள்களும் வீட்டுலேயே இருந்துவந்திருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடுகொண்டவர்கள். இவர்கள் கடந்த சில மாதங்களாக தங்கள் வீட்டில் அற்புதங்கள் நிகழவிருப்பதாக சில பூஜைகள் செய்துவந்திருக்கிறார்கள். இந்தநிலையில், நேற்று இரவு தங்கள் இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். அப்போது அலறல் சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி, ``இருவருமே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சில விசேஷ பூஜைகளால் ஏதோ அற்புதங்கள் நடந்துவிடும் என்ற எண்ணத்தில், தங்களின் இரண்டு மகள்களையும் அடித்து கொலை செய்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

மகள்கள்
 
மகள்கள்

தொடர்ந்து பேசிய அவர் ``அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள். மேலும், எங்களை திங்கள் கிழமை (இன்று) வந்து பாருங்கள்... எங்கள் மகள்கள் உயிரோடு இருப்பார்கள் என்று கூறினர். அதற்காகச் சில சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படியும் கேட்டனர். இரண்டு பெண்களின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், பெற்றோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்' என்று கூறினார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`ஒரு நாள் பொறுங்கள்... உயிர்த்தெழுந்து வருவார்கள்!’ - மூடநம்பிக்கையால் மகள்களைக் கொன்ற பெற்றோர் | In Andhra Pradesh, Parents killed two girls Childs (vikatan.com)

  • கருத்துக்கள உறவுகள்

படித்த முட்டாள்கள் ...படி ,படி என்று சப்பி படித்து ஒரு டிகிரியை எடுக்கிறது....படிப்பை தவிர மூளையில் ஒரு மண்ணும் இல்லை ...இங்கே யாழிலும் சில பேர் இருக்கினம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

படித்த முட்டாள்கள்

மிகச் சரி.
அதற்கான காரணத்தை விளக்கமாக சொல்லியுள்ளீர்கள்.

13 minutes ago, ரதி said:

படி ,படி என்று சப்பி படித்து ஒரு டிகிரியை எடுக்கிறது....படிப்பை தவிர மூளையில் ஒரு மண்ணும் இல்லை

👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

படித்த முட்டாள்கள் ...படி ,படி என்று சப்பி படித்து ஒரு டிகிரியை எடுக்கிறது....படிப்பை தவிர மூளையில் ஒரு மண்ணும் இல்லை ...இங்கே யாழிலும் சில பேர் இருக்கினம் 
 

அக்கோய், நாங்களும் மொக்குத்தனமா யோசிக்க கூடாது....

போலீஸ், தாய் தந்தையர் உண்மையில் மனநிலை பாதிப்போ என்று சந்தேகிக்கின்றனர்.

நான் நினைக்கிறேன், இது ஒரு ஆணவ கொலை.... பொறுத்திருந்து பார்ப்போம்.
இரண்டு பேரும்  (அல்லது ஒருவர் காதலுக்கு, அடுத்தவர் ஆதரவு), எங்கேயோ, அவர்களுக்கு குறைவான அல்லது தலித் என்று இந்தியாவில் சொல்லப்படும் சாதிய சமூகத்தில் காதலித்து, கலியாணம் செய்ய தயாராகி வீட்டில் சொல்லி இருப்பார்.

பெரிய பூகம்பம் வெடித்திருக்கும்.... தண்டனை குறைக்க, கொலை நரபலி ஆகி  இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

படித்த முட்டாள்கள் ...படி ,படி என்று சப்பி படித்து ஒரு டிகிரியை எடுக்கிறது....படிப்பை தவிர மூளையில் ஒரு மண்ணும் இல்லை ...இங்கே யாழிலும் சில பேர் இருக்கினம் 
 

இரண்டு மூண்டு பெயரை இழுத்து விடுறது....? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இரண்டு மூண்டு பெயரை இழுத்து விடுறது....? :cool:

என்ன... தெரியாத மாதிரி கேட்கிறியள்..... நம்மாளு... அவர்... தான்.... லிஸ்டில முதல் ஆள்.... அவருக்கே தெரியும்... :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

என்ன... தெரியாத மாதிரி கேட்கிறியள்..... நம்மாளு... அவர்... தான்.... லிஸ்டில முதல் ஆள்.... அவருக்கே தெரியும்... :grin: 

தொப்பியத் தூக்கி எறியிறது. ஆராவது தூக்கித் தலையில போடுவாங்கள் எண்டு நினைக்கிறது. கேட்டா அளவெண்டா போடு எண்டுவினம்..

😂😂

அம்மணிக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் ""யாழ்"" எண்டாலே வேப்பங்காய்தானே

 

😜😜

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

படித்த முட்டாள்கள் ...படி ,படி என்று சப்பி படித்து ஒரு டிகிரியை எடுக்கிறது....படிப்பை தவிர மூளையில் ஒரு மண்ணும் இல்லை ...இங்கே யாழிலும் சில பேர் இருக்கினம் 
 

கிருபன் அவர்கள் தன்னிடம் பெரிதாக ஒரு டிகிரியும் இல்லை என்று சொல்லியும் 
இவா தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறா. 

  • கருத்துக்கள உறவுகள்

சில விடையங்களை முட நம்பிக்கைகள் என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை இந்த தளத்தில் அப்படியிருக்கையில் இப்படியான செய்திகளுக்கு மட்டும் எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீங்கள்......மதம் என்ற ஒன்றால் மதம் பிடித்து செய்யப்பட்ட செயலாக இருக்கலாம்..அல்லது இருவரும் அதாவது பெற்றோர் மன நிலை பாதிக்கபட்டவர்களாக இருக்கலாம்..
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

சில விடையங்களை முட நம்பிக்கைகள் என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை இந்த தளத்தில் அப்படியிருக்கையில் இப்படியான செய்திகளுக்கு மட்டும் எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீங்கள்......மதம் என்ற ஒன்றால் மதம் பிடித்து செய்யப்பட்ட செயலாக இருக்கலாம்..அல்லது இருவரும் அதாவது பெற்றோர் மன நிலை பாதிக்கபட்டவர்களாக இருக்கலாம்..
 

இதுக்கும் மூட நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு?

இது ஒரு செய்தி..... கொலையாளிகள்.... சொல்லும் பொய்யே நரபலி.... அதனை நம்புவது தான் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் இல்லை.. என் உடலில் இருந்து வந்ததுதான் கொரோனா.. மார்ச் மாதம் இருக்காது.. பத்மஜா பகீர் தகவல் !

_116662311_94269c1e-f8ce-4998-b703-b0ca7

சித்தூர்: கொரோனா பரவியதற்கு காரணம் சீனா இல்லை, நான் தான் பரப்பினேன் என்றும் நான் மனித உருவில் உள்ள கொரோனா என்றும் சித்தூரில் நரபலி கொடுத்த பத்மஜா தெரிவித்துள்ளார்.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும் பத்மஜா தனியார் கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

அவர்களின் மூத்த மகள் அலெக்கியா (27) மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரையும் உடற்பயிற்சி செய்யும் கருவியால் தலையில் அடித்து பெற்றோரே கொன்றுள்ளனர்.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் விசாரணை நடத்திய போது அவர்களை பார்த்து பத்மஜா கூச்சலிட்டுள்ளார். பின்னர் நான்தான் சிவன். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை.

எனது உடல் பாகத்திலிருந்து வந்தது. நான் மனித உருவில் இருக்கும் கொரோனா. வரும் மார்ச் மாதம் கொரோனா போய்விடும். தடுப்பூசியெல்லாம் போட்டுக்காதீங்க என கூறிய பத்மஜாவை சமாதானப்படுத்த புருஷோத்தமன் முயன்ற போது என்னை தொடாதே நீ இப்போது என் கணவர் இல்லை. நான்தான் சிவன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் எங்கள் மகள்களின் உடலில் தீயசக்தி சென்றுவிட்டது. அதை கொல்வதற்காகத்தான் இப்படி செய்தோம். தீயசக்தி இருந்ததால்தான் அவர்கள் உடனே இறக்காமல் பல மணி நேரமாக இழுத்துக் கொண்டு கிடந்தார்கள் என்றார்.

அப்போது புருஷோத்தமன் கூறுகையில் நான் ஒன்றும் முட்டாள் இல்லை, பிஎச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செய்தோம் என சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/india/chithoor-padmaja-says-that-she-spreads-coronavirus-to-the-world-410274.html

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

கிருபன் அவர்கள் தன்னிடம் பெரிதாக ஒரு டிகிரியும் இல்லை என்று சொல்லியும் 
இவா தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறா. 

கலரியில் இருந்து படம் பார்ப்பவர்கள் பல்கனியில் இருந்து படம் பார்ப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது வழமைதானே😂

என்னிடம் பிஹெச்டி இல்லை என்று எத்தனை தடவை  சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறார்கள்😉. பிஹெச்டி இல்லாமல் எப்படி மேட்டுக்குடிச் சிந்தனை வந்தது என்று கேள்விகேட்டுத் துளைக்கின்றார்கள்😁

அது சரி. இந்தத் திரியில் என்ன செய்தி??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

மதம் என்ற ஒன்றால் மதம் பிடித்து செய்யப்பட்ட செயலாக இருக்கலாம்..

💯

இந்தியாவில் இருக்கும் மூடநம்பிக்கைகளினால் நடந்த கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

அப்போது புருஷோத்தமன் கூறுகையில் நான் ஒன்றும் முட்டாள் இல்லை, பிஎச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செய்தோம் என சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/india/chithoor-padmaja-says-that-she-spreads-coronavirus-to-the-world-410274.html

நோட் திஸ் பொயின்ட்  ஆனர்😑  தனக்கு படிப்பிருக்கு  , ,மூளையிருக்கு  என்று சொல்லும் இவர்கள் தான் இப்படியொரு பாதகத்தை செய்திருக்கிறார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.