Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் கட்சி: சீமானின் தம்பிகள் தொடர்ச்சியாக திராவிடக் கட்சிகளில் சேருவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: சீமானின் தம்பிகள் தொடர்ச்சியாக திராவிடக் கட்சிகளில் சேருவது ஏன்?

சீமான் - ராஜீவ் காந்தி - கல்யாண சுந்தரம்

சீமான் - ராஜீவ் காந்தி - கல்யாண சுந்தரம்

கொள்கைரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் கடுமையாக தி.மு.க., அ.தி.மு.க-வை விமர்சித்துவந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், தற்போது அந்தக் கட்சிகளிலேயே தங்களை இணைத்துக்கொள்வது ஏன்?

``தி.மு.க., அ.தி.மு.க எனும் இருபெரும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்துவிட்டன. அவர்களுக்கு உண்மையான மாற்று நாங்கள்தான் (நாம் தமிழர்). திராவிடத்தால்தான் தமிழினம் வீழ்ந்தது'' என மேடைகளில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப்போலவே பேசிவந்த அவருடைய தம்பிகள், தொடர்ச்சியாக தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க போன்ற திராவிடக் கட்சிகளில் சேர்ந்துவருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது,

நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலாகவே, பல்வேறு நிர்வாகிகள் பல்வேறு காலகட்டங்களில், அந்தக் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். அவர்கள், `மறுமலர்ச்சி நாம் தமிழர்' உள்ளிட்ட பல பெயர்களில் பல்வேறு புதிய இயக்கங்களையும் தொடங்கியிருக்கின்றனர். அவ்வளவு ஏன்... `உண்மையான நாம் தமிழர் கட்சி நாங்கள்தான்... சீமானைக் கட்சியிலிருந்து நீக்குகிறோம்' என அந்தக் கட்சியின் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த பத்திரிகையாளர் அய்யநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் காரைக்குடியில் பொதுக்கூட்டமே நடத்தினர்.

கல்யாணசுந்தரம்
 
கல்யாணசுந்தரம்

அதைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட வியனரசு போன்ற மாநிலப் பொறுப்பு வகித்த நிர்வாகிகளும் வெளியே சென்று பல புதிய இயக்கங்களைத் தொடங்கி நடத்திவருகின்றனர். ஆனால், அந்தக் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்களாகப் பதவிவகித்த, ராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம் இருவரும் அந்தக் கட்சியிலிருந்து விலகியது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. தமிழக அரசியல் களத்தில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்ட விஷயமாகவும் இருந்தது. அதற்குக் காரணம் அவர்கள் இருவருமே, பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியிலும், அவர்கள் தனிப்பட்ட முறையில் நடந்துகொண்ட விதத்தின் காரணமாக மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர்.

இந்தநிலையில், ராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். கல்யாணசுந்தரம் கடந்த சில நாள்களுக்கு முன்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அ.தி.மு.க-வை மிகக் கடுமையாக மேடைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் விமர்சித்துவந்த அவர் அ.தி.மு.க-வில் இணைந்தது மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்தநிலையில், மற்றொருவரான ராஜீவ் காந்தி நேற்று முன்தினம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். `ஈழ இனப்படுகொலைகளுக்குக் காரணமான காங்கிரஸ், அதற்குத் துணைபோனது தி.மு.க' எனப் பேசி ராஜீவ் காந்தி, தி.மு.க-விலேயே இணைந்தது மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் தமிழ்த் தேசியவாதிகளாலும், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களாலும் விமர்சிக்கப்பட்டது.

தி.மு.க-வில் இணைந்த ராஜீவ் காந்தி
 
தி.மு.க-வில் இணைந்த ராஜீவ் காந்தி

நாம் தமிழர் கட்சித் தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக, அந்தக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த பல மாநில நிர்வாகிகள், கல்யாணசுந்தரம் அ.தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அ.தி.மு.க-விலும் அ.ம.மு.க-விலும் தங்களை இணைத்துக்கொண்டதைக் காண முடிந்தது. ஆனால், இதுவரை நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-வில் யாரும் தங்களை இணைத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அந்தக் கணக்கைத் தொடங்கிவைத்திருக்கிறார் ராஜீவ் காந்தி.

கொள்கைரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் கடுமையாக தி.மு.க., அ.தி.மு.க-வை விமர்சித்துவந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், தற்போது அந்தக் கட்சிகளிலேயே தங்களை இணைத்துக்கொள்வது ஏன்?

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்புவகித்து, பிறகு சீமான் மீதான அதிருப்தியின் காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகி, `வள்ளுவப் பண்பாட்டு நடுவம்' எனும் தனி அமைப்பை நடத்திவரும் முனைவர் அருளினியனிடம் பேசினோம்...

 

``தமிழ்த் தேசியக் கொள்கையின் மீதான முரணால் இதுவரை நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க., தி.மு.க போன்ற கட்சிகளில் யாரும் இணையவில்லை. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கும் சீமானும் இருக்கும் முரண்பாடுகளின் காரணமாகவே தங்களை திராவிடக் கட்சிகளில் இணைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்கள், வேண்டப்பட்டவர்களின் தூண்டுதல் காரணமாக தி.மு.க-வையோ, அ.தி.மு.க-வையோ, அ.ம.மு.க-வையோ தங்களின் வசதிக்கேற்ப தேர்வு செய்துகொள்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் காரணம் சீமான் மட்டுமே. அவரின் வாயால் எங்களுக்கு என்னென்ன விஷயங்களைக் கற்பித்தாரோ, அதை அவரே கடைப்பிடிக்கவில்லை, நிறைவேற்றவில்லை. மக்கள் திரள் போராட்டங்கள் எதையும் அவர் முன்னின்று நடத்தவில்லை. கட்சி நிர்வாகிகளுக்கு எந்த வேலைத் திட்டத்தையும் அவர் பிரித்துக் கொடுக்கவில்லை. அதுவே பல பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்தது.

அருளினியன்
 
அருளினியன்

அடுத்ததாக, ஒற்றைத் தலைமையை நோக்கி கட்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற சீமானின் நோக்கமே கட்சியிலிருந்து பலர் வெளியேறக் காரணம். தங்களை நோக்கிக் கேள்வி எழுப்புபவர்கள் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதைத்தான் சீமானும் விரும்புகிறார். அதற்கேற்ப சக கட்சியினரைவைத்தே, நெருக்கடி கொடுத்து கட்சியைவிட்டு வெளியேற்றுகிறார். கட்சி சிதைகிறதே என்கிற கவலை அவருக்கு அறவே இல்லை. கட்சியில் இனிமேல் ஆளுமைகள் யாரும் சேர மாட்டார்களே என்கிற அக்கறையும் அவருக்குக் கிடையாது. தமிழ்த்தேசிய கருத்தியல் சார்ந்து நின்ற இளைஞர்கள் பலர், அதற்கு நேரெதிரான கொள்கையான திராவிடக் கட்சிகளை நோக்கிப் போவதை ஓர் அபாயமாக சீமான் பார்க்கவில்லை. தவிர அதைக் கேலி செய்துகொண்டிருக்கிறார். விபரீதத்தை உணராமல் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காக யார் தீவிரமாக வேலை செய்கிறார்களோ, அவர்கள்தான் கட்சியைவிட்டு முதலில் தூக்கி வீசப்படுவார்கள். வேலை செய்யும்போது ஏதாவது சிறு தவறு நடந்துவிட்டால் போதும், அதைக் காரணம்காட்டியே கட்சியைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள். நாம் தமிழர் கட்சியில் யாராவது நீடிக்க வேண்டுமென்றால் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் போதும். அப்படி சீமானின் இந்த சர்வாதிகார செயல்பாடுகளைச் சகித்துக்கொண்டவர்கள் மட்டுமே இன்னும் அந்தக் கட்சியில் இருக்கின்றனர். சகித்துக்கொள்ள முடியாதவர்கள் கட்சியைவிட்டு வெளியேறிவிடுகின்றனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட, 234 பேரில் பலர் இன்று அந்தக் கட்சியிலேயே இல்லை. அப்படி, தமிழ்த் தேசியக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை மீண்டும் திராவிடக் கட்சிகளை நோக்கிச் செல்ல வைத்ததுதான் இந்தப் பத்தாண்டுகளில் சீமான் செய்த உட்சபட்ச சாதனையாக இருக்கிறது.

சீமானுடன் அருளினியன்
 
சீமானுடன் அருளினியன்

மற்ற யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு சீமானுக்குக் கிடைத்தது. ஈழப்போரின்போது வீசிய புயலை சீமான் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், கல்யாண சுந்தரத்துக்கோ, ராஜீவ் காந்திக்கோ தற்போது அந்த வாய்ப்பு இல்லை. அதனால்தான் தனியாக அமைப்பு நடத்தமுடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதன் காரணமாக மற்ற கட்சிகளை நோக்கிப் போகிறார்கள். அதேவேளையில், சீமானின் இது போன்ற செயல்பாடுகளால், தமிழ்த் தேசியத் தத்துவத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இந்தத் தேர்தல் அந்தக் கட்சி அடையப்போகும் தோல்வி; சீமான் என்கிற தனிமனிதனின் தோல்விதானே தவிர தத்துவத்தின் தோல்வியல்ல. தேர்தலுக்குப் பிறகு, சீமானின் கைகளிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல் வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களுக்குக் கைமாறும். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது''என்கிறார் அவர்.

 

தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியைப் போன்ற தமிழ்த் தேசிய அமைப்பான பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமாரனிடம் பேசினோம்.

``தமிழ்த் தேசியக் கருத்தியல் குறித்த மேம்போக்கான புரிதலால்தான் அந்தக் கொள்கையிலிருந்து விலகி, திராவிடக் கட்சிகளில் அந்தக் கட்சி இளைஞர்கள் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக, தோழர் சீமானின் சர்வாதிகாரமான போக்கு. தான் உருவாக்கியதைத் தானே அழித்துவிட வேண்டும் என்கிற மனப்பான்மையில் அவர் செயல்பட்டுவருகிறார். கட்சியில் எந்தவிதமான ஜனநாயகமும் இல்லை. மற்றவர்களின் கருத்துகளை உள்வாங்கி வெளிப்படைத்தன்மையோடு அவர் செயல்பட்டிருந்தால் யாரும் அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்க மாட்டார்கள். சீமானின் தனிப்பட்ட குணநலன்கள் மீதான கோபம்தான், அந்தக் கட்சியில் இருந்த இளைஞர்களை நேரெதிர் முகாம்களில் சென்று சரணடையச் செய்திருக்கிறது.

சுப.உதயகுமாரன்
 
சுப.உதயகுமாரன்

நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் சீமான், முதலில் தன் தனிப்பட்ட ஆளுமையிலும் கட்சியிலும் அதைக் கொண்டு வர வேண்டும். சொந்தக் கட்சித் தொண்டர்களிடம் மட்டுமல்ல, சக தோழமை இயக்கங்கள்கூடவும் அவர் அனுசரித்துப் போவதில்லை. அதை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கே தன்னை மீறி மற்றவர்கள், மற்ற இயக்கங்கள் வளர்ந்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார். சர்வாதிகாரத் தன்மைகொண்ட தலைவர்கள் எப்போதும் இன் செக்யூராகத்தான் இருப்பார்கள். சீமானும் அதே நிலையில்தான் இருக்கிறார்'' என்றவரிடம், சீமானிடமிருந்து விலகி வருபவர்கள், ஏன் மற்ற தமிழ்த் தேசிய இயக்கங்களில் சேராமல், பிரதான கட்சிகளில் சேருகிறார்கள் என்று கேட்க,

``மற்ற அமைப்புகளைப் பற்றி நான் சொல்ல முடியாது. ஆனால், எங்கள் அமைப்பான பச்சைத் தமிழகம் சரியாக களப்பணியாற்றுவதில்லை. அதனால் யாரும் சேரவில்லை என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மற்றவர்களின் இயக்கங்களில் யாரும் சேராமல் போகக் காரணம், அந்த இயக்கங்களின் தலைவர்கள் யாரும் சினிமாவில் நடிக்கவில்லை. திரைத்துறையிலிருந்து வரவில்லை. 2009-ல் ஏற்பட்ட இன எழுச்சியின்போது நியாயமாக எல்லோரும் ஈழ விவகாரத்தில் நீண்ட நெடிய அனுபவமுள்ள நெடுமாறன் ஐயாவின் பின்னால்தான் போயிருக்க வேண்டும். ஆனால், போகவில்லை. அதேவேளையில், சீமானின் பின் சென்றார்கள். காரணம், சினிமாத்துறையிலிருந்து வந்ததாலும் அவரிடம் சினிமாத்தனங்கள் இருந்ததாலும்தான்'' என்கிறார் அவர்.

இடும்பாவனம் கார்த்திக்
 
இடும்பாவனம் கார்த்திக்

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம்.

``நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், வெளியேறியவர்கள் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக்கொள்ள, கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். கட்சியில் இருக்கும்போது யாரும் அப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததே இல்லை. கூட்டுத் தலைமை இல்லை என எப்படிக் குற்றம் சாட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை. கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர்களாக ஒருவர் மட்டுமல்ல... ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் போன்ற பத்து பேர் இருந்தார்கள். அவர்கள் பதவியில் இருந்தபோது கட்சிக்காக என்ன பணியாற்றினார்கள் என்று தெரியவில்லை. கட்சியிலிருந்து தங்களை வளர்த்துக்கொண்டு, வெளியில் வந்த பிறகு கட்சியில் அரசியல்படுத்தப்பட்டவர்களே இல்லை என்கிறார்கள். எனில், இவர்கள் பத்தாண்டுக்காலம் பொறுப்பாளர்களாக இருந்தபோது என்ன வேலை செய்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.

 

எங்கள் கட்சியில் நூறு சதவிகிதம் உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது. எங்கள் கட்சியில் அனைவரிடமும் கலந்து பேசித்தான் முடிவெடுக்கப்படுகிறது. அதைச் செயல்படுத்துபவராக அண்ணன் சீமான் ஒருவர் இருக்கிறார். தமிழகத்தில், எங்கள் கட்சியில் மட்டும்தான் பணம் பிரதானம் இல்லாமல், சமூகநீதி அடிப்படையில் மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம், வேட்பாளர் தேர்வு எல்லாம் நடக்கிறது. ஆனால், ஒரு கட்சியில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. கட்சி, கொள்கை சார்ந்து பயணிக்கிறதா என்று மட்டுமே அவர்கள் பார்க்க வேண்டும். எங்கள் கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள், வெளியேறி மாற்று அமைப்புகளை உருவாக்காமல், எங்கள் கட்சியை விமர்சிப்பதையே முழு நேரப் பணியாகச் செய்துவருகின்றனர். எங்கள் அண்ணன் எங்களைத் தொண்டர்கள் அல்ல, புரட்சியாளர்கள் என்றுதான் சொல்கிறார். ஆனால், வெளியில் உள்ளவர்கள்தான் எங்கள் கட்சியை சர்வாதிகார, யதேச்சதிகாரமான கட்சியாக கட்டமைக்க முயல்கின்றனர். கட்சி நிர்வாகிகளுக்கு எந்தச் செயல்திட்டமும் பிரித்துக் கொடுப்பதில்லை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. காரணம், 'செயற்களம்' என்கிற செயலி தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் கட்சியின் அனைத்துச் செயல்பாடுகளையும் கண்காணித்துவருகிறோம். அதன் மூலம்தான் வேட்பாளர் தேர்வையும் நடத்திவருகிறோம்.

சீமான் - ராஜீவ் காந்தி - கல்யாணசுந்தரம்
 
சீமான் - ராஜீவ் காந்தி - கல்யாணசுந்தரம்

அதனால், எங்கள் மீதான அவதூறுகளை, அலட்சியப் புன்னகையோடு கடந்த செல்ல விரும்புகிறோம். கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்களை மட்டும்தான் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அவர்கள், தங்களை வளப்படுத்திக்கொள்ளவே, தாங்கள் பின்பற்றிவந்த கொள்கைகளுக்கு துரோகம் இழைத்து மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகின்றனர். அதனால், எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்போ, பின்னடைவோ இல்லை. திரைத்துறையைச் சார்ந்தவர் அதனால்தான் இளைஞர்கள் பின்னால் அணிவகுத்தார்கள் என்றால், தங்கர்பச்சான் ஆரம்பித்த இயக்கத்தில் ஏன் யாரும் இணையவில்லை. அதனால், அந்த வாதங்கள் சரியல்ல. தமிழ்த் தேசியக் கருத்தியலை வெகு மக்களிடம் கொண்டு சென்றதில் சீமான் அண்ணனின் பங்கு முதன்மையானது.

கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது வகுப்பட்ட கொள்கைகள் வழியாக சரியாக இன்றளவும் சரியாகப் பயணித்துவருகிறோம். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில், `தேசிய, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என்று அறிவித்தோம். இன்றளவும் அதைக் கடைப்பிடித்து வருகிறோம். எங்கள் கட்சியும் வளர்ந்துவருகிறது. மக்கள்நலனை முன்னிறுத்தி எங்களை ஆதரித்து, எங்களை நம்பி வருகின்ற பிற இயக்கங்களையும் அனுசரித்தே நடந்துகொள்கிறோம் அதுதான் உண்மை'' என்கிறார் அவர்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/nam-tamilar-party-why-seemans-party-cadres-continue-to-join-dravidian-parties

 

Edited by நிழலி
புதிய திரி

  • நிழலி changed the title to நாம் தமிழர் கட்சி: சீமானின் தம்பிகள் தொடர்ச்சியாக திராவிடக் கட்சிகளில் சேருவது ஏன்?
  • கருத்துக்கள உறவுகள்

கோசான் சொன்னது போல நடக்குதோ? (தமிழ்தேசியத்தை காயடித்தல்) பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கோசான் சொன்னது போல நடக்குதோ? (தமிழ்தேசியத்தை காயடித்தல்) பொறுத்திருந்து பார்ப்போம்.

திமுகவிலை இருந்து இரண்டு முக்கியமான ஆக்கள் பிஜேபி போனார்கள். ஒருத்தர் சிட்டிங் mla.

அதிமுகவில் இருந்தும், அமமுமு இருந்து மூன்று முக்கியமான ஆட்கள் திமுக போனார்கள்.

உதுகள், விகடனுக்கு தெரியாதோ? உதயகுமார், திமுகவால் வாங்கப்பட்டு விட்டார் என்பது பழைய செய்தி.  

விகடனையும், திமுக பினாமி வாங்கிவிட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2021 at 12:48, உடையார் said:

தான் உருவாக்கியதைத் தானே அழித்துவிட வேண்டும் என்கிற மனப்பான்மையில் அவர் செயல்பட்டுவருகிறார்.

ம். எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/1/2021 at 13:48, உடையார் said:

தி.மு.க-வில் இணைந்த ராஜீவ் காந்தி

 

தி.மு.க-வில் இணைந்த ராஜீவ் காந்தி

முள்ளிவாய்க்கால் அழிவு காரணகர்த்தாக்களில் திமுகவும் ஒன்று. அதில் கூட்டு சேர்கின்றார் என்றால் அவரின் ஆரம்ப உள்நோக்கமே வேறாக இருந்திருக்கலாம்.எதிர்பார்த்தது நாம் தமிழர் இயக்கத்தில் அது நிறைவேறவில்லை.ஆகையால் ஊழலுக்கு உலக புகழ்பெற்ற கட்சியில் இணைந்து விட்டார். 
பணம் பந்தாக்களுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இணையத்தில் குறிப்பா நாம்தமிழரும் திமுக வினரும் கருத்து மோதல் மற்றும் சேறடித்தலில் ஈடுபடுகின்றார்கள்.
திமுக வில் சேர்ந்த பின்னர் ராஜீவ்காந்தியின் பேட்டிகள் நாம்தமிழர் கட்சியை இழிவுபடுத்துவதாக இருக்கின்றது. ஆனால் அதற்கான பதில்களை அவர் நாம்தமிழரில் இருக்கும் போது பேசிய பேச்சுகள் மூலம் அளிக்கின்றனர்.
 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கிராம சபை கூட்டம்.

ஸ்டாலின்: திருமலை என்னும் பெண் மனு தந்துள்ளார். எங்கம்மா இருக்கிறீங்க?

ஒரு ஆண் எழுந்து நின்று அய்யா என்கிறார்.

ஆ சொல்லுங்கம்மா என்ன வேணும்.

நான் ஆம்பிளைங்க. என் பேருதான் திருமலை.

ஆ... சரி... சரி... சொல்லுங்க.... என்ன வேணும்.

அய்யா எனக்கு ஒரு கறவை மாடு வேணும்....

கேட்டுச்சு... கேட்டுச்சு... உக்காருங்க....

அவரு.... காணாமல் போன தன் மனைவியை கண்டு பிடித்து தருமாறு கேட்க்கிறார்.... ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க.... வந்துடுவாங்க... 🤦‍♂️

விளங்கீடும்...

அண்ணாவின் பேத்தி..... தாத்தா, ஒரு போதும் டீ, காப்பி சாப்பிட்டதே இல்லை. ஒன்லி புகையிலை தான் வாயில் இருக்கும், அதனாலேயே வாயில் நோய் வந்து மாண்டுபோனார் என்று சொல்ல, என்ன சொல்வதென்று தெரியாமல் நிக்கிறார், பொய்யர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த முறை தேர்தலில் எந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கட்டுக்காசை மீட்கின்றார் என்று பார்ப்போம்😁😁😁

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

 இந்த முறை தேர்தலில் எந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கட்டுக்காசை மீட்கின்றார் என்று பார்ப்போம்😁😁😁

ஸ்டாலின் வாங்குவாரோ எண்டெல்லோ சந்தேகப்படுகினம். 😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ஸ்டாலின் வாங்குவாரோ எண்டெல்லோ சந்தேகப்படுகினம். 😁😁😁

அவர் வாங்காமல் படுதோல்வி அடையும்போது யாழ் களத்தில் வெடிகொளுத்தத்தான் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

அவர் வாங்காமல் படுதோல்வி அடையும்போது யாழ் களத்தில் வெடிகொளுத்தத்தான் இருக்கு!

அந்தாளிண்ட அலம்பரைகளை பார்க்கும் போது, தேப்பன், இவரிடம் பொறுப்பு, கடைசி வரை கொடுக்காமல் இருந்ததன் காரணம் தெரிகிறது.

இன்னோரு கிராமசபை மீட்டிங். அவர் பெண்களை பார்த்து, முக்கனிகளில் ஒன்றின் பெயரை சொல்லி, சொன்னதை இங்கே எழுத முடியாது. 

தேப்பனுக்கு பிள்ளை, தப்பாமல் பிறந்திருக்குது என்றுதான் சொல்லலாம்.

இவரிடம் தமிழகம் மாட்டினால், தாங்காது. 

வெல்லக்கூடிய திமுக, இவரால், இவரது அண்ணன் சொன்னது போல தோக்காவிடில், இவராவது தோக்கக்கூடும் என்றே படுகிறது.

சீமான் ஆதரவாக சொல்லவில்லை. உண்மையில் அவருக்கு தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

பெருமழை பெய்து, வரட்சி வந்து மக்கள் தவித்த போது என்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அவனவனுக்கு அவன் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அவனவனுக்கு அவன் பிரச்சனை.

அவனவனுக்கு எவன் பிரச்சனையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

அந்தாளிண்ட அலம்பரைகளை பார்க்கும் போது, தேப்பன், இவரிடம் பொறுப்பு, கடைசி வரை கொடுக்காமல் இருந்ததன் காரணம் தெரிகிறது.

கொடுமையை ஆரிட்ட சொல்ல....? நீங்களே கேட்டுப்பாருங்கோ....😁

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

கொடுமையை ஆரிட்ட சொல்ல....? நீங்களே கேட்டுப்பாருங்கோ....😁

 

இதுக்குத்தான், கிருபன் உள்ளிட்ட உங்கினை சில, பலர் இவரை ஆதரிக்கினமோ? 😰

அடச்சீ....

தகப்பன், இந்திரா காந்திக்கு, கல் எறிய ஏற்பாடு பண்ணி விட்டு, கல்லால் தாக்கப்பட்டு, ரத்தம் காயம் வந்த உண்டான அவருக்கு சொன்னது, மிக, மிக மோசமானது.

அதுபோல ஜெயலலிதாவுக்கு, ஒரு பைல் நாடா குறித்து சிலேடையாக சொன்னதும், மோசமானது.

இவர்கள் பெண்களை, பெண்களாகவே மதிப்பதில்லை.

இவர் என்றாலும் பழைய ஆள் என்று சொல்லலாம். இவர் மகன் உதயநிதியோ, தமிழிச்சி தங்கப்பாண்டியனை, நல்ல அழகா இருக்கிறா, வாக்களியுங்கள் என்றார். 🤦‍♂️

  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Nathamuni said:

இதுக்குத்தான், கிருபன் உள்ளிட்ட உங்கினை சில, பலர் இவரை ஆதரிக்கினமோ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இதுக்குத்தான், கிருபன் உள்ளிட்ட உங்கினை சில, பலர் இவரை ஆதரிக்கினமோ? 😰

 

சீன்மானின் வெறுப்பு அரசியலை விரும்பாவிட்டால் திராவிட செம்பாகத்தான் இருக்கவேண்டும் என்று எளிய IF கொண்டிசன் போடும் உங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு. 

அரசியலை பரம்பரையாக செய்பவர்கள் மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்திருப்பார்கள் என்பது சந்தேகமே. நான் ஸ்டாலின் பேச்சை இதுவரை கேட்டதும் இல்லை; இனியும் கேட்கும் நோக்கமுமில்லை. 😉

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

சீன்மானின் வெறுப்பு அரசியலை விரும்பாவிட்டால் திராவிட செம்பாகத்தான் இருக்கவேண்டும் என்று எளிய IF கொண்டிசன் போடும் உங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு. 

அரசியலை பரம்பரையாக செய்பவர்கள் மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்திருப்பார்கள் என்பது சந்தேகமே. நான் ஸ்டாலின் பேச்சை இதுவரை கேட்டதும் இல்லை; இனியும் கேட்கும் நோக்கமுமில்லை. 😉

ஹா... ஹா... நீங்கள் திமுக அனுதாபி இல்லை. இப்ப சீமான் சொம்பு என்று தெரியும்.

உங்கட புத்திமதிகளை கேட்டு, ஸ்டாலின் பக்கம் பார்வையை திருப்பி விட்டோம்.

அப்பப்ப தடுமாறினாலும், தலை அசராது.... வெட்டி ஆடும்.

இனிமேல் தலைக்கு தான் நம்ம ஆதரவு.   😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

ஹா... ஹா... நீங்கள் திமுக அனுதாபி இல்லை. இப்ப சீமான் சொம்பு என்று தெரியும்.

உங்கட புத்திமதிகளை கேட்டு, ஸ்டாலின் பக்கம் பார்வையை திருப்பி விட்டோம்.

அப்பப்ப தடுமாறினாலும், தலை அசராது.... வெட்டி ஆடும்.

இனிமேல் தலைக்கு தான் நம்ம ஆதரவு.   😁

சீமான் முதல்லை வேல் தூக்கி காட்ட...... இப்ப ராத்திக்கா சரத்குமார் வரைக்கும் வந்து நிக்கிது....😁

தமிழ் தாத்தா | திராவிடநாத்திகம்

Bild

Bild

வேலனுக்கு எங்கும் அரோகரா மயம். :cool:

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

சீமான் முதல்லை வேல் தூக்கி காட்ட...... இப்ப ராத்திக்கா சரத்குமார்

வேட்டியைத் தூக்கிக் காட்ட என்று வாசித்து ராத்திக்கா வெலவெலத்துப் போனா என்று விதிர்விதிர்த்துவிட்டேன்😊

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, கிருபன் said:

வேட்டியைத் தூக்கிக் காட்ட என்று வாசித்து ராத்திக்கா வெலவெலத்துப் போனா என்று விதிர்விதிர்த்துவிட்டேன்😊

சார்!  நீங்க வேற லெவல்.......🤠
இப்ப நீங்க ரமில்நாட்ல இருந்தீங்க எண்டா இந்த எழுத்துக்கு நெறய பேரும் புகழும் கெடைக்கும்...🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.