Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை நிர்வாக சேவை (SLAS) பரீட்சையில் தமிழ் பேசும் எவருமே தேர்வாகவில்லை; திட்டமிட்ட புறக்கணிப்பென விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அதியுயர்ந்த சேவையாகக் கருதப்படும் (SLAS) இலங்கை நிர்வாக சேவையின்(SLAS) மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தப் பட்டியலின் படி தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் எவரும் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

SLAS.jpg
இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையானது திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இரு பிரிவுகளில் நடைபெறுகின்ற நிலையில் கடந்த வருடம்( 2020ஆம் ஆண்டு) தைமாதம் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.

203 திறந்த மற்றும் 53 மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிடங்ளுக்காக பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியலை இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

53 பேரை தெரிவு செய்வதற்காக நேர்முகத் தேர்வுக்குத் தெரிவாகியுள்ள 69 பேருடைய பெயர், விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் பேசும் மாணவர்கள் எவரும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியலில் உள்ளடக்கப்டவில்லை என்பது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரீட்சாத்திகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை 2017இல் நடைபெற்ற மட்டுப்படுத்தப்ட்ட பரீட்சையில் 47 பேர் தெரிவாகியிருந்த நிலையில் 17 பேர் தமிழ் பேசும் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி சித்தியடைந்ததுடன் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் சிவராஜா ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருந்தனர். ஆனால் இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறு களின் படி தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் எவரும் தெரிவாகவில்லை என்பது கவலையளிப்பதுடன் இதுதொடர்பில் பலத்த கேள்வியை அனைவரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை 43 பேரில் 17 தமிழ் மாணவர்கள் சித்தியடைந்ததுடன் முதல் இரண்டு இடங்களையும் தமிழர்களே பெற்றிருந்தார்கள். இம்முறை தமிழ் பேசும் மாணவர்கள் எவருமே தெரிவாகாமல் போனமைக்கான காரணம் என்னவென பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

நிர்வாக சேவை திறந்த பரீட்சையிலும் கூட கடந்த முறை முதலிடத்தை தமிழ் மாணவர் ஒருவரே பெற்றிருந்ததுடன் கணக்காளர் சேவை பரீட்சைப் பெறுபேறுகளில் அதிகளவு தமிழ் மாணவர்கள் சித்தியடைந்ததாகக் குறிப்பிட்டு பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டு மீளப் பரீட்சை நடத்தப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த தமிழ் பேசும் ஒருவர் மட்டுமே இப்பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.

இலங்கை நிர்வாக சேவை திறந்த பரீட்சை மற்றும் கணக்காளர் சேவை பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியிருப்பதனால், மேலும் வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகளிலும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவிடுமோ என தமிழ்பேசும் பரீட்சார்த்திகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் இவ்வாறான திட்டமிட்ட புறக்கணிப்பு தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் உயரிய பதவிகளிலும் தமிழ் பேசும் கல்வி சமூகம் உருவாக வாய்ப்பே இல்லை. இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என கல்விமான்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Thinakkural.lk

எது இல்லாவிடினும் கல்வி மட்டுமே போதும் முன்னேற என நினைக்கின்றது தாயக தமிழ் பேசும் இளைய சமூகம். ஆனால் அதற்கும் கூட சிங்கள இனவாத அரசு வாய்ப்பளிக்க விரும்பவில்லை.
 
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததாக தெரித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட 69 பேரில் தமிழ் மொழி பேசும் ஒருவர் கூட இல்லை.
கடந்த முறை இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் முதல் இரண்டு இடங்களையும் பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவர்கள். அதே போல் நிர்வாக சேவையில் திறந்த பரீட்சையிலும் முதல் இடம் பெற்றவர் தமிழ் மாணவரே. ஆனால் இம் முறை ஒருவர் கூட இல்லை என்பது திட்டமிட்ட சதியே ஆகும்.
 
இலங்கை நிர்வாக சேவையில் எந்த ஒரு தமிழ் பேசும் இனத்தவரும் வந்துவிடக் கூடாது என்று இனவாத அரசு திட்டம் போட்டு செயலாற்றுகின்றது.
 
அதாவது எந்த உயர் பதவியும் தமிழ் பேசும் இனத்தவர்களுக்கு இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள பணக்கார முஸ்லீம்கள் தம் இனப் பிள்ளைகளது கல்விக்காய் எவ்வளவு எல்லாம் செலவு செய்கிறார்கள் ...அவர்களே அதிக  காசு கொடுத்து  வாத்திமாரை ஒழுங்கு செய்து  படிப்பிக்கின்றார்கள் ...போய் படிப்பிக்கும்  வாத்திமாருக்கு வாகனம் கூட தங்கள் செலவில் அரேஞ் பண்ணி கொடுக்கிறார்கள் .[ போய் படிப்பிக்கின்ற வாத்தியாரின் தமிழரும் அடக்கம்.]...தமிழர்கள் தங்கள் இனப்  பிள்ளைகளுக்கு படிப்பிக்க கூட விருப்பமில்லை ...தன்னை விட முன்னுக்கு வந்து விடுவார்கள் என்ற பயம் .
அது கட்ட ,இது கட்ட என்று அனுப்பும் காசை இப்படி பிள்ளைகளை படிப்பிப்பதற்கு செலவழிப்பதற்கு  ஒருத்தரும் முன் வர மாட்டார்கள் .
தவிர தற்போது அங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்து கொண்டு போகின்றது.
இந்த பரீட்சையில் முஸ்லீம்கள் சித்தியடைந்து இருக்கிறார்கள் ....நாங்கள் ஒழுங்காய் தயார் படுத்தாமல் அடுத்தவரை குறை சொல்வதில் வேலையில்லை 

41 minutes ago, ரதி said:

இலங்கையில் உள்ள பணக்கார முஸ்லீம்கள் தம் இனப் பிள்ளைகளது கல்விக்காய் எவ்வளவு எல்லாம் செலவு செய்கிறார்கள் ...அவர்களே அதிக  காசு கொடுத்து  வாத்திமாரை ஒழுங்கு செய்து  படிப்பிக்கின்றார்கள் ...போய் படிப்பிக்கும்  வாத்திமாருக்கு வாகனம் கூட தங்கள் செலவில் அரேஞ் பண்ணி கொடுக்கிறார்கள் .[ போய் படிப்பிக்கின்ற வாத்தியாரின் தமிழரும் அடக்கம்.]...தமிழர்கள் தங்கள் இனப்  பிள்ளைகளுக்கு படிப்பிக்க கூட விருப்பமில்லை ...தன்னை விட முன்னுக்கு வந்து விடுவார்கள் என்ற பயம் .
அது கட்ட ,இது கட்ட என்று அனுப்பும் காசை இப்படி பிள்ளைகளை படிப்பிப்பதற்கு செலவழிப்பதற்கு  ஒருத்தரும் முன் வர மாட்டார்கள் .
தவிர தற்போது அங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்து கொண்டு போகின்றது.
இந்த பரீட்சையில் முஸ்லீம்கள் சித்தியடைந்து இருக்கிறார்கள் ....நாங்கள் ஒழுங்காய் தயார் படுத்தாமல் அடுத்தவரை குறை சொல்வதில் வேலையில்லை 

செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. தமிழ் பேசும் இனத்தவர் எவரும் சித்தியடைந்தவர்ளாக அறிவிக்கப்படவில்லை என. பின்னர் எவ்வாறு முஸ்லிம்கள் சித்தியடந்ததாக குறிப்பிடுகின்றீர்கள் ரதி?

அத்துடன் கடந்த முறை நடந்த மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு தமிழர்கள் தான் முதல் இரண்டு இடங்களையும் பெற்று சித்தியடைந்துள்ளனர். அதே போன்று திறந்த பரீட்சையில் கூட முதலிடம் வந்தது தமிழர் ஒருவர் தான். ஆனால் தமிழர்கள் படிப்பதில் அக்கறை காட்டினம் இல்லை, முஸ்லிம்கள் தான் அக்கறை காட்டுகின்றனர் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்?

செய்தியை சரியாக மீண்டும் வாசித்துப் பாருங்கள். சிங்கள அரசின் இனவாதச் செயலே தவிர தமிழர்களதோ முஸ்லிம்களதோ தவறு அல்ல இது.
 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. தமிழ் பேசும் இனத்தவர் எவரும் சித்தியடைந்தவர்ளாக அறிவிக்கப்படவில்லை என. பின்னர் எவ்வாறு முஸ்லிம்கள் சித்தியடந்ததாக குறிப்பிடுகின்றீர்கள் ரதி?

அத்துடன் கடந்த முறை நடந்த மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு தமிழர்கள் தான் முதல் இரண்டு இடங்களையும் பெற்று சித்தியடைந்துள்ளனர். அதே போன்று திறந்த பரீட்சையில் கூட முதலிடம் வந்தது தமிழர் ஒருவர் தான். ஆனால் தமிழர்கள் படிப்பதில் அக்கறை காட்டினம் இல்லை, முஸ்லிம்கள் தான் அக்கறை காட்டுகின்றனர் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்?

செய்தியை சரியாக மீண்டும் வாசித்துப் பாருங்கள். சிங்கள அரசின் இனவாதச் செயலே தவிர தமிழர்களதோ முஸ்லிம்களதோ தவறு அல்ல இது.
 

ஓ ...மன்னிக்கவும் ,,,நான் எங்கேயோ வாசித்த நினைவு இந்த பரீட்சையில் முஸ்லீம்கள் சித்தியடைந்து இருக்கிறார்கள் என  

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்னவென்றால்; திட்டமிட்டு தமிழர் எல்லாவகையிலும் ஓரங்கட்டப்படுகிறார்கள், மெதுவாக, ஒவ்வொன்றாக, பலாத்தகாரமாக அவர்களது உரிமைகள் அவர்கள் கையிலிருந்து  பறிக்கப்பட்டுவருகிறது, இந்த இனம் இல்லாதொழிக்கப்படுகிறது. அதை திசைமாற்றி, நிஞாயப் படுத்தும் வேலைகளும், அதற்கு தமிழரே பொறுப்பு எனும் காரணங்களும் நம்மாளுகளாலேயே கற்பிக்கப்படுகிறது என்பது வேதனையான விடயம். குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தால் மகா குற்றம் என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்களும், ஏளனம் செய்பவர்களும் நிறையவே பெருகிவிட்டனர் நம்மத்தியில். 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாக சேவைப் பரீட்சையில் தமிழர்கள் நிராகரிப்பு - அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்

SayanolipavanFebruary 11, 2021
 

charless.jpg

இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்களாகவே உள்ளனர்.

இதில் ஒரு தமிழர்கூட இல்லை. எனவே இதுவும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலைதான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சின் மாணிக்கக்கல் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 47 பேரில் 17 பேர் தமிழ் பேசுவோர் இருந்தனர்.

அதிலும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றவர்களாக தமிழர்களே இருந்தனர். தற்போதைய அரசின் ஆட்சியில் நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்கள். ஒரு தமிழர்கூட இதில் இல்லை என்பதனை தமிழர்களினால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள மமுடியும்?

2020 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சை (எஸ்.எல்.ஏ.எஸ்) நடத்தப்பட்டது. இப்பரீட்சையின் முடிவு ஒரு வருட தாமதத்தின் பின்னர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தபரீட்சையில் 69 பேர் சித்தி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தெரிவாகியுள்ளனர் .இவர்கள் 69 பேரும் சிங்களவர்கள்.ஒரு தமிழ் பேசுபவர் கூட சித்திபெறவில்லை.

இது திட்டமிட்ட இன அழிப்பாகவே நாம் கருதுகிறோம். கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தி பெற்று விட்டார்கள் என்பதற்காக அந்தபரீட்சையையே நிறுத்திய நாட்டிலும் ஆட்சியிலும்தான் தமிழர்களாகிய நாம் வாழ்கின்றோம் என்றார்.

 

http://www.battinews.com/2021/02/blog-post_291.html

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தி பெற்று விட்டார்கள் என்பதற்காக அந்தபரீட்சையையே நிறுத்திய நாட்டிலும் ஆட்சியிலும்தான் தமிழர்களாகிய நாம் வாழ்கின்றோம் என்றார்.

தமிழர் என்ன செய்துவிடப்போகிறார்கள்? புலம்பி விட்டு அடங்கி விடுவார்கள். நாம் செய்வதை செய்வோம் எனும் மமதை. நாம் கொண்டுபோக வேண்டிய இடங்களுக்கு இந்தத் செய்தியை பரப்ப வேண்டும். இனக் கலவரங்கள், சொத்தழிப்புகள் நடந்த போது நம்மளுக்கேயே புலம்பி விட்டு அடங்கினோம். அவர்கள் கச்சிதமாய் பயங்கரவாதம் எனத் திசை திருப்பி சர்வதேசத்தை கூட்டி பகிரங்கமாய் அழித்தான் நம் இனத்தை. முடிவு இன்னும் பூண்டோடு திட்டமிட்டு நம் பிரச்சனைகளை திசை திருப்பி வெவ்வேறு வழிகளில் சாதித்துக்கொண்டே இருக்கிறான். சர்வதேசம் இதை தடுத்து விடப்போகிறது, நிஞாயம் பெற்றுத்தரும் என்றெல்லாம் இல்லை. ஆனால் இங்கு தமிழருக்கு என்ன நடந்தது, நடக்கிறது என்பதை சர்வதேசத்துக்கு தெரிவிப்பதில் தவறொன்றும் இல்லை, எப்படி  திட்டமிட்டு இனவழிப்பு நடக்கிறது என அவர்களும் தெரிந்து கொள்ளட்டும். பிறகு இன அழிப்புக்கு சாட்சிகளில்லை, ஆதாரம் இல்லை என்றொரு சொல் வரக்கூடாது  இல்லையோ?

இது ஒரு அப்படடமான இனவாத செயட்பாடு என்று எல்லோருக்கும் விளங்கும். அதாவது நிர்வாகத்துறை , சடடதுறையைத்தான் அவர்கள் முன்னுரிமைப்படுத்தி பெரும்பான்மையினருக்கு கொடுப்பார்கள். இப்போது சிங்கப்பூர் , மலேசியாவில் எல்லாம் தமிழர்கள் சடடதுரியில் மிகவும் குறைவு. வெளி நாட்டில் படித்துவிட்டு வந்தாலும் அங்கு சடடதுறையில் பிரவேசிப்பது இலகுவான காரியம் இல்லை. முன்னைய அரசு தமிழர்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லையாயினும் இப்படியான மிக மோசமான இனவாத அரசாக இருக்கவில்லை. வேறு வழி இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கல்வியில் முன்னுக்கு வர கூடாது என்று அதிலும் அரசாங்கம் கை வைத்து விட்டது(SLAS) - செ.கஜேந்திரன் எம்.பி தெரிவிப்பு
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.