Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீருடைதான் பிரச்சினை என்றால் அத்தைமாற்றி சேவையைத் தொடரலாமே.........!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

சீருடைதான் பிரச்சினை என்றால் அத்தைமாற்றி சேவையைத் தொடரலாமே.........!   🤔

அண்ணே,

கறுப்பு / சாம்பல் = கரும்புலி

பச்சை = வரிப்புலி

இள நீலம் = வான் புலி

வெள்ளை / நீலம் = கடற் புலி

சிவப்பு / மஞ்சள் = புலியின் எழுச்சி கொடி

மீதம் இருப்பது

நாவல் , ஒரேஞ் & றோஸ்

இதுல எது வசதி?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம் இந்த பொலிஸ்காரரை சிங்கள இனவாதிகள் காணேல்லை.

399c1a571cbff9dba7b1922ace96ed90.jpg

Eine Frau gab sich als Polizistin aus und soll an echten Einsätzen teilgenommen haben.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/4/2021 at 17:19, zuma said:

எதிர் பார்த்ததை விட மணிவண்ணன் நன்றாக செய்கின்றார். இருக்கின்ற சட்டங்களையும், வளங்களையும் வைத்து சிறப்பாக செயற்படவேண்டும்  

 சிறிலங்காவில் தமிழன் சுயமாக சிந்தித்து குப்பை அள்ளக்கூட முடியாத நாடாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலத்தில் புதிய தலைவர்கள் மணிவண்ணனும்  சாணக்கியனும்தான் மணிவண்ணனை தனது வாத திறமையால் விடுதலையாக்கிய எங்கள்  சட்ட தரணி  சுமத்திரனும்தான் வடகிழக்கின் தமிழருக்கு இருக்கும் ஒளிவீசும் நட்ச்சத்திரங்கள் .😁

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 16:19, zuma said:

எதிர் பார்த்ததை விட மணிவண்ணன் நன்றாக செய்கின்றார். இருக்கின்ற சட்டங்களையும், வளங்களையும் வைத்து சிறப்பாக செயற்படவேண்டும்  

என்ன நன்றாய்  செய்கிறார் ?

எச்சில் துப்புவருக்கும் சலம் போகிறவருக்கும் தண்டனை வாங்கி கொடுத்து தண்ட  பணம் அற விடுவதா ?

இல்லை நகரெங்கும் குப்பை வண்டி நிறுவி சலம் போவதும் மலசல கூடம் கட்டி அதன் பின் மக்கள் கேட்கவில்லை என்றால் இப்படியான தண்டனை முறை கொண்டு வந்தால் பரவாயில்லை .

அதைவிட்டு ஏற்கனவே கொழும்பில் உள்ள நகர சுத்த கண்காணிப்பவர் உள்ள நீல உடுப்பில் இருந்து தமிழ் ஈழ பாதுகாப்பு அதிகாரிகளின் நீல  உடுப்பை தெரிவு செய்து போடவேண்டிய தேவை என்ன ?

புரிந்துகொள்ளுங்கள் வரிப்புலி உடுப்பு போட்டவன் எல்லாம் புலியாகி விட முடியாது அதே போல் தமிழ் ஈழ  காவல்படையும் அவர்கள் மற்றும் அனைத்து புலி  படையணிகளும்   தமிழ் மக்களுக்காக தமது வாழ்வையே ஆகுதியாக்கியவர்கள் அப்படி போனவர்களின் தியாகத்தையும் கஸ்ட்டத்தையும் இழந்த  இரத்தத்தத்தையும்  வியர்வையையும் உங்களின் அரசியலுக்கு உபயோகப்படுத்துவதே மகா பெரிய தவறு தகடுடன் குப்பி கட்டி போராடி விலகியவர்கள் கூட இப்படியொரு கேவலமான அரசியலை சிந்திப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

இனி வரும் காலத்தில் புதிய தலைவர்கள் மணிவண்ணனும்  சாணக்கியனும்தான் மணிவண்ணனை தனது வாத திறமையால் விடுதலையாக்கிய எங்கள்  சட்ட தரணி  சுமத்திரனும்தான் வடகிழக்கின் தமிழருக்கு இருக்கும் ஒளிவீசும் நட்ச்சத்திரங்கள் .😁

அப்ப நம்ம டக்கிளஸ் ஜீ.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

அப்ப நம்ம டக்கிளஸ் ஜீ.....🤣

அவர்தானே தன்னை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் .😄

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அவர்தானே தன்னை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் .😄

அது சரி ஜனாதிபதி சட்டத்தரனி நீதிபதியை விட அதிக அதிகாரம் கொண்டவரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

அது சரி ஜனாதிபதி சட்டத்தரனி நீதிபதியை விட அதிக அதிகாரம் கொண்டவரா?

நானும் முதலில் பிழையாக விளங்கி கொண்டேன் நம்ம பரியரியார்தான் அது ஒரு கவுரவபதவி என்று விளங்கப்படுத்தினார் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

அது சரி ஜனாதிபதி சட்டத்தரனி நீதிபதியை விட அதிக அதிகாரம் கொண்டவரா?

ஏன் அப்பிடி கேக்கிறியள்? முந்தி சாந்தா அபிமன்யு என்றொரு பெண் சடடத் தரணி இந்தப்பொறுப்பு வகித்தவ. ஆனால் அவ அப்படி ஒன்றும் அதிகாரம் தலைக்கேறி ஆடியதாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஏன் அப்பிடி கேக்கிறியள்? முந்தி சாந்தா அபிமன்யு என்றொரு பெண் சடடத் தரணி இந்தப்பொறுப்பு வகித்தவ. ஆனால் அவ அப்படி ஒன்றும் அதிகாரம் தலைக்கேறி ஆடியதாக தெரியவில்லை. 

அது மாத்திரமா உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியில் இருந்து ஆளை தூக்கியபின்னரும் அந்த பதவி தனக்கு இருப்பது போலஇன்னமும் சதுராடுறார் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அது மாத்திரமா உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியில் இருந்து ஆளை தூக்கியபின்னரும் அந்த பதவி தனக்கு இருப்பது போலஇன்னமும் சதுராடுறார் .

ஆனாலும்.. இந்தக் கைதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமே கண்டித்தும் இருக்கிறார்.. ஒரு நாடாளுமன்ற உரையையும் நிகழ்த்தி இருக்கிறார்.

இந்தக் கைதின் நோக்கம்.. நந்தசேன மாநகர அதிகாரங்கள் கூட தமிழருக்கு போகக் கூடாது என்ற இனவாத சித்தாந்தத்தை விரிவுபடுத்துத்தான். 

இதில் வேடிக்கை என்னவென்றால்.. தமிழர்கள் மாகாண சபையூடாக வழங்கப்பட்ட பொலிஸ்.. காணி அதிகாரங்களைக் கேட்க.. நந்தசேன.. தமிழர்கள்.. ஒரு பொதுச் சுகாதார கண்காணிப்பு காவல்படை அமைப்பதையே எதிர்க்கிறார்.. ஆனால்.. கொழும்பில் அதை அமைக்கலாம். 

மணிவண்ணன் என்ன நோக்கத்திற்காக இந்த காவல்படையை அமைச்சாரோ தெரியாது.. ஆனால்.. எம்மவர்களின் பொதுச் சுகாதார பழக்க வழக்கங்களின் மட்டம் உயர்வடைய வேண்டும் என்பதில்.. மாற்றுக்கருத்தில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

எம்மவர்களின் பொதுச் சுகாதார பழக்க வழக்கங்களின் மட்டம் உயர்வடைய வேண்டும் என்பதில்.. மாற்றுக்கருத்தில்லை. 

ஆம் அதில் எவருக்கும் மாற்று கருத்து கிடையாது ஆனால் பொதுக்கழிப்பறை கட்டுவத்துக்கு  நிதி இல்லை என்று இதே மணிவண்ணன் அழுகிறார் அதற்கு குணாவின் ஆக்கத்தில் நிமிடம் 9.30லிருந்து பாருங்கள் அருமையான தீர்வும் சொல்கிறார் குணா .

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

அது மாத்திரமா உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியில் இருந்து ஆளை தூக்கியபின்னரும் அந்த பதவி தனக்கு இருப்பது போலஇன்னமும் சதுராடுறார் .

ஒரு தடவை பதவியிலிருந்து சலுகைகளை அனுபவித்துப் பாருங்கள், அது உங்களை அந்தக் கதிரையோடு கட்டிபோட்டுவிடும். பதவி பறிபோனாலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், மற்றவர் கடமையை செய்யவும் விட மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

ஆம் அதில் எவருக்கும் மாற்று கருத்து கிடையாது ஆனால் பொதுக்கழிப்பறை கட்டுவத்துக்கு  நிதி இல்லை என்று இதே மணிவண்ணன் அழுகிறார் அதற்கு குணாவின் ஆக்கத்தில் நிமிடம் 9.30லிருந்து பாருங்கள் அருமையான தீர்வும் சொல்கிறார் குணா .

அதையும் பார்த்தேன். ஆனால் அது தீர்வல்ல. கடைக்காரனை எல்லாம் கழிப்பறை கட்டிக்கொடு கோரலாம். ஆனால் அதை பொதுவெளிக்கு திறந்துவிடு என்று கட்டாயப்படுத்த முடியாது. பராமரிப்புச் செலவை குணாவா கொடுப்பார். 

யாழ் மாநகர எல்லை குடிமனைகளை ஒட்டியே இருக்குது. எனவே தொழிலிடங்களில்.. வர்த்தக நிலையங்களில்.. வீடுகளில்.. விடுதிகளில்.. கழிப்பறைகள் சரியாக அமைக்கப்பட்டு.. பராமரிக்கப்பட்டு.. மக்களிடம் கழிப்பறையில் தான் கழிவகற்றனும் என்ற பழக்கத்தை ஊக்குவிக்க மணிவண்ணனின் இந்த நடவடிக்கை நிச்சயம் ஊக்கியா அமையும்.

அதே காணொளொயின் கீழ் எனது கருத்தையும் பகிர்விட்டிருக்கிறேன் பாருங்கள்.

நியூகம் கவுன்சிலும்.. பிரன்ட் கவுன்சிலும்.. தெற்காசியர்களின் உந்த வெற்றிலை துப்பலை தடுக்க படுறபாடு.. குறிப்பாக வெம்பிலி பக்கம் போனால் பாருங்கள். குறிப்பாக வெம்பிலி சென்ரல் ஸ்ரேசனை சுற்றி. இங்கையே திருந்தாததுகள்.. ஊரில..

அந்த வகையில்.. குணா குந்தி இருந்து அளக்கலாம்.. ஆனால்.. சாதிக்க முடியாது. மணி சாதிக்க முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

மணி சாதிக்க முடியும். 

சுமத்திரனின் ஆளுகைக்குள் இருக்கும் மணிவண்ணன் சுயமாக முடிவெடுக்கும் நிலையில் இருக்கின்றார் என நம்புகிறீர்களா ?

12 minutes ago, nedukkalapoovan said:

நியூகம் கவுன்சிலும்.. பிரன்ட் கவுன்சிலும்.. தெற்காசியர்களின் உந்த வெற்றிலை துப்பலை தடுக்க படுறபாடு.. குறிப்பாக வெம்பிலி பக்கம் போனால் பாருங்கள். குறிப்பாக வெம்பிலி சென்ரல் ஸ்ரேசனை சுற்றி. இங்கையே திருந்தாததுகள்.. ஊரில..

நியூகம் கவுன்சிலும்.. பிரன்ட் கவுன்சிலும் வெம்பிளியிலும் உள்ள பாண் சொப் எனப்படும்   இந்த தனியே வெற்றிலை கடைகள் ஊர் பெட்டிக்கடை போல் 20 லிருந்து 30 கடைக்குள் தான் இருக்கும் அதிலும் கோட் வேர்டில் சொன்னால் போதை பாக்குகள் வைத்த பீடாக்கள் கிடைக்கும்   அவற்றை தடைபண்ணினால் 70 வீதமான துப்பல் குறையும் அந்த கடைகளால் பல பாதிப்புக்கள் மக்கள் எதிர்கொள்கிறார்கள் வாய் கான்சர் போன்றவை ஆனால் அவற்றில் நிரந்தர வாடிக்கையாளர் வட இந்தியர்களே நம்மவரை காண்பது அரிது .சிலவேளை ஈஸ்ட் காம் பக்கம் பெரிதாக நான் கவனிக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

நானும் முதலில் பிழையாக விளங்கி கொண்டேன் நம்ம பரியரியார்தான் அது ஒரு கவுரவபதவி என்று விளங்கப்படுத்தினார் .

எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு ஒரு தமிழர் இருந்தவர்  நடேசன் Q C என்று .Queen Council ..பதிலாக இந்த ஜனாதிபதி சட்டத்தரனி ...இருக்குமோ ...சிலோன் என்ற பெயரை மாற்றி பிரித்தானியாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்வது போல இந்த QC  எடுத்துவிட்டார்கள் போலும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.