Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா உணவகம் அடித்து உடைப்பு - இது தான் விடியலா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உணவகம் அடித்து உடைப்பு

 

https://www.facebook.com/100001158942487/posts/3976418592406733/

 

  • கருத்துக்கள உறவுகள்

இனி இதெல்லாம் சாதாரண நிகழ்வுகள்தானே! ADMK டிஸ்கி: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!

  • கருத்துக்கள உறவுகள்

இது பதவி ஏற்க முன்னம், அதுக்கு பிறகு, ஸ்பெஷல் ப்ரோஜெக்ட்டுகள் தொடங்கும். காத்திருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

அம்மா உணவகம் அடித்து உடைப்பு

 

https://www.facebook.com/100001158942487/posts/3976418592406733/

 

ஒரு, உணவகத்தை அடித்து நொருக்கும் அளவிற்கு.... 

தி.மு.க.வினருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா.... 😡

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ உடனடியாக ஸ்டாலின் அந்த இருவரையும் கட்சியை வீட்டு நீக்கி, உடைந்த பெயர் பலகையையும் சரி செய்ய சொல்லி விட்டதாக சொல்லப்படுகிறது.

ரொம்ப நல்ல ஆட்சி என்று கதறுகிறார்கள் உபிகள்.

அவங்களே உடைக்க சொல்லி அவங்களே விரைவு நடவடிக்கையும் எடுத்திருங்காய்ங்க.

உலகமகா நடிப்புடா சாமி.

அம்மா உணவகம் சூறை.. திமுகவினர் மீது கடும் நடவடிக்கை.. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

Velmurugan PUpdated: Tue, May 4, 2021, 14:32 [IST]

சென்னை: சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்து அம்மா உணவக பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா படம்

உடைக்கப்பட்ட பலகை

சென்னை சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவினர் சிலர் சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து, உணவகத்தை சூறையாடி, அங்கிருந்தவர்களை மிரட்டி ஜெயலலிதா படத்தை கீழே போட்டு உடைத்தனர்

வைரலான வீடியா

அதிமுகவினர் போராட்டம்

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் அதிமுகவினர் கொதித்து போயினர். உடனடியாக அங்கு குவிந்த அதிமுகவினர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டனம்

பெய பலகை

அத்துடன் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பேனரை அதே இடத்தில் ஒட்டினர். அம்மா உணவகத்தின் பெயர் பலகை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுகவினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின் உத்தரவு

நடவடிக்கை எடுக்க உத்தரவு

இது தொடர்பாக திமுக எம்எம்ல்ஏ மா சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சமூக வலைத்தளங்கள் இருப்பதினால் முந்தி மாதிரி, தற்குறிகளுக்கு ஆட்டம் போடமுடியாது.
 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

 

சமூக வலைத்தளங்கள் இருப்பதினால் முந்தி மாதிரி, தற்குறிகளுக்கு ஆட்டம் போடமுடியாது.
 

நல்ல நாடகம். கருணாநிதி மகன் அல்லவா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு, உணவகத்தை அடித்து நொருக்கும் அளவிற்கு.... 

தி.மு.க.வினருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா.... 😡

ஒரு மக்களுக்கு சாப்பாடு போடும் பாத்திரத்தை தட்டி விடும் இவர்கள் எப்படி மக்கள் சேவை செய்ய முடியும்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு, உணவகத்தை அடித்து நொருக்கும் அளவிற்கு.... 

தி.மு.க.வினருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா.... 😡

2 hours ago, விசுகு said:

ஒரு மக்களுக்கு சாப்பாடு போடும் பாத்திரத்தை தட்டி விடும் இவர்கள் எப்படி மக்கள் சேவை செய்ய முடியும்???

ஓசிச்சாப்பாட்டுக்காக கடைகளையே அடித்து நொருக்கிய செய்திகள் , வீடியோக்களை நீங்கள் பார்க்கவில்லையா? 7ம் திகதிக்கு பின்னர் இன்னும் உக்கிரமாக இருப்பர்.:cool:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஓசிச்சாப்பாட்டுக்காக கடைகளையே அடித்து நொருக்கிய செய்திகள் , வீடியோக்களை நீங்கள் பார்க்கவில்லையா? 7ம் திகதிக்கு பின்னர் இன்னும் உக்கிரமாக இருப்பர்.:cool:

 

நான் ஒன்றும் எழுத விரும்பவில்லை.

திமுகவுக்கு மாற்றுக்கருத்து வைப்பது மகா தவறாக கருதப்பட்டு தூக்கப்படுகிறது யாழ் களத்தில் 

அப்படியே திமுக பற்றி, அதன் தலைவர் பற்றி என்ன எழுதலாம் என்று யாழ் களத்தின் நிர்வாகம் ஒரு விளம்பரத்தை வைத்தால் அதை நான் இங்கே கொப்பி எடுத்து ஒட்டி விட வசதியாகவும் எனது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் இருக்கவும் முடியும். 😡

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 

 

 

மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்.

மகா நடிகன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழகன் said:

மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்.

மகா நடிகன்.

திமுகவின் எல்லா அஸ்திரங்களும் இம்முறை இணையவெளி தளம்கள்  சுக்கு நூறாக்கி  விடும் .

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உணவகத்தில் அராஜகம்: திமுகவுக்கு தொடங்கும் நெருக்கடி!

 

spacer.png
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வென்று வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இன்று (மே 4) அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை கூடி ஸ்டாலினை திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கிற நாளில்... சென்னையில் நடந்த சம்பவம் திமுகவுக்கு தர்ம சங்கடத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் பெயர்த்து கீழே தள்ளிவிடுவதும், அங்கே இருக்கும் ஜெயலலிதா புகைப்படத்தைக் கீழே தள்ளுவதாகவும் சமூக தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. திமுக என்றாலே லோக்கல் அராஜகம் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டிய நிலையில், திமுகவின் வெற்றிக்குப் பிறகு இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

 

இந்நிலையில்... மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தனது டுவிட்டரில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “அம்மா உணவக பெயர் பலகையை அகற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன், “அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்”என்று கூறியுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/05/04/48/amma-canteen-board-removed-dmk-arrest

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஓசிச்சாப்பாட்டுக்காக கடைகளையே அடித்து நொருக்கிய செய்திகள் , வீடியோக்களை நீங்கள் பார்க்கவில்லையா? 7ம் திகதிக்கு பின்னர் இன்னும் உக்கிரமாக இருப்பர்.:cool:

 

இனி ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு த‌மிழ‌க‌த்துக்கு இருண்ட‌ கால‌ம் தாத்தா

ப‌ல‌ கொலைக‌ள் கொள்ளைய‌ல் அராஜ‌க‌ம் ர‌வுடிஸ்ச‌ம் என்று எல்லாம் ந‌ட‌க்கும்...........திமுக்காவுக்கு எதிரா செய‌ல் ப‌டும் ஊட‌க‌ங்க‌ளுக்கு மிர‌ட்ட‌ல் தொட்டு ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும்..........

பேயின்ட‌ கையில் சாவிய‌ வாங்கி பிசாசின்ட‌ கையில் கொடுத்த‌ க‌த‌ 😠

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, பையன்26 said:

பேயின்ட‌ கையில் சாவிய‌ வாங்கி பிசாசின்ட‌ கையில் கொடுத்த‌ க‌த‌ 😠

பண மூட்டைகளுக்கு மத்தியில் எழுச்சி பெற்றதை சாதனை என்கிறார்கள். விடிவு என்கிறார்கள். தமிழக மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று விட்டார்கள் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

பண மூட்டைகளுக்கு மத்தியில் எழுச்சி பெற்றதை சாதனை என்கிறார்கள். விடிவு என்கிறார்கள். தமிழக மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று விட்டார்கள் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

ப‌ண‌ ப‌ந்தைய‌ம் மிஞ்சி போனால் இன்னும் 10ஆண்டுக‌ள் தான் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து வ‌ருகிறார்க‌ள்..........திருட‌ர்க‌ள் இல‌வ‌ச‌ம் ப‌ண‌த்தை காட்டி இன்னும் 10ஆண்டில் ஓட்டை பெற‌ முடியாது............


இந்த‌ காணொளிய‌ பாருங்கோ வைக்கோ என்ற‌ மான‌ஸ்த‌ன் எவ‌ள‌வு பொய் பித்த‌லாட்ட‌ம் செய்து அர‌சிய‌லில் ப‌ய‌ணித்து இருக்கிறார் என்று............இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ண்டிப்பாய் பார்க்க‌ வேண்டிய‌ காணொளி

மாவீர‌ர்க‌ளின் ஆன்மா கூட‌ வைக்கோவை ம‌ன்னிக்காது 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Tamilnadu back to normal !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.