Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த ஸ்ராலின்.? ரஷ்யா முழுவதும் ஒரே தேடலாம் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த ஸ்ராலின்.? ரஷ்யா முழுவதும் ஒரே தேடலாம் .!

MKStalin_PTI_8032021_1200-1%20(1).jpg

சென்னை: தேசிய தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார் என்று பார்த்தால் உலக தலைவராகவே உருவெடுத்துவிடுவார் போல தெரிகிறது.. யார் இந்த ஸ்டாலின் என்று ரஷ்ய தூதரக அதிகாரிகள் போனை போட்டு நம் பத்திரிகையாளர்களிடம் விசாரித்துள்ளனராம்.

"தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன்" என்று ஒரு முறை மறைந்த கருணாநிதி சொல்லி இருந்தார்.. அந்த அளவுக்கு கம்யூனிஸம் மீது பற்று வைத்திருந்தவர் கருணாநிதி.. ஸ்டாலின் பிறக்கும் முன், அவருக்கு அய்யாதுரை என்றுதான் பெயர் வைக்க ஆசைப்பட்டாராம் கருணாநிதி.

காரணம், திராவிட இயக்கத்தின் தலைவர் தந்த பெரியாரை, பெரும்பாலானோர் அய்யா என்றுதான் அழைப்பார்கள்.. அதேபோல, பெரியாருக்கு பிறகு அறிஞர் அண்ணா மீது பற்று கொண்டவர் கருணாநிதி.. எனவே இவர்கள் 2 பேரையும் சேர்த்து அய்யாத்துரை என்றே பெயர் வைக்க ஆசைப்பட்டார் கருணாநிதி.

இந்நிலையில், 1953-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மறைந்தபோது, அவரது இரங்கல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார்.. மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே, அவருக்கு 2வது மகன் பிறந்துவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.. அந்த கூட்டத்திலேயே பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலினின் பெயரை சூட்டுகிறேன் என்று அறிவித்தாராம் கருணாநிதி. இப்படித்தான் ஸ்டாலினுக்கு தான் பெயர்வைத்ததாக பலமுறை கருணாநிதியே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

இப்போது விஷயம் என்னவென்றால், நம் ஸ்டாலினின் பெயர் ரஷ்யா வரைக்கும் ஃபேமஸ் ஆகி உள்ளது.. தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, அவரை பற்றி செய்திகளை சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.. முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினைப் பற்றி தெரிந்து கொள்ள, ரஷ்ய அரசியல்வாதிகளும், அந்நாட்டு அதிகாரிகளும் ஆவலாக இருக்கிறார்களாம்.

'நம்ம தலைவரின் பெயரை வைத்துள்ள இந்த ஸ்டாலின் யார்?' என்பதுதான் அவர்களின் ஒரே கேள்வி.. அதனால், ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உட்பட பலர், தமிழக முதல்வரை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்...

டில்லியில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு, 'தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் யார்? இவரை பற்றிய விபரங்களை விசாரித்து எங்களுக்கு தெரிவியுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனராம்..!

ஆனால் வட இந்திய பத்திரிகையாளர்களுக்கு ஸ்டாலின் பெயர்க்காரணம் சரியாக தெரியவில்லை. அவர்களுக்கு திராவிடமே இன்னும் பிடிபடாமல்தான் உள்ளது. இதனால் நம்ம ஊர் பத்திரிகையாளர்களிடம் கேட்டு தகவல் பெற்று அவர்களும் இதைத் தெரிந்து கொண்டு வருகிறார்களாம்...

போற போக்கைப் பார்த்தா வேற லெவலில் போயிருவார் போலயே முதல்வர் ஸ்டாலின்!

https://tamil.oneindia.com/news/chennai/the-russian-people-are-eager-to-know-who-mk-stalin-is-420888.html

டிஸ்கி :

IMG-20210514-231156.jpg

மார்டின் லூதர் பெயர் வைத்திருந்தால் சனம் ஆப்ரிக்காவிலும் தேடி இருப்பினம் அமெரிக்காவிலும் தேடி இருப்பினம் ..

Murasoli.in அதிகாரபூர்வமாக பதிய பட்டுள்ளதால் செம்பு "தட்ஸ்தமிழ் "  இனி Murasoli.com  என்ற முகவரியில் செயல்படலாம் .👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அப்பவே ஜனங்களின் காதில பூ சுத்திட்டாரு.

ஸ்ராலின் கருணாநிதிக்கு 2ஆவது மகன் இல்லை. அப்படின்னா  ஸ்டாலினுக்கு முன்னர் பிறந்த முத்துவும் அழகிரியும் யாரு?

ஸ்டாலின் பிறந்து ஏறத்தாழ ஒருவாரம் கழித்து தான் ரஷ்ய தலைவர் ஜோசெப் ஸ்டாலின் இறந்தார். அப்படினா மகன் பிறந்த செய்தி அப்பனுக்கு ஒருவாரம் கழித்து சென்றடைய அவர் உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டு ரஷ்ய தலைவர் ஜோசெப் ஸ்டாலினின் இரங்கல் கூட்டத்தை நடத்தினார்?

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க.வினர், மகளிர் அணியினரின்... “இடுப்பை” கிள்ளக் கூடாது, என்று சொல்லிக் கொடுக்கவில்லையா.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே,

உங்களை போலவே நானும் பெரும் பேச்சாற்றல் கொண்ட அண்ணனை தலைவராக கொண்ட நம் கட்சியினர் ஒரு தொகுதியிலேனும் வெல்ல முடியாத போது இந்த துண்டு சீட்டு தலைவரின் கட்சி அத்தனை இடங்களை வாரிச்சுருட்டி விட்டதே என்ற பெரும் மன உளைச்சலில்தான் உள்ளேன்.

இந்த ஆதங்கத்தை தீர்த்து கொள்ள இவர்களை இணையப்பரப்பில் கிண்டல் பண்ணுவதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனாலும் இத்தோடு நின்று விடாது தொடர்ந்து கட்சியை பலபடுத்தும் செயல்களிலும் நாம் ஈடுபடல் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஸ்ராலினை சுடலை என்கிறார்கள்?

எதிர்ப்பாளர்கள் என்ன, அவருடைய கட்சிக்காரர்களே, ஸ்டாலினை செல்லமாக ' சுடலை' என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

இவருக்கு இந்தப் பெயர் வந்ததற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அதைக் கூறுகிறேன் கேளுங்கள்.

தி.மு.க.வின் பத்திரிகையான முரசொலியில் 1960 - 1970களில், தமிழிலுள்ள கிரந்த எழுத்துக்களை நீக்கி தூய தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்த ஆரம்பித்தனர். பின்வருமாறு எழுதினர்:-

காமராசர் ( காமராஜ்)

ராசாசி ( ராஜாஜி)

இசுமாயில் சாகிபு ( இஸ்மாயில் சாஹேப்)

சாகீர் உசேன் ( ஸஹீர் ஹுஸைன்).

நாகேசுவர ராவ் ( நாகேஸ்வர ராவ்)

சா நவாசு கான் ( ஷா நவாஸ் கான்)

பாசுகரன் ( பாஸ்கரன்)

main-qimg-3fa028749a78a4aeddddbb2df80d65

1976இல் அவர்கள் வீட்டுப் பிள்ளை, அதாவது இப்போது தளபதி என்று அழைக்கப்படும் ஸ்டாலின் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரானார். அப்போது அவருக்கு வயது 23 , தமது அயராத உழைப்பாலும், மதி நுட்பத்தாலும் படிப்படியாக உயர்ந்து 1980இல் தி.மு.க. இளைஞர் அணி தலைவரானார். அப்போதுமுதல் இவரது பெயர் முரசொலி பத்திரிகையில் அடிக்கடி இடம்பெற்றது. இவரது பெயரை சடாலின் என்றோ, சுடாலின் என்றோ எழுத முரசொலி ஆசிரியருக்கு மனம் வரவில்லை. மற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம், நம் வீட்டுப்பிள்ளையை கௌரவமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணத்தில், தளபதி பெயரை " ஸ்டாலின் " என்றே பவ்யமாக எழுதினார். இதை உன்னிப்பாக கவனித்த சிலர் இவரது பெயரை ' சடாலின், சுடாலின்' என்று எழுதத் தொடங்கினர். பின்னர் மேலும் செந்தமிழில் செம்மைப்படுத்தப்பட்டு ' சுடலை ' என்று ஆயிற்று.

" தன்வினை தன்னைச் சுடும்

ஓட்டப்பம் வீட்டைச் சுடும்."

என்ற பட்டினத்தார் வரிகளை நினைவுகொள்ளுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

இரவு பகலாக மக்களை எதிரிகளிடம் இருந்து காக்கும்
தமிழகத்தின் கிராமத்து காவல் தெய்வம் ''சுடலை'' மாடசுவாமி….
அப்படி தமிழகத்தின் காவல் தெய்வம் ஸ்டாலின் என்பதால்
அன்பாக ''சுடலை'' என்று அன்பர்களும் ….
தமிழகத்திற்கு துரோகம் செய்ய முடியாமல் தடுக்கிறாரே
என்ற கோபத்தால் பயத்தால்
அவரது எதிர்ப்பாளர்கள் அஞ்சுவது உண்மைதான்…
சரியான பெயர்தான்
உங்கள் எரிச்சலிலும்.. கோபத்திலும் வெறுப்பிலும் உருவாகியுள்ளது தளபதி ஸ்டாலின்..
தீண்டாமையை எரித்ததால் ''சுடலை''…
மூட நம்பிக்கையை ஒழிக்க ஓயாது உழைப்பதால் ''சுடலை'' …
கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிட்டதை
இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தவரின் மகனாக பிறந்து
அவர் வழி கொள்கைப்பிடிப்போடு
தொடர்ந்து நடைபோடுவதால் ''சுடலை''….
இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் எல்லா இடங்களிலும்
அமுல் படுத்தும் கொள்கையில் உறுதியாக இருப்பதால் ''சுடலை''…
இட ஒதுக்கீட்டை அவமானமாக பேசியவர்கள்
இன்று ஆண்டுக்கு 8 லட்சம் மட்டுமே வருமானமுள்ள ஏழைகள்
என்ற போலி முகமூடியோடு
கொள்ளையடிக்க வருவதை தடுக்கப்போகும் ''சுடலை''…
அனைத்து வகுப்பினரையும் அர்ச்சகர் ஆக்கி
சாதீய பாகுபாட்டை ஒழிக்க போராட தயாராக உள்ள ''சுடலை'' …இந்துத்துவா முகமூடி போட்டு
மீண்டும் ப்ராமணீய அக்ராஹார ஆட்சியை கொண்டுவர முயலும் பிராமணிய ஜனதா கட்சியை..
அதன் பாசிச கொள்கைகளை எதிர்ப்பதால் ''சுடலை'' …
தமிழகத்தின் காக்கும் காவல் தெய்வம் ''சுடலை'' போன்று ஸ்டாலின் இருக்கிறார்… ஊன எண்ணத்தோடு யாரும் தமிழகத்திற்குள் எட்டிக்கூட பார்க்க முடியாது என்பதை மிக அழகாக குறிப்பால் உணர்த்தியுளீர்கள் …உங்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும் …

--------------------------------------------------------------------------------------------------

முதலில் துக்ளக் பத்திரிக்கையில் திமுகவின் அதீத தமிழ் ஆர்வத்தை கிண்டல் செய்து எழுத ஆரம்பித்தார்கள்.

ஆகஸ்டு என்பதை திமுக, ஆகத்து என்று தமிழ் படுத்தினார்கள்.

அதாவது 'ஸ' என்பது சமஸ்கிருத எழுத்து எனக் கூறி, 'ஸ' ' ஜ ' போல வரும் எழுத்துக்கள் எல்லாவற்றையும் திமுக தமிழ் படுத்தியது.

துக்ளக்கில் வரும் ஒன்றரை (90 s to 2000 ) பக்க நாளேட்டில் இதை கிண்டல் செய்யும் விதமாக, ஸ்டாலினை - 'சடாலின் ' என்று எப்போதும் அழைத்து வந்தார்கள். மேயர். சடாலின் என்று தான் எழுதுவார்கள்.

பின்பு முகநூல் (facebook) வந்த பிறகு கிஷோர்.கே. சுவாமி என்னும் தினகரன் (அதிமுக) ஆதரவு ஃபேஸ்புக் ஆதரவாளர் தொடர்ச்சியாக திரு.ஸ்டாலினை சுடலை என்று எழுதி எதிர்க்க , திமுக ஆதரவாளர்கள் அவரது முகநூலை தொடர்ந்து பிளாக் பண்ணி வந்தார்கள்.

மீண்டு வந்த சுவாமி, சுடலை என்று திரும்ப திரும்ப எழுத, அந்த பெயர் சமூக ஊடகம் மூலம் பட்டப்பெயராகி விட்டது. அவர் இப்போது பிஜேபி ஆதரவாளர். இப்பொழுது திமுக எதிர்ப்பாளர் என்ற அடைமொழியுடன் டிவி விவாதத்தில் கலந்து கொள்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------

சிறு தெய்வ வழிப்பாட்டில் மிக முக்கியமான காவல் தெய்வம் சுடலைமாடன் ஆகும்.

சுடலை மாடன் வழிபாடு என்பது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பரவலாக குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.

பெரும்பாலான உண்மையான இந்துக்கள் அதாவது சனாதான தர்மத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் இந்த மாதிரி கிராம் காவல் தெய்வத்தை பெரிதும் மதிக்கமாட்டார்கள்.

அத்தைகைய இந்துத்துவா பாதுகாவலர்கள், தற்போதைய திராவிட இயக்கத்தின் பாதுகாவலராக திமுக தலைவர் மு க ஸ்டாலினை கருதுகிறார்கள் வெறுக்கிறார்கள்‌.

திராவிட எதிர்ப்பாளர்களான இந்துத்துவா ஆதரவாளர்களுக்கு சுடலைமாடன் போன்ற கிராம எல்லை காவல் தெய்வங்களை கண்டால் வெறுப்பு அதனால் அவர்கள் வெறுக்கும் சுடலைமாடன் பெயரை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புனைப்பெயராக சூட்டி இகழ்ந்து மகிழ்ந்து வருகிறார்கள்.

அதாவது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பது போன்று சுடலைமாடன் சாமியையும் மற்றும் ஸ்டாலினையும் வசைபாடி இழக்கிறார்கள்.வேறு ஒன்றும் காரணமில்லை‌.

இதை ஆரம்பித்து வைத்தது இந்துத்துவா வெறியன் கிஷோர் கே சாமி இவர் ஒரு சனாதன தர்மம் பிரதிநிதி வேறு ஒன்றுமில்லை ‌.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

சொத்தச்  செலவிலேயே... சூனியம் வைத்து விட்டார்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சிறியர்......!

இனி சுடலைமாடன் உலகம் முழுதும் பிரபல்யமாவார்.......தேசம் முழுதும் அவரது வேட்டைதான்.........!

கொட்டடா மேளத்தை........!

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினை சுடலைமாடனோடு ஒப்பிட்டு இருப்பது சரிதான். மக்கள் பணத்தை வேட்டையாடுபவர்தானே?

இந்த இலட்சணத்தில் அண்ணன் பெயர் சைமன், அவர் தந்தை செபஸ்டி, பாட்டனார் யாக்கோபு என்பதை வைத்து கீழ்தரமாக மதவெறி அரசியல் செய்கிறனர் தீம்காவினர்.

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் அல்ல. இயற்பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழகன் said:

ஸ்டாலினை சுடலைமாடனோடு ஒப்பிட்டு இருப்பது சரிதான். மக்கள் பணத்தை வேட்டையாடுபவர்தானே?

இந்த இலட்சணத்தில் அண்ணன் பெயர் சைமன், அவர் தந்தை செபஸ்டி, பாட்டனார் யாக்கோபு என்பதை வைத்து கீழ்தரமாக மதவெறி அரசியல் செய்கிறனர் தீம்காவினர்.

அப்போ செந்தமிழன் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

அப்போ செந்தமிழன் யார்?

அண்ணனின் தந்தையரும் அண்ணனும் அவர்களது பெயரை தமிழ் வழிப்படுத்தியுள்ளார்கள்.

தக்‌ஷணமூர்தி கருணாநிதியாகவில்லையா?

தனது பாட்டன் பெயர் யாக்கோபு என்பதை அண்ணனே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியுள்ளாரே?

பத்திரிகை மரண செய்திகள் கூட செந்தமிழன் என்கின்ற செபாஸ்டி என்றே குறிப்பிட்டன. அவதானிக்கவில்லையா?

கிறீஸ்தவராயின் தமிழர் இல்லை என்றாகுமா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழகன் said:

தக்‌ஷணமூர்தி கருணாநிதியாகவில்லையா?

நமஸ்காரம், மீ அசல் பேரு ஏமிடி? நிஜம் செப்பு.😜

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழகன் said:

அண்ணனின் தந்தையரும் அண்ணனும் அவர்களது பெயரை தமிழ் வழிப்படுத்தியுள்ளார்கள்.

தக்‌ஷணமூர்தி கருணாநிதியாகவில்லையா?

தனது பாட்டன் பெயர் யாக்கோபு என்பதை அண்ணனே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியுள்ளாரே?

பத்திரிகை மரண செய்திகள் கூட செந்தமிழன் என்கின்ற செபாஸ்டி என்றே குறிப்பிட்டன. அவதானிக்கவில்லையா?

கிறீஸ்தவராயின் தமிழர் இல்லை என்றாகுமா?

ஓமோம்.  அறிந்தவன் அறிவான் அரியாலை பினாட்டை.🙃🤣

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நுண்ஆவிலன் இருவரும் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் போலும்.

அண்ணனின் கொள்கைகளில் ஒன்று இறை மீட்பு அந்த நோக்கில் ஐரோப்பிய மயப்பட்ட பெயர்களை மாற்றுவது எமது கட்சியில் வழமைதான்.

அண்ணனின் தாயார் பெயர் அன்னம்மாள். ஆன் என்று ஆங்கிலத்தில் அன்றி, அன்னம்மாள் என தமிழில் இருப்பதால் மாற்ற வேண்டிய தேவை இல்லை.

மேதகு கூட இயக்கத்தில் பல ஐரோப்பிய பெயர்களை தூய தமிழ் படுத்தியதாக தம்பிகள் சொல்வார்கள். உண்மைதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழகன் said:

கிருபன் நுண்ஆவிலன் இருவரும் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் போலும்.

அண்ணனின் கொள்கைகளில் ஒன்று இறை மீட்பு அந்த நோக்கில் ஐரோப்பிய மயப்பட்ட பெயர்களை மாற்றுவது எமது கட்சியில் வழமைதான்.

அண்ணனின் தாயார் பெயர் அன்னம்மாள். ஆன் என்று ஆங்கிலத்தில் அன்றி, அன்னம்மாள் என தமிழில் இருப்பதால் மாற்ற வேண்டிய தேவை இல்லை.

மேதகு கூட இயக்கத்தில் பல ஐரோப்பிய பெயர்களை தூய தமிழ் படுத்தியதாக தம்பிகள் சொல்வார்கள். உண்மைதானே?

அட... நுண்ஆவிலன் என்ற பெயரும் நல்லாய் இருக்கே... 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.