Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்: உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்த உறுதியேற்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் குருதிச் சேற்றில் ஓய்ந்தது.

புலிகளுக்கு எதிராக 22 நாடுகள்

மேதகு பிரபாகரன் தலைமையிலான புலிப்படையினரைப் பயங்கரவாத அமைப்பினர் என முத்திரை குத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்னும் பெயரில் அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தைத் தீட்டி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற ஏராளமான நாடுகளின் உதவியோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றினர். ஏறத்தாழ 22 நாடுகள் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளுக்கு எதிராக நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அதில் பங்கேற்றன. அதாவது, அரசு சார்பில்லாதவொரு மக்கள் அமைப்புக்கு எதிராக, 22 அரசுகள் அனைத்து வகையான படை வலிமையுடன் போர்க் களத்தில் மோதின. போர் மரபுகள் எதனையும் பின்பற்றாமல் நச்சுக் குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசி, புலிகள் அல்லாத பொது மக்களையும் அழித்தொழித்தனர். இது பங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் ஏகாதிபத்திய நாடுகளால் அரங்கேற்றப்பட்ட இனஅழிப்புப் போராகும்.

புலிகள் இயக்கம் மீது பயங்கரவாத முத்திரை

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இனவிடுதலை இயக்கம் என அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக பயங்கரவாத இயக்கமென்று உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் நசுக்கப்படுவதற்குப் புலிகளுக்கு எதிரான இந்த உத்தியே சிங்களவர்களுக்கு மிகப் பெருமளவில் கை  கொடுத்தது.

இந்தியா, அமெரிக்கா

அமெரிக்க இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாத ஒழிப்பை முன்னிறுத்தி உலக நாடுகளை ஒருங்கிணைப்பது அமெரிக்காவுக்கு இலகுவாக அமைந்து விட்டது. அதுவே சிங்களவர்களுக்கும் ஏதுவாக அமைந்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் நலன்கள் என்னும் பெயரில் இந்திய ஆட்சியாளர்கள், சிங்களவர்களுக்குத் துணையாக தோள் கொடுத்து நின்றனர். அமெரிக்காவின் அடிவருடி நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டன.

ஐ.நா. தவறிவிட்டது

ஈழத்தமிழர் சிக்கலானது, சர்வதேச சமூகத்தின் பிடிக்குள் போய் விட்டதால், ஐநா பேரவையும் அந்தப் பேரவலத்தைக் கடைசி வரையில் வேடிக்கை பார்க்கவே செய்தது. குறிப்பாக, ஐநா மனித உரிமை அமைப்பு அந்தப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த தவறி விட்டது. இனக் கொலைக் குற்றவாளிகளான இராஜபக்‌ச கும்பலை சர்வதேக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்துத் தண்டிப்பதற்கு இதுநாள் வரையிலும் ஐநா பேரவை பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிங்கள அரசின் நட்பைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்நிலையில்,சர்வதேசக் குற்றவாளிகளான இராஜபக்‌ச கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டதால் ஈழத்தமிழர்களின் தாயகத்தை அனைத்து வகையிலும் ஆக்கிரமிப்புச் செய்து சிங்களக் குடியேற்றம் போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அத்துடன், யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களைச் சிங்களப் படையினர் தகர்த்தெறிந்துள்ளனர். இன அழித்தொழிப்பு மட்டுமின்றி ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டச் சுவடுகளை அழிப்பதிலும் குறியாக உள்ளனர்.

உலகத் தமிழர் ஒற்றுமை

சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இத்தகைய மேலாதிக்கப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆவது ஆண்டாக நினவு கூரப்படும் இந்நாளில், ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கு இடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறுதி ஏற்போம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

https://www.thaarakam.com/news/4702d863-57ca-4b51-88aa-c31a6ac9d3f0

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எங்கட குசா,

ஐயா, அந்தப் படத்த ஒருக்கா போட்டுவிடுங்கோ. 

எது ?

எந்தப் படமோ...? 🤥

 

அதுதான்....

அதேதான். ...

அந்தப்படம்தான். 

கெதியாப் போடுங்கோ...

🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kapithan said:

எங்க எங்கட குசா,

ஐயா, அந்தப் படத்த ஒருக்கா போட்டுவிடுங்கோ. 

எது ?

எந்தப் படமோ...? 🤥

 

அதுதான்....

அதேதான். ...

அந்தப்படம்தான். 

கெதியாப் போடுங்கோ...

🙏

இதையே கேட்டனியள்?

1574155779110.jpg

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

இதையே கேட்டனியள்?

1574155779110.jpg

அதேதான்.

இனத்தை  அழித்ததற்கும் பிரபாகரனைக்  கொன்றதற்கும் நன்றி சொல்ல வந்த கூட்டமெல்லோ..

வருகுது வாயில...

😡

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

இதையே கேட்டனியள்?

1574155779110.jpg

இங்கே சிலவற்றை எழுத அனுமதியில்லை என்பதால் அமைகிறேன். சில விடயங்கள் அடிப்படையில் கோளாறு.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

இதையே கேட்டனியள்?

1574155779110.jpg

இந்த முகத்தில் இனத்தை பறிகொடுத்த ஏதாவது ஒரு அறிகுறி தென்படுகிறதா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Kapithan said:

அதேதான்.

இனத்தை  அழித்ததற்கும் பிரபாகரனைக்  கொன்றதற்கும் நன்றி சொல்ல வந்த கூட்டமெல்லோ..

வருகுது வாயில...

😡

 

14 minutes ago, விசுகு said:

இந்த முகத்தில் இனத்தை பறிகொடுத்த ஏதாவது ஒரு அறிகுறி தென்படுகிறதா???

உலக தமிழர்கள் அந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை கிரகிக்க முதல் ஜீரணிக்க முதல்  நன்றி சொல்ல பொன்னாடை சகிதம் சென்றவர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சாதியை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் இவர் இனத்தைப்பற்றி கதைக்கும் அருகதையை இழந்து விட்டார்
ஸ்டாலின் இவரை வெகுவிரைவில் கழட்டி விடுவார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, வாத்தியார் said:

சாதியை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் இவர் இனத்தைப்பற்றி கதைக்கும் அருகதையை இழந்து விட்டார்
ஸ்டாலின் இவரை வெகுவிரைவில் கழட்டி விடுவார்

சாதி மயமான கட்சிகள் இருக்கும் வரைக்கும் சாதிகளை ஒழிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

உலக தமிழர்கள் அந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை கிரகிக்க முதல் ஜீரணிக்க முதல்  நன்றி சொல்ல பொன்னாடை சகிதம் சென்றவர்கள்.

குமாரசாமி அண்ணை,

கனிமொழி... மகிந்தவுடன்,  நெளிந்து கொண்டு நிற்கும் படத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்து விடுங்கள்.

தமிழருக்கு, மறதிக் குணம் அதிகம் என்பதால்... அடிக்கடி நினைவு படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சாதி மயமான கட்சிகள் இருக்கும் வரைக்கும் சாதிகளை ஒழிக்க முடியாது.

அது சரி தான்.... ஆனால் அப்படியான சூழ் நிலையில்... சாதியை அடிப்படையாக வைத்து நடக்கும் அரசியல்.... தனது இனத்திற்கான விடுதலையை வாங்கித்தருமா.... என்றால் இல்லை என்ற பதிலைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்😀

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

சாதி மயமான கட்சிகள் இருக்கும் வரைக்கும் சாதிகளை ஒழிக்க முடியாது.

உண்மை.
தமிழ்நாட்டில் சாதிகட்சி நடத்தி கொண்டு இலங்கை தமிழர்களை மட்டும் தீவிரமாக ஆதரித்து அறிக்கைவிடுகிறாரே 🤔

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை,

கனிமொழி... மகிந்தவுடன்,  நெளிந்து கொண்டு நிற்கும் படத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்து விடுங்கள்.

தமிழருக்கு, மறதிக் குணம் அதிகம் என்பதால்... அடிக்கடி நினைவு படுத்த வேண்டும்.

நிறைய படங்கள் இருக்கின்றன. காணொளிகளும் இருக்கின்றன. மிகுதியை நீங்கள் இணைத்து விடுங்கள். முக்கியமாக திருமாளவனின் கையை மகிந்த ராஜபக்ஸ வலுக்கட்டாயமாக இழுத்து கை குலுக்கியமை பற்றி......

Pawan Khera on Twitter: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar"

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் என்னத்துக்கு அங்க போனவங்கள்?  யாராவது தெரிஞ்சா எழுதுங்கோ.   

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, karu said:

உவங்கள் என்னத்துக்கு அங்க போனவங்கள்?  யாராவது தெரிஞ்சா எழுதுங்கோ.   

நன்றி கூறுவதற்குத்தான். 

இது கூட புரியவில்லையா.. 😏

(😉)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நிறைய படங்கள் இருக்கின்றன. காணொளிகளும் இருக்கின்றன. மிகுதியை நீங்கள் இணைத்து விடுங்கள். முக்கியமாக திருமாளவனின் கையை மகிந்த ராஜபக்ஸ வலுக்கட்டாயமாக இழுத்து கை குலுக்கியமை பற்றி......

Pawan Khera on Twitter: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar"

Hariharan Gajendran auf Twitter: "Seen here #Kanimozhi a #DMK leader along  with #Thirumavalavan #TRBaalu with #WarCriminal Rajapaksa. #InaDroghi  http://t.co/OyL8vnfvdR" 

Dharma on Twitter: "Dr. @Swamy39 jee : Kanimozhi, T.R. Baalu, Thol.  Thirumavalavan & co met Rajapaksa in Sri Lanka in March 2013 after SL won  the civil war in 2010! It seems

ஈழப் போரில்.... தமிழர்கள் தோற்றதை, வாய் நிறைய புன்னகையுடன்.. கொண்டாடுகிறார்கள். 🙄

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karu said:

உவங்கள் என்னத்துக்கு அங்க போனவங்கள்?  யாராவது தெரிஞ்சா எழுதுங்கோ.   

கருணாநிதி 1973´ம் ஆண்டில்  இருந்தே... தமிழ் ஈழத்திற்கும்,   
ஈழத் தமிழர்களுக்கும்..  எதிராக செயற்பட ஆரம்பித்து விட்டார். 

இந்தக் காணொளியில்... எமக்குத் தெரியாத, பல செய்திகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.
தயவு செய்து... நேரம் ஒதுக்கி இதனைப் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, karu said:

உவங்கள் என்னத்துக்கு அங்க போனவங்கள்?  யாராவது தெரிஞ்சா எழுதுங்கோ.   

தமிழர்கள் வருடாவரும் ஜெனீவாவில் நீதிகேட்டுப் போராடும் ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான்கீ மூன் முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்த கையோடு வவுனியா மனிக் ஃபார்முக்கு ஏன் போனாரோ அதுக்குத்தான் அவங்களும் போனார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் வருடாவரும் ஜெனீவாவில் நீதிகேட்டுப் போராடும் ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான்கீ மூன் முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்த கையோடு வவுனியா மனிக் ஃபார்முக்கு ஏன் போனாரோ அதுக்குத்தான் அவங்களும் போனார்கள்.

 

தமிழ்சிறி போட்ட படத்தில TR பாலுவுக்குப் பின்னுக்கு முகம் காட்டாமல் ஒழிந்திருப்பது கிருபனோ எண்டு எனக்கொரு சந்தேகம். 

யோசிச்சா சரியா வருமாப் போலதான் கிடக்குது.. 🤥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, karu said:

உவங்கள் என்னத்துக்கு அங்க போனவங்கள்?  யாராவது தெரிஞ்சா எழுதுங்கோ.   

திமுக-காங் குழு சென்னை திரும்பியது: விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு!

Published: Wednesday, October 14, 2009, 12:18 [IST]

கொழும்பு: கடந்த 4 நாட்களாக இலங்கையின் பல்வேறு முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்திய திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் குழு தங்கள் 5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பியது.

அவர்களை முதல்வர் கருணாநிதி சென்னை விமான நிலையம் சென்று வரவேற்றார்.

இலங்கையில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களின் நிலை குறித்து ஆராய திமுக தலைமையிலான கூட்டணிக் குழு எம்.பிக்கள் அங்கு சென்றிருந்தனர்.

டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற இக்குழுவில் மொத்தம் பத்து எம்.பிக்கள் இடம் பெற்றிருந்தனர்.இவர்களில் 9 பேர் திமுக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். 10வது நபர் தொல். திருமாவளவன் ஆவார்.

இந்தக் குழு யாழ்ப்பாணம், வன்னி முகாம்கள் ஆகியவற்றுக்குச் சென்றது. மலையகத் தமிழர்களையும் ஹட்டன் நகருக்குச் சென்று சந்தித்தனர். பின்னர் கொழும்பு திரும்பி அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே, வெளியுறவுத்துறை செயலாளர் ரோஹித பொகல்லகாமா உள்ளிட்டோரையும் சந்தித்தனர்.

தங்களது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை திமுக கூட்டணிக் குழு சென்னை திரும்பியது.

மாலை 4 மணியளவில் சென்னை திரும்பிய இக்குழுவை முதல்வர் கருணாநிதி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

தாங்கள் முகாம்களில் கண்டதையும், அங்குள்ள தமிழர்கள் கூறிய குறைகளையும், ராஜபக்சேவுடனான சந்திப்பின் போது நடந்த பேச்சு வார்த்தையின் விவரங்களையும் அறிக்கையாக தயாரித்து முதல்வர் கருணாநிதியிடம் இந்த குழுவினர் வழங்கவுள்ளனர்.

அகதிகள் முகாம்கள் குறித்து இந்தக் குழு அதிபர் ராஜபக்சேவிடம் திருப்தி தெரிவி்த்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுக கூட்டணிக் குழு கொடுக்கப் போகும் அறிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருணாவை சந்திக்க மறுப்பு...

முன்னதாக, தமிழகத்திலிருந்து சென்றுள்ள திமுக கூட்டணிக் குழு, யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட பயணத்துக்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகளின் பரம வைரிகளில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா செய்து கொடுத்தார்.

அதேபோல கிழக்கு மாகாணத்துக்கான பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு கருணாவிடம் தரப்பட்டிருந்ததாம்.

ஆனால் கருணாவுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ள திமுக கூட்டணிக் குழு விரும்பவில்லையாம். அவரை சந்திப்பது, அவரது ஏற்பாட்டின்படி செல்வது போன்றவை தமிழகத்தில் பெரும் சிக்கலை தங்களுக்கு ஏற்படுத்தும் என்று திமுக கூட்டணிக் குழு சார்பாக இலங்கை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதாம்.

இதனால் இலங்கை அரசு அதிருப்தி அடைந்ததாம். கருணா வேண்டாம் என்றால் கருணாவின் பிரதேசத்துக்கும் (கிழக்குக்கும்) அவர்கள் போகத் தேவையில்லை என்று கூறி திமுக கூட்டணிக் குழுவினரின் கிழக்கு மாகாண பயணத் திட்டத்தையே இலங்கை அரசு ரத்து செய்து விட்டதாம்.

நேற்று ராஜபக்சேவை திமுக கூட்டணிக் குழு சந்தித்தபோது கூட அங்கு கருணா இருக்கவில்லை.

பிள்ளையான் சந்தித்தார்...

கருணாவை சந்திக்க திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் மறுத்து விட்டபோதிலும், கருணாவின் முன்னாள் தோழரும், தற்போதைய கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பப்படும் பிள்ளையான், திமுக காங்கிரஸ் கூட்டணிக் குழு உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்துப் பேசினார்.

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் வந்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை பிள்ளையான் சந்தித்தார்.

அப்போது, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மறு குடியமர்த்தல் விவகாரங்கள், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து தூதுக் குழுவினரிடம் எடுத்துரைக்கபப்ட்டது.

திருமாவளவன் தொலைந்திருப்பார்-ராஜபக்சே:

இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் ராஜபக்சேவை போய்ச் சந்தித்தனர். பொன்னாடை போர்த்தினர். முகம் முழுக்க சிரிப்புடன் அவருடன் உரையாடினர். அவர்களுடன் திருமாவளவனும் இருந்தார்.

அப்போது திருமாவளவனைக் காட்டி, கனிமொழியிடம் ராஜபக்சே கூறுகையில், இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் தப்பி விட்டார்.

பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார் பலத்த சிரிப்புடன் ராஜபக்சே கூற, அதை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாராம் திருமாவளவன்.

 

https://tamil.oneindia.com/news/2009/10/14/lanka-rajapakses-harsh-comment-on-thirumavalavan.html?story=1

 

3 minutes ago, Kapithan said:

தமிழ்சிறி போட்ட படத்தில TR பாலுவுக்குப் பின்னுக்கு முகம் காட்டாமல் ஒழிந்திருப்பது கிருபனோ எண்டு எனக்கொரு சந்தேகம். 

யோசிச்சா சரியா வருமாப் போலதான் கிடக்குது.. 🤥

உங்கள் அறிவுக்கு அமெரிக்காவில் இருக்கவேண்டும் அண்ணே.. ஆனால் கனடாவில் காயிறியள்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, கிருபன் said:

தாங்கள் முகாம்களில் கண்டதையும், அங்குள்ள தமிழர்கள் கூறிய குறைகளையும், ராஜபக்சேவுடனான சந்திப்பின் போது நடந்த பேச்சு வார்த்தையின் விவரங்களையும் அறிக்கையாக தயாரித்து முதல்வர் கருணாநிதியிடம் இந்த குழுவினர் வழங்கவுள்ளனர்.

அகதிகள் முகாம்கள் குறித்து இந்தக் குழு அதிபர் ராஜபக்சேவிடம் திருப்தி தெரிவி்த்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுக கூட்டணிக் குழு கொடுக்கப் போகும் அறிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருநாநிதியின் அறிக்கை அதன் பெறுபேறுகள் பற்றிய தகவல்களையும் முடிந்தால் இணைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்+

பொரிக்கும்போது எல்லாத்தையும் ஒன்டாப் போட்டு பொரிக்க வேண்டும்.😁

விடுதலைப் புலிகளின் 'களத்தில்' மாத இதழில் இருந்து..

kalaththil 22-10-1993.png

'களத்தில் - 22-10-1993'

 

67411685_835558873504457_7198035682500018176_n.jpg

'களத்தில்-  10-10-1993'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

கருநாநிதியின் அறிக்கை அதன் பெறுபேறுகள் பற்றிய தகவல்களையும் முடிந்தால் இணைக்கவும்.

அறிக்கை கிடைக்கவில்லை. தேடியபோது இன்னொரு வரலாறு கிடைத்தது..

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழர்கள் வருடாவரும் ஜெனீவாவில் நீதிகேட்டுப் போராடும் ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான்கீ மூன் முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்த கையோடு வவுனியா மனிக் ஃபார்முக்கு ஏன் போனாரோ அதுக்குத்தான் அவங்களும் போனார்கள்.

 

அதாவது இரண்டு பேரும் போன காரணம் ஒன்றே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அதாவது இரண்டு பேரும் போன காரணம் ஒன்றே.

அதைத்தானே அப்போது வந்த செய்தியும் சொல்கின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.