Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் தி பேமிலி மேன்-2 வெப்சீரியல்! களஞ்சியம் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் தி பேமிலி மேன்-2 வெப்சீரியல்! களஞ்சியம் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள "தி பேமிலி மேன்-2" வெப் சீரியலுக்குதமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் சோழன் மு.களஞ்சியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வரவுள்ள தி பேமிலி மேன்-2 வெப்சீரியல் தயாரித்து வெளியிடும் அமேஷான் பிரேம் நிறுவனத்தை தமிழர் நலப் பேரியக்கத்தின் சார்ப்பில் எச்சரிக்கை செய்கிறோம்.

தமிழீழ மண்ணின் விடுதலைக்குப்  போராடிய  விடுதலைப்புலிகள் அமைப்பை  இழிவு செய்து xதி பேமிலி மேன் 2" என்கிற வெப் சீரியல்  ஜூன் நான்கில் அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது.

இந்தத்தொடரின்  இயக்குநரும்,  தயாரிப்பாளர்கள் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி. கே.ஆகியோர் ராஜபக்சேவின்  பினாமிகள். ஆகவே திட்டமிட்டே விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத அமைப்பு என்று நிறுவ முயலுகிறார்கள்.

இதற்கு முன் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே பெரும் தொகை கொடுத்து இந்த திரைப்பட நாயகன் மலையாளி ஜான் ஆப்ரஹாம் மூலமாக “மெட்ராஸ் கபே” என்று ஒரு படமெடுத்து புலிகளையும் அதன் தலைமையையும் இழிவு செய்தான்.

அதை அறிந்து தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. மும்பை உயர்நீதி மன்றத்தில் எமது “தமிழர் நலப் பேரியக்கம்” வழக்குத் தொடுத்து, மெட்ராஸ் கபே படத்தை இந்தியா முழுவதும் வெளியிடத் தடை கோரியது. அவசர வழக்காக எடுத்து விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆகவே படம் தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் வெளியானது.

அதே ராஜபக்சே கும்பல் தான் “தி பேமிலி மேன்-2 “ வெப்சீரியல் எடுத்துள்ளது. இந்தத்தொடரில்  மனோஜ்பாஜ், பாயி, சமந்தா, தேவதர்ஷினி சேத்தன், பிரியாமணி , சரத்கெல்கர், ஸ்ரேயா தன்வந்தரி, ரவிந்திரா விஜய், சஷாப் அலி, ஆனந்சாமி, வேதாந்த் சின்ஹா, சரிப் ஆஷ்மி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.

இப்படியான வெப்சீரியல்கள் திரைப்படங்களின் மூலமாக இந்தியர்களின் பொதுப்புத்தியில் விடுதலைப் புலிகளும், அதன் தலைமையும் இந்தியாவுக்கு எதிரானது என்கிற எண்ணத்தையும், புலிகள் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்கிற ஒரு எண்ணத்தையும் பதியவைக்கும் முயற்சியை ராஜபக்சே கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது.

இந்தத்தொடரின்  வினியோகஸ்தராகத்  தமிழ்ப்பட நடிகர் அருண்பாண்டியன் எனத் தகவல்கள் வருகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழ்மண்ணிலிருந்து கொண்டு, தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதை அருண்பாண்டியன் போன்ற தமிழர்கள்  நிறுத்திக்கொள்ள வேண்டும். 

அதே போல இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபட்சே கும்பலின் அடிவருடிகளான வட இந்தியக் கைக்கூலிகள், தொடர்ந்து தமிழர்களையும், தமிழர் மண்ணையும், விடுதலைப்புலிகளையும், கீழ்த்தரமாக விமர்சிப்பதை, நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறோம்.

“சென்னையில்  தீவிரவாதம்” என அந்தக்கதையின்  முன்னோட்டத்தில் வருகிறது. இதன் மூலம் தமிழகத்தைக் காஷ்மீர் போலவும், புல்வாமா  தாக்குதல் நாடகம் போன்றும்  வன்முறை களமாகக் காட்டி, ஒரு பதட்டமான பகுதியாகக் கட்டமைக்க முயல்கிறார்கள்.

அதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் அயோக்கியத்தனமான செயலாகும். பாராளுமன்றத்தில் திமுகவின் எம்.பி டி.ஆர்.பாலு அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்திக்கு உயர்மட்ட பாதுகாப்பு வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் வைத்துப் பேசுகிற போது, “விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து” என்றார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

“இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்” என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து கடுமையாகத் தொடர்ந்து எழுந்து கொண்டுள்ளது. இந்த கோரிக்கையை மடைமாற்றவே ராஜபட்சே கும்பல் முயல்கிறது.

அதாவது, விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரித்து, சிங்களவர்களைப் புனிதப்படுத்தும்  வேலையைச் செய்கிறது.

ஒன்றரை இலட்சம் தமிழர்களைப்  பறிகொடுத்துவிட்டு, மீளாத்துயரில் இருக்கும் தமிழர்கள் இழிவுபடுத்து படுத்துவதின் ஊடாக,  மனிதநேயமே இல்லாமல் வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்கள்.

ஆகவே, அமேசான் பிரேம்  நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனம். அந்த நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கிற அத்தனை நாடுகளிலும், உலகத்தமிழர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத் தலைவர்கள் ஒருங்கிணைந்து  

இந்தத்தொடர் வெளிவராமல் தடைசெய்ய வழக்குத் தொடுத்தாக வேண்டும்.

அதே போல இந்தத்தொடர் இந்தியாவில் வெளிவராமல் தடைசெய்ய  இந்திய அரசுக்கு, தமிழக அரசும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழின உணர்வாளர்களும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத்  தமிழர் நலப் பேரியக்கம் வேண்டுகோள் வைக்கிறது.
 

https://www.thaarakam.com/news/1ee9052b-9685-40c8-85a1-d11822e09b32

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை ஏன் வெளிநாடு வாழ் உறவுகள் அதிகம் எதிர்க்கவில்லை?

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விடுதலை புலிகள் செய்தவை சரியா , பிழையா  என ஆராட்சி செய்து கொண்டிருக்கிறோம்.

10 hours ago, nunavilan said:

நாங்கள் விடுதலை புலிகள் செய்தவை சரியா , பிழையா  என ஆராட்சி செய்து கொண்டிருக்கிறோம்.

கடைசியாக எங்கு வந்து நிற்பார்கள் என்று தெரியும் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு செய்தி உறவுகளே, இன்று அண்ணனின் டிவிட்டர் பக்கம் நீல குறியீடு பெற்று கொண்டது.

தொடரை நிறுத்தாது போனால் கடும் விளைவு என அண்ணன் எச்சரித்து அறிக்கையிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா வச்சாரு!! சேச்செண்டி!!
 

தி பேமிலி மேன் 2 : எச்சரிக்கும் சீமான்

 

spacer.png
தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் சீசன் 2 ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என்று அமேசான் அறிவித்தது.

 

இதன் ட்ரெயிலர் மே 19ஆம் தேதி வெளியானது. மனோஜ் பாஜ்பாயி, சமந்தா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதில் சில பகுதிகள் சென்னையில் எடுத்தது போல் தெரிகிறது. இந்த ட்ரெயிலரில் இடம் பெற்ற சில காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த ட்ரெயிலரில் சமந்தாவை இலங்கையிலிருந்து வந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக காட்டப்பட்டுள்ளது. மனோஜ் பாஜ்பாயி, சமந்தாவைப் பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த சீசனில் தமிழர்களைத் தீவிரவாதிகள் போன்று காட்ட முற்படுவதாக கூறி எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சமந்தாவுக்கு எதிராகவும் ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த பருவகாலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தைச் சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப் புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுவுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல.

 

ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர்.

சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப் போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்த போதும் சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழியிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.


https://minnambalam.com/politics/2021/05/21/33/the-familyman-2-seeman-warns

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தியேட்டர்களில் வெளியானால் அவற்றை முடக்கலாம்.

ஆனால் இது அமேசன் ஓடிடியாமே? 

உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது அமேசன் கணக்குகளை இரத்து செய்ய வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, appan said:

கடைசியாக எங்கு வந்து நிற்பார்கள் என்று தெரியும் தானே. 

எனது சகோதரன் 2009 என்னிடம் கூறியது,

"எங்கட இனம் ஒரு நன்றியில்லாத இனம். கடைசியில பிரபாகரனைத் துரோகியெண்டு எங்கட ஆக்கள்( சனம் என்று கூறவில்லை) சொல்லாட்டி இருந்து பார்" 

அந்த வசனம் வெகு விரைவில் நிறைவேறும்போல தென்படுகிறது. 

☹️

53 minutes ago, Kapithan said:

எனது சகோதரன் 2009 என்னிடம் கூறியது,

"எங்கட இனம் ஒரு நன்றியில்லாத இனம். கடைசியில பிரபாகரனைத் துரோகியெண்டு எங்கட ஆக்கள்( சனம் என்று கூறவில்லை) சொல்லாட்டி இருந்து பார்" 

அந்த வசனம் வெகு விரைவில் நிறைவேறும்போல தென்படுகிறது. 

☹️

(எங்கட  ஆக்கள்) மன்னிக்கவும் அவர்களை நாங்கள் எங்கட ஆக்கள் என்று செல்வதில்லை. (அவர்களுக்கு வேறு பெயர் உண்டு) 

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அண்ணா வச்சாரு!! சேச்செண்டி!!

 

இது மின்னம்பலத்தில் இருப்பதாக தெரியவில்லை. உங்கள் கருத்து போல உள்ளது.

அப்படியானால், புலிகளை இழிவு படுத்தும் இந்த தொடர் குறித்த உங்கள் நிலைப்பாடு என்னவோ? 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Kapithan said:

எனது சகோதரன் 2009 என்னிடம் கூறியது,

"எங்கட இனம் ஒரு நன்றியில்லாத இனம். கடைசியில பிரபாகரனைத் துரோகியெண்டு எங்கட ஆக்கள்( சனம் என்று கூறவில்லை) சொல்லாட்டி இருந்து பார்" 

அந்த வசனம் வெகு விரைவில் நிறைவேறும்போல தென்படுகிறது. 

☹️

கண்டிப்பாக... அது நிறைவேறவில்லையென்றால்தான் வியப்பு!

இந்த மாதிரி எல்லாத்தையும் கேக்கிறத விட எங்கட இனம் அழிந்து/கரைந்து போவதே மேல் என்று தோன்றுகிறது😡.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ  விடுதலைப்  போராட்டத்தைக்  கொச்சைப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்படும் இந்த தொடரை உலகத்த தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அப்படியானால், புலிகளை இழிவு படுத்தும் இந்த தொடர் குறித்த உங்கள் நிலைப்பாடு என்னவோ? 🤦‍♂️

வாரு புலிலஸ்தோடம்பு சம்பாதிஸ்தாரு.🙂

புலிகளை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள். அவ்வளவுதான்..

சந்தோஷ் சிவன் தனது இனம் படத்தையும் ஓடிடியில் வெளியிடவுள்ளாராம்.  இப்படி ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டத்தை கொச்சையாக சித்தரிப்பது பாலச்சந்தரின் புன்னகை மன்னன் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. சரியான புரிதல் இல்லாமல், அல்லது புரிதல் இருந்தும் உள்நோக்கங்களுக்காகவும், பணம் சம்பாதிக்கவும் ஈழப்போராட்டத்தைப் பாவிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

அமேஸன் பிரைம் சந்தா உள்ளது. ஆனால் சீரியலை எல்லாம் பார்க்கும் எண்ணம் இல்லை.  

தமிழர்கள் புறக்கணித்தாலே பார்வை குறையும். ஆனால் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருப்பவர்கள் பார்ப்பதை தடுத்து நிறுத்த முடியும் என்று நினைக்கவில்லை. அமேஸன் பிரைமுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு பெரிதாக எதிர்ப்பு வருமா என்றும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

வாரு புலிலஸ்தோடம்பு சம்பாதிஸ்தாரு.🙂

புலிகளை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள். அவ்வளவுதான்..

சந்தோஷ் சிவன் தனது இனம் படத்தையும் ஓடிடியில் வெளியிடவுள்ளாராம்.  இப்படி ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டத்தை கொச்சையாக சித்தரிப்பது பாலச்சந்தரின் புன்னகை மன்னன் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. சரியான புரிதல் இல்லாமல், அல்லது புரிதல் இருந்தும் உள்நோக்கங்களுக்காகவும், பணம் சம்பாதிக்கவும் ஈழப்போராட்டத்தைப் பாவிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

அமேஸன் பிரைம் சந்தா உள்ளது. ஆனால் சீரியலை எல்லாம் பார்க்கும் எண்ணம் இல்லை.  

தமிழர்கள் புறக்கணித்தாலே பார்வை குறையும். ஆனால் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருப்பவர்கள் பார்ப்பதை தடுத்து நிறுத்த முடியும் என்று நினைக்கவில்லை. அமேஸன் பிரைமுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு பெரிதாக எதிர்ப்பு வருமா என்றும் தெரியவில்லை.

உறவே தனியே சீரியலை ஒதுக்குவது மட்டும் ஆகாது. 

உங்களுக்கு இனமான உணர்வு ஒரு சிறிதளவாவது இருப்பின், அமேசன் வீடியோ, அமேசன் புத்தகம், பொருட்கள் வாங்கும் கணக்கு சகலதையும் ரத்து செய்யுங்கள். நான் செய்து விட்டேன்.

தென்னமரிக்காவின் பெரும்காடு மட்டுமே இனி தமிழர்கள் வாழ்வியலில் ஒரே ஒரு அமேசன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெலுகு மூர்குலு..

’தி பேமிலி மேன் 2” தொடரை தடை செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம்!

அமேசான் பிரைம் தளத்தில் தி பேமிலி மேன் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இது ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் உள்ளாதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசும் இந்த தொடரை தடை செய்யுமாறு கோரி இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழக ஒளிபரப்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தி பேம்லி மேன் 2 ” தொடர் குறித்து, அத்தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம். தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பையும், மரியாதையையும் தவிர வேறு எதுவும் இல்லை. நிகழ்ச்சியை வெளியிடும் போது அனைவரும் காத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.என்று கேட்டுள்ளார்கள்.

”தி பேமிலி மேன் 2” சீரியலை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த படத்தை இயக்கும் ராஜ் மற்றும் டி.கே. இருவரும் திருப்பதியைச் சேர்ந்தவர்கள் .தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். Raj Nidimoru and Krishna D.K. were born and brought up in Tirupati and Chittoor respectively. Their mother tongue is Telugu.

800px-Raj__DK.jpg

 

https://inioru.com/தி-பேமிலி-மேன்-2-தொடரை-தட/

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2021 at 20:03, nunavilan said:

நாங்கள் விடுதலை புலிகள் செய்தவை சரியா , பிழையா  என ஆராட்சி செய்து கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு காலத்துக்கு ஆராய்ச்சி..?

PhD பட்டம் எடுக்கவே ஐந்து வருசம்தான் கால அளவு.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

எவ்வளவு காலத்துக்கு ஆராய்ச்சி..?

PhD பட்டம் எடுக்கவே ஐந்து வருசம்தான் கால அளவு.

இவை ஆராய்ச்சி அல்ல 

சேறடித்தல் 

அதுக்கு காலம் வருசம் அளவு 

ஏன் மனச்சாட்சி என்பது கூட தேவை அற்றது ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/5/2021 at 18:03, nunavilan said:

நாங்கள் விடுதலை புலிகள் செய்தவை சரியா , பிழையா  என ஆராட்சி செய்து கொண்டிருக்கிறோம்.

அதை இன்னும் அடுத்த இரண்டு மூண்டு சந்ததிகளுக்கு கடத்தி  கொண்டு போறதை கொஞ்சப்பேர் குத்தகைக்கு எடுத்து வைச்சிருக்கினம் கண்டியளோ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.