Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சக்களத்தி வந்துவிட்டாள் 

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

மிக தவறான பல தகவல்கள் நாதம்.

கீழே வாசித்து அறியுங்கள்.

ஆகா....கப்பல் தரை தட்டீட்டுது....😎
இனியென்ன கொஞ்ச நாளைக்கு சாம்புறாணி புகையும் வேப்பமிலையாலை சாத்தலும் தான்🤣

  • Replies 61
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஆகா....கப்பல் தரை தட்டீட்டுது....😎
இனியென்ன கொஞ்ச நாளைக்கு சாம்புறாணி புகையும் வேப்பமிலையாலை சாத்தலும் தான்🤣

அண்ணை எப்படி சுகமே😀.

தெரியும்தானே எங்கட மட்டகளப்பு கோயில்கள் வருசத்தில ஒருக்காத்தான் திறக்கிறது, ஆனா திறந்தா காவியம்பாடி, தெய்வம் ஆடி, தீமிதிச்சி, தீர்த்தம் வரைக்கும் போகும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, goshan_che said:

அண்ணை எப்படி சுகமே😀.

ஏதோ அவன் மேலை மேல் பாரத்தை போட்டு  ஓடிக்கொண்டு இருக்கிறன் 😁

ஒரு சட்டையில் ஒரு மனிதன் கனவு காண்கிறான். உங்கள் கனவில் ஆண்களின் சட்டை  எப்படி இருந்தது? மெல்னிகோவின் கனவு புத்தகத்தின் விளக்கம்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Nathamuni said:

மின்னம்பலத்தில் வந்தால் தான் நம்புவீர்களாக்கும். 😜

இது மிக அண்மையில் உண்மையாகுமா, இல்லையா? அதுக்கு பதிலை சொல்லுங்கள்.

 

நாதர்! அவர் மின்னம்பலம் சொல்வதெல்லாம் உண்மை என்கிறார்.
நம்ம Bigg Boss வனிதாவை இறக்கி விடுவமா? 😎

Bigg Boss Tamil Vanitha Vijayakumar Eliminated as Second Contestant

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

அன்பிற்கூடிய தமிழக உறவே, வணக்கம்.

இப்போது மனதில் மாற்றம் உண்டாகி இருக்குமே தமிழகனே? 😃 கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்ற பழைய தமிழ் பட்டறிவு, எவ்வளவு உண்மை என்று புரிகிறதா? தமிழ் வாழ்க!
 

ஆகா! இதையெல்லாம் நம்பிவிட்டீர்களா? ஈழத்தமிழருக்கு இப்படியெல்லாம் படம் காட்ட தெரியாவிட்டால் எப்படி உலகமெல்லாம் பரந்து விரிந்திருக்க முடிந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டாமா? 😁

 


ஈழத்திழரை நம்மினால் என்ன கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

யாழ் களம் தமிழகனை வருக, வருக என்று வரவேற்கிறது!! 

👏  🙌  🙏  👋

 

 

 

உங்கள் வரவேற்பிற்கு நன்றி. ஈழ உறவுகள் மீது எனக்கு எப்போதும் பாசமும் நம்பிக்கையும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசிடமிருந்தே தமிழ் மொழி புறக்கணிப்பை சீனர்கள் கற்றுள்ளனர் – மனோ கணேசன்

Mano-ganesan.jpg
 2 Views

“தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர்ப் பலகைப் படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது எனச் சீன தூதரகம் எனக்குத் தெரிவித்துள்ளது. எனினும், இதுபற்றி யோசித்துப் பார்த்தால், தமிழ் மொழியைப் புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகின்றது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பைக் கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழிச் சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி, திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கின்றார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், நடந்த சட்டமா குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீனத் தூதரகமா? இலங்கை அரசா? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை – சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழிப் போராட்டத்தைக் கொழும்பு தெருக்களில், துறைமுக நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

தமிழ் மொழியைத் தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் நம் நாட்டின் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டும் உள்ள பெயர்ப் பலகைகளும் இந்த நாட்டில் உள்ளன.

நான் சீனச் தூதுவரை சந்தித்து இது பற்றி விளக்கிக் கூறியுள்ளேன். சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும், அதேபோல் சீன நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில், பண்டைய வரலாற்று காலம் தொட்டு நிலவி வரும் உறவுகளைப் பற்றி அப்போது சீனத் தூதுவர் என்னிடம் மிகவும் சிலாகித்துக் கூறினார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதமே நான் சீனச் தூதரகத்துக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். தற்போது துறைமுக நகர் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்கப் போகும் சீன நிறுவனங்கள் இதுபற்றி மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறினேன்.

சீனத் தூதரகத்தில் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு பிரிவை அமைத்து, இலங்கை வரும் சீன நிறுவனங்களுக்குப் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழியையும் எழுதும் விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினேன்.

தற்போது சமூக ஊடகங்களில் உலாவரும் ஒரு தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் கொண்ட பெயர்ப் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டது எனச் சீனத் தூதரகம் எனக்கு அறிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும், நிலைமையில் பெரிய முன்னேற்றம் கிடையாது. இது கவலைக்குரியது. இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக எமது மொழியுரிமை குறித்து, நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.

இன்று யோசித்துப் பார்த்தால், இலங்கை வரும் சீன நிறுவனங்கள், தமிழைப் புறக்கணிக்க, நமது இலங்கை அரசிடம்தான் கற்றுகொள்கின்றனர் போல் தெரிகின்றது. அந்தளவுக்கு உள்ளூர் நிலைமை மோசம்.

கடந்த அரசில், அரச கரும மொழித்துறையும் எனது நேரடிப் பொறுப்பில் இருந்தபோது, எனக்கு ஒதுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு மிக அதிகமான பணியை நான் ஆற்றினேன். நாட்டில் எங்காவது பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாமலோ, பிழையாகவோ இருந்தால், எவரும் என்னை நேரடியாக எனது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தேன்.

நாட்டில் மொழித்துறைக்குப் பொறுப்பாக ஒரு அமைச்சர் இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலைமை நிலவியது. இது அனைத்து தமிழ் மொழி எழுதி, பேசி வரும் அனைவரது மனசாட்சியும் அறிந்த உண்மை.

பேராசிரியர் சந்திரசேகரனை அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவராக நியமித்து, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். புகார்களை உள்வாங்கி திருத்தி அமைக்கும் நிலையம் ஒன்றை, அமைச்சில் அமைத்தேன்.

அதேபோல், அரச நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வசதி இல்லாவிட்டால் எனது அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தேன். கனடா நாட்டுடன் ஒப்பந்தம் செய்து மொழி சட்ட அமுலாக்கலைப் படிபடியாக மேம்படுத்தினேன்.

இப்போது அந்த பெயரில் அமைச்சே கிடையாது. அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களம் ஆகியவை எந்த அமைச்சின் கீழ் உள்ளன என்றே பாமர மக்களுக்கு தெரியவில்லை. இந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது.

இதுதான் இன்றைய அரசின் நிலைமை. இது இன்று இந்த அரசில் இருக்கின்ற தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோருக்குத்தான் வெளிச்சம். இந்த அரச எம்.பிக்களுக்கே, இன்று இந்த மொழித்துறை அமைச்சர் யார் எனத் தெரியுமோ என எனக்குப் பெரும் சந்தேகமாக உள்ளது.

இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும். அந்தப் போராட்டத்தையும், இலங்கை, சீனம் ஆகிய இரண்டு நாட்டு அரசுகளுக்கும் எதிராகவே செய்ய வேண்டி வரும். இந்நாட்டு அரசமைப்பில் உள்ள அரச கரும மொழி சட்டத்தை மீறும் பெயர்ப் பலகைகளில் கறுப்பு வண்ணத் தாரைப் பூசும் போராட்டத்தை நானே தலைமை தாங்கி நடத்த வேண்டி வரும்” – என்றுள்ளது

 

https://www.ilakku.org/?p=50518

  • கருத்துக்கள உறவுகள்

சீன எதிர்ப்பாளர்கள் போலி செய்திகளை பரப்புகின்றனர் – சீனத் தூதரகம் சீற்றம்

 
chinese.jpg
 2 Views

சீனா எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் மேற்குல ஊடகங்களிலும் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சீன மொழியை உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தியமைக்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்தார் என டுவிட்டரில் வெளியான பதிவினை சுட்டிக்காட்டி சீன தூதரகம், சீனா எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் மேற்குல ஊடகங்களிலும் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் என தெரிவித்துள்ளது.

சீனாவின் தடுப்பூசி கொரோனா வைரசினை எதிர்த்து போராடுவதற்கு உதவும் ஆனால் சீனாகுறித்த அச்சம் இன்னொரு வைரஸ் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது

https://www.ilakku.org/?p=50521

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

ஆகா! இதையெல்லாம் நம்பிவிட்டீர்களா? ஈழத்தமிழருக்கு இப்படியெல்லாம் படம் காட்ட தெரியாவிட்டால் எப்படி உலகமெல்லாம் பரந்து விரிந்திருக்க முடிந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டாமா? 😁

நான் தான் எழுதினேன்  2009ஆம் ஆண்டு. பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின்  வேண்டுதல்படியும்...யு.கே தமிழ் அமைப்புகளின் வேண்டுதல்படியும். ஒரு பிரான்ஸ் அமைச்சரும்...ஒரு யு.கே அமைச்சரும். இலங்கைபோய் கோத்தபாயவுடன்  போரை நிறுத்தும்படி கேட்டுக்கொணடார்கள். இது உண்ணமைச்சம்பவம் இதில் பிரான்சில் விசுகரும்...யுகேயில். நாதமும் பங்கு கொண்டிருக்கலாம் என நம்பினேன் .இலங்கை..இந்தியாவில். அமைச்சரைச் சந்திப்பது கடவுளைக் கண்டதுபோல். ஐரோப்பாவில் அப்படியில்லை.  கம்பேர்க் என்ற  மாநகரில் பிரபல (ஜேர்மனி)அறுவைச்சிகிக்கை  நிபுணராக இலங்கையிலிருந்து அகதியாக வந்த தமிழன் பதவியிலிருந்தார் அவர் இடமாற்றம்பெற்று  Munchen க்கு சென்ற போது ஜேர்மனி  கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்.  மற்றும் பல அமைச்சர்கள் மத்தியில் நடத்த கூட்டத்தில் ஜேரமன் மொழியில் பேசினார் ..அதில் இங்கே தான் வரப்பட்ட கஸ்டத்தையும்  விசாப்பெற...கல்விகற்க...பட்ட துன்பத்தையும். நாட்டைவிட்டுப் போ என்று வந்த பலகடிதங்களையும்  இலங்கையில் தமிழ் மக்கள் படும் கஸ்டங்களையும் எடுத்துக் கூறினார் கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்...மற்றும் பலரும் கண்ணீர் விட்டார்கள்  மட்டுமல்ல கனசலரும் உள்நாட்டு அமைச்சரும் கை கொடுத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்கள்..இந்த விடியோ சிலசமயம் குமாரசாமியண்ணையிடமிருக்கலாம்  இங்கே யாரும் படம் காட்டவில்லை. ஈழத்தமிழன் பரத்திருக்கக்காரணம் இராண்டாம் உலகமாக யுத்ததின்பின் ஐ.நா சபையாலும்..உலகின் பலநாடுகளாலும். எற்றுக்கொள்ளப்பட்ட  அகதிச்சட்டமாகும் ..

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

நான் தான் எழுதினேன்  2009ஆம் ஆண்டு. பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின்  வேண்டுதல்படியும்...யு.கே தமிழ் அமைப்புகளின் வேண்டுதல்படியும். ஒரு பிரான்ஸ் அமைச்சரும்...ஒரு யு.கே அமைச்சரும். இலங்கைபோய் கோத்தபாயவுடன்  போரை நிறுத்தும்படி கேட்டுக்கொணடார்கள். இது உண்ணமைச்சம்பவம் இதில் பிரான்சில் விசுகரும்...யுகேயில். நாதமும் பங்கு கொண்டிருக்கலாம் என நம்பினேன் .இலங்கை..இந்தியாவில். அமைச்சரைச் சந்திப்பது கடவுளைக் கண்டதுபோல். ஐரோப்பாவில் அப்படியில்லை.  கம்பேர்க் என்ற  மாநகரில் பிரபல (ஜேர்மனி)அறுவைச்சிகிக்கை  நிபுணராக இலங்கையிலிருந்து அகதியாக வந்த தமிழன் பதவியிலிருந்தார் அவர் இடமாற்றம்பெற்று  Munchen க்கு சென்ற போது ஜேர்மனி  கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்.  மற்றும் பல அமைச்சர்கள் மத்தியில் நடத்த கூட்டத்தில் ஜேரமன் மொழியில் பேசினார் ..அதில் இங்கே தான் வரப்பட்ட கஸ்டத்தையும்  விசாப்பெற...கல்விகற்க...பட்ட துன்பத்தையும். நாட்டைவிட்டுப் போ என்று வந்த பலகடிதங்களையும்  இலங்கையில் தமிழ் மக்கள் படும் கஸ்டங்களையும் எடுத்துக் கூறினார் கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்...மற்றும் பலரும் கண்ணீர் விட்டார்கள்  மட்டுமல்ல கனசலரும் உள்நாட்டு அமைச்சரும் கை கொடுத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்கள்..இந்த விடியோ சிலசமயம் குமாரசாமியண்ணையிடமிருக்கலாம்  இங்கே யாரும் படம் காட்டவில்லை. ஈழத்தமிழன் பரத்திருக்கக்காரணம் இராண்டாம் உலகமாக யுத்ததின்பின் ஐ.நா சபையாலும்..உலகின் பலநாடுகளாலும். எற்றுக்கொள்ளப்பட்ட  அகதிச்சட்டமாகும் ..

கீழே, அகஸ்தியன் இணைத்த இணைப்பில்...  
மருத்துவர்  திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் அவர்களைப் பற்றி உள்ளது.
காணொளியை.... தேடிக் கொண்டிருக்கின்றேன், கிடைத்தவுடன் இணைத்து விடுகின்றேன்.

 

 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

கீழே, அகஸ்தியன் இணைத்த இணைப்பில்...  
மருத்துவர்  திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் அவர்களைப் பற்றி உள்ளது.
காணொளியை.... தேடிக் கொண்டிருக்கின்றேன், கிடைத்தவுடன் இணைத்து விடுகின்றேன்.

 

 

 

மிக்க நன்றி தமிழ் சிரியண்ணை 😂😂👍👍

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

மிக்க நன்றி தமிழ் சிரியண்ணை 😂😂👍👍

அங்கேலா மெர்கெல்  அம்மையார் முன், உமேஷ்வரனின் வரை.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2021 at 11:10, தமிழகன் said:

உறவே,

தயவுகூர்ந்து வரும்காலத்தில் இது போல செய்திகளை பகிரும் போது கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள் உறவே. புதிய உறுப்பினர் என என் ஆலோசனையை தட்டி கழிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பகிர்வை நான் பல வாட்சப் குழுக்களில் பல கட்சிகாரார், குறிப்பாக தீம்கா காங்கிரஸ்காரர் இருக்கும் தளங்களில் எல்லாம் பகிர்ந்து விட்டேன்.

இப்போ அவர்கள் எல்லாம் என்னையும், அண்ணனையும் , நாம் தமிழரையும் மிக மோசமாக கிண்டல் அடிக்கிறார்கள்.

உங்களை போல் இதை நகைசுவையாக சொன்னேன் என்று பல்டி அடிக்கும் லாவகமும் எனக்கு வாய்க்கவில்லை.

கருத்தில் எடுங்கள் உறவே.

உறவே தமிழகன், நீங்கள் நிச்சயமாகவே நாதகவையோ அல்லது அதன் தலைவரையோ புதுச் சைக்கிள் போல "கழட்டிப் பூட்ட" வந்த அண்டர்கவர் ஆள் தான்! சந்தேகமேயில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.