Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்

சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்

தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம்

தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டி
உப்பு - 1 டீஸ்பூன்
தேன் - 3 மேஜைகரண்டி
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை :

கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.

வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.

குறிப்பு :

உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம்

https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/05/24103556/2664650/Tapioca-Honey-Salad-Tapioca-Salad.vpf

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாலத்தில் மரவள்ளிக்கிழங்கு எமது பிரதேசங்களில் இருக்கவில்லை அது பிற்காலத்தில்தான் அறிமுகமானது என எண்ணுகிறேன்.

16 minutes ago, karu said:

சங்ககாலத்தில் மரவள்ளிக்கிழங்கு எமது பிரதேசங்களில் இருக்கவில்லை அது பிற்காலத்தில்தான் அறிமுகமானது என எண்ணுகிறேன்.

15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் ஆங்கிலேயர்கள் தென்னமெரிக்காவிலிருந்து ஆபிரிக்காவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இணையத்தில் நம்மவர்கள் வரலாற்றைக் கண்டபடி எழுதித் தள்ளுவதில் விண்ணர்கள். 😄

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி.   மிளகாய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலையட்படப் பல சொலனேசியேக் குடும்பத் தாவரங்கள் அமெரிக்காவுக்குக் கொலம்பஸ் போனதற்குப் பின்பே ஐரோப்பாவுக்குள் கொண்டு வரப்பட்டன.  அவ்வாறே மரவள்ளிக்கிழங்கும்.  தற்போது நாம் அவற்றை நமது பாரம்பரியப் பயிர்களாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.

Just now, karu said:

பதிலுக்கு நன்றி.   மிளகாய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலையட்படப் பல சொலனேசியேக் குடும்பத் தாவரங்கள் அமெரிக்காவுக்குக் கொலம்பஸ் போனதற்குப் பின்பே ஐரோப்பாவுக்குள் கொண்டு வரப்பட்டன.  அவ்வாறே மரவள்ளிக்கிழங்கும்.  தற்போது நாம் அவற்றை நமது பாரம்பரியப் பயிர்களாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.  தக்காளியும் இதிலடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் ஆங்கிலேயர்கள் தென்னமெரிக்காவிலிருந்து ஆபிரிக்காவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இணையத்தில் நம்மவர்கள் வரலாற்றைக் கண்டபடி எழுதித் தள்ளுவதில் விண்ணர்கள். 😄

17ம் நூறாண்டு வரை ஆங்கிலேயர்கள் வரவில்லை.

15ம் நூற்றண்டில் வந்தவர்கள் போர்த்துக்கேயர். அவர்களது பிரேசில் கொலனியில் இருந்தே மரவள்ளி அப்பிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் வந்தது. இன்று நைஜீரியா நாடே மரவள்ளி விவசாயம், சாப்பாட்டில் உலகின் முதல் நாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

17ம் நூறாண்டு வரை ஆங்கிலேயர்கள் வரவில்லை.

15ம் நூற்றண்டில் வந்தவர்கள் போர்த்துக்கேயர். அவர்களது பிரேசில் கொலனியில் இருந்தே மரவள்ளி அப்பிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் வந்தது. இன்று நைஜீரியா நாடே மரவள்ளி விவசாயம், சாப்பாட்டில் உலகின் முதல் நாடு.

பனங்கிழங்கு ,ஒடியல் புட்டு, பனங்காய் பணியாரத்திலை கை வைக்காத வரைக்கும் சந்தோசம்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

17ம் நூறாண்டு வரை ஆங்கிலேயர்கள் வரவில்லை.

15ம் நூற்றண்டில் வந்தவர்கள் போர்த்துக்கேயர். அவர்களது பிரேசில் கொலனியில் இருந்தே மரவள்ளி அப்பிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் வந்தது. இன்று நைஜீரியா நாடே மரவள்ளி விவசாயம், சாப்பாட்டில் உலகின் முதல் நாடு.

போத்துகேயர் இலங்கையில் வந்திறங்கியது 1505. 

16ம் நூற்றாண்டு.

இங்கையில் பிரித்தானிய ஆட்சி அமைந்தது 1796இல்.

18ம் நூற்றாண்டு.

நாம் இப்போ 2021 இல் இருக்கிறோம்.

21ம் நூற்றாண்டு.

5 hours ago, karu said:

சங்ககாலத்தில் மரவள்ளிக்கிழங்கு எமது பிரதேசங்களில் இருக்கவில்லை அது பிற்காலத்தில்தான் அறிமுகமானது என எண்ணுகிறேன்.

5 hours ago, இணையவன் said:

15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் ஆங்கிலேயர்கள் தென்னமெரிக்காவிலிருந்து ஆபிரிக்காவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இணையத்தில் நம்மவர்கள் வரலாற்றைக் கண்டபடி எழுதித் தள்ளுவதில் விண்ணர்கள். 😄

🤣. நீங்கள் ஏன் இதை அந்த சங்ககாலம் என்று எடுத்தீர்கள்.

ஐரோப்பியர் வருகைக்கு பின்பே இலங்கையில் சங்க கடைகள் வந்தன. 

குறிப்பாக சிறிமா காலத்தில் சங்க கடைகளும், மரவெள்ளியும் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தன.

ஆகவே இது சங்க கால உணவுதான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

போத்துகேயர் இலங்கையில் வந்திறங்கியது 1505. 

16ம் நூற்றாண்டு.

இங்கையில் பிரித்தானிய ஆட்சி அமைந்தது 1796இல்.

18ம் நூற்றாண்டு.

நாம் இப்போ 2021 இல் இருக்கிறோம்.

21ம் நூற்றாண்டு.

🤣. நீங்கள் ஏன் இதை அந்த சங்ககாலம் என்று எடுத்தீர்கள்.

ஐரோப்பியர் வருகைக்கு பின்பே இலங்கையில் சங்க கடைகள் வந்தன. 

குறிப்பாக சிறிமா காலத்தில் சங்க கடைகளும், மரவெள்ளியும் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தன.

ஆகவே இது சங்க கால உணவுதான்🤣.

அப்படியென்றால் இது கடைச்சங்க - அதாவது சங்கக்கடைக் காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, karu said:

அப்படியென்றால் இது கடைச்சங்க - அதாவது சங்கக்கடைக் காலம்.

🤣👌 அருமையான சிலேடை. உங்களுக்கு சங்க பலகையில் இடம் கட்டாயம் உண்டு😀.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்முறை தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆகவே..... இலங்கைக்கும் அதுக்கும், போர்த்துக்கேயருக்கும் தொடர்பில்லை.

முக்கியமாக, தெற்கு சிங்கள பகுதிக்கு போர்த்துக்கேயர் வந்ததுக்கும், வடக்கே தமிழர் பகுதிக்கு வந்துக்கும் வித்தியாசம் உண்டு, வெறுமனே, இலங்கைக்கு போர்த்துக்கேயர் வந்தார்கள் என்று சொல்ல முடியாது. அந்த காலத்தில் ஒன்றாக இருக்கவில்லை.

போர்த்துக்கேயர் வந்தது, 1498 மே 20ம் திகதி, இந்திய துணைக்கண்டத்தின், கேரள பகுதிக்கு. -  15ம் நூறாண்டு.

பக்கத்தில் இருந்த தீவின் சிங்கள மன்னர் விஜயபாகுவின் ஆட்சியை முடிக்க, அவரது மூன்று மகன்கன் கோரிக்கையில் உள்ளே புகுந்தது 1505ல். 

சிங்கள பகுதியில், நேரடி போர்த்துக்கேயர் ஆட்சி ஆரம்பித்தது 1574ல். ஆனால் வடக்கே தீவுப்பகுதியில் தான் நேரடி ஆட்சி முதலில் தொடங்கி உள்ளது.  

சென்னைக்கு பக்கத்தில் பழவேட்க்காடு போனது 1502. போகும் வழியில் இருந்த மாடுகள் தீவு, (நெடுந்தீவு: Ilha das Vacas (“Island of the Cows”)) முதலில் அவர்கள் கையில் விழுந்தது. 1499க்கும் 1502க்கும் இடையே.

நெடுந்தீவு, ஊர்காவத்துறை போன்ற பகுதிகளில் சிதிலம் அடைந்த கோட்டைகள் உள்ளன. மன்னார் பகுதியில் 1540ல் கட்டிய கோட்டை இன்றும் உள்ளது.

யாழ்ப்பாண ராச்சியம் வீழந்தது 1619. அதுவரை தீவுப்பகுதி போர்த்துக்கேயர் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனாலும் 1640ல் ஒல்லாந்தர் பிடித்து விட்டனர்.

தனித்தனியாக ஆளப்பட்ட தீவுக்கு 1796ல் சிங்கள பகுதிக்கு வந்தாலும், 1799 அக்டோபர் 31ம் திகதி வன்னி பகுதியையும், 1815ம் ஆண்டு இரண்டாம் கண்டி யுத்தத்தின் பின்னான, உடன்படிக்கை மூலம் கண்டியையும் பிடித்த பின்னர் 1834ம் ஆண்டிலேயே, உத்தியோகபூர்வமாக, பிரிட்டிஷ் சிலோன் என்னும் முழு நாடு உருவாகியது.   

****

இன்னும் விபரமாக சொல்வதானால், 1600ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி லண்டனில் பதிவானது, கிழக்கிந்திய கொம்பனி.

ஆனாலும், உள்நாட்டு கலகங்கள், பாராளுமன்ற படை தளபதி ஆலிவர் குரோம்வெல், மன்னர் முதலாம் சார்ள்ஸ் சண்டைகள் காரணமாக, இந்த கொம்பனி இயங்கவில்லை.

இங்கிலாந்தின் குடியரசு ஆட்சி 11ஆண்டுகள் நீடித்த பின்னர், ஒல்லாந்தில் இருந்து நாடு திரும்பிய, சிரச்சேதம் செய்யப்பட்ட, முதலாம் சார்ள்ஸ் மன்னர், மகன் இரண்டாம் சார்ள்ஸ்ன், திருமணத்துக்காக, போர்த்துக்கேய இளவரசியினை கலியாணம் (23 June 1661) கட்டிய போது, சீதனமா, போர்த்துக்கேய அரசினால் கொடுக்கப்பட்ட, பம்பாய் பகுதியிலேயே, இந்த கொம்பனி, முதலில் காலடி வைத்து, ஆட்டத்தினை தொடங்கியது.

ஆக, 1600ம் ஆண்டு, வருச கடைசியில் ஆரம்பித்த கொம்பனி, 62 வருசத்துக்கு பிறகு, இந்தியா வந்து, கடைசியில், அந்த நிறுவன அதிகாரிகள் செய்த பெரும் ஊழல் காரணமாக, 1858ல் கலைக்க பட்டது.

Edited by Nathamuni

15 hours ago, karu said:

பதிலுக்கு நன்றி.   மிளகாய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலையட்படப் பல சொலனேசியேக் குடும்பத் தாவரங்கள் அமெரிக்காவுக்குக் கொலம்பஸ் போனதற்குப் பின்பே ஐரோப்பாவுக்குள் கொண்டு வரப்பட்டன.  அவ்வாறே மரவள்ளிக்கிழங்கும்.  தற்போது நாம் அவற்றை நமது பாரம்பரியப் பயிர்களாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.

மரவள்ளிக்கே நாங்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாமையால் அதிர்சிக்குள்ளாகி இருக்கிறம். இதில் மிளகாயையும் கத்தரிக்காயையும் வெள்ளைக்காரர்தான் எங்களுக்குக் காட்டினது என்றதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 😄 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

மரவள்ளிக்கே நாங்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாமையால் அதிர்சிக்குள்ளாகி இருக்கிறம். இதில் மிளகாயையும் கத்தரிக்காயையும் வெள்ளைக்காரர்தான் எங்களுக்குக் காட்டினது என்றதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 😄 

கத்தரிக்காய், எங்களது என்று நினைக்கிறேன்.

மாங்காய் எங்களது. போர்த்துக்கேய மொழியில், மாங்கா என்றும், ஆங்கிலத்தில் கா, கோ என்று மாறி விட்டதாக பிபிசி சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இந்த செய்முறை தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆகவே..... இலங்கைக்கும் அதுக்கும், போர்த்துக்கேயருக்கும் தொடர்பில்லை.

போர்த்துக்கேயர் வந்தது, 1498 மே 20ம் திகதி, இந்திய துணைக்கண்டத்தின், கேரள பகுதிக்கு. -  15ம் நூறாண்டு.

பக்கத்தில் இருந்த தீவின் சிங்கள மன்னர் விஜயபாகுவின் ஆட்சியை முடிக்க, அவரது மூன்று மகன்கன் கோரிக்கையில் உள்ளே புகுந்தது 1505ல். 

சிங்கள பகுதியில், நேரடி போர்த்துக்கேயர் ஆட்சி ஆரம்பித்தது 1574ல். ஆனால் தீவுப்பகுதியில் தான் நேரடி ஆட்சி முதலில் தொடங்கி உள்ளது.  

சென்னைக்கு பக்கத்தில் பழவேடக்காடு போனது 1502. போகும் வழியில் இருந்த மாடுகள் தீவு, (நெடுந்தீவு: Ilha das Vacas (“Island of the Cows”)) முதலில் அவர்கள் கையில் விழுந்தது. 1499க்கும் 1502க்கும் இடையே.

நெடுந்தீவு, ஊர்காவத்துறை போன்ற பகுதிகளில் சிதிலம் அடைந்த கோட்டைகள் உள்ளன. மன்னார் பகுதியில் 1540ல் கட்டிய கோட்டை இன்றும் உள்ளது.

யாழ்ப்பாண ராச்சியம் வீழந்தது 1619. அதுவரை தீவுப்பகுதி போர்த்துக்கேயர் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனாலும் 1640ல் ஒல்லாந்தர் பிடித்து விட்டனர்.

தனித்தனியாக ஆளப்பட்ட தீவுக்கு 1796ல் சிங்கள பகுதிக்கு வந்தாலும், 1799 அக்டோபர் 31ம் திகதி வன்னி பகுதியையும், 1815ம் ஆண்டு இரண்டாம் கண்டி யுத்தத்தின் பின்னான, உடன்படிக்கை மூலம் கண்டியையும் பிடித்த பின்னர் 1834ம் ஆண்டிலேயே, உத்தியோகபூர்வமாக, பிரிட்டிஷ் சிலோன் என்னும் முழு நாடு உருவாகியது.     

தல,

இதெல்லாம் நாங்கள் ஆண்டு 9 வரலாறும் சமூக கல்வியிலும் படித்து விட்டோம்🤣.

நான் மேலே சுட்டி காட்டியது உங்களுக்கு நூற்றாண்டு கணக்கில் இருக்கும் தடுமாற்றத்தை.

11 minutes ago, இணையவன் said:

மரவள்ளிக்கே நாங்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாமையால் அதிர்சிக்குள்ளாகி இருக்கிறம். இதில் மிளகாயையும் கத்தரிக்காயையும் வெள்ளைக்காரர்தான் எங்களுக்குக் காட்டினது என்றதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 😄 

யாழ்பாணத்தின் தேசிய தாவரம் புகையிலையும் நம்மது இல்லையா! ஐயகோ!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

தல,

இதெல்லாம் நாங்கள் ஆண்டு 9 வரலாறும் சமூக கல்வியிலும் படித்து விட்டோம்🤣.

நான் மேலே சுட்டி காட்டியது உங்களுக்கு நூற்றாண்டு கணக்கில் இருக்கும் தடுமாற்றத்தை.

தல... உங்களுடன் குதியம் குத்த எனக்கு நேரம் இல்லை. நீங்கள் வேண்டும் என்றே வம்பு இழுக்கும் நோக்கத்துடன் வந்திருப்பது புரிகிறது. 

ஆகவே.... மகிழ்வாக இருங்கள். வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கத்தரிக்காய், எங்களது என்று நினைக்கிறேன்.

மாங்காய் எங்களது. போர்த்துக்கேய மொழியில், மாங்கா என்றும், ஆங்கிலத்தில் கா, கோ என்று மாறி விட்டதாக பிபிசி சொல்கிறது.

மாங்காய் எங்கட எண்டு இப்படி பொத்தாம் பொதுவில் சொன்னால் எப்படி தல?

யாழ்பாணத்தில் எந்த ஊர், எந்த குறிச்சிக்கு உரியது எண்டு சொல்ல வேண்டாமே?

பிறகு உவங்கள் பாகிஸ்தானியள், வங்காலியள், இந்தியன் எண்டு மத்திய தரைக்கோட்டுக்கு அருகில் இருக்கிற எல்லாரும் தங்கட எண்டு போடுவாங்கள்.

சும்மா விடேலுமே. ஒளவையார் பிள்ளையாருக்கு கொடுத்த முக்கனி எல்லே? கிட்டதட்ட 2 மில்லியன் ஆண்டாவது இருக்கும்?

2 minutes ago, Nathamuni said:

தல... உங்களுடன் குதியம் குத்த எனக்கு நேரம் இல்லை. நீங்கள் வேண்டும் என்றே வம்பு இழுக்கும் நோக்கத்துடன் வந்திருப்பது புரிகிறது. 

ஆகவே.... மகிழ்வாக இருங்கள். வருகிறேன்.

என்ன தல,

ஒரு மாசம் லீவு போட்டு வந்ததே உலக விசயங்களை உங்களிட்ட கேட்டு அறியத்தான். இப்படி சொல்லுறியள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

.

ஆகவே இது சங்க கால உணவுதான்🤣.

👍😂 - ஆனா இதில் இலங்கைக்கு சங்க கால உணவு என்றில்லையே

6 minutes ago, goshan_che said:

ஒளவையார் பிள்ளையாருக்கு கொடுத்த முக்கனி எல்லே? கிட்டதட்ட 2 மில்லியன் ஆண்டாவது இருக்கும்?

கத்தரிக்காயே இல்லையெண்டு ஆகிப்போச்சு. இனி மாவென்ன வாழையென்ன.

இன்றைய பாகிஸ்தான் ஒருவேளை அன்றைய குமரிக்கண்டமா இருந்திருக்குமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

👍😂 - ஆனா இதில் இலங்கைக்கு சங்க கால உணவு என்றில்லையே

யுவர் ஆனர்,

உங்களுக்கு தெரியாத சட்டம் எதுவுமில்லை.

நான் சொன்ன கடிஜோக்குக்கு ஏற்ற அளவு விருப்பபுள்ளியை போட்டு விடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன் 🤣.

1 minute ago, இணையவன் said:

கத்தரிக்காயே இல்லையெண்டு ஆகிப்போச்சு. இனி மாவென்ன வாழையென்ன.

இன்றைய பாகிஸ்தான் ஒருவேளை அன்றைய குமரிக்கண்டமா இருந்திருக்குமோ ?

யு ஆர் டூ லேட்.

ஏற்கனவே ஆப்கனிஸ்தான்-பாகிஸ்தான் எங்கினும், ஈரான் வரைக்கும் தமிழ் பெயரில் ஊர்கள் உள்ளதாக ஒரு “ஆராய்சி” வீடியோ வந்தாகிவிட்டது😂.

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு மரவள்ளி சுவைமிக்க ஒரு கறிதான்,

நமக்கு சிறு வயசிலிருந்தே மரவள்ளிகிழங்கு கறி எண்டால் குமட்டும்.

இந்த லட்சணத்துல மரவள்ளிகிழங்கோட தேனையும் கலந்து அதுக்குள்ள தேய்காய்பூ வேறயா?

கவுண்டமணி சொன்னமாதிரி இவனுக இண்டைக்கு வாந்தி எடுக்க வைக்காமல் விடமாட்டாங்கள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இணையவன் said:

கத்தரிக்காயே இல்லையெண்டு ஆகிப்போச்சு. இனி மாவென்ன வாழையென்ன.

இன்றைய பாகிஸ்தான் ஒருவேளை அன்றைய குமரிக்கண்டமா இருந்திருக்குமோ ?

இணையவன்,

இது சீரியஸ் ஆக, விவாதிக்கும் பகுதி, இங்கு நிர்வாகத்தின் சார்பில் நீங்களும் பதிவு செய்கிறீர்கள்.

இங்கே, சிரிப்பு பகுதியாக்கி, பதிவிடும் அடுத்தவர்களையும் இளக்காரம் செய்வதை அங்கீகரிக்கிறீர்களா?

இது bullying இல்லாமல் வேறென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய (பல) கருத்தாளர்களை வயதை, அதிக படிப்பை, அவர்கள் இன்ன இயக்கத்தவராக இருக்கலாம் என்ற அனுமான அடிப்படையில், முஸ்லீம்மாக இருக்கலாம் என்ற மத அடிப்படையில், திராவிட சொம்பு என்ற சொல்லாடலில் தாம் ஈடுபட்ட போது, புலப்படாத bullying and harassment.

கள உறவுகள் பிள்ளையை கொரோனாகாலத்தில் பள்ளிக்கு அனுப்புவது சரியா பிழையா என அநாவசியமாக அட்வைஸ் கொடுக்கும் போது புலப்படாத bullying and harassment.

கள உறவுகளை பற்றி சதா கொசிப் அடிக்கும் போது புலப்படாத bullying and harassment.

இப்போ தக்காளி சட்னி, மன்னிக்கவும் மரவெள்ளி துவையலை கிண்டல் பண்ணும் போது மட்டும் புலப்படுவது என்னே விந்தை!

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளி புடுங்கோனும்.அப்ப நான் வரட்டே.😄😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்கள் சேட்டைகள் உடான்ச் சாமியார் திரியில் இருந்து ஆரம்பமாகிறது.

தாய்லாந்தில் போர்த்துக்கேயர் கொண்டு போன பட்டீஸ் என்றால், அது பிழை என்று சான்றுடன் வாருங்கள்.

இந்தோனேசியா தண்ணீர் கிரந்தத்துடன் வர வேண்டிய தேவை இல்லை.

வரும்போதே தெரியும், வேண்டுமென்றே என்னுடன் மோதவே வந்தீர்கள் என்று. அதனை தானே செய்கிறீர்கள்.

நூறாண்டு கணக்கு பிழை என்கிறீர்கள். விளக்கமாக பதில் தந்தால், நையாண்டி, கிரந்தம்.

உங்களை போல வேலை வெட்டி இல்லாமல் இங்கே நாம் மினக்கெடவில்லை. 

ஆகவே வேறு எங்காவது உங்கள் கத்தியை சுழட்டுங்கள். 

இதுக்கு மேலும், உங்களுடன் உரையாட, எனக்கு விசர் இல்லை. நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

உங்கள் சேட்டைகள் உடான்ச் சாமியார் திரியில் இருந்து ஆரம்பமாகிறது.

தாய்லாந்தில் போர்த்துக்கேயர் கொண்டு போன பட்டீஸ் என்றால், அது பிழை என்று சான்றுடன் வாருங்கள்.

இந்தோனேசியா தண்ணீர் கிரந்தத்துடன் வர வேண்டிய தேவை இல்லை.

வரும்போதே தெரியும், வேண்டுமென்றே என்னுடன் மோதவே வந்தீர்கள் என்று. அதனை தானே செய்கிறீர்கள்.

நூறாண்டு கணக்கு பிழை என்கிறீர்கள். விளக்கமாக பதில் தந்தால், நையாண்டி, கிரந்தம்.

உங்களை போல வேலை வெட்டி இல்லாமல் இங்கே நாம் மினக்கெடவில்லை. 

ஆகவே வேறு எங்காவது உங்கள் கத்தியை சுழட்டுங்கள். 

அமைதி கொள்ளுங்கள் நாதம் மாத்தையா.

எல்லாம் கர்மா.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத |
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் || 

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

5 minutes ago, சுவைப்பிரியன் said:

மரவள்ளி புடுங்கோனும்.அப்ப நான் வரட்டே.😄😄

நாங்கள் புடுங்கிறதெல்லாம் வேஸ்ட் என்றியளா🤣

மரவளிக்கு ஒரு பச்சை மிளாகாய் சம்பல் இடிச்சு அதோட சாப்பிட்டா நல்லா இருக்குமே,  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.