Jump to content

"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!"

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!"
***************************************
குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை ரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மலைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.
திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..
அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!
சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.
அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.
ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.
தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். **************************************
பகிர்வு.
துரை. சுவேந்தி.
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/6/2021 at 12:56, பிரபா சிதம்பரநாதன் said:

உலகின் மூத்த மொழி தமிழ்.இது உலகமே ஒத்துக்கொண்ட விடயம்.
தமிழின வரலாறுகள்  மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கின்றது.
இந்தோனிசியாவில் தமிழர் வழிபடும் தெய்வ சிற்பங்கள் காடுகளில் தேடுவாரற்று இருக்கின்றது.
கொரிய மொழியுடன் தமிழ் மொழி ஒற்றுமை பற்றிய ஆராய்சிகள் ஏராளம்.
கம்போடியாவில் சைவ கோவில் குளங்கள்.
இலங்கையிலும் காலி தொடக்கம் காங்கேசந்துறை வரைக்கும் தமிழர் வாழ்ந்த அடையாளங்கள்.இன்னும் பல ஆயிரம் தமிழினம் சம்பந்தப்பட்ட அடையாளங்களை சொல்லலாம்.

இருந்தாலும் இன்று தமிழனுக்கு ஒரு சொந்த நாடில்லை. ஏன் என்று உங்களால் விளக்க முடியுமா?

நானும்  உங்களைப்போல்த்தான்  எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும்  ஒருவன்

ஆனால் எமது முதாதையர்களின் சில  விடயங்களை அதிகம் கேள்விக்குட்படுத்துதல் ஆகாது?

ஏனெனில் அவற்றின் தேவையும் செயற்பாட்டின் நன்மையும் கருதி நிறுத்திக்கொள்வதே உகந்தது?

உன் வினை உன்னைச்சுடும்என்பதற்கும்  உன் வினை  உன் பிள்ளையை சுடும்  என்பதற்குமான கனதியை  பாருங்கள்.  எது அதிகம் வேலை  செய்யும்?? எனவே தேவைக்கேற்ற பலனை  அதிகம் தரக்கூடிய தொடுதலே முக்கியம்?

எங்கப்பா  தாத்தா  செய்த  பாவம் எனக்கெதுக்கு வரணும் என்று

இப்படியொரு  கேள்வியை சிறு  வயதில் முதியவர் ஒருவரிடம் நான் வைத்தபோது...

தாத்தா  வைத்த மாம்பழம்  வேண்டும்?

தாத்தா  வைத்த தென்னைமரம் பனைமரம் வேண்டும்?

தாத்தாவின் அறுணாக்கொடியிலிருந்து பொல்லுவரை வேண்டும்?

ஆனால் அவர்விதைத்த கெடுதல்கள்  வேண்டாம்  உனக்கு??

என்ன  நியாயம் என்று சொல்லு  பார்ப்பம் என்றார்

மூச்சு விடல  நான்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சட்டமீறல்கள் குற்றங்கள் செய்தவர்களே சிறை மீண்டு தங்கள் வாழ்வை மீளமைத்துக் கொள்ளும் மேற்கு நாடுகளில் வாழ்ந்தாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை விட முடியாதவர்களாக இருக்கிறோம்! இந்த லட்சணத்தில் மூத்த மொழி மூத்த இனமென்று நாம் பின்பக்கத்தால் விடுகிற வாய்விலேயே முன்னோக்கி எப்படி நகர்வதாம்?😂

சரி, ஒரு பேச்சுக்கு இந்த மூட நம்பிக்கை, பிறவிப் பலன், பெற்றோர் புன்ணியமெல்லாம் சரியென்று எடுத்தால்: பெற்றோர் சரியாக இல்லாதவன் கடினமாக உழைக்க வேண்டியதில்லை, ஏனெனில் எப்படியும் அவனுக்கு பெற்றோர் பாவம் பூமராங் போல வந்து தாக்கப் போகிறது. பெற்றோர் புண்ணியவான்களாக இருப்பவனும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை, அவனைப் புண்ணியமே காக்கும்!

இது கிட்டத் தட்ட அரச உதவி பெற்றுக் கொண்டு சும்மா இருப்பது போன்ற நிலை தான்!

Posted

முன்னோர்கள் சொன்னார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு அத்தனை அடி முட்டாள்தனங்களையும் ஏற்று கொள்ள முடியாது. முன்னோர்கள் சொன்னவற்றில் எது சரியானது எது மூடப்பழக்கம் என்று சிந்தித்து அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி  பெற்ற காலத்தில் இது போல் சமூக வலைத்தளங்களிலும் மூடப்பழக்கங்களை பரப்புவோர்  உள்ளனர். விசுகு இங்கு கூறிய மாம்பழ கதை போல் தாத்தா நட்ட  மாமரத்தில் இருந்து பழங்கள் கிடைப்பது போல்    அதை உருவாக்கிய தாத்தா செய்த criminals  எல்லாவற்றுக்கும்  பேரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற முட்டாள்தனத்தை கேள்வி கேட்காமல் விசுகு ஏற்றுக்கொண்டதை போல் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஒரு அறிவுடைய சிறுவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.  

 முன்னோர்கள் எனப்படுபவர்களும் எம்மை போல் பிறந்து வாழ்ந்து செத்துப்போன  சாதாரண மனிதர்கள் தான். அவர்களில் அறிவுடையோரும் இருந்திருப்பார்கள். அடிமுட்டாள்களும் இருந்திருப்பார்கள். ஆகவே முன்னோர்கள் சொன்னாதால்  மட்டும் அவை எல்லாம் சரி என கதையளப்பவர்களை புறக்கணித்து ஒவ்வொரு பிள்ளைகளும் தமது சொந்த அறிவை உபயோகித்து சிந்தித்து செயற்படுவதே சரியானது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/6/2021 at 05:56, பிரபா சிதம்பரநாதன் said:

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

மண்டூர் குரூப் தரை இறங்கி இருப்பதால் இது இனி ஒரு ப்ளோவில் தான் போகும் 
என்பதால் வாசித்துவிட்டு ஏதும் எழுதாமல் செல்வதே உத்தமம் என்று தெரிகிறது 
இருந்தும் .....

எது?
எதுக்காக?
யாரால்? யாருக்கு?

என்பதுதான் அதற்கான பொருளை கொடுக்கும் தவிர்த்து 
விஞ்ஞான விளக்கம் என்பது விஞானத்துக்கு மட்டுமே உதவும் 
இங்கு சிலர் "விஞ்ஞான விளக்கம்" என்று பீற்றுவதை பார்த்து இருப்பீர்கள் 
"விஞ்ஞான விளக்கம்" என்று உலகில் எதுவுமே இல்லை. எப்போதும் கேள்விகள் உடையதுதான் விஞ்ஞானம் 
அப்போது எமக்கு என்ன தரவுகள் ஆதாரம் கையில் இருக்கிறதோ அதை வைத்து நாம் 
ஒரு லாஜிக் ரீதியான முடிவுக்கு வருகிறோம் தவிர ... எந்த விஞ்ஞானியும் இதுதான் முடிந்த முடிவு என்று 
யாழ்கள உலக விஞ்ஞானிகள் போல உளறுவதில்லை.
பூமி தட்டை என்றதும் விஞ்ஞான விளக்கம்தான் மனிதன் சுற்றி சுற்றி நடந்து கடலில் போய் முடியும்போது 
அந்த முடிவை கொண்டான். பின்பு ஒரே சூரியன் எப்படி அதே கிழக்கில் ஒவ்வொரு நாளும் என்ற கேள்வி வரும்போது  அது உருண்டை என்று கொண்டான். 

இதற்கு முந்தியே வானியல் சாஸ்திரம் வானில் தெரிந்த நட்ஷத்திரங்களில் 9 கோள்கள் இருக்கிறது    
என்பதை கண்டறிந்தது உலகின் இன்னொரு பகுதி. 

பகவத்கீதையை நான் மூன்று முறை படித்துவிட்டேன் 
ஆறுதலான நேரம் கிடைக்கும்போதும் இன்னுமொருமுறை மிக ஆழமாக படிக்க விரும்புகிறேன் 

என்னைப்பொறுத்தவரை குருஸ்தோஸ்திர போர்க்களம் என்று பகவத்கீதை ஒரு உண்மையான போரை பற்றி பேசவில்லை . (இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம் மட்டுமே) அது ஒரு உண்மையான போர்க்களாமாக பார்க்கும்போது நிறைய  முரண்பாடு இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை பகவத்கீதை எனக்கு என்னுடன் ஆனா  போரை பற்றியே பேசுகிறது. நான் கடவுளை பின்பற்றி கடவுளை அடைய நினைத்தால்  ... எனக்கு குறுக்கே என்ன இருக்கும் ? இதை நான் எவ்வாறு தாண்ட முடியும்? இதில் நான் யாருடன் எல்லாம் சண்டை  போட வேண்டி வரும்? அதன் முடிவு என்னவாக இருக்கும்? இறுதியில் அதன் பலன் என்னவாக  இருக்கும்   என்று  அதில் தெளிவாக  இருக்கிறது. அந்த கோணத்தில் படிக்கும்போது மட்டுமே அது பொருள்படுகிறது  
மற்றும்படி  அதில் தாராளமான முரண்பாடு உண்டு. 

உதாரணத்துக்கு அதன் தொடக்கமே திருதராஸ்டிதான் அவனுக்கு கண் தெரியாது  போர்க்களம் எவ்வாறு? இருக்கிறது  யார் யார் எல்லாம் எதிரில் இருக்கிறார்கள்? என்று கேட்க்கிறான் ... யார் யார் எல்லாம் எதிரில் இருக்கிறார்கள்  என்று விபரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் சுற்றி பார்க்கிறான் ... தனது குரு ... உறவினர்கள் ... உற்றார் என்று தனது சுற்றமே நிற்கிறது. கிருஷ்னரிடம் சொல்கிறான் இவர்களையெல்லாம் கொன்றுவிட்டு  அந்த வெற்றியை வைத்து நான் என்ன செய்யமுடியும்? அவ்வாறு ஒரு வெற்றி எதற்கு ? 
நாம் தோற்றுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு சென்றுவிடுவோம் கிருஸ்ணா என்கிறான்.

அப்போதான் கிருஷ்ணன் பேச தொடங்குகிறான் ....... நான் எனது தாய் தந்தை குரு உற்றார் உறவினர் ஆச பாசங்கள் எல்லாம் திறந்து  அவற்றுடன் போராடி வெளியேறும்போது... நான் எதை அடைந்துகொள்வேன். 
என்பதே அந்த விளக்கமாக இருக்கிறது.

பகவத்கீதை சரியா/தவறா?
என்பதுக்கான பதில் நாம் பகவத்கீதையை சரியா புரிகிறோமா இல்லையா என்பதில்தான் உண்டு.

சிறுவயதில் குழந்தைக்கு உணவு ஊட்ட தாய் இத்தியில் உம்மாண்டி இருக்கு என்று சொல்லி பயம்காட்டி 
உணவை ஊட்டி விடுகிறார். அது ஒரு தற்காலிக தீர்வாக அப்போது இருந்தாலும் ... நாம் பதின்ம வயதை எட்டும்போது  இருட்டு வந்ததும் அந்த உம்மாண்டியை எதிர்கொள்ள நேர்ந்துவிடுகிறது. அப்போது உம்மாண்டி  நல்லவர்களுக்கு ஒன்றும் செய்யாது தீயவர்களையே பிடிக்கும் என்று ஒரு நம்பிக்கை கதையை  
கூறிவிடுவார்கள். அதில் எமக்கு உருமாண்டியுடன் ஒரு உறவும் நாம் நல்லவர்களாக இருந்துவிட வேண்டும் எனும்  எண்ணமும் தோன்றிவிடுகிறது.

சிலர் வெளிநாடு வந்ததும் தாம்தான் விஞ்ஞானிகள் என்று எண்ணி 
உருமாண்டி என்று ஒன்று இல்லை என்பதை தாம்தான் கண்டுபிடித்ததாக இங்கே எழுதி 
பெருமைப்பட்டு கொள்கிறார்கள். உம்மண்டி என்பது ஒரு கற்பனை என்பது அந்த தாய்க்கும் தெரிந்ததுதான். 

மேலே இருக்கும் கதையில் அவர்கள் முன்னையோரின் தவறுகளை எங்கள் தலையில் கட்டிவிட 
எண்ணவில்லை. முன்னையோர் ஒரு தவறான வழியில் சென்று இருந்தால் கூட அதை தொடர வேண்டிய தேவை  எங்களுக்கு இல்லை. தவறு என்பது எமது மூதையர் தாய்/தந்தையர் செய்திருப்பினும் தவறே அதை திருத்தவேண்டியது எங்கள் கடமை .... அல்லது அதன் பலனை நாம் பெறுவோம் என்றுதான் சொல்கிறது. 

மேலிருக்கும் கதையை நாம் உலகில் இப்போ அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம் 
எமது முன்னையோர் முன்னேற்றம் என்று காடழித்தது நகரங்களை உருவாக்கினார்கள்  
நாம் தூசுபடிந்த காற்று  மழையின்மை .. வறட்ச்சி ... இரசாயன மரக்கறிகள் என்று போராடுகிறோம்.

இந்த கதையை சரியாக புரிந்து நாம் சரியாக செயல்பாடாது போனால் 
எமது அடுத்த தலைமுறைதான் அதற்கான அறுவடையை செய்யப்போவது 

அது சரியா/தவறா?  நீதியா/நியாயமா? என்பதெல்லாம் மழையை தோற்றுவிக்காது 
இயற்கை சுழற்சிதான் மழையை தோற்றுவிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படியா? ஆர் யூ ஷுவர் மருதர்? இது விஞ்ஞான முறைமை பற்றி நீங்கள் படித்த பிறகா அல்லது படிக்காமலே உணர்ந்த பிறகு தெரிந்த உண்மையா?😎

யாரந்த 9 கிரகங்களையும் முதலில் கண்டு பிடித்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/6/2021 at 05:56, பிரபா சிதம்பரநாதன் said:

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

இந்த கதையை காவி திரிபவர்கள் சிந்தனையில் தெளிவின்மை அறியாமை இருக்கிறதே தவிர 
இந்த கதையை உருவாக்கியவன் தெளிவு உள்ளவன்தான் 
சிலர் மூடத்தனமாக பலதையும் நம்பி விடுகிறார்கள்.

இந்த கதை எழுதியவனுக்கு நூறுவீதம் தெரியும் 
200-300 வருடம் முன்பு வாழ்ந்த எம் முன்னோர் இனி சவக்காலைக்குள்ளால் 
எழும்பிவந்து அவர்கள் பிழையை திருத்தப்போவதில்லை என்று 

ஆனால் அடுத்துவரும் ஒரு 200-300 வருடங்களில் இப்போ இந்த கதையை வாசித்துக்கொண்டு வாழ்ந்த்துக்கொண்டு இருக்கும் நாம் இன்னொரு தலைமுறையின் முன்னோராக இருப்போம் 
ஆகவே அந்த தலைமுறையை பாதிக்காத ஒரு வாழ்வு முறையை நாம் வாழவேண்டிய கட்டயாம் 
எமக்கிருக்கிறது என்பதே இதன்மூலம் நாம் புரிய கூடியது .

நான் குடித்துவிட்டு காரை ஓடி சென்று இன்னொரு காரில் மோதினால் 
அதன் பிரதிபலனை எனது பிள்ளை எதிர்காலத்தில் சந்திக்கிறது என்பதை எங்களால் மறுக்க முடியாது 
என்னுடைய வாழ்க்கை தராதரம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே 
இங்கு கூறப்படுகிறது. இங்கு திருந்தவேண்டியது நான்தான் அதனால் வரும் 
பின் விளைவுகளை திருத்தக்கூடிய சக்தியை விடவும் அதை அனுபவிக்க கூடிய ஒரு 
வாழ்க்கையே பிள்ளைக்கு அமையும் என்பதை விட அதுதானே அமைகிறது. 
அதை எங்கள் கண்ணாலேயே பார்க்கிறோமே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Maruthankerny said:

சரி, மருதர். 9 கிரகங்களை யார் கண்டு பிடித்தது முதலில்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே மூடநம்பிக்கை முட்டாள்தனம் அது இது என்று வகுப்பெடுக்க அனைவருக்கும் தெரியும் வரும். ஆனால் நன்றாக சிந்தித்தால் நிதானமாக மனசாட்சியுடன் பேசினால் எல்லோரிடமும் அது உண்டு இடம் வலம் நேரம் காலம் வயதைப் பொறுத்து அது மாறுபடும். அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்,

மாதா பிதா வினை மக்களுக்கு(மக்கட்கு-பிள்ளைகளுக்கு) என்பது

(தீயனவற்றிற்குத் துணை போன/செய்த) பெற்றோர், பிள்ளைகள் எதிர் கொள்ளும் தீராத/தீர்க்க முடியாத துன்பங்களைப் பார்ப்பதனூடாக அடையும் வேதனையே அவர்களுக்கான தண்டனை. 

என்பதாகவே புரிந்து கொள்கிறேன். 

ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா ?

அப்படிப்பார்த்தால்..

யூதர்களை பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்திய ஜேர்மனியின் இன்றைய நிலை.. உலகப் பொருளாதார வல்லரசு.

ஜப்பானின் மீது அணுக்குண்டு வீசிய அமெரிக்கா உலக வல்லரசு...

அதிகம் யோசிக்க வேண்டாம்.. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி எப்போது கிடைக்கும்..? இலங்கையில் தமிழினம் கருவறுக்கப்பட்ட பின்னரா ? .. 😏

அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்.

மாதா பிதா வினை மக்களுக்கு.

என்பன போன்ற வாக்கியங்கள் எல்லாமே மனிதர் அற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவைகளே(பயமுறுத்தி) தவிர, எங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்காக சொல்லப்பட்டவை அல்ல. 

அன்னம் தண்ணி(பால்) அடிக்கிற கதைகள் எல்லாமே "பகுத்து அறி" என்பதற்கானவையே.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

இதைத்தான் அதிகம் உள்ளே போகத் தேவையில்லை என்றேன். எதுக்கு சொல்லப்படுகிறது என்பது புரிந்தால் போதும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, விசுகு said:

இங்கே மூடநம்பிக்கை முட்டாள்தனம் அது இது என்று வகுப்பெடுக்க அனைவருக்கும் தெரியும் வரும். ஆனால் நன்றாக சிந்தித்தால் நிதானமாக மனசாட்சியுடன் பேசினால் எல்லோரிடமும் அது உண்டு இடம் வலம் நேரம் காலம் வயதைப் பொறுத்து அது மாறுபடும். அவ்வளவு தான். 

சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் இந்தத் திரியில் இருக்கும் மூட நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் பற்றி  மட்டுமே  பேசப்படுகிறது. சமூகப் பாதிப்பில்லாத, மற்றவனின் மூக்கை அணுகாத நம்பிக்கைகள்- எவ்வளவு தான் அர்த்தமில்லாமல் இருந்தாலும் - யாரும் வைத்துக் கொள்ளட்டும்.

ஆனால், நம்பிக்கைகளுக்கு போலி விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுவூட்ட மருதர் போன்றோர் முயல்வர் தான். அதனால் தான் ஒன்பது கிரகங்களை யாரோ முதலே கண்டு பிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரிய பிரித்தானியா   முன்னர் செய்த கொடுமைகளுக்கு இன்று அதன் பலனை அனுபவிக்கின்றது.
அதே போல்  ஜேர்மனியும் முன்னர் செய்த கொடுமைகளுக்கு இன்று  அதன் பலனை அனுபவிக்கின்றது..

இதே போல் தமிழினத்திற்கும் ஒரு கதை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Justin said:

சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் இந்தத் திரியில் இருக்கும் மூட நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் பற்றி  மட்டுமே  பேசப்படுகிறது. சமூகப் பாதிப்பில்லாத, மற்றவனின் மூக்கை அணுகாத நம்பிக்கைகள்- எவ்வளவு தான் அர்த்தமில்லாமல் இருந்தாலும் - யாரும் வைத்துக் கொள்ளட்டும்.

ஆனால், நம்பிக்கைகளுக்கு போலி விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுவூட்ட மருதர் போன்றோர் முயல்வர் தான். அதனால் தான் ஒன்பது கிரகங்களை யாரோ முதலே கண்டு பிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்!

உங்களுக்கு தமிழ் வாசிப்பில் குறைபாடு இருந்தால் அதை திருத்திக்கொள்ளுங்கள் 

நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை முதலில் வாசியுங்கள் பின்பு உங்கள் பித்தலாட்டங்களை காட்டுங்கள் 
இன்றைய இணைய காலத்திலில் ஒரு 5 வயது குழந்தையே யார் யார் எதை கண்டு பிடித்தான் என்பதை 5 நிமிடத்தில் ஆதாரத்தோடு காட்டும் 

உங்களை போன்ற தமிழ் புரியாத விரண்டாவதிகளுடன் உருண்டுபுரள எங்களுக்கு எந்த வில்லங்கமும் இல்லை 
அப்படியே கல் எறிவதாக ஓரமாக உங்கள் பித்தலாட்டத்தை ஆடிக்கொண்டே போகலாம். 

ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதத்துக்கு  ஒருவன் இருந்தால் அவனுடன் பேசுவதில் பலன் உண்டு 
உங்களைப்போன்ற பித்தலாட்டம் ஆடி ஆவத்துக்கு ஒன்றும் இல்லை 

காளிதாசனின் இலக்கியத்திலே இது இருக்கு ..........

ஒவ்வாரு நாள் சூரிய மறைவிலும் இது உண்டு 

1*_uf1AOAjck5zGXRdAQhelQ.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போலி நம்பிக்கைகளுக்கு  விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுமிக்கதாக காட்டும் முயற்ச்சிகளை மதம் மாற்றி பிரசாரிகள், இந்திய பிஜேபியினர் சமீப காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/6/2021 at 08:30, குமாரசாமி said:

உலகின் மூத்த மொழி தமிழ்.இது உலகமே ஒத்துக்கொண்ட விடயம்.
தமிழின வரலாறுகள்  மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கின்றது.
இந்தோனிசியாவில் தமிழர் வழிபடும் தெய்வ சிற்பங்கள் காடுகளில் தேடுவாரற்று இருக்கின்றது.
கொரிய மொழியுடன் தமிழ் மொழி ஒற்றுமை பற்றிய ஆராய்சிகள் ஏராளம்.
கம்போடியாவில் சைவ கோவில் குளங்கள்.
இலங்கையிலும் காலி தொடக்கம் காங்கேசந்துறை வரைக்கும் தமிழர் வாழ்ந்த அடையாளங்கள்.இன்னும் பல ஆயிரம் தமிழினம் சம்பந்தப்பட்ட அடையாளங்களை சொல்லலாம்.

இருந்தாலும் இன்று தமிழனுக்கு ஒரு சொந்த நாடில்லை. ஏன் என்று உங்களால் விளக்க முடியுமா?

வணக்கம் !!

நீங்கள் ஏன் இந்த கேள்வியை கேட்டீர்கள் என ஓரளவிற்கு ஊகிக்கமுடிகிறது.. என்னால் உடனடியாக பதில் எழுத முடியவில்லை, மன்னிக்கவும்..

இன்று 30/6/2021 நிதியாண்டு இறுதிநாள் என்பதால், எனது வேலையில் நேற்றும் இன்றும் அதிக வேலைகள்..ஆகையால் எனது பதிலை இன்றிரவு அல்லது நாளை எழுதுகிறேன்.. 

நன்றி.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரேக்க இரசதோஷத்தினுடன் படுத்து கிடந்தது பெயிண்டிங் பழகியவர்கள் வந்துவிட்டார்கள் 

இனி திரி பூரா சித்திரம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Maruthankerny said:

உங்களுக்கு தமிழ் வாசிப்பில் குறைபாடு இருந்தால் அதை திருத்திக்கொள்ளுங்கள் 

நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை முதலில் வாசியுங்கள் பின்பு உங்கள் பித்தலாட்டங்களை காட்டுங்கள் 
இன்றைய இணைய காலத்திலில் ஒரு 5 வயது குழந்தையே யார் யார் எதை கண்டு பிடித்தான் என்பதை 5 நிமிடத்தில் ஆதாரத்தோடு காட்டும் 

உங்களை போன்ற தமிழ் புரியாத விரண்டாவதிகளுடன் உருண்டுபுரள எங்களுக்கு எந்த வில்லங்கமும் இல்லை 
அப்படியே கல் எறிவதாக ஓரமாக உங்கள் பித்தலாட்டத்தை ஆடிக்கொண்டே போகலாம். 

ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதத்துக்கு  ஒருவன் இருந்தால் அவனுடன் பேசுவதில் பலன் உண்டு 
உங்களைப்போன்ற பித்தலாட்டம் ஆடி ஆவத்துக்கு ஒன்றும் இல்லை 

காளிதாசனின் இலக்கியத்திலே இது இருக்கு ..........

ஒவ்வாரு நாள் சூரிய மறைவிலும் இது உண்டு 

1*_uf1AOAjck5zGXRdAQhelQ.jpeg

மருதர்: தமிழ் புரியாமல் உங்கள் பின் நவீனத்துவ பந்திகளில் புதைந்திருக்கும் கற்பனைகளை எப்படிப் புரிந்து கொள்வதாம்?😂

"ஒன்பது கிரகங்களை முன்னதாகவே உலகின் இன்னொரு பகுதியில் கண்டு பிடித்து" விட்டார்களென்றால் அது யார் என்பது இலகுவான கேள்வியல்லவா? ஐந்து வயதுப் பிள்ளை உங்கள் வீட்டில் இல்லையோ தேடிச் சொல்ல?

இதுக்குப் போய் பாரதி தாசன் அது இதென்று சும்மா சடையலெல்லாம் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

போலி நம்பிக்கைகளுக்கு  விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுமிக்கதாக காட்டும் முயற்ச்சிகளை மதம் மாற்றி பிரசாரிகள், இந்திய பிஜேபியினர் சமீப காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

கௌரவர்கள் IVF இனால் பிறந்தார்கள், புஷ்பக விமானம் தான் அப்போதைய UAV ! இது போன்ற கோமாளிக் கருத்துகளைத்  தான் நீங்கள் நம்பி, புதுத் தியரியாகப் பரப்ப வேண்டும். இப்படிச் செய்தால் உங்களை ஐன்ஸ்ரைன் என்று மக்கள் நம்புவர் (ஏனெனில் ஐன்ஸ்ரைனின் சார்புக் கோட்பாட்டின் சில பகுதிகளும் உடனே ஏற்றுக் கொள்ளப் படவில்லை!😂)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதைத்தான் மேலே நானும் எழுதி இருக்கிறேன் 
முதலில் தமிழ்   பின்பு மற்றதை பார்க்கலாம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Maruthankerny said:

இதைத்தான் மேலே நானும் எழுதி இருக்கிறேன் 
முதலில் தமிழ்   பின்பு மற்றதை பார்க்கலாம் 
 
மருதர்: உலகின் ஒரு பகுதியில் 9 கிரகங்களை யாரோ முதலில் கண்டு பிடித்திருக்கிறார்கள், அது யாரென்று உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது கண்டு பிடிக்கப் பட்டவை கிரகங்கள் அல்ல என்பது தற்போது  புரிந்து விட்டதா?

இதைத் தான் சுட்டிக் காட்டினேன். விஞ்ஞானம் என்பது சும்மா இணையத்தில் தேடும் போது வருவதையெல்லாம் அடித்து விடுவதல்ல! ஆனால், கிரேக்க ஞானிகளோடு படுத்திருந்து படிக்க வேண்டியதுமில்லை. அதற்குரிய வழிகள் இருக்கின்றன. இதெல்லாம் புரியாமல் சும்மா நான் வாசித்தேன் சொல்கிறேன் என்றால் சொல்லுங்கள், ஆனால் ஒருவன் சுட்டிக் காட்டும் போது தவறெனில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

***

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/6/2021 at 06:01, Maruthankerny said:

என்னுடைய வாழ்க்கை தராதரம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே 
இங்கு கூறப்படுகிறது. இங்கு திருந்தவேண்டியது நான்தான். 

நானும் அதைத்தான் கூறுகிறேன்.. 
பாவ/புண்ணியங்கள், முன்வினைப்பயன்கள் என்பதைவிட,  எனது பெற்றோர்களின் வாழ்க்கைமுறை, அவர்கள் கூறிவளர்த்த பண்புகளுடன் எனது முடிவுகளால் மட்டுமே
என் வாழ்க்கை உள்ளது. 

அதே போல நாளை, எனது நிகழ்கால வாழ்க்கையும் அனுபவங்களும் நான் எவ்வகையான பண்புகளை  என் பிள்ளைகளுக்கு சொல்லிவளர்க்கிறேன், வழி காட்டுகிறேன் என்பதும், அவர்களது முடிவுகள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கும்.. 
அவ்வளவுதான்.. இதற்கு ஏன் யாருமே நிரூபிக்க முடியாத முற்பிறப்பின் பலன்களை கொண்டுவந்து சேர்க்கவேண்டும்?

On 29/6/2021 at 08:30, குமாரசாமி said:

பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் அவரவர் தனிப்பட்ட விடயம் என்றாலும் கூட எங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களைப்பார்க்கும் பொழுது, அனேகமானவர்கள் சுயநலத்துடனும், போட்டி மனப்பாங்குடனும், அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களாக இருக்கும் பொழுது அவர்களின் சந்ததி தீமைகளை அனுபவிக்கும் என்றால்.. அதிலும் முரண்பாடுதான் உள்ளது.. அதனால்தான் நான் நிரூபிக்க முடியாத பாவ/புண்ணியங்கள், முற்பிறப்பு பயன்களை கூறுவதை ஏற்கமுடியவில்லை. அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் அவரவர் தனிப்பட்ட விடயம் என்றாலும் கூட எங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களைப்பார்க்கும் பொழுது, அனேகமானவர்கள் சுயநலத்துடனும், போட்டி மனப்பாங்குடனும், அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களாக இருக்கும் பொழுது அவர்களின் சந்ததி தீமைகளை அனுபவிக்கும் என்றால்.. அதிலும் முரண்பாடுதான் உள்ளது.. அதனால்தான் நான் நிரூபிக்க முடியாத பாவ/புண்ணியங்கள், முற்பிறப்பு பயன்களை கூறுவதை ஏற்கமுடியவில்லை. அவ்வளவுதான். 

நான் எழுதுவது அனுபவங்கள்/நேரில் கண்டவைகளை வைத்து மட்டுமே.

எனக்கு தெரிந்து ஊரிலோ இங்கேயோ வட்டிக்கு காசு கொடுத்தவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்ததாகவே காண்கின்றேன். பிள்ளைகள் படித்து பட்டம் பதவி பெற்றாலும் ஏதோ ஒரு முக்கிய குறைகளுடனேயே வாழ்கின்றார்கள்.

மற்றவர்களின் காணி வீடுகளை அபகரித்தவர்களின் பிள்ளைகள் வீடு வசதியில்லாமல் அலைவதை காண்கின்றேன்.

அன்று  இந்தோனேசியா தொடக்கம் கம்போடியா ஈறாக ஆண்டவர்கள் என்ன பாவங்களை செய்தார்களோ யாருக்குத்தெரியும்? 
இன்று தமிழன் நாடில்லாமல் தவிக்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.