Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுய தண்டனை : கொரோணா காலச் சிறுகதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுய தண்டனை 

75b69420-ad86-4fd2-b256-a5a4df4808cf.jpg?ver=1468443759000

அவளை நான் இறுதியாகப் பார்த்து ஒரு ஐந்து அல்லது ஆறு  வருடங்கள் இருக்கலாம். எனது நினைவுகளில் நான் அவள் குறித்து பதித்து வைத்திருந்த கோலங்களையெல்லாம் கண்ணீர்கொண்டு அழித்து முழுவதுமாகத் துடைத்து வைத்திருந்தாள். வசீகரமான புன்னகை, கவிதைபாடும் கண்கள், மழலைகளின் மொழிபேசும் அவளது இனிமையான குரல் என்று எல்லாமுமே அவளிடமிருந்து முற்றாக மறைந்துபோயிருக்க என் முன்னே அவள் நின்றிருந்தாள்.

கண்கள் தொலைவில் இல்லாதவொன்றை வெறித்துப் பார்த்திருக்க எனது பேச்சைக் கேட்பதுபோல் ஏப்போதாவது ஓறிருமுரை தலையை மெதுவாக அசைப்பதுடன் எனது சம்பாஷணையில் அவளது பங்களிப்பு முற்றுப்பெற்றுவிடுகிறது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் அவளிடமிருந்த ஆசைகள், நம்பிக்கைகள், எதிர்காலம் குறித்த வண்ணக்கனவுகள், எவ்விடயம்பற்றிப் பேசினாலும் எழும் உவகை என்று நான் பார்த்த அவளின் இலக்கணங்களை என்னால் நினைத்துப்பார்ப்பதைத் தவிர, இப்போது காண இயலவில்லை.

எனக்குத் தொடர்ந்து பேசப் பிடிக்கவில்லை. அவளைப் பேசவைக்கவேண்டும் என்று பிடிவாதமாக சம்பாஷணைக்குள் இழுக்க முயன்றேன்.

"சரி, நானே உப்பிடிக் கதைச்சுக்கொண்டிருந்தால் சரிவராது, நீங்களும் கதையுங்கோ" என்றேன்.

மொத்த வேதனைகளையும் சலிப்பான சிரிப்புடன் கொட்டிவிட எத்தனித்த அவளின் இதழ்களிலிருந்து நீண்ட பெருமூச்சோடு வார்த்தைகள் வந்து விழத் தொடங்கின.

"நான் என்ன தவறு செய்தேன் இன்று எனது வாழ்க்கை இப்படிப் போவதற்கு. என்பாட்டில் கிடைத்த வாழ்க்கையை ஏதோ என்னால் முடிந்தவரை இழுத்துக்கொண்டு போயிருப்பேனே? இன்று இருந்ததையும் இழந்து, பேசுவதற்குக் கூட எவருமில்லாமல், தனிமையில் வேதனைகளை மட்டுமே இரைமீட்டு வருகிறேனே? கடவுள் எதற்காக என்னைப்போன்றவர்களைப் படைக்கவேண்டும்? " என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்தாள்.

என்னிடம் பதில் இல்லை.

அவளது இவ்விதமான வேதனை கலந்த பேச்சுக்களுக்களை நான் கேட்பது இதுவே முதல்த்தடவையும் அல்ல. பலமுறை கேட்டிருக்கிறேன். கேட்கும் ஒவ்வொரு பொழுதும் அதே வேதனையும், பச்சாத்தாபமும், இயலாமையினால் என்மீதான வெறுப்பும் என்னிடம் வரும். அவளின் கேள்விகளுக்கு பெரும்பாலும் மெளனமே எனது பதிலாக இருக்கும். அவளின் அழுகைகளுக்கு நானும் காரணம் என்றாகியபின் அவற்றுக்கான தீர்வாக நான் நிச்சயமாக இருக்கமுடியாதென்பதும் அல்லது அந்த தீர்வுக்கான முயற்சிகளை என்னால் எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லையென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.  ஆகவே மெளனத்தினையே நான் பதிலாக அவளுக்கு சில வருடங்களாக வழங்கி வருகிறேன். இதில் வேதனை என்னவென்றால், எனது பாவங்களுக்காகவும் அவள் பச்சாத்தாபம் தேடுவாள், அவ்வப்போது.

கொரோணா நோய்த்தொற்று வந்தபின்னர் அவளின் வாழ்வு இன்னும் அவலமானது. வீட்டில் உணர்வற்ற சொந்தங்கள், உதவியில்லாத இயந்தரத்தனாமன வாழ்க்கை. உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவோ, சொல்லியழவோ எவருமற்ற சூழல், காலை எழுந்தால் சாமம் வரை உறங்கமறுக்கும் மனது, உடலாலும் மனதாலும் சுமக்கமுடியாத பழுவான வேதனைகள் என்று அவள் உடைந்துகொண்டிருக்கிறாள்.

Meeba Gracy, Author at The Story Vault

அவளுடன் மகிழ்வாக உரையாடிய நாட்களை என்னால் இப்போது எண்ணிக்கூடப் பார்க்கமுடிவதில்லை. அவை மனதிலிருந்து மறைந்து, வெகு தொலைவில் மங்கலாக நிழலாடிக்கொண்டிருக்க, அவள்தொடர்பான எனது ஆரம்ப கால நினைவுகள் அருகிச் சென்றுவிட்டன.  இப்போது என் முன்னால் இருப்பது அவளின் முடியா வேதனைகளும், அவல வாழ்வின் சலிப்புக்களும், வாழ்வினை முடித்துக்கொள்ளவேண்டும் என்று அவள் கூறும் நியாயப்படுத்தமுடியா காரணங்களும் மட்டும்தான்.

அவளை மீண்டும் அவளின் இனிமையான நாட்களுக்கு இழுத்துவரும் முயற்சியில் நான் சிறுகச் சிறுகத் தோற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது. நான் சொல்வதைக் கேட்கும் கட்டத்தினை அவள் சில காலத்திற்கு முன்னமே கடந்துசென்றுவிட்டாள் என்பது எனக்குத் தெரியும். அவளை வாழவைக்க நான் கூறும் காரணங்களும், நியாயங்களும் அவளுக்கு இப்போது சலிப்பையும், ஆத்திரத்தையும் தவிர வேறு எதையுமே தருவதில்லையென்று என்னால் உணரமுடிகிறது. எமது சம்பாஷணைகளில் அவளின் அவலங்களின் தொகுப்பினை நான் திசைமாற்றி சம்பந்தமில்லா பேச எத்தனித்த ஒவ்வொரு தருணத்திலும் அவளை அவளது அவலங்களே மீண்டும் மீண்டும் இழுத்துவந்து என்முன் நிறுத்தின. இன்று அவளுக்குத் தெரிவிதெல்லாம் அவளின் வேதனைகளும் ஏமாற்றங்களும், வாழ்வினை முடித்துக்கொள்ளும் முடிவற்ற சிந்தனைகளும்தான்.

அவளது வேதனைகள் தனலாக வந்துவிழும்போது சிலவேளைகளில் நான் ஆத்திரப்பட்டேன். அவலது வேதனையின் விசும்பல்கள் என்மீதான குற்றச்சாட்டுக்களாக எனக்குத் தெரிய சினங்கொண்டு பதிலளித்திருக்கிறேன். ஆனால், என்னைவிட்டால் அவளின் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ள அவளுக்கு யாரிருக்கிறார் என்கிற சிறு எண்ணம்கூட இல்லாமல் ஆத்திரப்பட்டது வேதனையளிக்கிறது.

ஆனால் எனக்கு இப்போதைக்கு வேறு வழிகளும் தெரியவில்லை. அவள் தானாக வெட்டிக்கொண்டிருக்கும் இந்தக் குழிக்குள்ளிருந்து அவளை எப்படியாவது இழுத்துவரவேண்டும். அவளது அவலங்களுக்குக் காரணம் என்று தன்னைத்தானே நிந்திக்கும் அவளது எண்ணத்தை எப்பாடுபட்டாவது மாற்றிவிடவேண்டும். உலகில் தன்னைப்போன்ற துர்ப்பாக்கியசாலி எவரும் இல்லையெனும் அவளின் எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடவேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் எவருமே தன்னை நேசிப்பதில்லையென்றும், தன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லையென்றும் அவள் எண்ணுவதை தடுத்திடவேண்டும். தனக்கென்று உலகில் எவருமேயில்லை என்று தனக்குள் உள்முடங்கும் அவளின் மனதை மீண்டும் வெளியே எடுத்துத் துளிர்விக்க வேண்டும்.

இவை அனைத்துமே பேசுவதற்கும், எண்ணுவதற்கும் எனக்குச் சுலபமாகத் தெரியலாம். அவளின் பிடிவாதமும், வைராக்கியமும் நான் அறியாததல்ல. என் முன்னே அவள் மலைபோல குவித்துவைத்திருக்கும் அவளின் வேதனைகளை என் வாழ்நாளில் துடைத்தழித்திட என்னால் முடியாதென்பெது நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால், அந்த மலையினைக் கடக்கும்  நம்பிக்கையினை அவளுக்குக் கொடுக்கலாமா என்பதை எனது இறுதி முயற்சியாக எடுத்திருக்கிறேன்.

WOMEN AND SPORT | Climbing art, Climbing girl, Ice climbing

பார்க்கலாம் !

முற்றும்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ரஞ்சித்? சொந்தக்கதையா? 😷

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

என்ன ரஞ்சித்? சொந்தக்கதையா? 😷

இல்லையண்ணை, தெரிஞ்ச கதை

  • கருத்துக்கள உறவுகள்

சிலரது வாழ்வு இதுபோன்று வேதனைகளுடன்தான் கழிகிறது.......தன்னிரக்கமும் கழிவிரக்கமும் அவர்களை சூழ்ந்து கொள்வதாழும்,அதுவே பழகிப்போய் விடுவதாலும் அவர்கள் உள்ளுக்குள் அதை விரும்புகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது......!  🤔

நன்றி ரஞ்சித்......!  

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தாழ்வு மனப்பான்மைக்கும் உயர்வு மனப்பான்மைக்கும் இடையிலான வலி சொல்லில் அடங்காது. அருமையாக எழுதி இருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2021 at 18:28, ரஞ்சித் said:

அவளின் வேதனைகளை என் வாழ்நாளில் துடைத்தழித்திட என்னால் முடியாதென்பெது நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால், அந்த மலையினைக் கடக்கும்  நம்பிக்கையினை அவளுக்குக் கொடுக்கலாமா என்பதை எனது இறுதி முயற்சியாக எடுத்திருக்கிறேன்.

அந்த இறுதி முயற்சியைக் காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்துங்கள்.
அதன் விளைவு நல்லதாக அமைய வாழ்த்துக்கள்.

On 5/8/2021 at 02:28, ரஞ்சித் said:

அவள் தானாக வெட்டிக்கொண்டிருக்கும் இந்தக் குழிக்குள்ளிருந்து அவளை எப்படியாவது இழுத்துவரவேண்டும். அவளது அவலங்களுக்குக் காரணம் என்று தன்னைத்தானே நிந்திக்கும் அவளது எண்ணத்தை எப்பாடுபட்டாவது மாற்றிவிடவேண்டும். உலகில் தன்னைப்போன்ற துர்ப்பாக்கியசாலி எவரும் இல்லையெனும் அவளின் எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடவேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் எவருமே தன்னை நேசிப்பதில்லையென்றும், தன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லையென்றும் அவள் எண்ணுவதை தடுத்திடவேண்டும். தனக்கென்று உலகில் எவருமேயில்லை என்று தனக்குள் உள்முடங்கும் அவளின் மனதை மீண்டும் வெளியே எடுத்துத் துளிர்விக்க வேண்டும்.

இவை அனைத்துமே பேசுவதற்கும், எண்ணுவதற்கும் எனக்குச் சுலபமாகத் தெரியலாம். அவளின் பிடிவாதமும், வைராக்கியமும் நான் அறியாததல்ல. என் முன்னே அவள் மலைபோல குவித்துவைத்திருக்கும் அவளின் வேதனைகளை என் வாழ்நாளில் துடைத்தழித்திட என்னால் முடியாதென்பெது நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால், அந்த மலையினைக் கடக்கும்  நம்பிக்கையினை அவளுக்குக் கொடுக்கலாமா என்பதை எனது இறுதி முயற்சியாக எடுத்திருக்கிறேன்.

இந்தப் புரிதலும், நல்ல நோக்கமும், நேர்மையான முயற்சியுமே அவசியம்.

அருமையான கதைக்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், அவளுக்கு என்ன தான் ஆயிற்று...

சிறுகதை அல்லவோ ...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.