Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அப்படி எழுதியதுக்கு நன்றி. ஆனால் கேள்விக்கு உரிய பதில் அது அல்ல 

இத்துடன் .

நீங்கள் எதிர்பார்த்த பதில் இல்லை. ஆனால் பதில் அதுதான்🤣.

இனிய ஞாயிறு ஆகட்டும்🙏🏾.

  • Replies 161
  • Views 9.6k
  • Created
  • Last Reply
15 minutes ago, விசுகு said:

ஈழத்தமிழர் வரலாறு வேறு சொல்கிறது

உங்களுக்கு அதில் எந்த அளவுக்கு புரிதல் இருக்கு என்பதை ஒரே திரியில் இரு மாறுபட்ட கருத்துகளை வைக்கும் போதே புரியலையா?? வரலாற்றோடோ அல்லது அந்த மக்களோடோ நீங்கள் இல்லை என்பது??

நான் என்ன எழுதினேன் என்பது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். அந்த மக்கள் என்று நான் எழுதியது தமிழ்நாட்டு மக்களை. எமது அரசியல் பிரச்சனையை கையாள தெரியாத ஈழத்தமிழர்களாகிய எமக்கு  தமிழ் நாட்டு மக்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி இல்லை என்பதே அதன் அர்ததம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இங்கே நீங்கள் பேசிக் கொண்டு இருக்கும் சீமான் ஈழத்தமிழர்??

4 minutes ago, விசுகு said:

இங்கே நீங்கள் பேசிக் கொண்டு இருக்கும் சீமான் ஈழத்தமிழர்??

இல்லை அவர் ஈழத்தமிழர் அல்ல. ஈழப்பிரச்சனைச் சாட்டி தமிழ்நாட்டில் இனவெறியை பரப்புரை செய்து தமிழ்நாட்டு தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு இனவாத அரசியல்வாதி. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

இல்லை அவர் ஈழத்தமிழர் அல்ல. ஈழப்பிரச்சனைச் சாட்டி தமிழ்நாட்டில் இனவெறியை பரப்புரை செய்து தமிழ்நாட்டு தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு இனவாத அரசியல்வாதி. 

அப்போ நீங்கள் தமிழ் நாட்டு அரசியல் பற்றி அரசியல்வாதி பற்றி பேசலாம் மற்றவர்கள் பேசக்கூடாது??

4 minutes ago, விசுகு said:

அப்போ நீங்கள் தமிழ் நாட்டு அரசியல் பற்றி அரசியல்வாதி பற்றி பேசலாம் மற்றவர்கள் பேசக்கூடாது??

இதற்கு பதில் ஏற்கனவே இதே திரியில் தெரிவித்து விட்டேன். சென்று வாசிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

இல்லை அவர் ஈழத்தமிழர் அல்ல. ஈழப்பிரச்சனைச் சாட்டி தமிழ்நாட்டில் இனவெறியை பரப்புரை செய்து தமிழ்நாட்டு தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு இனவாத அரசியல்வாதி. 

அவர் எந்த  இனவெறி இல்லாத ஒரு இனத்துக்கு எதிராய் இனவெறி பரப்புரை செய்தார் என்று அறியதர முடியுமா?

இல்லை அந்த இனம் எதுவென்று அறிய ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, tulpen said:

இல்லை அவர் ஈழத்தமிழர் அல்ல. ஈழப்பிரச்சனைச் சாட்டி தமிழ்நாட்டில் இனவெறியை பரப்புரை செய்து தமிழ்நாட்டு தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு இனவாத அரசியல்வாதி. 

க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாரும் உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று
வெறும‌ன‌ம் உங்க‌ளின் சுய‌ அரிப்புக்கு க‌ண்ட‌தை எல்லாம் எழுத‌ வேண்டாம்............நீங்க‌ள் எழுதுவ‌து உங்க‌ள் ம‌ன‌துக்கு வேனும் என்றால் ம‌கிழ்ச்சியை த‌ர‌க் கூடும்.............த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ல‌ மாற்ற‌ம் குறுகிய‌ கால‌த்தில் ந‌ட‌ந்து விட்ட‌து

30ல‌ச்ச‌ ம‌க்க‌ளின் ஓட்டு மிக‌வும் சுத்த‌மான‌ ஓட்டு (  ச‌ல்லி காசு கொடுக்காம‌ கோட்ட‌ரும் கோழி பிரியானியும் கொடுக்காம‌ ஒரு க‌ட்சிக்கு கூட்ட‌ம் கூடுது என்றால் அது நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு தான்

ம‌க்க‌ள் எங்கு அண்ண‌ன் சீமானை புர‌க்க‌னித்தார்கள்............காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து ஆட்ச்சி பீட‌த்தில் இருக்கும் சுட‌லையை விட‌ அண்ண‌ன் சீமானுக்கு ம‌க்க‌ள் ஆத‌ரவு அமோக‌ம் என்று தான் சொல்ல‌னும்

த‌மிழ‌க‌த்தில் அதிக‌ இளைஞ‌ர்க‌ளை வைத்து இருக்கும் க‌ட்ச்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சி என்று ப‌ல‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொல்லி இருக்கின‌ம்..........

அண்ண‌ன் சீமானின் பேச்சில் இப்போது ப‌ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு இருக்கு..........................ச‌ரியான‌ வ‌ழியில் ப‌ய‌ணிக்கிறார்..............

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, valavan said:

அவர் எந்த  இனவெறி இல்லாத ஒரு இனத்துக்கு எதிராய் இனவெறி பரப்புரை செய்தார் என்று அறியதர முடியுமா?

இல்லை அந்த இனம் எதுவென்று அறிய ஆசை.

பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கே என்றால் என்னால் கேள்வி கேட்க முடியாது கேட்டால் பிடிக்கவில்லை என்றால் வெளியேறு என்பது தான் பதில்.

இது எல்லா தேசத்துக்கும் பொதுவானது. இனத்தை தன் தேசத்தை விரும்புவனின் தேசம் மீதான அக்கறை அது.

அதே அக்கறையுடன் தன் தேசத்தை விரும்புவனின் போராட்டத்தையே உதவாக்கரை போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருப்போரை எழுப்ப முடியுமா என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அட காங்கிரஸ் முற்றுகையிடப்பட்டதா?அது  ஒரு புனித ஸ்தலமா?

அமெரிக்கா எத்தனை நாட்டு அரசுகளை சீரழித்தது என்று தெரியாமலா கதைக்கின்றீர்கள்?
வியட்நாம்,ஈராக்,லிபியா என சிவனே என இருந்த நாடுகளை அந்த அரசுகளை அழித்து இன்று அந்த நாடுகளில் ஸ்திரமில்லாத அரசையும் பொருளாதாரத்தையும் உருவாக்கியது யார்?

தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். 😎

அமெரிக்கருக்கு அவர்களின் ஆட்சி பீடம் புனித ஸ்தலம் தான்! உங்களைப் போல மூட நம்பிக்கைகளைச் சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்வோருக்கு புனிதங்கள் எவையென்று பலருக்கும் விளங்கும்! 

வரலாற்றை முகனூலில் இருந்து கற்றுக் கொள்ளும் தாத்தாவும் பேரனும் நினைத்துக் கொள்வதெல்லாம் உலகத்தின் போக்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது! 😂

26 minutes ago, valavan said:

அவர் எந்த  இனவெறி இல்லாத ஒரு இனத்துக்கு எதிராய் இனவெறி பரப்புரை செய்தார் என்று அறியதர முடியுமா?

இல்லை அந்த இனம் எதுவென்று அறிய ஆசை.

இனவெறியற்ற இனமா? எல்லா இனத்திலும் சீமானை போன்ற இனவெறியர்களும் உள்ளார்கள். சாதாரண மனித தன்மை உடைய மக்களும் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கே என்றால் என்னால் கேள்வி கேட்க முடியாது கேட்டால் பிடிக்கவில்லை என்றால் வெளியேறு என்பது தான் பதில்.

இது எல்லா தேசத்துக்கும் பொதுவானது. இனத்தை தன் தேசத்தை விரும்புவனின் தேசம் மீதான அக்கறை அது.

அதே அக்கறையுடன் தன் தேசத்தை விரும்புவனின் போராட்டத்தையே உதவாக்கரை போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருப்போரை எழுப்ப முடியுமா என்ன??

பொதுவாகவே எனக்கு ஈழ தமிழரின் பெயரால் கடல்கடந்து அரசியல் செய்பவர்கள் எவர்மீதும் நாட்டமில்லை, அதேவேளை என்னமோ மனித தன்மை கொண்ட ஒரு இனத்தை இனவெறியின் பெயரால் சீமான் அசிங்கபடுத்தினார் என்பதுபோல் உள்ளது அவர் வாதம், அந்த இனம் எதுவென்று அவரிடமிருந்து அறியாமல் விடுவதாக இல்லை.

Just now, tulpen said:

இனவெறியற்ற இனமா? எல்லா இனத்திலும் சீமானை போன்ற இனவெறியர்களும் உள்ளார்கள். சாதாரண மனித தன்மை உடைய மக்களும் உள்ளார்கள். 

 சரி ஈழதமிழர்களுக்கு ஆதரவாயுள்ள சீமான் விசயத்தில்... ஈழதமிழருக்கெதிராய் இனவெறி இல்லாமலிருந்த சாதாரண இனம் எது?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

அந்த மக்கள் சிங்கள மக்களாக சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னது???

(நான் நீர்கொழும்பில் சில காலம் வாழ்ந்து இருக்கிறேன்)

விசுகர், நானும் ஐந்து வருடங்கள் நீர்கொழும்பில் வாழ்ந்திருக்கிறேன்.

கத்தோலிக்க மதத்தை மாற்றிக் கொள்ளாமல், சிங்கள இன அடையாளத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் தான் நீர் கொழும்பு, நாத்தாண்டிய, வென்னப்புவ என்ற வரிசையில் வரும் நகரங்களில் தீவிர சிங்களவர்கள்! இவர்களைப் பௌத்த சிங்களவர்கள் விலக்கி வைத்ததாக எங்கே சம்பவங்கள், செய்திகள் கண்டீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கே என்றால் என்னால் கேள்வி கேட்க முடியாது கேட்டால் பிடிக்கவில்லை என்றால் வெளியேறு என்பது தான் பதில்.

இது எல்லா தேசத்துக்கும் பொதுவானது. இனத்தை தன் தேசத்தை விரும்புவனின் தேசம் மீதான அக்கறை அது.

அதே அக்கறையுடன் தன் தேசத்தை விரும்புவனின் போராட்டத்தையே உதவாக்கரை போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருப்போரை எழுப்ப முடியுமா என்ன??

"பிரான்ஸ் பிரெஞ்சுக் காரருக்கே" என்று சொல்லும் வலது சாரி லீ பென், தனது சம்பளத்தையும் சலுகைகளையும் பூர்வீக பிரெஞ்சு மக்களிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொள்வேன் என்று அறிவிக்கும் போது அவர் வாதம் நியாயமாகலாம்!

அதெப்படி எல்லா இடத்திலும் இருந்து வந்து சேர்ந்த மக்களால் நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டு, பிரான்ஸ் பிரெஞ்சுக் காரருக்கு மட்டுமென்று கோசம் போடுவது?

சீமானின் தமிழ் நாடு தமிழருக்கே என்பதும் இதை விட ஓட்டையான, இனவாதக் கொள்கை தான்! தமிழ் நாட்டின் வரலாறு தெரியாதவர்களுக்கு இந்த ஓட்டைகள் தெரியவராது! 

13 minutes ago, valavan said:

சரி ஈழதமிழர்களுக்கு ஆதரவாயுள்ள சீமான் விசயத்தில்... ஈழதமிழருக்கெதிராய் இனவெறி இல்லாமலிருந்த சாதாரண இனம் எது?

சாதாரண இனமா? 

நான் கூறியது எல்லா இனங்களிலும் சாதாரண மனிதர்களும் உள்ளார்கள். இனவெறியர்களும் உள்ளார்கள் என்பதனையே. நீங்கள் புலம் பெயர்ந்து  வாழும் நாட்டில் மக்களுடன் பழகும் போது உங்களால் இனவெறியர்களையும் சாதாரண மக்களையும் ஒரே இனத்தில் அடையாளம் காண முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

சாதாரண இனமா? 

நான் கூறியது எல்லா இனங்களிலும் சாதாரண மனிதர்களும் உள்ளார்கள். இனவெறியர்களும் உள்ளார்கள் என்பதனையே. நீங்கள் புலம் பெயர்ந்து  வாழும் நாட்டில் மக்களுடன் பழகும் போது உங்களால் இனவெறியர்களையும் சாதாரண மக்களையும் ஒரே இனத்தில் அடையாளம் காண முடியும். 

நீங்களும் நானும் பேசிக்கொள்வது அதுபற்றியல்லவே துல்பன்.

17 minutes ago, tulpen said:

சீமானை போன்ற இனவெறியர்

நான் கேட்பது எல்லாம் சீமான் எந்த சாதாரண இனத்துக்கு எதிராக இனவெறி காட்டினார் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

"பிரான்ஸ் பிரெஞ்சுக் காரருக்கே" என்று சொல்லும் வலது சாரி லீ பென், தனது சம்பளத்தையும் சலுகைகளையும் பூர்வீக பிரெஞ்சு மக்களிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொள்வேன் என்று அறிவிக்கும் போது அவர் வாதம் நியாயமாகலாம்!

அதெப்படி எல்லா இடத்திலும் இருந்து வந்து சேர்ந்த மக்களால் நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டு, பிரான்ஸ் பிரெஞ்சுக் காரருக்கு மட்டுமென்று கோசம் போடுவது?

சீமானின் தமிழ் நாடு தமிழருக்கே என்பதும் இதை விட ஓட்டையான, இனவாதக் கொள்கை தான்! தமிழ் நாட்டின் வரலாறு தெரியாதவர்களுக்கு இந்த ஓட்டைகள் தெரியவராது! 

த‌மிழ் நாடு த‌மிழ‌ருக்கு தானே
இந்தியா என்ற‌து பிரிடிஸ் கார‌னால் உருவாக்க‌ப் ப‌ட்ட‌து.............பெரும் த‌லைவ‌ருக்கு பிற‌க்கு த‌மிழ் நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ரா தெரிந்தால் கொஞ்ச‌ம் சொல்லுங்கோ............

இந்தியாவில் இருக்கும் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் த‌ங்க‌ளின் மொழி அழிந்து ஹிந்தி வ‌ந்து விட்ட‌தே என்று வ‌ய‌து போன‌வ‌ர்க‌ள் க‌வ‌லைப் ப‌டின‌ம்.........

சீமான் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொன்ன‌துக‌ள் இப்போது நிஜ‌த்தில் ந‌ட‌க்குது

த‌மிழ் நாட்டை ர‌ஜ‌னி போன்ற‌ நோகாம‌ல் நொங்கு  சாப்பிட‌ விரும்பும் கூட்ட‌த்திட‌ம் 5வ‌ருட‌ம் த‌மிழ் நாட்டை கொடுத்து பாருங்க‌ள் அத‌ற்கு பிற‌க்கு தெரியும் 5 வ‌ருட‌த்தில் இவ‌ள‌வ‌த்தை இழ‌ந்து இருப்போமா என்று

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை பார்த்து ப‌ல‌ர் பொறாமை ப‌டுவ‌தை பார்க்க‌ உண்மையில் நாம்  த‌மிழ‌ர் க‌ட்சி ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்குது என்று அர்த்த‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

அந்த மக்கள் சிங்கள மக்களாக சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னது???

(நான் நீர்கொழும்பில் சில காலம் வாழ்ந்து இருக்கிறேன்)

சரியான கருத்து.

ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, சுபாசினி பெர்னாண்டோ பிள்ளை சிங்களவர்களால் கொண்டாடப்படவில்லை, உபயோகிக்கப்படுகிறார்கள்.

சிறில் மத்தியூ, நெவில் பெர்னாண்டோ தமிழர்களுக்கு எதிராக 1983ல் உபயோகிக்கப்பட்டு, பின்னர், தூக்கி வீசப்பட்டார்கள். சிறில் மத்தியூ, மகன் நந்தா மத்தியூ அரசியலில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

நெவில் பெர்னாண்டோவின் மருத்துவ சாலையை அரசு சுவீகரிக்க போகிறது என்று தெரிந்து, அவரே கொடுத்து, இறந்தும் போனார்.

மத மாறுதல் செய்கிறார்கள் என்று, கிறித்தவ தேவாலயங்கள், பௌத்த பிக்குகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

இன்று மல்கொம் ரஞ்சித் பாதிரியாரும் கிழமைக்கு இரண்டு தரம் புலம்பிக்கொண்டிருக்கிறார், ஈஸ்டர் குண்டு யார் வேலை என்று சொல்லுங்கோ, சொல்லுங்கோ என்று. 

சிங்களம் பேசினாலும், அதனை பேசும் தமிழன் யார், இஸ்லாமியன் யார், கிறிஸ்தவன் யார் என்று பௌத்த சிங்களவனுக்கு தெரியும். அவர்களை எப்படி வைக்கவேண்டும் என்று படித்துக் கொண்டே வருகிறார்கள்.

சிங்கள பௌத்த இனவாதத்தின் ஆழ, அகலம் அப்படி.

இறுதியில், பௌத்த சிங்களம், கண்டி சிங்களம், கரை ஓர சிங்களம் என்று போய் நிக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியை அன்மையில் த‌மிழ் நாட்டில் தினிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ போது
பெரும்பாலானோர் ( ஹிந்தி தெரியாது போடா என்று ரென்டிங் ப‌ண்ணி த‌மிழ் மீதான‌ ப‌ற்றை காட்டினார்க‌ள்

இதையே அண்ண‌ன் சீமான் சொல்லி இருக்க‌னும் சீமான் இன‌வாத‌ம் பேசுகிறார் என்று சில்ல‌ரைய‌ல் புல‌ம்பி இருப்பின‌ம்  😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, பையன்26 said:

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை பார்த்து ப‌ல‌ர் பொறாமை ப‌டுவ‌தை பார்க்க‌ உண்மையில் நாம்  த‌மிழ‌ர் க‌ட்சி ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்குது என்று அர்த்த‌ம் 

ஒரு ஈழத் தமிழனை தன் தலைவர் என்கிறார்.

இனி ஈழத் தமிழனுக்கு யாராவது அடித்தால் திருப்பி அடிப்பேன் என்கிறார்.

இவரை ஆதரிக்காமல் இனப்படுகொலைக்கு உதவியவர்களை ஈழத் தமிழன் ஆதரிக்க முடியுமா?

தோழர் பாலன் -

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

விசுகர், நானும் ஐந்து வருடங்கள் நீர்கொழும்பில் வாழ்ந்திருக்கிறேன்.

கத்தோலிக்க மதத்தை மாற்றிக் கொள்ளாமல், சிங்கள இன அடையாளத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் தான் நீர் கொழும்பு, நாத்தாண்டிய, வென்னப்புவ என்ற வரிசையில் வரும் நகரங்களில் தீவிர சிங்களவர்கள்! இவர்களைப் பௌத்த சிங்களவர்கள் விலக்கி வைத்ததாக எங்கே சம்பவங்கள், செய்திகள் கண்டீர்கள்? 

எனது காலப்பகுதி 1977- 1983

இந்த காலப்பகுதியில் நடந்த இரண்டு இனக்கலவரத்திலும் பாதிக்கப்பட்டவன். அந்த நேரத்தில் அங்கு நடந்த அந்த மக்களுக்கு இருந்த பயம் பதட்டத்தை பார்த்தவன். தங்கள் இனத்தின் பிரதிநிதிகளே அச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்ததை தங்கள் இயலாமையை சொல்லி அழுததை அவர்கள் வாயாலேயே கேட்டவன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

சரியான கருத்து.

நீண்ட நாட்களின் பின்னர் தல is back..  வாங்க பாஸு

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

"பிரான்ஸ் பிரெஞ்சுக் காரருக்கே" என்று சொல்லும் வலது சாரி லீ பென், தனது சம்பளத்தையும் சலுகைகளையும் பூர்வீக பிரெஞ்சு மக்களிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொள்வேன் என்று அறிவிக்கும் போது அவர் வாதம் நியாயமாகலாம்!

அதெப்படி எல்லா இடத்திலும் இருந்து வந்து சேர்ந்த மக்களால் நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டு, பிரான்ஸ் பிரெஞ்சுக் காரருக்கு மட்டுமென்று கோசம் போடுவது?

சீமானின் தமிழ் நாடு தமிழருக்கே என்பதும் இதை விட ஓட்டையான, இனவாதக் கொள்கை தான்! தமிழ் நாட்டின் வரலாறு தெரியாதவர்களுக்கு இந்த ஓட்டைகள் தெரியவராது! 

நீங்கள் அது வலது சாரி லு பென் என்று குறுக்க பார்க்கின்றீர்கள். ஆனால் அது எல்லா பிரெஞ்சுக்காரர்களினதும் கோசம் தான். அதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. 

இந்த மண்ணில் உயிரை காப்பாற்ற வாழ தலைமுறைகளை உருவாக்க அனுமதிக்க பட்டிருக்கிறேன் என்பதற்காக அவர்களது தேச நலனுக்கு எதிராக செயல்பட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இன‌வாத‌ம் பேசுகிறார் என்றால் 

சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிரா க‌டும் போர் செய்த‌ எம் த‌லைவ‌ரை இவை என்ன‌ லிஸ்ரில் வைச்சு இருக்கின‌ம்

நிர‌ம் மாறும் ம‌னித‌ர்க‌ள் வாழும் உல‌கில்  நாம் தான் ஜாக்கிர‌தையா இருக்க‌னும்

கால‌ப் போக்கில் எம் த‌லைவ‌ரையும் இந்த‌ சில்ரைக‌ள் கொச்சை ப‌டுத்த‌க் கூடும்
 
4 minutes ago, விசுகு said:

நீங்கள் அது வலது சாரி லு பென் என்று குறுக்க பார்க்கின்றீர்கள். ஆனால் அது எல்லா பிரெஞ்சுக்காரர்களினதும் கோசம் தான்

எல்லா பிரெஞ்சுகாரரிலும் உள்ள கோசம் என்றால் ஹங்கேரி பூர்வீகத்தை கொண்ட  நிகொலஸ் சார்கோசியை ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்க மாட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.