Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

கால ஓட்டத்தில் எந்த அமைப்பின் பிடியும் ஒரு மக்கள் கூட்டதின் மேல் தளரவே செய்யும். ஒரு காலத்தில் பிக்குக்களின் பிடி தளரும் போது, நாம் எமது நியாயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்து சொல்ல முடியும் என்றால் - சிறு மாற்றமாவது ஏற்படலாம்.

சாத்தியமாக இருக்கலாம். ஆனால், இலங்கையின் சிங்களவர்களின் சரித்திரத்தில், பிக்குகளின் பங்கு என்ன? அப்பங்கு எங்கிருந்து ஆரம்பமாகிறது? என்பதற்கான விளக்கங்களை நாம் புரிந்துகொண்டால், அவர்களின் பிடி தளருமா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மகாவம்சமும், தீபவம்சமும் எழுதப்பட்டது பிக்குகளால். தேவநம்பியதிஸ்ஸவின் காலத்திலிருந்தே பெளத்த மதமும், பிக்குகளும் சிங்கள இனத்தின் அசைக்கமுடியாத சக்திகளாக, அரசியலில் தீர்மானம் எடுக்கக்கூடிய , செல்வாக்குச் செலுத்தக்கூடிய சக்திகளாக இன்றுவரை இருந்துவருகிறார்கள். கிட்டத்தட்ட 2000 வருடங்களாக இருக்கும் நிலைமை இதுதான். இன்றுள்ள நிலைமையினைப் பார்க்கும்போது பிக்குகளின் பிடியிலிருந்து சிங்களச் சமூகம் வெளியேறுகிறது என்று சொல்லக்கூடிய எந்த சமிக்ஞையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இன்றிருக்கும் ராஜபக்ஷக்களின் அரசு சிங்கல பெளத்த பேரினவாதத்தை நன்றாகவே தூக்கிப் பிடித்திருக்கிறது. எல்லாளன் தோற்கடிக்கப்பட்ட ருவான்வெலிசாயவில்ப் போய் நின்று கோத்தா பதவிப்பிரமாணம் செய்தபோது சொல்லப்பட்ட செய்தி, இந்த அரசு தமிழருக்கு எதிரான, சிங்கள - பெளத்த அரசுதான் என்பதே .

சிலவேளை இன்னொரு 3000 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் பிடி தளர்வதற்கான சாத்தியம் இருக்கலாம், அதுவரை எமது இனம் இருக்குமா என்றால், கேள்விக்குறிதான்.

19 minutes ago, goshan_che said:

புலம் பெயர் பொருளாதார பலம், அடுத்த சந்ததிகள் புலம் பெயர் அரசியலில் ஆதிக்கம், தமிழ் நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி, இவை எல்லாம் ஒன்று கூடி வரும் போது, ஒரு நியாயமான தீர்வை சிங்கள மக்கள் ஏற்கும் நிலை வரலாம் என்பதே, இப்போ நம் எல்லாருக்கும் தெரியும் ஒரே தீர்வுக்கான வழி, இல்லையா?

புலம்பெயர் பொருளாதாரப் பலம் என்பது சாத்தியமானதுதான். ஆனால், அதனை தமிழரின் நல்வாழ்விற்காக பயன்படுத்துவதை சிங்களம் அனுமதிக்குமா என்கிற கேள்வி இருக்கிறது. அல்லது, பெருமளவு லஞ்சம் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிவரும்.

தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியம் வேலைக்கு ஆகுமென்று நான் நினைக்கவில்லை. 1987 வரை தமிழகத்தில் இருந்த  தமிழ்த் தேசியமும், ஈழத்தமிழர் ஆதரவுமே எமக்கு எதனையுமே பெற்றுத்தரவில்லை என்றாகிறபோது, இனிமேலும் தமிழ்த்தேசியம் பெற்றுத்தரும் என்பதை நம்ப முடியவில்லை. அங்கிருக்கும் தமிழ்த்தேசியவாதிகள் வீச்சு ஒரு வரையரைக்கு உட்பட்டது. 

  • Replies 165
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டும் கூட்டம். 

தமக்கு சார்பாக நிலைமை, மக்கள் தொகை எண்ணிக்கை மாறும் வரை, முகிழ்திருக்கும் காலம் முடியும் வரை, உலகெங்கிலும் இதுவே அவர்களின் அணுகுமுறை என்கிறது வரலாறு.

இதில் தப்பேதும் இல்லை. இது மிக தெளிவான நீண்டகால நோக்கிலான அணுகுமுறை.

இதைதான் பாடம் என்கிறேன்.

இப்போ நாம் முகிழ்திருக்கும் காலம் அல்லவா?

6 minutes ago, ரஞ்சித் said:

சிலவேளை இன்னொரு 3000 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் பிடி தளர்வதற்கான சாத்தியம் இருக்கலாம், அதுவரை எமது இனம் இருக்குமா என்றால், கேள்விக்குறிதான்

இப்போ பிடி தளருவதற்கு எந்த சமிக்ஞையும் இல்லைத்தான்.

ஆனால் - இப்போ பாம்புக்கு வாலை காட்டுவது, இன்னும் ஒரு நூற்றண்டுக்காவது நம் இருப்பை தக்க வைக்க உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

உலக வரலாற்றை பார்க்கும் போது மதங்களின் கட்டுப்பாட்டில் பெரும் இனவாத கூட்டங்களாக இருந்த இனங்கள் கூட அதில் இருந்து வெளி வந்துள்ளன.

இலங்கையில் இனவாதம் மேலும் கூர்மையடைகிறது என்பதற்கு 2019 ஜனாதிபதித் தேர்தலே போதுமானது. 

இத்தேர்தலில் அனைத்துத் தமிழர்களும் (கோத்தாவின் தமிழ்க் கூலிகளின் சொற்படி கோத்தாவுக்கு வக்களித்த ஒரு சிலரைத் தவிர்த்து) கோத்தாவுக்கு எதிராக வக்களித்தபோது, குறைந்தது 69 லட்சம் சிங்கள பெளத்தர்கள் அல்லது பொதுவாக - சிங்களவர்கள் கோத்தாவுக்கே வாக்களித்தனர்.

இதுகூறும் செய்தியென்ன? சிங்கள பெளத்த சமூகத்தின் இனவாதம் மேலும் மேலும் கொம்பு சீவப்பட்டு வர, ஏனைய இனங்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டுப் போகிறார்கள் என்பதைத்தானே? 

இந்த அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் நடந்துவரும் வனவளப் பாதுகாப்புச் சட்டம், தொல்பொருள் அமைச்சுச் சட்டம் என்பன கூட மிகவும் திட்டமிட்ட முறையின் தமிழரின் இருப்பை பலவீனப்படுத்த அமைக்கப்பட்டவைதான் என்பதும், இவ்வமைச்சுக்களில் பெளத்த பிக்குகள் முக்கிய பொறுப்புக்களில் இடம்பெறுகிறார்கள்  என்பதும் நீங்கள் அறியாதது அல்லவே?

இதை ஏன் சொல்கிறேன் என்றால், பெளத்தத்தின் பிடியிலிருந்து இலங்கை விடுபட பல நூறு ஆண்டுகள் எடுக்கலாம். அடுத்ததாக, பெளத்தத்தின் தலைமையில் சிங்களத்தின் ராஜதந்திரம் வெற்றியீட்டி வரும்போது, அவர்கள் எதற்காக மதத்தினைக் கைவிட வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அடுத்து இலங்கையில் முஸ்லீம்களை நாம் உதாராணமாக கொள்ள முடியாதா?

ஈஸ்டர் தாக்குதல் போல் ஒன்றின் பின்பும் முஸ்லீம்கள் தம்மை பெரும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஒரு காரணம் முஸ்லீம் தலைமைகள், இரெண்டாம் தலைமைகள் வேறு பட்ட மட்டங்களில் உடனடியாக, நேரடியாக, சிங்கள மக்களுடன் அவர்கள் மொழியில் உரையாடியது எனவும் நினைக்கிறேன்.

பாகிஸ்தான், ஈரான் மற்றும் அரபு நாடுகளுடன் சிங்களம் பகைக்காது. 83 தாக்குதல் போன்று ஒரு தாக்குதலை முஸ்லிம் மக்கள் மீது சிங்கள காடையர்கள் நினைத்தாலும் அவர்களின் பின்னால் உள்ள சிங்கள அரசு  கை வைக்காது. 
தமிழர்களுக்காக யாரும் வர மாட்டார்கள் என்பதால்  சிங்களத்துக்கு எம்மீது இலகுவாக தாக்குதல்களை பல மட்டத்தில் நடாத்துகிறது.
மற்றது முஸ்லிம்கள் எக்கட்சியில் இருந்தாலும் தம்மினத்தை காட்டிக்கொடுப்பது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

தமக்கு சார்பாக நிலைமை, மக்கள் தொகை எண்ணிக்கை மாறும் வரை, முகிழ்திருக்கும் காலம் முடியும் வரை, உலகெங்கிலும் இதுவே அவர்களின் அணுகுமுறை என்கிறது வரலாறு.

இதில் தப்பேதும் இல்லை. இது மிக தெளிவான நீண்டகால நோக்கிலான அணுகுமுறை.

இதைதான் பாடம் என்கிறேன்.

இப்போ நாம் முகிழ்திருக்கும் காலம் அல்லவா?

இப்போ பிடி தளருவதற்கு எந்த சமிக்ஞையும் இல்லைத்தான்.

ஆனால் - இப்போ பாம்புக்கு வாலை காட்டுவது, இன்னும் ஒரு நூற்றண்டுக்காவது நம் இருப்பை தக்க வைக்க உதவலாம்.

நான் இதனை எழுதுவதுகூட உங்களுடன் வாதாடுவதற்காக அல்ல. மாறாக, எமது கைய்யறு நிலையினை நினைத்துத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

நான் இதனை எழுதுவதுகூட உங்களுடன் வாதாடுவதற்காக அல்ல. மாறாக, எமது கைய்யறு நிலையினை நினைத்துத்தான். 

2 minutes ago, nunavilan said:

பாகிஸ்தான், ஈரான் மற்றும் அரபு நாடுகளுடன் சிங்களம் பகைக்காது. 83 தாக்குதல் போன்று ஒரு தாக்குதலை முஸ்லிம் மக்கள் மீது சிங்கள காடையர்கள் நினைத்தாலும் அவர்களின் பின்னால் உள்ள சிங்கள அரசு  கை வைக்காது. 
தமிழர்களுக்காக யாரும் வர மாட்டார்கள் என்பதால்  சிங்களத்துக்கு எம்மீது இலகுவாக தாக்குதல்களை பல மட்டத்தில் நடாத்துகிறது.
மற்றது முஸ்லிம்கள் எக்கட்சியில் இருந்தாலும் தம்மினத்தை காட்டிக்கொடுப்பது இல்லை.

உங்கள் இருவரின் தர்க்க நியாயமும் எனக்கு புரிகிறது.

ஆனால் சிங்களத்தை புறக்கணிக்கும் “இயக்கம்மற்ற நிலை” யை விட, படிப்பதன் மூலம் ஒரு இயங்கு நிலையில் நாம் இருப்பது, எதிர்காலத்தில் பயன் தரக்கூடும் என்றே நினைகிறேன்.

இது எனது அதீத நேர்மறை (பொசிடிவ்) நம்பிக்கையாகவும் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு 10 வருடத்தில் 500 பேரையாவது விக்ரமபாகு போல் சிந்திக்க தூண்டலாமே?

ஆயுதம் மெளனித்த பின் - இப்படியாக ஒரு வகையில் நான் ஏன் முயல கூடாது?

சிங்களம் எதிர்பார்ப்பது சிங்களம் படித்தலை அல்ல சிங்கள மயமாக்கலை. 

இதிலும் தோல்வி அடையப் போவது நாம் தான். ஆனால் அது இறுதி ஆப்பு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்கள் இருவரின் தர்க்க நியாயமும் எனக்கு புரிகிறது.

ஆனால் சிங்களத்தை புறக்கணிக்கும் “இயக்கம்மற்ற நிலை” யை விட, படிப்பதன் மூலம் ஒரு இயங்கு நிலையில் நாம் இருப்பது, எதிர்காலத்தில் பயன் தரக்கூடும் என்றே நினைகிறேன்.

இது எனது அதீத நேர்மறை (பொசிடிவ்) நம்பிக்கையாகவும் இருக்கலாம்

தனிப்பட்ட ரீதியில் சிங்களம் படிப்பது தமிழருக்கு உதவலாம். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இதனால் தமிழரும் பங்குகொள்ளலாம். 

சிங்களவருக்கு ஏலவே தெரிந்த எம்பக்க நியாயங்களை நாம் மீண்டும் அவர்கள் மொழியில் சொல்வதால் ஏதும் நடந்துவிடும் என்பதனை என்னால் இப்போதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சிலவேளை, தமிழரிடமிருந்து தமக்கு இனிமேல் எந்த ஆபத்தும் வராது, அல்லது தமிழரால் இனிமேல் எதனையுமே கேட்கமுடியாது என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்களிடத்தில் வரும்போது, "சரி, இப்போது  பேசுங்கள், கேட்கலாம்" என்று கூறலாம். இது நாம் எமது அடையாளத்தை இழந்து, எமது தாயகத்தை இழந்து அல்லது தாயகத்திற்கான தேவை அற்றுப்போய், இனிமேல் எமக்கான உரிமையும், தாயகமும் வேண்டாம் என்று நாமே விலகி வரும்போது நிகழலாம். அதை நோக்கித்தான், இன்றைய சிங்களப் பேரினவாதம் நகர்ந்து வருகிறது.
குடியேற்றம், சிங்கள மயமாக்கல், கலாசார ஆக்கிரமிப்பு என்று அனைத்துமே சிறுபான்மையினரைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. முடிவில், எமது தாயகத்திலேயே நாம் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமான சிறு கிராமங்களுக்குள் அல்லது பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் நாம் அடக்கப்படும்போது "தாயகம்" எனும் எமது கோட்பாடு அர்த்தமற்றுப் போய்விடும். 

6 minutes ago, விசுகு said:

சிங்களம் எதிர்பார்ப்பது சிங்களம் படித்தலை அல்ல சிங்கள மயமாக்கலை. 

இதுதான் அந்த வித்தியாசம். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரஞ்சித் said:

இது எப்படியோ நடக்கத்தான் போகிறது இல்லையா?

ஆகவே இதை இயக்கமற்று பார்த்துகொண்டிருக்காமல் - எதாவது செய்யலாமே?

42 minutes ago, விசுகு said:

சிங்களம் எதிர்பார்ப்பது சிங்களம் படித்தலை அல்ல சிங்கள மயமாக்கலை. 

இதிலும் தோல்வி அடையப் போவது நாம் தான். ஆனால் அது இறுதி ஆப்பு மட்டுமே.

நிச்சயமாக.

ஆனால் இதை எதிர்தாடுவதும் எங்கள் கையில்தான் உள்ளது. 

எங்கள் நிலங்களில் குடியேற்றங்களை செய்யலாம் - ஆனால் நாம் இணங்காமல் எம்மை இனம் மாற்ற முடியாது.

இந்த ஓர்மம் எம்மிடம் இல்லை என்றால் நாம் ஒரு இனமாக இருக்க தகுதியற்றவர்களே.

முகிழ்ப்பு நிலையில், சூழவும் நீர் இருந்தாலும், தன் அடையாளத்தை காப்பாற்ற தெரிந்த கிழங்குதான் காலம் மாறும் போது துளிர்க்கும்.

நீரை உள்வாங்கும், ஓர்மமற்ற கிழங்கு அழுகித்தான் போகும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இது எப்படியோ நடக்கத்தான் போகிறது இல்லையா?

ஆகவே இதை இயக்கமற்று பார்த்துகொண்டிருக்காமல் - எதாவது செய்யலாமே?

நிச்சயமாக.

ஆனால் இதை எதிர்தாடுவதும் எங்கள் கையில்தான் உள்ளது. 

எங்கள் நிலங்களில் குடியேற்றங்களை செய்யலாம் - ஆனால் நாம் இணங்காமல் எம்மை இனம் மாற்ற முடியாது.

இந்த ஓர்மம் எம்மிடம் இல்லை என்றால் நாம் ஒரு இனமாக இருக்க தகுதியற்றவர்களே.

முகிழ்ப்பு நிலையில், சூழவும் நீர் இருந்தாலும், தன் அடையாளத்தை காப்பாற்ற தெரிந்த கிழங்குதான் காலம் மாறும் போது துளிர்க்கும்.

நீரை உள்வாங்கும், ஓர்மமற்ற கிழங்கு அழுகித்தான் போகும். 

தமிழருக்கு

ஏன்  உலகெங்கும் இன்னொரு மொழியை  படிப்பதென்பது வயிறு சார்ந்தது?

ஆனால்  சிங்களத்துக்கு அது உயிர் சார்ந்தது?

அதனால்  தான் உயர் இராணுவ  நிலையில் இருந்தபோதெல்லாம் போரை நிறுத்தி

சமாதானத்துக்கு அழைத்த  தலைவரின் பார்வையை

அது கடன் கடனாக  பட்டு

நாட்டையே அடைவு  வைத்து

சீரளித்து வெற்றி  கண்டது???

19 hours ago, தமிழ் சிறி said:

நான்… அவர்களை, எங்களின் சொந்தக்காரர் என நினைத்தேன். 😂

பொய் சொல்லலாம்… ஆனால், மூட்டைக் கணக்கில் சொல்லப் படாது. 🤣

கற்பனைக்கு

ஒன்றென்ன?

மூட்டையென்ன???😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஆகவே இதை இயக்கமற்று பார்த்துகொண்டிருக்காமல் - எதாவது செய்யலாமே?

நிச்சயமாக. காலம் தானாக எம்மிடம் ஒரு வழியைத் தரும். அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

ஏன்  உலகெங்கும் இன்னொரு மொழியை  படிப்பதென்பது வயிறு சார்ந்தது?

இலங்கையிலாவது, நாம் தமிழை கற்று, கற்பித்து, ஆட்சி மொழிகளில் ஒன்று என்ற பெயரளவு அந்தஸ்திலாவது வைக்க முடியும், வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இலங்கையிலாவது, நாம் தமிழை கற்று, கற்பித்து, ஆட்சி மொழிகளில் ஒன்று என்ற பெயரளவு அந்தஸ்திலாவது வைக்க முடியும், வேண்டும். 

சிங்களத்தை  படித்து  விட்டால்  எப்படி  தமிழ்  ஆட்சி  மொழியாகும்???

சிங்களம் படித்த  எம்மவர் எவராவது  தமிழ்  ஆட்சி மொழிக்காக போராடி  இருக்கிறார்களா???

அங்கே  தான் நாம்  தோற்றுப்போனோம்

சிங்களம்  வென்றது??

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

சிங்களத்தை  படித்து  விட்டால்  எப்படி  தமிழ்  ஆட்சி  மொழியாகும்???

சிங்களம் படித்த  எம்மவர் எவராவது  தமிழ்  ஆட்சி மொழிக்காக போராடி  இருக்கிறார்களா???

அங்கே  தான் நாம்  தோற்றுப்போனோம்

சிங்களம்  வென்றது??

சிங்களத்தை படித்தாலும், அதை வடக்கு கிழக்குக்கு வெளியேதான் நாம் வைத்திருக்க வேண்டும். 

எமது பகுதியில், நாம் கற்பித்தலையும் கற்றலையும், நிர்வாக இதர நடவடிக்கையையும், கலாச்சாரத்தையும் தமிழில்தான் செய்ய வேண்டும். 

இதில் உள்ள ரிஸ்க் - எல்லாருக்கும் சிங்களம் தெரியும் பிறகு ஏன் தமிழ் என பேரினவாதம் சொல்லும். 

அப்போது - இல்லை தமிழ் எங்கள் அடையாளம் நாம் தொடர்ந்தும் தமிழில்தான் படிப்போம், செயல்படுவோம் என நாம் உறுதியாக நிற்க வேண்டும்.

நாம் ஏன் தமிழை விட்டு விடமாட்டோம் என்ற இந்த நிலையை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் எடுத்து சொல்லவேண்டும்.

இல்லாமல் இப்படியே இருந்தோமானாலும், குடிப்பரம்பலின் மூலம் “தமிழ் இனி தேவையில்லை” என்ற நிலையை வலிந்து உருவாக்கவே போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

பட்டறிந்த பாடங்களின்படி

சிங்களவன்  அல்ல  எம்மவரே அதிகம் கூவுவர்

இனி  தமிழ்  தேவையில்லை  என்று...

அதற்கு யாழிலேயே ஆட்கள் தற்பொழுதே  உண்டு?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சிங்களம் தேவையில்லாமல்  இருக்கலாம் ஆனால் இங்குள்ளவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கவாவது சிங்களம்  தேவைப்படுகிறது ( தேவை) பல இளைஞ்சர்கள் வடக்கில் உள்ளவர்களாகட்டும் கிழக்கில் உள்ளவர்களாகட்டும் சரளமாக சிங்களம் பேசுகிறார்கள் வேலை செல்ல்லும் இடம் , பல்கலைக்கழகம் ,  இப்படி நிறைய இடங்களில்  அவர்களை நிலைநிறுத்திக்கொள்ள  மொழி தேவைப்படுகிறது .

எனக்கு சிங்களம் பெரிதாக தெரியாது பழக நினைக்கிறன் ஆனால் எனது தம்பி , தங்கைகள் சரளமாக சிங்களம் கதைப்பார்கள் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , 

ஒரு ஊடகவியலாளருக்கு சிங்களம், ஆங்கில புலமை அதிகம் வேண்டும் அந்த நாடுகளுக்கு ஏற்றால் போல் இப்பெல்லாம் போணை துக்கினால் ஊடகவியலாளர்கள்  அடிப்பான் தானே 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்கள் இருவரின் தர்க்க நியாயமும் எனக்கு புரிகிறது.

ஆனால் சிங்களத்தை புறக்கணிக்கும் “இயக்கம்மற்ற நிலை” யை விட, படிப்பதன் மூலம் ஒரு இயங்கு நிலையில் நாம் இருப்பது, எதிர்காலத்தில் பயன் தரக்கூடும் என்றே நினைகிறேன்.

இது எனது அதீத நேர்மறை (பொசிடிவ்) நம்பிக்கையாகவும் இருக்கலாம்

சிங்களம் பொருளாதார ரீதியில் மிக அடியில் போகும் போது அல்லது மேற்கு நாடுகளின் (உண்மையான) அழுத்தம் இல்லாத வரை தமிழரின் பிரச்சனையை ஏறெடுத்தும் பார்க்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/9/2021 at 02:35, Justin said:

இந்த பேக்கரி உரிமையாளர்களைத் தெரியாது - ஒரு வேளை 90 களில் வெளியேறி விட்டார்கள் போல! 

ஆனால் நான் அறிந்த மிகச் சில சிங்களவர்கள் தமிழ் தான் பேசினர் (சிங்கள மகாவித்தியாலயம் இல்லாமல் போய் விட்டது, எங்கே யாருடன் சிங்களம் பேசுவது யாழில்!). இவர்களில் சிலர் - பியதாச மாஸ்ரர் போன்றோர் - அரச ஊழியர்கள் சிங்களப் பரீட்சைக்குப் படிக்க உதவியிருக்கின்றனர். 

 2012 இல் வன்னி போன போது  தமிழில் சரளமாகப் பேசக்கூடிய சிங்களப் பெண் மிருக வைத்தியர்கள் பலர் அங்கே வேலை செய்தனர். எனவே காலத்தோடு சிறிய மாற்றங்கள் தேவைகள் கருதியாவது ஏற்பட்டிருக்கிறது! 

உங்களைப் போன்ற என்னைப் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்  சிறந்த ஜனநாயக நாடுகளில் வாழ்கின்றோம். சகல உரிமைகளுடனும் சமத்துவமான முறையிலும் வாழ்கின்றோம். இது போல் சமத்துவம் ஏன் இலங்கையில் சாத்தியமாக்க முடியவில்லை? 

இயக்க கலாச்சாரத்தை தவிர்த்து ஒரு பதிலை உங்களால் தர முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சிங்களம் தேவையில்லாமல்  இருக்கலாம் ஆனால் இங்குள்ளவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கவாவது சிங்களம்  தேவைப்படுகிறது ( தேவை) பல இளைஞ்சர்கள் வடக்கில் உள்ளவர்களாகட்டும் கிழக்கில் உள்ளவர்களாகட்டும் சரளமாக சிங்களம் பேசுகிறார்கள் வேலை செல்ல்லும் இடம் , பல்கலைக்கழகம் ,  இப்படி நிறைய இடங்களில்  அவர்களை நிலைநிறுத்திக்கொள்ள  மொழி தேவைப்படுகிறது .

எனக்கு சிங்களம் பெரிதாக தெரியாது பழக நினைக்கிறன் ஆனால் எனது தம்பி , தங்கைகள் சரளமாக சிங்களம் கதைப்பார்கள் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , 

ஒரு ஊடகவியலாளருக்கு சிங்களம், ஆங்கில புலமை அதிகம் வேண்டும் அந்த நாடுகளுக்கு ஏற்றால் போல் இப்பெல்லாம் போணை துக்கினால் ஊடகவியலாளர்கள்  அடிப்பான் தானே 

இஞ்சை பாருங்கோ ராசன்! நான் ஒரு தமிழன். இது என்ரை முதல் அடையாளம். நான் வசிக்கும் நாடு ஜேர்மனி எனக்கு ஜேர்மன் பாசை தெரியும்.ஊரிலை ஆங்கிலம் கொஞ்சம் படிச்சிருக்கிறன். என்னை மாதிரி புலம் பெயர் தமிழர்கள் எல்லாம் பிரான்ஸ் பாசை டெனிஸ் பாசை எண்டு எல்லா பாசையும் தெரியும்

இஞ்சை படிக்கிற பிள்ளையள் பிற  மொழி கட்டாயம் படிக்க வேணும். மொழி துவேச பிரச்சனை ஏதுமில்லை
ஜேர்மனியை சுத்தி பல மொழி நாடுகள் இருக்கு.....எல்லாச்சனமும் எல்லா இடமும் போய் வருதுகள். ஒரு பிரச்சனையுமே இல்லை. 

அதென்ன சிங்களவனுக்கு மட்டும் மற்ற பாசை வாய்க்கை நுழையுது இல்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் துவேசம் இல்லை எனக்கூறமுடியாது, அனைத்து நாடுகளிலும் துவேசம் உள்ளது ஆனால் சட்டம் மக்கள் பாதிப்படைவதை தடுக்கிறது, சில நாடு அரசுகள் தாம் இயற்றும் சட்டத்தை தாமே கடைப்பிடிப்பதில்லை ஒரு மொழி அரசகரும  மொழியாக்கப்பட்ட பின்னர் அந்த மக்களிடையே பணி புரியும் அரச  ஊழியர்களுக்கு அந்த மொழி தெரிந்திருந்தால் இலகு அல்லது ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவைப்படுவார், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டைக்கடைப்பிடித்தால், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும், மக்கள் ஊழல் அற்ற சட்டத்தை மதிக்கும் அரசினைத்தேர்ந்தெடுத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அதென்ன சிங்களவனுக்கு மட்டும் மற்ற பாசை வாய்க்கை நுழையுது இல்லை.😎

 தற்போது தமிழ் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இன்னும் சில ஆண்டுகள் கழிந்த பின் எல்லோரும் தமிழ் பேசலாம். அரசாங்க வேலையில் இருப்பவராக இருந்ததால் மொழி பயிற்சி கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.சிங்களவர்கள் தமிழும் தமிழர்கள் சிங்களமும்.

ஏன் சிங்களவர்கள் ஹிந்தி இலகுவாக கதைப்பார்களே 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 தற்போது தமிழ் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இன்னும் சில ஆண்டுகள் கழிந்த பின் எல்லோரும் தமிழ் பேசலாம். அரசாங்க வேலையில் இருப்பவராக இருந்ததால் மொழி பயிற்சி கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.சிங்களவர்கள் தமிழும் தமிழர்கள் சிங்களமும்.

ஏன் சிங்களவர்கள் ஹிந்தி இலகுவாக கதைப்பார்களே 

இலங்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை தனி. சிலர் இந்தியப் படங்களைப்பார்த்து தமது விருப்பப்படி கற்றுக்கொள்கிறார்கள் அப்பன்.

ஆனால், தமிழ்ப் பிரதேசத்தில் “ஏன் நீ இன்னும் சிங்களம் தெரியாமல் இருக்கிறாய்?” சிங்கள அதிகாரியொருவர் கேட்பது விருப்பத்தின்பேரில் இல்லையென்பதும், அது ஒரு ஏளனத்துடன் கூடிய கட்டாயப்படுத்தல் தான் என்பது உங்களுக்குப் புதியாதது அல்லவே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சில வருடங்களுக்கு முன் இங்கு சிட்னியில் ஒரு நிறுவனத்தில் என்னுடன் இரு இலங்கை பெண்கள் வேலை செய்தார்கள், அவர்கள் தம்மிடையே சிங்களத்தில் பேசுவார்கள், எனக்கு சிங்களம் தெரியாது என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை, நான் நினைக்கிறேன் இலங்கையர் என்றால் அனைவரும் சிங்களம் பேசுவார்கள் என்ற புரிதலில் உள்ளார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

சில வருடங்களுக்கு முன் இங்கு சிட்னியில் ஒரு நிறுவனத்தில் என்னுடன் இரு இலங்கை பெண்கள் வேலை செய்தார்கள், அவர்கள் தம்மிடையே சிங்களத்தில் பேசுவார்கள், எனக்கு சிங்களம் தெரியாது என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை, நான் நினைக்கிறேன் இலங்கையர் என்றால் அனைவரும் சிங்களம் பேசுவார்கள் என்ற புரிதலில் உள்ளார்களோ?

அதே போல்… வட இந்தியர்களில் பலரும், இந்தி தெரியாத தென் இந்தியர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டு… மூக்கில் விரல் வைப்பார்களாம். 😂

நாங்களும் இனி…. தமிழ் தெரியாத ஆட்களைப் பார்த்து, மூக்கில் விரல் வைத்தால்தான்… இவங்கள் திருந்துவாங்கள். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் சிங்களவர்கள் ஹிந்தி இலகுவாக கதைப்பார்களே 

ஹிந்தி_தெரியாது_போடா... தேசிய அளவில் டிரெண்டான ஹேஷ்டேக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.