Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.... திருகுவலையால், கணவனை... அடித்துக் கொன்ற மனைவி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்றது திருவலை இல்லாத குடும்பத்தில் பெண் எடுக்கோணும் எண்டு,

தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தினசரி நடக்கிறது, சமூக வலைதளங்களில் அதுபோன்ற செய்திகள் வரும்போது தமிழகத்தை சேர்ந்தவர்களை எம்மவர்கள் ஒரு சிலர்

‘ தமிழ்நாடு ஒரு போதும் திருந்தாது’’

எங்கள் இடத்தில இப்படியெல்லாம் நடக்கிறதில்ல.

கள்ளக்காதல் சினிமா அரசியலைவிட்டா உங்கட ஆக்களுக்கு ஒண்டுமே தெரியாது எண்டு தமிழகத்தவர்களை பின்னூட்டம் இட்டு  வசைபாடுவார்கள் கேலி செய்வார்கள் , கருத்து மோதலில் ஈடுபடுவார்கள்.

சமூக குற்றங்களுக்கு கண்டங்கள் நாடுகள் ஊர் இனம், மதம் மொழி சாதி எல்லாம் இல்லை,  

உலகின் எந்த மூலைக்கு போனாலும் ஏதாவது ஒன்று நடந்து கொண்டிருக்கும், என்ன தண்டனை கொடுத்தும் அதை கட்டுபடுத்த முடியாது.

பாரிய குற்றங்களுக்கு தலையை வெட்டும் சவுதியிலேயே அதை குறைக்கமுடியவில்லை,

குறைக்க முடிந்திருந்தால் அப்புறம் எதுக்கு வருசம் வருசம் கை கால் தலையை வெட்டுகிறார்கள்?.

இதுபோன்ற சம்பவங்களை முழுதாய் அறியாதவரை குற்றத்தின் பின்னணியைபற்றி முடிவுக்கு வர ஏலாது,

சில கணவன்மார் வீட்டை கவனிக்காமல் முழுநேர குடிகாரனாகி சண்டைக்கும் சாப்பாட்டுக்கும் மட்டும் வீட்டுக்கு வருபவராக இருந்தால் ஒரு கட்டத்தில் கொலை செய்தாலும் குற்றமில்லை என்ற ஒரு நிலமை வரும்.

சில வீடுகளில் கணவன் உயிரை கொடுத்து குடும்பத்தை காப்பாற்றினாலும் சில பெண்கள் பேஸ்புக், போன் மூலம்  வேலை வெட்டி இல்லாமல் ஊருக்குள் திரியும் காவாலிகளின் ஸ்டைல்ல மயங்கி அவங்களோட ஓடுறதுக்காக குற்றம் செய்பவர்களும் உண்டு.

இவர்கள் தானாக உணர்ந்து திருந்தினால்தான் உண்டு , மற்றும்படி இவர்களை வகுப்புகள் நடத்தி பாடம் எடுத்து விழிப்புணர்வு செய்து எல்லாம் திருத்தலாம் என்பது எல்லாம் வெறும் பகல் கனவு.

  • Replies 58
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த சம்பவத்தின் பெயர் இலங்கையில் பிரசித்தி பெற்ற "கோகிலாம்பாள் கொலை வழக்கு".....  சம்பவம் நடந்த இடம் உருத்திரபுரம் என நினைக்கின்றேன்.

இதைப் பற்றிய புத்தகங்களே கனக்க இருக்கு..

88ம் ஆண்டு கிளிநொச்சி உருத்திரபுரம் போன்போது அந்த கோவிலுக்கு முன்னால் உள்ள எருக்குவியலைக்காட்டி இதுதான் அய்யரை புதைத்த இடமென்றூ...ஊரார் அடையாளப்படுத்தினவை..

3 hours ago, புங்கையூரன் said:

சாணிக் கும்பிக்குள்ள புதைச்சு வைச்ச கேஸ் தானே?

நெடுந்தீவு தான்…!

படுபாவி கோகிலாம்பாள் படுகொலையைச் செய்தாளே…!

எண்டு ஒரு பாட்டும் இருந்தது…!

இதும் உண்மைதான்...கேள்விப்பட்டனான்..

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, alvayan said:

அந்த சம்பவத்தின் பெயர் இலங்கையில் பிரசித்தி பெற்ற "கோகிலாம்பாள் கொலை வழக்கு".....  சம்பவம் நடந்த இடம் உருத்திரபுரம் என நினைக்கின்றேன்.

இதைப் பற்றிய புத்தகங்களே கனக்க இருக்கு..

88ம் ஆண்டு கிளிநொச்சி உருத்திரபுரம் போன்போது அந்த கோவிலுக்கு முன்னால் உள்ள எருக்குவியலைக்காட்டி இதுதான் அய்யரை புதைத்த இடமென்றூ...ஊரார் அடையாளப்படுத்தினவை..

இதும் உண்மைதான்...கேள்விப்பட்டனான்..

ஒமோம். 

அந்த ஐயரையும் மாட்டையர் எண்டு தான் ஊரிலை சொல்லிறவை..!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்த மனைவி பொலிஸில் சரண்- அவிசாவளையில் சம்பவம்

கணவனை... பொல்லால் தாக்கி, கொலை செய்த மனைவி... பொலிஸில் சரண்- அவிசாவளையில் சம்பவம்

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளையில்  பதிவாகியுள்ளது.

அவிசாவளை– தைகல, கபுவெல்லவத்த பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மதுபோதையில் வருகைத் தந்த கணவர்,  மனைவியை தாக்கியுள்ளார்.

இதன்போது மனைவியும் பொல்லால் பதில் தாக்குதல் நடத்தியபோது, கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தனது 8 வயதான மகளுடன், அதே வீட்டில் தங்கியிருந்த 27 வயதான மனைவி, அவரது மாமியார் வீட்டிற்கு சென்று, குழந்தையை ஒப்படைத்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அவிசாவளை– தைகல, கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1240213

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பெண்ணை குற்றம் சாட்டக்கூடாது. கேவலமாக இப்படி கள்ளக்காதல் என்று இழிவாக‌ எழுதக்கூடாது.
கணவர் ஒரு குடிகாரான். அன்பில்லா கணவன். தன்னுடைய எந்தவித பொறுப்பையும் ஒழுங்காக செய்யவில்லை.
ஒரு பெண் தடம் மாற இவர்தான் முழுகாரணம். 

கொழும்பில் ஒர் slum ல்  பிறந்து வளர்ந்த நான் இதேபோல் நிறைய விடயங்களை பார்த்துள்ளேன்.

மேலும் ஒரு குடிகார தகப்பனுக்கு மகனாக பிறந்து நான்பட்ட கஷ்டங்களை எழுத முடியாது 

7 hours ago, குமாரசாமி said:

இது கொஞ்சம் பரவாயில்லை புலவர். 50 வருசத்துக்கு முந்தி ஒரு ஐயர் அம்மா கள்ளக்காதலுக்காக புருசன் ஐயர் பெருமானையே அரிவாளால் கழுத்தை அறுத்து கதையை முடிச்சார். கொலைக்கு உதவி செய்தவர் அவவின்ட நியூ டார்லிங்.....எல்லாம் காமம் செய்யும் வேலை. காதலுக்கு கண் இருக்கு. காமத்துக்கு கண் இல்லை.

அந்த சம்பவத்தின் பெயர் இலங்கையில் பிரசித்தி பெற்ற "கோகிலாம்பாள் கொலை வழக்கு".....  சம்பவம் நடந்த இடம் உருத்திரபுரம் என நினைக்கின்றேன்.

இதேபோல் மத்தெயு பீரிஸ் எனும் அங்கிலிகன் பாதர் ஒருவர் தன் மனைவியை விசம் குடுத்து கொன்றதாகவும் ஒர் வழ்க்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, colomban said:

இதேபோல் மத்தெயு பீரிஸ் எனும் அங்கிலிகன் பாதர் ஒருவர் தன் மனைவியை விசம் குடுத்து கொன்றதாகவும் ஒர் வழ்க்கு உண்டு.

இது படு பிரசித்தமான பழைய கேஸ் எலுவா ...?
மத்தியூ தன்னோட பொண்டாட்டியும் ,கள்ள  டாவோட புருஷனையும் போட்டுத்தள்ளிய கேஸ் 
Jacqueline Fernandez நடித்து According to Matthew என்ற திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

இந்த செய்திகளை எல்லாம்… இங்குள்ள மனைவிமாரின் கண்களில் படாமல் பாதுகாப்பதே   எங்கள் உயிருக்கு உத்தரவாதம். 😂🤣

வருமுன் காப்போம்! சமையலறை  ஆயுதங்களை மறைப்பது, இதுபோன்ற செய்திகள் மனையாளின்  கண்களில் படாமல் ஒளிப்பது. ஹா.... ஹா..... இன்னும் வரும்...... 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

இதுக்குத்தான் சொல்றது திருவலை இல்லாத குடும்பத்தில் பெண் எடுக்கோணும் எண்டு,

எங்கள் வீட்டில் திருவலை எடுக்க அவ என்னைத்தான் கூப்பிடுவா... அவவுக்கு எட்டாது. 😋

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

எங்கள் வீட்டில் திருவலை எடுக்க அவ என்னைத்தான் கூப்பிடுவா... அவவுக்கு எட்டாது. 😋

பரவாயில்லை, நீங்களும் முன்னெச்சரிக்கையுடன் தான் இருக்கிறியள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.