Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பு துறப்பு

இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள்.

நோக்கம்

யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம்.

அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன்.

@vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது.

ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன்.

மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள். 

ஆகவே,

பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம்.

பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே:

 

 

  • Like 9
  • Thanks 5
Link to comment
Share on other sites

  • Replies 650
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன்.

நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன்.

இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும்.

எல்லோருமே விளையபடியிருப்போம்.

அதாவது மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து குஞ்சு பொரித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்த்திருப்போம்.

அதே மாதிரியான செயலில் மீண்டும் எங்களைக் கொண்டு போகும்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவர்கிராண்ட் என்ற சீன கட்டுமான நிறுவனம் திவாலாகும் என்ற பீதியில் உலகெங்கும் உள்ள பங்கு சந்தைகள் இந்த வாரம் இறங்கு முகத்தில் உள்ளன. 

இதன் பலனாக கிரிப்டோ நாணய சந்தையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஆனால் இது நிரந்தர வீழ்ச்சியா?

முதலாவதாக investor confidence ஐ தவிர எவர்கிராண்டுக்கும், கிரிப்டோ பெறுமதிக்கும் அதிக தொடர்பு இருப்பதாக எனக்கு படவில்லை.

நான் இப்படி நினைப்பது சரிதானா?

ஒரு கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சி - உலகளாவிய பங்கு வர்த்தகத்தை பாதிக்கும் போது அது, தங்கம் போன்றவற்றின் விலையை கூட்டக்கூடும் ( தங்கம் பங்கை விட பாதுகாப்பு என்பதால்).

இதே லாஜிக் Tether போன்ற stable currency களுக்கும் ஏற்புடையதாகாதா?

அப்படியாயின் - சில குறித்த கிரிப்டோ நாணயங்களின் பெறுமதி இன்றைய மதிப்பில் இருந்தும் விரைவில் மீள வாய்பிருக்கிறதா?

5 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன்.

நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன்.

நன்றி அண்ணா. நிச்சயம் பகிருங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன்.

நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன்.

இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும்.

எல்லோருமே விளையாடியிருப்போம்.

அதாவது மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து குஞ்சு பொரித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்த்திருப்போம்.

அதே மாதிரியான செயலில் மீண்டும் எங்களைக் கொண்டு போகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

அதாவது மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து குஞ்சு பொரித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்த்திருப்போம்

அருமையான ஒப்பீடு😎. ஆனால் மயிலிறகு தேயாது. முதலீடு தேயக்கூடும்🙁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

அருமையான ஒப்பீடு😎. ஆனால் மயிலிறகு தேயாது. முதலீடு தேயக்கூடும்🙁

உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம்
எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும்.

வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப காலத்தில் வங்கியின் முகாமையாளரை குளிர்ச்சி செய்வதற்காக சில பங்குகளை வாங்கி விட்டதுண்டு. ஆனால் நமக்கு தேவையானபோது அது கை கொடுக்காதது மட்டும் அல்ல நட்டத்தையும் தான் தந்தது.

எழுதுங்கள். பலருக்கு பிரயோசனப்படும். 👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம்
எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும்.

வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்

நன்றி எழுஞாயிறு.

மேலும் உங்களுக்கு தகவல்கள் வரும் போது பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

33 minutes ago, விசுகு said:

ஆரம்ப காலத்தில் வங்கியின் முகாமையாளரை குளிர்ச்சி செய்வதற்காக சில பங்குகளை வாங்கி விட்டதுண்டு. ஆனால் நமக்கு தேவையானபோது அது கை கொடுக்காதது மட்டும் அல்ல நட்டத்தையும் தான் தந்தது.

எழுதுங்கள். பலருக்கு பிரயோசனப்படும். 👏

நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

ஆரம்ப காலத்தில் வங்கியின் முகாமையாளரை குளிர்ச்சி செய்வதற்காக சில பங்குகளை வாங்கி விட்டதுண்டு. ஆனால் நமக்கு தேவையானபோது அது கை கொடுக்காதது மட்டும் அல்ல நட்டத்தையும் தான் தந்தது.

எழுதுங்கள். பலருக்கு பிரயோசனப்படும். 👏

 

  பங்கு வர்த்தகம் சவால்கள் நிறைந்த ஒன்றுதான், முன்பு குறிப்பிட்டது போல யூ டுயூப் விடியோ மற்றும் புத்தகங்களில் வாசித்து விட்டு எப்படி மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் பங்கு வர்த்தகமும்.

ஒருவர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது நவீன தொழில் முறையில் வெற்றி பெறுவதற்கு எமது உள்ளுணர்வு தடையாகவிருக்கிறது என கூறுகிறார்கள்.

கற்கால மனிதனின் சுய பாதுகாப்பு பொறிமுறை அதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகிறார்கள்.

fxcm என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது, அதில் 90% அவர்களது வாடிக்கையாளர்கள், தமது பணத்தினை இழப்பதாக வெளியிட்டிருந்தது.

அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன்.

அதன் பின்னர் இடம்பெற்றது இன்னும் வேடிக்கையானது, அந்த நிறுவனம் நாணயச்சந்த்தையில் CFD முறையில் வர்த்தகத்திலீடுபட்டது

90% எப்படியோ பணத்தை இழக்கப்போகிறார்கள்தானே அதனை நேரடியாக தமது வங்கியில் போட்டு விட்டார்கள் (Hedge செய்யவில்லை). 2018 தை அல்லது மாசி ஆக இருக்கலாம் ஒரு பாகிஸ்தானிய நாணய வர்த்தகரால் போலியான விற்றல் வாங்கல்களை கணனியில் உருவாக்கியதன் மூலம் ஒரு சடுதியான சரிவை குறுகிய நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது (flash crash) இதனால் பல பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கட்டுபடுத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதனால் அவரை சாதாரண நாணய வர்த்தகர்கள்  ரொபின் கூட் வர்த்தகர் என கூறுகிறார்கள், இந்த நிகழ்வின் போது fxcm நிறுவனம் ஏறத்தாழ வங்குறோத்து நிலையை எட்டியது.

12 hours ago, vasee said:

https://www.babypips.com/learn/forex

இந்த இணையத்தளத்தில் உங்களை பதிவு செய்து (அல்லது செய்யாமலும்) இதில் உள்ள பாடத்திட்டத்தை  இலவசமாக தொடரலாம், குறிப்பாக முக்கியமான விடயங்களை இந்த பாடத்திட்டத்தில் உள்ளடக்குகிறார்கள்.

பங்கு சந்தை வர்த்தகத்தில் 90% தோற்கிறார்கள் என கூறுகிறார்கள்.

https://www.fxcm.com/au/education/traits-successful-traders/

இந்த விகிதாசாரம் வியாபாரத்துறையில் தோல்வியடைவோரின் விகிதாசாரமும் சரியான அள்விலே உள்ளது.

Fundamental analysis இல் பங்கு சந்தை நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை ஆனால் இந்த புத்தகம் படிக்கும் போது ஆர்வமாக இருந்தது உங்களுக்கு உபயோகப்படலாம்.

இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம்.

yahoo finance

google finance

fundamental analysis தகவல்களை இலவசமாகப்பெறலாம்.

முதலீட்டின் பரவலாக்கலாம்

https://www.amazon.com.au/Intelligent-Asset-Allocator-Portfolio-Maximize-ebook/dp/B005XM6NRY

இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம்.

இவை தவிர "beta"பயன்படுத்தி முதலீட்டின் பரவலாக்கலாம்

உதாரணமாக "beta" 2 பங்குகள் மொத்த சந்தை 1 விகிதமாக அதிகரித்தால் குறித்த பங்கு அதனை விட 2 புள்ளி அதிகரிக்கும் என்பார்கள் உதாரணம் கனிய வள பங்குகள் ஆனால் மருத்துவ துறை பங்குகள் 0.5 விகிதம் மட்டும் மாறும், அதனால் அதன் "beta" 0.5

எனக்கு நீண்டகால முதலீட்டில் அனுபவம் இல்லை, அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

முதலீடுகளுக்கு ஒரே ஒரு விடயம் முக்கியம் என்பார்கள் " மூலதன பாதுகாப்பு".

பங்கு வர்த்தகத்தில் 90% உளவியல் என்பார்கள், அதற்கு பிறகு பணப்பராமரிப்பு அதன் பின்னரே மற்றதெல்லாம் என்பார்கள்.

https://www.youtube.com/watch?v=blQZ_bF468c

 

 

Edited by vasee
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலாபத்தை மட்டுமே எதிர்பார்த்து முதலீடு செய்யும்போது ஆரம்பத்தில் அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் இருக்கும், எந்த பாதுகாப்பு நடவடிக்கையின்றி முழுப்பணத்தையும் முதலீடு செய்து விட்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போது சந்தை எமெக்கெதிராக மாறும் போது தொடர்ச்சியாக பல தவறுகளை செய்வோம் கடைசியாக முழுப்பனத்தையும் இழப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பார்த்திருத்தும் மனித புத்தியின் சபலம் மாறுவதில்லை என்பது தான் விசித்திரம்..

 
ராஜ் ராஜரத்தினத்தை தெரியாத இலங்கைத் தமிழர் இருக்க முடியாது .


சிறையில் இருந்து வெளியே வர இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் நிலையில் "UNEVEN  JUSTICE" என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார் .


வசதி எண்டால் வாசித்துப் பாருங்கோ .. 

 

Raj Rajaratnam releases book titled ‘Uneven Justice’ | Daily FT 

https://www.ft.lk/front-page/Raj-Rajaratnam-releases-book-titled-Uneven-Justice/44-723285?fbclid=IwAR2UbivxVngPpA3aSaTdrBcPrcusXKchhQFOA5ILWjn5dLVsv9DEG1vUUXY#.YUpqIGxk1IZ.gmail

 

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சாமானியன் said:

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பார்த்திருத்தும் மனித புத்தியின் சபலம் மாறுவதில்லை என்பது தான் விசித்திரம்..

 
ராஜ் ராஜரத்தினத்தை தெரியாத இலங்கைத் தமிழர் இருக்க முடியாது .


சிறையில் இருந்து வெளியே வர இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் நிலையில் "UNEVEN  JUSTICE" என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார் .


வசதி எண்டால் வாசித்துப் பாருங்கோ .. 

 

Raj Rajaratnam releases book titled ‘Uneven Justice’ | Daily FT 

https://www.ft.lk/front-page/Raj-Rajaratnam-releases-book-titled-Uneven-Justice/44-723285?fbclid=IwAR2UbivxVngPpA3aSaTdrBcPrcusXKchhQFOA5ILWjn5dLVsv9DEG1vUUXY#.YUpqIGxk1IZ.gmail

 

https://www.amazon.com/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176

இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேண், இந்த புத்தகத்தில் முறையற்ற பங்கு சந்தை வர்த்தக செயற்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது, இந்த புத்தகத்தில் ராஜ் ராஜரத்தினத்தை பற்றியும் கூறப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது SUPER  Fund  இல் இருக்கும் மிகுதி சென்ற நாணய வருடத்தில் ஏறத்தாழ $40 ,௦௦௦ வருமானமாக ஈட்டியிருக்கிறத்து ,  ஏறத்தாழ 10 % RETURN .


கோவிட் காலத்தில் என்ன நடக்கின்றது என்று நிதானிக்க முன்னரே எல்லாம் நடந்து கொண்டு போகின்றது . சில  வருடங்களுக்கு முன்னர் ஒருதடவை 3% நட்டம் வந்திருந்தது . 


நண்பனின்    மகன் சிட்னியில் 10 மாதங்களுக்கு முன்னர் $1.1 மில்லியன் க்கு வாங்கிய வீட்டினை சில வாரங்களுக்கு முன்னர் $1.52  மில்லியனுக்கு விற்றிருக்கிறான்.


மனக்குரங்குக்கு சரியான தீனி ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Three Skills of Top Trading: Behavioral Systems Building, Pattern Recognition, and Mental State Management

master the markets

இரண்டு புத்தகங்களும் இணையத்தில் தரவிறக்கலாம்.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2021 at 11:52, vasee said:

 


நல்லதொரு இணைப்பு.. 

“Don’t try to predict the future” என்றதற்கு அவரின் உதாரணம் 👌

ஆனால் அதிகம் ஆபத்துவிரும்பிகள் அற்றவர்களுக்கு Housing marketல் முதலீடு செய்வது ஆபத்து குறைவானது. அதுவும் இப்பொழுது இங்கே(அவுஸ்ரேலியாவில்) எப்பொழுதும் இல்லாதவாறு குறைந்த வட்டி வீதம் காணப்படுவதால் வீட்டுக் கடன்களை பெருமளவில் குறைக்கலாம்.. 
வீட்டுகடனிலிருக்கும் மிகையான
equityயை வைத்து  பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. 

ஆனால் எப்பொழுது இந்த வட்டி வீதம் ஏறுமுகமாகும் என்பது தெரியவில்லை.. ஏனெனில் இப்பொழுதான் இந்த செய்தியையும் பார்த்தேன்

“Australia's biggest bank sounds the alarm on rapid surge in house prices over fears borrowers will struggle to repay their debt”

https://www.google.com.au/amp/s/www.dailymail.co.uk/news/article-10023295/amp/The-Commonwealth-Bank-CEO-Matt-Comyn-rising-Australian-house-prices-debt-levels.html

குறுகிய கால வீழ்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகவும்  இருந்தால் ஏமாற்றங்களையும் நட்டத்தையும் குறைக்க முடியும்.. 

On 22/9/2021 at 11:43, vasee said:

இலாபத்தை மட்டுமே எதிர்பார்த்து முதலீடு செய்யும்போது ஆரம்பத்தில் அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் இருக்கும், எந்த பாதுகாப்பு நடவடிக்கையின்றி முழுப்பணத்தையும் முதலீடு செய்து விட்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போது சந்தை எமெக்கெதிராக மாறும் போது தொடர்ச்சியாக பல தவறுகளை செய்வோம் கடைசியாக முழுப்பனத்தையும் இழப்போம்.

உண்மை.. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:


நல்லதொரு இணைப்பு.. 

“Don’t try to predict the future” என்றதற்கு அவரின் உதாரணம் 👌

ஆனால் அதிகம் ஆபத்துவிரும்பிகள் அற்றவர்களுக்கு Housing marketல் முதலீடு செய்வது ஆபத்து குறைவானது. அதுவும் இப்பொழுது இங்கே(அவுஸ்ரேலியாவில்) எப்பொழுதும் இல்லாதவாறு குறைந்த வட்டி வீதம் காணப்படுவதால் வீட்டுக் கடன்களை பெருமளவில் குறைக்கலாம்.. 
வீட்டுகடனிலிருக்கும் மிகையான
equityயை வைத்து  பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. 

ஆனால் எப்பொழுது இந்த வட்டி வீதம் ஏறுமுகமாகும் என்பது தெரியவில்லை.. ஏனெனில் இப்பொழுதான் இந்த செய்தியையும் பார்த்தேன்

“Australia's biggest bank sounds the alarm on rapid surge in house prices over fears borrowers will struggle to repay their debt”

https://www.google.com.au/amp/s/www.dailymail.co.uk/news/article-10023295/amp/The-Commonwealth-Bank-CEO-Matt-Comyn-rising-Australian-house-prices-debt-levels.html

குறுகிய கால வீழ்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகவும்  இருந்தால் ஏமாற்றங்களையும் நட்டத்தையும் குறைக்க முடியும்.. 

உண்மை.. 

அவுஸ்திரேலியாவில் சாதாரண சூழ்நிலையில் 10 வருடத்தில் உங்களது வீட்டு முதலீட்டின் பெறுமதி இரு மடங்காகும் என கூறுகிறார்கள் (நகர்புற முதலீட்டில்), இது ASX 200 index முதலீட்டிற்கு ஒப்பானதாகும் (8 வருடத்தில் இரட்டிப்பாகும் எஙிறார்கள்) இந்த இரண்டு முதலீடுகளும் கடந்த ஆண்டு ஆரம்பபகுதியில் 26-28 விகிதம் சரிவை கண்டு பின்னர் வரலாறு காணாத உயர்வை எட்டியது.

ஆனால் ஒப்பீட்டளவில் வீடுகளில் முதலிடுவது பாதுகாப்பானது, இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே,நடை முறை கோவிட் தாக்கத்தினால் 10 இல் 1 தமது வீட்டுக்கடனை கட்டமுடியாமல் போகலாம் என கூறுகிறார்கள், ஆனாலும் அவுஸ்திரேலியாவில் 50% வீட்டுக்கடன், வீட்டு உரிமையாளர் வசிக்கும் வீடுகாளாக உள்ளது அத்துடன் நீங்கள் கூறியது போல மிக குறைந்த வட்டி விகிதமும் குறைந்த வேலையின்மை விகிதம் உள்ளமையால் அதிகம் வீட்டு விலை சரிவு ஏற்படாது ( எனது தனிப்பட்ட கருத்தாகும்) ஆனால் ஏற்கனவே வீட்டு விலை அதிகரிப்பு சராசரி நுகர்வோர் விலையை மீறிவிட்டது(affordability), அத்துடன் குடி நுழைவு நிறுத்தப்பட்டுள்ளது, வேலை இன்மை விகிதம் 20% உயர்ந்தால் வீட்டு விலை சரிவு ஏற்படலாம் என சொல்கிறார்கள்.

2008 இல்  அமெரிக்காவில் வீட்டு விலைகள் சடுதியாக உயர்ந்து பின்னர் விலை உயர்வு மந்த நிலையுற்று பின்னரே வீட்டு விலை சரிவு ஏற்பட்டதாக கூறுகிறார்கள், அதற்கு காரணம் மோசமான வங்கிக்கடன் ஒரு காரணமாகும், அவுஸ்திரேலியாவில் மோசமான வங்கி கடன் இருப்பதாக உணரவில்லை.

ஆனால் தற்சமயம் வீட்டு விலைகளை பார்ர்கும் போது ஆபத்தான முதலீடாக இருக்குமா?
உங்களது அபிப்பிராயம் என்ன? 

இந்த கருத்து முன்னர் பதிவு செய்த ஒன்று பின்னர் அழித்து விட்டேன், எனது அபிப்பிராயம் தவறாக இருக்கலாம் என்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வீட்டுகடனிலிருக்கும் மிகையான
equityயை வைத்து  பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. 

மிகவும் தவறான முதலிடும் முறை, வாழும் வீட்டை அறுதி வைத்து கடன் எடுத்து (equity release) முதலிடுவது.

ஒரு விதத்தில் short (கடன் எடுத்து) longing (முதலிடுவது); இன்னொரு விதத்தில், 1:1 leverage; வாழும் வீட்டை அறுதி வைத்து.

இதில் உழைத்தவர்களும் இருப்பார்கள். அனால், risk மிகவும் அதிகம். 

பெரும் மனித வளத்தையும், கணனி சக்தியையும் (computing power) போன்றவற்றை வைத்து கணித்து, எதிர்வு கூறி, முதலிடும் நிறுவனங்களின் கணிப்பே அவ்வப்போது யதார்த்தமான சந்தை போக்கிற்கு எதிர்மாறாக இருக்கும் போது  , தனிநபர் ஒரு போதும் அந்த நிறுவனங்களின் odds ஐ மீற முடியாது. 

வாழும் வீட்டை விட ,வேறு ஏதாவது சொத்துக்களை அறுதியாக வைத்து, non-recourse loan (கடன் கட்ட முடியாத நிலை வந்தால், அந்த  அறுதி வைத்த சொத்து மட்டுமே சட்ட அடிப்படையில்  எடுக்கப்படலாம் கடன் தந்த நிறுவனத்தால்)  இற்கு  கடன் எடுப்பது மிகவும் risk குறைந்த தெரிவு. 

அல்லது சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலிடுவது.

முதலிடுவதில், முதலாவது rule of  thumb, முதலிடும் பணத்தை இழந்தால் உங்களுக்கு ஏற்படும் மனத்தாக்கத்தை விட, உங்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பாதிக்காததாக இருக்க வேண்டும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இந்த கருத்து முன்னர் பதிவு செய்த ஒன்று பின்னர் அழித்து விட்டேன், எனது அபிப்பிராயம் தவறாக இருக்கலாம் என்பதால்.

வசி இங்கே எழுதப்படும் கருத்துகள் எல்லாம் முதலாவதாக உள்ள டிஸ்கிளைமரில் அடங்கி விடும். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள்.

வீட்டு விலை - டிமாண்ட், இருக்கும் வரை வீட்டு விலை சடுதியாக குறைய வாய்ப்பு இல்லை. 

2008 sub prime பாடத்தின் பின் எந்த பெரிய நாட்டினதும் வங்கிகள் முன்பு போல் அதிகம் ரிஸ்க் எடுப்பதும் இல்லை. ஆகவே மந்த நிலையை அடைந்தாலும் விலை குறைப்பு சடுதியாக நடக்கும் என நம்பவில்கை.

ஆனால் யூகேயில் affordability யை இலகுவாக்க 5% டிபோசிட் உடன் மோர்ட்கேஜ் கொடுப்பது, part buy, part rent இல் ஒரு பகுதியை அரசு வாங்குவது என சில வேலைகள் செய்கிறார்கள். இவை எல்லை மீறி போனால் - தாக்கம் வரலாம்.

பெரிய தாக்கம் - இண்டிரெஸ்ட் ரேட், பணவீக்க இரட்டைகளால் வரும் என்றே நினைக்கிறேன்.

நேற்று, இங்கிலாந்து வங்கி தொடர்ந்தும் 0.1% இல் அடிப்படை வட்டியை வைத்தது. ஆனால் இதுதான் கடைசி இந்த நிலையில் என நினைகிறேன். 2022 முதல் காலாண்டில் பணவீக்கம் 4% ஆகும் என்கிறார்கள்.

எனவே இப்போ முடியுமானவர்கள் 2/5 வருட fixed rate மோர்ட்கேஜ் எடுப்பது பலனைத்தரலாம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். மாற்று கருத்துகள் வரவேற்கப்படுகிறன.

அதேபோல் பிரெக்சிற் காரணமாக வேலைக்கு ஆக்கள் இல்லா பிரச்சனை இங்கே இப்போ. சம்பளம் கூடுகிறது.

அதேபோல் பெருந்தொற்றில் இருந்து மீளும் பொருளாதாரமும் பணவீக்கத்தை கூட்டும். 

இப்படி பணவீக்கம் கூடினால், அதே நேரம் சப்ளையை விட டிமாண்ட் அதிகமாக இருந்தால் அது வீட்டு விலையை ஆரம்பத்தில் இன்னும் கூட்டலாம்?  ஆனால் கொஞ்ச நாளைக்கு பிறகு விலை flatline ஆகலாம்?

யூகேயில் இப்போ டிரக் டிரைவர் இல்லாததால் உணவு, பெற்றோல் விநியோக பிரச்சனை வரும் என்கிறார்கள்.

அடுத்து காஸ் விலை ஏற்றம் - இப்படி சவால்களும் பல இருக்கிறன.

ஆனால் 0.1% வட்டி வீதகாலம் விரைவில் முடிவுக்கு வருகிறது என்றே நினைகிறேன்.
 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

equityயை வைத்து  பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. 

 

2 hours ago, Kadancha said:

மிகவும் தவறான முதலிடும் முறை, வாழும் வீட்டை அறுதி வைத்து கடன் எடுத்து (equity release) முதலிடுவது.

 

இதில் நான் கடஞ்சாவுடன் உடன்படுகிறேன்.  ரிடெய்ல் இன்வெஸ்டர்ஸ் இருக்கும் தொழிலை விடுவது, வாழும் வீட்டை வைத்து ரிஸ்க் எடுப்பது மிக ஆபத்தானது என்றே நான் நம்புகிறேன்.

அதிக் பட்சம் அடுத்த வருட கொலிடேக்கான செலவு, புது கார் வாங்கும் செலவில் ரிஸ்க் எடுக்கலாம்.

Tempting ஆக்அ இருக்கும், ஆனால் only play with what you can afford to lose ஒரு மீறக்கூடாத விதி (cardinal rule) என நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

ஆனால் தற்சமயம் வீட்டு விலைகளை பார்ர்கும் போது ஆபத்தான முதலீடாக இருக்குமா?
உங்களது அபிப்பிராயம் என்ன? 

இது எனது தனிப்பட்ட கருத்து. அவுஸ்ரேலியாவில் 2011ற்கு பின் வட்டி வீதம் ஏறவில்லை என்பதையும்  2010 ஆண்டின் இறுதி காலப்பதகுதியில் வீடு ஒன்றை வாங்கிய பொழுது இருந்த மதிப்பை விட இன்று வீட்டின் பெறுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதையும் காணலாம். அத்துடன் என்னைப் பொறுத்தவரை வீட்டின் பெறுமதி சடுதியாக குறைய வாய்ப்பில்லை என்பதால் வீட்டின் மீது முதலிடுவதுதான் எப்பொழுதும் முதலாவது தெரிவாக இருக்கும்.
அதுவும் owner occupied ஆக வேண்டாமல் investmentஆக வேண்டுவது சில சமயங்களில் நன்மையாக இருக்கும்(இது முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம், life circumstancesஏற்ப) 
ஆனால் உங்களது affordabilityற்கு ஏற்ப வேண்டுவது சிறந்ததாக இருக்கும்..

அதே நேரம் இரண்டு வாரங்களிற்கு முதல் WBC Chief Economist Bill Evansன் பேட்டி ஒன்றை வாசித்த பொழுது அதில் அவர் கூறியிருந்தார் “ 2023 ஆண்டின் முதலாவது காலாண்டில் வட்டி வீதம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார்.. ஆனால் அதுவும் அதிகளவில் அதிகரிக்காது” என்கிறார்.. 

https://www.google.com.au/amp/s/amp.theaustralian.com.au/business/bill-evans-westpac-chief-economist-still-getting-the-big-calls-right-after-30-years/news-story/c0cc4db6a1b3e0d8300710a38cf07d9b

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் யூகேயில் affordability யை இலகுவாக்க 5% டிபோசிட் உடன் மோர்ட்கேஜ் கொடுப்பது, part buy, part rent இல் ஒரு பகுதியை அரசு வாங்குவது என சில வேலைகள் செய்கிறார்கள். இவை எல்லை மீறி போனால் - தாக்கம் வரலாம்.

இங்கேயும் 5%மாக இருந்தாலும் 20% deposit போடுவீர்களோயானால் Lending Mortgage Insurance(LMI) தவிர்க்கலாம்.. இதன் காரணமாக first home buyers சில உதவிகளை அரசு செய்கிறது(காலத்திற்கு ஏற்ப மாறுபடும்). அதே போல சில தொழிற்தகமைகள், தொழிகளுக்கு 10% இருந்தால் போதுமானது( வங்கிகளுக்கு வங்கி சில சமயம் இந்த கொள்கை மாறுபடலாம்). 

நீங்கள் கூறும் Part buy, part rent என்றால் அரசு கூறும் low-income tenants(government housing support allowance)ற்குள் வரும் tenantsற்கு வாடகைக்கு விட்டால் வாடகையை tenant ஒரு பகுதியும் அரசு மிகுதியையும் தருவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

 

 

3 hours ago, goshan_che said:

 

நீங்கள் இருவர் கூறுவது சரியே.. ஆனால் இந்த முறையில் இரண்டாவது வீட்டினை(Investment ppty) வேண்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களது வீட்டின் தற்போதைய பெறுமதி Aus$800,000 என்றும் மீதமுள்ள கடன் Aus$300,000 என்றால் உங்களது equity Aus$500,000. இதை வைத்து South Australiaவில் ஒரு unit வேண்டி வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? 

இவ்வளவும் உங்களுடைய affordability, மற்றும் வங்கிகள் உங்களது வருமான நிலை, வயது, உங்களில் தங்கியிருப்பவர்களின் வயது போன்ற பல காரணிகளை வைத்தே அனுமதிக்கும்

ஆனால்  உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? 

நான் நினைப்பது தவறாக இருந்தால் சரியாக விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்..

நன்றி. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.