Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு

பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு

பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அமைச்சரவை நேற்று இரவு கூடிய போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை கூட்டாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கப்படுமென அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில்,  இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரத கணவர் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது.

மேலும் நடேசனின் நீண்டகால ஆலோசகர், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது ஒட்டுமொத்த சொத்தாக 160 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வைத்திருந்தார் என ரகசிய மின்னஞ்சல்களை மேற்கோளிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாசிட்டி டிரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்தது என்றும் இதன் சொத்து மதிப்பு சுமார் 18 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இரகசிய ஆவணங்கள் குறித்து நிருபமா ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2010 முதல் 2015 வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் பிரதி அமைச்சராக பணியாற்றிய நிருபமா ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1243186

  • கருத்துக்கள உறவுகள்

“பென்டோரா பேப்பர்ஸ்” ஊழல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு!

October 6, 2021

spacer.png

பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று (06.10.21) காலை இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டளஸ் அழகபெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2021/166864

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன விசாரணை நடத்தி தம்மீதான களங்கத்தை போக்குமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

பண்டோரா பேப்பர்ஸ் எனப்படும் ஆவணக் கசிவு தொடர்பில் தமதும் தமது துணைவியாரான முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவினதும் பெயர்கள் உள்ளடங்கியமை தொடர்பில்  சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி பிரபல வர்த்தகரும் சட்டத்தரணியுமான திருக்குமார் நடேசன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

WhatsApp_Image_2021-10-06_at_11.19.04__1

இதுதொடர்பில், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

பண்டோரா பேப்பர்ஸ் எனப்படும் ஆவணத்தில் பல்வேறு கணக்குகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் எனது பெயரும் எனது துணைவியாரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பெயர்களுக்குரியவர்கள் ஏதோவொரு முறையில் தவறாக நடந்துள்ளதாக பொதுவாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில், உலகத் தலைவர்கள் பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பண்டோரா ஆவணத்தில் தமது நாட்டு பிரஜைகளின் பெயர்கள் அடங்கியிருப்பின் அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பகிரங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், நானும் எனது துணைவியாரும் எந்தவித தவறும் இழைவிக்கவில்லையென முற்றுமுழுதாக மறுக்கின்றோம்.

அத்துடன் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் சுயாதீன விசாரணையொன்றை துரிதமாக நடத்தி, எனதும் எனது துணைவியாரின் பெயரிலும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான களங்கத்தை போக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இதன் மூலம் நானும் எனது துணைவியாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். 

எனவே,  உரிய விசாரணைகள் மூலம் நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பது தெளிவுபடுத்தப்படும். 

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பண்டோரா ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் இலங்கையர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/114758

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

விசாரணை அறிக்கையைநான் இப்பவே சொல்லுறன். திருக்குமார்நடேசனும்நிருபமா ராஜபக்ஸவும் ஒரு பாவமும் அறியாதவர்கள்,பண்டோரா ஆவணங்கள் எல்லாம் போலியானவை. இதுக்கு மக்களின் வரிப்பணத்தில் இரு விசாரணைக்குழு! விளங்கீடும்

  • கருத்துக்கள உறவுகள்

பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு

பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அமைச்சரவை நேற்று இரவு கூடிய போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை கூட்டாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கப்படுமென அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில்,  இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரத கணவர் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது.

மேலும் நடேசனின் நீண்டகால ஆலோசகர், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது ஒட்டுமொத்த சொத்தாக 160 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வைத்திருந்தார் என ரகசிய மின்னஞ்சல்களை மேற்கோளிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாசிட்டி டிரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்தது என்றும் இதன் சொத்து மதிப்பு சுமார் 18 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இரகசிய ஆவணங்கள் குறித்து நிருபமா ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2010 முதல் 2015 வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் பிரதி அமைச்சராக பணியாற்றிய நிருபமா ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandora Papers தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு (adaderana.lk)

  • கருத்துக்கள உறவுகள்

பண்டோரா பேப்பர்ஸில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் பெயர்- இலங்கையில் புதிய சர்ச்சை

6 அக்டோபர் 2021, 12:31 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
நிருபமா

பட மூலாதாரம்,NIRUPAMA RAJAPAKSA'S FACEBOOK

உலகிலுள்ள அரசத் தலைவர்கள் உள்ளிட்ட பலரது ரகசிய சொத்துக்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம், இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் குறித்த, தகவல்களும் இந்த ஆவணத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளளது.

திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகிய தம்பதிகள் தொடர்பிலான ரகசிய தகவல்களே, இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் குடும்ப உறுப்பினராவார்.

நிருபமா ராஜபக்ஷ, பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன் என்ற தமிழரை திருமணம் செய்துள்ளார்.

இந்த இருவர் தொடர்பிலான தகவல்கள், தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியான 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நீர்வழங்கல் பிரதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

அமெரிக்கா, சேமோவா, பிரித்தானியாவிற்கு சொந்தமான விர்ஜின் தீவு மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் 8 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளதாக இந்த ரகசிய ஆவணங்களின் ஊடாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிசெகுசு வீடுகளை கொள்வனவு செய்யும் வகையில் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதற்காக பிரித்தானியாவின் லண்டன் நகரிலும், ஆஸ்திரேலியாவின் சிட்டி நகரிலும் திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் அலுவலகங்களை நடத்திச் சென்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனையை வழங்கும் சேவைகள், திருக்குமார் நடேசனுக்கு சொந்தமான நிறுவனமொன்றின்; ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் இந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு காலப் பகுதியில் திருக்குமார் நடேசன் மீது நிதி சலவை குற்றச்சாட்டும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயத்துடன், தற்போதைய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் தொடர்புப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு பசுபிக் கமாடிடிஸ் நிறுவனத்தின் ஊடாக, 31 ஓவியங்கள் மற்றும் வேறு தெற்காசிய கலைப்படைப்புக்கள் வரிகளை செலுத்தாது ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தனக்கு 160 மில்லியன் டாலர் சொத்து காணப்படுகின்றமைக்கான ஆவணங்களை, திருக்குமார் நடேசன், தனது ஆலோசகருக்கு 2011ம் ஆண்டு காலப் பகுதியில் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்ற விடயமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை பெற்றுக்கொள்ள திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகியோரை தொடர்புக் கொண்ட ஐ.சி.ஐ.ஜேக்கு, அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.

எதிர்கட்சி எதிர்ப்பு

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் கூறப்படுகின்ற விடயம், உண்மையாயின், அது பாரிய மோசடி என்பதுடன், அது வரலாற்று ரீதியிலான குற்றம் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைத்து நபர்களும், ஒரே தடவையில் வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.

அத்துடன், இந்த மோசடியானது, இலங்கைக்கு கருப்பு புள்ளி என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகையை விடவும், அதிகளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை இந்த ஆவணத்தின் ஊடாக தெரிகின்றது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.

குடும்ப உறுப்பினரின் பதில்

உறவு முறை வேறு, அரசியல் வேறு என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும், நிருபமா ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நமல் ராஜபக்ச

பட மூலாதாரம்,NAMAL RAJAPAKSA'S FACEBOOK

திருமணம் செய்துள்ள திருக்குமார் நடேசன் ஊடாக கிடைக்கின்ற சொத்துக்கள் குறித்து தமக்கு எதுவும் செய்ய முடியாது என அவர் கூறுகின்றார்.

திருக்குமார் நடேசனின் பதில்

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் தனது பெயரும், மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடி சுயாதீன விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

தாமதமின்றி சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்து, தனது மற்றும் தனது மனைவி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை இல்லாது செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பதில்

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி டபிள்யூ.கே.டி.விஜேரத்னவிற்கு ஜனாதிபதி சட்டப் பிரிவு பணிப்பாளரின் கையெழுத்துடன், அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரஜை அல்லது பிரஜைகள் அதிகளவில் நிதி முதலீடு செய்துள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதென ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து உடனடி விசாரணைகளை நடத்தி, இன்று (அக்டோபர் 6) முதல் ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-58819223

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகையை விடவும், அதிகளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை இந்த ஆவணத்தின் ஊடாக தெரிகின்றது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.

உண்மைதான் , இலங்கையே பங்களாதேசத்திடமிருந்து 25 மில்லியன் டொலர்தான் கடன் வாங்கியிருந்தது, பண்டேரா விஷயம் 25 மில்லியனைவிட எவ்வளவு பெரிசு, கவனமா விசாரிச்சு ஒரு தீர்ப்பை  சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, valavan said:

உண்மைதான் , இலங்கையே பங்களாதேசத்திடமிருந்து 25 மில்லியன் டொலர்தான் கடன் வாங்கியிருந்தது, பண்டேரா விஷயம் 25 மில்லியனைவிட எவ்வளவு பெரிசு, கவனமா விசாரிச்சு ஒரு தீர்ப்பை  சொல்லுங்கோ.

வாங்குற / வாங்கின கடன் முழுக்க பைப்பிலை போற தண்ணி மாதிரி வேறை எங்கையோ போய் நிறையுது.😁

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை போலியானது ; ஒரு பக்க சார்பானது.. அதெப்படி ராஜபக்சே சகோதரர்கள் பெயர் விடுபட்டு போகும்.? ரெல் மீ..

16 hours ago, nunavilan said:

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பன்டோரா ஆவணம் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் குறித்து விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு

‘பன்டோரா ஆவணங்கள்’ -Pandora Papers - வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு இலங்கை இலஞ்ச ஊழல் ஆணையகம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவின் கீழ் இந்த சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

பன்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கும், அது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் எழுத்து மூலம் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.
 
https://www.virakesari.lk/article/114827

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

திருக்குமார் நடேசனின் பதில்

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் தனது பெயரும், மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடி சுயாதீன விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

தாமதமின்றி சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்து, தனது மற்றும் தனது மனைவி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை இல்லாது செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பதில்

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி டபிள்யூ.கே.டி.விஜேரத்னவிற்கு ஜனாதிபதி சட்டப் பிரிவு பணிப்பாளரின் கையெழுத்துடன், அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரஜை அல்லது பிரஜைகள் அதிகளவில் நிதி முதலீடு செய்துள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதென ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து உடனடி விசாரணைகளை நடத்தி, இன்று (அக்டோபர் 6) முதல் ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்டி தெய்வங்கள் இவ்வளவு தில்லாக பெரிய தெய்வத்திடம் கட்டையை போடுதுகள் உடனேயே பெரிய தெய்வம் நடவடிக்கை எடுக்குது என்றால்  எதையுமே மோந்து பிடிக்கமுடியாது என்று அர்த்தம், அதாவது முழு ரூட்டையும் முதலிலேயே  கிழியர்பண்ணி  முழு வெள்ளை கிளீன் ஷீட் வைத்திருக்கினம், அப்பச்சி மட்டுமல்ல அப்பச்சியோட அப்பச்சிவந்தாலும் எதனையும் கண்டுபிடித்து கிழிக்க முடியாது   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டோரா ஆவண விவகாரம் – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!

பண்டோரா ஆவண விவகாரம் – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!

நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தவுள்ளது.

இதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட மேலும் பலரின் இரகசிய சொத்துகள் மற்றும் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் பண்டோரா ஆவணம்மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த ஆவணத்தில் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரின் மனைவி நிருபமா ராஜபக்ச ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆவணத்திலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் சிவில் அமைப்புகள் சில குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1243600

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இருந்து வெளியேறினார் நிரூபமா ராஜபக்ஷ!

நாட்டில் இருந்து வெளியேறினார் நிரூபமா ராஜபக்ஷ!

AVvXsEiGPxsnRULwiCzFQYL344RePv-SHtjhLp3jOGVgnxyu_nFFodux6PCe9SW2A6Ov4xRgRAi1Cy4GzXwt7uj83NcaMx7n2BA6D9p8OxjZTWHEH2NOJaPXjzueRqVvIrzFbGp-1L65HropasTq8MqiDwq9Kus-i3Qa6DQr-zY9NhX2Jl-m4vJskU8oynmzrg=s16000

பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், அவரது மனைவி முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

http://www.battinews.com/2021/10/blog-post_972.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.