Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாப‌ய‌ அர‌சில் சில‌ கொரோனா ஜ‌னாஸாக்க‌ளை எரித்த‌து த‌விர‌ முஸ்லிம்களுக்கு வேறு பாதிப்புகள் இல்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AVvXsEiKW9u-a3ahMDnAa3qhlRQsOyuTBe0kIGMTwOPhUTI2wyFaY-VQ4gARnBcR_ZEpTUw3EoKuWwTGYtwLzQ_AwQ1vEsp5jKy_Hryroa7rt_bcdvJde0rKE38fSTT1gcd_N-gwKK5EbcghQAijl04JTYleSDMKImbPQ9ipix36qd1NgKV76ntqdXRWVdqU=s16000

சுத‌ந்திர‌த்துக்கு பின் வ‌ந்த‌ எந்த‌ அர‌சாங்க‌மாவ‌து த‌வ‌று செய்யாம‌ல் இருந்த‌துண்டா?

முத‌லாவ‌தாக‌ ஆட்சிக்கு வ‌ந்த‌ unp அர‌சாங்க‌ம் க‌ல்லோயா திட்ட‌த்தை கொண்டு வ‌ந்து அம்பாரை முஸ்லிம்க‌ளை விர‌ட்டிய‌து.

அத‌ன் பின் வ‌ந்த‌ ப‌ண்டார‌நாய‌க்கா த‌னிச்சிங்க‌ள‌ம் ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்து நாட்டை சீர‌ழித்தார்.

அத‌ன்பின் வ‌ந்த‌ ஸ்ரீமா  அர‌சாங்க‌ம் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்திலிருந்து க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தை பிரித்து அம்பாரை பெரும்பான்மை சிங்க‌ள ஊர்க‌ளை இணைத்து அம்பாரை மாவ‌ட்ட‌ம் ஆக்கினார். புத்த‌ள‌த்தில் ப‌ள்ளியில் துப்பாக்கிச்சூடு.

பின்ன‌ர் வ‌ந்த‌ ஜே ஆரின் ஆட்சியில் வ‌ர‌லாறு காணாத‌ துன்ப‌ம்.

முஸ்லிம்க‌ளை ஒதுக்கிவிட்டு இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌ம்.

வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைத்து கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் அடிமையாக்க‌ப்ப‌ட்ட‌மை என‌ ப‌ல‌.

பிரேம‌தாச‌ ஆட்சியில் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை புலிக‌ளிட‌ம் கொடுத்து வேண்டிய‌தை செய்யுங்க‌ள் என்றார். வ‌ட‌க்கு முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ போது அவ‌ர்க‌ளை மீள் குடியேற்ற‌ எந்த‌ முய‌ற்சியும் செய்யாம‌ல் விட்டார்.

கொழும்பில் முஸ்லிம்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழ்ந்த‌ ப‌குதிக‌ளில் வீட‌மைப்பை உருவாக்கி முஸ்லிம்க‌ளை சிறுமைப்ப‌டுத்தினார்.

அத‌ன்பின் வ‌ந்த‌ ச‌ந்திரிக்கா ஆட்சியில் திக‌வாப்பியில் இருந்த‌ முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் அப‌க‌ரிப்பு, த‌ன்னை ஆட்சிக்கு கொண்டு வ‌ந்த‌ அஷ்ர‌புக்கே ஆப்பு என‌ ப‌ல‌.

பின்ன‌ர் வ‌ந்த‌ ர‌ணில் ஆட்சியில் மூதூர் எரிப்பு, வாழைச்சேனையில் ஜ‌னாஸா எரிப்பு, பேச்சுவார்த்தையில் முஸ்லிம்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌மை என‌.

அத‌ன் பின் வ‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில்தான் முஸ்லிம்க‌ளுக்கு அநியாய‌ம் குறைவாக‌ இருந்த‌து. அதிலும் சில‌ த‌வ‌றுக‌ள் இருந்த‌ன‌. ஆனாலும் அந்த‌ ஆட்சியின் இறுதி வ‌ரை ஹ‌க்கீம், ரிசாத், அதாவுள்ளா, க‌பீர் அமைச்ச‌ர்க‌ளாக‌ ஒட்டியிருந்த‌ன‌ர்.

பின்ன‌ர் முஸ்லிம்க‌ள் 98 வீத‌ம் ஓட்டு போட்டு வ‌ந்த‌ ந‌ல்லாட்சி அர‌சில் வ‌ர‌லாறு காணாத‌ த‌வ‌றுக‌ள் இருந்த‌து.

இப்போது கோட்டாப‌ய‌ அர‌சில் சில‌ கொரோனா ஜ‌னாஸாக்க‌ளை எரித்த‌து த‌விர‌ வேறு த‌வ‌றுக‌ளை இன்ன‌மும் காண‌வில்லை.

க‌டந்த‌ அனைத்து அர‌சாங்க‌ங்க‌ளும் த‌வ‌று செய்த‌ போது அந்த‌ந்த‌ ஆட்சிக‌ளில் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ஒட்டித்தான் இருந்த‌ன‌ர்.

இந்த‌ ஆட்சியில் ஒரேயொரு முஸ்லிம் அமைச்ச‌ர். அவ‌ரும் நிய‌ம‌ன‌ எம்பி.

அவ‌ரும் ராஜினாமா செய்தால் முஸ்லிம் எவ‌ரும் இல்லாத‌ அர‌சாக‌ இந்த‌ அர‌சு ம‌ட்டுமே இருக்கும்.

இந்த‌ ஒப்பீட்ட‌ள‌வில் இந்த‌ அர‌சு இதுவ‌ரை ந‌ல்ல‌ அர‌சாக‌வே முஸ்லிம்க‌ளுக்கு உள்ள‌து.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி.

https://www.madawalaenews.com/2021/11/blog-post_60.html

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, colomban said:

இவரு எதுக்கு..... பட்டர் தடவுறார்.....😉

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இவரு எதுக்கு..... பட்டர் தடவுறார்.....😉

எல்லாம்.... கவர்னர் ஆகிற  ஆசைதான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இவர்கள் குதிரைகளை விற்க வந்தபோது அங்கு தமிழர்கள் இருந்தனர், சிங்களவர்களும் இருந்தனர். இவர்கள் ஏன் சிங்களவர்களோடு ஐக்கியமாகாமல் தமிழரோடு ஐக்கியமானார்கள்.....?? தமிழரோடு ஐக்கியமாக இருந்து சிங்களவரோடு இணைந்து தமிழர்களைக் கொலைசெய்து கொள்ளையடித்ததை எல்லாம் எழுத மறந்துவிட்டாரோ....??? 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை அமைச்சராக்காதது இவருக்கு பெரிதாக தெரியவில்லை.
கோத்தபாயவின் பின்னணியில் இயங்கும் கெல உறுமையா குண்டர்களால். முஸ்லிம் கடைகள் எல்லாம் எரிக்கப்பட்ட போது  முபாரக் அப்துல் மஜீத் கோமாவில் இருந்தாரா?  
 கோத்தபாய அத்தருணம் ஆட்சியில் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

ர‌ணில் ஆட்சியில் மூதூர் எரிப்பு, வாழைச்சேனையில் ஜ‌னாஸா எரிப்பு, பேச்சுவார்த்தையில் முஸ்லிம்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌மை என‌.

 முபாரக் அப்துல் மஜீத் கோமாவில் இருந்தாரா?  

இல்லையில்லை. இவர் தானும்  ஒரு கொள்ளைக்காரன் என்பதை கொள்ளைக்காரனுக்கு வக்காலத்து வாங்குவதிலிருந்து தெளிவுபடுத்துகிறார். இந்த ஆலோசனையை நீதியமைச்சருக்கு இவர் சொல்லலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்சியில் மட்டுமே இஸ்லாமியர்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்கிறார். இலங்கை ஆட்சி வரலாற்றில் இந்த ஆட்சியின்போது மட்டுமே கோத்தபாய அமைச்சரவை அமைந்தபோது முஸ்லீம்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லையென்று நினைக்கிறேன்.

இவர் அதை மறந்திருக்க வாய்ப்பில்லை , மறைக்கிறார் என்றே சொல்லலாம்.

இலங்கையில் உள்ளவர்கள் பலரும், இங்கு உள்ள தென்பகுதியை சேர்ந்த சிலரும் சொல்ல கேட்டதன்படி, வரலாறு காணாத நெருக்கடியை இலங்கையில் முஸ்லிம்கள்  பெரும்பான்மை சிங்கள இனத்தினால் தற்போது எதிர் கொள்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

உயர் வேலை வாய்ப்புகளுக்கு நேர்முக தேர்வுக்கு சென்றால் முஸ்லிமாக இருந்தால் மீண்டும் சந்திப்போம் என்று அனுப்பி வைக்கும் நிலையிலும், வியாபார நிலையங்கள் அங்காடிகளில் எல்லாம் முஸ்லீம்கள் ஒதுக்கப்படுவதாகவும், பிக்குகள் கடும்போக்குவாத சிங்களவர்களால் முஸ்லிம்கள் சிங்கள இனத்திற்கு ஆபத்தானவர்கள் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரங்கள் செய்யபடுவதாகவும் ,புலனாய்வுதுறை ராணுவம் பொலிசில் இருந்த முஸ்லிம்கள் சந்தேக கண் கொண்டே பார்க்கபடுவதாகவும் சிலர் அதனால் அந்த துறைகளிலிருந்து ஒதுங்கி கொள்வதாகவும் அறிந்தேன்.

ஒரே இறைவன் ஒரே மார்க்கம் ஒரே இனம் என்று என்னதான் இஸ்லாமியர்கள் தமக்குள் பெருமிதம் பேசிக்கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் அவர்களுக்கு ஏதாவது சலுகைகள் வசதிகள் தமக்கு கிடைக்குமென்றால் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும்  தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு எவர்கூடவும் ஒட்டிக்கொள்வார்கள்.

பின்னர் பதவி பறி போனபின்னர் மீண்டும் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் தமிழுக்கு எத்தனையாவது இடத்தில் அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள், வாழும் மண்ணுக்கும் பேசும் மொழிக்குமே விசுவாசமில்லாதவர்களை எப்படி இந்த உலகம் ஆசை ஆசையாய் சக இனம் என்று பார்க்கும்?

AVvXsEiKW9u-a3ahMDnAa3qhlRQsOyuTBe0kIGMTwOPhUTI2wyFaY-VQ4gARnBcR_ZEpTUw3EoKuWwTGYtwLzQ_AwQ1vEsp5jKy_Hryroa7rt_bcdvJde0rKE38fSTT1gcd_N-gwKK5EbcghQAijl04JTYleSDMKImbPQ9ipix36qd1NgKV76ntqdXRWVdqU=s16000

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிக் கலவரம் - -2018

இலங்கையின் கறைபடிந்த வரலாறு ’83 கலவரம்’. தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்புல காடைத்தனம் அது.

1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் பாதிப்புக்களில் இருந்து நாடு இன்னும் மீளமுடியாத நிலையில், ‘கண்டிக்கலவரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இலங்கையின் சரித்திரத்தில் 1915ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் ‘கண்டிக்கலவரம்’ என்றே கூறப்படு கிறது. நாடு சுதந்திரமடையாத காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை அது.

இதேபோல, ‘கொட்டாஞ்சேனை கலவரம்' (1883இல் கிறிஸ்தவ - பௌத்த), ‘நாவலப்பிட்டி கலவரம்’ (சிங்கள – தமிழ்) என பல வரலாற்று பதிவுகளை ஞாபகப்படுத்த முடியும். ஆனாலும் 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளே முதலாவது இனக்கலவரமாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

1915இல் மிகமோசமாகப் பரவிய இந்தக் கலவரத்தை அடக்க, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவிலிருந்தும் படையினரை வரவழைத்து அடக்கினார்களென கூறப்படுகிறது.

2014இல் நடந்த அளுத்கம, பேருவல சம்பவங்கள் 1915ஆம் ஆண்டை மீண்டும் நினைவூட்டியது. இந்த நிலையில்தான், அம்பாறை, கண்டி, திகன, தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

அம்பாறையில் உணவகம் ஒன்றின்மீதும் பள்ளிவாசல் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டின் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், கண்டி, திகன பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. அதாவது, அம்பாறை, நகரில் 28ஆம் திகதி நடந்த சம்பவம் ஓரளவு தணிந்து வரும் நிலையில் கண்டிப் பகுதிகளில் 4ஆம் திகதி கலவரம் வெடித்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. முஸ்லிம் கடைகளும் பள்ளிவாசல்களும் எரிக்கப்பட்டன.

அப்பாவி முஸ்லிம்கள் செய்வதறியாது தப்பியோடினர். உயிர்ப்பிச்சை கேட்டு பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். சிலர் தமிழ், சிங்கள நண்பர்கள் வீடுகளில் ஏதிலிகளாக தங்கியிருக்கின்றனர். எரிக்கப்பட்ட கடையொன்றினுள் சிக்கி முஸ்லிம் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவைகளெல்லாம் இனக்கலவரத்தின் கோரத்தாண்டவங்கள். படைகளைக் குவித்தும் நிலைமை கட்டுக்கடங்கவில்லை.

தன்னிலையில் இருந்து தடுமாறிப்போன அரசாங்கம், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களையும் முடக்கியது. அவசரகால நிலைப் பிரகடனம் என்பது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. 1971ஆம் ஆண்டு தொடக்கம் 2011 வரை அவசரநிலை அவ்வப்போது அமுல்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. என்றாலும், 2011 இல் முற்றாகவே நீக்கப்பட்டு விட்டது. வன்முறைக்கு பெற்றோல் ஊற்றிய பங்கு சமூக வலைத்தளங்களையும் சாரும். அவைகளை முடக்குவதற்கு எடுத்த முயற்சி ஆக்கபூர்வமானது.

முஸ்லிம் இளைஞரொருவரால் தாக்கப்பட்டு சிங்களக் குடிமகன் ஒருவன் உயிரிழந்ததைத் தொடந்தே கண்டிப் பிரதேசத்தில் கலவரம் வெடித்தது. எனினும், உயிரிழந்த இளைஞனின் கிராமமான அம்பாள கிராமத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு வன்முறையும் இடம்பெறவில்லை.

என்றாலும், சிங்கள இளைஞனின் மரணத்தைக் காரணம் காட்டியே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டனவென்பது உண்மை. ஆத்திரமும் ஆவேஷமும் அந்தக் கிராமத்திலிருந்திருந்தால் ஓரளவு மனம் ஆறிப்போகும். ஆனால், நடந்ததெல்லாம் தலைகீழ்.

முன்கூட்டியே வகுக்கப்பட்ட திட்டமொன்று முழுமையாக நடை முறைப்படுத்தப்பட்டிக்கிறதென்ற தோற்றப்பாட்டையே அவதானிக்க முடிகிறது.

1915இல் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரம் கண்டி கலவரத்தின் நவீன வடிவமாகவே கண்டி, திகன வன்செயல்களைப் பார்க்க முடிகிறது. அதாவது ‘கண்டி கலவரம் – 2018’ ஆகவே இது முழுமை பெற்றிருக்கிறது.

சிங்கள இளைஞனின் மரணத்தை எந்தவொரு சமூகமும் சரியென்று கூறவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென முஸ்லிம்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர். குற்றவாளி எந்த இனமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

ஆனால், தனிப்பட்ட சம்பவமொன்றுக்காக, ஒரு சமூகத்தையே பழிவாங்குவதும் வஞ்சம் தீர்ப்பதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மதவெறியின் அடையாளம். அதேநேரம் கடைகள் மீதான தாக்குதல்களும் தீவைப்பும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இலக்கு.

மரணம் ஒன்றைக் காரணங்காட்டி இனம் ஒன்றின் மீது அடாவடித்தனம் செய்யப்பட்டிருக்கிறது. இனமொன்றை இலக்கு வைத்த இந்த வன்முறை, முழு இலங்கையர் மீதான தாக்குதல் என்பதை வன்முறைத் திட்டத்தின் சூத்திரதாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

83 கலவரம் அரசியல் அனுசரணையுடன் நடத்தப்பட்டதென்பது காலப்போக்கில் நிரூபணமானது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்ததும், உலக அரங்கில் இலங்கை தனது நற்பெயரை இழந்ததும் 1983 இனக் கலவரத்தின் பின்னர்தான்.

குறிப்பிட்ட சிலர் சட்டத்தைக் கையிலெடுத்ததனால் ஆயுதக் கலாசாரம் வடக்கு, கிழக்கில் தலையெடுத்ததென்ற யதார்த்த நிலையை நாம் பாடமாகக் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் மட்டுமல்ல. எந்தவொரு இனமும் இந்த நாட்டில் வஞ்சிக்கப்படக்கூடாது. இனங்களை அடக்க முற்படுவது நீருக்குள் அமிழ்த்தப்படும் பந்துக்கு ஒப்பாகிவிடும்.

‘கண்டி கலவரம் -2018’ இன் பின்னணியில் அரசியல் சக்திகள் இருந்தாலும் இன்னுமொரு விடயத்தையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். முஸ்லிம்களை மையப்படுத்திய வீணான சந்தேகங்கள் களையப்பட வேண்டும்.

கொத்துரொட்டியினுள் கருத்தடை மாத்திரை போடப்படுகிறதென்பதும், இன்னும் சில விதைக்கப்பட்ட சில தவறான கருத்துக்களும் சிங்களவர்கள் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பது உண்மை. இவைகள் களையப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தவறினால், இத்தகைய சம்பவங்கள் தொடர வாய்ப்பிருக்கிறது.

பாராளுமன்றத்தில் வெள்ளியன்று உரையாற்றிய ஜே.வி.பி எம்.பி பிமல் ரத்நாயக்க, “சிங்களவர் மனங்களில் தேவையற்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது தான் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது” என்று கூறிய அவர், அரசு “கடமை தவறியதும் தவறு” என்றார்.

எப்படியோ, அரசு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. பிந்தினாலும், ஆக்கபூர்வமான நடவடிக்கை. மதத்தலைவர்கள், சமூக அமைப்புகளின் பணிகளும் பாராட்டத்தக்கவை, எதுவென்றாலும், சந்தேகங்கள் களையப்பட்டாலே நாட்டில் நல்லிணக்கத்துக்கு வழிபிறக்கும்.

https://www.vaaramanjari.lk/2018/03/11/ஆசிரியர்-தலையங்கம்/கண்டிக்-கலவரம்-2018

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.