Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கை மையமாகக் கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு ‘விசித்திரமானது-மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை மையமாகக் கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு ‘விசித்திரமானது-மனோ

November 3, 2021

251058083 10215931686604194 3039042088671462890 n வடக்கை மையமாகக் கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு ‘விசித்திரமானது-மனோ

வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

அவரது முக நுார் பக்கத்தில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“13ம் திருத்தம்” பற்றி வாயை திறந்தாலேயே, “இந்திய-மேற்குலக கைக்கூலி” என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது. நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் “கைக்கூலி”..! இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா?

13 என்பது முழுமையான தீர்வென்றோ, அதுதான் இறுதி தீர்வென்றோ எம்மில் எவரும் ஒருபோதும் கருதவில்லை. அரசு முகாமில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ்கூட 13ஐ முழுமையான இறுதி தீர்வு என கருதுகிறார் என நான் நினைக்கவில்லை. அப்படி இருக்கையில், இதையும்கூட திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? இந்த அற்ப (Silly) விவாதத்தை கடந்து நாம் பயணிக்க முடியாதா?

13ஐ “ஆரம்ப புள்ளி” யாக கருதிதானே மாகாணசபை தேர்தல் வந்தால் வடக்கு கிழக்கில் சகல கட்சியினரும் போட்டி இடுகிறார்கள்? ஆக, எந்தவொரு இறுதி தீர்வும், “இதையும் தாண்டி” தானே அமைய வேண்டும்? இதைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல், எப்படி, அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது? இதன் அடிப்படையில்தானே, இலங்கை வரும் ஒவ்வொரு இந்திய அரசு பிரதிநிதியுடனும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆண்டாண்டு காலமாக பேசுகிறார்கள்? அப்படியானால் இனிமேல், இத்தகைய இந்திய அரசுடனான பேச்சுகள் நிறுத்தப்பட போகின்றனவா?மேலும் மாகாணசபை தேர்தல் பற்றிதானே ஐநா மனித உரிமை ஆணையம் உட்பட சர்வதேச நிறுவனங்களும் பேசுகின்றன?

“சமஷ்டி” தீர்வுகளை பெற தமிழருக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை பயன்படுத்தி, தமிழர்தாம் போராடி தீர்வுகளை பெற வேண்டும். உலகம் துணை பாத்திரம்தான் வகிக்க முடியும். வெளியில் இருந்து எவரும் வந்து, தட்டில் வைத்து “தீர்வு” தரப்போகிறார்களா, என்ன?

இங்கே படத்தில், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி, தெருவோரத்தில் பின்னாலே வரும் பஸ் மோதிடுமோ என அவதானத்தில் நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/the-north-centric-northeast-political-landscape-is-strange/

வீதியில் இறங்கி மக்களோடு போராடுதல், தமிழ் சிங்கள மொழிகளில் யாருடனும் உரையாடுதல், பொதுமக்கள் கூடும் அங்காடிகள் தலங்கள் நிகழ்ச்சிகள் எல்லா இடங்களிலும் முன்னறிவுப்புச் செய்வுவிட்டு நேரடியாகச் சென்று மக்களுடன் உரையாடுதல், எந்த அமைச்சரோ ஆணவமுள்ள பிக்குகளோ யாராயினும் முன்னால் நிமிர்ந்து நின்று வாதிடும் துணிச்சல், ஒரே இலங்கை நாடு என்ற கோட்பாட்டுடன் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களுக்கான உரிமைக்காகப் போராடும் அரசியல், கொழும்பு முதல் யாழ் வரை பரவலான ஆதரவு, வயதை மீறிய இளமையுடனான சுறுசுறுப்பு, ... இவை அனைத்தும் நான் அறிந்தவரை வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகளிடம் காணாதவை. மனோ கணேசன் வடகிழக்கில் தேர்தலில் நின்றால் எனது ஆதரவு அவருக்குத்தான். (யாராவது மனோ கணேசனின் கறுப்புப் பட்டியலுடன் வருவீர்கள் என்று தெரியும் 🙂)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எனது ஆதரவும்… மனோ கணேசனுக்குத்தான். 👍🏼

நம்மடை ஆக்கள்… மனோ கணேசனிடம், “ரியூசன்” எடுக்க வேணும்.

விதிவிலக்கு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

  • கருத்துக்கள உறவுகள்
"ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற கோஷம் முதற்பார்வையில் சரியாகத்தான் இருக்கிறது.
ஆனால் இதன் தலைவராக நியமிக்கப்பட்டவர், "இது சிங்கள பெளத்த நாடு. ஏனைய அனைவரும் வந்தேறு குடிகள். சி-பெள மேலாண்மையை ஏற்றுக்கொண்டால் இங்கே நீங்கள் வாழலாம்" என்று பகிரங்கமாக சொல்பவர்.
இவர் இதை என்னிடமே நேரடியாக சொன்னவர். அவருக்கு நான் உடனடியாக, "நீங்களும் படகில் வந்து கரை ஏறிய கும்பல்தான் என்று உங்கள் மகாவம்சத்தில் உள்ளதே" என பதில் கொடுத்தேன். அது வேறு விஷயம். ஆனால் அவரது நிலைப்பாடு அதுதான்.
ஆகவே இவரது செயலணி, சி-பெள மேலாண்மையைதான் பொது சட்டமாக முழு இலங்கைக்கும் பரிந்துரைக்கும் என்ற முடிவுக்கு வராமல் இருக்க முடியாது.
அல்லது.., "ஒரே நாடான இலங்கை பல இனங்களை, மொழிகளை, மதங்களை கொண்ட பன்மைத்துவ நாடு" என்ற அடிப்படையை ஏற்றுக் கொண்ட நிலையில் இந்த செயலணி ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதுதான் இதிலுள்ள பிரதான பிரச்சினை.
அடுத்தது, சரத் பொன்சேகா சொல்வது போன்றுகூட இதற்கு, ஞானசாரரை அகற்றி விட்டு பெளத்த மகாநாயக்கர்களை நியமிப்பதும் பொருத்தமானதல்ல.
எதற்காக இதற்கெல்லாம் மத தலைவர்களை இங்கே நியமிக்க வேண்டும்?
இந்த குழு, மதச்சட்டங்கள் தொடர்பில் ஆராயும் போது, உபகுழு மட்டத்தில் எல்லா மத தலைவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.
ஆனால் மொத்தமாகவே இவற்றை மத தலைவர்களிடம் கையளிப்பது சரியல்ல.
மத தலைவர்களுக்கு தத்தம் மதப்பணிகள் என்ற வேறு வேலைகள் இல்லையா?
இந்த குழுவில் இஸ்லாமிய மத தலைவர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது எனக்கு தெரியாது. அப்படி இருந்தால், அதுவும் பொருத்தமானதல்ல.
அவர்களும் உபகுழு மட்டத்தில்தான் இருக்க வேண்டும்.
அவர்களை செயலணியில் வைத்துக்கொண்டால், அதை காட்டி, எல்லா மத தலைவர்களும் உள்ளே வரத்தான் பார்ப்பார்கள்.
ஒரு நாட்டு தேசிய நிர்வாகத்தில் இருந்து மத தலைவர்களை எந்தளவு தள்ளி வைக்கிறோமோ, அந்தளவு அந்நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், ஐக்கியம், நிம்மதி ஆகியவை செழித்து வளரும்.
அரசு (State), மதம் (Religion) ஆகிய இரண்டும் தொடர்புபட கூடாது. இது உலகம் முழுக்க அனுபவரீதியாக கண்டறிந்த உண்மை.
May be an image of 4 people and indoor
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:
ஒரு நாட்டு தேசிய நிர்வாகத்தில் இருந்து மத தலைவர்களை எந்தளவு தள்ளி வைக்கிறோமோ, அந்தளவு அந்நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், ஐக்கியம், நிம்மதி ஆகியவை செழித்து வளரும்.
அரசு (State), மதம் (Religion) ஆகிய இரண்டும் தொடர்புபட கூடாது. இது உலகம் முழுக்க அனுபவரீதியாக கண்டறிந்த உண்மை.

இது மிகவும் உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

எனது ஆதரவும்… மனோ கணேசனுக்குத்தான். 👍🏼

நம்மடை ஆக்கள்… மனோ கணேசனிடம், “ரியூசன்” எடுக்க வேணும்.

விதிவிலக்கு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நம்முடைய ஆக்களின் நோக்கம் உழைப்பு மட்டுமே அதற்கு மக்களை பயன்படுத்துகிறார்கள் எந்த ஒரு தேவைக்கும் மக்கள் அரசியல்வாதிகளை நோக்கி போகும் நிலை மாற்றப்படவேண்டும் ஆனால் இந்த அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் அவர்கள் மக்கள் தங்களை நோக்கி வரும் அமைப்பினை உருவாக்கி வைத்துள்ளார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

மனோ கணேசன் வடகிழக்கில் தேர்தலில் நின்றால் எனது ஆதரவு அவருக்குத்தான்.

எல்லாம் பதவி நோக்கியே. பதவி வந்ததும் நீ யாரோ? நான் யாரோ? எத்தனை பேர் வந்தனர், ஏற்றி விட்ட ஏணியை உதைத்து விட்டு உயர கொப்பில் நின்று தாவுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய‌வேவா மனோ கணேசன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2021 at 11:00, இணையவன் said:

வீதியில் இறங்கி மக்களோடு போராடுதல், தமிழ் சிங்கள மொழிகளில் யாருடனும் உரையாடுதல், பொதுமக்கள் கூடும் அங்காடிகள் தலங்கள் நிகழ்ச்சிகள் எல்லா இடங்களிலும் முன்னறிவுப்புச் செய்வுவிட்டு நேரடியாகச் சென்று மக்களுடன் உரையாடுதல், எந்த அமைச்சரோ ஆணவமுள்ள பிக்குகளோ யாராயினும் முன்னால் நிமிர்ந்து நின்று வாதிடும் துணிச்சல், ஒரே இலங்கை நாடு என்ற கோட்பாட்டுடன் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களுக்கான உரிமைக்காகப் போராடும் அரசியல், கொழும்பு முதல் யாழ் வரை பரவலான ஆதரவு, வயதை மீறிய இளமையுடனான சுறுசுறுப்பு, ... இவை அனைத்தும் நான் அறிந்தவரை வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகளிடம் காணாதவை. மனோ கணேசன் வடகிழக்கில் தேர்தலில் நின்றால் எனது ஆதரவு அவருக்குத்தான். (யாராவது மனோ கணேசனின் கறுப்புப் பட்டியலுடன் வருவீர்கள் என்று தெரியும் 🙂)

இணையவன்... 
எல்லோரும், மனோ கணேசனுக்கு... ஆதரவாகத்தானே இருக்கிறார்கள். :)
உங்கள், எதிர் பார்ப்பு... பிழைத்து விட்டது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

நம்முடைய ஆக்களின் நோக்கம் உழைப்பு மட்டுமே அதற்கு மக்களை பயன்படுத்துகிறார்கள் எந்த ஒரு தேவைக்கும் மக்கள் அரசியல்வாதிகளை நோக்கி போகும் நிலை மாற்றப்படவேண்டும் ஆனால் இந்த அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் அவர்கள் மக்கள் தங்களை நோக்கி வரும் அமைப்பினை உருவாக்கி வைத்துள்ளார்கள் 

சரியாகச் சொன்னீர்கள். மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தில்  இந்த அரசியல்வாதிகள் சிறிதும் அக்கறை கொள்ளாமல் இருப்பதை காணலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.