Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனைப் பற்றி.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

கமல்ஹாசனைப் பற்றி.....

 

spacer.png

நடிகர் கமல்ஹாசனின் 67ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7). இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கமல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன்.

2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்ஹாசன்தான் கடைசியாக பிறந்தவர்.

3. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.

4. களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் கமல்ஹாசன்.

5.களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினி கணேசனுக்கு மகனாக நடித்தவர், அவ்வை சண்முகியில் மருமகனாகவும் தலைமுறை கடந்து நடித்தது கமல்ஹாசன் மட்டுமே.

6.கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.

7.முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தது கமல்ஹாசன் மட்டுமே.

8. கமல்ஹாசன் கதாநாயகனாக அறிமுகமானது 1974ல் வெளியான கன்னியாகுமரிஎன்கிற மலையாளப்படத்திலும், தமிழில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்திலும்.

9. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.

10.நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல்ஹாசன் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.

11. 1970 களில் கமல்ஹாசன் ரஜினியுடன் இணைந்து நடித்த படங்கள் நினைத்தாலே இனிக்கும்,

16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இவை அனைத்தும் வெற்றி படங்கள்.

12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

13. ராஜபார்வை திரைப்படம் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், கமல்ஹாசனுக்கு பாராட்டையும், விருதுகளையும் பெற்றுத் தந்தது இந்த திரைப்படம்.

14. கமல்ஹாசன் 1980களில் இந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் து ஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இவை வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

15. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமல்ஹாசன் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன் ஆகியோர் நிற்கிறார்கள். சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல்ஹாசன் அண்ணா... நீங்களும் வாங்க என்று கொள்ளி வைக்க அழைக்க, இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.

16. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன்.

17.கமல் ஹாசனுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.

18.ஃபிலிம் ஃபேர் பத்திரிகை விருதை அதிகமுறை(18) வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள், புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.

19. எண்பதுகளின் மத்தியில் `மய்யம்` என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.

20.மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன்.

21. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு `நான் ஏன் பிறந்தேன்`, சிவாஜிக்கு `சவாலே சமாளி`, ஜெயலலிதாவுக்கு `அன்புத்தங்கை`.

22. தன் உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக தானம் செய்திருக்கிறார் கமல்ஹாசன். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.

23.கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

24. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல்ஹாசன். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்று இருக்கிறார்.

25. கமல்ஹாசன் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

26. கமல்ஹாசனின் ஆத்மார்த்தமான நண்பராக வழிகாட்டியாக இருந்தவர் மறைந்த அனந்து.

27. கமல்ஹாசன் 1980களிலேயே அரசியல் பேச தொடங்கிவிட்டார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டபோதுதமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.

38.கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல்ஹாசன், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.

29. 2005-ம் ஆண்டு சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

30. கமல்ஹாசன் நடிப்புத் திறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

31. கமல்ஹாசன் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது அவர் கதாநாயகனாக அறிமுகமான மலையாளப் படமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.

32. அபூர்வராகங்கள் படத்தில் நாயகனாக கமல்ஹாசன் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது முதல் முறையாக வழங்கப்பட்டது.

33. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்ஹாசன்.

34. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்சினைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரண் என்னவென்றால், பிரச்சினையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்திய படங்களாகும்.

35. பாலுமகேந்திரா இயக்குநராக அறிமுகமான கோகிலா படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்.

36. பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே திரைப்படத்தின் கதாநாயகனும் கமல்ஹாசன்.

37. கமல்ஹாசன் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா’.

38. ரஜினிகாந்த் திரையுலக வாழ்க்கையில் முக்கியப்படம் முள்ளும் மலரும் அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு காரணமாக இருந்தவர் கமல்ஹாசன்.

39. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார். இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.

40. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூடியவர் கமல்ஹாசன். இதற்கு குருநாதர் நடிகர் லூஸ்மோகன்.

41.நெல்லைத் தமிழ்,கொங்குதமிழ் இரண்டையும் சரளமாக பேசக்கூடியவர் கமல்ஹாசன்.

42.சினிமா சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, "சாகேத்ராம்... திஸ் இஸ் பேக் அப் டைம்". `பேக் அப்` என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுணமாக பார்க்கப்படும்.

43. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.

44. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல்ஹாசன். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.

45. சர்வதேச அரசியல்,உள்ளூர் அரசியலை சரளமாக பேசக்கூடியவர் தமிழ் நடிகர்களில் கமல்ஹாசன் மட்டுமே.

46. கமல்ஹாசன் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.

47. சிறந்த ஆங்கிலப்படங்களை கமல்ஹாசனும் - கவுண்டமணியும் பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம்.

48. கமல்ஹாசன் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதைகளை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.

49. கமல்ஹாசனுக்கு பிடித்தமான தலைவர் காந்தியடிகள்.

50. கமல்ஹாசன் கோலிவுட் என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கமாட்டார். எப்போதும் தமிழ் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிக்கும் தமிழ் நடிகர் கமல்ஹாசன்.

51. கமல்ஹாசன் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார்.

52. பின்னாளில் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி தற்போதுவரை படங்களை தயாரித்து வருகிறார்.

53. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன் .

54. ஆனந்த விகடனில் கமல் எழுதிய `என்னுள் மையம் கொண்ட புயல்` என்ற தொடர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது

55. நடிகராக இருந்தாலும் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் கமல்ஹாசன் நேரத்தை செலவிடுவார்.

56. திரைப்பட தொழில் சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களை, மாற்றங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வார்.

57. பிலிம் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் தயாரிக்கும் முறையை தமிழ் சினிமாவில் மும்பை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்.

58. கணினி இந்தியாவில் அறிமுகமாகாத காலத்தில் விக்ரம் படத்தில் கணினியை பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.

59. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.

60. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் இடம்பெற்றது.

61. பாலசந்தர் கமல்ஹாசனுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், "மை டியர் ராஸ்கல்" என்று தொடங்கும்.

62. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் இன்று வரை நிறைவேறாமல் உள்ளது.

63. பாலச்சந்தரை அப்பா என்றும் பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல்ஹாசன் அழைப்பது வழக்கம்.

64. சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கிய முதல் தமிழ் நடிகர் கமல்ஹாசன்.

65.தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டத்தை தனது ட்விட்டர் பதிவின் மூலம் சர்வதேச தமிழ் சமூகத்திடம் சென்றடைய காரணமானவர்களில் கமல்ஹாசன் முதன்மையானவர்.

66.தனது 63-வது வயதில் மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் அரசியல் கட்சியை துவங்கினார்.

67.ஒரே வருடத்தில் வெளியான ஐந்து வெள்ளிவிழா படங்களில் நடித்தவர் கமல்ஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் இந்திய சினிமாவில் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம், மூன்றாம்பிறை, தேரி கஸம், சகலகலாவல்லவன், தோ கமல் ஹோகயா

 

https://minnambalam.com/entertainment/2021/11/07/10/kamal-hasan-67-th-birthday

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வயதில்....நடிகை ஆண்ட்ரியா வுடன் லிவிங் டுகெதர் வாழ்வு....

சுத்தி.... திரத்திவிட முயல.... அவர்... அரசியல் கட்சி தலைவரும், நடிகரும் ஆன ஒருவர் தன்னை ஏமாத்தி விட்டதாகவும், அதனால் பெரும் மன அழுத்தில் உள்ளதாகவும், அதுகுறித்து ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகவும் சொல்ல.... திருப்பி சேர்த்துக்கிட்டார்...

ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க சான்ஸ்சும் கொடுத்து இருக்கிறார்.

ஆக... புத்தகம் வராது.   

Kamal Hassan Uttama Villain Telugu Movie Part 2 | Andrea Jeremiah | Pooja  Kumar - YouTube

இந்த படத்தில் இருக்கும் இருவரையுமே... கமல் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்.... இதில்.... ஆண்டிரியாவுக்கு பின்னர்.... பூஜா குமார்...

பின்னர்... இப்போது.... இருவரும்...

Andrea and Pooja Kumar in Kamal Haasan's Thalaivan Irukkindraan? | Tamil  Movie News - Times of India

Posted
24 minutes ago, Nathamuni said:

இந்த வயதில்....நடிகை ஆண்ட்ரியா வுடன் லிவிங் டுகெதர் வாழ்வு....

சுத்தி.... திரத்திவிட முயல.... அவர்... அரசியல் கட்சி தலைவரும், நடிகரும் ஆன ஒருவர் தன்னை ஏமாத்தி விட்டதாகவும், அதனால் பெரும் மன அழுத்தில் உள்ளதாகவும், அதுகுறித்து ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகவும் சொல்ல.... திருப்பி சேர்த்துக்கிட்டார்...

ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க சான்ஸ்சும் கொடுத்து இருக்கிறார்.

ஆக... புத்தகம் வராது.   

Kamal Hassan Uttama Villain Telugu Movie Part 2 | Andrea Jeremiah | Pooja  Kumar - YouTube

இந்த படத்தில் இருக்கும் இருவரையுமே... கமல் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்.... இதில்.... ஆண்டிரியாவுக்கு பின்னர்.... பூஜா குமார்...

பின்னர்... இப்போது.... இருவரும்...

Andrea and Pooja Kumar in Kamal Haasan's Thalaivan Irukkindraan? | Tamil  Movie News - Times of India

வாழ்க கமல். அவர் இரெண்டு இளசுகளுடன் வாழ்வது உங்களுக்கு ஏன் உரசுகிறது? முடியவில்லை என்ற பொறாமை தவிர வேறு என்ன காரணம் இருக்கும் …?🙂

Posted

தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல தமிழ் அரசியல் உலகிலும் தீர்க்க தரிசனமிக்க ஆளுமைமிக்க ஒரு தலைவனாக கமல் இருக்கின்றார். தமிழினம் அவரது அரசியல் அறிவை முற்போக்குத்தனமான அவரது  தொலைதூர நோக்கு அணுகு முறையை அடையாளம் காணாதது தமிழினத்தின் இழப்பே.

தமிழினம் கண்ட ஒரு பெரும் சகலவலா வல்லவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கற்பகதரு said:

வாழ்க கமல். அவர் இரெண்டு இளசுகளுடன் வாழ்வது உங்களுக்கு ஏன் உரசுகிறது? முடியவில்லை என்ற பொறாமை தவிர வேறு என்ன காரணம் இருக்கும் …?🙂

பொறாமை 😁

ரஜனி கூட.... 55 மேல.... சாப்ட் ஆகிட்டாரு.....67 வயசில... ஒரு 25 வயசை பிடிச்சு காட்டுங்கோ ... 

பந்தயம்..... 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமலின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என்பனவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.  அவரை எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் இந்திய (தமிழ்) சினமா கண்ட மிக ஒப்பற்ற நடிகர் கமல். நாடகத்தனம் இல்லாமல் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துபவர் கமல். கமலின் நடிப்பு உலகத் தரம் வாய்ந்தது. கமலுக்கு நிகர் கமல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடிகர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!

Joyeux Anniversaire Fleurs Gif Anime - glayds

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

கமலின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என்பனவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. 

தனிப்பட்ட வாழ்க்கையில்.... இவரை காதல் இளவரசன் என்பார்கள்...... உண்மையில் காதல் மன்னன் ஜெமினியை..... சிற்றரசர் ஆக்கியவர் கமல்.....

இவரது லிஸ்டில் இருந்த பெண்கள் மிக அதிகம்.....

அண்மையில், பயில்வான் ரங்கநாதன்..... அவரது அண்ணன் மகள் சுகாசினி இருவர் பேட்டியில் இது தெளிவானது.

சுகாசினி சொன்னார்..... நிணைத்தாலே இனிக்கும் படம் சூட்டிங் முடித்து சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த ரொம்ப ரைற்ரான சோர்ஸ்ட் போட்டுகிட்டு...... எதிராஜ்ல படித்த தன்னை.... டிரொப் பண்ணுவதாக..... டிரைவரிடம் கார் திறப்பை பறிச்சுக்கிட்டு..... வந்து..... வெளில விடாம.... உள்ள வந்து.... போற்றிக்கோவில், தடையிருந்தும் விட்டு... இறங்கி கதவை திறந்து..... இறக்க..... கெட் ரீச்சர், செக்கியூரிட்டி திட்டப் போறாங்க என்று பயந்திட்டே இறங்க.....

எல்லோரும்..... ஆ.... கமல்..... என்று ஓடி வந்து..... ஆட்டோகிராப் கேட்டாங்க....

தெரிஞ்சிட்டுது தான் பிளான் பண்ணி, வந்தீங்க.... இல்லையா என்று கேட்க.... சிரித்தார் கமல்....

மனிதர்.... பூந்து விளையாடி இருக்கிறார்....

அதன் காரணமாகவே.... அவரின் இரு திருமணங்கள்..... கெளதமியுடனான.... சேர்ந்த வாழ்வு... சரிவரவில்லை..... 🥺

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனின் இந்த பராக்கிரமங்கள் குறித்து பொறைமைப்பட எதுவும் இல்லையே யூட்டர்....

 

1 hour ago, கற்பகதரு said:

வாழ்க கமல். அவர் இரெண்டு இளசுகளுடன் வாழ்வது உங்களுக்கு ஏன் உரசுகிறது? முடியவில்லை என்ற பொறாமை தவிர வேறு என்ன காரணம் இருக்கும் …?🙂

 

Posted
2 hours ago, Nathamuni said:

பொறாமை 😁

ரஜனி கூட.... 55 மேல.... சாப்ட் ஆகிட்டாரு.....67 வயசில... ஒரு 25 வயசை பிடிச்சு காட்டுங்கோ ... 

பந்தயம்..... 👍

உங்களால் முடியவில்லை என்றதால் மற்றவர்களாலும் முடியாது என்று நினைக்கலாமா? உங்களால் செய்ய முடியாதவை எவ்வளவோ உள்ளன, இல்லையா? இதற்கு சம்பந்தப்பட்ட உதாரணம் காட்ட முயன்றால் யாழ் களம் எனக்கு நிரந்தர தடை விதிக்கக்கூடும் என்று பயமாக இருக்கிறிது.😋

1 hour ago, Nathamuni said:

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனின் இந்த பராக்கிரமங்கள் குறித்து பொறைமைப்பட எதுவும் இல்லையே யூட்டர்....

அப்படியா? பூனை கண்ணை மூடிக்கொண்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பால்குடிக்குமாம் - நீங்கள் எதிராஜுக்கு கார் ஓடிப்போன கமலை விட கில்லாடியாக இருக்கவேண்டும் - அவர்தான் உங்களை பார்த்து பொறாமைப்பட வேண்டும். 😄

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கற்பகதரு said:

உங்களால் முடியவில்லை என்றதால் மற்றவர்களாலும் முடியாது என்று நினைக்கலாமா? உங்களால் செய்ய முடியாதவை எவ்வளவோ உள்ளன, இல்லையா? இதற்கு சம்பந்தப்பட்ட உதாரணம் காட்ட முயன்றால் யாழ் களம் எனக்கு நிரந்தர தடை விதிக்கக்கூடும் என்று பயமாக இருக்கிறிது.😋

அப்படியா? பூனை கண்ணை மூடிக்கொண்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பால்குடிக்குமாம் - நீங்கள் எதிராஜுக்கு கார் ஓடிப்போன கமலை விட கில்லாடியாக இருக்கவேண்டும் - அவர்தான் உங்களை பார்த்து பொறாமைப்பட வேண்டும். 😄

 

ஒரு விவாதம் செய்வதானால்.... அதில்.... கருத்து செறிவு இருக்க வேண்டும்..... சும்மா விரல் இருக்கிறது.... கீ போட் இருக்கிறது என்று அலம்பறை பணணக் கூடாது யூட்டர்...

உங்களது விவாதத்தைப் பார்த்தால்..... கமல் கட்டவுட் பால் ஊத்துற ரசிகர் மன்ற உறுப்பினர்போலுள்ளது.....

வாழ்த்துக்கள்.....

இல்லாவிடில்.... சீரியசாக இல்லாமல் நகைச்சுவையாகவே பதியுங்கள்..... நமக்கு புரியும்.

கமலின், தனிப்பட்ட வாழ்வில் நடிப்பத்திறமை சோபிக்கவில்லை.... அதாவது நடிக்கவில்லை. அவருடன் வாழ வந்த பெண்களுக்கு, மிகுந்த மனவலியே கொடுத்தார்.

இது அணைவருக்குமே ஒரு படிப்பினை.....

அதில் பொறாமைப்பட ..... அது ஒரு சாதனையே அல்ல.

பரிதாபகரமானது. இவரைப் போலவே வாழத்தலைபட்ட சரத்குமாருக்கு ஜெமினி கொடுத்த அட்வைஸ்..... என்ன ஆட்டம் போட்டாலும்.... வீட்டை ஒழுங்காக வைத்திரு.... நாளை நோயில் விழுந்தால், கவனிக்க ஆள் இருக்காது.

சரத், ராதிகாவை கட்டி, பையன் பெத்து.... அமைதியாக வாழ்கிறார்.

கமல்?

Posted
1 hour ago, Nathamuni said:

சரத், ராதிகாவை கட்டி, பையன் பெத்து.... அமைதியாக வாழ்கிறார்.

கமல்?

கமலுக்கு என்ன குறைச்சல்? இரெண்டு இளசுகள், தோற்றாலும் சளைக்காத அரசியல்கட்சி என்று ஓகோ என்றிருக்கிறார். அமைதியாக இருக்க விரும்புபவர்கள் அமைதியாக இருக்கட்டும் அதற்காக ஓகோ என்று வாழவிரும்புபவனை பார்த்து ஐயோ பரிதாபம் உனக்கு அமைதியான வாழ்வு கிட்டவில்லை என்பது ….. அறிவின் உச்சம் கடந்த ஞானம் 😇

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கற்பகதரு said:

கமலுக்கு என்ன குறைச்சல்? இரெண்டு இளசுகள், தோற்றாலும் சளைக்காத அரசியல்கட்சி என்று ஓகோ என்றிருக்கிறார். அமைதியாக இருக்க விரும்புபவர்கள் அமைதியாக இருக்கட்டும் அதற்காக ஓகோ என்று வாழவிரும்புபவனை பார்த்து ஐயோ பரிதாபம் உனக்கு அமைதியான வாழ்வு கிட்டவில்லை என்பது ….. அறிவின் உச்சம் கடந்த ஞானம் 😇

சரிங்க தலை.. 👍

நம்மளையும் ரசிகர் மன்றத்திலே சேர்த்துவிடுவீங்களா?  😇

பால்குடத்தோட வந்துடுறேன்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Nathamuni said:

சுத்தி.... திரத்திவிட முயல.... அவர்... அரசியல் கட்சி தலைவரும், நடிகரும் ஆன ஒருவர் தன்னை ஏமாத்தி விட்டதாகவும், அதனால் பெரும் மன அழுத்தில் உள்ளதாகவும், அதுகுறித்து ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகவும் சொல்ல.... திருப்பி சேர்த்துக்கிட்டார்...

ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க சான்ஸ்சும் கொடுத்து இருக்கிறார்.

நன்றிகள்..👌ஒரு வழியா ஒரு தெளிவு கிடைத்தது தோழர் நான் உதயநிதி என்டு நினைத்தனன்.

தட்ஸ்தமிழ்-இல் கிசுகிசு போடுறவை .. கொமென்ற் செக்சனை ஒப் பண்ணிட்டு போட்டால் என்னை மாதிரி ஆட்களுக்கு எப்படி தெரியும்.?👍

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
    • தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
    • இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.