Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கை அனர்த்தமும் தாயக நிலமையும், ஒரு அவசர குறிப்பு

Featured Replies

கடந்த சில தினங்களாக pacific ring of fire என்றழைக்கப்படும் நிலநடுக்கத்திற்கு பெயர்போன பகுதிகள் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றன. இலங்கைத் தீவிலோ அதை அண்மித்த பகுதிகளிலோ எந்தவித fault lines உம் இல்லை என்பது துறைசார் நிபுணர்களின் முடிவு இற்றைவரை. அப்படி இருந்தும் ஒரு கணிசமான நிலஅதிர்வு நேற்று இலங்கைத் தீவில் பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் புமியின் மேற்பரப்பிலுள்ள பல்வேறுபட்ட tectonic plates இடையிலான நகர்வுகள் ஒன்றை ஒன்று நெருக்குவதால் உருவாவது. அந்த பலப்பரீட்சையில் ஒரு tectonic plate கீழ் இன் ஒன்று அமிழ்த்தப்படுவதாலோ அல்லது மேலும் உடைவதாலோ பாரிய அளவிலான புமியதிர்ச்சியை உருவாக்குகிறது. இந்த tectonic plates இடையிலான நகர்வுகள் முயற்ச்சிகள் தொடர்ச்சியானவை ஆனால் அவ்வப்போது அவை ஒரு சமநிலை எட்டும் போது நிலநடுக்கத்திற்கு அதிக சந்தர்ப்பத்தை கொண்ட அந்தப் பிரதேசங்கள் அமைதியாகிவிடுகின்றன. பின்னர் ஒரு வெளிச் சக்த்தியின் தலையீட்டினால் (உதாரணத்திற்கு சில பாரிய கிரங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் பொழுதோ அல்லது கிரகணம் வரும் பொழுது புமி மீது வழமையாக இருக்கும் ஈர்ப்பு சக்த்தியில் மாற்றம் இருக்கும். இந்த மாற்றமானது புமி சூரியனை சுற்றும் வேகத்திலேயே தற்காலிக மாற்றத்தை உண்டுபண்ணக் கூடியது என்பது ஆதாரபுர்வமாக அளவிடப்பட்டிருக்கிறது. புமி மீதான இவ்வாறான கணிசமான அளவு ஈர்ப்புச் சக்த்தி மாற்றங்கள் நகர்வில் ஈடுபட்டுக் கொண்டு தமக்குள் ஒன்றை ஒன்று நெருக்கிக் கொண்டிருக்கும் tectonic plates மீது எவ்வாறான தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது என்பது விஞ்ஞானரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டியது. இதில் விஞ்ஞானரீதியில் விளக்கத்தைப் பெற முடிந்தால் அதன் மூலம் கிரகணங்களும் சில கிரக இடப்பெயர்ச்சிகளும் பரிய இயற்கை அழிவுகளை தரும் என்று எதிர்வு கூறும் நம்மவர்களின் சந்தி சந்ததியாக அவதானிக்கப்பட்ட அனுபவம் சார்ந்த சாத்திரத்திற்கான விஞ்ஞான விளக்கம் கிடைக்கலாம்.) அல்லது தமக்குள் இருந்த தற்காலிகச் சமநிலையில் படிப்படியாக அளுத்தம் அதிகரித்து அதன் threshold மீறி மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

நிலநடுக்கத்தை தூண்டக்கூடிய எல்லாக்காரணங்களையும் அறிந்து கொள்வதும் எதிர்வு கூறுவதும் கடினமானது. அனால் அமைதியாக இருந்த பகுதிகள் ஒருமுறை நடுக்கத்தை உணர்ந்தவுடன் மேலும் நடுக்கங்களையும் முக்கியமாக சிறிய சிறிய நடுக்கங்கள் வரத்தொடங்கியவுடன் பாரிய நடுக்கம் பற்றி எதிர்வு கூறுவதும் சமநிலை குழம்பியதை அடிப்படையாக கொண்டு tectonic plates இடையிலான அழுத்தங்கள் அதிகரிக்கும் பொழுது வெளியிடும் அலையினை அவதானித்து கூறுகிறார்கள். நிலஅதிர்வுகளை செய்ற்கையாக உருவாக்கி எதிரிகளிற்கு அழிவுகளை ஏற்படுத்த முயற்சிப்பது தான் seismic warfare. இது பற்றி முதன் முதலில் சோவியத் ஒன்றியம் ஆய்வு செய்தது. நிலத்தின் கீழான அணுகுண்டுப் பரிசோதனைகள் சில சந்தர்ப்பங்களில் நிலநடுக்கத்தை உருவாக்கியருக்கிறது என்ற அவதானிப்பினால் உருவானது தான் seismic warfare பற்றிய ஆர்வம்.

இந்தப் பின்னணியில் மேலும் நிலநடுக்கங்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது என்பது நியாயமான ஒன்று. இது நேரடியாக இலங்கைத்தீவை தாக்காவிடிலும் 2004 மார்கழி ஆழிப்பேரலை போன்ற ஒரு அனர்த்தத்தின் சிறு அளவேனும் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் நாம் இருப்பது நல்லது. அவ்வாறான ஒரு அனர்த்தம் பற்றி இந்த முறை முற்கூட்டியே அறிவதற்கான மற்றும் அது பற்றி பாதிக்கப்படக் கூடிய அனைவருக்கும் மனிதாபிமானரீதியில் அறிவிப்பதற்கான விலாவாரியான ஏற்பாடுகள் தற்பொழுது நடைமுறையில் உண்டு. இருந்தாலும் அது பற்றி புலிகளிற்கு அறிவிப்பதில் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு இழப்புகளை உருவாக்க முயற்சிக்கலாம். இதற்கு சர்வதேசம் உட்பட இந்தியாவும் ஒற்றுமையாக இயங்கும் என்பதில் அய்யம் இல்லை. இன்று புலிகள் மீது எந்தவகையில் அழுத்தத்தை உருவாக்கி தற்போதுள்ள status-quo (கிழக்கை கபளீகரம் செய்த நிலையில்) இன் அடிப்படையில் ஒரு உடன்பாட்டை உருவாக்கலாம் என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். இதற்கு இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை தரும் என்றால் அதை உச்சமாகப் பயன்படுத்தவும் பின்னர் வெளிப்பேச்சுக்கு தொழில்நுட்பக் கோளாறு போன்ற சாக்குப் போக்குகளை சொல்ல எவரும் தயங்கப்போவது இல்லை. கிரோசிமா நாகசாக்கியில் அணுகுண்டு போடவர்களிற்கும், எகிப்த்தில் உள்ள யுதர்களை வைத்து அங்குள்ள அமெரிக்க நலன்கள் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்தி அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் விரிசலை உருவாக்கியவர்களை வீரர்களாக கொளரவிப்பவர்களிற்கும், வேறு வேறு இயக்கங்களை உருவாக்கி தமக்கு அடிபட வைத்தவர்களிற்கும்,ஈராக்கில் அணுவாயுதங்கள் இரசாயன ஆயுதங்கள் இல்லை என்று தெரிந்தும் யுத்தத்தை தொடங்கியவர்களிற்கு இவை ஒரு கடினமான முடிவாக இருக்காது.

சர்வதேச அரசியலும் ஏகாதிபத்திய சக்த்திகளின் நலன்களைப் பேணி முன்னெடுக்கும் அரசியல் என்பது நீதி நியாம் அற்ற படுகொலை அரசியல். இதைப்பற்றி நாம் ஒப்பாரிவைத்து ஒன்றும் நடக்கப்போவது இல்லை. தத்தமது இனத்தில் பற்றும் தேசிய நலன்களின் அக்கறை கொண்டு அதற்காக சுயமுயற்சியல் உழைத்தவர்கள்தான் தமக்கென நாட்டை உருவாக்கி அதில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். எனவே புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் இது விடையத்தில் சற்று கவனம் செலுத்தி எமக்கிருக்கும் நிலஅதிர்வு பற்றிய தகவல்கள் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இது பற்றி தாமதம் இன்றி அறிய முயற்சிப்பதோடு அதைப் பொறுப்புணர்வோடு ஏனையவர்களிற்கும் அறிவிப்போம். புரளிகள் வதந்திகளைப் பரப்பாது நிதானமாக செயற்பட முயற்சிப்போம். அத்தோடு இங்கு நாம் seismic warfare பற்றி பரபரக்க வேண்டிய தேவையில்லை. நாம் ஒரு வல்லரசல்ல எம்மை முடக்க seismic warfare பயன்படுத்துவதற்கு. :D

பிற் குறிப்பு:

கிளே சொல்லப்பட்ட சில கருத்துக்கள் இந்தப் பதிவின் நோக்கத்தை தவறாக விளங்கியுள்ளதால் அது பற்றிய மேலதிகள் விளக்கம்.

தமிழீழ காலநிலை வானிலை அவதானிப்பு மய்யம் என்று ஒன்று 2005 கார்த்திகை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதற்கான தூண்டுகோல் 2004 இன் ஆழிப்பேரலையில் எமது தாயகம் சந்தித்த அழிவுகள். இவர்களைப் பொறுத்தவரை சாதாரண காலநிலை வானிலை அவதானிப்புகளிற்கு அப்பால் சுனாமி பற்றிய தகவல்களை அவதானிப்பதுதான் முக்கியமானதாக இருக்கிறது. இதற்கு அவர்கள் நம்பியிருப்பது NOAA PTWC உடனான தொடர்பு. இந்த தொடர்பை எடுப்பதிலேயே எத்தனையோ இழுபறிகள் இருந்து இறுதியில் மனிதாபிமானரீதியில் ஒத்துக் கொண்டார்கள். ஆனாலும் அவர்களுடனான தொடர்பு என்பது எந்த வழிமுறையில் எந்தெந்த தொழிநுட்ப கட்டமைப்புகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது என்பது எமக்கு ஆப்பு வைக்க அலைபவர்களிற்கு பரகசியமானது. எனவே அந்த தொழில்நுட்பத்தில் தடங்கல்களை பொறுத்த நேரத்தில் வேண்டுமென்றே உருவாக்கி எம்மவர்களிற்கு இழப்புகளை உருவாக்கலாம். PTWC இல் உள்ளவர்கள் இதயசுத்தியுடன் தொடர்பு கொள்ள முனைந்தாலும் அந்த தொடர்பு கிடைக்க நம்மவர்கள் நம்பியிருக்கும் முறையை குழப்பலாம் என்றதை கருத்தில் கொண்டு அதற்கு நாம் மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இது எழுதப்பட்டது. அதாவது PTWC இனால் சுனாமி அபாயம் என்ற முடிவு அறிவிக்கப்படுமானால் அது பொது நலன்கருதி உடனடியாக public ஆக அறிவிக்கப்பட்டுவிடும். அந்தத் தகவலை உத்தியோகபுhர்வரீதியில் எவ்வாறு தாயகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பது தெரிந்ததால் அதை குழப்ப முயற்சிப்பார்கள் என்று எடுத்துக் கொண்டு நாம் தாயகத்திற்கு மாற்று வழிகளில் காலதாமதம் இன்றி எடுத்து செல்லும் பொறுப்பை கொண்டிருக்கிறோம் என்பது பற்றி சிந்திக்க எழுதப்பட்டது.

நாமே சுயமாக நிலநடுக்கத்தை அவதானிக்கும் கருவிகள் கட்டமைப்புகள் நிறுவுவது அதை நிர்வகித்து அதன் தகவல்களை சரியாக ஆய்வும் செய்யக் கூடிய துறைசார் நிபுணர்களை உருவாக்குவது பற்றி கற்பனையில் எழுதுவது இன்ற நிலையில் அபத்தமானது. எமக்கு இருக்கும் ஒரே தெரிவு ஏலவே உள்ள கட்டமைப்புகள் வெளியிடும் தகவலை எதிர்பார்க்கப்படும் வழியில் அந்தத் தகவல் சென்றடைவதை தடுக்க குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என முன்னெச்சரிக்கையாக கால தாமதம் இன்றி பொறுப்புணர்வோடு மாற்றுவழிகளிலும் அறிவிப்பதற்கு தயாராக இருப்பது தான்.

மேலும் நிலநடுக்கத்தை நீண்ட கால நோக்கில் எதிர்வு கூறும் முறை எதுவும் நடைமுறையில் தற்பொழுது இல்லை. seismic waves அவதானித்து எதிர்வு கூற கூடிய முறையானது சில பத்து நிமிடங்கள் கால அவகாசத்தைதான் அதிகபட்சம் தரும். ஆனால் நிலநடுக்கம் நடந்தபின்னர் அது கடலில் சமுத்திரத்திலா என்பதையும் கடலில் சமுத்திரத்தில் உள்ள sensors வைத்து சுனாமி அலைகள் உருவாகியிருக்கிறதா அது எந்தத் திசையில் என் வேகத்தில் நகருகிறது என்று அறியும் வசதிகள் உண்டு.அந்த தகவல்களின் அடிப்படையில் சுனாமி அலைகள் எந்தப் பகுதிகளை எவ்வளவு நேரத்தில் தாக்கும் என்று எதிர்வு கூறமுடியும். நிலநடுக்கத்தின் இடம், அளவு அதன் தன்மை பொறுத்து சுனாமி அலைகளின் வேகம் இருக்கும். சுனாமி அலைகளின் வேகம் ஆரம்பமாகும் (நிலநடுக்கம் நடந்த) இடத்தின் தூரமும் எமக்கு அறிவிப்புகளை மேற்கொள்ளவும் தற்பாதுகாப்பு நகர்வுகளை மேற்கொள்ளுவதற்கான நேரத்தையும் நிர்ணயிக்கும்.

Edited by kurukaalapoovan

நன்கு ஆராயப்பட வேண்டியது :D உலக இயற்கை ஆராட்சிகளின் கட்டுரைகள் அறிவால் இவ் ஆய்வு....

ஆனால்.... ஈழமும் உலக ஆராட்சி அறிவியலையே நம்பி கிடக்கவேண்டி உள்ளதே இவ் இயற்கை அனர்த்தமும் தாயக நிலமைக்காக... :huh::(:)

நல்ல ஒரு விசயம் குறுக்ஸ் சிந்திக்க வேண்டிய விசயமே

அத்துடன் மீண்டும் களம் வந்தது மிக்க மகிழ்சி நன்றிகள்

வணக்கம் குறுக்ஸ்,

எனவே புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் இது விடையத்தில் சற்று கவனம் செலுத்தி எமக்கிருக்கும் நிலஅதிர்வு பற்றிய தகவல்கள் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இது பற்றி தாமதம் இன்றி அறிய முயற்சிப்பதோடு அதைப் பொறுப்புணர்வோடு ஏனையவர்களிற்கும் அறிவிப்போம். புரளிகள் வதந்திகளைப் பரப்பாது நிதானமாக செயற்பட முயற்சிப்போம்.

இணையம் மூலமோ அல்லது பிறநாட்டினர் அறிந்து அதனை உள்ளுர் மக்களுக்கு அறிவித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவது என்பது நடைமுறைச்சாத்தியமில்லாத ஒரு விடையம் என நினைக்கிறேன்.

இலங்கை அரசாங்கம் கூட சுயமாக எந்த அவதாணிப்பையோ அல்லது ஆய்வையோ செய்வதில்லை (அது அவர்களுக்கு சம்பந்தமில்லாத விடயம்) அவர்களும் சர்வதேச பசுபிக்பிராந்திய அவதாணிப்பு மையம் மற்றும் யப்பான் போன்றவற்றின் மூலமே தகவல்களை பெற்றுக் கொள்ளவதாக அறிந்தேன். அடிப்படை மனிதஉரிமையை கருத்திற் கொண்டு இவ்வாறன தகவல்கள் ஆர்வமுள்ள அனைவரையும் சென்றடையும் வண்ணம் செயற்பாடுகள் அமைக்கப்பட்டிருக்கலாம்.

1) எனவே புனர்வாழ்வுக்கழகம் போன்றவை இவ்வாறன அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி தகவல்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

2) அது மட்டும் போதுமானதல்ல. உள்ளுரில் மக்களை அறிவுறுத்தும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிரமத்திற்கும் அவதாணிப்பு நிலையத்தில் இருந்து தொடர்புகளை ஏற்படுத்துதல்.

3) பின்னர் அவற்றை கிராமம் முழுவதும் அறிவித்தல். கோவில் மணிகள் மூலமாகவே அல்லது மசூதிகளின் ஒலிப்பெருக்கி மூலமாகவே அறிவிக்கலாம்.

4) மக்களை வெளியேற்றுவதற்காகன ஒழுங்குகள் மற்றும் ஒவ்வோரு ஊர்மக்களும் செல்ல வேண்டிய இடங்கள்.

5) அனர்த்தத்தின் பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்.

என வகைப்படுத்தி ஒரு செயற்திட்டத்தை தயாரித்து, அதனை ஒரு முறை பரீட்சித்துப்பார்ப்பது சிறந்தது!

தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இவ்வாறான அபாயம் மிக்க தகவல்களை புலம் பெயர் தேசத்தில் துரிதமாக அறிய முடிகின்றது. தாயகத்தில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் நிச்சயம் தகவல்களை வழங்குவதில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. புலம் பெயர் தேசத்து வாழ்மக்கள் செய்திகளில் கவனம் செலுத்துவதும் இருக்கும் தொலைத்தொடர்பை பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதும் சமயத்தில் பேருதவியாக இருக்கும்.

இலங்கை அரசு தான் விரும்பிய நேரங்களில் தொலைத்தொடர்பை தமிழர் பிரதேசங்களுக்கு துண்டிக்கவும் இணைக்கவும் செய்கின்றது. இவ்வாறு செய்ய முடியாத அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பை புனர்வாழ்வுக்கழகமோ அல்லது அமைப்பு ரீதியாக செயற்படுபவர்களோ கொண்டிருந்தாலும் அவர்கள் சமயத்தில் வேறு சோலிகளுடன் இருக்கும் போது இதில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் ஆனால் மக்கள் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் பிற அமைப்புகக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய விதத்தில் இருந்தால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேருதவியாக அமையும்.

தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இவ்வாறான அபாயம் மிக்க தகவல்களை புலம் பெயர் தேசத்தில் துரிதமாக அறிய முடிகின்றது. தாயகத்தில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் நிச்சயம் தகவல்களை வழங்குவதில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. புலம் பெயர் தேசத்து வாழ்மக்கள் செய்திகளில் கவனம் செலுத்துவதும் இருக்கும் தொலைத்தொடர்பை பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதும் சமயத்தில் பேருதவியாக இருக்கும்.

இலங்கை அரசு தான் விரும்பிய நேரங்களில் தொலைத்தொடர்பை தமிழர் பிரதேசங்களுக்கு துண்டிக்கவும் இணைக்கவும் செய்கின்றது. இவ்வாறு செய்ய முடியாத அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பை புனர்வாழ்வுக்கழகமோ அல்லது அமைப்பு ரீதியாக செயற்படுபவர்களோ கொண்டிருந்தாலும் அவர்கள் சமயத்தில் வேறு சோலிகளுடன் இருக்கும் போது இதில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் ஆனால் மக்கள் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் பிற அமைப்புகக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய விதத்தில் இருந்தால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேருதவியாக அமையும்.

சுகன் மற்றும் குறுக்ஸ்.

நாம் வெளிநாட்டு தொழில்நுட்பங்களில் தங்கியிருக்கிறோம் என்பது உண்மைதான். என்னை பொறுத்தவரை நாம் "சிறீலங்கா" எனும் நாட்டில் தொழில்நுட்ப, அரசியல், பொருளாதார ரீதியாக தங்கியிருப்பதை ஒவ்வொன்றாக விடுவிக்க வேண்டும். இது ஓரே நாளில் நடந்து முடிவதல்ல. இதுவும் விடுதலையின் ஒரு பகுதியே. இனிமேலும் இந்த நாடு எம் மக்கள்மீது கருணைகொண்டு உதவிசெய்யும் என்பதை எதிர்பார்ப்பது தேவையற்ற ஒன்று.

புலம்பெயர் நாடுகளில், பொதுவாக பல்கலைக்கழகங்களில் இருப்பவர்கள் தமது சொந்த ஆராய்ச்சிகளில் மட்டுமே நின்றுவிடாது அதற்கும் மேலாக, தொழில்நுட்ப திறமைசார் அறிவை தாயகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகின்றது.

புவி நடுக்கங்களை அளவிடுவது ஒன்றும் "ராக்கெட்" தொழில்நுட்பம் அல்ல. Primary wawe (P-wave), and Shear wave (S-wave) ஐ மிக நுணுக்கமாக அளந்துகொள்வதன் மூலம் இதை உறுதிப்படுத்தலாம். ஆனாலும் புவிநடுக்கமையம் கண்டுபிடிப்பது வேறு நாடுகளின் "Observation Stations"ன் அளவீடுகள் இல்லாமல் சாத்தியமற்று போகலாம்.

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம் நன்றி.அத்துடன் மீன்டும் குறுக்ஸ்ஸை கன்டதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை அளவுக்கு அதிகமான பீதியை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது என்றே கொள்ள வேண்டும். முன்னைய சுனாமி இந்தியா மற்றும் இலங்கை அமைந்துள்ள குறுகிய பூமித்தகட்டில் ஏற்பட்ட செஸ்மிக் அலைகளின் தாக்கம் காரணமாக உருவானதல்ல என்பதை யாவரும் அறிவர்.

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி மற்றும் சுனாமிக்குப் பின்னர் ஆசிய பசுபிக் பூமித்தகட்டில் ஏற்பட்ட பூமி அதிர்வுகள் போன்ற அமைப்பு நிலை இந்திய இலங்கை நாடுகள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பதாக எந்த ஆய்வும் சொல்லவில்லை...! இப்பகுதியில் ஏற்படும் நில நடுக்கம் என்பது பிரதான நிலநடக்கங்களைத் தோற்றுவிக்கும் செஸ்மிக் அலைகளின் பரவலால் ஏற்படும் ஒரு குறைந்தளவு நில அதிர்வுகள் தான்..!

ஏலவே அனுமானிக்கப்பட்ட பகுதிகளில் பெருமெடுப்பிலான பூமித்தகட்டு அசைவுகள் நிகழத்தக்க செஸ்மிக் அலைச் சக்தி பூமியின் மையத்தில் இருந்து மேல்நோக்கி நகரும் போது மட்டுமே பாரிய பூமிப்பிளவுகள் தரைத்தோற்றத்தில் ஏற்படும். அதற்காக வாய்ப்புக்கள் இன்னும் காணக்கூடிய அளவுக்கு பூமித்தகட்டி பலவீனப்பகுதிகளில் பாரிய பூமி அதிர்வுகள் ஏர்பவில்லை என்றே சொல்லலாம்.

அதுபோக செஸ்மிக் அலைகளில் இரண்டு வகைகளில் ஒன்று மட்டுமே அதிகல் பூமி மேற்பரப்பில் அழிவைத் டக்ருவது. மற்றையது சாதாரண அதிர்வுகளால் சில ஆட்டங்களை மட்டும் காண்பிக்கும்..! அப்படியான பிரதான பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்தான இந்த அதிர்வுகள் காட்டு நிற்கின்றன..!

இயற்கை அனர்த்த றிதியில் பூமி வெப்ப முறுதலால் தோன்றக் கூடிய வெள்ளப்பெருக்கு வறட்சி கடல்மட்ட அதிகரிப்பு போன்றனதான் இப்போ எமது தாயகம் எட்ட உள்ள பிரதான வகைகளில் அடங்கும். சுனாமி மற்றும் பெருமழிவை ஏற்படுத்தும் பூகம்பங்கள் எமது தாயகப்பகுதிக்கு இரண்டாம் தரப் பிரச்சனை தான்..! எனவே மக்கள் சரியான சிதையில் சரியான புவியியல் தரையMஐப்பு மற்றும் கடந்த கால பூமியர்ச்சி வரலாறுகளின் தொடர்ச்சி பற்றி கவனமாக ஆய்வுசெய்து அறிவுறுத்தப்பட வேண்டும்..!

மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அரசியல் போல பூமி அதிர்வையும் காண்பிக்க முடியாது. ஆனால் மக்களுக்கு அறிவுறுத்துவதில் தவறில்லை. ஆனால் சரியான அறிவுறுத்தல்களாக அமைவது அவசியம்..!

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் நவீன தொழில்நுட்ப அறிவுகளுக்கு அப்பால் நிற்பவர்கள் அல்ல. அவர்கள் 90களின் போதே தமிழீழ நிலம் தொடர்பான அறிவியல் மதிப்பீட்டை செய்தவர்கள். தமிழீழ தரைத்தோற்றங்களைப் பாதுகாக்க என்று நடவடிக்கைகளில் இறங்கியவர்கள்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவியல் பூர்வமான தலைப்பும் அதன்கீழுள்ள கருத்துக்களும் ஏனைய உறவுகளுக்கு உபயோகமாக இருக்கவேண்டுகின்றேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி மற்றும் சுனாமிக்குப் பின்னர் ஆசிய பசுபிக் பூமித்தகட்டில் ஏற்பட்ட பூமி அதிர்வுகள் போன்ற அமைப்பு நிலை இந்திய இலங்கை நாடுகள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பதாக எந்த ஆய்வும் சொல்லவில்லை...! இப்பகுதியில் ஏற்படும் நில நடுக்கம் என்பது பிரதான நிலநடக்கங்களைத் தோற்றுவிக்கும் செஸ்மிக் அலைகளின் பரவலால் ஏற்படும் ஒரு குறைந்தளவு நில அதிர்வுகள் தான்..!

அப்படிச் சொல்ல முடியாது. இன்று உணரப்பட்ட 5.2 ரிக்டர் அளவு என்பது ஒப்பீட்டளவில் பாரதூரமான ஒன்று தான். அதைக் கண்டி, அது சார்ந்த பகுதிகளில் உணர்ந்ததாகச் சொல்கின்றார்கள். பூகம்பம் தொடர்பான ஆய்வு என்பதே முழுமையான வெற்றி பெற்றதொன்றல்ல. இ்ன்றைக்குச் சொல்லப்படுகின்ற காரணம் கூட, ஒரு எடுகோளே.

இலங்கையில் இன்றைக்கு கணிக்கப்பட்டிருக்கின்ற பூமியதிர்வு என்பது இலங்கையைப் பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் கணிக்கப்படாத அளவீடு.எனவே ஆராட்சியாளரின் முடிவுகளும் மாறலாம்.

ஹவாய் தீவுகளுக்கு அருகிலேயே காத்திருக்கும் பூமியதிர்ச்சியால் பெரிய சுனாமியின் சாத்தியம் எப்படியாக இருக்கும் என்பதை இந்த ஒளிப்படம் கொஞ்சம் விளக்குகின்றது...!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.