Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மோசமான சூறாவளி - வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் மோசமான சூறாவளி - வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிப்பு

2 மணி நேரங்களுக்கு முன்னர்
கனடா மழை

பட மூலாதாரம்,@RCAFOPERATIONS

கனடா நாட்டின் வான்கூவரில் நூற்றாண்டிலேயே முதல் முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வீசி வரும் மோசமான சூறாவளி, வான்கூவரைச் சுற்றியுள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்புகளை துண்டித்துள்ளது.

மேற்கு கடலோர நகரான வான்கூவரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான வெள்ளத்தால் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் குறைந்தது இரண்டு பேரைக் காணவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை வீசிய மிகப்பெரிய சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ராயல் கனடியன் மவுன்டட் போலீஸ் (RCMP) கூற்றுப்படி, வான்கூவரில் இருந்து 250 கிமீ (155 மைல்) தொலைவில் உள்ள லில்லூட் அருகே பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

காணொளிக் குறிப்பு,

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி - இன்றைய நிலை என்ன?

உள்ளூர் சார்ஜன்ட் ஜேனல் ஷோஹெட், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "நிலச்சரிவு ஏற்பட்டபோது பயணிகளுடன் இருந்த வாகனங்களில் எத்தனை பேர் இருந்தனர் என்பதை இன்னும் காவல்துறையினர் கண்டறியவில்லை," என்று தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதேவேளை, வாகன ஓட்டியான கேத்தி ரென்னி சிபிசி நியூஸிடம் பேசும்போது, "லில்லூட்டின் தெற்கே ஏற்கெனவே வாகனங்கள் நின்று கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதை பார்த்தேன்," என்று தெரிவித்தார்.

"இதனால் சீக்கிரமாக நாங்கள் எங்களுடைய வாகனங்களை பின்னோக்கி திரும்பிச் சென்றோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர்கள் அலறிக் கொண்டு ஓடினார்கள்," என்று அவர் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"அவர்கள் முகத்தில் சுனாமி பீதி தென்பட்டது. நான் பார்த்ததிலேயே மிகவும் பயங்கரமான சம்பவம் அது. மலையின் முழுப் பக்கமும் இறங்கி வந்து இந்த கார்களை அள்ளிப் போட்டுக் கொண்டு சரிந்ததை பார்த்தேன்,... அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன," என்றார் கேத்தி ரென்னி.

'நூற்றாண்டிலேயே மோசமான புயல்'

கனடா மழை

பட மூலாதாரம்,@CFOPERATIONS

மாகாண போக்குவரத்து அமைச்சர் ராப் பிளெமிங் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "நூற்றாண்டிலேயே மிக மோசமான புயல் இது" என்று கூறினார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குடியிருப்புகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மாதாந்திர சராசரி மழைப்பொழிவை வெறும் 24 மணி நேரத்தில் கொட்டியதால் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக, வான்கூவரில் இருந்து வடகிழக்கே 120 மைல் தொலைவில் உள்ள மெரிட்டில் வசிக்கும் 7,000 பேர் திங்களன்று தங்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டனர்.

செவ்வாயன்று அங்கு பனி உறைந்த வெள்ளத்தில் கார்கள் மிதப்பதைக் காண முடிந்தது. துண்டிக்கப்பட்ட சாலையில் சிக்கிய சுமார் 300 பேரை மீட்க ஹெலிகாப்டர் குழுவினர் மலை நகரமான அகாசிஸுக்கு அனுப்பப்பட்டனர்.

திங்கட்கிழமை மழை மற்றும் காற்று பெரும்பாலும் செவ்வாய் மதியம் முடிந்து போனாலும் அவற்றின் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

1px transparent line

பிபிசி இந்த ட்விட்டர் இணைப்பு காணொளியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

கனடாவின் மற்ற பகுதிகளுடன் வான்கூவரை இணைக்கும் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியது. வான்கூவரை மாகாணத்தின் உட்புறத்துடன் இணைக்கும் கோக்விஹல்லா நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வெள்ள நீரில் இடிந்து விழுந்ததாகத் தோன்றியது.

ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

"எங்களால் இயன்ற எல்லா விதத்திலும் வடிவத்திலும் நாங்கள் உதவியாக இருப்போம்," என்று அவர் கூறினார்.

வான்கூவரின் ஒரு முக்கிய நிலப் பாதை அமெரிக்காவுக்குள் நுழைந்து பின்னர் கனடாவுக்குத் திரும்புவதாக அமைந்திருக்கும். அந்த எல்லை பகுதியில் இருந்து ஒரு முறை வெளியே சென்றவர்கள் மீண்டும் கனடாவுக்கு திரும்புவதென்றால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்ற விதி உள்ளது. தற்போதைய மழை வெள்ள பாதிப்பால் அந்த பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

கனடாவின் மிகப்பெரிய துறைமுகம் வான்கூவரில் உள்ளது. அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரயில் போக்குவரத்தையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தகவலின்படி, துறைமுகம் ஒவ்வொரு நாளும் சுமார் $550m ($440m) மதிப்புள்ள சரக்குகளை கையாளுகிறது.

இந்த பகுதியில் முன்னெச்சரிக்கையாக எரிபொருள் குழாய்கள் அணைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில்தான் பிரிட்டிஷ் கொலம்பியா, கோடையின் தீவிர அனல் காற்றால் 500க்கும் அதிகமான மக்களை பறிகொடுத்திருந்தது. அங்கு காட்டுத்தீயால் நகரின் பல இடங்கள் அழிந்த நிலையில், இப்போதைய மழை, புயல் சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு சூறாவளி காணப்பட்டது - ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு அத்தகைய சூறாவளி அங்கு காணப்பட்டதும் அரிதானதாக கருதப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-59316181

  • கருத்துக்கள உறவுகள்

வான்கூவர் நகரை புரட்டிப்போட்ட புயல் – போக்குவரத்து பாதிப்பு

வான்கூவர் நகரை புரட்டிப்போட்ட புயல் – போக்குவரத்து பாதிப்பு

நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் வானிலை நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட புயல், கனடாவின் வான்கூவர் நகரை கடுமையாக பாதித்துள்ளது.

புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு கடற்கரை நகரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான சேதமடைந்ததுள்ளன.

கடந்த திங்கட்கிழமை வீசிய பாரிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை நெடுஞ்சாலை அருகே இடம்பெற்ற நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார் என்றும் குறைந்தது இரண்டு பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வான்கூவரில் இருந்து 250 கிமீ ( தொலைவில் உள்ள லில்லூட் அருகே பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1250557

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அவசரகால நிலை

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளை அழித்த பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

FEWv_A9WYAQmIUb.png

அத்துடன் கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதன்கிழமை அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

பெருமழை மற்றும் மண்சரிவுகள் வீதிகளை அழித்து பல நகரங்கள் மூழ்கடித்ததன் பின்னர் ஒரு மரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறைந்தது மூன்று காணாமல்போயுள்ளனர். மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உயிரிழப்புகள் மேலும் உயர்வடையக் கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

FEUm2mnX0AcS7dt.jpg
 
https://www.virakesari.lk/article/117413

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சனம் இந்த பகுதிகளில் வசிக்கிறார்களா எல்லா நாடுகளிலும் இயற்கை மீறத் தொடங்கியுள்ளது🤔🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம சனம் இந்த பகுதிகளில் வசிக்கிறார்களா எல்லா நாடுகளிலும் இயற்கை மீறத் தொடங்கியுள்ளது🤔🤔

எப்பவும் இயற்கையை திட்டுறதே வேலையாய்ப்போச்சுது...😶

என்று மனிதன் தன்னைத்தானே புகழ்ந்து தனது கண்டுபிடிப்புளை மெச்சி ஆன்மீகத்தை கேலி செய்து கடவுளை நையாண்டி செய்ய ஆரம்பித்தானோ அன்றிலிருந்து ஆரம்பித்த நசல் தான் இதெல்லாம்...:cool:

பூமியை கவனமாக வைத்திருக்க தெரியேல்லை  செவ்வாய் கிரகத்திலை தண்ணி தேடீனமாம்.விஞ்ஞானிமாரும் அறிவு கனத்தவையும் செவ்வாய் சந்திரனிலை தண்ணி தேடத்தேட பூமியிலை தண்ணி அருவி அருவியாய் கொட்டுதடோய்😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

https://www.cbc.ca/player/play/1975292483959

இந்த வெள்ளநீர் வடிந்தோடி தேங்கி இருக்கும் இப்போதைய இடம் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய ஏரியாக இருந்த இடமாம். அதை மண்போட்டு நிரவித்தான் இந்த சிற்றூர் அமைக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Sasi_varnam said:

இந்த வெள்ளநீர் வடிந்தோடி தேங்கி இருக்கும் இப்போதைய இடம் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய ஏரியாக இருந்த இடமாம். அதை மண்போட்டு நிரவித்தான் இந்த சிற்றூர் அமைக்கப்பட்டது.

தண்ணீரும் காட்டு யானைகளும் என்றுமே தமது பழைய பாதைகளை மறப்பதில்லையாம்...:)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எப்பவும் இயற்கையை திட்டுறதே வேலையாய்ப்போச்சுது...😶

என்று மனிதன் தன்னைத்தானே புகழ்ந்து தனது கண்டுபிடிப்புளை மெச்சி ஆன்மீகத்தை கேலி செய்து கடவுளை நையாண்டி செய்ய ஆரம்பித்தானோ அன்றிலிருந்து ஆரம்பித்த நசல் தான் இதெல்லாம்...:cool:

பூமியை கவனமாக வைத்திருக்க தெரியேல்லை  செவ்வாய் கிரகத்திலை தண்ணி தேடீனமாம்.விஞ்ஞானிமாரும் அறிவு கனத்தவையும் செவ்வாய் சந்திரனிலை தண்ணி தேடத்தேட பூமியிலை தண்ணி அருவி அருவியாய் கொட்டுதடோய்😜

நான் எங்க இயற்கையை திட்டுறன் சாமி மனிதர்களின் செயற்பாட்டால் இயற்கை சீற ஆரம்பித்துள்ளது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.