Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அன்புத்தம்பி said:

சில ஆப்பிரிக்க சமூகங்களில், ஒரு குதிரை நோய்வாய்ப்பட்டு இறக்கும் அளவிற்கு இருக்கும் போது,
தன் வாழ்நாளில் ஒரு ஆணையும் நினைக்காத பரிசுத்த பெண் அந்த குதிரையை தாண்டினால் குணமடையும்
என்ற ஒரு நம்பிக்கை அந்த சமூகத்தினரிடம் இன்றளவும் உண்டு
அதன் நிமித்தம் பரிசுத்த பெண் """"
ஒருவரை குதிரையை தாண்ட செய்யும் பொழுது ......குதிரை எழுந்து நிதானமாக ஓடும் காட்ச்சியை பார்த்து மக்கள் அந்த பெண்ணையும் கைதட்டி அணைத்து,,தூக்கி தங்களின் மகிழ்ச்சியினை ❤️ ❤️ ❤️ ❤️கொண்டாடுகின்றனர் 👍🔔


👍🔔

 

 

ஆச்சரியமாக உள்ளது. இப்படியும் சம்பவங்கள் உலகில் நடைபெறுகின்றது.

  • Replies 4.9k
  • Views 431k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

தலைமுறை  இடைவெளி
தயாரிப்பு.: ஜோர்ஜ் சந்திரசேகர்.
நாடகத்தில்
        நாடகம்  எழுதியவர் -அராலியூர்  
சுந்தரம்பிள்ளை
இலங்கை வானொலி நாடகத்தில் நடித்தவர்கள்
கோவிலூர் செல்வராஜன்
கமலினி செல்வவராசன்
ஏ.எம்.சி.ஜெயசோதி
,அருணா செல்லத்துரை,
சாந்தி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte qui dit ’கழுவி ஊத்திட்டு காபி குடுத்தா தாஅதுட கடை காபி கொடுத்துட்டு கழுவி ஊத்துனா அது கம்பெனி மீட்டிங்’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, éléphant et texte qui dit ’இவரு தள்ளுற பலத்தால் யானை ஏறுமான்னு கேட்டா ஏறாது, ஆனால் R பின்னாடி நம்ம ஆசான் இருக்காருங்கிற நம்பிக்கைல ஏறும்~ இது மாதிரி ஒரு தள்ளு கிடைக்காமல் நாட்ல எவ்ளோ பேர் இருக்காங்க~ മോഡേണ 08428’

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கம்பராமாயணம் படித்ததால் கண்ணதாசன் ஆத்திகரானார் என்பதெல்லாம் சும்மா.

ஆனால் கம்பராமாயணத்தில் இருந்து எடுத்து பல திரைப்பாடல்களை எழுதி கண்ணதாசன் பணம் பார்த்தார் என்பதுதான் உண்மை.

உதாரணத்துக்கு,

பால் வண்ணம் பருவம் கண்டு….

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை…

இட்ட அடி சிவந்திருக்க எடுத்த அடி கனிந்திருக்க… இப்படிப் பல  இருக்கிறது

 

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள இந்த ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர். பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் தான். இந்த ரகசியத்தை உலகம் அறிய வேண்டியது அவசியம்
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு மட்டுமே சாய்ந்துள்ளது, ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி வரை சாய்ந்து நிற்கிறது என்பதே அதற்கு காரணம். எனினும், கூடுதலாக சில தவறான தகவல்களும் இணைக்கப்பட்டே பகிரப்பட்டு வருகிறது.

நதிக்கரையில் மூழ்கியபடி காணப்படும் சிவலிங்கத்தை கொண்டிருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் எனும் இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ” காசி கார்வத் ” என அழைக்கப்படும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கதைகளின் வழியாக மக்கள் நம்புகின்றனர். சமாச்சார்லைவ் எனும் இணையதளத்தில் 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகவும், யாரால் கட்டப்பட்டது எனத் தெரியவில்லை கூறப்பட்டுள்ளது.

” 1860-க்கு முன்பாக கோவில் நேராக நின்றதாகவும், எடை காரணமாக கோவில் பின்னோக்கி சாய்ந்ததாக கதைகள் கூறுகின்றன. எனினும், சரியான காரணங்கள் அடையாளம் காணப்படவில்லை ” என டைம்ஸ்நவ் செய்தியின் ஆன்மீக பிரிவில் கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளில் கூறுவது போன்று கோவிலின் உயரம் 74 மீட்டர் அல்ல, அதன் உயரம் தோராயமாக 13-14 மீட்டர் மட்டுமே. ஆக, பைசா சாய்ந்த கோபுரத்தை விட காசி ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது அல்ல.

இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னமான பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானம் 1173 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. எனினும், கோபுரம் சாய்வதை அறிந்த கட்டுமானம் நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பைசா கோபுரத்தின் உயரம் 57 மீட்டர். 1990களில் கட்டுமான நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கோபுரத்தின் சாய்வு நிலை 3.99 டிகிரி அளவிற்கு குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முடிவு :

நம் தேடலில், உலக அதிசயமான பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ளது மற்றும் காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது எனக் கூறும் தகவல் மட்டுமே உண்மை.

54 மீட்டர் உயரம் கொண்ட பைசா கோபுரத்தை விட ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது என்றும், அதன் உயரம் 74 மீட்டர் எனக் கூறும் தகவல் தவறானது. ரத்னேஸ்வர் ஆலயத்தின் உயரம் 13-14 மீட்டர் மட்டுமே. மேலும், இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது அல்ல என அறிய முடிகிறது.


மூலம்:-https://youturn.in/factcheck/kasi-tem...


👍🔔

 

 

 

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, அன்புத்தம்பி said:

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள இந்த ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர். பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் தான். இந்த ரகசியத்தை உலகம் அறிய வேண்டியது அவசியம்
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு மட்டுமே சாய்ந்துள்ளது, ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி வரை சாய்ந்து நிற்கிறது என்பதே அதற்கு காரணம். எனினும், கூடுதலாக சில தவறான தகவல்களும் இணைக்கப்பட்டே பகிரப்பட்டு வருகிறது.

நதிக்கரையில் மூழ்கியபடி காணப்படும் சிவலிங்கத்தை கொண்டிருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் எனும் இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ” காசி கார்வத் ” என அழைக்கப்படும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கதைகளின் வழியாக மக்கள் நம்புகின்றனர். சமாச்சார்லைவ் எனும் இணையதளத்தில் 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகவும், யாரால் கட்டப்பட்டது எனத் தெரியவில்லை கூறப்பட்டுள்ளது.

” 1860-க்கு முன்பாக கோவில் நேராக நின்றதாகவும், எடை காரணமாக கோவில் பின்னோக்கி சாய்ந்ததாக கதைகள் கூறுகின்றன. எனினும், சரியான காரணங்கள் அடையாளம் காணப்படவில்லை ” என டைம்ஸ்நவ் செய்தியின் ஆன்மீக பிரிவில் கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளில் கூறுவது போன்று கோவிலின் உயரம் 74 மீட்டர் அல்ல, அதன் உயரம் தோராயமாக 13-14 மீட்டர் மட்டுமே. ஆக, பைசா சாய்ந்த கோபுரத்தை விட காசி ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது அல்ல.

இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னமான பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானம் 1173 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. எனினும், கோபுரம் சாய்வதை அறிந்த கட்டுமானம் நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பைசா கோபுரத்தின் உயரம் 57 மீட்டர். 1990களில் கட்டுமான நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கோபுரத்தின் சாய்வு நிலை 3.99 டிகிரி அளவிற்கு குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முடிவு :

நம் தேடலில், உலக அதிசயமான பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ளது மற்றும் காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது எனக் கூறும் தகவல் மட்டுமே உண்மை.

54 மீட்டர் உயரம் கொண்ட பைசா கோபுரத்தை விட ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது என்றும், அதன் உயரம் 74 மீட்டர் எனக் கூறும் தகவல் தவறானது. ரத்னேஸ்வர் ஆலயத்தின் உயரம் 13-14 மீட்டர் மட்டுமே. மேலும், இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது அல்ல என அறிய முடிகிறது.


மூலம்:-https://youturn.in/factcheck/kasi-tem...


👍🔔

 

 

 

அரிய தகவலுக்கு நன்றி அன்பு.

  • கருத்துக்கள உறவுகள்

2000 ஆண்டு பழமையான இந்த விபூதி குங்கும பாத்திரத்தில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டுள்ளது இதில் தண்ணீரை ஊற்றிய உடன் அது என்னென்ன வண்ணங்கள் மாறுகின்றன அந்த அதிசயத்தை கண்டு மகிழுங்க

👍🔔

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text

புரிந்தவன் பிஸ்தா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’The picture that tells the story Africa Europe’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதுக்குள்ள இருந்தது அப்பிடியே வெளியில வந்திட்டுது.....😛

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

மனதுக்குள்ள இருந்தது அப்பிடியே வெளியில வந்திட்டுது.....😛

 

இப்பவும் மாப்பிள்ளைக்கு தப்பி ஓடுவதற்கு சந்தர்ப்பம் இருக்கு.......என்ன செய்தாரோ தெரியாது......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய வானொலியாக தாய் மண்ணில் இருந்து ஒலித்த புலிகளின் குரல் வானொலி

21ஆம் நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ் குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்து வாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வலையில் புலிகளின் குரல் வானொலி இயங்கியது.

அதாவது “ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கி ஒலிக்கவேண்டும்!” என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது.

தமிழ்மக்களின் விடுதலையினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் புலிகளின் குரல்வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஊடாக மக்களுக்கான கருத்துக்கள் முன்னெடுத்து வைக்கப்படட ஒரு வானொலியாகும் .

அந்தவகையில்தான் தமிழ்மக்களின் கலை கலாச்சாரத்தையும் தொன்மையினையும் வரலாறுகளையும் பன்னாடுகளின் வரலாறுகளையும் எடுத்துக்கூறும் பல்வேறு நிகழ்சிகள் வானொலியில் இடம்பெற்றன.

இவ்வாறு யாழ்ப்பாணத்தை 1995 ஆம் ஆண்டு சூரியக்கதிர் படைநடவடிக்கை மூலம் வல்வளைப்பு செய்த சிறிலங்காப் படையினர் அங்கிருந்த ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஒர் இரவில் வெளியேற்றினார்கள்,

இந்தவேளையில் மக்களிற்கான ஒர் ஊடகமாக புலிகளின் குரல் செயற்பட்டுக்கொண்டிருந்த , ஒலிபரப்பு நிலையத்தினை இடம்பெயர்த்துக்கொண்டு ஓர் நாள் கூட இடைநிறுத்தாது பனைமரங்களிலும் பாரிய உயரமரங்களிலும் தனது கோபுர செயற்பாடுகளை மேற்கொண்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கான ஊடகமாக செயற்பட்டுக்கொண்டிருந்த வேளையில் யாழ்பாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துசெயற்பாடுகளும் வன்னிக்கு மாற்றப்படுகின்றது

இந்நிலையில் கிளிநொச்சிப்பகுதிக்கு புலிகளின் குரலின் நிறுவன செயற்பாடுகள் மாற்றப்படுகின்றன.

கிளிநொச்சிப்பகுதியில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல், சிறிலங்காப் படையினரின் வல்வளைப்புகாரணமாக மக்களும் வானொலியும் இடம்பெயர்ந்து மாங்குளம் பகுதியில் சிறிதுகாலம் இயங்குகின்றது. அப்படிப்படட புலிகளின் குரல் வானொலியில் அன்றொருநாள் இடம் பெற்ற ஒரு சிறு பதிவு ,

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல் சூளை நகருது..

IMG-20230810-163744.jpg

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

செங்கல் சூளை நகருது..

IMG-20230810-163744.jpg

திறமை என்பதா? கொடுமை என்பதா ?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

இப்பவும் மாப்பிள்ளைக்கு தப்பி ஓடுவதற்கு சந்தர்ப்பம் இருக்கு.......என்ன செய்தாரோ தெரியாது......!  😂

த‌லைவ‌ரே வோட‌ர் 4லா ப‌க்க‌மும் பூட்டி இருந்தால் மாப்பிளை அதுக்காள் த‌ப்பி ஓட‌ முடியாது.............ச‌ரி அந்த‌ புது த‌ம்ப‌திக‌ளை வாழ்த்துவோம்

மிதிக்காம‌ அன்பாய் பார்த்து கொள்ள‌ம்மா உன் க‌ண‌வ‌ரை லொல்🤣😁😂................

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, vélo et texte qui dit ’MKG பிரியாமை DiNAMALAR 12-08-2023 -2023 ÛVALV தினமும் 6 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று கீரை விற்று பிழைக்கும் கிருஷ்ணன், சின்ன குழந்தை தம்பதி உழைப்புக்கு உதாரணமாய் திகழ்கின்றனர். இடம்: மங்கலம், திருவண்ணாமலை. Download Dinamalar APPS’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, temple et texte

கட்டிடக்கலையின் சிறப்பு.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும்
குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு
கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக
வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத
மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும்
என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத் தலைவர் என்று யாரும்
இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும்
முகத்தில் காரி உமிழும் தெளிவு
இந்துகளுக்கு.
8. இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி
என்று ஏதுமில்லை. மரமும் கடவுள் ,கல்லும்
கடவுள், நீரும் கடவுள்(கங்கை), காற்றும்
கடவுள் (வாயு), குரங்கும் கடவுள் அனுமன்,
நாயும் கடவுள் (பைரவர்) பன்றியும் கடவுள்
(வராகம்).
9. நீயும் கடவுள். நானும் கடவுள் ...பார்க்கும்
ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும்
மதம். பன்னிரு திருமுறைகள் , மண் ஆசையை
ஒழிக்க இராமாயணம், பொன் ஆசையை ஒழிக்க
மகா பாரதம், கடமையின் முக்கியத்துவத்த
ை உணர்த்தும் பாகவதம், அரசியலுக்கு அர்த்த
சாஸ்த்திரம், தாம்பத்தியத்திற்கு காம
சாஸ்திரம், மருத்துவத்திற்கு சித்தா,
ஆயுர்வேதம், கல்விக்கு வேதக் கணிதம், உடல்
நன்மைக்கு யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு கோள் கணிதம்.
11. வாளால் பரப்பப் படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம்
என்றுதொடங்கிய ஆதி மனித உணவு
முறையிலிருந்து "கொல்லாமை ""புலால்
மறுத்தல்", ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று
மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த
மதம்.சைவம் என்ற வரையறை உள்ள மதம்........!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’என் தாயிடம் குடித்த பாலை விட உன் தாயிடம் நான் குடித்த பாலே அதிகம்.! உருவத்தில் வேறுபட்டாலும்.. நீயும் எனக்கு சகோதரனே.!!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின்  அடையாளத்தை சொல்வதற்கென்று பல இடக்குறியீடுகள் காணப்படுகின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குவது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.

 

1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையின் திறப்பு விழா பிரதமர்  டி.எஸ் சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்டது

காங்கேசந்துதொழிற்சாலை ஒரு காலத்தில் தமிழ் மக்களின் மகத்தான பொக்கிசமாகத் திகழ்ந்தது. யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது.

ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தொழில் முடக்க நிலை ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி மாவிட்டபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்கள் சூனியப்பிரதேசங்களாகின. குறித்த காலப்பகுதியில் இப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய இலங்கை இராணுவம் சீமெந்து தொழிற்சாலையை கையகப்படுத்தியது. அன்றில் இருந்து இன்று வரைக்கும் தொழிற்சாலையினுள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளின் பின்பு அண்மையில் உயர்பாதுகாப்பு வலயங்களின் கீழிருந்த பல பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்பட்டனர். அவர்களது  வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற போதும் மூடப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையின் கதவுகள் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

இவ்வாறு மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற சீமெந்துத் தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் காலத்திற்குக்காலம் முன்னெடுக்கப்படுவதான செய்திகளையும் அறிய முடிகிறது. 2008 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனம் ஒன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை பொறுப்பேற்று மீள ஆரம்பிக்கப் போவதான அறிவிப்புக்கள் வெளிவந்தன. இவற்றிற்கான ஆவணக் கையெழுத்துக்களும் இடப்பட்டதாகவும் தொழிற்சாலையினை புனரமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. எனினும் அந்த முயற்சி தள்ளிப்போனது.

இதனைத்தொடர்ந்து 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் அதன் ஏனைய பங்குதாரர்களும் இணைந்து தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான தமது நல்எண்ணத்தை தெரிவித்தனர். இதற்கான பெறுமதியாக சுமார் 1.5 பில்லியன் ரூபா முதலீடு மதிப்பிடப்பட்டது. எனினும் குறித்த பேச்சுவார்த்தை வெற்றி அடைய வில்லை.

ஆனாலும் இந்தியா சீனா சவுதிஅரேபியா உட்பட்ட சில நாடுகள் முதலீட்டு அடிப்படையில் சீமெந்துத் தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கு முன் வந்தன. இவற்றிற்கான நிதி முதலீடாக சுமார் நான்காயிரம் கோடி ரூபா வரை மதிப்பிடப்பட்ட போதும் செயலளவில் எவையும் வெற்றி பெறவில்லை.

இவற்றின் தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அப்போதைய கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் சீமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் உட்பட தமிழ்த் தலைவர்களோடு யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து தொழிற்சாலையயை மீள ஆரம்பிப்பதற்கான முடிவுகள் உறுதி செய்யப்பட்டதுடன் சீமெந்து தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளையும் ஆராய்ந்தனர். ஆனால் இன்றுவரை அந்தத் தொழிற்சாலையின் கதவுகள் மீளத் திறக்கப்படவில்லை.

இவ்வாறாக தொடர்ச்சியாக இயக்கமற்ற நிலையில் காணப்படுகின்ற தொழிற்சாலையின் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் அதன் மூலமாக சட்டவிரோதமான செயற்பாடுகள் நிகழ்த்தப்படுவதாகவும் செய்திகள் பரவியுள்ளன. பொதுமக்கள் உள்நுழைய முடியாத உயர்பாதுகாப்பு வலயத்தினை சாதகமாக்கிக்கொண்டு தொழிற்சாலையிலுள்ள பாரிய இரும்பு உலைகள் பீப்பாய்கள் இயந்திரப்பாகங்கள் மற்றும் இரும்பு உபகரணங்கள் ஆகியவை வெட்டி அகற்றப்பட்டு பழைய இரும்பு விற்பனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற சுமார் 1.8 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தில் கொள்ளுப்பிட்டியில் அலுவலக கட்டத்தொகுதி ஒன்று அமைக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது.

👍🔔

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.