Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் காலை/ மதிய/ மாலை/ இரவு வணக்கங்கள் 🙏
 

மறு வார்த்தை பேசாதே.....😎

  • Replies 4.9k
  • Views 431k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

அமெரிக்க தூதுவருடன்... ஸ்ரீலங்கா விளையாடும் விளையாட்டு. 😎
இதுக்குப் பேர்தான்... அரிசி  பிச்சை வாங்கும் விளையாட்டு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, serpent, arbre et plein air

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of brick wall and text that says 'ஒரு மனுஷன் எத்தனை தடவைதான் கார் சீட்டை மாற்றுவான்!? இது போட்டோஷாப் இல்லை! ஒரு வட மாநில வாகனம்! இது அந்த கட்டிட மேஸ்திரி'யோட வாகனமாத்தான் இருக்கனும்..!" எல்.சேவுகபாண்டியன் கபாண்டியன்'

வட இந்தியாவில்... உள்ள ஒரு வாகனத்தின் இருக்கையை, செங்கல்லால் அமைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'உனன நமமி வநதேன பாரு.. எனன சொல்லனும்! கூகுள் மேப்ஐ பாலோ செய்து வெள்ளப் பெருக்கில் சிக்கிய கார் JO AUG G 0/anams 060 Google map வழி தான்டா சொல்ல முடியும் குறுக்க வெள்ளம் வருதா நாய் வருதானு எனக்கு எப்படிடா தெரியும் வெண்ணை'

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2022 at 19:28, suvy said:

Peut être une image de 1 personne, serpent, arbre et plein air

நாகராஜனா, செல்பி ராஜனா...   இப்போ, படம் எடுப்பது? 😜

  • கருத்துக்கள உறவுகள்
அது ஒரு விவாகரத்து வழக்கு கணவன் மனைவி நீதி மன்றத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்!
அப்போ நீதிபதி கணவனை பார்த்து என்ன ஆயிற்று ஏன் உங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்க!!
அவனோ!! சாமி நான் ஏற்கனவே நொந்து நூலாக போய் இருக்கேன் தயவு செய்து என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!!
எதுனாலும் என் பெஞ்சாதி கிட்ட கேட்டு நீங்களே நல்ல முடிவு எடுங்க என்று சொல்ல !!
நீதிபதி அரசு வக்கீலை விசாரிக்க பணித்தார்!!
அரசாங்க வக்கீல் விசாரணையை ஆரம்பித்தார்!!
அம்மா !! சொல்லுங்க அடிப்படையில் உங்களுக்கு என்ன பிரச்சினை!!
பெண் - எங்க வூட்டு " அடுப்படியில் " ஒரு பிரச்சனையும் இல்லை சாமி!!
வக்கீல் - அது இல்லம்மா ! உங்களுடைய பிரச்சினை என்ன!!
பெண் - எங்க கடையில் ஒரு பிரச்சினை இல்லை சாமி கடை நல்லா தான் ஓடிட்டு இருக்கு!!
வக்கீல் - அது இல்லையம்மா ! சரி உங்களுக்கு புரிகிற மாதிரி கேட்கிறேன்!! உங்க தாம்பத்திய உறவில் என்ன பிரச்சினை!!
பெண் - எங்களுக்கு தாம்பரத்தில் எந்த சொந்தமும் இல்லை சாமி! அதனால் எந்த பிரச்சனையும் இல்லை சாமி!
வக்கீல் - ஐயோ! எனக்கு பீபி ஏறுதே!!சரி உங்க கணவர் மீது கருத்து வேறுபாடு என்ன உள்ளது!!
பெண் - சாமி! அவரு கருப்புதான் ஆனா எனக்கு அவர ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் நானும் கருப்பு தான்!! எப்படி இருக்கு எங்க சோடி சாமி!!
வக்கீல் - ஐயோ!! முடியலையே!! உங்க வீட்டுக்காரர் கிட்ட என்ன சண்டை!!
பெண் - அவர் கிட்ட என்ன சண்டை மாசம் பொறந்தா சரியா வாடகை கொடுத்து விடுவோம்!! எங்களுக்குள் அப்படி ஒரு அன்பு!!
வக்கீல் - ஐயோ! முடியலை!! எம்மா உனக்கு விவாகரத்து வேண்டுமா !! வேண்டாமா!!
பெண் - எனக்கு வேண்டாம் சாமி !! ஏற்கனவே போன தீபாவளிக்கு மூணு விவாகா பட்டு சேலை தான் எடுத்து கொடுத்தார்!! இப்ப நீங்க வேற கேட்கிறீங்க வேண்டாம் சாமி!!
வக்கீல் - உட்ச கட்ட கோபத்துடன் !! அம்மா உங்கள் கணவர் ஏன் விவாகரத்து கேட்கிறார் என்று சத்தமாக கேட்க!!
பெண் - அது தெரியலை சாமி! அது என்னவோ என் கிட்ட பேசினா அவருக்கு நெஞ்சு வலிக்குதாம்!! ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்காம்! இம்புட்டு நேரம் நீங்க பேசி கொண்டுதான் இருந்தீங்க! உங்களுக்கு என்ன ஆச்சு நல்லாதான் இருக்கீங்க!! நீங்களே நியாயத்தை கேளுங்க!!
வக்கீல் massive ஹார்ட் அட்டாக் வந்தவராய் தன் மார்பை பிடித்து கொண்டு கீழே சாய்ந்தார்!!
ஆண் - ஒரு நாளைக்கே இப்படி நான் கல்யாணம் ஆன நாளில் இருந்து 20வருடம் எத்தனை முறை இப்படி நெஞ்சு வெடித்து செத்து இருப்பேன்!!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’PAINTING: "The arrival of the electric bill." Oil on canvas.’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... உங்கள் அடுத்த பிரவியில் இலங்கை மண்ணில் பிறக்க வேண்டுகிறேன்... luct nOw like Danly Meanwhile Queen in Heaven Heaven'

எலிசபெத் மகாராணியை... அடுத்த பிறவியில், இலங்கையில் பிறக்க ஒருவர் பிரார்த்திக்கின்றார்.
ராணியை... பெற்றோலுக்கும், பாணுக்கும்  கியூவிலை... நிப்பாட்டுற பிளான் போலை இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... உங்கள் அடுத்த பிரவியில் இலங்கை மண்ணில் பிறக்க வேண்டுகிறேன்... luct nOw like Danly Meanwhile Queen in Heaven Heaven'

எலிசபெத் மகாராணியை... அடுத்த பிறவியில், இலங்கையில் பிறக்க ஒருவர் பிரார்த்திக்கின்றார்.
ராணியை... பெற்றோலுக்கும், பாணுக்கும்  கியூவிலை... நிப்பாட்டுற பிளான் போலை இருக்கு. 😂

மிகவும் தேவையான பிரார்த்தனை.

ஆண்டவனே அந்த பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றுவாயாக.

  • கருத்துக்கள உறவுகள்

 

306125671_2569874329817398_6075152483599

  • கருத்துக்கள உறவுகள்
தந்தை இறந்த பின் தன் தாயை
கவனிக்க முடியாமல் முதியோர்
இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன்.
மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.
மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.
வருடங்கள் கடந்தன.
ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.
மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.
தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.
“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “இந்த முதியோர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.
காற்றுஇல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.
மகன் ஆச்சரியப்பட்டான்.
“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.
“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.
இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் உனது குழந்தைகள் #உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.
அதனால் தான் இப்போது
கேட்கிறேன் என்றார்.
வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன............✍️
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Strange 9/11 Conspiracy Theories That Refuse to Die Down

அமெரிக்கா, நியூயோர்க்கில்  இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்ட  நாள் இன்று.
எலிசபெத் மகாராணி மரண செய்தியில்... 
பெரும்பாலான  ஊடகங்கள்  மினைக்கெடுவதால்,
இன்றைய நாளை மறந்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

இங்கு சிறுநீர் கழித்தால்... அதனை வீடியோ  எடுத்து, "யூ  ரியூப்பில்" வெளியிடப் படுமாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and outdoors

மகாராஜா... ட்ரம்ப் 😂

  • கருத்துக்கள உறவுகள்
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் .
.
“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.
.
ஜட்ஜூக்கு சுருக்கென்றது.
.
பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.
.
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,
.
“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”
.
பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.
.
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.
.
“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.
.
அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.
.
முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.
.
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!
.
எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.
.
“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.
.
“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.
.
“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
.
ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.
.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
.
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நன்றி யாழ்ப்பாணம் கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் பிரயாணம் செய்யும் போது எனது தவறவிடப்பட்ட பொருட்களை பெறுமதியான தாலிக்கொடி, காப்பு, சங்கிலி, இந்தியப் பணம்) மொத்தமாக 06 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் தவறவிட்ட அனைத்துப் பொருட்களையும் கண்டெடுத்து எனது வீட்டிற்குக் கொண்டு வந்து தந்த காரைநகரைச் சேர்ந்த கனகசபை தர்மகுலசிங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்... ..சகாதேவன் மட்டக்குளி (12820)'

நல்லவர்களை  வாழ்த்துவோம்.  👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய காலை,மதிய,மாலை,இரவு வணக்கம். 😎

Ist möglicherweise ein Bild von Text

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனிய காலை,மதிய,மாலை,இரவு வணக்கம். 😎

Ist möglicherweise ein Bild von Text

யாழ் இணையம் அமைதியாக இருக்கிறது

எழுதுகிறவர்களின் ஆட்டம் தாங்க முடியலை.

On 20/9/2022 at 01:04, தமிழ் சிறி said:

May be an image of text that says 'நன்றி யாழ்ப்பாணம் கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் பிரயாணம் செய்யும் போது எனது தவறவிடப்பட்ட பொருட்களை பெறுமதியான தாலிக்கொடி, காப்பு, சங்கிலி, இந்தியப் பணம்) மொத்தமாக 06 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் தவறவிட்ட அனைத்துப் பொருட்களையும் கண்டெடுத்து எனது வீட்டிற்குக் கொண்டு வந்து தந்த காரைநகரைச் சேர்ந்த கனகசபை தர்மகுலசிங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்... ..சகாதேவன் மட்டக்குளி (12820)'

நல்லவர்களை  வாழ்த்துவோம்.  👏

தர்மலிங்கம்

பெயரிலேயே தர்மம் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனிதனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
     அழகுபெறவே நடந்து ...... இளைஞோனாய்
அருமழலையே மிகுந்துகு தலைமொழியே புகன்று
     அதிவிதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைகளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிகளே நினைந்து ...... துதியாமல்
தெரிவையர்களாசை மிஞ்சி வெகு கவலை யாயுழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீதணிந்த ...... மகதேவர்
மனமகிழவே யணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள் குமா துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின் மிசையேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே...🍀

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'Tirupati Polimer NEWS கணவனை வெறித்தனமாக காதலித்த பெண்.. 2 வது திருமணம் செய்து வைத்த மனைவி.! காதலுக்கு மரியாதையாம் 00222 காதலுக்கு மரியாதை /Polimernews /Polimernews'

என்ன, இழவு.. இது. 😡

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.