Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீயும் இருக்கிறியே...


பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள்
80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள்
கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்..
தங்கைக்காரிக்கு கலியாணம் செய்து வைச்சாள்...

நீயும் இருக்கிறியே...


செல்லையாவின்ரை நடுப்பொடியன் கனடாவிலையிருந்து வந்தான்
இரண்டு காணி வாங்கி விட்டான்
வீட்டுக்கு மதில் கட்டினான்
பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழாவை அந்தமாதிரி நடத்தினான்

நீயும் இருக்கிறியே..


லண்டனிலையிருந்து கந்தப்புவின்ரை மூத்தவன் வந்தான்
கோயிலுக்கு கிணறு கிண்டிக்குடுத்தான்
தமக்கையின்ரை பெட்டையளுக்கு நகை வாங்கிக்குடுத்தான்..
தாய் தேப்பனை கதிர்காமத்துக்கு கூட்டிக்கொண்டு போனான்


நீயும் இருக்கிறியே...


லண்டனிலையிருந்து கோவிந்தன் குடும்பம் வந்தது...
அங்கை இரண்டு மூண்டு வீடு வாங்கீட்டினமாம்
பிள்ளையள்ள ஒருத்தன் இஞ்சினியராம் மற்றவன் டொக்டராம்
மூண்டு கார் கராச்சுக்குள்ளை சும்மா நிக்குதாம்


நீயும் இருக்கிறியே...


பரீசிலையிருந்து இராசரத்தினம் வந்தான்...
இரண்டு கடை வைச்சிருக்கிறானாம்
தங்கடை சொந்தங்களுக்கு மோட்டச்சைக்கிள் வாங்கிகுடுக்கிறான்
கொழும்பு கண்டியெண்டு சுத்தி காட்டுறான்


நீயும் இருக்கிறியே...


கனடாவிலையிருந்து  சண்முகத்தார் மட்டும் வந்தார்
மனுசிக்காரி வேலையை விட்டுட்டு ஒரு இடமும் வெளிக்கிடேலாதாம்
பிள்ளையள் அதை விட மோசமாம்
சாப்பிடவே நேரமில்லையாம்


நீயும் இருக்கிறியே....


அவுஸ்ரேலியாவிலையிருந்து கறுவல் விசாகன் வந்தார்.
சிட்னி முருகனுக்கே அவர்தான் தலைவராம்
வீட்டிலை முருங்கை,கருவேப்பிலை மரம் நிக்குதாம்.
தன்ரை ஆக்கள் சிநேகித ஆக்கள் எல்லாருக்கும் கொஞ்சகொஞ்ச காசு குடுத்தவராம்.

நீயும் இருக்கிறியே...

கரவெட்டி/துன்னாலை மச்சாளின்ரை உள்ளக்குமுறல்..:grin:
 

  • Replies 4.9k
  • Views 430.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

கரவெட்டி துன்னாலை மச்சாளை இந்த நாடுகளுக்கு ஒருக்கா  நல்ல கடுங்குளிர் / கடும் வெப்பமான நேரத்தில் அனுப்பி எடுங்கோ ...படுகின்ற பாடு தெரியும் . உள்ளக குமுறல் நன்றாக தெளிந்து வருவா ......

   

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியா மச்சாளுக்கு கொஞ்ச காசை கலஞ்சை வட்டிக்கு எடுத்தாவது அனுப்பி விடுங்கோ ..... மச்சாளின் வவுத்தெரிச்சல் சும்மா விடாது கண்டியளே .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 


நீயும் இருக்கிறியே....


அவுஸ்ரேலியாவிலையிருந்து கறுவல் விசாகன் வந்தார்.
சிட்னி முருகனுக்கே அவர்தான் தலைவராம்
வீட்டிலை முருங்கை,கருவேப்பிலை மரம் நிக்குதாம்.
தன்ரை ஆக்கள் சிநேகித ஆக்கள் எல்லாருக்கும் கொஞ்சகொஞ்ச காசு குடுத்தவராம்.

நீயும் இருக்கிறியே...

கரவெட்டி/துன்னாலை மச்சாளின்ரை உள்ளக்குமுறல்..:grin:
 

அதென்ன அவுஸ் காரனை கறுவல் என்று சொல்லுறது கரவெட்டி மச்சாளுக்கு அவுஸ் தமிழன் எல்லாம் வெள்ளை என்று தெரியாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நிலாமதி said:

கரவெட்டி துன்னாலை மச்சாளை இந்த நாடுகளுக்கு ஒருக்கா  நல்ல கடுங்குளிர் / கடும் வெப்பமான நேரத்தில் அனுப்பி எடுங்கோ ...படுகின்ற பாடு தெரியும் . உள்ளக குமுறல் நன்றாக தெளிந்து வருவா ......

   

முந்தி ஒரு காலத்திலை மாடு மேச்சாலும் கவுண்மேந்திலை மேய்க்கோணும் எண்டு சொல்லிச்சினம்....இப்ப என்னடாவெண்டால் கக்கூஸ் கழுவினாலும் வெளிநாட்டிலை கழுவோணுமெண்டு அங்கை ஒருமாதிரி நக்கலாய் கதைச்சுக்கொண்டு திரியினமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, suvy said:

உடனடியா மச்சாளுக்கு கொஞ்ச காசை கலஞ்சை வட்டிக்கு எடுத்தாவது அனுப்பி விடுங்கோ ..... மச்சாளின் வவுத்தெரிச்சல் சும்மா விடாது கண்டியளே .....!  tw_blush:

wZfadf.gif

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

   பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையினிலே....~ Baby Peacock ~

 

  • கருத்துக்கள உறவுகள்

"அவன்... போனால்,  போறாண்டி, வானால்..... வந்தாண்டி...."

முருகனை... உருகி.... பாடும் பாடல்.
அதிலும்.... மெல்லிய இசையில்... ஆரம்பித்து, உச்சக்  கட்ட இசைக்கு  கொண்டு  சென்றமை     எதிர் பார்க்காத திருப்பம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.1.2018 at 7:03 AM, putthan said:

அதென்ன அவுஸ் காரனை கறுவல் என்று சொல்லுறது கரவெட்டி மச்சாளுக்கு அவுஸ் தமிழன் எல்லாம் வெள்ளை என்று தெரியாதா?

எனக்கும் "கறுவல்" எண்டு சொன்னது ஒரு மாதிரித்தான் கிடந்தது.....மச்சாளிட்டை வாட்ஸ்- அப்பிலை  ரெலிபோன் அடிச்சு கேட்டனான்...அதுக்கு அவ சொல்லுறாவு  வெளிநாடு போனவை  எல்லாரும் கொஞ்சமாவது வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கினமாம்....ஆனால் வாசகன் மட்டும் அப்பிடியே இருக்கிறாராம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WhatsApp_zps2dpuuwcj.jpeg

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WhatsApp_zps2dpuuwcj.jpeg?t=1517192214

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் ஒரு மனிதனின் 
சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். 

பாலிய வயது முதல், பருவ வயது வரை: 
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும். 

வாழ்வின் கடைசி 20 வருடங்கள்: 
நாம் வாழ்ந்தும் பயனில்லை, 
வீட்டில் இருக்கும் 
Table, 
chair, 
போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம். 

20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள். 

அந்த 30தில் 10 வருடங்கள்: 
குறைந்த பட்சம் தினசரி: 8 மணி நேரம்
தூங்கி விடுகிறோம். 

மீதி இருப்பது:  20 வருடங்கள். 

இதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது. 

மீதி இருப்பதோ: 10 வருடங்கள். 

இதில்:
மனைவியோடு பிரச்சனைகள், 
குழந்தைகளோடு பிரச்சினைகள்,
உடல் நல குறைபாடுகள், 
என 2 வருடங்கள் போய் விடும். 

மீதி இருப்பது வெறும்: 8 வருடங்கள். 
அதாவது 2922 நாட்கள். 

நமது மன திருப்திக்காக,
இந்த 2922 நாட்களை வேண்டுமானால் 
'round'டாக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். 

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,
வெறும் 3000 நாட்கள் மட்டும் தான். 

இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு:
மனம் நிறைய,
வெறுப்பு, 
கோபம், 
துரோகம், 
வன்மம், 
வன்முறை, 
வஞ்சகம், 
அகங்காரம், 
தலைக்கனம்,
ஏளனம், 
சந்தேகம்,
என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

அன்பு, 
கருணை, 
இரக்கம், 
பாசம், 
அமைதி, 
நட்பு,
நம்பிக்கை, 
காதல், 
இயற்கை,
உதவி, 
புன்னகை,
கனிவு, 
குழந்தை, 
பாராட்டு,
விட்டுக்கொடுத்தல், 
இறை பக்தி, 
குடும்பம், 
தன்னம்பிக்கை,
மகிழ்ச்சி,
சந்தோஷம்,
என எத்தனையோ 
positive வான விஷயங்கள் இருக்கின்றனவே. 
இவற்றை பின்பற்றலாமே. 

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும். 

தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும். 

அது நெருப்பாகவே இருந்தாலும் கூட. 

ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பை உமிழாமல், 

எப்போதுமே நம் மனதை தண்ணீர் போல் வைத்து இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இயந்தரம்... கோடி ரூபாய் என்றால் கூட,  வாங்க  ஆள் இருக்கு. :grin:  :D:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு தூங்க போகும் முன் கதவு கைப்பிடியில் இது போன்று கொழுவி விட்டால்.

யாரேனும் கதவை அசைத்தால் கீழே விழுந்து சத்தம் உண்டாக்கும்...

கண்டுபிடிப்பு
நாசா விஞ்ஞானி குமாரசுவாமிகள்.

DU9P4U7VAAA6yc8.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

################################################################################################################################################################################################################################################

 

 

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ex%20._zpszxzjudfk.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தானியங்கு மாற்று உரை இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2018 at 12:24 AM, தமிழ் சிறி said:

இந்த இயந்தரம்... கோடி ரூபாய் என்றால் கூட,  வாங்க  ஆள் இருக்கு. :grin:  :D:

இந்த இயந்திரம் எங்கே சார் விக்குது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Royal Rumble Match.:27_sunglasses:

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த.... சொல்ல... :grin:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DXmokbDU8AALH3V.jpg

ஒரு மானஸ்தனுக்கு இதை விட கேவலம் என்ன வேணும்???????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
Quote

 

டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்து விட்டு இப்படி ரஜினி காலில் விழுகிறீர்களே வெட்கமா இல்லையா? பாவம் டிராபிக் ராமசாமி இதை பார்த்தால் செத்துடுவார்.
----
உங்கள் வயது என்ன? அவர் வயது என்ன? அண்ணன் என்று கூப்பிடுகிற்கள் காலில் விழுகிற்கள் பார்க்க அசிங்கமா இருக்கு.... உங்கள் வயது தகுந்த தாற் போல் நடந்து கொள்ளுங்கள்..
---
உன் பையன் சின்ன லூசு நீ ஊருக்கே லூசு .த்தூ
---
பையன் ஆழப்போறான் தமிழ்ன்னு பாட்டு பாடுறான் அப்பன் கன்னடன் கால்ல விழுறான்... என்ன எழவுடா இது..... நாசமா போங்க

 

 
மேலே உ;ள்ள காணொளியில் கண்ட சில பின்னூட்டம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க...சிந்திக்க...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.