Jump to content

த.ஈ.வே.வெ.வெ........


Recommended Posts

பதியப்பட்டது

த.ஈ.வே.வெ.வெ........

இந்த வார ஒரு பேப்பரிற்காய் எனது அனுபவ தொடரின் ஒரு நினைவு

என்னது ஏதோ குழந்தை பிள்ளைகள் கதைக்க தொடங்கிற காலத்திலை கதைச்ச மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா. கடந்த வார ஒரு பேப்பரில் பாலச்சந்திரன் அண்ணாவும் பா.வை.ஜெயபலனும் ஆடிமாதத்து நினைவுகளை கிழப்பிவிட்டு போய் விட்டார்கள். அதனால்தான் எனது இந்த ஆடிமாதத்து நினைவும். ஆனால் இது அம்மி பறந்த நினைவு அல்ல ஆனால் இது இலங்கையில் 83ம் ஆண்டு தமிழர் அடிவாங்கி பறந்தோடிய ஆண்டு நினைவு.

எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் வழைமையாக பூசை முடிந்ததும் பஞ்சாட்சரம் என்று ஒருவர்தான் சுண்டல் புக்கை மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியபிரசாதங்களை கொடுப்பார் கோயில் பூசை முடிந்து அய்யர் விபூதி சந்தணம் கொடுத்து விட்டு போகும் வரை கொயில் தேர் முட்டியில் காத்திருந்து விட்டு பஞ்சாட்சரம் அவர்கள் சுண்டல் சட்டியுடன் வரும்போதுதான் நாங்கள் எழுந்து போய் வரிசையில் நிற்போம்.அவரும் அவல் சுண்டல் எல்லாம் கொஞ்சம் கைகளில் வைத்து கொண்டே போவார். ஆனால் இந்த பஞ்சாமிர்தம் தரும்போது மட்டும் பஞ்சாமிர்த சட்டியில் ஒரு முறை கையை வைத்தார் எண்டால் அதை ஒரு பத்து பேரின் கையிலாவது தடவிகொண்டு போவார். கையில் கொஞ்ச தேன்மட்டும் தான்ஒட்டும் அதை உடனே நக்கி விட்டு திருப்ப கையை நீட்டினாலும் அவர் தரமாட்டார் தன்பாட்டிற்கு போய் கொண்டேயிருப்பார்.

இறுதியில் மிஞ்சுகின்ற பஞ்சாமிர்தத்தை அவர் வீட்டிற்கு கொண்டு போய் விடுவார். இதனால் எங்களிற்கும் அவரிற்கும் ஒரு நிழல் யுத்தமே நடந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் இரவு வேளைகளில் அவரது வீட்டை சைக்கிளில் கடந்து போகும் போது பஞ்சாமிர்தம் தராத பஞ்சாட்சரம் ஒழிக என்று கத்தி விட்டு ஓடுவதும் உண்டு. அவரிற்கும் தெரியும் நாங்கள் தான் கத்துவது என்று ஆனாலும் எப்பொழுதுமே நேரடியாக நாங்கள் சண்டை பிடித்தது கிடையாது.இப்படி இது தொடர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான்

83ம் ஆண்மடு ஆடி மாதம் 23 ந்திகதி தொடங்கிய கலவரத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களிலை இருந்த எல்லாத் தமிழரும் சிங்களவரிட்டை அடி வாங்கி கொண்டு உறவுகள் உடைமைகள் என்றுயாழ் காங்கேசன் துறையில் கப்பல்களில் வந்து இறங்க தொடங்கினர்.அந்தநேரம் நாங்களும் வந்தவர்களிற்கு முடிந்தளவு உதவிகளை செய்தோம் எங்கள் ஊரிலும் பலர் வந்திறங்கினார்கள் அதில் பலர் ஊரின் வாசமே மறந்து போனவர்களும் அடக்கம். அப்படி வந்தவர்களில் ஒரு அம்மணி கொழும்பில் பெரிய அரசியல் பலம் பண பலம் என்று வாழ்ந்தவா அவாவும் போட்ட உடுப்போடைதான் ஓடிவந்து ஊரிலை அவையின்ரை பாட்டன் வீட்டிலை இருந்தவை . ஆனால் அப்பிடி அடிவாங்கி கொண்டு ஓடிவந்தும் அந்த அம்மணியோஊரிலை சே சரியான டேட்டி விலேச் என்று குதிக்காலாலை நடந்து திரிஞ்சவா.இந்த கால கட்டம் வடக்கு கிழக்கு தமிழர்களிடம் ஒரு கொந்தளித்த மன நிலையெ காணப்பட்டது.

யாழிலும் மூலை முடுக்கெல்லாம் முப்பதிற்கும் மேற்பட்ட இயக்கங்களும் முளைக்க அரம்பித்திருந்தது. இவைகள் ஒரு பக்கத்தாலை நடந்து கொண்டிருக்க இந்த பஞ்சாட்சரம் அவர்களின் மகளிற்கு திருமணம் ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது. ஆனால் ஆடி மாதம் யாரும் ஊரில் திருமணம் வைப்பதில்லை என்பதால் ஆவணி மாதம் நாள் வைத்து அதற்கான ஏற்பாடுகள் தடலு் புடலாக நடைபெற்றது. வீடு பெயின்ற் அடிக்கப்பட்டு அவர் வீட்டு மதிலும் சுண்ணாம்பு அடித்து பளிச்சென்று இருந்தது. ஊரிலை உங்கள் எல்லாரிற்கும் தெரிந்த விடயம் றோட்டு போடுறதெண்டால் முதலில் கல்லைகொண்டு வந்து கொட்டி ஒரு பாத்தி மாதிரி கட்டிவிட்டு போவார்கள்.

பிறகு ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு தார் தகரத்தை கொண்டு வந்து போட்டு விட்டு போவார்கள் றோட்டு போட ஒரு வருசமும் ஆகலாம் சில வருசமும் ஆகலாம். அது எப்ப போடப்படும் எண்டு எங்கள் ஊர் பிள்ளையாருக்கே தெரியாது. ஆனால் றோட்டு போட தொடங்கும் போது பறிச்ச கல்லிலை பாதியும். ஊரிலை உள்ள ஓட்டை வாளியள் சருவகுடம் கிடாரம் அடைக்க எண்டு கொஞ்ச தாரும் காணாமல் போயிருக்கும்.

அப்பிடித்தான் ஊரிலை றோட்டு போட எண்டு கல்லும் தாரும் பறிக்கப்பட்டு இருந்தது.ஒரு நாள் இரவு கோயிலடியிலை இருந்து அரட்டை அடிச்சிட்டு இரவு நானும் இருள் அளகனும் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்த போது பளிச்சென்று சுண்ணாம்படித்த பஞ்சாட்சரத்தின் வீட்டு மதிலும் அதக்கு பக்கத்திலை தார் தகரத்தையும் பார்த்ததும் என்னுடைய மூளையும் அதே நேரம் படபடப்பில் இதயமும் ஒண்றாக இயங்க ஆரம்பித்தது. ஆனாலும் தைரியத்தை வரவளைத்து கொண்டு இருள் அளகனிடம் டேய் இந்த பஞ்சாட்சரம் எத்தினை வருசமா எங்களிற்கு பஞ்சாமிர்தம் தராமல் பம்மாத்து விடுறார் அவருக்கு ஒரு வேலை செய்யப்போறன் பார் என்று விட்டு ஒரு தடியை எடுத்து தார் தகரத்துக்குள்ளை விட்டு பார்த்தன். ஆடி வெய்யிலில் தார் நல்லா உருகி இருந்தது. அப்பதான் நான் ஏதோ செய்யபோறன் எண்டு இருள் அளகனிற்கு விழங்கியது. அவன் என்னைப்பார்த்து டேய் வேண்டாம் பிடிபட்டா பஞ்சாட்சரமும் வீட்டு காரரும் சேர்ந்தே தோலை உரிச்சு போடுவினம் வேண்டமாடா என்று கெஞ்சினான்.

டேய் அது ஒண்டும் நடக்காத மாதிரி என்னட்டை அய்டியா இருக்கு என்று விட்டு தடியில் தாரை நன்றாக தோய்த்து பஞ்சாட்சரம் வீட்டு பளிச்சென்ற மதிலில் ஜே.ஆர் அரசே தமிழர்கள் மீதான வன் முறையை உடனடியாக நிறுத்து இல்லாவிடில் நீயும் உனது அரச படையும் பயங்கர விளைவை சந்திக்க நேரிடும் என்று எழுதி விட்டு ஏதாவது ஒரு இயக்கத்தின் பெயரை கட்டாயம்கீழே எழுத வேண்டுமே என்று யோசித்த போதுதான் எதுக்கு வேறை ஏதாவது இயக்கத்தின்ரை பெயரை எழுதி வீண் வம்பிலை மாட்டுவான் என்று நினைத்து எல்லா இயக்கங்களின் பெயரிலுமே த.ஈ என்கிற அதாவது தமிழ் ஈழம் என்று தொடங்கி ஏதாவது ஒரு பெயர் வரும் எனவே நானும் ஏதாவது ஒரு பெயரை புதிதாய் போட நினைத்து த.ஈ.வே.வெ.வெ. என்று கீழே எழுதி விட்டு ஓடிவிட்டோம்.

மறுநாள் வழைமை போல கோயிலில் மாலை பூசை முடியும் வரை கோயில் தேர் முட்டியில் இருந்து முதல் நாள் இரவு நான் செய்த வீரபிரதாபத்தை மற்றைய நண்பர்களிடம் சொல்லி சிரித்து கொண்டிருந்து விட்டு பஞ்சாட்சரத்தை கண்டதும் எழுத்து போய் வரிசையில் நின்றோம். பஞ்சாட்சரமும் சுண்டல் அவல் புக்கை எல்லாவற்றையும் தந்து விட்டு போய் விட்டார் பஞ்சாமிர்தத்தை காணவேயில்லை.நாங்களும் பஞ்சாட்சரம் பழிவாங்கிட்டாரடா என்றபடி போய் மீண்டும் தேரடியில் இருந்தபோதுதான் திடீரென பஞ்சாட்சரம் பஞ்சாமிர்த சட்டியுடன் சிரித்தபடி எங்கள் முன்னே வந்து நின்றபடி தம்பியவை இது உங்களுக்காக ஸ்பெசலா செய்த பஞ்சாமிர்தம் அதாலைதான் மற்றவைக்கும் குடுக்காமல் உங்களுக்காக கொண்டந்தனான் என்றபடி கை நிறைய எல்லாருக்கும் அள்ளி எங்கள் கைகளில் வைத்தபடி தம்பியவை உங்களிட்டை ஒரு விசயம் சொல்ல வேணும் என்றவும் நானும் இருள் அளகனும் ஒருதரையொருத்தர் பாத்து கொண்டோம்.

அவர் தொடர்ந்தார் தம்பியவை என்ரை மகளின்ரை கலியாணத்துக்கு ஏதோ கடனை வாங்கி ஒழுங்கு பண்ணி வீட்டுக்கும் பெயின்ற் அடிச்சு மதிலுக்கும் சுண்ணாம்பு அடிச்சிருந்தனான் ஆனால் யாரெண்டு தெரியாது நேற்றிரவு என்ரை மதிலிலை ஏதோ நான்தான் கலவரத்தை தொடக்கி விட்டமாதிரிஜே.ஆர் அரசே பயங்கர வாதத்தை நிறுத்து எண்டு தாராலை எழுதி போட்டு போட்டாங்கள். தம்பியவை எனக்குத் தெரியும் நீங்கள் எழுதியிருக்க மாட்டியள் ஆனால் உங்களிற்கு தெரிஞ்சவை யாரும் எழுதியிருந்தால் அவையிட்டை சொல்லுங்கோ முடிஞ்சால் கொழும்புக்கு போய் ஜே.ஆரின்ரை வீட்டு மதிலிலையோ ஆமிகாம்ப் சுவரிலையோ இல்லாட்டி பொலிஸ் ஸ்ரேசன் வாசல்லையோ எழுத சொல்லுங்கோ.

மகளின்ரை கலியாணம் முடிஞ்சு நாலாம் சடங்கு முடியும் மட்டுமாவது மதிலை கொஞ்சம் வெள்ளையா இருக்க விட்டா காணும் என்று விட்டு.தம்பியவை வடிவா சாப்பிடுங்கோ காணாட்டிலும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கோ என்று விட்டு போய் விட்டார் நான் பஞ்சாமிர்தத்தை சாப்பிடாமல் அப்படியே கைகளில் வைத்திருக்க வில் இடுக்குளினால் தேன் ஒழுகிகொண்டிருந்தது.அப்போத

Posted

ஹி...ஹி... கதை நல்ல நகைச்சுவையாக இருந்தது... அது சரி இப்பவும் அந்த இயக்கத்திலதான் இருக்குறீங்களோ.... :unsure:

இல்ல நாமளும் சேரலாமேன்னுதான் ...... B)

அனுபவக்கதை அருமை....

Posted

கௌரி பாலன் ஊரிலை அப்பா அம்மா தயவிலை வெற்றிகரமா நடத்தினஅந்த இயக்கத்தை வெளி நாட்டுக்கு வந்து தொடர்ந்தும் நடத்த இயலாமல் போச்சுது எண்ட கவலைதான் என்ன செய்ய ஆனாலும் இஞ்சையும் சிலர் அந்த இயக்கத்தை தொடர்ந்தும்நடத்தினம் அவர்களிற்கு வாழ்த்துகள்

Posted

சுவார்சியமாக இருக்கின்றது. பஞ்சாட்சரம் என்பவரை பஞ்சாமிர்த கோவத்தில் தாக்கியிருக்கின்றீர்கள். ஜே ஆர் அரசை அவர்களின் தாரைக் கொண்டே தாக்கி இருக்கின்றீர்கள். ஒரு கல்லில் இரண்டு மங்காய் அடித்திருக்கின்றீர்கள். விழையாட்டு பருவத்திலும் ஒரு நியாயத்தை கேட்க துணிந்திருக்கின்றீர்கள். அனுபவமும் அதை விபரித்த விதமும் கூடவே கொளரி பாலன் அவர்களின் சுவார்சியமான கேள்விக்கு கொடுத்த விளக்க்மும் நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி பஞ்சாட்சரத்தார் இன்னும் இருக்கிறாரோ.இந்தக் கட்டுரையை அவரும் பார்க்கலாமே என்று தான்.

Posted

சாத்து இருள் அழகனுக்கு ரசிகர் மண்றம் அமைக்காமல் விட மாட்டீங்கள் போல கிடக்கு...! உங்கட ஆசையையும் ஏன் விடுவான் என்னையும் மண்றத்திலை சேர்த்து கொள்ளுங்கோ...! :P

Posted

சாத்திரி பஞ்சாட்சரத்தார் இன்னும் இருக்கிறாரோ.இந்தக் கட்டுரையை அவரும் பார்க்கலாமே என்று தான்.

ஈழப்பிரியன் பஞ்சாட்சரத்தார் இப்ப உயிருடன் இல்லை பாவம் மனிசன் இந்தியனாமி கால சண்டையிலை ஆமி செல்லடித்ததா?? அல்லது சுட்டதா என்று சரியாக தெரியாது ஆனால் இறந்து விட்டார். :mellow:

Posted

மகளின்ரை கலியாணம் முடிஞ்சு நாலாம் சடங்கு முடியும் மட்டுமாவது மதிலை கொஞ்சம் வெள்ளையா இருக்க விட்டா காணும்

சாத்திரி மாமா அவர் உங்களுக்கு பஞ்சாமிர்தம் தந்ததே இனியும் இப்படி செய்துடாதீங்கடா என்று சொல்லுற போல எனக்கு தெரியுது. ஹீஹீ

நல்ல குழப்படி மன்னன்கள் தான் நீங்களும் உங்க நண்பர்களும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோயிலில் நடந்த பூசை, அர்ச்சனையெல்லாம் சொன்னீங்கள் சரி. பிறகு உங்க வீட்டில நடந்த பூசை, அர்ச்சனை எல்லாத்தையும் எடிட் பண்ணிட்டீங்களே! பின்பு அந்த தார் எழுத்துக்களைச் சுறன்டிக்கொட்டப் போகேல்லைத்தானே? :D:D

Posted

ஹாஹா... நல்ல அர்த்தம் த.ஈ.வே.வெ.வெ........ க்கு...

உதை வாசிக்க எனக்கு எனது நண்பன் ஒருவன் சொல்லிய கதை நினைவுக்கு வருது..

அதென்னன்றா... அந்த காலகட்டத்தில் ஏராளம் இயக்கங்களாம். பாடசாலையில் படித்த சில நண்பர்களிற்கு ஒரு சில கிரனைட்டுக்களும், துவக்குகளும் எங்கோ ஒரு இயக்கத்திடம் திருடியதன் மூலம் கிடைத்துவிட்டது. அப்போது அவர்கள் தாமும் ஒரு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தார்களாம். இதன்மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பிரபலம் அடைந்து விடலாம் என்று நினைத்தார்கள் போலும்.

இந்நிலையில் இயக்கத்திற்கு பெயர் வைக்க வேண்டிய தேவை வந்தது. என்ன பெயர் வைக்கலாம் என்பதில் குழப்பம். ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் சொன்னார்களாம். கடைசியில் ஒருவன் இவ்வாறு பெயர் வைத்தானாம். "துப்பாக்கிப் படை!"

ஹாஹா... கடைசியில் இரண்டு மூன்று நாட்களில் இந்த இயக்கமும் த.ஈ.வே.வெ.வெ ஐ ஒத்து இருந்ததால் அது தானாகவே கலைந்துவிட்டது.

Posted

ஹாஹா... நல்ல அர்த்தம் த.ஈ.வே.வெ.வெ........ க்கு...

உதை வாசிக்க எனக்கு எனது நண்பன் ஒருவன் சொல்லிய கதை நினைவுக்கு வருது..

அதென்னன்றா... அந்த காலகட்டத்தில் ஏராளம் இயக்கங்களாம். பாடசாலையில் படித்த சில நண்பர்களிற்கு ஒரு சில கிரனைட்டுக்களும், துவக்குகளும் எங்கோ ஒரு இயக்கத்திடம் திருடியதன் மூலம் கிடைத்துவிட்டது. அப்போது அவர்கள் தாமும் ஒரு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தார்களாம். இதன்மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பிரபலம் அடைந்து விடலாம் என்று நினைத்தார்கள் போலும்.

இந்நிலையில் இயக்கத்திற்கு பெயர் வைக்க வேண்டிய தேவை வந்தது. என்ன பெயர் வைக்கலாம் என்பதில் குழப்பம். ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் சொன்னார்களாம். கடைசியில் ஒருவன் இவ்வாறு பெயர் வைத்தானாம். "துப்பாக்கிப் படை!"

உண்மைதான் கலைஞன் அந்த காலகட்டத்தில் உருவான இயக்கங்களில் 30 இயக்கங்களின் பெயர்கள் இலங்கை அரசினால் தடைசெய்யபட்டவை பட்டியலில் வெளியாகியிருந்தது. அப்படியானால் மிச்சம் எவ்வளவு இருந்திருக்கும் எண்று எண்ணிப்பாருங்கள். ஒரு கைக்குண்டு அல்லது ஒரு கைத்துப்பாக்கி ஒருவரிடம் கிடைத்தால் போதும் அவர் இயக்கம்தொடங்கி விடுவார்.அதுகள் இல்லாமல் கூட இயக்கங்கள் இருந்தன.ஆனால் எனக்கு இப்போ எண்ணிப்பார்த்தபோது சுமார் ஒரு 15 இயக்கங்களின் பெயரே ஞாபகத்திற்கு வருகிறது .

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமைபோல உங்களின் அனுபவக்கதை நன்றாக இருக்கிறது சாத்திரி. சாத்திரியும், கலைஞனும் குறிப்பிட்ட த.ஈ.வே.வெ.வெ , துப்பாக்கி இயக்கத்தினை வாசிக்க எனக்கு ஒரு யாபகம் வருகிறது. ஆண்கள், பெண்கள் படித்த ஒரு பிரபல்யமான பாடசாலையில் ஒரு வகுப்பில் சில மாணவர்கள் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்க விரும்பினார்கள். இயக்கத்தின் பெயரை ஆங்கிலத்தில் L.O.V.E என்று அழைக்க விரும்பினார்கள். அவ்வியக்கத்தில் அதிகமாக பெண்களையும் சேர்க்கவே விரும்பினார்கள்.

Liberation,Organisation of Voice of Eelam - L.O.V.E

Posted

உங்கள் அனுபவக் கதை நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.