Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார்.

துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான்.

கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான்.

சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 

  • Replies 105
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Elugnajiru said:

சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 

றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும்.
விடுதலைப்புலியாக மாறும்
கரும்புலியாக மாறும்.
சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும்.
விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும்.

இன்னும் பற்பல......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

சும்மாவே யாழ்கள சின்னராசுகளை பிடிக்க முடியாது.

இப்ப இது வேறையா?

யாழ்கள சின்ராசுகள்?????
யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே?

3 hours ago, tulpen said:

எங்கள் நாட்டு சண்டையில் ஒரு தலைமுறை மக்களின் உயிர், உடமை, கல்வி, காதல்,  அன்புக்குரிய பல ஆயிரம் உறவுகள் எந்த பலனும் இன்றி  வீழ்ததப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..

Bild

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்தால் சுவைப்பீர்!
புரியாவிட்டால் ரசிப்பீர்!!
🤓🤓🤓
*அது எரிந்து விழுகிற போது* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அது எரிந்து விழுகிற போது கண்ணாறக் கண்டேன். 

எனது மண்ணைக்கவர்ந்த கழுகுக்கும்பலின் ஓர் குறியீடாக அந்த எந்திரக்கழுகின் முதுகைக்கண்டேன் . 

வலப்புறமாக சுழன்ற  இறக்கைச்சக்கரம் 
வக்கிர எமப்படை போலவும்-அக்
கொடிய கழுகின் கூர் அலகு 
குத்திக் கூறாக எனது மண்ணைக் கிழிப்பதாகவும்; 

அங்கே கொதித்து 
எழுந்த வெப்பக்காற்றும்
அதன் வேக வீச்சில் 
சக்கரம் இடப் புறமுதுகு காட்டி ஓட.. 

காற்று...
எறிந்ததொரு கணை 
எரித்ததோ அதனை?!! 

புற முதுகைத் தாக்குதல்...
மரபு திரிந்த தாக்குதல் தான்! 
மக்கள் திரியாமல் காக்குதல் தான்!! 

அது எரிந்து விழுகிற போது கண்ணாரக்கண்டேன். 

பிறகு 

பதினான்கு எலும்பையும் 
அவற்றைப் போர்த்திய இருபத்தினாலு குறும்பையும் கூட கண்ணாறக் கண்டேன். 

                        ...தமிழ்க்கோ

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

யாழ்கள சின்ராசுகள்?????
யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே?

அண்ணை, 

வை டென்சன்?  

சின்ராசுகள் (நான் உட்பட) நாம் எல்லாரும்தான்.

அந்த க்ரூப், இந்த க்ருப், நடுவால சைக்கிள் ஓடுற க்ருப் எல்லாம் அதில் அடங்கும்🤣.

யாழ்பாணத்தில் பனம் பழம் விழுந்தது எண்டு செய்திவந்தாலே அதில் சீனா-இந்தியாவை முடிச்சு போட்டு எழுதுவதுதானே இப்ப டிரெண்ட். இதற்கு நான் உட்பட யாரும் விதி விலக்கல்ல - அதைதான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அட பாவியளே...... நான் பகிடிக்கு தானே போட்டேன்....

உண்மையா அதுதான் கதையா?🤔

ராஜீவ் கொலை முதல் பலதில் சு சாமிக்கு பங்கிருப்பதாக சொல்கிறார்கள்.

சு சாமி (வேறு யாருக்காகவோ) இந்தியாவுடன் சீனாவை முட்டிவிட பார்கிறார் போல தெரியுது எனக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

வை டென்சன்?  

நோ டென்சன்....😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நீங்கள் என்ன காரணம் சொன்னாலும்..... அதே முள்ளிவாய்காலில் நானோ.... நீங்களோ இருக்காமல் போனதன் காரணம் கர்மா.....

போராட்டத்தை தேர்த்தெடுத்த, தலைவருக்கு, வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளைகளுக்கும்..... அப்படி ஒரு முடிவு.... கர்மா.....

இந்திரா காந்திக்கும்....... இரண்டு மகன்மாருக்கும் நடந்த அகால முடிவும் கர்மா தானே.

இராணியம்மாவின் பெரியப்பா, ராசாவாகிய பின்.... இரண்டு தரம் விவாகரத்து பெற்ற வேலைக்கார பெண்ணை விரும்பி..... முடி துறந்ததால்....தம்பி அரசராகி.....தம்பி மகள் அரசியாகியதும் கர்மா.....

ஆக..... கர்மா வேறு..... just an accident வேறு.

பின்னது.... நடக்க... கர்மா.... காரணமாக இருக்கும்....

நாம... எமுதிப் பதியிற கருமங்களை எல்லாம் வாசித்து.... பெருமூச்சுடன் கத்தியை போட வேண்டிய இடத்திலை ஓங்கிப் போடுற...... நிழலி..... செய்யும்.... உதவிகள் கர்மாவா....just an accident ஆ

உங்களால் தீர்மானம் செய்ய முடியாத விடயங்களுக்கு கர்மா மேல் பழியைப் போடவேண்டியதுதான்.

🤪

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, குமாரசாமி said:

1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..

Bild

புதிய தகவல்!

  • கருத்துக்கள உறவுகள்

கர்மா இந்த பிறப்பில் செய்தவைக்கு மட்டும் அல்ல.

அதற்கு முற்பிறப்புகள் பலதில் நிகழ்ந்தவைக்கும் கூட இந்த பிறப்பில் எதிர்வினையை காட்டும். காட்டாமலும் போகும் 🤣.

உதாரணமாக ரஜீவ் செத்ததுக்கு இந்த பிறப்பில் செய்த தீமை காரணம். 

ஆனால் முள்ளி வாய்காலில் அன்று பிறந்த சிசு செத்ததுக்கு அது முந்திய பிறப்பில் செய்தபாவம் காரணம்.

சரி இப்படி ஏன் இந்த ஆன்மா பிறவி பெருங்கடலில் உழல்கிறது?

ஒவ்வொரு ஆன்மாவின் முதல் பிறப்பிலும் அது zero bad karma வுடந்தானே இருந்திருக்கும்?

அதை சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஏன் கெட்ட கருமங்களை செய்யாது தடுக்கவில்லை?

இப்படி பல விடை இல்லா கேள்விகள் எழும் விடயம் இந்த கர்மா.

ஆனால் ஒண்டு கர்மா மக்களை மாந்தைகளாக வைத்திருக்க விரும்புவோர்க்கு ஒரு நல்ல பயனுள்ள கருவி (useful controlling device).

முள்ளிவாய்காலில் ஏன் மக்கள் இறந்தார்கள்? கெட்ட கர்மா.

மகிந்த ஏன் சந்தோசமாக இருக்கிறார்? முன்பு செய்த நல்ல கர்மா > இன்று செய்த கெட்ட கர்மா.

தலைவர் ஏன் குடும்பத்தோடு இறந்து போனார்? அவரின் கெட்ட கர்மா > நல்ல கர்மா.

ஒருவருக்கு ஏன் லொட்டரி விழுந்தது - நல்ல கர்மா.

அதே நபர் ஏன் வெற்றி செய்தி கேட்டதும் மாரடைப்பால் செத்தார்? கெட்ட கர்மா.

கர்மா, விதி - இந்த ரெண்டு பொய்களையும் வைத்து உலகின் எந்த கேள்விக்கும் நாம் விரும்பும் சடையல் விளக்கம் கொடுக்கலாம்.

அதனால்தான் ஏனையவர்களை மொட்டை அடிக்க, பார்பனர்கள் இந்த இரெண்டையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்து, சமய நம்பிக்கையாக பரப்பி விட்டுள்ளார்கள்.

1 minute ago, நன்னிச் சோழன் said:

புதிய தகவல்!

நான் ஒரு முறை பள்ளி போகும் போது 8 உடல்களை கண்டேன்😔.

ஆனால் இங்கே பதிவாளர் சொல்லவருவது “அதே இந்திய இராணுவத்தின் இன்றைய தளபதி” என்பதே என நான் நினைக்கிறேன்.

குறித்த அந்த செயலில் ஈடுபட்ட தளபதி இவர் என சொல்வதாக நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சும்மாவே யாழ்கள சின்னராசுகளை பிடிக்க முடியாது.

இப்ப இது வேறையா?

சீனா, ரஸ்யா, அமெரிக்கா, ஏலியன் எண்டு தேள், சிலந்தி, கரப்பொத்தான், நட்டுவாக்காலி வடிவ வியூகங்களை அலசி, ஆராய்ந்து, அல்லு சில்லு படுத்த போறாங்ய்களே சாமீ🤣.

 🤣 சிரித்து முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/Bipin_Rawat
 
Innocent People Killing Force இல் இவர் அங்கம் வகித்ததாக தெரியவில்லை. 1987 இல் சீனா உடன் ஏற்பட்ட எல்லை முறுகலில் இவர் பங்கெடுத்திருந்தாராம். @நன்னிச் சோழன்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

உங்களால் தீர்மானம் செய்ய முடியாத விடயங்களுக்கு கர்மா மேல் பழியைப் போடவேண்டியதுதான்.

🤪

கர்மா!

தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

வரலாற்றில்.....

அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

அண்ணன் அரசனானான்....

ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் வந்திட்டுது போய் சேர்ந்திட்டார். எனி யாரோ வரிசையில்..??!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கர்மா!

தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

வரலாற்றில்.....

அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

அண்ணன் அரசனானான்....

ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

அதாவது, 

உங்களால் முடியாது என்று சொன்னால் அதற்குப் பெயர் கர்மா..☹️

முயற்சிகள் செய்யாமல் சும்மா  இருந்த பின்னர் பழியை கர்மாவின் மேல் போடலாம் கண்டியளோ..

இதையெல்லாம் இங்கே எழுத வேண்டியதாகிவிட்டத. என்ர தலையெழுத்து பாருங்கோ..🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, goshan_che said:

கர்மா இந்த பிறப்பில் செய்தவைக்கு மட்டும் அல்ல.

ஒரு காலத்தில்  தமிழரசர்கள் இன/மத ரீதியாக  கோலோச்சினார்கள். அங்கேயும் பழிகள்/சாபங்கள் இருக்கலாம்.

அதே போல்.....உலகம் முழுவதும் சுரண்டிப் பிழைத்த பிரிட்டிஷ் வல்லாதிக்கம் இன்று கொஞ்சம் தன்னை சுதாகரித்தாலும் முன்னர் செய்த கர்மவினையை தற்போது அனுபவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

கர்மா!

தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

வரலாற்றில்.....

அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

அண்ணன் அரசனானான்....

ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

அப்டீக்கா விழுந்தா - அதுதான் கர்மா

இப்டீக்கா விழுந்தா - அதுதான் கர்மா

எப்டீக்கா விழுந்தாலும் - அதுதான் கர்மா

விழாமலே போனால் - அதுதான் கர்மா🤣.

கவுண்டரிண்ட வாழைபழ கொமெடிக்கு அந்தநாளில் பிராமணர் கொடுத்த பேர்தான் கர்மா 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

அதாவது, 

உங்களால் முடியாது என்று சொன்னால் அதற்குப் பெயர் கர்மா..☹️

முயற்சிகள் செய்யாமல் சும்மா  இருந்த பின்னர் பழியை கர்மாவின் மேல் போடலாம் கண்டியளோ..

இதையெல்லாம் இங்கே எழுத வேண்டியதாகிவிட்டத. என்ர தலையெழுத்து பாருங்கோ..🤪

நீங்கள் தீர்மானம் எடுத்து நடக்காமல் போன கடந்த காலத்தை......

முயற்சி எடுக்காமல் பாழாகும் எதிர் காலத்துடன் குழப்புகிறீர்கள் என்று நிணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில்  தமிழரசர்கள் இன/மத ரீதியாக  கோலோச்சினார்கள். அங்கேயும் பழிகள்/சாபங்கள் இருக்கலாம்.

அதே போல்.....உலகம் முழுவதும் சுரண்டிப் பிழைத்த பிரிட்டிஷ் வல்லாதிக்கம் இன்று கொஞ்சம் தன்னை சுதாகரித்தாலும் முன்னர் செய்த கர்மவினையை தற்போது அனுபவிக்கின்றது.

மத நம்பிக்கையை சாடவில்லை. கன்னி மேரி, அல்லாஹவின் குரல் முகமதுக்கு கேட்டது, புத்தர் இலங்கைக்கு வந்தார் என மதங்கள் எல்லாமுமே சில இலகுவான பொய்களின் அடிப்படையில்தான் கட்டமைக்கபடுகிறன.

ஆனால் மதம்தாண்டிய நடைமுறை உலகில் இந்த விளக்கங்கள் ஏற்கப்படாது.

கிளென் ஹொடில் என்ற இங்கிலாந்தின் கால்பந்து மனேஜர் நினைவிருக்கலாம் - மாற்று திறனாளிகள் உடல் நோய்ப்பட அவர்களின் கர்மாவே காரணம் என்றார். அதனால் வேலை போயிற்று.

நானும் கூட பேச்சோடு பேச்சாக, karma is a b#%^, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எண்டு எல்லாம் சொல்பவந்தான். @அக்னியஷ்த்ராவும் அந்த தொனியில்தான் சொல்லி இருப்பார் என நினக்கிறேன்.

ஒரு சொலவாடையாக, நமக்கு கெடுதல் செய்தவர்கள், நம்மால் தண்டிக்க பட முடியாதவர்கள் தாமாகவே தடக்கி விழும் போது இப்படி சொல்லி ஆறுதல் அடைவது மனித இயல்புதான்.

ஆனால் உலக வரலாற்றின் சம்பவங்களை, அரசியலை இந்த கர்மா-கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.

பார்க்கவும் கூடாது?

ஏன்? ஏனென்றால் மகிந்தவை அவரின் முற்பிறப்பு கர்மா காக்கிறது - ஆகவே நாம் என்ன செய்தும் ஒன்றும் ஆக போவதில்லை என்ற நிலைக்கு இந்த விளக்கம் இட்டு போகும்.

உதாரணதுக்கு பிராமணனை கொல்வது பெரிய கெட்ட கர்மாவை தரும், ஆனால் பிராமணன் குடியானவனை கொன்றால் அது பெரிய விசயம் இல்லை - அதை பாவ நிவர்த்தி செய்து விடலாம் என்ற கர்மா அடிப்படையிலான நம்பிக்கை.

இந்த நம்பிக்கை எத்தனை ஆயிரம் ஆண்டுளாக வருணாசிரம் அடிப்படையில் கீழ் தட்டில் இருந்தவர்கள் அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழாமல் தடுத்தது? அத்தனை திணிக்கப்பட்ட அவமானங்களையும், மனித குல விரோதங்களையும் தாங்கி கொண்டு அவர்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் இருக்க வைத்தது - “ இது எமது விதி, கர்மா” என்ற அவர்களின் நம்பிக்கையே.

அதே போல்,

சோழனும் பாண்டியனும் செய்த கொடுமைக்கான பலனைதான் இப்போ இலங்கையில் நீங்கள் அனுபவிக்கிறீகள் என எம்மை நம்ப வைத்து விட்டால் - நாம் நம்மை கொடுமை படுத்துபவர்களை விட்டு விட்டு, “விதியே” என ஒதுங்கி விடுவோம் அல்லவா?

ஆகவே ஒருவரும், குறிப்பாக அடக்கபடும் இனங்கள் ஒரு போதும் தமது அரசியலில் “கர்மா” வுக்கு இடம் கொடுக்க கூடாது.

பிகு

கர்மா என்ற கருத்தியலை காலில் போட்டு மிதித்த அம்பேத்கர் பிறந்த வாரத்தில் இதை எழுதுவது ஒரு வினோதமான தற்செயல் நிகழ்வு (interesting coincidence). ஆனால் இப்படி எழுதவேண்டும் என்பதுதான் கர்மா என்பார்கள் சிலர் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் செய்த கொலைகள்..... வெள்ளைவான் கொலைகள், லசந்தா..... ரவிராஜ்..... பல....

கோத்தா...... கெஜ்க் போவார் என்பது பலரது தீர்மானமான எதிர்பார்ப்பு....

கர்மாவோ..... (தமிழில்; தலையெழுத்து) நாட்டின் ஜனாதிபதி ஆக....

அவரது கர்மா.... படி.... செய்த பாவத்துக்கான தண்டணை, இனித்தான் அல்லது அடுத்த பிறப்பில்.....

எம்ஜியாருக்கு எதிராக கருணாநிதி அரசியலுக்கு தயாராக்கியது..... அவரது மூத்தமகன் முத்துவை....

முதல்வராகியது..... அடுத்த மகன் அழகிரி அல்ல...... மூன்றாவது மகன்....

பிரபாகரனுடன் தோழுக்கு தோழாக நின்று களத்தில் வெற்றிகளைக் குவிதத்தவர் கருணா.... இன்று..... இவரா... களத்தில் நின்றவர் என்று நிணைக்க வைக்கும் வாழ்வு முறை..... இவருடன் நின்றவர்கள் பலர் இல்லை..

ஆக..... கர்மா என்ற தலையெழுத்துடன்..... வெளாடாதீங்கப்பா.....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அவரது கர்மா.... படி.... செய்த பாவத்துக்கான தண்டணை, இனித்தான் அல்லது அடுத்த பிறப்பில்.....

அப்ப உந்த செஞ்சோலையில் கொல்லபட்ட குஞ்சு குருமன் எல்லாம், முந்தின பிறப்பில பண்டாரநாயக்க, சிறில், ஜே ஆர், காமினி, லலித், கிட்லர், ஸ்டாலின், போல்பொட் இப்படி கெட்ட ஆட்டம் போட்ட ஆட்களோ?

அப்ப அந்த குண்டுவீச்சு கர்மாவின் படிதான் நடந்திருக்கு?

அப்ப நாம் ஏன் தேவையில்லாமல் அதுக்காக இலங்கை அரசு மீது பழி போடுறம்?

17 minutes ago, Nathamuni said:

ஆக..... கர்மா என்ற தலையெழுத்துடன்..... வெளாடாதீங்கப்பா.....

பயம் - கர்மா/விதி போன்ற தத்துவங்களை பயன்படுத்தி அடக்க பட்டவர்களை மேலும் அடக்கி வைக்க பயன்படும் இன்னொரு கருவி.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அப்ப உந்த செஞ்சோலையில் கொல்லபட்ட குஞ்சு குருமன் எல்லாம், முந்தின பிறப்பில பண்டாரநாயக்க, சிறில், ஜே ஆர், காமினி, லலித், கிட்லர், ஸ்டாலின், போல்பொட் இப்படி கெட்ட ஆட்டம் போட்ட ஆட்களோ?

அப்ப அந்த குண்டுவீச்சு கர்மாவின் படிதான் நடந்திருக்கு?

அப்ப நாம் ஏன் தேவையில்லாமல் அதுக்காக இலங்கை அரசு மீது பழி போடுறம்?

பயம் - கர்மா/விதி போன்ற தத்துவங்களை பயன்படுத்தி அடக்க பட்டவர்களை மேலும் அடக்கி வைக்க பயன்படும் இன்னொரு கருவி.

ரணில் நாட்டின் ஜனாதிபதி ஆக தலையால கிடங்கு கிண்டி , மக்களால் தூக்கி வீசப்பட்ட பின்பும்... ஏதோ நமபிக்கையில் பின்கதவால் உள்ள பூந்ததும் கர்மா....

திரிக்குத் திரி...... நாதமுனியுடன் கும்மியடிக்க நாண்டுகொண்டு நிப்பதுகோசனின் கர்மா என்றால்.... கத்தியை தூக்கயபடி தயாராக இரூப்பது மட்டுகள் கர்மா... 😁

இப்ப நான் கர்மாபடி....நித்தா கொள்ளப் போறன்.... நாளை சந்திப்பம்....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

🤣 சந்திப்பம்.

ஒரு கர்மாவும் தேவையில்லை நாதம், creditkarma நல்லா இருந்தா காணும்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த நம்பிக்கை எத்தனை ஆயிரம் ஆண்டுளாக வருணாசிரம் அடிப்படையில் கீழ் தட்டில் இருந்தவர்கள் அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழாமல் தடுத்தது? அத்தனை திணிக்கப்பட்ட அவமானங்களையும், மனித குல விரோதங்களையும் தாங்கி கொண்டு அவர்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் இருக்க வைத்தது - “ இது எமது விதி, கர்மா” என்ற அவர்களின் நம்பிக்கையே.

👍

இந்திய கண்டுபிடிப்பு கர்மா எமது ஆட்களும் வெளிநாடுகளுக்கு வந்த பின்பும் காவி கொண்டு திரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

நான் ஒரு முறை பள்ளி போகும் போது 8 உடல்களை கண்டேன்😔.

ஆனால் இங்கே பதிவாளர் சொல்லவருவது “அதே இந்திய இராணுவத்தின் இன்றைய தளபதி” என்பதே என நான் நினைக்கிறேன்.

குறித்த அந்த செயலில் ஈடுபட்ட தளபதி இவர் என சொல்வதாக நான் நினைக்கவில்லை.

ஓமோம், சரிதான். இவர் அங்கு பங்கெடுக்கவில்லை. 
பதிவாளர் அப்படிப்பட்ட இந்தியப்படையின் கட்டளையாளர் என்றே சொல்லியிருக்கிறார். நாந்தான் தவறாக விளங்கிக்கொண்டேன். 👍

2 hours ago, goshan_che said:

https://en.m.wikipedia.org/wiki/Bipin_Rawat
 
Innocent People Killing Force இல் இவர் அங்கம் வகித்ததாக தெரியவில்லை. 1987 இல் சீனா உடன் ஏற்பட்ட எல்லை முறுகலில் இவர் பங்கெடுத்திருந்தாராம். @நன்னிச் சோழன்

👍 👍👍 

4 hours ago, Elugnajiru said:

சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 

செஞ்சாலும் செய்வாங்கள். இல்லாத புலிக்கு மேலை பழியைப் போடுவாங்கள். போட்டால் பெரிய கலவரம் ஏற்பட்டாலும் ஏற்படலாம், தமிழ்நாட்டில் உள்ள எம்மவர் மீது!

நினைச்சாலே பதறுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.