Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இது பிரிட்டனில் கூட இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே மதம் மாற்றப்பட்டனர், தாழ்தப்பட்டவர் மட்டுமே மிசனரி பாடசாலைகளால் பயன் அடைந்தார்கள் என்பது தவறு.

அங்கேயும் சாதீயம் இருந்தது என்பது மறுக்க முடியாது.

யாழ் இந்து, வைத்தீஸ்வரா, மகாஜனா, வேலணை மத்திய மகா வித்தியாலயம் போன்ற கல்விக்கூடங்களில் தாழ்த்தப்பட்டோரும் கல்வி பயின்றார்கள்.

இப்போது ஆட்சியில், பிரதமராக இருக்கும், மகிந்தவை சந்தித்த காரணமாக,ஆறுமுக நாவலரை ஒரேயடியாக போட்டுத் தாக்க முடியாது.

இன்று இலங்கையில் பாடசாலையில் மூன்று முதல் பன்னிரண்டு வரை, சைவ சமயக்கல்வி கற்பிக்கப் படுவதன் காரணம், நாவலர்.

இது தமிழக பாடசாலைகளில் இல்லை.

தவிர, நாவலர், யாழிலும், சிதம்பரத்திலும் சைவப் பிரகாச பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்த வழிவகை செய்தார். அவை இன்றும் நடக்கின்றது. அங்கே உயர் சாதியினர் மட்டுமே கற்க முடியும் என்று சொன்னதாக தெரியவில்லை.

ஆகவே, நாவலர், சைவசமயத்துக்கு மட்டுமல்ல, தமிழர்கள் கல்வி கற்கவும் பெரும் தொண்டாற்றி உள்ளார்.

ஆக, கிறிஸ்தவ மிசனரிகள் மட்டுமே தான் படிக்க வைத்தது, அறிவுக்கண் திறந்தது என்பது தவறு.

நாவலர் நன்மையானவற்றை செய்யவில்லையென்று யார் வாதிட்டது. ? ஒருவருமேயில்லை. ஆனால் அவரது பிற்போக்குத்தனங்களை வெள்ளையடிக்க முற்படுவதுதான் வாதத்திற்கு வருகிறது. 

கிறீத்தவ மிசனறிகள் திறந்த கண்களை ஆறுமுக நாவலரும் திறக்க முயற்சித்தார் என்பது சரியாக இருக்கலாம்.(அவரும் போட்டிக்காகத்தான் திறந்தார் என்பது உலகறிந்த உண்மை)

ஆனால் கிறீத்துவ மிசனரிகளின் வருகைக்கு முன்னர் ........? ☹️

  • Replies 191
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

நாவலர் நன்மையானவற்றை செய்யவில்லையென்று யார் வாதிட்டது. ? ஒருவருமேயில்லை. ஆனால் அவரது பிற்போக்குத்தனங்களை வெள்ளையடிக்க முற்படுவதுதான் வாதத்திற்கு வருகிறது. 

கிறீத்தவ மிசனறிகள் திறந்த கண்களை ஆறுமுக நாவலரும் திறக்க முயற்சித்தார் என்பது சரியாக இருக்கலாம்.(அவரும் போட்டிக்காகத்தான் திறந்தார் என்பது உலகறிந்த உண்மை)

ஆனால் கிறீத்துவ மிசனரிகளின் வருகைக்கு முன்னர் ........? ☹️

கிறிஸ்தவ மிசனரிமார் வருகைக்கு முன்னர், ஒல்லாந்தர், போர்த்துக்கேயர்கள்.....

மத சுதந்திரமும் இல்லை..... திண்னைப் படிப்பு..... குருகுலக்கல்வி முறை....

முக்கியமாக பெண்களுக்கு கல்வி அறவே இல்லை.

****

யாருக்குத் தெரியும், சாதியத்துக்கு அப்பால்... பிற மதம் மாறியவர்களை..... அவரது பார்வையில், தம்மை தாழ்த்திக் கொண்டோராக கருதியும் அவர் எழுதி இருக்கலாம்.

பத்தொன்பதாம் நூறாண்டுக் கருத்தை, இருபத்தொன்றாம் நூறாண்டில் அலசும் நம் அறிவும் மெச்சுதலுக்குரியது.
 
***
இது தான் சொல்லுறது.... எலும்பில்லாத நாக்கால எதையும் சொல்லிப்போட்டு.... நான் அப்படி சொல்லேல்ல.... அவர் பிழையா விளங்கீற்றார் எண்டு சொல்லலாம்.

ஆனால்.... எழுத்தில கொடுத்தால் சிக்கல், அதால தான்... கையைழுத்து போட முன்னம் பத்துத்தரம் வாசிக்க சொல்லி,புத்திமதி சொல்வார்கள், பெரியவர்கள்....

முகத்தாருக்கு தெரியவில்லை போல.... சிக்கிறம் எண்டு......

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆறுமுகநாவலர் நம்மாளு! அப்படீன்னா நான் அவருக்குத்தான் சப்போர்ட்டு!

ஆர்முக்நாவ்லர்ட்ட ஜயவேவா!👀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இங்கை சிலரின் மறைமுக கருத்து என்னவென்றால் தாழ்த்தப் பட்டவர்கள் என்று சொல்லப்படுவர்கள் தான் மதம் மாறினார்கள் என்ற மாதிரி உள்ளது.அது உண்மை என்றால்  பிழை யாருடையது.

மதத்தை மாற்றுபவர்கள் மதம் மாறுவதற்கான காரணம் மதம் மாற்றப் படுபவர்களின் மதம், அங்குள்ளவர்கள், அந்த சமூகம் சரியில்லை, அவை கூடாது என்றுதான் கூறுவார்கள்.

நீங்கள் தான் சுயதேடலில் ஈடுபடவேண்டும். 

20211219-140923.jpg

இந்த படம் எனது அலுவலக மேசையில் உள்ளது. 

ஓம் நமசிவாய

  • கருத்துக்கள உறவுகள்

****

பிறப்பால் எல்லாரும் சமன் என நினைப்பவன் மனிதன்.

பிறப்பால் ஏற்றத்தாழ்வு பாப்பவன் அயோக்கியன்.

ஒரு காலத்தில் அயோக்கியர்கள் அதிகம் இருந்தார்கள். காலம் போக பலருக்கு அது அயோக்கியத்தனம் என்பது விளங்கி விட்டது. ஆகவே இப்போ அயோக்கியர்களின் அளவு குறைவு.

இப்போ நேரடியாக சாதி பார்க்க முடியாது என்பதால் அதே அயோக்கியத்தனத்தை மதம், மொழி, இனம் என்ற போர்வையில் இருந்து நியாயப்படுத்த முயல்கிறார்கள்.

எமது எதிரியும் இதை பயன்படுத்த விழைகிறான்.

இந்த புரிதல் இருப்பதால் ஒரு நூற்றாண்டு மனிதர்களை இன்றைய விழுமியத்தால் மதிப்பிடல் ஆகாது என்பதை ஏற்கும் அதே சமயம்,

அயோக்கியத்தனம், அயோக்கியதனம்தான் என்பதையும் நான் சுட்டியே காட்டுகிறேன்.

தவிரவும் அதே காலத்தில் வாழ்ந்த ஏனைய அறிஞர்கள் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கபடுவதில்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளேன்.

பிகு

நான் ஒரு போதும் பெயர் பார்த்து எழுதுவதில்லை. அப்படி என்றால் என்ர பெயரின் அர்த்தம் தெரியும் தானே? 🤣.

ஜஸ்டின் என்ற பெயரில் ஒரு சைவனும், பெருமாள் என்ற பெயரில் ஒரு கிறீஸ்தவனும், நாதமுனி என்ற பெயரில் ஒரு இஸ்லாமியனும் இருக்கலாம்🤣.

கருத்தை மட்டுமே பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பன்னாடை வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்யும்? எதனை தன்னில் வைத்துள்ளதோ அவற்றை வைத்தே ஒப்பீடும் செய்யும்.

பன்னாடை கரெக்ட்டாத்தான் ஊத்தய பூரா வடிகட்டி இருக்கு.... கருணா,டக்ளஸ்,மகிந்தா,திமுக etc அப்புறம் நாவலர்.. ஆனால் அன்னத்திலதான் எனக்கு டவுட்டா இருக்கு.. நல்லாருக்கு நல்லாருக்குன்னு நாவலர் சொன்ன ஊத்தய பூரா உறிஞ்சு குடிக்குது.. அன்னமில்ல பன்னி போல இருக்கு..😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஜஸ்டின் என்ற பெயரில் ஒரு சைவனும், பெருமாள் என்ற பெயரில் ஒரு கிறீஸ்தவனும், நாதமுனி என்ற பெயரில் ஒரு இஸ்லாமியனும் இருக்கலாம்🤣.

கருத்தை மட்டுமே பார்ப்போம். 

அப்படி சொல்ல முடியாதே. கோசன் என்ற பெயரில் மதமே இல்லாதவர் எல்லோ என்று நினைத்தேனே....😜

தவிர எழுத்தில் தெரியும்... என்ன சொல்ல விழைகிறார்கள் என்று. அதனால் தான் தவிர்த்தேன். 

கோசன் சொல்லும், சொல்லிய விடயங்களை வைத்து, கோசன் குறித்து அறிவேனே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அப்படி சொல்ல முடியாதே. கோசன் என்ற பெயரில் மதமே இல்லாதவர் எல்லோ என்று நினைத்தேனே....

இது agnostic, atheist இடையான வித்தியாசம் விளங்காமையால் வரும் மயக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இது agnostic, atheist இடையான வித்தியாசம் விளங்காமையால் வரும் மயக்கம்.

சரி... இதுக்குள்ள... உங்கட தனித்தவிலை விட்டுப்போட்டு, சோதில கலப்போம்...

ஓணாண்டியார் என்னோவோ சொல்ல வாறார்... பாட்டுக்கு பொழிப்பு விளங்கவில்லை... உங்களுக்கு விளங்குதே?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சரி... இதுக்குள்ள... உங்கட தனித்தவிலை விட்டுப்போட்டு, சோதில கலப்போம்...

ஓணாண்டியார் என்னோவோ சொல்ல வாறார்... பாட்டுக்கு பொழிப்பு விளங்கவில்லை... உங்களுக்கு விளங்குதே?

தனி தவிலை நான் எங்க வாசிச்சனான்? நீங்கள் தவில் அடிக்குமோ எண்டு கேட்டியள் - அடிச்சி காட்டி இருக்கு🤣.

ஒணாண்டி சும்மா பெளந்து கட்டுறார். அவ்வளவும் பொருள்👊👊👊☠️.

#மாயாவி முத்திரை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இது பிரிட்டனில் கூட இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே மதம் மாற்றப்பட்டனர், தாழ்தப்பட்டவர் மட்டுமே மிசனரி பாடசாலைகளால் பயன் அடைந்தார்கள் என்பது தவறு.

அங்கேயும் சாதீயம் இருந்தது என்பது மறுக்க முடியாது.

யாழ் இந்து, வைத்தீஸ்வரா, மகாஜனா, வேலணை மத்திய மகா வித்தியாலயம் போன்ற கல்விக்கூடங்களில் தாழ்த்தப்பட்டோரும் கல்வி பயின்றார்கள்.

இப்போது ஆட்சியில், பிரதமராக இருக்கும், மகிந்தவை சந்தித்த காரணமாக,ஆறுமுக நாவலரை ஒரேயடியாக போட்டுத் தாக்க முடியாது.

இன்று இலங்கையில் பாடசாலையில் மூன்று முதல் பன்னிரண்டு வரை, சைவ சமயக்கல்வி கற்பிக்கப் படுவதன் காரணம், நாவலர்.

இது தமிழக பாடசாலைகளில் இல்லை.

தவிர, நாவலர், யாழிலும், சிதம்பரத்திலும் சைவப் பிரகாச பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்த வழிவகை செய்தார். அவை இன்றும் நடக்கின்றது. அங்கே உயர் சாதியினர் மட்டுமே கற்க முடியும் என்று சொன்னதாக தெரியவில்லை.

ஆகவே, நாவலர், சைவசமயத்துக்கு மட்டுமல்ல, தமிழர்கள் கல்வி கற்கவும் பெரும் தொண்டாற்றி உள்ளார்.

ஆக, கிறிஸ்தவ மிசனரிகள் மட்டுமே தான் படிக்க வைத்தது, அறிவுக்கண் திறந்தது என்பது தவறு.

😂 நான் உங்களுக்கு முன்னரே எழுதிய தரவுகளையாவது பார்க்கக் கூடாதா? யாரைப் பார்த்து இந்துக் கல்லூரி உட்பட்ட கல்விக் கூடங்கள் உருவாகின என்பது இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?

இங்கே நாவலரின் சாதிவாதத்தைக் கள்ள மௌனத்தொடு கடந்து போங்கள் என்போருக்கும் இந்துக் கல்லூரி உட்பட்ட கல்லூரிகளை நிறுவியோருக்குமிடையேயான வேறு பாடு, நிறுவியோர் சாதி, கல்வித் தொடர்பை கிறிஸ்தவ மிசனரிகள் தங்கள் மதம் பரப்பப் பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவைப் பெற்றனர். இங்கே கருத்தாடும் சிலருக்கு அந்தத் தெளிவும் இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாவலர் பெருமான் மது, மாமிசம் விலத்தி வைக்கப்பட வேண்டியன. சைவ அனுட்டானங்களை கடைப்பிடிப்பவர்கள் மது, மாமிசம் உட்கொள்பவர்களுடன் விலத்தி நிற்க வேண்டும் என காட்டமாக அறிவுறுத்துகின்றார். கோபம் வராதா பின்ன.  இந்த கொள்கையை எதிர்க்கத்தானே வேண்டும்.

அப்படி நீங்கள் சொல்கிற  இலங்கை ஹின்டூஸ் அனேகமாக இல்லை அப்படி தேடினால் சில எண்ணிக்கையில் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

😂 நான் உங்களுக்கு முன்னரே எழுதிய தரவுகளையாவது பார்க்கக் கூடாதா? யாரைப் பார்த்து இந்துக் கல்லூரி உட்பட்ட கல்விக் கூடங்கள் உருவாகின என்பது இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?

இங்கே நாவலரின் சாதிவாதத்தைக் கள்ள மௌனத்தொடு கடந்து போங்கள் என்போருக்கும் இந்துக் கல்லூரி உட்பட்ட கல்லூரிகளை நிறுவியோருக்குமிடையேயான வேறு பாடு, நிறுவியோர் சாதி, கல்வித் தொடர்பை கிறிஸ்தவ மிசனரிகள் தங்கள் மதம் பரப்பப் பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவைப் பெற்றனர். இங்கே கருத்தாடும் சிலருக்கு அந்தத் தெளிவும் இல்லை! 

நல்ல தெளிவாக இருக்கிறோம் அய்யா...

இங்கே நாம் சாதியம் குறித்து பேசினால், நீங்கள் மதவாதம் குறித்து பேச முனைகிறீர்கள்.

நீங்கள் மதவாதத்துக்குள் போனால், விவாதம், கிறிஸ்தவமா, சைவமா என்று வேறு விதமாக திரும்பும் அல்லவா?

புரிகிறதா, ஏன் தவிர்க்கிறேன் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சிலர் ஆறுமுகநாவலர் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரைக்கும் உள்ள தவறுகளை மட்டும் தூக்கிப்பிடித்து குளிர்காய்கின்றனர்.

ஆறுமுகநாவலர் எப்படிப்பட்ட அறிவாளி என்பது மேற்குலகிற்கு நன்கு தெரியும்.

பைபிளை மொழி பெயர்த்து அதில் மிக மிக தூய்மையான தமிழ் சொற்களை உருவாக்கியவர் ஆறுமுகநாவலர்.சைவசமயத்தில் கூட அந்த மேன்மைச்சொற்கள் பாவிக்கப்படுவதில்லை. எவ்வளவு அமைதியான வார்தைகளும் வசனங்களும் தமிழ் பைபிளில் அமைந்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது போக ஆறுமுக நாவலர் யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி கற்று.. யாழ் இந்துக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளை உருவாக்க உதவியவர். ஆறுமுக நாவலரோடு படிச்சவை எல்லாம் வெள்ளத்துரைமாருக்கு சேவகம் செய்ய.. ஆறுமுக நாவலர் தான்.. தமிழுக்கும்.. சைவத்துக்கும் சேவை செய்யவும் ஆரம்பித்தார். அதுவே ஒரு புரட்சிகர சிந்தனை தான்.. அன்றைய சூழலில். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நல்ல தெளிவாக இருக்கிறோம் அய்யா...

இங்கே நாம் சாதியம் குறித்து பேசினால், நீங்கள் மதவாதம் குறித்து பேச முனைகிறீர்கள்.

நீங்கள் மதவாதத்துக்குள் போனால், விவாதம், கிறிஸ்தவமா, சைவமா என்று வேறு விதமாக திரும்பும் அல்லவா?

புரிகிறதா, ஏன் தவிர்க்கிறேன் என்று.

 மதமாற்றம் ஏன் தமிழரிடையே கொஞ்சமாவது பரவியது என்பதற்கான காரணத்தை (சாதி) சொன்னால் அது மதவாதமாகி விடும்! ஆனால் கள்ள மௌனத்தோடு கடந்து போனால் அது தெளிவாகி விடும்!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

அது போக ஆறுமுக நாவலர் யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி கற்று.. யாழ் இந்துக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளை உருவாக்க உதவியவர். ஆறுமுக நாவலரோடு படிச்சவை எல்லாம் வெள்ளத்துரைமாருக்கு சேவகம் செய்ய.. ஆறுமுக நாவலர் தான்.. தமிழுக்கும்.. சைவத்துக்கும் சேவை செய்யவும் ஆரம்பித்தார். அதுவே ஒரு புரட்சிகர சிந்தனை தான்.. அன்றைய சூழலில். 

இதை மறுக்கவில்லை...புரட்சிகர சிந்தனையை கொஞ்சம் சாதி விடயத்திலும் காட்டியிருந்தால் இன்று போற்றியிருக்கலாம்! படித்த பிறகும் "சாதி பார்" என்று அட்வைஸ் கொடுத்ததால் அவர் வரலாற்றில் ஒரு சிறு மாசு..அவ்வளவு தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, Justin said:

இதை மறுக்கவில்லை...புரட்சிகர சிந்தனையை கொஞ்சம் சாதி விடயத்திலும் காட்டியிருந்தால் இன்று போற்றியிருக்கலாம்! படித்த பிறகும் "சாதி பார்" என்று அட்வைஸ் கொடுத்ததால் அவர் வரலாற்றில் ஒரு சிறு மாசு..அவ்வளவு தான்!

இவ்வுலகில் நூறு வீதம் சரியாக நடந்த மனிதரை அடையாளம் காட்டுங்கள். அதன் பின் ஆறுமுகநாவலரை விமர்ச்சிக்கலாம்.

ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ மதத்திற்கு விசுவாசியாக இருந்த சைவர். எதிரியாகினும் நன்றியுணர்வு ஒரு மனிதனுக்குஅதி முக்கியம்.நோர்மலாக பார்க்கப்போனால்  அவர் ஒரு சைவ துரோகி...😂

மதத்தை விட அவர் தமிழுக்கு பங்காற்றிய செயல்கள் அதிகம்.

மாம்பழம் சுவை என்பதற்காக அதன் கொட்டையையும் விழுங்க முயற்சிக்காதீர்கள்.

ஆறுமுகநாவலர் சொல்லித்தான் சாதிப்பிரச்சனை தொடர்கின்றது என்றை மாயத்தை உருவாக்காதீகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 மதமாற்றம் ஏன் தமிழரிடையே கொஞ்சமாவது பரவியது என்பதற்கான காரணத்தை (சாதி) சொன்னால் அது மதவாதமாகி விடும்! ஆனால் கள்ள மௌனத்தோடு கடந்து போனால் அது தெளிவாகி விடும்!

மதம் மாற்ற, பைபிளை தமிழாக்கம் செய்வித்த பாதர், பீற்றர் பேர்சிவல் அவர்கள் குறித்து கண்டன கருத்து வைத்தால, நீங்கள் எப்படி உணர்வீர்களோ, அதே போலவே, நாவலர் மீதான உங்கள் கருத்தும் அடுத்தவர்களுக்கு இருக்கும், என்பதனை புரிந்து, நகர்க.

நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மதம் மாற்ற, பைபிளை தமிழாக்கம் செய்வித்த பாதர், பீற்றர் பேர்சிவல் அவர்கள் குறித்து கண்டன கருத்து வைத்தால, நீங்கள் எப்படி உணர்வீர்களோ, அதே போலவே, நாவலர் மீதான உங்கள் கருத்தும் அடுத்தவர்களுக்கு இருக்கும், என்பதனை புரிந்து, நகர்க.

நன்றி....

நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறீர்களோ தெரியாது! 

ஆனால், பீற்றர் பேர்சிவல் சாதி பார்த்திருந்தால் நான் அவரைக் குற்றஞ் சொல்லாமல் கடந்து போகும் படி கேட்க மாட்டேன். மதம் "மாற்றுவது" என்பதே தவறான சொல்லாடல் , என்ன தலையில் துவக்கை வைத்தா மாற்றுகிறார்கள்? அப்படி மாறும் ஒருவரால் சமூகத்தில் என்ன துன்பம் நிகழ்கிறது?  

எனவே பீற்றரை சாதி ஒதுக்கல் செய்த நாவலரோடு ஓப்பிடுவதே அபத்தம்! ஆனால் கடந்து போங்கள்!

11 minutes ago, குமாரசாமி said:

இவ்வுலகில் நூறு வீதம் சரியாக நடந்த மனிதரை அடையாளம் காட்டுங்கள். அதன் பின் ஆறுமுகநாவலரை விமர்ச்சிக்கலாம்.

ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ மதத்திற்கு விசுவாசியாக இருந்த சைவர். எதிரியாகினும் நன்றியுணர்வு ஒரு மனிதனுக்குஅதி முக்கியம்.நோர்மலாக பார்க்கப்போனால்  அவர் ஒரு சைவ துரோகி...😂

மதத்தை விட அவர் தமிழுக்கு பங்காற்றிய செயல்கள் அதிகம்.

மாம்பழம் சுவை என்பதற்காக அதன் கொட்டையையும் விழுங்க முயற்சிக்காதீர்கள்.

ஆறுமுகநாவலர் சொல்லித்தான் சாதிப்பிரச்சனை தொடர்கின்றது என்றை மாயத்தை உருவாக்காதீகள்.

மிகச்சரியான சில கருத்துகள், ஆனால் சொல்ல வேண்டியது எனக்கல்ல! - மாம்பழத்தை விபரிக்கும் போது அதில் இருக்கும் கொட்டை, புழுத்துளை என்பன சேர்த்தே விபரிக்குமாறு இங்கே "வெள்ளையடிக்க" முயலும் ஆட்களுக்குத் தான் நீங்கள் சொல்ல வேண்டும்!

ஆனால் அந்தக் கடைசி வசனம் நான் சொன்னதல்ல! நான் சொன்னதாக நாதம் சொல்லி என்னை நோக்கி யாரையோ "உசாக்" காட்டி விடும் வேலை!😅

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

அது போக ஆறுமுக நாவலர் யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி கற்று.. யாழ் இந்துக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளை உருவாக்க உதவியவர். ஆறுமுக நாவலரோடு படிச்சவை எல்லாம் வெள்ளத்துரைமாருக்கு சேவகம் செய்ய.. ஆறுமுக நாவலர் தான்.. தமிழுக்கும்.. சைவத்துக்கும் சேவை செய்யவும் ஆரம்பித்தார். அதுவே ஒரு புரட்சிகர சிந்தனை தான்.. அன்றைய சூழலில். 

நாகரீகமாக சொல்லப்போனால் நல்ல சாப்பாடு சாப்பிட அவர்களுக்கு தெரிவதில்லை. எப்போதும் கழிவுகளையும் மலங்களையும் நுகர்வதிலேயே நாட்டம் உள்ளவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

மாம்பழம் சுவை என்பதற்காக அதன் கொட்டையையும் விழுங்க முயற்சிக்காதீர்கள்.

இததானே அண்ணை அப்ப இருந்து சொல்லுறம்.

ஆறுமுகநாவலர் நல்ல சுவையான மாம்பழம்தான். 

ஆனால் அதனுள்ளே சாதியம் என்ற கொட்டையும் இருக்கிறது.

மாம்பழம் என்றால் என்ன என தெரியாத அடுத்த சந்ததிகளுக்கு கொட்டையை பற்றி ஒன்றும் சொல்லாமல் இது நல்ல பழம் அப்படியே கடிச்சு சாப்பிடு எண்டு சொல்லிவிட்டால்?

கொட்டையோட கடிச்சு பல்லெல்லாம் உடைஞ்செல்லே போகும்?

இதனால் முன்பு சாத்தானுக்கு சொன்னது போல் தனி வாழ்வில் சிலரின் கறுத்த பக்கங்களை கடந்து போவது போல் பொதுவாழ்வில் கடந்து போக முடியாது.

யாழில் நாவலரின் நல்லது பேசப்படும் போதெல்லாம் கெட்டதும் பேசப்படுவது இதனால்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

இததானே அண்ணை அப்ப இருந்து சொல்லுறம்.

ஆறுமுகநாவலர் நல்ல சுவையான மாம்பழம்தான். 

ஆனால் அதனுள்ளே சாதியம் என்ற கொட்டையும் இருக்கிறது.

மாம்பழம் என்றால் என்ன என தெரியாத அடுத்த சந்ததிகளுக்கு கொட்டையை பற்றி ஒன்றும் சொல்லாமல் இது நல்ல பழம் அப்படியே கடிச்சு சாப்பிடு எண்டு சொல்லிவிட்டால்?

கொட்டையோட கடிச்சு பல்லெல்லாம் உடைஞ்செல்லே போகும்?

இதனால் முன்பு சாத்தானுக்கு சொன்னது போல் தனி வாழ்வில் சிலரின் கறுத்த பக்கங்களை கடந்து போவது போல் பொதுவாழ்வில் கடந்து போக முடியாது.

யாழில் நாவலரின் நல்லது பேசப்படும் போதெல்லாம் கெட்டதும் பேசப்படுவது இதனால்தான்.

நல்லது கெட்டது சொல்லதில் தவறில்லை.
ஆனால்....
யாழ்களத்தில் ஆறுமுகநாவலர் சாதியையை முன்னிலைப்படுத்தினார் என்பதை மட்டுமே  பகிரப்படுகின்றது.

ஆறுமுகநாவலர் செய்த நற்பணிகள் பற்றிய பல திரிகள் உண்டு. ஏன் ஆறுமுகநாவலர் என்ற ஒரு திரியும்  யாழ்களத்தில் உண்டு. ஈழப்போர் சந்தர்ப்பங்களில்  அதில் வரும் கருத்துக்களையும்,அந்த உறவையும் திட்டியவன் நான். அதற்காக இன்று அந்த உறவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன்.

ஒரு சில மூக்கர்களுக்காக ஆறுமுகநாவலர் மீண்டும் பிறக்க வேண்டும் என  வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

1) யாருக்குத் தெரியும், சாதியத்துக்கு அப்பால்... பிற மதம் மாறியவர்களை..... அவரது பார்வையில், தம்மை தாழ்த்திக் கொண்டோராக கருதியும் அவர் எழுதி இருக்கலாம்.

2) பத்தொன்பதாம் நூறாண்டுக் கருத்தை, இருபத்தொன்றாம் நூறாண்டில் அலசும் நம் அறிவும் மெச்சுதலுக்குரியது.
 
***
3) இது தான் சொல்லுறது.... எலும்பில்லாத நாக்கால எதையும் சொல்லிப்போட்டு.... நான் அப்படி சொல்லேல்ல.... அவர் பிழையா விளங்கீற்றார் எண்டு சொல்லலாம்.

4) ஆனால்.... எழுத்தில கொடுத்தால் சிக்கல், அதால தான்... கையைழுத்து போட முன்னம் பத்துத்தரம் வாசிக்க சொல்லி,புத்திமதி சொல்வார்கள், பெரியவர்கள்....

முகத்தாருக்கு தெரியவில்லை போல.... சிக்கிறம் எண்டு......

1) தன்னுடைய சொந்த சைவ சமயத்தைப் பின்பற்றுபவன் சமயம் மாறுவதை விட இழி சாதியாயும் கல்வியறிவற்றவனாயும்  இருப்பது மேல் என நாவலர் கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது (உங்கள் கூற்றின் அடிப்படையில்)

2) வளர்ச்சி என்பது பழையனவற்றை மீளாய்வு செய்வதிலேதான் ஆரம்பமாகிறது. இது தாங்கள் அறியாததல்ல.

3) ஐயோ தலை சுத்துதே

4) 🧐

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மதம் மாற்ற, பைபிளை தமிழாக்கம் செய்வித்த பாதர், பீற்றர் பேர்சிவல் அவர்கள் குறித்து கண்டன கருத்து வைத்தால, நீங்கள் எப்படி உணர்வீர்களோ, அதே போலவே, நாவலர் மீதான உங்கள் கருத்தும் அடுத்தவர்களுக்கு இருக்கும், என்பதனை புரிந்து, நகர்க.

நன்றி....

வேறொரு கண்டத்திலிருந்து வந்த முகம் தெரியாத மனிதர்களின் பேச்சையும் செயல்களையும் பார்த்து சமயம் மாறும் நிலையில் மக்களை வைத்திருந்தார்களென்றால், நிச்சயமாக அது பாதிரியார்களின் தவறல்ல. 

இன்னொன்று,

கிறீத்துவ பாதிரியார்கள் இலங்கைக்கு வந்திருக்காவிட்டால் எம் மக்களின் நிலை ....? 

நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. ☹️

4 hours ago, Nathamuni said:

மதம் மாற்ற, பைபிளை தமிழாக்கம் செய்வித்த பாதர், பீற்றர் பேர்சிவல் அவர்கள் குறித்து கண்டன கருத்து வைத்தால, நீங்கள் எப்படி உணர்வீர்களோ, அதே போலவே, நாவலர் மீதான உங்கள் கருத்தும் அடுத்தவர்களுக்கு இருக்கும், என்பதனை புரிந்து, நகர்க.

நன்றி....

பாதிரியார்கள் பிழை விடவில்லையென்று யார் வாதிட்டது? 

நிச்சயமாக அவர்களும் தவறிழைத்திருப்பார்கள். இதனை கூறுவதற்கு வெட்கப்படவேண்டியதில்லை.

தவறுகள் எப்போதும் தவறுகளே. 

தவறுகளை ஏற்றுக்கொள்வதே சரியானவற்றை செய்வதற்கான முதற்படி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.