Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

எனக்கு திராவிடத்தில் காழ்ப்புணர்வு இல்லை. ஆனால் திராவிடம் தனது கொள்கையில் ஏதாவது சாதித்ததா? திராவிடம் எனும் பெயரில் மக்களை ஏமாற்றுவதையே வெறுக்கின்றேன்.
திராவிடத்தின் பெயரில் தமிழ்வாழ்த்து படிக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கே தமிழினம் என்ற  பேசு பொருள் ஏன் மறைக்கப்படுகின்றது?

தமிழினத்திற்கு ஏன் திராவிடம் என்ற மறைமுக பெயர்?
கேரளம்
தெலுங்கு
கன்னடம்
குஜாரத்தி

என்று இருக்கும் போது தமிழினத்திற்கு மட்டும் ஏன் திராவிடம்?

ஏமாற்று வேலையில்லையே? தமிழரை அடையாளம் செய்ய அப்படியே காலங்காலமாக வந்த பெயரென்று மேலே பெருமாள் கால்ட்வெல்லின் மேற்கோளை இணைத்திருந்தாரே? மேலே நீங்கள் சுட்டிய திராவிட குடும்ப மொழியினரை அழைப்பது போல தமிழர் என்று அழைக்கவும் செய்கிறார்களே? 

நான் சொல்வது நீங்கள் உள்ளே இருப்பதை விட லேபிளில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். திராவிடன் என்று சொல்லிக் கொள்பவன் தமிழுக்கு ஏதாவது நன்மை செய்தால் அதைத் திராவிடன் என்பதால் எதிர்ப்பது தான் இந்த திரி இவ்வளவு நீளக் காரணம். இல்லையேல், நல்லது என்று விட்டுப் போயிருப்பர்!

  • Replies 91
  • Views 11.4k
  • Created
  • Last Reply
5 minutes ago, Justin said:

ஏமாற்று வேலையில்லையே? தமிழரை அடையாளம் செய்ய அப்படியே காலங்காலமாக வந்த பெயரென்று மேலே பெருமாள் கால்ட்வெல்லின் மேற்கோளை இணைத்திருந்தாரே? மேலே நீங்கள் சுட்டிய திராவிட குடும்ப மொழியினரை அழைப்பது போல தமிழர் என்று அழைக்கவும் செய்கிறார்களே? 

நான் சொல்வது நீங்கள் உள்ளே இருப்பதை விட லேபிளில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். திராவிடன் என்று சொல்லிக் கொள்பவன் தமிழுக்கு ஏதாவது நன்மை செய்தால் அதைத் திராவிடன் என்பதால் எதிர்ப்பது தான் இந்த திரி இவ்வளவு நீளக் காரணம். இல்லையேல், நல்லது என்று விட்டுப் போயிருப்பர்!

பெரும்பாலான தமிழ் மக்கள் ஒன்றும் இந்த திராவிடன் தமிழர் என்று இனவெறி பேசுவதில்லை.  ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகளும் புலம் பெயர் நாடுகளில் உள்ள சில குழுவினரும் தான் இப்படி இணையத்தில் fake பதிவுகளை போட்டு குழப்பியடிக்கின்றனர். தமது பொய்செய்திகள் அம்பலமானாலும் எந்த வெட்கமும் இன்றி புதிய பொய் செய்திகளை பரப்பி உளறிக்க்கொட்டுவர்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Justin said:

ஏமாற்று வேலையில்லையே? தமிழரை அடையாளம் செய்ய அப்படியே காலங்காலமாக வந்த பெயரென்று மேலே பெருமாள் கால்ட்வெல்லின் மேற்கோளை இணைத்திருந்தாரே? மேலே நீங்கள் சுட்டிய திராவிட குடும்ப மொழியினரை அழைப்பது போல தமிழர் என்று அழைக்கவும் செய்கிறார்களே? 

நான் சொல்வது நீங்கள் உள்ளே இருப்பதை விட லேபிளில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். திராவிடன் என்று சொல்லிக் கொள்பவன் தமிழுக்கு ஏதாவது நன்மை செய்தால் அதைத் திராவிடன் என்பதால் எதிர்ப்பது தான் இந்த திரி இவ்வளவு நீளக் காரணம். இல்லையேல், நல்லது என்று விட்டுப் போயிருப்பர்!

எனது கேள்வி தமிழினம் என்று ஒன்று இருக்க ஏன் திராவிடம் ?
நீங்கள் தமிழன் தமிழினம்
நான் தமிழன் தமிழினம்
இங்கே ஏன் திராவிடம்? 

1 minute ago, tulpen said:

பெரும்பாலான தமிழ் மக்கள் ஒன்றும் இந்த திராவிடன் தமிழர் என்று இனவெறி பேசுவதில்லை.  ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகளும் புலம் பெயர் நாடுகளில் உள்ள சில குழுவினரும் தான் இப்படி இணையத்தில் fake பதிவுகளை போட்டு குழப்பியடிக்கின்றனர். தமது பொய்செய்திகள் அம்பலமானாலும் எந்த வெட்கமும் இன்றி புதிய பொய் செய்திகளை பரப்பி உளறிக்க்கொட்டுவர்.  

இங்கே நாகரீகமாகத்தான் உரையாடல் போய்க்கொண்டிருக்கின்றது. விசிலடிச்சான் குஞ்சுகள் வார்த்தையை நடுநிலைவாதிகள் உபயோகித்தால் நாங்களும்  உங்கள்  வழியில் தொடர்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அதிகமாக எடை போட்டுக் கொள்கிறீர்கள் போல இந்த திரியை😂. நீங்க கேள்வி கேட்டீர்கள், கோசானும், ருல்பெனும் ஒரு மூன்று தடவை பதில் சொன்னார்கள் - தவிர ஒரிஜினல் செய்தியான முதல் பதிவிலேயே பதில் இருக்கு! 

எப்பவாவது குழப்பம் வரும் போது go back to the basics என்பார்கள்! பதில் செய்தியிலேயே இருக்கு!

அப்படியா விடயம் அவர்கள் பதில் போட்டு இருந்தால்  பதில் போட்ட பகுதியை குவாட் பண்ணி  இங்கு போடுங்கள் பார்க்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

பெரும்பாலான தமிழ் மக்கள் ஒன்றும் இந்த திராவிடன் தமிழர் என்று இனவெறி பேசுவதில்லை.  ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகளும் புலம் பெயர் நாடுகளில் உள்ள சில குழுவினரும் தான் இப்படி இணையத்தில் fake பதிவுகளை போட்டு குழப்பியடிக்கின்றனர். தமது பொய்செய்திகள் அம்பலமானாலும் எந்த வெட்கமும் இன்றி புதிய பொய் செய்திகளை பரப்பி உளறிக்க்கொட்டுவர்.  

உங்களைப்போல் இருக்க ஆசைதான் ஆனால் ஆரம்பத்தில் இருந்து இப்படியான கருத்துக்களை திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் சிந்திப்பது கூட எந்த மாற்றமும் இன்றி ஒரே லைனாக்கும் 😃 யாழில் பொய்யான தரவுகளை தூக்கி போடக்கூடாது கீழே உள்ளது போல் 1000 யிரம் இணைப்பு தரலாம் சேர்வர் தாங்காது படித்து தெளிந்து கொள்ளுங்க காரணம் காரணம்  எங்கள் எதிர்கால சந்ததி தெரிந்து கொள்ளணும் இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா ?🤣

https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/jan/19/தமிழர்களின்-வாழ்த்து-தட்டிகளை-கிழித்த--கன்னட-அமைப்பினர்-2847041.html

தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல்: கன்னட அமைப்புகளுக்கு பாரதிராஜா கண்டனம்

https://www.hindutamil.in/news/tamilnadu/200783--~XPageIDX~.html

கட்டாய தமிழ் விதியை கண்டித்து தெலுங்கு மாணவர்கள் போராட்டம் | என்டிவி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அப்படியா விடயம் அவர்கள் பதில் போட்டு இருந்தால்  பதில் போட்ட பகுதியை குவாட் பண்ணி  இங்கு போடுங்கள் பார்க்கலாம் .

ஒரு கேள்விக்கு பதிலை:

1. மூன்று பேர் ஒரு தரம் சொன்னாலும்
2. ஒருவர் மூன்று தரம் சொன்னாலும்

பெருமாளுக்கு பதில் போய்ச்சேரவில்லையென்றால், நிச்சயம் ஏனையோரில் தான் ஏதோ பிரச்சினை! 😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

ஒரு கேள்விக்கு பதிலை:

1. மூன்று பேர் ஒரு தரம் சொன்னாலும்
2. ஒருவர் மூன்று தரம் சொன்னாலும்

பெருமாளுக்கு பதில் போய்ச்சேரவில்லையென்றால், நிச்சயம் ஏனையோரில் தான் ஏதோ பிரச்சினை! 😎

பதிலே சொல்லாமல் சொன்னது சொன்னது என்று பொய்களை சொல்லுவதில் வல்லவர் நடத்துங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி தமிழினம் என்று ஒன்று இருக்க ஏன் திராவிடம் ?
நீங்கள் தமிழன் தமிழினம்
நான் தமிழன் தமிழினம்
இங்கே ஏன் திராவிடம்? 

இங்கே நாகரீகமாகத்தான் உரையாடல் போய்க்கொண்டிருக்கின்றது. விசிலடிச்சான் குஞ்சுகள் வார்த்தையை நடுநிலைவாதிகள் உபயோகித்தால் நாங்களும்  உங்கள்  வழியில் தொடர்வோம்.

1. திராவிடம் என்ற அடையாளத்தை விரும்பாதோர் தமிழ் என்று சொல்லிக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லையென நினைக்கிறேன் (சிறிலங்கன் என்ற அடையாளம் விரும்பாதோர் ஈழத்தவர் என்று சொல்லிக் கொள்வது போல). ஆனால், ஒரு ஆய்வு நோக்கிற்காக தென்னிந்தியாவை விபரித்த ஒருவர் பாவித்த திராவிடர் என்ற சொல் பழைமையான திராவிட ஊற்று மொழியான தமிழைப் பேசுவோரைக் குறிக்கத் தங்கி விட்டது. ஊரில் நாம் பற்பசையை கடையில் "சிக்னல்" என்று கேட்டு வாங்கிப் பழகி, பற்பசை என்றால் சிக்னல்  என்று ஆகி விட்டது மாதிரியான ஒரு வழக்கு நிலை இது. 

2. திராவிடம் என்ற சொல் ஏன் இப்போது தமிழ்நாட்டிலும், புலத்திலும் சூடேற்றும் சொல்லாக இருக்கிறது? என் அபிப்பிராயம் இந்த திராவிட எதிர்ப்பு அங்குள்ள சில அரசியலாளர்களுக்கு ஆள்சேர்க்கும் ஜனத்திரள் வாத (populist) உபகரணமாக மாறி விட்டது. இந்த திராவிட எதிர்ப்பின் இலக்குகளாக அண்டைய மாநிலங்களை விட தமிழ் நாட்டுக்குள்ளேயே வாழும் கன்னட, தெலுங்கு, மலையாள அடி கொண்ட மக்கள் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். தமிழ் நாடு தனி தேசமல்ல, இந்தியாவின் ஒரு பகுதி தான். எனவே புதிதாகவும் தமிழரல்லாதோர் வந்து வசிக்க முடியும். அப்படி வருகிற ஏனைய திராவிட இன மக்களும் கூட இந்த திராவிட எதிர்ப்பின் இலக்குகளாக இருப்பர். 

3. திராவிட எதிர்ப்பை அல்லது பாசத்தை தமிழ் நாட்டு மக்கள்   தேர்தல் வாக்குகள் மூலம் வெளிக்காட்டுவர் (காட்டியிருக்கின்றனர் என்றும் சொல்லலாம்). ஈழத்தமிழரைப் பொறுத்த வரை, திராவிட எதிர்ப்பு என்பது தேவையில்லாத ஆணி மட்டுமல்ல, (கோசானின் பாணியில் சொன்னால்) சொந்த செலவில் சூனியமும் கூட! எப்படித் தான் குத்தி முறிந்தாலும் ஏனைய திராவிட மொழி அடி கொண்ட மக்களின் வாக்குகளை திராவிட வெறுப்பால் வென்று தமிழ் நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது! எனவே, தான் தமிழ் நாட்டின் வெகுஜன ஆதரவை இந்த தேவையற்ற திராவிட எதிர்ப்பு ஆணியால் நாம் குறுக்கிக் கொள்கிறோம் என நான் நினைக்கிறேன்.

அம்புட்டு தான் இந்த திரியில் என்னால் முடியும்! 😅      

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி தமிழினம் என்று ஒன்று இருக்க ஏன் திராவிடம் ?
நீங்கள் தமிழன் தமிழினம்
நான் தமிழன் தமிழினம்
இங்கே ஏன் திராவிடம்? 

இங்கே நாகரீகமாகத்தான் உரையாடல் போய்க்கொண்டிருக்கின்றது. விசிலடிச்சான் குஞ்சுகள் வார்த்தையை நடுநிலைவாதிகள் உபயோகித்தால் நாங்களும்  உங்கள்  வழியில் தொடர்வோம்.

தமிழ் தேசியம் பேசுவோரை விசிலடித்தான் குஞ்சுகளென்றுதான் கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றன. அவர்களின் டிசைன் அப்படி!!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

இதை நீங்கள் தமிழராகச் சொல்கிறீர்கள். நீக்கப் பட்ட அந்தப் பகுதி ஏனைய திராவிட மொழிகளைப் பேசுவோரைக் குறைவாகக் காட்டுமா என அவர்கள் நிலையிலிருந்து யோசிக்க வேண்டியது அரச அமைப்பின் கடமை. அப்படி அவர்கள் நினைத்தால் பாடலைத் தடை செய்ய வழக்கு போடுதல் போன்ற முயற்சிகள் எடுத்து இதை தேவையற்ற சர்க்கசாக மாற்றி விடலாம் என்று ஆலோசனை கொடுக்கப் பட்டிருக்கும். இதையே தவிர்த்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஒரு அரச அமைப்பு இப்படித் தான் சிந்திக்க வேண்டும். (இணையப் போராளிகள் எப்படியும் சிந்திக்கலாம், அங்கே செயல் எதிர்பார்க்கப் படுவதில்லை!)

கலைஞர் மீதான அவநம்பிக்கை தான் சந்தேகப்பட வைக்கிறது.

21 hours ago, goshan_che said:

ஏராளன்,

நாம் அதை அப்படி எண்ணலாம் ஆனால் அவர்கள் அப்படி நினைக்க வேண்டும் அல்லவா?

மற்றைய மூன்று மொழி மாநிலங்களும் தாம் தமிழின் பிள்ளைகள் என்பதை ஏற்க மறுப்பவர்கள்.

தவிர இது மொழி வழி ஆராய்சி நிறுவுதல் கடினம்.

முன்னர் யாழில் proto-dravidian, proto-tamil என நாம் பலர் புடுங்கு பட்டது நினைவிருக்கலாம்.

அத்தோடு தமிழை செம்மொழி என அறிவித்த கையோடு, காரணமே இல்லாமல் ஆந்திராவும், கர்னாடகாவும் தாமும் அப்படியே என ஒன்றிய அரசை நெருக்கி அந்த அந்தஸ்தை பெற்றமையும் தெரியும்தானே.

ஆகவே நிச்சயம் தமிழ் நாட்டின் ஒரு உத்யோகபூர்வ பாடலில், 

சமஸ்கிருதம் செத்து விட்டது, தமிழ் அப்படி அல்ல.

தெலுங்கு, கன்னடம், மலையாளத்யின் தாய்மொழி தமிழ்தான் என சொல்வது சர்ச்சையை உண்டாக்கும்.

அதை தவிர்க இப்படி செய்திருக்கலாம்.

மற்ற மொழியினர் தமிழை தாய் மொழியாக ஏற்கவில்லை என்பது உண்மை தான், ஆனால் தமிழர்கள் தம் தாய்நிலத்தில் தம் மொழிப் பெருமை பேச என்ன தடை?! அங்கே உடனிருந்து வீழ்த்தும் சூழ்ச்சி இருப்பதாக சந்தேகம் வரும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

கலைஞர் மீதான அவநம்பிக்கை தான் சந்தேகப்பட வைக்கிறது.

மற்ற மொழியினர் தமிழை தாய் மொழியாக ஏற்கவில்லை என்பது உண்மை தான், ஆனால் தமிழர்கள் தம் தாய்நிலத்தில் தம் மொழிப் பெருமை பேச என்ன தடை?! அங்கே உடனிருந்து வீழ்த்தும் சூழ்ச்சி இருப்பதாக சந்தேகம் வரும் தானே?

உங்களதும், பெருமாள் மற்றும் பேராசிரியர் அனைவரது சந்தேகமும் நியாயமானதே.

ஆனால் ஒரு தமிழனாக நான் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் இந்த வரிகளை நீக்கி விட்டுத்தான் சேர்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனென்றால் அவை நீக்கப்பட சொல்லபட்ட காரணங்கள் வலுவானவையாக உள்ளன. எனது பார்வையில்.

பேசாமல் தமிழர் பேரியக்கம் சொல்வது போல பாரதிதாசன் பாடல் ஒன்றை திருத்தாமல் போடலாம்.

என்னை பொறுத்தவரை 👇 பாரதியின் இந்த பாடலை விஞ்சிய ஒரு தமிழ் மொழி வாழ்த்து இருக்க முடியாது.

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

எங்கள் தமிழ்மொழி! ... 

எங்கள் தமிழ்மொழி! ...

என்றென்றும் வாழிய வே!

இதன் முழு வடிவம்👇

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி 
வாழிய வாழிய வே! 

வான மளந்த தனைத்தும் அளந்திடும் 
வண்மொழி வாழிய வே! 

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி 
இசைகொண்டு வாழிய வே! 

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி 
என்றென்றும் வாழிய வே! 
என்றென்றும் வாழிய வே! 

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் 
துலங்குக வையகமே! 

தொல்லை வினைதரு தொல்லை யகன்று 
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி 
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து 
வளர்மொழி வாழிய வே!
வளர்மொழி வாழிய வே!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் ! 

இன்றெம்மை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
இன்றெம்மை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் ! 

அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக !
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு !
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திரு நாடு !

வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

இதில் போல்ட் செய்துள்ள கடைசி பகுதியை விடுத்து மேலே உள்ளது யாவும் மிக பொருத்தம் என நான் நினைகிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உங்களதும், பெருமாள் மற்றும் பேராசிரியர் அனைவரது சந்தேகமும் நியாயமானதே.

ஆனால் ஒரு தமிழனாக நான் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் இந்த வரிகளை நீக்கி விட்டுத்தான் சேர்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனென்றால் அவை நீக்கப்பட சொல்லபட்ட காரணங்கள் வலுவானவையாக உள்ளன. எனது பார்வையில்.

பேசாமல் தமிழர் பேரியக்கம் சொல்வது போல பாரதிதாசன் பாடல் ஒன்றை திருத்தாமல் போடலாம்.

என்னை பொறுத்தவரை 👇 பாரதியின் இந்த பாடலை விஞ்சிய ஒரு தமிழ் மொழி வாழ்த்து இருக்க முடியாது.

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

எங்கள் தமிழ்மொழி! ... 

எங்கள் தமிழ்மொழி! ...

என்றென்றும் வாழிய வே!

இது தான் புலம்பெயர் தமிழர் அமைப்புகள்/பாடசாலைகளில் நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

3 minutes ago, Justin said:

இது தான் புலம்பெயர் தமிழர் அமைப்புகள்/பாடசாலைகளில் நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவது. 

ஓம். இலங்கையிலும் இதைதான் பாடினோம்.

முதல் பகுதியில் வரும் “தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே” என்ற வரியையும், 

வாழ்க பாரத மணித்திருநாடு என்பதன் கீழுள்ள சகலதையும் தவிர்த்து விட்டு பாடுவோம்( எமக்கு பொருத்தமில்லை என்பதால்).

ஆனால் தமிழ் நாட்டில் வந்தே மாதரம் என்பதற்கு மேலுள்ள அனைத்தையும் பாடலாம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஒரு கனவு இருந்தது… அந்த கனவை செயலாக்க செயல்பட்டும் இருந்தோம்.. அந்த கனவு நனவாகி இருந்தால் நம்மூரு தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான்..👇

வாயள்ளி தின்றதும் தமிழே… எங்கள் வாசலில் வந்ததும் தமிழே.. நோயள்ளும் போதிலும் தமிழே… நாங்கள் நீறாகி எரிகின்ற போதிலும் தமிழே.. தமிழே.. தமிழே..

முதலில் நாம் நேசிக்கின்றவைக்கு உண்மையாக இருக்கவேணும்.. என் குழந்தைக்கு தமிழ்பேசத்தெரியாது எழுதத்தெரியாது நான் தமிழ்த்தாய் வாழ்த்தில் நொட்டை கண்டுபுடிச்சு என்ன பிரயோசனம்… புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நிலமை இதுதான்… தயவு செய்து எமது மொழியின் தொடர்ச்சி நீட்சி என்பது அதை எமது சந்ததிகளுக்கு கடத்துவதில்தான் இருக்கிறது.. நம்மவர்கள் பலர் இதில் அசண்டையீனமாக இருப்பதை பார்க்க மனவேதனையாக இருக்கு.. இந்த நாட்டில என்ரபிள்ளைக்கு எதுக்கு தமிழ் இந்த நாட்டு மொழியை படித்தால் போதும் நல்ல வேலை கிடைக்கும் தமிழை படிச்சு என்ன பிரயோசனம் எண்ட அசண்டையீனம்.. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பேசாமல் தமிழர் பேரியக்கம் சொல்வது போல பாரதிதாசன் பாடல் ஒன்றை திருத்தாமல் போடலாம்.

💯 சிறந்த யோசனை.

5 hours ago, goshan_che said:

ஓம். இலங்கையிலும் இதைதான் பாடினோம்.

அப்படி இருக்க தமிழ்நாட்டில் பாடபடும் தமிழ்த்தாய் பாடலுக்காக பொய் செய்தியை இங்கே இணைத்தாரே

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எங்களுக்கு ஒரு கனவு இருந்தது… அந்த கனவை செயலாக்க செயல்பட்டும் இருந்தோம்.. அந்த கனவு நனவாகி இருந்தால் நம்மூரு தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான்..👇

வாயள்ளி தின்றதும் தமிழே… எங்கள் வாசலில் வந்ததும் தமிழே.. நோயள்ளும் போதிலும் தமிழே… நாங்கள் நீறாகி எரிகின்ற போதிலும் தமிழே.. தமிழே.. தமிழே..

முதலில் நாம் நேசிக்கின்றவைக்கு உண்மையாக இருக்கவேணும்.. என் குழந்தைக்கு தமிழ்பேசத்தெரியாது எழுதத்தெரியாது நான் தமிழ்த்தாய் வாழ்த்தில் நொட்டை கண்டுபுடிச்சு என்ன பிரயோசனம்… புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நிலமை இதுதான்… தயவு செய்து எமது மொழியின் தொடர்ச்சி நீட்சி என்பது அதை எமது சந்ததிகளுக்கு கடத்துவதில்தான் இருக்கிறது.. நம்மவர்கள் பலர் இதில் அசண்டையீனமாக இருப்பதை பார்க்க மனவேதனையாக இருக்கு.. இந்த நாட்டில என்ரபிள்ளைக்கு எதுக்கு தமிழ் இந்த நாட்டு மொழியை படித்தால் போதும் நல்ல வேலை கிடைக்கும் தமிழை படிச்சு என்ன பிரயோசனம் எண்ட அசண்டையீனம்.. 

பகிர்வுக்கு நன்றி புலவா. 

இதையும் கேளுங்கோ. தமிழ் தேசிய தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கும் தேடினேன் காணவில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.