Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான், பாஜக-வுக்கு ஆதரவாக இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை!" - சொல்கிறார் நாராயணன் திருப்பதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``சீமான், பாஜக-வுக்கு ஆதரவாக இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை!" - சொல்கிறார் நாராயணன் திருப்பதி

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
News

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

  •  

``ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள் நாங்கள்தான் என்று சீமான் சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே'' என்கிறார் நாராயணன் திருப்பதி.

'தி.மு.க வெர்சஸ் அ.தி.மு.க' என்ற அரசியல் அரிச்சுவடியை 'தி.மு.க வெர்சஸ் பா.ஜ.க'-வாக மாற்றத் துடிக்கும் முயற்சியாக, தி.மு.க அரசுக்கு எதிராக அறிக்கை, போராட்டம், விமர்சனம் என தொடர்ச்சியாக தம் கட்டிவருகிறது தமிழக பா.ஜ.க!

இந்தச் சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினேன்...

``'மத்திய அரசுத் திட்டங்களை மாநில அரசுத் திட்டங்களாக மாற்றி அறிவிக்கிறார்கள்' என்றது தமிழக பா.ஜ.க. ஆனால், தற்போது பிரதமரை அழைத்தே மருத்துவக் கல்லூரிகளை திறக்கப்போகிறார்கள். அப்படியெனில் பா.ஜ.க-வின் குற்றச்சாட்டு பொய்யாகி விட்டதா?"

பிரதமர் மோடி
 
பிரதமர் மோடி

``இல்லை... மருத்துவக் கல்வி பொதுப்பட்டியலில் வந்துவிட்டது. மேலும் மத்திய அரசின் நிதி உதவியினால்தான் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றன. எனவேதான் திறப்புவிழாவுக்கு பிரதமரை அழைக்கிறார்கள். அதேசமயம், கடந்தகாலத்தில், ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், நாட்டு மக்களின் பிரதமராக தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்த பிரதமர் மோடியைப் பார்த்து, 'கோ பேக் மோடி' என்று தி.மு.க-வினர் சொன்னது ஜனநாயக விரோதம்.

மேலும், 100 நாள் வேலை, அனைவருக்கும் வீடு, கொரோனா தடுப்பூசி போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துவரும் நிதியை மறைத்து, மாநில அரசே செயல்படுத்துவது போன்று தி.மு.க அரசு விளம்பரம் தேடிக்கொள்கிறது என்பது உண்மைதான். உதாரணத்துக்கு கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசின் நிதியிலிருந்துதான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், இங்கே முதல்வரின் படத்தை மட்டுமே விளம்பரம் செய்கிறார்கள். முதல்வர் படத்தோடு பிரதமரின் படத்தையும் சேர்த்து அச்சடிக்க வேண்டும்தானே?''

ADVERTISEMENT

``ஆனால், 'கொத்தடிமை போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில்தான் மாநில அரசுகள் உள்ளன' என மத்திய அரசைக் குற்றம்சாட்டுகிறாரே தமிழக முதல்வர்?"

''ஜனநாயக நாட்டில், இதுபோன்ற விமர்சனங்களை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதேசமயம், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அரசுகள் செயல்பட்டு வரும்போது, இதுவரை யாருமே சொல்லாத வகையில், இப்படியொரு குற்றச்சாட்டை முதல்வர் கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி.

இந்தியப் பொருளாதாரத்தில், தமிழக அரசின் பங்கு மிகப்பெரியது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனாலும்கூட, 'நிதிக்காக அடிமைபோல் கையேந்தி நிற்கிறோம்' என்று முதல்வர் சொல்லியிருப்பது, 'ஒன்றிய அரசோடு ஒன்றாமல் இருக்கிறார்கள்' என்ற மனப்பான்மையின் வெளிப்பாடு.

மத்திய அரசை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக 'ஒன்றிய அரசு' என்று உள்நோக்கத்தோடு கூறிவருவதைப் பார்த்தால், இவர்கள் 'குன்றிய அரசாக' இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.''

ஸ்டாலின்
 
ஸ்டாலின்

``அப்படியென்றால், 'சக்திவாய்ந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படி பாராட்டுகிறார்?''

``தமிழகத்தின் முதல் மனிதர், ஆளுநர். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அது அவரது உரிமை. அவர் சொல்கிற கருத்துக்கும் பா.ஜ-க-வுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதற்கு நாங்கள் பதில் கருத்தும் சொல்லமுடியாது.

அதேசமயம், ஆளுநர் அப்படிச் சொல்கிறாரே என்று கேட்டால், ஆளுநர் ஏன் சொன்னார், எப்போது சொன்னார், எதற்காக சொன்னார் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும்.''

``அமைச்சர் சேகர்பாபுவை 'திருடன்' என்றும், நிதி அமைச்சரை 'பைத்தியக்காரர்' என்றும் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளாரே?''

``ஒருவரை 'திருடன்' என்று சொல்வது தவறென்றால், 'நாய்' என்று மட்டும் சொல்லலாமா? எனவே, ஹெச்.ராஜா குறித்து அமைச்சர் சேகர்பாபு என்ன கூறினார் என்பதைப் பார்த்தால்தான், ஹெச்.ராஜா கூறியது சரியா, தவறா என்று நான் சொல்லமுடியும்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பா.ஜ.க-வினரை மட்டுமல்ல... தி.மு.க-வின் மூத்த தலைவரான டி.கே.எஸ்.இளங்கோவனையே மிகக் கேவலமான முறையில் பேசியிருக்கிறார். ஆக, நம்மைத் தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்கு அவர்களது மொழியிலேயேதான் பதிலடி கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் பா.ஜ.க-வினருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. இதைப் புரிந்துகொண்டதால்தான் பி.டி.ஆர் இப்போது அமைதியாகிவிட்டார்.''

ஹெச்.ராஜா
 
ஹெச்.ராஜா

``பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டில் சீமான் இயங்கி வருவதால்தான், மத்திய பா.ஜ.க அரசு அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிறதே காங்கிரஸ்?''

``சீமான், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று சொல்பவர்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். ஏனெனில், சீமான் இதுவரையில் எங்களுக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை.

ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள் நாங்கள்தான் என்று சீமான் சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே. தங்கள் கட்சித் தலைவரைவிடவும் கூட்டணிதான் பெரிது என்று காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்களா...''

`` 'ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம்' என அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் சீமான் பேசியிருக்கிறார். மேலும், ராஜீவ்காந்தி மரணம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுதான் விசாரணை செய்துவருகிறது எனும்போது, மாநில அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''

சீமான்
 
சீமான்

``இல்லையில்லை... ராஜீவ்காந்தி மரணம் குறித்தான வழக்கு வேறு, சீமானின் சர்ச்சைப் பேச்சு என்பது வேறு. சீமான் இப்படிப் பேசியிருக்கிறார் என்றால், அது சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்னையாகத்தான் பார்க்க வேண்டும். எனவே, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது.

அதனால்தான் நாங்குநேரியில், சீமான் இப்படிப் பேசியிருக்கிறார் என்று தெரிந்த உடனேயே, 'சீமானைக் கைது செய்யவேண்டும்' என்று காங்கிரஸுக்கும் முன்பே நான்தான் குரல் எழுப்பியிருந்தேன்.''

``நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தாமல் பிரதமர் வாரணாசி சென்றுள்ளார் எனில், 'பிரதமரை நாடாளுமன்றத்தில் காணமுடியாது. வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில்தான் காணமுடியும்' என்ற ப.சிதம்பரத்தின் விமர்சனம் உண்மைதானே?''

``அப்படியில்லை.... எல்லா தினங்களிலும் பிரதமர், டெல்லியிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிசம்பர் 13-ம் தேதியன்று நாடாளுமன்ற சபாநாயகர் உட்பட பல்வேறு தலைவர்களும், உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். வாரணாசி சென்றிருந்த பிரதமரும், அங்கிருந்தபடியே அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும் தன்னுடைய பேச்சு மற்றும் குறிப்புகளிலும் இதுகுறித்து விரிவாகவே விளக்கியிருக்கிறார். எனவே, இதையெல்லாம் விமர்சிப்பதென்பது மலிவான அரசியல்!''

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
 
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

``தண்ணியே இல்லாத இடத்தில் போட் ஓட்டிய அண்ணாமலை, அமெரிக்காவில் இருக்க வேண்டிய ஆள்' என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கிண்டல் செய்கிறாரே?''

``ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து இதுபோன்று எங்கள் கட்சித் தலைவரை அவமரியாதையாகப் பேசிவருவதைக் கண்டிக்கிறோம். படகில் பயணம் செய்பவர்கள் கரையிலிருந்துதான் படகைக் கடலுக்குள் செலுத்துவார்கள். இந்த அடிப்படை அறிவுகூட காங்கிரஸ் கட்சியினருக்கு இல்லையே. ஒருவேளை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடலுக்கு செல்லவேண்டும் என்றால், படகைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டுதான் செல்வார் போல. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உடலளவிலும் மனதளவிலும் வயாதாகிவிட்டது. அதனால்தான், இப்படியெல்லாம் பிதற்றிவருகிறார்.''

https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-narayanan-tirupathi-shares-his-views-on-current-political-happenings-of-tn

  • கருத்துக்கள உறவுகள்

அப்பன் குதிருக்குள் இல்லை.

அதை மகன் சொன்னாக்கூட பரவாயில்லை, அப்பனே குதிருக்குள் இருந்து சொன்னா எப்படி நாராயணா🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி...சீமான் பாரதிய ஜனதாவுக்கு  சார்பாக இருந்திட்டு போகட்டுமே....இதனால் என்ன பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தரவு இல்லாமல் எப்பொழுதும் பேசமாட்டார்.. ஒரு கோடி இந்துக்கள் திமுகாவில் இருக்குறார்கள்.. ஸ்டாலின் மனைவி துர்க்காவும் குடும்பவும் கோயில் கோயிலா வலம்வராங்கள்.. திருப்பதியில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கிறார்.. ஆக பெரிய சங்கி திமுகாதான்.. சீமான் சொன்னது உண்மைதான்.. - அர்ஜுன் சம்பத்

  • கருத்துக்கள உறவுகள்

திமுக எதிர் நாதக- யாரு உண்மையான சங்கி,ரெட்பிக்ஸ் நியூஸ் பிலிக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, குமாரசாமி said:

சரி...சீமான் பாரதிய ஜனதாவுக்கு  சார்பாக இருந்திட்டு போகட்டுமே....இதனால் என்ன பிரச்சனை?

நாராயணன் சொல்வது என்னெண்டா.... வைக்கற் போருக்குள்ள, ஸ்ராலின் வந்திட்டாப்போல..... சீமானுக்கு இடமில்லை எண்டு..... 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் தரவு இல்லாமல் எப்பொழுதும் பேசமாட்டார்.. ஒரு கோடி இந்துக்கள் திமுகாவில் இருக்குறார்கள்.. ஸ்டாலின் மனைவி துர்க்காவும் குடும்பவும் கோயில் கோயிலா வலம்வராங்கள்.. திருப்பதியில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கிறார்.. ஆக பெரிய சங்கி திமுகாதான்.. சீமான் சொன்னது உண்மைதான்.. - அர்ஜுன் சம்பத்

இதெல்லாம் ஒரு பொழைப்பா சம்பந்த்🤣.

பொதுவா ஒரு கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் இன்னொரு கட்சி தமக்கும் எதிர் கட்சிக்கும் உள்ள கொள்கை வேறுபாட்டை விளக்கி, எதிர் கட்சியின் கொள்கை எப்படி பட்டது, ஏன் மோசமானது என விளக்கி எதிர் கட்சியை தாக்குவார்கள். இதுதான் உலக அரசியல் நியதி.

இங்க என்னடான்னா, நம்ம கொள்கைதான் அவர்கள் கொள்கையும் ஆகவே அவர்கள் கொள்கை மோசமானது என வாதிடுகிறார் சம்பத்து 🤣.

ஏன்னா அவருக்கே தெரியுது தமிழ் நாட்டில் இந்துதுவாவுக்கு எப்படி பட்ட மரியாதை இருக்கிறது என்று.

பிகு

தமிழ்நாட்டில், நாராயணன்/அர்ஜூன் போன்ற சங்கிகள்

1. யாரை சங்கி இல்லை என்கிறார்களோ - அவர்கள் நிச்சயம் சங்கி.

2. யாரை சங்கி என்கிறார்களோ - அவர்களை நிச்சயமாக இந்துதுவாவின் எதிரியாக பார்கிறார்கள் என்பது திண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இந்த அரைக்கிறுக்கர் சம்பத்துக்கு போய்.... விளக்கம் கொடுத்து.....

புது வருசம் வேற பிறக்கப்போகுது...

வாங்க, நமக்கு வேலை கணக்க இருக்குது...  😁

12 minutes ago, Nathamuni said:

இந்த அரைக்கிறுக்கர் சம்பத்துக்கு போய்.... விளக்கம் கொடுத்து.....

நாத முனி சொன்னது சம்பத்துக்கு கேட்டால் கோபிக்கப் போகிறார்.  நான் எவ்வளவு கஷ்ரப்பட்டு படிச்சு முழுக்கிறுக்கன் தேர்வில் நல்ல மாக்ஸ் வாங்கியிருந்தும் என்னை அரைகிறுக்கன்  என்று நாதமுனி அவமானப்படுத்துகிறார் என்று. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பிஜேபி B அணியா..? -இயக்குனர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2021 at 07:24, குமாரசாமி said:

சரி...சீமான் பாரதிய ஜனதாவுக்கு  சார்பாக இருந்திட்டு போகட்டுமே....இதனால் என்ன பிரச்சனை?

அதை வெளிப்படையாக சீமான் அறிவித்தால், இப்போது அவருக்குக் கிடைக்கும் வாக்குகள் பாதிக்கு மேல் குறைந்து விடும் என்பதுதான் அவருக்கான பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றங்களில்  தொழில்முறையில் பொய் சாட்சி சொல்வதற்கு ஆட்களை ஏற்பாடு செய்ய  சில  ஏஜென்டுகள் உண்டு எனக் கேள்வி. இப்போது ஏஜென்ட் நாராயண் திரிபாதியே சாட்சி சொல்ல வந்து விட்டார்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

நாம் தமிழர் பிஜேபி யின் பி டீம் என்பதற்கான அளவீடுகள் காரணிகள் முழுவதும் பின்வரும் கட்சிகளுக்கும் பொருந்துகின்றன.. இவையும் பாஜகவின் பி டீம்தான்…

அதிமுக- கடந்த தேர்தல் வரை அதிமுக ஆட்சி கலையாமல் காப்பாற்றி கொடுத்ததுடன் பிஜேபி தனது அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆட்சியின் ஊடாகவே நிறைவேற்றியது.. அத்துடன் பாஜாகாதான் அதிமுகாவின் மிகப்பெரிய கூட்டாளி கட்சி தமிழ் நாட்டிலையே.. அதிமுக பாஜாக உறவுடன் ஒப்பிடும்போது நாம்தமிழர் கட்சி பாஜாக உறவு எண்டு ஒண்டு இருந்தா அது ஒரு வெறும் மணல் துகள் அளவுதான்.. தமிழ் நாட்டின் பாதி சனத்தொகை ஆதரிக்கும் அதிமுகவின் பிஜேபி உறவுடன் ஒப்பிடும்போது ஒண்டுமே இல்லை..

திமுக- 99 இல் பாஜாகவுடன் கூட்டணி அமைத்து அங்காளி பங்காளிஜளாக தேர்தலை சந்தித்த திமுக மிகப்பெரிய பிஜேபி பி டீம்.. இல்லையா..?

கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா அழைக்கப்பட்டதும், பின்னர் நிதின் கட்கரி வந்தது.. ஆக நாம் தமிழர் பி டீம்னா இதனால திமுக பி டீம் தான..

டெல்லியில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பி, கூட்டணி கட்சி எம்பிக்களான திருமாவளவன், சு வெங்கடேசன், நவாஸ்கனி ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டி தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்போது டி ஆர் பாலுவிடம் செய்தியாளர்கள், “மத்திய அரசுடன் திமுக இணக்கமாக இருக்கிறதா?
முன்பு பிரதமர் வருகையின் போது தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டி, Go Back Modi என்று சொன்னீர்களே… இப்போது அதுபோல எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?…”என்று கேள்வி எழுப்ப, அதற்கு அவர் சிரித்துக் கொண்டே “இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்தான். பேசித் தீர்க்க கூடியவை. இதைப் பெரிய விவகாரமாக கருதக்கூடாது. மத்திய அரசும் இணைக்கமாகத்தான் இருக்கிறது. திமுக அரசும் மத்திய அரசுடன் இணக்கமாகவே உள்ளது.

அதனால்தான் பிரதமர் மோடி வெள்ளித்தட்டில் வைத்து 11 புதிய மருத்துவ கல்லூரிகளை தளபதி அவர்களின் ஆட்சிக்கு தருகிறார். அதைவேண்டாம் என்று சொல்ல முடியுமா?..
இணக்கமாக இல்லாவிட்டால் இது எப்படி முடியும்?”என்கிறார்.

விசிக எதிர்ப்புக் குரல் 

அப்போது, அருகில் இருக்கும் திருமாவளவன் வேகமாக குறுக்கிட்டு, “எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்போம். இணக்கமாக இருக்கவேண்டிய விஷயங்களில் இணக்கமாக இருப்போம். அவ்வளவுதான்” என்று உரத்த குரலில் கூறுகிறார்.புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்த்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிலுள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வோம் என்று யூ டேர்ன் அடிக்கிறார். இப்ப திமுக டெல்லியில பிஜேபி உடைய பீடிம் தான..

வங்க தேசத்தில் பஞ்சாப்பில் நாகலாந்தில் எல்லாம் தமக்கு எதிரான கட்சிகளின் அமைச்சர்கள் மீது ரேய்ட் பாயுது.. தமிழ்நாட்டில் இது நாள் வரை ஒரு திமுக எம்பி எம் எல் ஏ அமைச்சர் மீதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளின் ரேய்ட் பாயல.. திமுகவும் பாஜாக உறுப்பினர்களை கைது செய்வதில்லை.. வெறும் நாலாம் தரப்பு மாரிதாஸ்களையும் நாம்தமிழர் உறுப்பினர்களையும்தான் கைது செய்யுது.. இதெல்லாம் ஏன்..? விரைவில் தேர்தல் வருகுது.. இந்திய அரசியலை தீர்மானிக்கும் வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களால் சீட்களை இழக்கும் நிலை வந்தால் அதை ஈடு செய்ய பாஜாகாவுக்கு தமிழ் நாட்டு எம்பிக்கள் தேவை பாஜாகாவுக்கு.. திமுகாவுக்கு வழக்கு பாயாமல் இருக்க பாஜாக ஆதரவு தேவை.. தேர்தலின் பின் காங்கிரஸ கழட்டிவிட்டிட்டு திமுக பாஜகாவுக்கு ஆதரவு குடுக்கலாம்.. அதனால் இருபகுதியும் மறைமுக புரிந்துணர்வில்.. என்ன அதிமுக பாஜாகவோட நல்ல உறவு வச்சிருக்கு திமுகவும் மற்ற கட்சிகளும் கள்ள உறவு வைத்திருக்கின்றன.. ஆக மொத்தத்தில் எல்லாமே அரசியலில் சகஜம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

நாம்தமிழரை அதிகமாக பிஜேபி பீ டீம் என்று சொல்பவர்கள் யார் என்று பார்த்தால் திமுகாதான்.. ஆனால் இதே திமுக என்ன கொள்கை குன்றா.. பிஜேபி ஓட ஒட்டு உறவே இல்லாததா..? முன்னாடி பப்ளிக்கா வச்சிருந்தது.. இப்ப இவர்கள் சொல்லும் நாம் தமிழர் பிஜேபி கள்ள உறவை அதே கள்ள உறவை தானும் பிஜேபி உடன் வச்சிருக்கு.. அடுத்து வரும் எலெக்சன்களில் நல்ல உறவை வைக்கப்போகுது… ஆக மொத்தத்தில பாஜாகவுடன் உறவு என்பதை எந்த கட்சியாவது மற்ற கட்சியின் மீது பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாத்த நினைத்தால் மக்கள் ஏமாறக்குடாது.. ஏனெனில் அரசியல் கட்டியினர் எல்லோருமே எல்லோருடனும் நண்பர்கள்தான் திரைமறைவில்.. ஆகையால் பாஜக பூச்சாண்டி எனும் ஏமற்றை பாத்து வாக்களிக்காமல் வேறு நல்லவிடயங்களை பாத்து வாக்களிக்க கத்து கொள்ளனும் தமிழ்நாட்டு மக்கள்..

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் எதுதான் பாஜாக பீ டீம் இல்லை..காங்கிரசை தவிர( ஏனெனில் காங்கிரஸ் ஒரு போதும் பிஜேபி உடன் கூட்டணி வைக்காது.. அது அதன் அரசியல் இருப்பையே காலி பண்ணிவிடும்)  பூராவும் ஏதோ ஒரு வகையில் பீ டீம்தான்.. விளக்கும் சவுக்கு👇

ஆகையால் நாம்தமிழரை இனிமேல் யாராவது பாஜாக பீ டீம்னா நாம்தமிழர் கட்டியினர் ஆமா நானும் பீடீம்தா நீயும் பீ டீம்தா வா செத்து செத்து விளாடுவம் எண்டு வெக்கப்படாம சொல்லிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்..😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் பிஜேபி யின் பி டீம் என்பதற்கான அளவீடுகள் காரணிகள் முழுவதும் பின்வரும் கட்சிகளுக்கும் பொருந்துகின்றன.. இவையும் பாஜகவின் பி டீம்தான்…

அதிமுக- கடந்த தேர்தல் வரை அதிமுக ஆட்சி கலையாமல் காப்பாற்றி கொடுத்ததுடன் பிஜேபி தனது அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆட்சியின் ஊடாகவே நிறைவேற்றியது.. அத்துடன் பாஜாகாதான் அதிமுகாவின் மிகப்பெரிய கூட்டாளி கட்சி தமிழ் நாட்டிலையே.. அதிமுக பாஜாக உறவுடன் ஒப்பிடும்போது நாம்தமிழர் கட்சி பாஜாக உறவு எண்டு ஒண்டு இருந்தா அது ஒரு வெறும் மணல் துகள் அளவுதான்.. தமிழ் நாட்டின் பாதி சனத்தொகை ஆதரிக்கும் அதிமுகவின் பிஜேபி உறவுடன் ஒப்பிடும்போது ஒண்டுமே இல்லை..

திமுக- 99 இல் பாஜாகவுடன் கூட்டணி அமைத்து அங்காளி பங்காளிஜளாக தேர்தலை சந்தித்த திமுக மிகப்பெரிய பிஜேபி பி டீம்.. இல்லையா..?

கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா அழைக்கப்பட்டதும், பின்னர் நிதின் கட்கரி வந்தது.. ஆக நாம் தமிழர் பி டீம்னா இதனால திமுக பி டீம் தான..

டெல்லியில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பி, கூட்டணி கட்சி எம்பிக்களான திருமாவளவன், சு வெங்கடேசன், நவாஸ்கனி ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டி தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்போது டி ஆர் பாலுவிடம் செய்தியாளர்கள், “மத்திய அரசுடன் திமுக இணக்கமாக இருக்கிறதா?
முன்பு பிரதமர் வருகையின் போது தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டி, Go Back Modi என்று சொன்னீர்களே… இப்போது அதுபோல எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?…”என்று கேள்வி எழுப்ப, அதற்கு அவர் சிரித்துக் கொண்டே “இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்தான். பேசித் தீர்க்க கூடியவை. இதைப் பெரிய விவகாரமாக கருதக்கூடாது. மத்திய அரசும் இணைக்கமாகத்தான் இருக்கிறது. திமுக அரசும் மத்திய அரசுடன் இணக்கமாகவே உள்ளது.

அதனால்தான் பிரதமர் மோடி வெள்ளித்தட்டில் வைத்து 11 புதிய மருத்துவ கல்லூரிகளை தளபதி அவர்களின் ஆட்சிக்கு தருகிறார். அதைவேண்டாம் என்று சொல்ல முடியுமா?..
இணக்கமாக இல்லாவிட்டால் இது எப்படி முடியும்?”என்கிறார்.

விசிக எதிர்ப்புக் குரல் 

அப்போது, அருகில் இருக்கும் திருமாவளவன் வேகமாக குறுக்கிட்டு, “எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்போம். இணக்கமாக இருக்கவேண்டிய விஷயங்களில் இணக்கமாக இருப்போம். அவ்வளவுதான்” என்று உரத்த குரலில் கூறுகிறார்.புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்த்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிலுள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வோம் என்று யூ டேர்ன் அடிக்கிறார். இப்ப திமுக டெல்லியில பிஜேபி உடைய பீடிம் தான..

வங்க தேசத்தில் பஞ்சாப்பில் நாகலாந்தில் எல்லாம் தமக்கு எதிரான கட்சிகளின் அமைச்சர்கள் மீது ரேய்ட் பாயுது.. தமிழ்நாட்டில் இது நாள் வரை ஒரு திமுக எம்பி எம் எல் ஏ அமைச்சர் மீதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளின் ரேய்ட் பாயல.. திமுகவும் பாஜாக உறுப்பினர்களை கைது செய்வதில்லை.. வெறும் நாலாம் தரப்பு மாரிதாஸ்களையும் நாம்தமிழர் உறுப்பினர்களையும்தான் கைது செய்யுது.. இதெல்லாம் ஏன்..? விரைவில் தேர்தல் வருகுது.. இந்திய அரசியலை தீர்மானிக்கும் வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களால் சீட்களை இழக்கும் நிலை வந்தால் அதை ஈடு செய்ய பாஜாகாவுக்கு தமிழ் நாட்டு எம்பிக்கள் தேவை பாஜாகாவுக்கு.. திமுகாவுக்கு வழக்கு பாயாமல் இருக்க பாஜாக ஆதரவு தேவை.. தேர்தலின் பின் காங்கிரஸ கழட்டிவிட்டிட்டு திமுக பாஜகாவுக்கு ஆதரவு குடுக்கலாம்.. அதனால் இருபகுதியும் மறைமுக புரிந்துணர்வில்.. என்ன அதிமுக பாஜாகவோட நல்ல உறவு வச்சிருக்கு திமுகவும் மற்ற கட்சிகளும் கள்ள உறவு வைத்திருக்கின்றன.. ஆக மொத்தத்தில் எல்லாமே அரசியலில் சகஜம்.. 

தம்பி,

நீங்க மத்த கட்சி பற்றி சொன்னது எல்லாமே சரி….

ஆனால் தாம் அப்படியான கட்சி அல்ல, மிக வித்தியாசமான புரட்சியாளர்கள், காங்கிரஸ், பிஜேபியை நாம் மூர்க்காக எதிர்ப்போம் என்பதல்லவா நாம் தமிழரின் முழக்கம்.

அப்போ திமுக, அதிமுக போல் சுயநல அடிப்படையில் பிஜேபியை ஆதரிக்க கூடிய கட்சி, அதே தமிழ்நாட்டு அரசியல் கலாச்சாரத்தில் உள்ள இன்னொரு ஏமாற்று கட்சிதான் நாம் தமிழரும் என்றல்லாவா ஆகிறது?

அதைதான் மேலே சுப.சோ ஐயாவும் சொல்கிறார்,

குசா அண்ணைக்கு “பிஜேபியுடன் சேர்வதில்” ஒரு நெருடலும் இல்லை. சீமானுக்கும் இல்லை.

ஆனால் இதை வெளிப்படையாக சொன்னால் நாம் தமிழர் கட்சியில் பாதி காணாமல் போய்விடும். ஏனென்றால் அங்கே உள்ள அடிமட்ட உறுப்பினர்கள் பலர் உண்மையான சனாதன எதிர்பாளர்கள்.

தமிழ் நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை.

அவர்களுக்கு பிஜேபியோடு அதிமுக, திமுக வைக்கும் கூட்டணி, அல்லது மாநில-ஒன்றிய அரசு முறை உறவுக்கும்,

சீமான் போன்றோர் ஆர் எஸ் எஸ் கொள்கையை பின் கதவால் முன் தள்ளுவதற்கும் உள்ள வித்தியாசம் நன்கே தெரியும்.

புலம்பெயர் தேசத்தில் இருந்து விகடன், குமுதம், யூடியூப், பேஸ்புக், சினிமா மூலமாக மட்டும் தமிழ்நாட்டை தரிசிக்கும் , புடவை சொப்பிங்குக்கு மட்டும் தமிழ் நாடு போகும் எம்மவர்களால் இதை ஒரு போதும் விளங்கி கொள்ளவே முடியாது.

அவர்களுக்கு தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் எப்போதும் ஒரு துன்ப அதிர்ச்சியாக இருப்பது இதனால்தான் 🤣.

8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆகையால் நாம்தமிழரை இனிமேல் யாராவது பாஜாக பீ டீம்னா நாம்தமிழர் கட்டியினர் ஆமா நானும் பீடீம்தா நீயும் பீ டீம்தா வா செத்து செத்து விளாடுவம் எண்டு வெக்கப்படாம சொல்லிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்..😂😂

நீங்க புலம்பெயர் தமிழர் - என்ன வேணாலும் சொல்லலாம்🤣

ஆனால் இதை தமிழ் நாட்டில் சொன்னா -கட்சி லெட்டர்பேடில் பெயர் போடவே ஆளை தேட வேண்டி இருக்கும்?

ஓ? நீயும் பி டீம் தானா? அப்ப நான் மத்த பி டீம்லயே சேர்ந்துகிறேன்னுட்டு போய்ட்டே இருப்பார்கள்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான தராசு சியாமும் சீமான் அண்ணா பாஜகவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகவே சொல்கின்றார். முப்பாட்டன் முருகன், எல் முருகன் வேல் யாத்திரை போன்ற நிகழ்வுகள் சந்திக்கும் புள்ளிகள். அவ்வாறு பாஜக கூட்டணிக்குள் போகும் பட்சதில் வாக்காளர்களை இழப்பார் எனச் சொல்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

1. இதே சவுக்கு இதே யாழில் முன்னர் திமுக செம்பு என விமர்சிக்கபட்டவர். இப்போ ராகுல் காந்திக்கு செம்பு தூக்குறார்.

2. இதே சவுக்கு சீமானை பற்றி துவைத்து தொங்க விட்டதை நீங்க பாத்திருப்பீங்கள் எண்டு நம்புகிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

சசிகலா சோதிடர்களை அணுகியதாயும் ஏப்ரலின் பின் ஏறுமுகம்தான் என அவர்கள் சொன்னதாயும் சொல்கிறார்கள்.

சசி தலைமையில் அதிமுக+பிஜேபி+பாமக+நாம் தமிழர் கூட்டு விரைவில் வரும் என்றே நானும் நினைக்கிறேன்.

இப்போ சீமான் செய்வது preparing the audience. 
யாழ்களத்யில் கூட அவரின் ரசிகர்கள் பலர் “அதானே - பிஜேபியோடு போனால் என்ன?” என சிந்திக்க வைக்கப்பட்டுள்ளாகள். ஆனால் தமிழ்நாட்டில் இப்படி மண்டையை கழுவுவது கஸ்டம் என்பது என் பார்வை.

அநேகமாக இலங்கை பிரச்சனையில்  மோடி தலைமையிலான இந்திய அரசு ஒரு தமிழர் சார்பு போக்கு எடுப்பதை போல் போக்கு காட்ட, அதை வைத்து சீமான் சங்பரிவாரிடம் சரண்டர் ஆவார் என நினைக்கிறேன் (பழைய ஈழத்தாய் டெக்னிக்தான்).

11 minutes ago, வாலி said:

பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடக் கட்சிகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களும் சீமானின் தலைமையில் தமிழ்த் தேசியம் எழுச்சி பெறுவதை விரும்பாதவர்களும் சுpமான் பாஜகவின் பி ருpம் என்றும் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்றும் பேசிவருகிறார்கள். உண்மையில்  காங்கிரஸ் கம்மினியூஸ்ட்டுகள்  நாம்தமிழர் தவிர்ந்த தற்றைய அனைவரும் திமுக>மதிமுக> உட்பட பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர்கள். இனியும் கூட்டணி அமைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்கே இது உதவுகின்றது.ஜெயலலிதா பெுhன்ற வலிமையான தலைமை இல்லாததால் அதிமுக தடுமாறுகின்றது. ஆக திமுகவைவின் செல்வாக்கைச் சரிப்பதே நாம்தமிழர் அரசியிலில் உறுதியான முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் உதவும். அதை அறிந்தே தொடக்கத்திலிருந்தே சீமான் திமுக காங்கிரஸ் எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்.திமுகவின் செல்வாக்கு சரிந்தால் காங்கிரசினால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இதுவரை திமுகவின் முதுகில் ஏறியே காங்கிரஸ் தமிழகத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.அதிமுக வில் திமுகவைப் போலல்லாது தமிழ்களே முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டாலும் அது தமிழர்களின் தலைமையில்தான இயங்கும். அகவே அதிமுக எதிர்ப்பை விட திமுகi காங்கிரஸ் கூட்டைக் கருவருப்பதே முக்கியம். பாஜகவை ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை. தமிழகத்தில் தாமலர ஒரு போதும் மலராது. ஆகவே திராவிடக் குங்சுகள் கொங்சம் ஓரமாக ஒதுங்கிக் கொள்ளவும். சுமான் பாஜகவை எதிர்ப்பதில்லை.திமுகவை மட்டுமே எதிர்க்கிறார் என்பவர்கள் மறுவளமாக திமுக பாஜகவை எதிர்ப்பதிலும் பார்க்க நாம்தமிழரை எதிர்ப்பதன் காரணத்தை புரிந்து கொண்டால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

பிகு

1. இதே சவுக்கு இதே யாழில் முன்னர் திமுக செம்பு என விமர்சிக்கபட்டவர். இப்போ ராகுல் காந்திக்கு செம்பு தூக்குறார்.

2. இதே சவுக்கு சீமானை பற்றி துவைத்து தொங்க விட்டதை நீங்க பாத்திருப்பீங்கள் எண்டு நம்புகிறேன்🤣.

சவுக்கு ஒரு பச்சோந்தி நேரத்துக்கு நேரம் மாத்தி மாத்தி கதைப்பவர்.

ஈழத்தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கூட்டு நல்லது என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கூட்டு நல்லது என்கிறீர்களா?

இல்லை என்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

இல்லை என்கிறேன்.

கள்ளன் இண்டைக்கு  இரண்டு சொல்லோடை நிப்பாட்டிட்டான்.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கள்ளன் இண்டைக்கு  இரண்டு சொல்லோடை நிப்பாட்டிட்டான்.... 🤣

🤣 இன்று மட்டுமே!

புது வருட சிறப்பு சலுகை🤣

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு ஒரு கம்னியூஸ்ட் தேர்தலில் ஸ்டாலினை ஆதரித்தார் இப்போது எதிர்க்கிறார்.ஓரு சரியான நிலைப்பாட்டில் இல்லாதவர். உ றுதியான சீமான் எதிர்ப்பும் உள்ளவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.