Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் வராவிட்டாலும் வரைபில் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு அனுப்புவோம்- வினோ எம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் வராவிட்டாலும் வரைபில் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு அனுப்புவோம்- வினோ எம்பி

January 5, 2022
 
1 2  யார் வராவிட்டாலும் வரைபில் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு அனுப்புவோம்- வினோ எம்பி

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள்  இன்னும் ஓரிருநாட்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைபை தயாரித்து அனைவரும் கையொப்பம் இட்டு இந்தியப்பிரதமருக்கு அனுப்புவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

எனவே இந்த விடயத்தில் யார் கையொப்பம் இடுவது, யாரை தவிர்ப்பது, யார் விலகிக்கொள்வார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். ஆயினும் தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்த முயற்சியினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இந்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு இந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்.

வார்த்தை பிரயோகங்களை சாட்டாகவைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சி ரெலோ எடுத்த முடிவிற்குப்பின்னால் நாங்கள்  செல்வதா என்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்கின்ற இந்த செயற்பாட்டினை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 வது திருத்தம். ஆகவே ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டு அதுவேறு இதுவேறு, தலைப்பு வேறு, வார்த்தைபிரயோகங்கள் வேறு என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எமது அரசியல் ரீதியான பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதை உணர்ந்து அனைத்து தமிழ்தேசியக்கட்சிகளும் செயற்படவேண்டும். அந்தவகையிலேயே இந்த முயற்சியினை எடுத்துள்ளோம் இது நிச்சயம் வெற்றிபெறும்.

இந்த விடயத்தில் எந்தவொரு ஆலோசனையும் இந்தியாவிடமிருந்து நாம் பெறவில்லை. இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லை. ஆனால் நாம் பாதிக்கப்பட்ட இனம் என்றவகையில் கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியிலோ எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்ற ரீதியில், அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என்ற ரீதியில் அழுத்தங்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலைக்காக செய்கின்ற பெரிய கைங்கரியமாக இதனை பார்ப்பதாக தெரிவித்தார்.

https://www.ilakku.org/whoever-does-not-come-we-will-sign-the-draft-and-send-it-to-the-prime-minister-of-india/

  • கருத்துக்கள உறவுகள்

அனுப்பினால், என்ன நடக்குமாம்?🤔

சும்மா போவீங்களா?🤗

  • கருத்துக்கள உறவுகள்

டெலோ அந்தக்காலத்தில் இருந்து, இந்தியன் மத்திய அரசாங்கத்தின் கைப்பிள்ளையாய் தான் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோவின் முடிவு சரியானதே. கடிதம் அனுப்புவதால் பயன் இருக்கா இல்லையா என்பதை விட்டு வடக்கு கிழக்கு இiஒப்பைக் குழப்பியடிக்கும் தரப்புக்களுக்கு நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்ளங்கள் நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம் என்னும் தொனியில் பதில் அமைந்துள்ளது. தமிழரசுக்கட்சியும் நகூட்டமைப்புக்குள் தான்தான் தலை என்ற என்ற என்றிருந்த தலைக்கனத்திற்கும் குட்டு விழுந்துள்ளது. கடைசி நேரத்தில் மீண்டும் தமிழரு பொய் ஒட்டிக் கொண்டு பேயர்வாங்கினாலும் அச்சரியப்படுவதற்கில்லை. எப்படி எரந்த தமிழரசு இப்படியாகி விட்டது. எல்லாம் சுமத்திரன் கைங்கரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் வராவிட்டாலும், நாங்கள் சீனாவுக்கு ஒண்டை அனுப்புவம் எண்டு இருக்கிறம்... 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

ரெலோவின் முடிவு சரியானதே. கடிதம் அனுப்புவதால் பயன் இருக்கா இல்லையா என்பதை விட்டு வடக்கு கிழக்கு இiஒப்பைக் குழப்பியடிக்கும் தரப்புக்களுக்கு நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்ளங்கள் நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம் என்னும் தொனியில் பதில் அமைந்துள்ளது. தமிழரசுக்கட்சியும் நகூட்டமைப்புக்குள் தான்தான் தலை என்ற என்ற என்றிருந்த தலைக்கனத்திற்கும் குட்டு விழுந்துள்ளது. கடைசி நேரத்தில் மீண்டும் தமிழரு பொய் ஒட்டிக் கொண்டு பேயர்வாங்கினாலும் அச்சரியப்படுவதற்கில்லை. எப்படி எரந்த தமிழரசு இப்படியாகி விட்டது. எல்லாம் சுமத்திரன் கைங்கரியம்.

அதே.....! நாங்கள் தான் எல்லாம், எங்களை மீறி யாரும் செயற்படக்கூடாது என்கிற மமதை அடங்க வேண்டும். இவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால் ஏதோ ஒரு நொண்டிச்சாட்டை சொல்லிக்கொண்டு வந்து தானாக கையெழுத்திடுவார்கள். வருந்திகேட்டால் கொப்புக் கொப்பாய் கொண்டு திரிவினம். இது வெற்றி பெறுமா இல்லையா? என்பதை விட்டு முயற்சி செய்து பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லை. விழுந்து விடுவேன் என்று பயந்து எழுந்து நடக்காமல் இருந்திருந்தால், எப்போதும் தவழ்ந்து கொண்டுதானிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, zuma said:

டெலோ அந்தக்காலத்தில் இருந்து, இந்தியன் மத்திய அரசாங்கத்தின் கைப்பிள்ளையாய் தான் இருக்கின்றார்கள்.

புலிகளின் பரம வைரி PLOTE, ஆனால் புலி TELO விலும் EPRLF விலும்தான்  கை வைத்தது. விடயம் புரிகிறதா?

😉

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

ரெலோவின் முடிவு சரியானதே. கடிதம் அனுப்புவதால் பயன் இருக்கா இல்லையா என்பதை விட்டு வடக்கு கிழக்கு இiஒப்பைக் குழப்பியடிக்கும் தரப்புக்களுக்கு நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்ளங்கள் நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம் என்னும் தொனியில் பதில் அமைந்துள்ளது. தமிழரசுக்கட்சியும் நகூட்டமைப்புக்குள் தான்தான் தலை என்ற என்ற என்றிருந்த தலைக்கனத்திற்கும் குட்டு விழுந்துள்ளது. கடைசி நேரத்தில் மீண்டும் தமிழரு பொய் ஒட்டிக் கொண்டு பேயர்வாங்கினாலும் அச்சரியப்படுவதற்கில்லை. எப்படி எரந்த தமிழரசு இப்படியாகி விட்டது. எல்லாம் சுமத்திரன் கைங்கரியம்.

""எல்லாம் சுமத்திரன் கைங்கரியம்.""🤦🏼‍♂️

உலகத்தில் என்ன நடைபெறுகிறதென்று கண்களைத் திறந்து பாருங்கள்  புலவர். 

தற்போது நடைபெறுவது மேற்கிற்கும் இந்தியாவிற்கும்  இடையிலான கயிறிழுத்தல். 

இலங்கைத் தமிழரை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதுதான் இங்கே உள்ள விடயம்.

நாகதஅரசினை இந்தியா  தொடர்புகொள்ள பகீரதப்பிரயத்தனம் செய்து முடியாமற் போயிற்று. இறுதியாக TELO வினரையும் மனோவினையும் சபைக்கு இந்தியா  கொண்டுவந்திருக்கிறது. 

இப்போது எமக்குள்ள தெரிவு என்ன? 

இந்தியாவா அல்லது அமெரிக்காவா?

😉

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

புலிகளின் பரம வைரி PLOTE, ஆனால் புலி TELO விலும் EPRLF விலும்தான்  கை வைத்தது. விடயம் புரிகிறதா?

😉

புளொட் உள்ளக தகவல் புலிகளிடம் இருந்திருக்கும் தாங்களே தங்களுக்குள் அடிபட்டு அழியக்கூடிய நிலையிலேயே இருந்தது கோட்டை பங்கர்களுக்குள் வெளிக்கிளம்பும் செல்லுக்கு  எச்சரிக்கை சைரன் போன்ற ஒரு சில மக்களை காப்பற்ற கூடிய விடயங்களும் செய்தார்கள் அதை மறுக்க முடியாது அதே நேரம் சுழிபுரம் போன்ற இடங்களில் நோட்டீஸ் ஓட்ட சென்ற புலி உறுப்பினர்களை கொன்று புதைத்தது மட்டும் அல்ல இந்தியன் ஆமிக்காலத்தில் பொதுமக்களின்  வாகனம் என்றாலே கேட்டு கேள்வி இன்றி சிங்கள ஆமியை விட மோசமான வக்கிரத்துடன் சுட்டு தள்ளியவர்கள் .

டெலோ EPRLFக்கு சகோதர படுகொலை என்று முதலை கண்ணீர் விடுபவர்கள் மேற்சொன்ன புலிகளின் தடைக்கு பின் அவர்களின் முகாம்களில் கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் விடுதலை பற்றி கதைப்பதில்லை அவர்களின் முகாம்களில் பொதுமக்களின் நகைகள் சொத்துக்கள் வாகனம்கள் போன்றவற்றை சந்திகளில் காட்சிக்கு வைத்து உரிமையாளர்கள் தகுந்த ஆதாரம்களை சொல்லி எடுத்துப்போக  அனுமதித்தார்கள் அவற்றை  சொல்வதில்லை மறைத்து கொள்வார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

மூக்கைக் இலகுவாக தொட முடியும்போது ஏன் தலையைச் சுற்றித் தொடுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அண்மைய வடக்கு நோக்கிய நகர்வே, உந்த கடிதம் எழுதும் படலத்தின் பின்னணி என்பதும், அதன் பின்னணியில் இந்தியன் நடுவன் அரசாங்கம்  இருப்பது என்பதும், இலங்கை நிலவரங்களை அவதானித்து வரும் எந்த பாமரனுக்கும் புரியும். 2009 இல் முள்ளிவாய்க்கால் அழிவு நடத்து கொண்டு இருக்கும் போது கருணாநிதி மத்திய அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியது போன்றதே இச் செயலாகும் . எழுதுபவருக்கும், பெறுநர்ருக்கும் தெரியும் இதனால் ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்று.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

மூக்கைக் இலகுவாக தொட முடியும்போது ஏன் தலையைச் சுற்றித் தொடுகிறீர்கள். 

சகோதர படுகொலைகள் என்று சமூக வலைத்தளம்களில் ஒப்பாரி வைப்பவர்கள்   மறைக்கும் விடயம்கள் இந்த இரு இயக்கமும் அடாத்தாக பிடித்துவைத்த  பொதுமக்களின் விடுதலை அவர்களின் நகைகள் சொத்துக்கள் என்பவற்றை சந்திகளில் வைத்து மீள புலிகள் ஒப்படைத்தமை போன்றவற்றை நினைவுபடுதல் வேணும் இல்லாவிட்டால் நாளைய வருங்கால சந்ததிக்கு வேறு விதமான கதைகள் சொல்லப்படும் இதே இந்திய இராணுவம் திரும்பி செல்கையில் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழுக்கள் கடல் வழியாக குடும்பம் குடும்பமாக  தப்பி சென்றனர் ஆரம்பத்தில் கடல்புலிகளின் படகுகள் சோதனையின் பின் போக அனுமதித்தவர்களின் கண்களில்  கடைசி படகில் காணப்பட்ட தங்கத்தின் அளவை  பார்த்து தரைக்கு செய்தி அனுப்ப முன் சென்ற படகுகள்  வேதரணியம் அடையும்முன் கடல்புலிகளின் அதிவேக படகுகள் கிளம்பி சென்று மறித்து  அனைத்தையும் திரும்ப கொண்டுவந்து சோதனை செய்ததில் வடகிழக்கு தமிழ் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குவியல் குவியலாக கிடந்தது அடையாளம் காட்டி எடுத்து செல்லுமாறு புலிகள் பத்திரிகைககளில் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டனர் இதுவும் மறந்து போன வரலாறு .

தலையை சுற்றி மூக்கை தொட  வேண்டிய நிலையில் உள்ளோம் தப்பி இந்திய இராணுவத்துடன் களவாக  தப்பிய ஒட்டுக்குழுக்கள் வெளிநாடு வந்து அநேகமாக பென்ஷன் வயதுகளில் இருந்து கொண்டு நிறைய நேரம் அவையளுக்கு இருக்கும் சமூக வலைதளம்களில் சிங்களவனை விட  மோசமாக தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்தி  வரலாறை பொய்களால் புனைகின்றனர் .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஆவணத்தில் தமிழ்க் கட்சிகள் ஒப்பம் மலையக, முஸ்லிம் கட்சிகள் இல்லை சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தலைவர்கள் விரைவில் இந்தியத் தூதுவரிடம் ஒப்படைப்பர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவ ணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட் டன.'

On 5/1/2022 at 10:46, புலவர் said:

கடைசி நேரத்தில் மீண்டும் தமிழரு பொய் ஒட்டிக் கொண்டு பேயர்வாங்கினாலும் அச்சரியப்படுவதற்கில்லை. எப்படி எரந்த தமிழரசு இப்படியாகி விட்டது. எல்லாம் சுமத்திரன் கைங்கரியம்.

நான் சொன்னதுதான் நடந்தது. தமழருக்கட்சியை மீறி இன்னொரு கட்சி பெயர்வாங்க முடியுமா?கலியாண வீடென்றால் நான்தான் மாப்பிள்ளை. செத்த வீடென்றால் நான்தான் பிணம் இதுதான் தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சகோதர படுகொலைகள் என்று சமூக வலைத்தளம்களில் ஒப்பாரி வைப்பவர்கள்   மறைக்கும் விடயம்கள் இந்த இரு இயக்கமும் அடாத்தாக பிடித்துவைத்த  பொதுமக்களின் விடுதலை அவர்களின் நகைகள் சொத்துக்கள் என்பவற்றை சந்திகளில் வைத்து மீள புலிகள் ஒப்படைத்தமை போன்றவற்றை நினைவுபடுதல் வேணும் இல்லாவிட்டால் நாளைய வருங்கால சந்ததிக்கு வேறு விதமான கதைகள் சொல்லப்படும் இதே இந்திய இராணுவம் திரும்பி செல்கையில் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழுக்கள் கடல் வழியாக குடும்பம் குடும்பமாக  தப்பி சென்றனர் ஆரம்பத்தில் கடல்புலிகளின் படகுகள் சோதனையின் பின் போக அனுமதித்தவர்களின் கண்களில்  கடைசி படகில் காணப்பட்ட தங்கத்தின் அளவை  பார்த்து தரைக்கு செய்தி அனுப்ப முன் சென்ற படகுகள்  வேதரணியம் அடையும்முன் கடல்புலிகளின் அதிவேக படகுகள் கிளம்பி சென்று மறித்து  அனைத்தையும் திரும்ப கொண்டுவந்து சோதனை செய்ததில் வடகிழக்கு தமிழ் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குவியல் குவியலாக கிடந்தது அடையாளம் காட்டி எடுத்து செல்லுமாறு புலிகள் பத்திரிகைககளில் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டனர் இதுவும் மறந்து போன வரலாறு .

தலையை சுற்றி மூக்கை தொட  வேண்டிய நிலையில் உள்ளோம் தப்பி இந்திய இராணுவத்துடன் களவாக  தப்பிய ஒட்டுக்குழுக்கள் வெளிநாடு வந்து அநேகமாக பென்ஷன் வயதுகளில் இருந்து கொண்டு நிறைய நேரம் அவையளுக்கு இருக்கும் சமூக வலைதளம்களில் சிங்களவனை விட  மோசமாக தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்தி  வரலாறை பொய்களால் புனைகின்றனர் .

இது உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, zuma said:

எழுதுபவருக்கும், பெறுநர்ருக்கும் தெரியும் இதனால் ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்று.

இந்தியா தமிழருக்கு நல்லது செய்ய நினைத்திருந்தால்; இனக்கலவரம் நடந்தபோதே செய்திருக்கும். விடுதலை போர் என்கிற தேவையே வந்திருக்காது. ஆனால் இந்தியா விரும்புவது தமிழரை வைத்து சொக்கட்டான் ஆடி தான் ஜெயிப்பது. ஆனால் இதற்குள் சீனா விளையாட வெளிக்கிட்டுள்ளதால் ஆட்டம் திசை திரும்பலாம். "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு." கிடைக்கும் வரை தேடுவதில் தப்பில்லை. விளையாட்டு ஒருநாள் கட்டாய முடிவை எடுக்க வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

1970 களில் JR Jeyawardana வின் ஆட்சியுடன் ஆரம்பித்த இந்தியாவின் இலங்கை மீதான  தலையீட்டை கூர்ந்து கவனித்தால் இந்தியாவின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். 

நீங்கள் கூறுவதுபோல சீனாவின் தலையீடு இவர்களின் உண்மையான  நோக்கத்தை திரும்பவும் யோசிக்க வைப்பதாக அமையலாம்.

ஆனால் பருத்தித்துறை முனையில் நின்று, சீன தூதுவர் இந்தியாவிற்கு கொம்பு சீவிவிட்டதன் நோக்கத்தை புரிந்துகொள்வதெப்படி ? 

இத்தனை பில்லியன் டொலர்களை இலங்கையின் தென்பகுதியில் முதலிட்ட சீனா இலங்கையில் நிச்சயம் அற்ற நிலைமை நீடிப்பதை விரும்புமா ?

அப்படியானால் சீனத் தூதுவர் முடிவல்ல ஆரம்பம் என்று(மன்னாரில்) ஏன் அப்படிக் கூறினார் ? 

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்துடன் தொடர்புபட்ட விவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

1970 களில் JR Jeyawardana வின் ஆட்சியுடன் ஆரம்பித்த இந்தியாவின் இலங்கை மீதான  தலையீட்டை கூர்ந்து கவனித்தால் இந்தியாவின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். 

நீங்கள் கூறுவதுபோல சீனாவின் தலையீடு இவர்களின் உண்மையான  நோக்கத்தை திரும்பவும் யோசிக்க வைப்பதாக அமையலாம்.

ஆனால் பருத்தித்துறை முனையில் நின்று, சீன தூதுவர் இந்தியாவிற்கு கொம்பு சீவிவிட்டதன் நோக்கத்தை புரிந்துகொள்வதெப்படி ? 

இத்தனை பில்லியன் டொலர்களை இலங்கையின் தென்பகுதியில் முதலிட்ட சீனா இலங்கையில் நிச்சயம் அற்ற நிலைமை நீடிப்பதை விரும்புமா ?

அப்படியானால் சீனத் தூதுவர் முடிவல்ல ஆரம்பம் என்று(மன்னாரில்) ஏன் அப்படிக் கூறினார் ? 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தூரம் சீனா அறியாத அறிந்து கொள்ள முடியாத சிதம்பர இரகசியம் அல்ல. சீனத்துதுவர் இந்தியா எவ்வளவு தூரம்?என்ற கேள்வியும் இது முடிவல்ல ஆரம்பம் என்ற சொல்லாடாலும் நாங்கள் முழுமையாக சிறிலங்காவில் கால் பதித்து விட்டோம். இனி எங்களின் பங்களிப்பு அல்லது சம்மதமில்லாமல் வெளியார் குறிப்பாக இந்தியா தலையிட முடியாது என்பதான மென்மையான இராஜதந்திர மொழியிலான அறிவிப்பு என்று கொள்ளலாம்.ஆனால் இராணுவத்தலையீடு அல்லது அரசியல் தலையீடு  போன்ற விடயங்களை இந்தியாவால் இன்னமுமு; சிறிலங்காவில் செய்ய முடியும். ஆனால் இந் நிலை அதிக காலத்திற்கு நீடிக்க சீன விடாது. எவ்வளவு விரைவில் சிறிலங்காவை தன் பிடிக்குள் கொண்டு வர முடியுமோ அவ்வளவு சுpக்கிரத்தில் கொண்டு வந்து விடும். இந்தியாவின் இலங்கை மீதான செல்வாக்கு என்பது அமெரிக்காவுக்கும் பொருந்தும்.நாட்கள் எண்ணப்புடுகின்றன. கவுண்டவுண் ஸ்ராட்.

  • கருத்துக்கள உறவுகள்

271601194_10222356434714510_6908440922125657865_n.jpg?_nc_cat=111&_nc_rgb565=1&ccb=1-5&_nc_sid=730e14&_nc_ohc=Bax-dnwl5LsAX8h0QGm&_nc_ht=scontent.flhr1-2.fna&oh=00_AT_WP2PXM1br4JC6QE3fBz1g3XhLB2MaEo5ITmRt2_G6Lg&oe=61DE5056

மிஸ்டர் சம்பந்தன் நீங்கள் எழுதும் கடிதத்தை அவர்கள் குப்பைக்குள் எறியப் போகிறார்கள். உங்கள் சொந்தத் தொகுதி வளங்களையே உங்கள் அனுமதியில்லாமல் வேறொரு நாட்டுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்கள். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதில் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்குள்ள அக்கறை கூட சம்பந்தருக்கு இல்லை.

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

271593327_10222358363922739_6334992975014111883_n.jpg?_nc_cat=109&_nc_rgb565=1&ccb=1-5&_nc_sid=730e14&_nc_ohc=t77dOEGdU8wAX87HuTT&tn=8G66ytDeUhVexymC&_nc_ht=scontent.flhr1-2.fna&oh=00_AT_z6SuwHCooA7JSXDOY_AKWECIKkwPktAfGPxmrEPkYyA&oe=61DECB42

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

சிங்களவர்களுக்குள்ள அக்கறை கூட சம்பந்தருக்கு இல்லை.

May be an image of text

நல்ல சகுனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.