Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த வட கொரியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த வட கொரியா!

spacer.png

வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக, மாநில ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) நடப்பு ஆண்டின் நாட்டின் முதல் பெரிய ஆயுத சோதனை முன்னெடுக்கப்பட்டதாக மாநில ஊடகமான கே.சி.என்.எ. குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏவுகணை 700 கிமீ (434 மைல்கள்) தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானக் கட்டுப்பாடு மற்றும் குளிர்காலத்தில் செயல்படும் திறன் போன்ற வசதிகளையும் இந்த ஏவுகணை சோதனை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் பொதுவாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட குறைந்த உயரத்தில் இலக்குகளை நோக்கி பறக்கும் மற்றும் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்குக்கும் அதிகமான வேகத்தை அடைய முடியும். அல்லது மணிக்கு 6,200 கிமீ (மணிக்கு 3,850 மைல்கள்) பயணிக்கும்.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட நீண்ட நேரம் கண்டறிவதைத் தவிர்க்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் இரண்டாவது சோதனை இதுவாகும்.

பியோங்யோங்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முன்னதாக சபதம் செய்திருந்த நிலையில் இந்த சோதனை வந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற இராணுவச் சூழல் காரணமாக, பியாங்யோங் தனது பாதுகாப்புத் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொள்ளும் என கிம் புத்தாண்டு உரையில் கூறினார்.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முடங்கிய நிலையில் வடகொரியா கடந்த ஆண்டு பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்தது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட சிறிய எண்ணிக்கையிலான நாடுகளுடன் வடகொரியாவும் இணைந்துள்ளது.

சியோலில் பாதுகாப்பு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, சமீபத்திய ஏவுதல் புதன்கிழமை அதிகாலை ஜப்பானிய கடலோரக் காவல்படையால் கண்டறியப்பட்டது.

 

https://athavannews.com/2022/1260382

 

  • கருத்துக்கள உறவுகள்

கிம் ஜாங் உன்: புத்தாண்டில் ஹைபர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ள வட கொரியா

6 ஜனவரி 2022, 02:15 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

வடகொரியா

பட மூலாதாரம்,KCNA VIA REUTER

வட கொரியா வெற்றிகரமாக ஹைபர் சோனிக் ஏவுகணை ஒன்றை புதன்கிழமையன்று சோதனை செய்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணை 700கிமீ இலக்கை எட்டியதாக கெசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

முன்னதாக வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

வட கொரியா அணு ஆயுத சோதனைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளைச் மேற்கொள்ள ஐ.நா தடை விதித்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில் கடந்த ஆண்டு பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா.

புத்தாண்டு உரையில் கிம் 2022-ம் ஆண்டிற்கான கொள்கை முன்னுரிமைகளை வகுத்ததில் இருந்து முதன்முதலில் ஏவப்பட்ட இந்த சமீபத்திய ஏவுகணை, சோலில் பாதுகாப்பு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, புதன்கிழமை அதிகாலை ஜப்பானிய கடலோரக் காவல்படையால் முதலில் அறிவிக்கப்பட்டது.

"தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு ஆய்வு செய்து வருகிறது," என்று தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டில், வட கொரியா ஹ்வாசோங்-15 என்ற ஏவுகணையை பரிசோதித்தது. இது 4,500 கி.மீ உயரத்தில் உச்சியை அடைந்தது. இது பசிபிக் தீவான குவாமில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைத் தாக்கும் தூரத்தில் அது நிறுத்தப்பட்டிருந்தது.

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் நிலையற்ற ராணுவ சூழல் காரணமாக, வட கொரியா தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதைத் தொடரும் என்று கிம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.

வடகொரியாவின் ஆளும் கட்சியின் ஆண்டு இறுதிக் கூட்டத்தின்போது இதை கிம் தெரிவித்தார்.

 

வடகொரியா

பட மூலாதாரம்,REUTERS

2021 முதல் வட கொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணைகளைச் சோதித்து வருவதை சுட்டிக்காட்டிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிசிடா சமீபத்திய ஏவுகணை, "மிகவும் வருந்தத்தக்கது," என்று தெரிவித்தார்.

2021-ம் ஆண்டில், வடகொரியா தனது ஆயுதத் திட்டத்தை மேம்படுத்தும் பணியை தொடர்ந்தது. ஒரு புதிய ஹைபர் சோனிக் ஏவுகணை, ஒரு ரயில்-சார்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஒரு புதிய நீண்ட தூர கப்பல் ஏவுகணை ஆகியவற்றை சோதனை செய்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

க்ரூஸ் ஏவுகணைகளைவிட பாலிஸ்டிக் ஏவுகணைகள் அதிக அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை அதிக சக்தி வாய்ந்த கலச்சுமையை சுமந்து செல்லக்கூடியவை மற்றும் நீண்டதூரத்திற்கு வேகமாகப் பறக்கக்கூடியவை.

வடகொரியாவின் நிலை என்ன?

வட கொரியா அதன் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸ் முற்றுகையின் காரணமாக உணவுப் பற்றாக்குறையுடன் போராடி வரும் சூழ்நிலையில், இந்த சோதனைகள் நிகழ்ந்துள்ளன.

ஆண்டு இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில், "நாடு பெரும் வாழ்வா சாவா போராட்டத்தை" எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்த அதிபர் கிம், வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இந்த ஆண்டின் இலக்குகளில் ஒன்றாக இருப்பதாகக் கூறினார்.

வடகொரியாவில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.

 

வடகொரியா

பட மூலாதாரம்,REUTERS

இருப்பினும், இது வட கொரியாவை அதன் ஆயுதத் திட்டத்தைத் தொடர்வதைத் தடுக்க வாய்ப்பில்லை என்று பாண்டா கூறுகிறார்.

"கிம் சமீபத்திய ஆண்டுகளில் தேசத்தின் பாதுகாப்பில் தன்னிறைவு அடைவதன் முக்கியத்துவத்தைப் அவர் வலியுறுத்தி வருகிறார். அவர் நாட்டில் பொருளாதார சிக்கல்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறினார்," என்று பாண்டா கூறினார்.

"கிம் மற்றும் தொழிலாளர் கட்சிக்கு, இந்த ஆயுதத் திட்டங்களை நிலை நிறுத்துவது, உள் மற்றும் வெளிப்புற காரணங்களுக்காக தேசிய முன்னுரியாக உள்ளது."

வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்து வருகிறது. மேலும், அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடயான வட கொரியாவின் உறவு இதுவரை பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.

ராணுவ நடவடிக்கைகளில் தென் கொரியா இரட்டை நிலைப்பாடு கொண்டதாக வடகொரியாவும் பலமுறை குற்றம் சாட்டி வருகிறது.

தென் கொரியா சமீபத்தில் தனது முதல் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதித்தது. இது வடகொரியாவின் "ஆத்திரமூட்டல்களைத்," தடுப்பதற்குத் தேவை என்று கூறியது.

https://www.bbc.com/tamil/global-59890138

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

"நாடு பெரும் வாழ்வா சாவா போராட்டத்தை" எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்த அதிபர் கிம், வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இந்த ஆண்டின் இலக்குகளில் ஒன்றாக இருப்பதாகக் கூறினார்.

உலகம் எப்போது அழியும் என்ற கேள்விக்கான பதில் நெருங்கி வருகிறது. 🧐

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தான் இடையில் இருந்து குழப்பி வருகிறது. தனது இருப்பை தென் கொரியாவில் வைத்திருக்கவே  வடகொரியாவை ஆத்திரமூட்டி விடுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாய்!  கிம் ஜான் உன்........சும்மா வெடி வைச்சு சேக்கஸ் காட்டாமல் கொரோனாவுக்கு மருந்தை கண்டுபுடியடா? 🤣

வடகொரியா

இப்ப நல்லாய் மெலிஞ்சு போனியாம் என்ன விசயம்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2022 at 00:13, குமாரசாமி said:

டாய்!  கிம் ஜான் உன்........சும்மா வெடி வைச்சு சேக்கஸ் காட்டாமல் கொரோனாவுக்கு மருந்தை கண்டுபுடியடா? 🤣

வடகொரியா

 

நமக்கு மருந்து ,தண்ணி,சாப்பாடு எல்லாமே ஏவுகணைதான்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வாரத்தில் இரண்டாவது ஏவுகணை சோதனை: வடகொரியாவின் செயற்பாட்டால் உலக நாடுகள் அச்சம்!

spacer.png

வட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் ஒரு வெளிப்படையான பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதையும் சியோல் உறுதிப்படுத்தியது.

வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்திய ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுதல் நடந்தது.

இது ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை என்று பின்னர் வடகொரியா விபரித்தது. இந்த வகையான ஆயுதம் செப்டம்பரில் முதன்முதலில் பரிசோதித்ததாகக் கூறப்பட்டது.

தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள், வட கொரியா உள்நாட்டுப் பகுதியிலிருந்து அதன் கிழக்குக் கடல் வரை ஒற்றை ஏவுகணையை ஏவியிருக்கலாம் என்றும், தென் கொரிய மற்றும் அமெரிக்க இராணுவம் ஏவுதல் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளது. ஆயுதம் எவ்வளவு தூரம் பறந்தது என்பதை உடனடியாகக் கூறவில்லை.

எனினும், ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே தரையிறங்கியதாகத் தோன்றியதாவும் இது அதன் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் (370 கிமீ) தொலைவில் ஜப்பான் கடல் வரை நீண்டுள்ளது எனவும் அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜப்பான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இந்த ஆயுதம் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று கூறியது. ஆனால் அதிகாரிகள் உடனடியாக கூடுதல் விபரங்களை வழங்கவில்லை.

ஜப்பானைச் சுற்றியுள்ள கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பரிசோதித்து வருவதாக பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறினார், ஆனால் இடையூறுகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.

ஊடகங்களிடம் பேசிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, வடக்கின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் மிகவும் வருந்தத்தக்கது என்றும் மேலும் ஜப்பான் ஏவுதலை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கூட்டறிக்கையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட ஆறு நாடுகள் வட கொரியாவை நிலையற்ற நடவடிக்கைகளை’ நிறுத்துமாறு வலியுறுத்திய நிலையில் சமீபத்திய சோதனை வந்தது.

சியோலில் உள்ள வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கிம் டோங்-யுப், கடந்த வாரம் தென் கொரிய இராணுவம் நடத்திய சோதனைக்கு பதிலளிக்கும் வகையில் வட கொரியா மீண்டும் அதன் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்திருக்கலாம் என்று கூறினார்.

சியோலின் பாதுகாப்பு அமைச்சகம், அந்தச் சோதனைக்குப் பிறகு, வட கொரியா தனது திறன்களை மிகைப்படுத்தி, தெற்கு இடைமறிக்கும் திறன் கொண்ட வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ததாகக் கூறியது. ஹைப்பர்சோனிக் ஆயுதத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களை வடகொரியா பெற்றுள்ளது என்பதில் சந்தேகம் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

https://athavannews.com/2022/1261196

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2022 at 21:40, பாலபத்ர ஓணாண்டி said:

நமக்கு மருந்து ,தண்ணி,சாப்பாடு எல்லாமே ஏவுகணைதான்.. 

பாலபத்ர ஓணாண்டி அவர்களே! எனது சிந்தனையில் ஒரு சிறு மாற்றம். நமக்கு மருந்து ,தண்ணி,சாப்பாடு எல்லாமே ஏவுகணையில்தான் வரும்..😋

  • கருத்துக்கள உறவுகள்

அவர்வரையில் அவர் செய்வது முற்றிலும் சரியானது.....தன் நிலையில் இருந்து அவர் சிறிது நழுவினாலும் அவரின் கதி அதோகதியாகிடும்.... அவர் கண்முன்னே கடாபி, ஹுசைன், லாடன் மற்றும் நம் தலைவர் உட்பட வந்து போவார்கள். இது ஒரு முட்டாளான எனக்கே புரியும்போது கிம் ஜானுக்கு தெரியாமல் போகுமா .....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

North Korea successfully tested hypersonic missile, says report - BBC News

ஹைப்பர் சொனிக்  ராடாரில் மாட்டும் நேரம் பலஸ்ட்டிக் மாட்டும் நேரமும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை நடத்தியது வடகொரியா!

spacer.png

கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது.

இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜகாங் மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனையின் போது ஏவுகணை 700 கிலோமீற்றர் வரை சென்று கடலில் விழுந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் இதனை கண்டித்து அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://athavannews.com/2022/1261576

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.