Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சுக்கு ஆஸி.க்குள் நுழைவதற்கான விசா இரத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சுக்கு ஆஸி.க்குள் நுழைவதற்கான விசா இரத்து

உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்டிருந்த விசா வியாழன் அன்று இரத்து செய்யப்பட்டது.

Novak Djokovic last year at the Australian Open.

இதனால் அவர் மெல்போர்னில் நடக்கும் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்பதற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காணவரும் ரசிகர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்து வீரர்-வீராங்கனைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர். 

ஆனால் நம்பர்-1 வீரரும், 9 முறை அவுஸ்திரேலிய ஓபனை வென்றவருமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தினாரா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தார். 

இதனால் அவர் அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தாமல் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாட அனுமதி கிடைத்திருப்பதாக ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி உள்ளார். 

இந் நிலையிலேயே மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சின் அவுஸ்திரேலியா நுழைவுக்கான விசா வியாழக்கிழமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் போட்டியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டு, வியத்தகு முறையில் நாடு கடத்தப்படுவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/120315

 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாக்காரன் விளையாட்டு என்று வந்தால், எந்த கீழ் நிலைக்கும் இறங்கி விளையாடுவான் என்பது யாம் அறிந்ததே, ஆனால் ஜோகோவிச்சு தடுப்பூசி எடுக்கவில்லை என்றால் அவர்கள் செய்தது சரிதான். சட்டம் யாவருக்கும் சமம் ஆனதே. 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தடுப்பூசி செலுத்தாமல் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாட அனுமதி கிடைத்திருப்பதாக ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி உள்ளார். 

தடியை கொடுத்து அடியை வாங்கியிருக்கிறார்....

அலம்பறை பண்ணி வெளியே சொல்லாமல் இருந்த்திருந்தால் விளையாடி இருப்பார்.....

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

தடியை கொடுத்து அடியை வாங்கியிருக்கிறார்....

அலம்பறை பண்ணி வெளியே சொல்லாமல் இருந்த்திருந்தால் விளையாடி இருப்பார்.....

இவருக்கு தடுப்பூசி இல்லாமல் அவுஸ்ற்றேலியாவில் விளையாட அனுமதி என்ற செய்தியை பிபிசியில் வாசித்தபோதே நினைத்தேன் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்தான் ஆள் பார்த்து பெரிய இடம் எண்டா சலுகை குடுக்குறது சாத்தியம் வெள்ளைக்காரன் நாட்டில இது எப்படி சாத்தியம்… ரீவி பேப்பர்ல எல்லாம் வச்சு செஞ்சு விட்டுருவாங்களே அரசை எண்டு.. அவுஸ்ற்றேலியாகாரன் வேறமாரி ப்ளான் போட்டிருக்கான்.. ஊசியப்போட்டிட்டு வந்தாலும் வந்திடுவான்னு ஆளை விளையாட விடாமல் பண்ண கூப்பிட்டு வச்சு செஞ்சுட்டான் போல..

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஊசி போட்டாரா இல்லையா என்பதை சொல்ல விரும்பவில்லை.

சேபியா அதிபர் சேபிய நாடே உனக்கு பின்னால் உள்ளது என சொல்லி உள்ளார்.
நோவிக்கின் தந்தை தனது மகனை விளையாட விட வேண்டும் என சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விளையாட பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் உள் நுழைவு அனுமதி விமான நிலையத்தில் மறுக்கப்பட்டு( விசா இரத்து அல்ல), தங்குமிடமொன்றில் வைத்திருக்கின்றனர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய விசாவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்,
ஆனால் குடிவரவு அமைச்சர் மீண்டும் விசாவை ரத்து செய்ய பரிசீலிக்கிறார்.

https://www.theguardian.com/australia-news/2022/jan/10/novak-djokovic-wins-appeal-against-decision-to-cancel-his-australian-visa

அவுஸ்ரேலிக்காரர் சரியான அளாப்பிகள்.

 

Edited by zuma

  • zuma changed the title to நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய விசாவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2022 at 10:45, zuma said:

நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய விசாவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்,
ஆனால் குடிவரவு அமைச்சர் மீண்டும் விசாவை ரத்து செய்ய பரிசீலிக்கிறார்.

https://www.theguardian.com/australia-news/2022/jan/10/novak-djokovic-wins-appeal-against-decision-to-cancel-his-australian-visa

அவுஸ்ரேலிக்காரர் சரியான அளாப்பிகள்.

 

ஜோகோவிச் தான் தவறான PCR Certificate கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. டிசம்பர் 16 திகதி கோவிட்  தொற்று அறியப்பட்டபின் 17, 18 திகதிகளில் பொதுவெளியில் மாஸ்க் இல்லாமல் ஆட்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். ஆஸ்திரேலியா நீதிபதிகளுக்கும் தலைக்குள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

Getting COVID is not a qualifying reason for medical exemption.

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் வக்சீன் அல்லது அதற்கு இணையான  treatment எடுத்துக்கொண்டதாக ஒரு செய்தி  அறிந்தேன். உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

. ஆஸ்திரேலியா நீதிபதிகளுக்கும் தலைக்குள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

Tennis Australia and the Victorian state governments medical panels அவர்கள் செய்த தவறான முடிவுகள்தான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

Tennis Australia and the Victorian state governments medical panels அவர்கள் செய்த தவறான முடிவுகள்தான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம் .

 

 

https://www.bbc.com/news/world-australia-59935127

அவர்கள் மட்டுமல்ல. பிழையாக கொடுக்கப்பட்ட தரவுகளும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நோவக் ஜோக்கோவிச்சின் வீசா மீண்டும் இரத்து

நோவக் ஜோக்கோவிச்சின் வீசா மீண்டும் இரத்து

 

செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச்சின் வீசாவை அவுஸ்திரேலிய அரசு 2 ஆவது முறையாக இரத்து செய்துள்ளது.

போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி இவ்வாறு வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.