Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து.

Colombo (News 1st) ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து - Newsfirst

  • கருத்துக்கள உறவுகள்

கடனா? காசா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

அரசியில் தன்னிறைவு கண்டிருந்த தமிழீழத்திடம் கடன் வாங்கி இருக்கலாம்.. புலிகள் ஆட்சியில் இருந்திருந்தால். என்ன இப்ப சிங்களவனோட சேர்ந்து தமிழரும் ஊர் ஊரா பிச்சை எடுக்க வேண்டிய நிலை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

கடனா? காசா? 🤔

தல்லாம் காசு. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சேதன பசளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியா இறக்குமதியாகின்றது???

நவீன மாதன முத்தாக்கள்…

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

சேதன பசளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியா இறக்குமதியாகின்றது???

நவீன மாதன முத்தாக்கள்…

சிங்களவனை முட்டாள் என்றால் சிலருக்கு கோபம் வரும் அந்த கோபம் இல்லாமல் சிங்களவனை போல் ஒற்றுமையாக சிந்திக்குமட்டும் தமிழனின்  அகதி அலைச்சல் முடிவுக்கு வராது .

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

சிங்களவனை முட்டாள் என்றால் சிலருக்கு கோபம் வரும் அந்த கோபம் இல்லாமல் சிங்களவனை போல் ஒற்றுமையாக சிந்திக்குமட்டும் தமிழனின்  அகதி அலைச்சல் முடிவுக்கு வராது .

ஆனால் சிங்களவனை விட முட்டாள் எங்கட அரசியல் வியாதிகள்.

ஒரு காலத்தில் சொறீலங்காவின் பொருண்மியத்தில் அடித்தால் அது தமிழீழத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பிடியை குறைக்கும் என்ற நிலைப்பாடு வலுப்பெற்றிருந்தது. புலிகளும் சிங்கள பெளத்த பேரினவாதத் திமிரின் ஏவு கருவியாக இருந்த அதன் இராணுவ பலத்தை குறைக்க.. குறிப்பாக நவீன ஆயுதக் கொள்வனவுகளை கட்டுப்படுத்த.. பொருண்மியத்தை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தினார்கள்.

அதேபோல்.. 2009 போரின் போதும்.. பொருண்மியத்தை இலக்கு வைத்து புறக்கணி சொறீலங்கா திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால்.. இன்று சொறீலங்காவின் பொருளாதாரமே.. கொரோனா மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் சொறீலங்காவின் சீனச் சார்ப்பு நலிந்த பொருளாதாரக் கொள்கைகள்.. மற்றும் இதர அரசியல்.. சமூக.. சூழல் காரணிகளால் நலிவுற்றிருக்கும் நிலையில்...

எம்மவர்கள் முன்னெடுக்கும் அரசியல் என்பது மிக மிக மோசமானதாகவும்.. ஹிந்தியாவுக்கு கடிதம் எழுதும் மிக மட்டமானதாகவும் இருக்கிறது.

இந்தச் சூழல் 2004 இல் உருவாகி இருந்தால்.. புலிகள் இதனை தமிழ் மக்களின் விடிவுக்காகப் பயன்படுத்தி இருப்பார்கள். இன்றைய எங்கட அரசியல் வியாதிகளுக்கு உண்மையில் மண்டைக்குள் மக்கள் நலன்சார் அரசியல் சரக்கில்லை. அதை விடக் கேவலம்.. எங்கட பந்தி எழுத்தாளர்கள். ஒருத்தருக்கும் இந்த தனித்துவ சூழல் கண்ணுக்குத் தெரியவில்லை.


மாறாக சிங்கள அரசு மாற்றத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விடும் நிலை. சிங்களத்தை எந்த அரசு ஆண்டாலும் எமக்கு விடுதலையோ விமோசனமோ இல்லை என்பதை இன்னும் புரியாமல் தான் எம்மவர்களின் அரசியல் இராசதந்திரம்.. இரா தரித்திரமாக உள்ளது.

இதில சிங்களவன் மாதனமுத்தா என்றால்.. எங்கடையள் புலிக்கேசியாக இருப்பம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில்..

எல்லாச் சூழல்களும் எமக்கான சந்தர்ப்பத்தை நழுவ விடும் பாங்கில் தான் போகிறது.

போர்க்குற்ற விசாரணை முதல்.. சொறீலங்காவின் நலிந்த பொருண்மியம் வரை. சொறீலங்கா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றதே.. இரண்டாம் உலகப் போரின் பாதிப்பால் நலிந்த பிரித்தானியாவின் பொருண்மிய நிலையால் தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, MEERA said:

சேதன பசளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியா இறக்குமதியாகின்றது???

உர குளறுபடியால் இந்த முறை ஏப்ரல் பெரும்போகம் பொய்க்கும் என்கிறார்கள். அதற்கான முன் ஏற்பாடாக இருக்கலாம்.

2 hours ago, பெருமாள் said:

சிங்களவனை முட்டாள் என்றால் சிலருக்கு கோபம் வரும் அந்த கோபம் இல்லாமல் சிங்களவனை போல் ஒற்றுமையாக சிந்திக்குமட்டும் தமிழனின்  அகதி அலைச்சல் முடிவுக்கு வராது .

உங்கள் கருத்திலே முழு உண்மையும் இருக்கிறது.

உலகத்திலே அடி முட்டாள்கள் யார்? அழியும் தறுவாயிலும் தமக்குள் பிரிந்து அடிபடுபவர்கள்.

இந்த அடிமுட்டாள்கள் இன்னொரு முட்டாளை பார்த்து முட்டாள் என்பதுதான் நகைச்சுவை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

உர குளறுபடியால் இந்த முறை ஏப்ரல் பெரும்போகம் பொய்க்கும் என்கிறார்கள். அதற்கான முன் ஏற்பாடாக இருக்கலாம்.

முன் ஏற்பாடா? உள்ளூர் விவசாயிகளை நட்டமடைய வைத்துவிட்டு இது தேவையா? 

 

  • கருத்துக்கள உறவுகள்

 கஜானா காலியானதால், இயற்கை பசளையை ஊக்குவிக்கப்போகிறேன் என்று வீரம் பேசி,உள்ளூர் விவசாயிகளை முடக்கி, அரிசி இறக்குமதி செய்கிறார் விண்ணர்!

அதிருக்கட்டும், எத்தியோப்பியாவுக்கும் கடன் கேட்டு விண்ணைப்பினமோ சார்! இல்ல, உலகிலே ஒரு நாட்டையும் மிச்சம் மீதி வைக்க மாட்டாங்கள் போலிருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

முன் ஏற்பாடா? உள்ளூர் விவசாயிகளை நட்டமடைய வைத்துவிட்டு இது தேவையா? 

 

உள்ளூர் விவசாயிகள் பற்றி கவலை இல்லை. நாட்டில் அரிசி பஞ்சம் வராமல் தடுக்க பெரும் பிரயத்தனம் செய்வது போல் படுகிறது. 

அரிசி விலை உயர்வு அல்ல. அது நடந்து விட்டது. பஞ்சம்.

ஆனால் விரைவில் விவசாயிகள் ரோட்டில் இறங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் கவனித்தீர்களா? பெளத்த மதவாத பேரினவாதிகளின் ஆட்சி இரு நாடுகளுக்கும் பொதுவானது. ஒன்று ராணுவ ஆட்சி மற்றையது ராணுவத்தால் ஆளப்படும் நாடு.

வெகு விரைவில் இலங்கை இன்னொரு பர்மாவாக வரப்போகிறதென்பதையே இவை கட்டியம் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, ரஞ்சித் said:

ஒன்றைக் கவனித்தீர்களா? பெளத்த மதவாத பேரினவாதிகளின் ஆட்சி இரு நாடுகளுக்கும் பொதுவானது. ஒன்று ராணுவ ஆட்சி மற்றையது ராணுவத்தால் ஆளப்படும் நாடு.

வெகு விரைவில் இலங்கை இன்னொரு பர்மாவாக வரப்போகிறதென்பதையே இவை கட்டியம் கூறுகின்றன.

சிறிலங்காவில் இராணுவ ஆட்சி வந்தால் கிந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருக்கும்?

 சீனாவுக்கு வடகொரியா செல்லப்பிள்ளையாக இருப்பது போல் சிறிலங்காவும் சர்வாதிகார ஆட்சி மூலம் சீனாவுக்கு செல்லப்பிள்ளையாக இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் இராணுவ ஆட்சி வந்தால் கிந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருக்கும்?

 சீனாவுக்கு வடகொரியா செல்லப்பிள்ளையாக இருப்பது போல் சிறிலங்காவும் சர்வாதிகார ஆட்சி மூலம் சீனாவுக்கு செல்லப்பிள்ளையாக இருக்குமா?

அப்படித்தான் இருக்கும். கிந்திய நா…..காலும், சந்தர்ப்பவாத மேற்குலகும் வாலை பின்னங்கால்களுக்கு நடுவில் நண்றாக சுருட்டி வைத்துக்கொண்டு பம்மிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.