Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்!

spacer.png

இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராஜதந்திர சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, தடுப்புக் காவல் ஆணைகள், தடை உத்தரவுகள், உத்தரவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பது, நீண்ட கால காவலில் வைப்பதைத் தடுப்பது ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நீதிபதிகள் மற்றும் நீதித்துறை வைத்திய அதிகாரிகளை அணுகுவதற்கும், தடுப்புக்காவலின் போது சித்திரவதைகள் மற்றும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கும், தினசரி வழக்குகளை விசாரிப்பதற்கும் விசேட திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
https://athavannews.com/2022/1264130

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்ட முழுமையாக நீக்கப்பட வேண்டியது அவசியம் - மனோ

பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார் . எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம்தான்.

ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது. அதேவேளை,  “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐ.நா. என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்" என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும். இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். 

ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது.

ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை. 

இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்.

எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாக தெரிந்தது. எமது ஆட்சியின் போது இந்த சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. 

1979ம் ஆண்டின் 48ம் இலக்க  பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.  

ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.

“உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என சக்திகளுடன் பேசாதீர்கள்" என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
https://www.virakesari.lk/article/121454

https://www.parliament.lk/uploads/bills/gbills/tamil/6123.pdf

அந்தச் சட்ட வரைபு இதாகத்தான் இருக்க வேண்டும். இதில் எதை மாற்றியுள்ளார்களோ தெரியவில்லை. அநேகமான குற்றிச் செயல்களைப் பயங்கரவாதம் என்பதற்குள் கொண்டு வரலாம் போலுள்ளது. இலங்கையின் இறைமைக்கு எதிரான, ஒருமைப்பாட்டுக்கு எதிரான என்று பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண குற்றம் செய்த அல்லது செய்ததாகக் கருதப்பட்ட ஒருவரைப் பயங்கரவாதியாக்க முடியும். இதனால் பெரும்பாலும் பாதிப்படைந்தவர்கள் தமிழர்கள்தான். 

ஏதோ கொஞ்சமாவது மாற்றம் செய்துள்ளது நன்மையே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.

இல்லவே இல்லை! நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது, இனி இவர்களால் எதுவும் செய்ய முடியாது. புலம் பெயர்ந்தவர்களை வரவழைக்க, சர்வதேசத்திடம் கையேந்த இதை விட்டால் வேறு வழியில்லை. புலியின் பல்லை பிடுங்கினால் அது எப்படி உயிர் வாழ்வதாம். வேறொரு பெயரில் இந்தச் சட்டம் மீள வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, satan said:

இல்லவே இல்லை! நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது, இனி இவர்களால் எதுவும் செய்ய முடியாது. புலம் பெயர்ந்தவர்களை வரவழைக்க, சர்வதேசத்திடம் கையேந்த இதை விட்டால் வேறு வழியில்லை. புலியின் பல்லை பிடுங்கினால் அது எப்படி உயிர் வாழ்வதாம். வேறொரு பெயரில் இந்தச் சட்டம் மீள வரும்.

சரியான கருத்து. 
இனிவரும் காலங்களில் ஏதோ ஒரு விதத்தில் இனவாத அரசு இறங்கி வந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சரியான கருத்து. 
இனிவரும் காலங்களில் ஏதோ ஒரு விதத்தில் இனவாத அரசு இறங்கி வந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

புலம் பெயர்ந்தவர்களுடன் பேச சந்தர்ப்பம் கேட்குது அதே நேரம் புலம்பெயர் தேசங்களில் ஆயுதமில்லாமல் புலிகளின்  ஈழக்கோரிக்கை பிரச்சாரம் நடக்குது என்குது, தாயக பாதிக்கப்பட்ட மக்களின் தலைவர்ளுடன் பேச மறுக்குது. என்ன காரணம்? எமது பிரச்சனையை தீர்க்கவல்ல, தனது தற்போதைய நெருக்கடியை புலம்பெயர் தமிழரை அழைத்து  தீர்க்கவே இந்த நாடகம். இப்போ; சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சொல்லியிருக்கு, எப்போ நடைமுறை என்பது புலம்பெயர்ந்தோர்  கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது. அதுக்கு புலிகளில்லாமல் உயிர் வாழமுடியாது. இது எந்த வழியில் போகுதோ அந்த வழியை தடுத்து ஒற்றுமையாக புலம்பெயர்ந்தோர் காய் நகர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் - விரிவான தகவல்கள்

28 ஜனவரி 2022
 
இலங்கை வெளியுறவு அமைச்சக கூட்டம்

பட மூலாதாரம்,SRILANKA FOREIGN MINISTRY

படக்குறிப்பு,

இலங்கை வெளியுறவு அமைச்சக கூட்டம்

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஜனவரி 26ஆம் தேதி இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன், திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், இறுதி அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் அதனை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர், ராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

என்ன திருத்தங்கள்?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை ரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்று நிறுவப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சக கூட்டம்

பட மூலாதாரம்,SRILANKA FOREIGN MINISTRY

படக்குறிப்பு,

இலங்கை வெளியுறவு அமைச்சக கூட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தாம் மேற்கொண்ட விஜயங்கள் மற்றும் இலங்கையின் வடமாகாணத்திற்கான தனது எதிர்வரும் விஜயம் ஆகியன நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கலந்துரையாடி கருத்துகளைப் பெறுவதற்காக, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்கள், அடிமட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ராஜதந்திர அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சக கூட்டம்

பட மூலாதாரம்,SRILANKA FOREIGN MINISTRY

படக்குறிப்பு,

இலங்கை வெளியுறவு அமைச்சக கூட்டம்

நிலைமாறுகால நீதி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஆகிய துறைகளில் சம்பந்தப்பட்ட தேசிய நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி பாராட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எகிப்தின் தூதுவர் மகேத் மொஸ்லே, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பின்விளைவுகளைக் கையாள்வதிலும் இலங்கை அடைந்துள்ள அற்புதமான சாதனைகளை சுட்டிக்காட்டியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்கள், இந்த சந்திப்பின் போது பகிரப்பட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60164860

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

சட்டத்தை திருத்தினாலும்நடைமுறைப்படுத்த வேணுமே. இராணுவமும் பொலிசும் தாங்கள்நினைச்சதைத் தானே செய்வினம்

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பு கூறலுக்கு என்ன நடந்ததோ அதுவே பயங்கரவாத சட்ட திருத்தலுக்கும் நடக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

சரியான கருத்து. 
இனிவரும் காலங்களில் ஏதோ ஒரு விதத்தில் இனவாத அரசு இறங்கி வந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

சிங்களத்துக்கு மிகச் சிறந்த பேராசிரியர். இராயதந்திர நகர்வுகளைப் பார்த்தால் ஐ.நாவில் பேச்சுக்காக உரையாடவும் தீர்மானங்களை(அது நடைமுறைப்படுத்தினாலென்ன? விட்டாலென்ன? என்பது வேறுகதை) நிறைவேற்றவும் இருந்த நிலையையும் இல்லாமலாக்குவதற்கான போக்கே உருவாகலாம் போலுள்ளது. ஐ.நா வைக் கடந்துவிட்டால் தமிழரே சிறிலங்காவுக்குத் தேவைப்படாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் வரும்”: பீரிஸ்!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போது துரித திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் இரண்டு பகுதிகளாக பிரித்து, முழுமையாக ஆராய்ந்து புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக குழுவொன்றை நியமித்து, பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாகவும் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)

http://www.samakalam.com/தற்போதைய-பயங்கரவாத-தடைச/

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2022 at 08:46, satan said:

வேறொரு பெயரில் இந்தச் சட்டம் மீள வரும்.

2 minutes ago, கிருபன் said:

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.